மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 981 - 990. Show all posts
Showing posts with label Lessons 981 - 990. Show all posts

21.6.17

Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது


Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது

Seniority & Periority எல்லாம் இங்கே செல்லாது. முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற வாதம் எல்லாம் இங்கே எடுபடாது

Seniority (மூப்புரிமை) 
1. The state of being older than another or others or higher in rank than another or others.
2. Precedence of position, especially precedence over others of the same rank by reason of a longer span of service.

Priority (முன்னுரிமை)
1. Precedence, especially established by order of importance or urgency.
2. a. An established right to precedence.b. An authoritative rating that establishes such precedence.
3. A preceding or coming earlier in time.
4. Something afforded or deserving prior attention.

மூத்தவன், இளையவன் என்ற பாகுபாடு எல்லாம் இங்கே கிடையாது. நான் பெரியவன், இவன் சின்னவன் என்ற வேறுபாடும் இங்கே கிடையாது. நான் ஸீனியர். நீண்ட நாட்கள் அனுபவம் மிக்கவன். இவன் எனக்குப் பிறகு வந்தவன். ஜீனியர்.ஆகவே எனக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இடமில்லை. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் நிலைப்பாடுகள், வாதங்கள் எதுவுமே இங்கே செல்லாது.

எங்கே?

அதாவது ஸீனியாரிட்டிக்கும், பீரியாரிட்டிக்கும் மதிப்பே இல்லாத இடம் எது?

காலதேவனின் மேற்பார்வையில் இருக்கும் மரண அமைச்சகம்தான் அது (Ministry of death)

நேரம் முடியும்போது சொல்லாமல் கொள்ளாமல் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், அவனுடைய தூதர்கள்

“காலா, வாடா! உன்னைக் காலால் மிதிக்கிறேன்” என்று ஒரு மாபெரும் கவிஞன் சொன்னான். அவனையும் காலதேவன் விட்டு வைக்கவில்லை. 39 வயது முடிவதற்குள்ளாகவே அவரைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்

“காலன் ஒரு படிப்பறிவில்லாதவன். கண்ணதாசன் என்ற அரிய புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்” என்றார் கவிஞர் வாலி. ஆதங்கத்திலும், துக்கத்திலும் நாம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம்.

Meeting is always a pleasure
Parting is always painful

மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

1. மரணம் அனைவருக்கும் பொதுவானது (Death is common to all)
2. மரணம் தவிக்கமுடியாததது (inevitable, Impossible to avoid or prevent)
3. ஒவ்வொருநாளும் நாம் மரணத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம் (walking towards death)

சாதாரண மனிதனுக்கு இதெல்லாம் தெரியாது. தான் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழப்போவதாக நம்பிக்கொண்டிருப்பான்.
ஊரை அடித்து உலையில் போட்டுப் பணத்தைச் சேர்த்துக்கொண்டிருப்பான்.

கேட்டால் பணம், மரணத்திற்கான பாதுகாப்புத் தொகை என்பான். Money is the security against death என்பான்
அதாவது பணம் இருந்தால் வயதான காலத்தில் அது தன்னைக் காப்பாற்றும் என்பான்.  நோய்வாய்ப் பட்டுப் படுத்தால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சைபெற பணம் தேவைப்படும் என்பான்.

மரணம் எப்போது வரும், எப்படி வரும் என்ற சிந்தனை இல்லாததால் அல்லது அறியாமையால் அப்படிச் சொல்வான்.

மரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.

பலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.

மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.

அதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நம் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரியுமா?

தெரியும்.

அதைப் பற்றிய விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளேன். இங்கேயல்ல! வகுப்பறையின் தனி இணைய தளத்தில் அது வந்தது.. இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். திருட்டுப் போகக்கூடாது என்பதற்காக தனி இணைய தளத்தில் எழுதியுள்ளேன்!!! அந்த  இணைய தளம். பயனர் பெயர் (User Name), கடவுச் சொல்லுடன் (Password) கூடியது அந்த இணைய தளத்தில் இது போன்ற மேல் நிலைப் பாடங்கள் பலவற்றை எழுதியுள்ளேன்!!!!

மேல் நிலைப் பாடங்கள், அலசல் பாடங்கள், அஷ்டகவர்க்கப் பாடங்கள், ஜாதக நுட்பங்கள் என்று கலக்கலாக எழுதிய பாடங்கள் அனைத்தும் அதில் வந்துள்ளன!!!.

பின்னால் அவைகள் அனைத்தும் புத்தக வடிவாக வரும்போது நீங்கள் அனைவரும்  படித்துப் பயன் பெறலாம்!!!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.6.17

உங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?


உங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

உறவினர்கள், நண்பர்கள், என்று நம்மைச் சுற்றியுள்ள சிலர் செல்வத்திலும், செல்வாக்கிலும் திளைக்கிறார்கள் அமோகமாக இருக்கிறார்கள். நாம் ஏன் அவர்கள் போல முன்னுக்கு வரமுடியவில்லை என்று நமக்கு ஆதங்கமாக இருக்கும். என்ன முயன்றாலும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது. அல்லது தெரிந்து கொள்ள முடியாது.

அதிக புத்திசாலித்தனம் இல்லாதவர்கள்கூட லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். BMW காரில் போய்க் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு மட்டும் அது எப்படி சாத்தியப் படுகிறது?

கவியரசர் பாடலில் எழுதிவைத்துவிட்டுப்போனார்:

   “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
          வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!”

ஆகவே நமது புத்திசாலித்தனம், திறமை எல்லாம் சம்பாதித்து செல்வம் சேர்ப்பதில் செல்லாது போய்விடும்.

வாத்தியார் சொல்வதுபோல பைப் மற்றும் அண்டா கதையா? அதாவது 2ம் வீடும் 11ம் வீடும் வலிமையாக இருக்கும் அமைப்பினாலா?

இல்லை! அதற்கும் மேலான ஜாதக அமைப்பு உள்ளது!

அவர்களுக்கும் 337தான். நமக்கும் 337தானே!  முகேஷ் அம்பானிக்கும் 337தான் நரேந்திர மோடிக்கும் 337 தானே! இப்படி எல்லாம் குழப்பம் வரும்!

ஜாதகத்தில் கிரக அமைப்பு, அஷ்டகவர்க்க அமைப்பு இவைகளையும் தாண்டி இன்னொன்றும் உள்ளது. அதுதான் யோகங்கள். அதுபோல பணத்திலும் செல்வாக்கிலும் உச்சத்தில் இருப்பவர்களின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தால் அவர்களுடைய ஜாதகங்களில் ஏராளமான யோகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இரண்டு அல்லது மூன்று நல்ல யோகம் இருந்தால்கூட அந்த நிலைமை உண்டாகும்

In Astrology, the word, Yoga, that has been derived from the Sanskrit root, Yuj, meaning to join properly, to control judicially or to integrate, has been used to indicate the Soli-Lunar distances, and the planetary situations, associations and combinations.
As per Jyotisa a Yoga is given rise to when one planet, sign or house is related to another of the same kind or different kind by way of placement, aspect or conjunction. 

ஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது ராஜயோகம் மற்றும் நீசபங்க ராஜயோகம்

Raja yogas are Shubha ('auspicious') yogas that give success and a grand rise in career or business, and a greater degree of financial prosperity particularly during the dasha of the planets that give rise to Raja yogas.

அதுபோல கஜகேசரி யோகம், மாலையோகம், லக்‌ஷ்மி யோகம் என்று இன்னும் பல யோகங்கள் உள்ளன.

ஜாதகத்தைப் பார்த்துபலன் சொல்பவர்கள் கண்ணுக்கு புத ஆதித்த யோகம், சசி மங்கள் யோகம் போன்ற முக்கியமான சில யோகங்கள்தான் தென்படும். எல்லா யோகங்களும் தென்படாது.

சரி எப்படித் தெரிந்துகொள்வது?

உங்கள் ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் உள்ளன என்பதை எப்படித் தெரிந்து கொள்வது. அது எதனால் - எந்த கிரக அமைப்பால் உண்டானது? அதன் பலன் என்ன? அநதப் பலன்கள் எப்போது கிடைக்கும் என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

திருக்கணித ஜாதகத்தை 35 பக்கங்கள் வரும்படி கணித்தால், கடைசி 2 பக்கங்களில் மேற்கூறிய விபரம் எல்லாம் இருக்கும்!

எனக்கு எழுதுங்கள். உங்களுக்கு உங்களுடைய ஜாதகத்தைக் கணித்து PDF  கோப்பாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அது இலவச சேவையல்ல. நான் பணம் கொடுத்து வாங்கிய மென்பொருளில்தான் கணிக்க வேண்டும். சிறிது கட்டணம் உண்டு.

ஆகவே விருப்பம் உள்ளவர்கள் எழுதுங்கள்!
My email ID for this service 
spvrsubbiah@gmail.com

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.6.17

Astrology எப்போது சாமி திருமணம் நடக்கும்?


Astrology எப்போது சாமி  திருமணம் நடக்கும்?

சிலபேர் நொந்துபோய் இருப்பார்கள். எத்தனையோ பிரயத்தனம் செய்தும் திருமணம் மட்டும் இன்னும்  கூடிவராமல் இருக்கும். கடைசி நேரத்தில் தட்டிக்கொண்டு போய்விடும்.

நண்பர்கள் வேறு பிய்த்துக்கொண்டிருப்பார்கள்: “எப்போதுடா திருமணம்? நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு  மட்டும் தாண்டா பாக்கி!”

என்ன செய்வது? தர்ம சங்கடமாக இருக்கும்!

நான்கைந்து வருடமாக இதே கதை. ஆண்கள் என்றில்லை, பெண்களுக்கும் திருமணம் கூடி வராமல் தள்ளிக்கொண்டே போகும்.

ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது களத்திரகாரன் சுக்கிரனுடன் தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதமாகும்.

