மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.3.17

சோதனைகளை எப்படித் தாங்க வேண்டும்?

வல்லாள மகாராஜா கோபுரம், திருவண்ணாமலை

சோதனைகளை எப்படித் தாங்க வேண்டும்?

சோதனைகளை இப்படித்தான் எதிர் கொள்ள வேண்டும்!!

மார்ச் 11, மாசி மகம்

வாழ்வில், சோதனைகள் வரும் காலத்தில், வேதனை தாளாமல், 'ஏன் படைத்தாய் இறைவா... என்னை சீக்கிரமாக கொண்டு போய் சேர்த்து விடு...' என புலம்புவோம். ஆனால், சோதனைகள் அதிகரிப்பதே, பிறப்பின்றி செய்வதற்கு, இறைவன், நம்மை தயார்படுத்துகிறான் என்பதை நாம் அறிவதில்லை.

திருவண்ணாமலையை ஆட்சி செய்தவர் வல்லாள மகாராஜா. இவருக்கு சல்லமாதேவி, மல்லமாதேவி என இரு துணைவியர். குழந்தை பாக்கியமின்மையால் மனம் வருந்தினார், மன்னர்.

'யார் வந்து எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல், தானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்...' என்று அவரது அமைச்சர்கள் அறிவுரை கூறினர். அதன்படி, யாசகம் கேட்டு வருவோருக்கெல்லாம் வாரி வழங்கினார், மன்னர்.

ஒருநாள், சிவனடியார் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர், துறவி என்ற தன் நிலையை மறந்து, 'படுப்பதற்கு பஞ்சணையும், ஒரு பெண்ணும் வேண்டும்...' என்று கேட்டார். 'எது கேட்டாலும் தருவேன்...' என்று வாக்குறுதி அளித்திருந்த வல்லாளனுக்கு, இதை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லை.

'ஆண்டவனே... குழந்தை இல்லாமல் என்னை சோதித்தாய். அதற்காக பரிகாரம் செய்யப் போய், இப்படி ஒரு கொடிய சோதனையை தந்து விட்டாயே... என்ன செய்வேன்...' என்று புலம்பினார்.

மனைவியரிடம் இதுபற்றி ஆலோசனை செய்த போது, சிவ பக்தையான சல்லமாதேவி சற்றும் கலங்காமல், 'மகாராஜா... நீங்கள் கொடுத்த வாக்கு பொய்க்க வேண்டாம்; நானே செல்கிறேன்...' என்று கூறி, சிவனடியார் தங்கியிருந்த அறைக்கு பால் செம்புடன் சென்றாள்.

உள்ளே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார், சிவனடியார். அவரது பாதங்களை சல்லமாதேவி தொடவும், அந்த சிவனடியார் ஆண் குழந்தையாக மாறி விட்டார். கொள்ளை அழகுடன் இருந்த அக்குழந்தையை தூக்கியபடி வெளியே வந்தாள்.

நடந்ததை அறிந்த வல்லாளன் மகிழ்ந்து, குழந்தையை வாங்கி கொஞ்ச, அக்குழந்தை மறைந்து விட்டது. அப்போது, வானில், 'வல்லாளா... உன் இல்லத்துக்கு வந்தது அண்ணாமலையாரான நான் தான். எத்தகைய சோதனை வந்தாலும், அதைத் தாங்கும் மன பக்குவத்தை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தவே, இதுபோன்ற சோதனையை உனக்கு கொடுத்தேன். அதில், நீ வெற்றி பெற்றாய். இனி, உனக்கு பிறப்போ, இறப்போ இல்லை. நீ மறைந்ததும், நானே உனக்கு மகனாக இருந்து எள்ளும், நீரும் இறைப்பேன்...' என்று அசரீரி ஒலித்தது.

அன்று, மாசி மகம்; சாப்பிட்டுக் கொண்டிருந்தார், வல்லாள ராஜா. திடீரென அங்கு வந்த அக்குழந்தை, சாப்பாட்டை ராஜாவுக்கும், அவரது தேவியருக்கும் ஊட்டி விட்டதுடன், அம்மா, அப்பா என அழைத்து கொஞ்சியது. அவர்கள் மகிழ்ந்திருந்த வேளையில், மீண்டும் மறைந்து விட்டது.

