மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.5.17

தேவேந்திர யோகம்!!!

தேவேந்திர யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்!!!!

தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

எங்களுக்கு அமெரிக்க அதிபதியாக இருப்பவரைத்தான் தெரியும், தேவேந்திரனைப் பற்றித் தெரியாது என்று யாரும் சொல்ல வேண்டாம். கீழே சுட்டியில் உள்ள செய்தியைப் படித்துப் பாருங்கள்

சுட்டி:-http://en.wikipedia.org/wiki/Indra

அடடா, அருமை சார், எனக்குக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இதுவரை நீங்கள் எழுதியதில் எந்த யோகமும் இல்லை. இதுவாவது இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று ஆர்வமுடன் சொல்பவர்களுக்கு இந்த யோகத்தில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அந்த நிபந்தனை ஒத்துவந்தால் மட்டுமே உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியும்.

முதலில் நீங்கள் ஸ்திர ராசிக்காரரா (Fixed signs)என்று சொல்லுங்கள்

“சார், வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்துவிடுங்கள். ஸ்திர ராசி எதெது என்பதைப் படித்தேன். மறந்து விட்டது. அதையும் நீங்களே சொல்லி விடுங்கள்” என்று சொல்லும் மாப்பிள்ளை பெஞ்ச் மைனர்களுக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படியுங்கள்.

ஸ்திர ராசிகள் (Fixed signs)
1. ரிஷபம் (Taurus),
2. சிம்மம் (Leo),
3. விருச்சிகம் (Scorpio)
4. கும்பம் (Aquarius)

ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்!

”சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா?”

பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள்.

உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்
------------------------------------------------------------------------------
யோகத்தின் பலன் என்ன?

1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome)
2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான்.
3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?)
4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், என்ன சஸ்பென்சை இழுத்துக்கொண்டே போகிறீர்கள். நீங்கள் எழுதுவது கதையல்ல - ஜோதிடக் கட்டுரை, அதை நினைவில் வையுங்கள்”

சரி, உங்கள் ஆர்வம் புரிகிறது. இதோ அந்த யோகத்திற்கான அமைப்பைச் சொல்லிவிடுகிறேன்.

1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும்
2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும்.
3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும்
4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும்

அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்:
லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி
இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன்

A planetary combination formed by Ascendant placed in a fixed sign, Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and
the lords of 2nd and 10th houses in mutual exchange.

This yoga is powerful in making the individual extremely beautiful, loved by pretty women, owner of vast wealth and villas.
He attains a very high social status.
-----------------------------------------------------------
சார், படத்திற்கு என்ன விளக்கம்?

தேவேந்திரன் ஐராவதம் எனும் வெள்ளை நிறமுடைய யானையை வைத்திருந்தானாம். அதை நினைவு படுத்த இந்தப் படம். இப்போது வெள்ளை யானை கிடைக்காது. ஆகவே இந்த யோகம் உள்ளவர்கள். வெள்ளை நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் அல்லது மெர்சிடஸ் பென்ஸ் அல்லது பென்ட்லி கார்களை வைத்துக் கொள்ளலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் வகுப்பறைக் கண்மணிகள் யாருக்காவது இந்த அமைப்பு இருந்தால் சொல்லுங்கள். நான் நேரில் வந்து பார்க்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27 comments:

 1. இரண்டு பரிவர்த்தனைகள்:
  லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி
  இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன்
  தங்களுக்கு தெரிந்து யாருக்கேனும் இந்த அமைப்பு இருக்கிறதா ஐயா? இந்த அமைப்புள்ள பிரபலங்கள் யாரேனும் இருக்கிறார்களா ஐயா?

  ReplyDelete
 2. Makes very logical.

  111
  Makes one to learnt, anything faster and lucky as 11th Lord being natural benefic for these signs.
  210
  Dhana, karma
  natural friends and Kendra Lords

  Also on pancha thatva also this makes very good sense.

  So these parivartana will be very strong. Not sure of Indra, but $$$ for sure, so they can create Indra loga here 😁

  ReplyDelete
 3. Some doubts.

  1) I thought all these planetary conjucting yoga's are only applicable to Raasi chart. But you are saying we can take Navamsa too. But in text books it isn't mentioned about Navamsa. Why and how should it work?

  2) Do Tamil Nadu astrologers go with bhavaga or Raasi? As one can have Lagna Lord in Lagna Raasi but Lagna can situated in degrees past Lagna Lord. If we say about bhavaga, Lagna Lord will be considered in 12th bhavaga but in normal astrological view he is in first house. Which and why the right answer?

  ReplyDelete
 4. கன்டிஷன்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கே!!!
  ஆயிரத்துல ஒருத்தருக்குதான் அமையும் போல!!!!!

  ReplyDelete
 5. No sir... I don't have this yogam...

  ReplyDelete
 6. Very clearly explained sir thanks sir vazhga valamudan

  ReplyDelete
 7. Very good yogam lesson Sir. Thank you.

  ReplyDelete
 8. Blog படிக்க நேரம் உள்ளது.