இத்தகைய தாமதம், தடைகள் எல்லாம் நீங்கி இறையருளால் ஒருவருக்குத் திருமணம் நடைபெற ஒரு சிவஸ்தலம் உள்ளது. அனைவருக்கும் தெரிந்த ஸ்தலம்தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இன்று பதிவிட்டுள்ளேன்
-----------------------------------------------------------------------------------------------------
சிவஸ்தலத்தின் பெயர்: திருமணஞ்சேரி
அங்கே உறையும் இறைவனின் பெயர் அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
இறைவியின் பெயர் கோகிலாம்பாள்
திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.

முகவரி
அருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்
கீழைத்திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி அஞ்சல்
குத்தாலம் S.O.
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609813

காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமையாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தமது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவார்கள் என்பதும் தல வரலாறாகும்.

திருமணப் பிரார்த்தனை விபரம்: திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.

திருமணம் கைகூடியவுடன். ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை, தம்பதி சமேதராக ஆலயத்திற்குச் சென்று அதை ஆலயத்தில் செலுத்திப் பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ளல் வேண்டும்.

நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதுதான் முக்கியம். இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்கும் ஆசாமிகள் எல்லாம் அங்கே செல்லாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது. மற்ற பக்தர்களுக்கும் நல்லது. ஆலயத்திற்கும் நல்லது.

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.6.17

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்!

Astrology: பஞ்சமஹாபுருஷ யோகம். மாமனித யோகம்! 

யோகங்களைப் பற்றிய பாடங்கள்

மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம்.

அதற்கான ஜாதக அமைப்பு என்ன?

பஞ்ச மகாபுருஷ யோகம்!

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்.

சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை!

கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான்
------------------------------------------------------
வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம்.

யோகப் படங்களின் துவக்கத்தில் முதல் 5 பாடங்கள் அவற்றைப் பற்றியது. அதைக் கடைசி பெஞ்ச் சிகாமணிகளுக்காகச் சுருக்கி மீண்டும் ஒருமுறை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
ருச்சகா யோகம்:
செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
2
பத்ரா யோகம்:
புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
3
ஹம்ஸ யோகம்:
குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
4
மாளவ்ய யோகம்:
சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
5
சஷ்ய யோகம்:
சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
Planetary combinations formed by Mars, Mercury, Jupiter, Venus, and Saturn in their own sign or in exaltation, occupying a cardinal house. Each of these planets forms the yoga singly, and each of them has a separate name and effect. Ruchaka yoga is formed by such a placement of Mars, Bhadra by Mercury, Hamsa by Jupiter, Malavya by Venus, and Sasa Yoga by Saturn.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்:
இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்!
----------------------------------------------------------------
This yoga is known to give a lot of wealth, name and fame to the native of the horoscope!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.6.17

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்!

என்ன சரிதானா?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.6.17

Astrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்!


Astrology: நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்!

நாடி ஜோதிடம்பற்றி எனக்கு படிப்பறிவு மட்டுமே. பட்டறிவு கிடையாது

அதைப் பற்றி எழுதும்படி சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.

எதற்கு சிரமம்?

முன்பொருமுறை  வலையில் தேடியபோது ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது. ஏனோ தானோ ஆள் எழுதியதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காரர்கள் நடத்தும் பத்திரிக்கையில் வந்தது.

அப்படியே கட் & பேஸ்ட்டாக இங்கே அதைப் பதிவிட்டிருக்காலாம். விருப்பமில்லை. காப்பி ரைட் பிரச்சினை வரும்! ஆகவே அப்போது அதைச் செய்யவில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடியில் ஒரு நாடி ஜோதிடர் முன்பு இருந்தார். என் சித்தப்பாவிற்குத் தெரிந்தவர். அவர் பெயர் சாரி (Chari)  காரைக்குடியில் உள்ள பெரிசுகளைக் கேட்டால் கதைகளைச் சொல்வார்கள்.

வருகிறவனின் கட்டை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு ஆளை அனுப்பிவிடுவாராம். அரை மணி நேரம் கழித்து வரச்சொல்வாராம்  வேறு ஒரு தகவலும் கேட்க மாட்டாராம்.

அரை மணி நேரம் கழித்துப்போனால். ஜாதகனின் பிறந்த நாள், பிறந்த நேரம் ஆகியவற்றுடன் அச்சு அசலாக ஜாதகம் தயாராக இருக்குமாம்.

ஏட்டைப் படித்து பலன்களையும் சொல்வாராம்.

இப்போது அவர் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்.

அது அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது எனக்கு இன்றும் புதிராக இருக்கிறது.

அதுபோல என் உறவினர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் பார்த்தபோது, அவர்கள் அவருடைய பெயர், அவருடைய பெற்றோரின் பெயர்கள் மற்றும் உடன் பிறந்த சகோதரிகளின் பெயர்கள் அனைத்தையும் எடுத்த ஏட்டின் மூலம் சொல்லி அசர வைத்திருக்கிறார்கள்

இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடரான திரு.பி.வி.ராமன் அவர்கள் நாடி ஜோதிடத்தைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர்கள் நடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச் சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எது எப்படியோ, எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை! கிட்டினால் அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவேன்:-))))))))

அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு பிறகு எழுதுகிறேன்!!!!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.6.17

Astrology: சட்டைப்பைக்குள் சனீஷ்வரன்!


Astrology: சட்டைப்பைக்குள் சனீஷ்வரன்!

சனீஷ்வரன் எவ்வளவு பெரிய ஆள்? அவரை எப்படி சட்டைப் பைக்குள் வைக்க முடியும்?

புறங்கால்களைச் சரியாகக் கழுவாமல் தன் கோவிலுக்குள் நுழைந்தவனை சனீஷ்வரன் ஆட்டிவைத்த கதை எல்லாம் உண்டு. அப்படிப்பட்ட  சனீஷ்வரன் எங்கே வேண்டுமென்றாலும் நுழைந்து அமர்ந்து கொள்வார்.

ஆனால் சட்டைப் பைக்குள் அல்லது உங்கள் மணிபர்சில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து அமரவைப்பது நீங்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்.

புரியும்படியாகச் சொல்லவா?

கடன் அட்டை என்னும் குட்டி சனீஷ்வரனைத்தான் அப்படிச் சொல்கிறேன்.

கடன் அட்டைக்கு என்ன விளக்கம்?

கீழே கொடுத்துள்ளேன்.

A credit card is a small plastic card issued to users as a system of payment. It allows its holder to buy goods and services based on the holder's promise to pay for these goods and services. The issuer of the card creates a revolving account and grants a line of credit to the consumer (or the user) from which the user can borrow money for payment to a merchant or as a cash advance to the user.

எனக்குத் தெரிந்து கடன் அட்டை வைத்திருக்கும் மனிதர்களில் 90% பேர்கள் மகிழ்ச்சியாக இல்லை. தகாத பெண்ணிடம் உறவு வைத்துக்கொண்டவன் போல விழி பிதுங்க முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களால், அந்தப் பெண்ணை உதறவும் முடியாது. அவளை வைத்துக்கொண்டு தீனி போடவும் முடியாது.

உங்களில் எத்தனை பேர்கள் அப்படி மாட்டிக் கொண்டு முழிக்கின்றீர்கள் என்று தெரியாது.

இதை விழி பிதுங்க முழித்துக்கொண்டிருப்பவர்களுக்காக மட்டும் எழுதவில்லை. இதுவரை மாட்டிக்கொள்ளாதவர் கள் எச்சரிக்கையாக இருப்பதற்காகவும் எழுதுகிறேன்.

உங்களுக்கு எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கியில் Debit Card கொடுப்பார்கள். அதை வாங்கிப் பையில்
வைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள். அது முறையாக ஒரு பெண்னை மணந்து கொண்டு ஊர் சுற்றுவதற்குச் சமம். எந்தப் பிரச்சினையும் வராது.

கடன் அட்டையில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். கட்டுரையின் நீளம் கருதி இரண்டொரு வரிகளில் மட்டும் எழுதுகிறேன்.

1. கடன் அட்டையைப் பெற்றுக் கொள்வது சுலபம். நீங்கள் வருமானவரி செலுத்துபவராக இருந்தால் போதும். அதற்கான சான்றிதழைக் கொடுத்தால் போதும்.

2. ஆண்டுக்கு ஆண்டு உங்களுக்குப் பணம் கிடைக்கும் வரம்பை ஏற்றிக் கொண்டே இருப்பார்கள்.

3. சிரங்கு வந்தவனுக்கு, சொறிவது இன்பமாக இருக்கும். அதுபோல கார்டைக் கையில் வைத்திருப்பவனுக்கு அதைப் பயன் படுத்துவது சுகமாக இருக்கும். கடன் சுமை அதிகமாகி மாட்டிக் கொண்டு விழிக்கும்போதுதான் அவஸ்தையாக இருக்கும். மீண்டு வரவே முடியாது. சிக்கிக்கொண்டு விடுவான்.

4. வட்டிவிகிதம் 3% (மாதத்திற்கு) ஆண்டிற்கு 42% அளவில் இருக்கும். அந்த அளவு வட்டி விகிதம் வேறு எங்கேயும் கிடையாது (கந்து வட்டிக்காரனிடம் இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால் மீட்டர் வட்டிக் காரனிடம் இருக்கும்) உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு வங்கிகள் தரும் வட்டி ஆண்டிற்கு 6% மட்டும்தான் அதை நினைவில் வையுங்கள்.

5. உங்களுக்குப் புரியும்படி சொன்னால், அட்டை மூலம் செலவழித்த அல்லது வாங்கிய கடன் ஐம்பதாயிரம் என்று வைத்துக் கொண்டால், அந்தப்  பணம்  இரண்டாண்டு காலத்தில் வட்டியுடன் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் கடனாகிவிடும். செட்டி தூங்கினாலும், வட்டி தூங்காது என்பார்கள். கடன்

அட்டையின் வட்டி புற்று நோயைப்  (cancer) போன்றது. கவனிக்காமல் விட்டால் உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் பரவத்துவங்கிவிடும். வளரத்துவங்கிவிடும்.