உடனே, கோவிலுக்கு ஓடிய வல்லாள மகாராஜா, அண்ணாமலையாரை கைகூப்பி தொழுதபடி, இறந்து போனார். துக்கம் தாங்காத தேவியரும் அவருடன் இறந்தனர். அப்போது அண்ணாமலையார் விக்ரகத்தில் இருந்து வெளிப்பட்ட ஒரு குழந்தை, வல்லாள மகாராஜா மற்றும் அவரது தேவியருக்கு எள்ளும், நீரும் இறைத்து, அவர்களது உடலுக்கு தீ வைத்து, நீத்தார் கடன் செய்தது.

இந்த வைபவம், இன்றும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாசி மகத்தன்றும் நடத்தப்படுகிறது. அத்துடன், இக் கோவிலிலுள்ள வல்லாள மகாராஜா கோபுர வாசல், இந்நாளில் மட்டுமே திறக்கப்படும்.

சோதனைகளைத் தாங்கும் பக்குவம் இருந்தால், தெய்வமே நமக்கு தாயாகவும், தந்தையாகவும், குழந்தையாகவும், நட்பாகவும் இருந்து அருள் செய்யும் என்பதற்கு இந்த வரலாறு உதாரணம்.
========================================================================
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

 1. அரோகரா அரோகரா....

  ReplyDelete
 2. Respected Sir,

  Happy morning...Superb post...

  Have a great day.

  Thanks & Regards,
  Ravi-avn

  ReplyDelete
 3. வணக்கம் குருவே!
  அடேயப்பா!
  அண்ண்ணாமலையார் இப்படிப்பட்ட ஒரு
  திருவிளையாடல் நிகழ்த்தியுள்ளாரா!!
  வெள்ளாளர் மஹாராஜாவின் மாண்மை, செல்லமாதேவியின் சிவபக்தி, அண்ணாமலையாரின் அருள்
  தந்த விதம்.. இதில் எது போற்றத்தக்கது...வியப்பு மேலிட்டு
  ரோமாஞ்சனம் உண்டாகிறது!
  தங்களின் மகத்தான பகிர்ப்புக்கு
  மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 4. வணக்கம் ஐயா,சோதனைகள் வரும்போது,அதை தாங்கும் மன உறுதியை அந்த அண்ணாமலையாரை,வேண்டி வணங்கினால் அவரே அதையும் அருள்வார்.நன்றி.

  ReplyDelete
 5. ////Blogger SELVARAJ said...
  அரோகரா அரோகரா..../////

  ஓம் நமசிவாய!

  ReplyDelete
 6. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning...Superb post...
  Have a great day.
  Thanks & Regards,
  Ravi-avn//////

  நல்லது. நன்றி ரவி!!!!

  ReplyDelete
 7. /////Blogger t.nagoji rao said...
  Om Sivaya namaga/////

  ஓம் நமசிவாய!

  ReplyDelete
 8. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  அடேயப்பா!
  அண்ண்ணாமலையார் இப்படிப்பட்ட ஒரு
  திருவிளையாடல் நிகழ்த்தியுள்ளாரா!!
  வெள்ளாளர் மஹாராஜாவின் மாண்மை, செல்லமாதேவியின் சிவபக்தி, அண்ணாமலையாரின் அருள்
  தந்த விதம்.. இதில் எது போற்றத்தக்கது...வியப்பு மேலிட்டு
  ரோமாஞ்சனம் உண்டாகிறது!
  தங்களின் மகத்தான பகிர்ப்புக்கு
  மனமார்ந்த நன்றிகள்!/////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

  ReplyDelete
 9. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,சோதனைகள் வரும்போது,அதை தாங்கும் மன உறுதியை அந்த அண்ணாமலையாரை,வேண்டி வணங்கினால் அவரே அதையும் அருள்வார்.நன்றி./////

  உண்மைதான்! உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com