  ReplyDelete
 9. Dear Sir,

  This yoga will not happen for simha lagnam, because for simha lagnam 2 & 11th lord is budan and there is no chance as per the two different parivartina combination...

  Adiyen Simha lagnam and 1st lord (Sun), 10t lord (Venus) and 2nd&11th lord (Budan) all together in 10th house with out graha yudham, but budan combust...

  ReplyDelete
 10. Dear Sir,

 11. Point no 1&2 ok sir...3&4 not ok sir...Benz Ellam venam sir. Alto vathu kidaikuma

  ReplyDelete
 12. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

  முதலில் மன்னிக்கவும் இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாமல் பின்னுட்டம் இடுவதற்கு ஐயா!

  மதிப்பெண்கள் பற்றி பாடத்தை தங்கள் வகுப்பறையில் படித்தவன் என்ற முறையில் தங்களிடம் ஒரு சந்தேகம் ஐயா!

  **ஒரு ஜாதகம் கணிக்க பெரும்பாலும் என்.சி.லஹிரி அயனாம்சம முறைகள் பின்பற்றப்படுகிறது.
  (தவறிருப்பின் திருத்தவும் ஆசானே!)
  அதுபோல ராமன் அயனாம்சம முறையும் உள்ளது. (ராமன் அவர்களிடமும் தாங்கள் ஜாதகம் கணித்து வாங்கியிருப்பதாக பதிவிட்டிருந்ததாக ஞாபகம்.)
  அப்படி அயனாம்சம முறை மாறும் போது அஷ்டவர்க்கப் பரல்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. பரல்களின் வேறுபடும் முறை குறித்து டாக்டர் புருனோ அவர்கள் எழுதிய பின்னுட்டத்தை படித்தப்பின்னும் எனக்கு தெளிவு பிறக்கவில்லை ஐயா!
  அதைப்பற்றி தாங்கள் தெளிவுற விளக்குவீர் என நம்புகிறேன் ஐயா!
  எனக்கு லஹிரி முறையில் லக்னத்திற்கு 37 மதிப்பெண்ணும், ராமன் முறையில் லக்னத்திற்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படுவதினாலேயே அந்த சந்தேகம் ஐயா!

  **ஒரு வேளை தங்களைப்போல காலச்சந்திப்பில் பிறந்திருப்பேனோ என அறிந்துக்கொள்ள தங்களது பதிவுகளில் கால சந்திப்பைப்பற்றி தேடினால் அதைப்பற்றி ஆசான் விளக்காதது வருத்தமே! அந்த விதியைப்பற்றியும் தாங்கள் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

  இது அனைத்தையும் விட பிறந்த போது கணித்து எழுதப்பெற்ற ஜாதகத்தில் அமைப்பு ஒன்றாகவும், தற்போது கணிக்கும் திருக்கணித முறையாகிய லஹிரியில் ஒன்றாகவும், ராமன் முறையில் ஒன்றாகவும் இருப்பது குழப்பம் அளிக்கிறது.

  சொந்த ஜாதகத்தை வைத்து வரும் கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிப்பதில்லை என்ற தங்கள் கோட்பாடை முற்றும் அறிந்தவனாயினும் மாணவணின் குழப்பத்தை தீர்க்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்னும் மிக உன்னதமான ஒன்றிற்கு முன் தங்களின் கோட்பாடு நீசபங்கம் அடையும் என கருதுகிறேன்.

  பிறந்தநாள் 01-01-1995
  இடம் ஶ்ரீரங்கம்
  நேரம் 12.05AM

  மார்கழி மாத மூல நட்சத்திர அமாவாசை அன்று (அதன் சிறப்பை தாங்களுக்கு சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை என தெரிந்தும் அதை சுயதம்பட்டம் அடிக்க என் மனம் விரும்புவதாலேயே இது! இது சிம்ம லக்னம்! ஹுரோக்களுக்கான லக்னம்! என்பது போல☺☺☺)

  கணித்த ஜாதகத்தில் ஐந்தாகிய மகரத்தில் புதன்.

  ராமன் முறையில் சுக்கிரன் தனது முதல்நிலை எதிரியாகிய குருவுடன் விருச்சகத்தில்.

  லஹிரி முறையில் சுக்கிரன் ராகுவுடன் இணைந்து ஆட்சி வீட்டில்.

  கன்னியா லக்னம் 2ல் சுக்கிரன்,ராகு
  3ல் குரு
  4ல் சூரியன் சந்திரன் புதன்
  6ல் சனி
  8ல் கேது
  12ல் செவ்வாய்

  **ஒரே ராசியில் இணைந்த இரண்டு மூன்று கிரகங்கள் கிரக யுத்தத்தில் இருக்கும் என தாங்கள் எனது புத ஆதித்ய யோகம் பற்றிய பின்னுட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தீர்கள் அந்த கிரகயுத்தத்தைப்பற்றியும் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.