6. அட்டைக்கான காப்பீட்டுத்தொகை, விபத்தில் அட்டைவைத்திருப்பவன் இறந்துபோனால், தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என்பதற்கான காப்பீட்டுத்தொகை, அதற்கான பிரிமியம் என்று மாதாமாதம் ரூ.75:00ஐ உங்கள் கணக்கில் ஏற்றிவிடுவார்கள். அத்துடன் சேவை
வரியாக 15% சேர்ந்து கொள்ளும்.

7. உங்கள் கடன் தொகையுடன் மேலே உள்ள அத்தனை கருமங்களையும் ஒன்றாகக் கூட்டிப் போட்டு, வரும் தொகையில் 5% மட்டும் மாதத் தவணையாக செலுத்தினால் போதும் என்பார்கள். அங்கேதான் சிக்கல். கடன் சுமை கூடுவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். அதாவது  உங்களின் தகாத உறவுக்காரிக்கு வயிற்றில் குழந்தை உண்டாவது உங்களுக்குத் தெரியாமல் போய்விடும். தெரிந்த பிறகு கூடுதலாகப் பிரசவச்
செலவு, பிறந்த குழந்தையை வளர்க்கும் செலவு என்று அவள் உங்களை மேலும் படுத்தி எடுப்பாள்.

8. ஒவ்வொரு மாதமும்18ஆம் தேதி உங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் பட்டியலை முறையாக அனுப்பி விடுவார்கள். அதில் குறிப்பிட்டுள்ள தொகையை நீங்கள் அதற்கடுத்த மாதம் 11ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மறந்து விட்டாலோ அல்லது செலுத்தத் தவறினாலோ அபராதமாக சுமார் ரூ.250:00 உங்கள் கணக்கில் ஏறிவிடும்.

9. ஒருவன் அவனுக்கு சிரம திசை (கேடான தசா புத்திகள் ஆரம்பிக்கும்போதுதான் கடன் அட்டையை வாங்கிப் பையில் வைப்பான்.17 ஆண்டுகளோ அல்லது 19 ஆண்டுகளோ என்று சிரம திசை முடிந்தாலும், இந்தக் குட்டிச் சனி மட்டும் விலகாது.

10. கடன் அட்டை வைத்திருப்பவர்கள், அதனால் ஏற்படும் கடன் சுமையை, அந்தந்த மாதமே தவணையன்று முழுமையாகச் செலுத்தி எப்போதுமே கடன் அளவை ஜீரோ இருப்பில் வைத்திருப்பது மட்டுமே புத்திசாலித் தனமாகும். இல்லை என்றால் சிக்கல்தான்

இங்கே எந்த அட்டையையும் நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. பொதுவாக உள்ள பிரச்சினைகளைத்தால் சொல்லியிருக்கிறேன். அதை மனதில் கொள்க!

சரி, மாட்டிக் கொண்டு விட்டோம். வெளியே வருவது எப்படி? அதற்கு வழி உண்டா?

உண்டு!

Option 1

அரசுடமை வங்கிகளில் - புறநகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில், நகைகளின் பேரில் விவசாயக் கடன் என்னும் பிரிவில் கடன் தருகிறார்கள். வட்டி விகிதம் ஆண்டிற்கு 7% மட்டுமே - நன்றாகக் கவனிக்கவும் ஆண்டுக்கு 7% சதவிகிதம் மட்டுமே.(It is also simple interest)  இந்திiயாவில் வேறு எங்கும் இந்த வட்டிக்குக் கடன் கிடைக்காது.

ஒரு பவுனுக்கு ரூ.10,000:00 தருவார்கள். உங்களுடைய கடன் அட்டைக் கடன் ரூ 50,000:00 என்று இருப்பதாக வைத்துக்கொண்டால், ஐந்து பவுன் நகையை அங்கே (அரசுடமை வங்கிகளில்) அடமானம் வைத்துப் பணத்தை வாங்கி, ஒரே நாளில் கடன் அட்டைக் கடனை முழுமையாக அடைப்பதுடன், அட்டையைத் திரும்பக் கொடுத்துவிட்டு (surrender) அல்லது Cancel  செய்யச் சொல்லிவிட்டு, சுமையை இறக்கிவிட்டுவிடலாம்.

அவர்களுக்கு மாதாமாதம் செலுத்தும் தவணைத் தொகையை, அரசுடைமை வங்கியில் செலுத்தினால் 20 மாதங்களில் அதுவும் தீர்ந்துவிடும். நகையும் வீட்டிற்குத் திரும்பிவிடும்

Option 2

அடமானம் வைப்பதற்கு நகைகள் இல்லை என்னும் சூழ்நிலையில்,

1. இன்று முதல் அந்த அட்டையைப் பயன் படுத்துவதை சுத்தமாக நிறுத்திவிடுங்கள்.

2. மொத்தக் கடனில் 5% சதவிகித்தை நீங்கள் கட்டாயம் செலுத்த வேண்டும். உபரியாக அவர்கள் வசூலிக்கும் சர்வீஸ் கட்டணத்தையும் அதனுடன் சேர்த்து செலுத்திக்கொண்டே வாருங்கள். முதலில் சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் போகப் போகப் பழகிவிடும். 20 மாதங்களில் அட்டைக் கடன்
மொத்தமும் தீர்ந்து விடும்

அதற்கு முழுக்குப்போட்டு விடுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.6.17

மாலை யோகம்!

மாலை யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடங்கள்
-----------------------------------------------
எங்கள் ஊர்க் கோவிலின் குடமுழுக்கு சிறப்பாக முடிந்தது. மீண்டும் கோவைக்கு வந்து விட்டேன். வாழ்த்துத் தெரிவித்த அத்தனை நல்ல  உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
-----------------------------------------------------------------------------
இனி பாடத்தைப் பார்ப்போம்:

மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள்.

சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை  யோகம்.

நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும்.இருந்தால் அது மாலையோகம் எனப்படும்

பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.

அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான்
---------------------------------------------------------------------
A planetary combination under which all planets occupy 
consecutive houses leaving the intervening cardinal houses
vacant. The individual under this combination is happy,
handsome, and is provided with much ornaments, gems
and jewels.
--------------------------------------------------------------
ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும்
அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்!

Grahamalika "planetary garland" Yoga:
All the nine planets consecutively in six or seven houses from the
lagna. The native with a Grahamalika Yoga will be
fortunate
------------------------------------------------
உபரிச் செய்திகள்:

Pancha-grahamalika Yoga:
This is another type of Malika Yoga that considers Rahu and Ketu
along with the visible planets. It is impossible for all the nine
planets to be in less than 7 houses, therefore with respect to all
the planets falling in 5 or 6 consecutive houses, consider the seven
visible planets and only one of Rahu or Ketu. Just like the first
group of Malika Yogas discussed, the Grahamalika Yogas are not
dasa dependent, rather they indicate a foundation for success.

The result of a Malika Yoga is dependent upon the house
from which the yoga begins. The indications of that house will
dictate the theme of the yoga. The Malika Yogas commencing
from the dusthanas, therefore, have some undesirable effects,
though all of them provide a foundation for success.

If the Malika Yoga formed is also one of the troublesome
house, though creating a foundation for success, the
yoga will still indicate weaknesses in character that make it
difficult for the native to really be happy and secure.
----------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.5.17

தேவேந்திர யோகம்!!!


தேவேந்திர யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்!!!!

தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

எங்களுக்கு அமெரிக்க அதிபதியாக இருப்பவரைத்தான் தெரியும், தேவேந்திரனைப் பற்றித் தெரியாது என்று யாரும் சொல்ல வேண்டாம். கீழே சுட்டியில் உள்ள செய்தியைப் படித்துப் பாருங்கள்

சுட்டி:-http://en.wikipedia.org/wiki/Indra

அடடா, அருமை சார், எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இதுவரை நீங்கள் எழுதியதில் எந்த யோகமும் இல்லை. இதுவாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று ஆர்வமுடன் சொல்பவர்களுக்கு இந்த யோகத்தில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அந்த நிபந்தனை ஒத்துவந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.

முதலில் நீங்கள் ஸ்திர ராசிக்காரரா (Fixed signs)என்று சொல்லுங்கள்

“சார், வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்துவிடுங்கள். ஸ்திர ராசி எதெது என்பதைப் படித்தேன். மறந்து விட்டது. அதையும் நீங்களே சொல்லி விடுங்கள்” என்று சொல்லும் மாப்பிள்ளை பெஞ்ச் மைனர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படியுங்கள்.

ஸ்திர ராசிகள் (Fixed signs)
1. ரிஷபம் (Taurus),
2. சிம்மம் (Leo),
3. விருச்சிகம் (Scorpio)
4. கும்பம் (Aquarius)

ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்!

”சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா?”

பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள்.

உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்
------------------------------------------------------------------------------
யோகத்தின் பலன் என்ன?

1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome)
2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான்.
3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?)
4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், என்ன சஸ்பென்சை இழுத்துக்கொண்டே போகிறீர்கள். நீங்கள் எழுதுவது கதையல்ல - ஜோதிடக் கட்டுரை, அதை நினைவில் வையுங்கள்”

சரி, உங்கள் ஆர்வம் புரிகிறது. இதோ அந்த யோகத்திற்கான அமைப்பைச் சொல்லிவிடுகிறேன்.

1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும்
2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும்.
3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும்
4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும்

அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்:
லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி
இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன்

A planetary combination formed by Ascendant placed in a fixed sign, Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and
the lords of 2nd and 10th houses in mutual exchange.

This yoga is powerful in making the individual extremely beautiful, loved by pretty women, owner of vast wealth and villas.
He attains a very high social status.
-----------------------------------------------------------
சார், படத்திற்கு என்ன விளக்கம்?

தேவேந்திரன் ஐராவதம் எனும் வெள்ளை நிறமுடைய யானையை வைத்திருந்தானாம். அதை நினைவு படுத்த இந்தப் படம். இப்போது வெள்ளை யானை கிடைக்காது. ஆகவே இந்த யோகம் உள்ளவர்கள். வெள்ளை நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் அல்லது மெர்சிடஸ் பென்ஸ் அல்லது பென்ட்லி கார்களை வைத்துக் கொள்ளலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் வகுப்பறைக் கண்மணிகள் யாருக்காவது இந்த அமைப்பு இருந்தால் சொல்லுங்கள். நான் நேரில் வந்து பார்க்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.5.17

Astrology: ஜோதிடம்: சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்

Astrology: ஜோதிடம்: சரவாஷ்டகவர்க்கப் பரல்கள்

சர்வாஷ்டகவர்க்கப் பரல்கள் என்றால், ஏழு கிரகங்களின் சுயவர்க்கப் பரல்களையும் கூட்டி ஒவ்வொரு ராசிக்கும் கிடைக்கும் மொத்தப் பரல்களாகும்.

அப்படிக் கூட்டிவந்த தொகையை ராசிகளில் எழுதி அதை மொத்தமாகக்கூட்டினால் கிடைப்பதுதான் அந்த 337 என்னும் மந்திர எண்ணாகும்

அந்த எண் உலகில் உள்ள அனைவருக்கும் ஒன்று போல இருக்கும். எவருக்கும் அதை விட ஒரு பரல் கூடவோ அல்லது குறையவோ வராது.

பாரதப் பிரதமருக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
அழகான பெண்ணான ஹன்சிகா மோத்வாணிக்கும் அதே 337தான். உங்களுக்கும் 337தான்
கைவண்டி இழுத்துப் பிழைப்பை நடத்தும் நல்லுசாமிக்கும் அதே 337தான். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்திக்கும் அதே
337தான்

பின் வாழ்க்கை எவ்வாறு வேறு படுகிறது? அதை வரும் பாடங்களில் விரிவாகப் பார்ப்போம்!
-----------------------------------------------------------------------------------------------
சரவாஷ்டக வர்க்கப்பரல்களின் பலன்கள்

மொத்தப் பரல்கள் 337. ராசிகள் 12 வகுத்தால் சராசரியாக ஒரு ராசிக்கு 28 பரல்கள் வரும்.

ஒரு வீட்டில் (அதாவது ஒரு ராசியில்) சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீடு வலிமையாக, சிறப்பாக இல்லை என்று பொருள்.

1. ஒரு வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்குப் பெரிய (நல்ல) பலன்கள் இருக்காது.

2. ஒரு வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அந்த வீட்டால் ஜாதகனுக்கு மிகவும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

3. ஜாதகன் ஒரு வீட்டின் முழுப் பலனையும் அடைய வேண்டுமென்றால்
அந்த வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருக்க வேண்டும்.

4. கிரகங்கள் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் அல்லது கேந்திர,
திரிகோண வீடுகளில் இருந்தாலும், அல்லது சொந்த வீட்டில்
இருந்தாலும் அந்த  வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள்
இருந்தால், அந்தக் கிரகங்கள் முழுமையாகச் செய்லபடாது.

5. கிரகங்கள் ஜாதகத்தில் நீசமடைந்திருந்தாலும் அல்லது எதிரி வீட்டில் குடியிருந்தாலும் அல்லது 6ஆம் வீடு, 8ஆம் வீடு அல்லது 12ஆம் வீடு
போன்ற தீய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலும் அந்த வீட்டில்
சராசரிக்கும் அதிகமான பரல்கள் இருந்தால் அவைகள் முழுமையாகச் செயல்பட்டு ஜாதகனுக்கு நன்மைகளை செய்வார்கள்!.

6. லக்கினத்தில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்ககூடாது. இருந்தால் ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். வாழ்க்கை போராட்டங்கள்
நிறைந்ததாக இருக்கும்

7. ஏழாம் வீட்டில், அதாவது களத்திர ஸ்தானத்தில் 20 பரல்கள் அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருக்கக்கூடாது. இருந்தால் ஜாதகனுக்கு
உரிய வயதில் திருமணம் ஆகாது. திருமணம் அநியாயத்திற்குத்
தாமதமாகும். அத்துடன் தாமதமாகத் திருமணம் நடந்தாலும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தராது.

8. ஏழாம் வீட்டில் 30 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு உரிய வயதில் திருமணம் ஆகும். திருமண வாழ்க்கை
மகிழ்ச்சி  நிரம்பியதாக இருக்கும்.

9. லக்கினத்தில் இருப்பதைவிட ஏழாம் வீட்டில் அதிகப் பரல்கள்
இருந்தால், ஜாதகனுக்கு, அவன் தகுதியைவிட, அதாவது
அவனைவிட மேலான தகுதியை உடைய பெண் மனைவியாக
அமைவாள். பெண்ணாக இருந்தால், மேலான தகுதியை உடைய
கணவன் அமைவான்.

10. மாறாக லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் குறைவாக
இருந்தால், ஜாதகனின் நினைப்பைவிட, விருப்பதைவிட,
தகுதியைவிட (status) குறைவான அமைப்பை உடையே பெண்ணே மனைவியாக அமைவாள். அல்லது கணவன் அமைவான்.

11. பத்தாம் வீட்டில் 32 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், ஜாதகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அல்லது நல்ல தொழில் அமையும்

12. பத்தாம் வீட்டில் சராசரிக்கும் குறைவான பரல்கள் இருந்தால்
எடுத்தவுடன் நல்ல வேலை அமைவது சிரமம். கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு ஜாதகத்தில் உள்ள
லக்கினாதிபதி அல்லது பத்தாம் அதிபதி அல்லது கரமகாரகன் சனியின் மேன்மையைப் பொருத்து அவர்களுடைய தசா புத்திக் காலங்களில்
நல்ல வேலை கிடைக்கும்.

13. பத்தாம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால், கிடைக்கின்ற வேலையில் அது எப்படி இருந்தாலும், மனதைத் தேற்றிக்
கொண்டு பணியாற்ற வேண்டியதுதான். ஜாதகப்படி நல்ல காலம்
வரும்போது நிலைமை மாறும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.

14. இரண்டாம் வீட்டில் (House of finance) 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் எப்போதும் பணப் பிரச்சினை இருக்கும். வரவிற்கு
மேல் செலவாகும். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு தங்காது. ஓட்டைக்கை என்று சொல்லுவார்கள்.

15. நான்காம் வீட்டில் 25 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் வாழ்க்கையில்  comforts, Luxury எல்லாம் இருக்காது. அதாவது சொத்து
சுகம் எல்லாம் இருக்காது. பிறகு ஜாதகத்தில் லக்கினாதிபதி, சுக்கிரன், செவ்வாய் ஆக்கிய கிரகங்களின் வலைமையைப் பொறுத்து,
அவர்களுடைய  தசாபுத்திகளில் சொத்து, சுகங்கள் கிடைக்கலாம்.
 (சுகம் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? வண்டி, வாகனங்கள், ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் போன்றவை)

16. பாக்கிய ஸ்தானத்தில் (அதாவது ஒன்பதாம் வீட்டில்) சராசரி
அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால்தான் பூர்வீகச்
சொத்துக்கள் இருக்கும். அல்லது கிடைக்கும்

17. நான்காம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, அன்பான, பரிவான, பாசமுள்ள தாய் அமைவாள்

18. ஒன்பதாம் வீட்டில் 30ம் அல்லது அதற்கு மேலான பரல்களும் இருந்தால்தான் நல்ல, நம்மை போற்றி வளர்க்கக்கூடிய, நமக்குப்
பெருமை சேர்க்கக்கூடிய தந்தை அமைவார்.

19. ஆறாம் வீட்டில் 32ம் அல்லது அதற்கு மேலான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில், நோய், கடன், எதிரி, ஆகிய பிரச்சினைகள் இல்லாமல்
இருக்கலாம்

20. எட்டாம் வீட்டில் 25 அல்லது அதற்கு அதிகமான பரல்கள் இருந்தால், வாழ்க்கையில் பெரும் கஷ்டங்கள் வராது. பெரிய பிரச்சினைகள் வராது

பாடம் பெரியதாக உள்ளதால் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் அடுத்த பகுதியை பின்னொரு நாளில் பார்க்கலாம்!!!!

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.5.17

அஷ்டலெட்சுமி யோகம்!


அஷ்டலெட்சுமி யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடங்கள்

Lesson on Ashtalakshmi Yoga

அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன்
ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும்
கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and 
Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, 
and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள் Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga )

If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity! 

இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம் This is the sloka for Ashtalakshmi Yoga

சஷ்ட ஸ்தான கதே ராகு
லக்ன கேந்த்ர கதே குரு
அஷ்டலக்ஷ்மி சமயுக்தம்
மத்யவான் கீர்த்திமான் நர!

Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th )
Lagna Kendra Gathe Guru ( Jup angular )
Ashtalakshmee Samayuktham
Madhyavan Keerthiman Nara.
+++++++++++++++++++++++++++++++++++++
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் அவைகளைப் பற்றிய விவரம்:

தனலெட்சுமி - செல்வத்திற்கு
(Dhana Lakshmi - Wealth as prosperity)

தான்யலெட்சுமி - விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு!
(Dhanya Lakshmi - Agriculture as prosperity)

தைரியலெட்சுமி - துணிச்சலுக்கு, தைரியத்திற்கு
(Dhairya Lakshmi - Courage)

விஜயலெட்சுமி - வெற்றிக்கு
(Vijaya Laksmi - Victory)

ஆதி லெட்சுமி - சக்திக்கு
(Adi Laksmi - Power)

வித்யா லெட்சுமி - கல்விக்கு, கற்றலுக்கு
(Vidya Laksmi - Learning)

கஜலெட்சுமி - ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு
(Gaja Lakshmi Will Power)

சந்தானலெட்சுமி - குழந்தைச் செல்வத்திற்கு
(Santhana Lakshmi Children as prosperity)

The native born under this yoga, enjoys the Eightfold Prosperity. Rahu and Jupiter should be powerful, however, to confer the full benefits of this yoga.
---------------------------
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.5.17

புத ஆதித்ய யோகம்

புத ஆதித்ய யோகம்

யோகங்களைப் பற்றிய பாடங்கள்!!!!

புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்!
-------------------------------
பலன்:
ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும்.
சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும்.
This yoga will give lots of talent, success, honour and fame in society.
-------------------------------
எல்லோருக்கும் கொடுக்குமா?

கொடுக்காது.

ஏன் கொடுக்காது?

சூரிய வட்டத்தில், சூரியனுக்கு மிக அருகில், தொடர்ந்து சூரியனைக் கும்மியடிக்கும் கிரகம் புதன். ஆகவே பலருடைய ஜாதகத்தில் இந்த யோகம் இருக்கும்.

Mercury is the first planet in the Solar System and is very close to the Sun. It cannot be more than one sign away from the Sun in the rasi chart. This yoga, therefore, appears in a lot of charts, but not all the charts can have the benefits of this yoga.

யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது.

The Sun and Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart
---------------------------------------------------------------------
சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு)
மேஷம் (சூரியனின் உச்ச வீடு)
மிதுனம் (புதனின் ஆட்சி வீடு)
கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு)
ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்!
மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால்
------------------------------------------------------------------------
மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 மற்றும் 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது

ரிஷப, சிம்ம, துலா மற்றும் மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும்
------------------------------------------------------------------------
புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை!

சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.5.17

உங்கள் நட்சத்திரத்திற்கான விஷ்ணு சஹஸ்ரநாமம்!!!!


உங்கள் நட்சத்திரத்திற்கான விஷ்ணு சஹஸ்ரநாமம்!!!!

உங்களுடைய நட்சத்திர பாதம் அறிந்து அதற்குரிய விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் ஜபிக்கவும். வாழ்வில் அற்புதமான மாற்றத்தை உணர்வீர்கள்.

அஸ்விணி 1-4
பரணி 5-8
கார்த்திகை 9-12
ரோஹிணி 13-16
மிருகசீரிடம் 17-20
திருவாதிரை 21-24
புனர்பூசம் 25-28
பூசம் 29-32
ஆயில்யம் 33-36
மகம் 37-40
பூரம் 41-44
உத்திரம் 45-48
ஹஸ்தம் 49-52
சித்திரை 53-56
சுவாதி 57-60
விசாகம் 61-64
அனுசம் 65-68
கேட்டை 69-72
மூலம் 73-76
பூராடம் 77-80
உத்திராடம் 81-84
திருவோணம் 85-88
அவிட்டம் 89-92
சதயம் 93-96
பூரட்டாதி 97-100
உத்திரட்டாதி 101-104
ரேவதி 105-108

விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ பூதபவ்ய பவத்ப்ரபு: |
பூதக்ருத் பூதப்ருத் பாவோ பூதாத்மா பூதபாவந: ||                  1

பூதாத்மா பரமாத்மா ச முக்தாநாம் பரமா கதி: |
அவ்யய: புருஷஸ் ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோ க்ஷர ஏவ ச ||           2

யோகோ யோகவிதாம் நேதா ப்ரதாந புருஷேஸ்வர: |
நாரஸிம்ஹவபுஸ் ஸ்ரீமாந் கேஸவ: புருஷோத்தம:   ||             3

ஸர்வஸ் ஸர்வஸ் ஸிவஸ்தாணுர் பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவநோ பர்த்தா ப்ரபவ: ப்ரபுரீஸ்வர:  ||                4

ஸ்வயம்புஸ் ஸம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வந: |
அநாதி நிதநோ தாதா விதாதா தாதுருத்தம: ||                     5

அப்ரமேயோ ஹ்ருஷீகேஸ: பத்மநாபோ அமரப்ரபு: |
விஸ்வகர்மா மநுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்டஸ் ஸ்தவிரோ த்ருவ: ||   6

அக்ராஹ்யஸ் ஸாஸ்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தந: |
ப்ரபூதஸ் த்ரிககுப்தாம பவித்ரம் மங்களம் பரம் ||                  7

ஈஸாந: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்டஸ் ஸ்ரேஷ்ட: ப்ரஜாபதி : |
ஹிரண்யகர்ப்போ பூகர்ப்போ மாதவோ மதுஸூதந: ||              8

ஈஸ்வரோ விக்ரமீ தந்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |
அநுத்தமோ துராதர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவாந்||                9

ஸுரேஸஸ் ஸரணம் ஸர்ம விஸ்வரேதா: ப்ரஜாபவ: |
அஹஸ் ஸம்வத்ஸரோ வ்யாள: ப்ரத்யயஸ் ஸர்வதர்ஸந: ||      10

அஜஸ் ஸர்வேஸ்வரஸ் ஸித்தஸ் ஸித்திஸ் ஸர்வாதிரச்யுத: |
வ்ருஷாகபிரமே யாத்மா ஸர்வயோக விநிஸ்ருத: ||               11

வஸுர் வஸுமநாஸ் ஸத்யஸ் ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: |
அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ||           12

ருத்ரோ பஹுஸிரா பப்ருர் விஸ்வயோநிஸ் ஸுசிஸ்ரவா: |
அம்ருதஸ் ஸாஸ்வதஸ் ஸ்தாணுர் வராரோஹோ மஹாதபா: ||   13

ஸர்வகஸ் ஸர்வவித்பாநுர் விஷ்வக்ஸேநோ ஜநார்தந: |
வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித்கவி: ||         14

லோகாத்யக்ஷஸ் ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |
சதுராத்மா சதுர்வ்யூஹஸ் சதுர்தம்ஷ்ட்ரஸ் சதுர்புஜ: ||            15

ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ: |
அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி: புநர்வஸு: ||              16

உபேந்த்ரோ வாமந: ப்ராம்ஸு ரமோகஸ் ஸுசிரூர்ஜித: |
அதீந்த்ரஸ் ஸங்க்ரஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: ||        17

வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரயோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||       18

மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் ||          19

மஹேஷ்வாஸோ மஹீபர்த்தா ஸ்ரீநிவாஸஸ் ஸதாம்கதி: |
அநிருத்தஸ் ஸுராநந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: ||         20

மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம: |
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: ||                  21

அம்ருத்யுஸ் ஸர்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸந்திமாந்ஸ்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா ||    22

குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோ நிமிஷஸ் ஸ்ரக்வீ வாசஸ்பதி ருதாரதீ: ||               23

அக்ரணீர் க்ராமணீ: ஸ்ரீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ரபாத் || 24

ஆவர்த்தநோ நிவ்ருத்தாத்மா ஸம்வருதஸ் ஸம்ப்ரமர்த்ந: |
அஹஸ் ஸம்வர்த்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: ||              25

ஸுப்ரஸாத: ப்ரஸந் நாத்மா விஸ்வருக் விஸ்வபுக் விபு : |
ஸத்கர்த்தா ஸதக்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: ||      26

அஸங்க்யேயோ ப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச் சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: ||   27

வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்த்தநோ வர்த்தமாநஸ்ச விவிக்தஸ் ஸுருதி ஸாகர: ||          28

ஸுபுஜோ துர்த்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத்ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: ||             29

ஓஜஸ்தேஜோ த்யுதிர: ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்தஸ் ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரஸ் சந்த்ராம்ஸுர் பாஸ்கர த்யுதி: || 30

அம்ருதாம் ஸூத்பவோ பாநு: ஸஸபிந்து ஸுரேஷ்வர: |
ஔஷதம் ஜகதஸ் ஸேதுஸ் ஸத்யதர்ம பராக்ரம: ||              31

பூதபவ்ய பவந்நாத: பவந: பாவநோ நல: |
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத ப்ரபு: ||                 32

யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஸந: |
அத்ருஸ்யோ (அ)வ்யக்த ரூபஸ்ச ஸஹஸ்ர ஜிதநந்தஜித்||        33

இஷ்டோவிஸிஷ்டஸ் ஸிஷ்டேஷ்ட: ஸிகண்டி நஹுஷோ வ்ருஷ: |
க்ரோதஹா க்ரோதக்ருத் கர்த்தா விஸ்வபாஹுர் மஹீதர: ||        34

அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவாநுஜ: |
அபாந்நிதி ரத்ஷ்டாந மப்ரமத்த: ப்ரதிஷ்டித: ||                     35

ஸ்கந்தஸ் ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹந: |
வாஸுதேவோ ப்ருஹத்பாநுர் ஆதிதேவ: புரந்தர: ||                36

அஸோகஸ் தாரணஸ் தாரஸ் ஸூரஸ் ஸௌரிர் ஜநேஸ்வர: |
அநுகூலஸ் ஸதாவர்த்த: பத்மீ பத்ம நிபேக்ஷண: ||                37

பத்மநாபோ அரவிந்தர்க்ஷ: பத்மகர்ப்பஸ் ஸரீரப்ருத்|
மஹர்த்திர் ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||      38

அதுலஸ் ஸரபோ பீமஸ் ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: |
ஸர்வ லக்ஷண லக்ஷண்யோ லக்ஷ்மீவாந் ஸமிதிஞ்ஜய: ||         39

விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: ||                   40

உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: ||             41

வ்யவஸாயோ வ்யவஸ்தாநஸ் ஸம்ஸ்தாநஸ் ஸ்தாநோதோ த்ருவ: |
பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேக்ஷண: ||          42

ராமோ விராமோ விரஜோ மார்கோ நேயோ நயோநய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்ம விதுத்தம: ||        43

வைகுண்ட: புருஷ ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |
ஹிரண்யகர்ப்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயு ரதோக்ஷஜ: ||     44

ருதுஸ் ஸுதர்ஸந: கால: பரமேஷ்டி பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வ தக்ஷிண: ||   45

விஸ்தாரஸ் ஸ்தாவர ஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம்|
அர்த்தோ நர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: ||     46

அநிர்விண்ணஸ் ஸ்தவிஷ்டோபூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ரநேமிர் நக்ஷத்ரீ க்ஷாம: க்ஷாமஸ் ஸமீஹந: ||             47

யஜ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ரதுஸ் ஸத்ரம் ஸதாங்கதி: |
ஸர்வதர்ஸீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம்||       48

ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷ்ம ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத்|
மநோ ஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: ||              49

ஸ்வாபந: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்|
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்ப்போ தநேஸ்வர: ||          50

தர்மக்ருத் தர்மகுப் தர்மீ ஸதஸத் க்ஷரமக்ஷரம்|
அவிஜ்ஞாதா ஸஹஸ்ராமஸூர் விதாதா க்ருதலக்ஷண: ||         51

கபஸ்தநேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூதமஹேஸ்வர: |
ஆதிதேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு: ||        52

உத்தரோ கோபதிர் கோப்தா ஜ்ஞாநகம்ய: புராதந: |
ஸரீர பூதப்ருத் போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: ||                 53

ஸோமபோம்ருதபஸ் ஸோம: புருஜித் புருஸத்தம: |
விநயோ ஜயஸ் ஸத்யஸந்தோ தாஸார்ஹஸ் ஸாத்வதாம் பதி: ||  54

ஜீவோ விநயிதா ஸாக்ஷீ முகுந்தோ அமிதவிக்ரம: |
அம்போநிதி ரநந்தாத்மா மஹோததி ஸயோந்தக: ||                55

அஜோ மஹார்ஹஸ் ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதந: |
ஆநந்தோ நந்தநோ நந்தஸ் ஸத்யதர்மா த்ரிவிக்ரம: ||              56

மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதஜ்ஞோ மேதிநீபதி: |
த்ரிபதஸ் த்ரிதஸாத் யக்ஷோ மஹாஸ்ருங்க: க்ருதாந்த க்ருத்||    57

மஹாவராஹோ கோவிந்தஸ்  ஸுஷேண: கநகாங்கதீ|
குஹ்யோ கபீரோ கஹநோ குப்தஸ் சக்ர கதாதர: ||                58

வேதாஸ் ஸ்வாங்கோ ஜித: க்ருஷ்ணோ த்ருடஸ் ஸங்கர்ஷணோச்யுத: |
வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமநா: ||        59

பகவாந் பகஹா நந்தி  வநமாலீ ஹலாயுத: |
ஆதித்யோ ஜ்யோதிர் ஆதித்யஸ் ஸ்ஹிஷ்ணுர் கதிஸத்தம: ||      60

ஸுதந்வா கண்ட பரஸுர் தாருணோ த்ரவிணப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: ||       61

த்ரிஸமா ஸாமகஸ்ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக்|
ஸந்யாஸக்ருச் சமஸ் ஸாந்தோ நிஷ்டா ஸாந்தி: பராயணம்||      62

ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரேஷ்டா குமுத: குவலேஸய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷ ப்ரிய: ||     63

அநிவர்த்தீ நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ: ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம்வர: ||             64

ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: |
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: ||          65

ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: | விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் சிந்நஸம்ஸய: ||          66

உதீர்ணஸ் ஸர்வதஸ்சக்ஷு ரநீஸஸ் ஸாஸ்வத ஸ்திர: |
பூஸயோ பூஷணோ பூதிர் விஸோக: ஸோகநாஸந: ||             67

அர்ச்சிஷ்மா நர்ச்சித: கும்போ விஸுத்தாத்மா விஸோதந: |
அநிருத்தோ ப்ரதிரத: ப்ரத்யும்நோ அமித விக்ரம: ||                68

காலநேமி நிஹா வீரஸ் ஸௌரி ஸூர  ஜநேஸ்வர: |
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ கேஸிஹா ஹரி: ||        69

காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |
அநிர்தேஸ்யவபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: ||             70

ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்ம விவர்த்தந: |
ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மஜ்ஞோ ப்ராஹ்மணப்ரிய: ||     71

மஹாக்ரமோ மஹாக்ரமா மஹாதேஜா மஹோரக: |
மஹாக்ரதுர் மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: ||          72

ஸ்தவ்யஸ் ஸ்தவப்ரியஸ் ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய: ||                    73

மநோஜவஸ் தீர்த்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |
வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர் வஸுமநாஹவி: ||            74

ஸத்கதிஸ் ஸத்க்ருதிஸ் ஸத்தா ஸத்பூதிஸ் ஸத்பராயண: |
ஸூரஸேநோ யதுஸ்ரேஷ்டஸ் ஸந்நிவாஸ் ஸுயாமுந: ||         75

பூதாவாஸோ வாஸுதேவஸ் ஸர்வாஸு நிலயோ நல: |
தர்ப்பஹா தர்ப்பதோ த்ருப்தோ துர்தரோ தாபராஜித: ||             76

விஸ்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்தி ரமூர்த்திமாந்|
அநேகமூர்த்தி ரவ்யக்தஸ் ஸதமூர்த்திஸ் ஸதாதந: ||              77

ஏகோ நைகஸ் ஸவ: க:கிம் யத்தத் பதமநுத்தமம்|
லோகபந்துர் லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: ||              78

ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கஸ் சந்தநாங்கதீ|
வீரஹா விஷமஸ் ஸூந்யோ க்ருதாஸீ ரசலஸ்சல: ||             79

அமாநீ மாநதோ மாந்யோ லோகஸ்வாமி த்ரலோக த்ருத்|
ஸுமேதா மேதஜோ தந்யஸ் ஸத்யமேதா தராதர: ||               80

தேஜோ வ்ருக்ஷோ த்யுதிதரஸ் ஸர்வஸ் ஸத்ர ப்ருதாம் வர: |
ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகஸ்ருங்கோ கதாக்ரஜ: ||      81

சதுர்மூர்த்திஸ் சதுர்பாஹும் சதுர்வ்யூஹஸ் சதுர்கதி: |
சதுராத்மா சதுர்ப்பாவஸ் சதுர்வேத விதேகபாத்||                  82

ஸமாவர்த்தோ நிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |
துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா||             83

ஸுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ் தந்துவர்த்ந: |
இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: ||                 84

உத்பவஸ் ஸுந்தரஸ் ஸுந்தோ ரத்நநாபஸ் ஸுலோசந: |
அர்க்கோ வாஜஸநஸ் ஸ்ருங்கீ ஜயந்தஸ் ஸர்வவிஜ்ஜயீ||         85

ஸுவர்ணபிந்து ரக்ஷோப்யஸ் ஸர்வவாகீஸ்வரேஸ்வர: |
மஹாஹ்ரதோ மஹாகர்த்தோ மஹாபூதோ மஹாநிதி||           86

குமுத: குந்தர: குந்த: பர்ஜந்ய: பாவநோ நில: |
அம்ருதாம் ஸோம்ருதவபுஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வதோமுக: ||       87

ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச் சத்ருதாபந: |
ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் சாணூராந்த்ர நிஷூதந: ||       88

ஸஹஸ்ரார்ச்சிஸ் ஸப்தஜிஹ்வஸ் ஸப்தைதாஸ் ஸப்த வாஹந: |
அமூர்த்தி ரநகோசிந்த்யோ பயக்ருத் பயநாஸந: ||                  89

அணுர்ப்ருஹத் க்ருஸஸ் ஸ்தூலோ குணப்ருந் நிர்குணோ மஹாந்|
அத்ருதஸ் ஸ்வத்ருதஸ் ஸ்வாஸ்ய: ப்ராக்வம்ஸோ வம்ஸவர்த்தந: || 90

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத: |
ஆஸ்ரமஸ் ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: ||       91

தநுர்த்தரோ தநுர்வேதோ தண்டோ தமயிதாதம: |
அபராஜிதஸ் ஸர்வஸஹோ நியந்தா நியமோயம: ||               92

ஸத்வவாந் ஸாத்விகஸ் ஸத்யஸ் ஸத்ய தர்ம பராயண: |
அபிப்ராய: ப்ரயார்ஹோர்ஹ ப்ரியக்ருத் ப்ரீதிவர்த்தந: ||            93

விஹாய ஸகதிர் ஜ்யோதிஸ் ஸுருசிர் ஹுதபுக் விபு: |
ரவிர் விரோசநஸ் ஸூர்யஸ் ஸவிதா ரவிலோசந: ||              94

அநந்தஹூதபுக் போக்தா ஸுகதோ நைகதோக்ரஜ: |
அநிர்விண்ணஸ் ஸதாமர்ஷீ லோகாதிஷ்டாந மத்புத: ||            95

ஸநாத் ஸநாத நதம: கபில: கபி ரவ்யய: |
ஸ்வஸ்திதஸ் ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: || 96

அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜித ஸாஸந: |
ஸப்தாதிகஸ் ஸப்தஸஹ: ஸிஸிரஸ் ஸர்வரீகர: ||               97

அக்ரூர: பேஸலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |
வித்வத்தமோ வீதபய: புண்ய ஸ்ரவண கீர்த்தந: ||                98

உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸவப்ந நாஸந: |
வீரஹா ரக்ஷணஸ்ஸந்தோ ஜீவந: பர்யவஸ்தித: ||                99

அநந்தரூபோ நந்தஸ்ரீ: ஜிதமந்யுர் பயாபஹ: |
சதுரஸ்ரோ கபீராத்மா விதிஸோ வ்யாதிஸோ திஸ: ||            100

அநாதிர் பூர்புவோ லக்ஷ்மீஸ் ஸுவீரோ ருசிராங்கத: |
ஜநநோ ஜநஜந்மாதிர் பீமோ பீம பராக்ரம: | |                     101

ஆதாரநிலயோ தாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |
ஊர்த்வகஸ் ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: ||              102

ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத் ப்ராணஜீவந: |
தத்வம் தத்வ விதேகாத்மா ஜந்மம்ருத்யு ஜராதிக: ||             103

பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதாமஹ |
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஜ்ஞவாஹந: ||      104

யஜ்ஞப்ருத் யஜ்ஞக்ருத் யஜ்ஞீ யஜ்ஞபுக் யஜ்ஞஸாதந: |
யஜ்ஞாந்தக்ருத் யஜ்ஞகுஹ்ய மந்நமந்நாத ஏவ ச ||              105

ஆத்மயோநிஸ் ஸ்வயஞ்ஜாதோ வைகாநஸ் ஸாமகாயந: |
தேவகீ நந்தநஸ் ஸ்ரஷ்டா க்ஷிதீஸ: பாபநாஸந: ||               106

ஸங்கப்ருந் நந்தகீ சக்ரீ ஸார்ங்கதந்வா கதாதர: |
ரதாங்கபாணி ரக்ஷோப்யஸ் ஸர்வ ப்ரஹரணாயுத: ||             107

வநமாலீ கதீ ஸார்ங்கீ ஸங்கீ சக்ரீ ச நந்தகீ|
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோபி ரக்ஷது|| ................108
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.17

“சந்திரமங்கள’ யோகம்”


“சந்திரமங்கள’ யோகம்”

யோகங்களைப் பற்றிய ஜோதிடப்பாடம்!

ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால் நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது ’சந்திரமங்கள’ யோகம் எனப்படும்.

சிலர் அதைச் ”சசிமங்கள” யோகம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான்

If Mars conjoins the Moon, this yoga is formed.
Sasi Mangala Yoga:  When mars and moon placed in same house.
The native's finance never gets drain. He will get finance help when ever he needs.
--------------------------------------------------------------------------------
யோகத்தின் பலன் என்ன?

இந்த யோகத்திற்குப் பலனும் உண்டு. பக்க விளைவும் உண்டு.

பலன் எந்த அளவிற்குக் கிடைக்குமோ, அந்த அளவிற்குப் பக்க விளைவும் உண்டு.

ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன்.அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே  இருக்கும். அதுதான் பக்க விளைவு.

That is called as the side effects of this yoga

Chandra Mangala Yoga acts as a powerful factor in establishing one's financial worth and at the same time the native will suffer with mental worries

The combination is good if it occurs in the 2nd, 9th, 10th or 11th house.
------------------------------------------------------------------------
இது உபரிச் செய்தி:

சந்திரன் ரிஷபத்தில் இருந்து (அங்கே அவர் உச்சம்) செவ்வாய் விருச்சிகத்தில் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அதுபோல மகரத்தில் செவ்வாய்  இருந்து (அங்கே அவர் உச்சம்) கடகத்தில் சந்திரன் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அந்த அமைப்பு உன்னதமானது. இந்த அமைப்பில்

சேர்க்கையில் அல்லாமல் பார்வையில் இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகனுக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும். ஜாதகனின் நிதி நிலைமை வற்றாமல் ஊற்றாக இருக்கும்! அதாவது சசி மங்கள யோகத்திற்கு ஈடான பலன் அதில் உண்டு!

The Moon in Taurus and Mars in Scorpio - The Moon in Cancer and Mars in Capricorn are excellent positions for the native of a horoscope!
--------------------------------------------------------------------
சந்திரனும், செவ்வாயும் ஒன்றாகச் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அது சந்திரமங்கள யோகம் தான்.

சந்திரன் சாத்வீகமான கிரகம். அதனுடன் சேரும் தீய கிரகம் கீழ்க்கண்ட பாதிப்புக்களை உண்டாக்கும்:

1. ஜாதகனின் மனநிலையைப் பாதிக்கும்.

2. குணத்தை மாற்றும். உணர்ச்சிவசப்படச் செய்யும். தன் நிலையை மறக்க வைக்கும். செவ்வாய் மனதில் ஒருவித அலையை ஏற்படுத்தும்

Mars will create the tide within the mind, and influence the mental and emotional aptitude. Fighting mind and spirit, self  protective, desire to rule and influence others, irritated and aggressive

3. ஜாதகனின் இந்தக் குண மாற்றங்களால், அவனுடைய
மனைவி, குடும்பம், மற்றும் உறவுகள் எல்லாமும் பாதிப்படையும்.
சந்திரன் சுபக்கிரகம். நல்லவற்றை வழங்கக்கூடிய கிரகம். நான்காம் இடத்திற்குக் காரகன். செவ்வாயும் ஒருவிதத்தில் வழங்கக்கூடியவன். நான்காம் இடத்திற்கான, இடம், சொத்துக்களை (Landed Properties) வழங்கக்கூடியவன் அவன்தான் சாமிகளா! இருவருமே வழங்கக்கூடிய வள்ளல்கள்.
ஆகவே ஜாதகனுக்குச் செல்வத்தை நிச்சயம் வழங்குவார்கள்.

அதே நேரத்தில் சில தீமைகளும், அவர்களின் சேர்க்கையால் உண்டாகும். அதுதான் அந்தப் பக்க விளைவு (side effects) 
Chandra Mangala Yoga gives wealth and also troubles to the native of the horoscope!

எப்போது வழங்குவார்கள்?

இருவரும் தங்கள் தசை/புத்திகளில்/அந்தர தசைகளில் வழங்குவார்கள்
------------------------------------------------------------------
அந்த யோகமும், பாதிப்பும் எந்த அளவிற்கு இருக்கும்?

இருவரும் அமரும் வீட்டைப் பொறுத்துப் பலன்களும் வித்தியாசப்படும்!

The main difference lies in the house where chandra and mangala are placed. There are different influences on the houses:

1,3,5,6,8,9,10 ஆம் வீடுகளில் செவ்வாய்க்கு வலிமை அதிகம். 2,4,7,11, 12ஆம் வீடுகளில் சந்திரனுக்கு வலிமை அதிகம்

ஆகவே அந்த இரண்டு கிரகங்கள் சேரும்போது இயற்கையாகவே அது எந்த வீடோ,  அந்த வீட்டை,  அதாவது முதல் வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் செவ்வாயின் அதிகாரம் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் சந்திரனின் அதிகாரம் மிகுந்து இருக்கும். சந்திரனின்
அதிகாரம் உள்ள வீட்டை உடைய ஜாதகனுக்குத் தீய பலன்கள் குறைவாக இருக்கும்.

இது பொது விதி! உச்சம், நீசம், வக்கிரம், அஸ்தமனம், அஷ்டகவர்க்கப் பரல்கள் 6, 8, 12ஆம் இடங்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும்.

ஆகவே பொறுமையாக அலசுங்கள். அலசுகிற வேகத்தில் துணியைக் கிழித்து விடாதீர்கள்:-))))))

Therefore, each house will decide which planet among two, Moon or Mars dominates the Yoga. IF Moon is stronger, satvic qualities dominate the Yoga, and bad shades of Yogas are lesser. Mars turns calms down due to the blessings of Benefic Moon

If Mars dominates the Yoga, Mars is very angry and can create serious problems (apart from other good effects given by this Yoga)
-----------------------------------------------------------------------
வீடுகள் வாரியாகப் பலன்கள் கீழே கொடுக்கப்பாட்டுள்ளன!

கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்!
---------------------------------------------------
1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு.

2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான்.

3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும்  ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது.

சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்!

4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது  வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக  இருக்காது!

5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால்,
ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான்.

6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும்.

7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல்
ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம்.

8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும்
அபாயமும் உண்டு!

9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின்  ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு!

10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது.

11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான்.பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால்,
ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான்.
ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்!

12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம்  (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும்.

கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை

எதுவும் இல்லை! திருவண்ணாமலைக்கெல்லாம் போக வேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஞானியாகிவிடலாம்!:-)))))
----------------------------------------------------------------------
வேண்டுகோள்: பாடத்தில் ஏற்படும் பொதுவான சந்தேகங்களை மட்டுமே கேளுங்கள். உங்கள் ஜாதகத்தை வைத்துக் கேள்விகளைக் கேட்காதீர்கள்!

யோகம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அனைவருடைய ஜாதகமும் சமமானதுதான் அனைவருக்கும் மொத்தப் பரல்கள் 337 தானே? அதை  மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.17

Astrology Lesson: நீங்களும் கஜகேசரி யோகமும்


Astrology Lesson: நீங்களும் கஜகேசரி யோகமும்

எனக்கு வரும் மின்னஞ்சல்களில், சிலர்.,சார், யோகங்களைப்
பற்றி எழுதுங்கள் என்று கேட்டுகொண்டேயுள்ளார்கள். அவர்கள் எல்லாம் புதிதாக  வகுப்பறைக்கு வந்தவர்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பே யோகங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளேன். பிறகு சிலகாரணங்களுக்காக அவற்றை நீக்கி மேல் வகுப்பிற்கு
கொண்டு சென்றேன்.

அந்த அன்பர்களுக்காக முக்கியமான சில யோகங்களை இங்கே பதிவிட உள்ளேன்.

ஆரம்பப் பதிவாக கஜகேசரி யோகத்தைப் பற்றி இன்று பதிவிட்டுள்ளேன்!
------------------------------------------------------------------
மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம்.

பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த
யோகம் கொடுக்கும்.

This yoga gives the native, qualities of a both animals - magnanimous and intelligent 
as an elephant and majestic as a lion. Such people would earn a lot of name and fame in life. A quality of generosity would also be associated with them.


மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் குரு’வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம்.

இந்த யோகம் எப்போது உண்டாகும்?

குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart by being in 
Kendras (1st, 4th, 7th, or 10th) from each  other.

இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா?

இல்லை!

அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும்
தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும்.

அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும்,
வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை  பெறாமலும் இருக்க வேண்டும்.
அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது.

This yoga depends on the strength, position and house lordship of the two planets involved - Moon and Jupiter.

The yoga would also be best shown in life if both these planets are in their exaltation 
sign and are at an angle not just from each other but from Lagna as well. 
Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets 
would need to be benefic in the charts and suitably disposed to the lord of Lagna 
as well. They themselves should be free from any negative aspect, particularly Rahu 
and Saturn should not be associated with Moon.

This yoga would not work if Jupiter is in regression - as benefic planets become considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in 
neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga are nullified and the person would lead a fairly ordinary life.

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்?

அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி!

எப்போது பலன் கிடைக்கும்?

குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்.

உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு கஜகேசரி யோகம் உள்ளதா என்று பாருங்கள்!

அடுத்த யோகப் பாடம் எப்போது?

28-4-2017 வெள்ளிக்கிழமையன்று. அதுவரை பொறுத்திருங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.4.17

கரிநாள் என்பது என்ன?

கரிநாள் என்பது என்ன?

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே.

அதாவது, அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக
அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.
நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை.

இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை (Constant ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு
வைத்திருக்கிறார்கள். உதாரணமாக  தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி,
கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது  நட்சத்திரங்களின்
அடிப்படையில் அமைந்தது அல்ல.

சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில்
உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல்
போன்ற வாய்ப்புகள்  அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிட  ரீதியாக கடைபிடித்து வரும்
விஷயம்  அல்ல.

ஒவ்வொரு தமிழ் வருடமும் கரிநாட்களின் விவரம் : 
சித்திரை-6, 15,
வைகாசி- 7, 16, 17,
ஆனி- 1, 6,
ஆடி-2, 10, 20,
ஆவணி-2, 9, 28,
புரட்டாசி- 16, 29,
ஐப்பசி-6, 20,
கார்த்திகை-1, 10, 17,
மார்கழி-6, 9, 11,
தை-1, 2, 3, 11, 17,
மாசி-15, 16, 17,
பங்குனி-6, 15, 19.

கரிநாட்களில் சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.4.17

Astrology ஜோதிடம்: அலசல் பாடம்: யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?


Astrology ஜோதிடம்: அலசல் பாடம்: யாரைப் போட்டுத்தள்ள வேண்டும்?

அஷ்டகவர்க்கப் பாடம்

ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, இங்கே சுதந்திரப் போராட்ட எழுச்சி மக்களிடையே அதிகமாகி, நாடே
கொந்தளிப்பில் இருந்த சமயம். (ஆண்டு ஆகஸ்ட் 1942)

காந்திஜி அவர்களின் வெள்ளையனே வெளியேறு' போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. அத்துடன் அடுத்துவந்த ஐந்தாவது ஆண்டில் நமக்கு
சுதந்திரமும் கிடைத்தது.

The Quit India Movement (Bharat Chhodo Andolan or the August Movement (August Kranti)) was a civil disobedience movement launched in India in August 1942 in response to Mohandas Gandhi's call for immediate independence. Gandhi hoped to bring the British government to the negotiating table. Almost the entire Indian National Congress leadership, and not just at the national level, was put into confinement less than twenty-four hours after Gandhi's speech, and the greater number of the Congress leaders were to spend the rest of World War II in jail.

அதுசமயம் (போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த சமயம்), அப்போதைய பிரிட்டீஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களிடம், அவருடைய நண்பர்
சொன்னாராம்:

“காந்தி ஒரு பக்கிரியைப் போல காணப்படுகிறார். நமது அரசுக்குத் தீராத தலைவலியாக இருக்கிறார். என்ன தயக்கம்? ஆசாமியை என்கவுன்ட்டரில்
போட்டுத் தள்ள வேண்டியதுதானே?”

அதற்கு சர்ச்சில் அசத்தலாக இப்படிப் பதில் சொன்னார். “அந்த மனிதனின் கையில் ஆயுதம் எதுவும் இல்லை.அஹிம்சை என்னும் கொள்கை மட்டுமே இருக்கிறது. ஆயுதம் ஏந்தாதவனை எப்படி ஆயுதத்தால் போட்டுத் தள்ளுவது? அதனால்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம்! ”

என்னவொரு தர்மமான பதில் பாருங்கள்.

அதைவிட, தர்மமான முறையில் ஒரு மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய நமது தேசத்தந்தை, காந்திஜி அவர்களின்
துணைச்சலையும், மனவுறுதியையும் எண்ணிப்பாருங்கள்.

அதற்கு என்ன காரணம்? அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?

அஷ்டகவர்க்கத்தை வைத்து அதை இன்று அலசுவோம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அஷ்டகவர்க்க அட்டவணை!

1. அவருடைய ஜாதகத்தில், ஆறாம் வீட்டில் 36 பரல்களும், அதிலிருந்து ஆறாம் வீட்டில் 37 பரல்களும் இருப்பதைப் பாருங்கள். ஆறாம் வீடு
எதிரிகளுக்கான இடம். அதில் இருந்த மிக அதிகப்படியான பரல்கள் எதிரிகளுடன் போராடும் சக்தியை அவருக்குக் கொடுத்தது. பதினொன்றாம்
இடம் வெற்றிக்கான இடம். அதில் இருந்த அதிகப்படியான பரல்கள், அவருடைய போராட்டத்தில், அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தன!

2. அவருடைய ஜாதகத்தில் கர்மகாரகன் சனிக்கு அவனுடைய சுயவர்க்கத்தில் பரல்கள் எதுவும் இல்லை. சைபர். ஜீரோ. கோழி முட்டை. அதனால்தான் லண்டனில் தான் படித்த சட்டப் படிப்பை வைத்து வழக்குரைஞர் தொழிலை அவர் செய்யவில்லை. வேறு எந்தத் தொழிலையும் செய்யவில்லை. தேச நலனுக்காகப் போராடியதைத் தவிர.

3. அதே காரணத்தால்தான், தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும், அவர்
எந்தப் பதவியிலும் அமரவில்லை. அவருக்கு அந்த மன
நிலைமையையும் சனி கொடுக்கவில்லை.

4. தந்தைக்குக் காரகனான சூரியன் 12ஆம் வீட்டில் அமர்ந்ததால், அவர் தன்னுடைய தந்தையைச் சிறு வயதிலேயே இழக்க நேரிட்டாலும்,
அதே சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்ததால்
நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பைக் கொடுத்தான்.

5. சூரியன் 12ல் இருந்தால் அரசுக்கு எதிரான வேலைகளைச் செய்ய
நேரிடும். சிறை செல்ல நேரிடும். பரல்கள் இல்லாமல் இருந்தால்
கிரிமினல் வேலையைச் செய்து விட்டுச் சிறை செல்ல நேரிடும்.
ஆனால் சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்த சூரியன் ஒரு
உன்னதமான காரியத்திற்காக அவரை அடிக்கடி சிறைக்குச் செல்ல வைத்தான்.

6. இரண்டாம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே. 337 வகுத்தல் 12 வீடுகள்
என்னும் போது வரும் சராசரி மதிப்பான 28 பரல்களை விட 6 பரல்கள்
குறைவு. ஜாதகனுக்கு செல்வம் இருக்காது. வந்தாலும் தங்காது.
ஓட்டை அண்டா. 11ஆம் வீட்டில் இருந்த 37 பரல்கள் அவருக்குப்
பணத்தை அள்ளும் வாய்ப்பைக் கொடுத்தன. பணம் வரும் பைப்
நன்றாக இருந்தது. ஆனால் கிஞ்சித்தும் காந்திஜிக்குப் பணத்தின்
மேல் ஆசையில்லாமல் போய்விட்டது. தனகாரகன் குரு தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் பலவீனமாக இருப்பதைக் கவனியுங்கள்.
12ல் இருந்த சூரியனால் அவர் துறவியைப்போல வாழ்ந்தார்.

7. சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருந்த சந்திரன், அதுவும்
பதினொன்றாம் வீட்டில் இருந்த சந்திரன், அவருக்கு மன உறுதியையும்,
 நல்ல சிந்தனைகளையும், நல்ல கொள்கைகளையும் கொடுத்தது.
அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் ஆதரவையும், செல்வாக்கையும் பெற்றுத்தந்தது. அதன் சிறப்பால்தான் அவர் தேசியத்தலைவரானர்.
மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

8. தனது சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருக்கும் புதன், அதுவும் லக்கினத்திலேயே இருக்கும் புதன் அவருக்கு, நல்ல
பேச்சுத்திறமையையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. அத்துடன் அனைவரையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் தந்தது.

9. துலாலக்கினத்திற்கு 2 மற்றும் 7ஆம் இடங்களுக்கு அதிபதியான
செவ்வாய், தனது சுயவர்க்கத்தில் 4 பரல்களுடன் சராசரி நிலைமையில்
இருந்ததால்,  அவருடைய குடும்ப வாழ்வில் அவருக்கு நல்லதும்
கெட்டதும் சம அளவிலேயே கலந்து கிடைத்தன!

10. லக்கினாதிபதி சுக்கிரன் தனது சுயவர்க்கத்தில் 3 பரல்களுடன் இருந்ததாலும், அவருடைய லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகம் இருந்ததாலும்

(லக்கினத்தின் இரு புறமும் தீய கிரகங்கள்) அவருடைய வாழ்க்கை அவருக்குப் பயன்படவில்லை. தேசமக்களுக்கு, அதுவும் ஒரு உயரிய செயலுக்குப் பயன்பட்டது. சந்திர ராசியின் இருபக்கமும் தீய கிரகங்கள்.
சந்திர ராசியும் பாபகர்த்தாரி யோகத்தில். அதன் காரணமாகத் தனக்குக் கிடைத்த பெரும் செல்வாக்கை வைத்து அவர் செல்வம் சேர்க்கவில்லை. செல்வம் சேரவில்லை. அல்லது காசு பண்ணும் மனப்பான்மை அவருக்கு இல்லை. எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
---------------------------------------------------------
அஷ்டகவர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை எப்படி அலசுவது என்பதை உங்களுக்குச் சொல்லித்தரும் முகமாக இன்று இந்தப் பதிவை வலை
ஏற்றியுள்ளேன்.

இது பயிற்சி வகுப்பு மாணவர்களுக்காக எழுதப்பெற்ற பாடம். பயிற்சி
வகுப்புப் பாடங்கள், வகுப்பறையில், சில காரணங்களுக்காக இடம் பெறாது.
பல பொது மனிதர்களின் ஜாதகங்களை, அதுவும் அரசியல்வாதிகளின் ஜாதகங்களையும் சேர்த்து வைத்து அவைகள் எழுதப் படுவதால், இங்கே
பதிவிடும்போது பல எதிர்வினைகளச் சந்திக்க நேரிடும். அவற்றைத் தவிர்க்கும் பொருட்டு பதிவில் அவைகள் வராது. பிரச்சினைகள் வேண்டாம்
என்பதுதான் அதன் நோக்கம். அதையும் மனதில் கொள்க!

அஷ்டகவர்க்கத்தை வைத்துப் பலாபலன்களை அறியும் பாடங்களைத் தொடர்ந்து அஷ்டகவர்க்க வகுப்பில் எழுதியுள்ளேன். அவைகள் பிறகு
புத்தகமாக வரவுள்ளது, வரும்போது அனைவரும் படிக்கலாம். பயனடையலாம்.

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!