  கடைசியாக வகுப்பறை மாணவரின் வேலையை சுலபமாக்கவேண்டியது ஆசிரியரின் கடமை என்னும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு கோரிக்கை!
  ஒரு தேடல் கருவி(searchbox) அமைத்தால் பதிவுகளை தேட வசதியாக இருக்கும். என் முன் வகுப்பு மூத்தவர் சுந்தர் அவர்களின் வரிசைப்படுத்தும் முயற்சியும் பாரட்டப்படவேண்டியது. எனினும் ஒரு தேடுதல் கருவி தரும் அனுபவம் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. அது வலைப்பூவிற்கு நடைமுறை சாத்தியமான என அறியாதவன் நான் . தவறிருப்பின் மன்னிக்க!

  இந்த பின்னூட்டங்களுக்கு தாங்கள் பதிலளிப்பதற்கு தேவையான கால அளவை
  ஏற்படுத்தி தருமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  நம்பிக்கைகளுடனும் வாழ்த்துக்களுடனும்,
  மணிவண்ணன் நம்பியப்பன்.

  ReplyDelete
 13. வணக்கம் ஐயா,பின் குறிப்பை படித்தாலே தெரிகிறது,மிகவும் அரிதான யோகம் என்று.நன்றி.

  ReplyDelete
 14. /////Blogger Sakthi Balan said...
  இரண்டு பரிவர்த்தனைகள்:
  லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி
  இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன்
  தங்களுக்கு தெரிந்து யாருக்கேனும் இந்த அமைப்பு இருக்கிறதா ஐயா? இந்த அமைப்புள்ள பிரபலங்கள் யாரேனும் இருக்கிறார்களா ஐயா?////

  எனக்குத் தெரிந்தவரை இதுவரை இல்லை. இருப்பவர்கள் தெரிவித்தால் மகிழ்ச்சி கொள்வேன்!!! நன்றி!!!!

  ReplyDelete
 15. ////Blogger selvaspk said...
  Makes very logical.
  111
  Makes one to learnt, anything faster and lucky as 11th Lord being natural benefic for these signs.
  210
  Dhana, karma
  natural friends and Kendra Lords
  Also on pancha thatva also this makes very good sense.
  So these parivartana will be very strong. Not sure of Indra, but $$$ for sure, so they can create Indra loga here 😁//////

  இந்திர லோகம் இங்கேயே உண்டு. நம் மனம் மட்டும் தெளிவாக இருந்தால் போதும். செல்வா!!!!!

  ReplyDelete
 16. ////Blogger selvaspk said...
  Some doubts.
  1) I thought all these planetary conjucting yoga's are only applicable to Raasi chart. But you are saying we can take Navamsa too. But in text books it isn't mentioned about Navamsa. Why and how should it work?/////

  Navamsam is magnified version of Rasi. Most of the rules are applicable only to Rasi. I am always insisting this!!!!!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>....
  2) Do Tamil Nadu astrologers go with bhavaga or Raasi? As one can have Lagna Lord in Lagna Raasi but Lagna can situated in degrees past Lagna Lord. If we say about bhavaga, Lagna Lord will be considered in 12th bhavaga but in normal astrological view he is in first house. Which and why the right answer?//////

  கால சந்திப்பில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் அதெல்லாம். மற்றவர்களுக்குக் கிடையாது. குழம்ப வேண்டாம்.

  ReplyDelete
 17. /////Blogger Happy said...
  கன்டிஷன்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கே!!!
  ஆயிரத்துல ஒருத்தருக்குதான் அமையும் போல!!!!!////

  உண்மைதான். நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 18. ////Blogger Shruthi Ramanath said...
  No sir... I don't have this yogam...////

  அதனாலென்ன? அனைவருக்கும் உள்ள மதிப்பெண் 337 தானே!!! அதை மனதில் கொள்ளுங்கள் சகோதரி!!!!

  ReplyDelete
 19. ///Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Very clearly explained sir thanks sir vazhga valamudan////

  நல்லது. நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 20. ///Blogger kmr.krishnan said...
  Very good yogam lesson Sir. Thank you.////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

  ReplyDelete
 21. Blogger V.C.Arunchand said...
  s.no 4/// is missing for my child...////

  எல்லா யோகங்களும் இருக்க வேஏண்டும் என்ற அவசியமில்லை. யாராயிருந்தாலும் ஜாதக மதிப்பெண் 337 என்பது பொதுவானதுதானே!!! அதை மந்தில் வையுங்கள்!!! நன்றி!!!!

  ReplyDelete
 22. ///Blogger SELVARAJ said...
  Blog படிக்க நேரம் உள்ளது.////

  அது போதும். விரும்பியதைச் செய்ய நேரம் கிடைப்பதும் ஒரு யோகம்தான். அதை மனதில் வையுங்கள் நண்பரே!!!!

  ReplyDelete
 23. /////Blogger rama said...
  Dear Sir,
  This yoga will not happen for simha lagnam, because for simha lagnam 2 & 11th lord is budan and there is no chance as per the two different parivartina combination...
  Adiyen Simha lagnam and 1st lord (Sun), 10t lord (Venus) and 2nd&11th lord (Budan) all together in 10th house with out graha yudham, but budan combust.../////

  சிம்ம லக்கினம் ஹீரோக்களின் லக்கினம். அதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள்!!!!!

  ReplyDelete
 24. /////Blogger Saravanan V said...
  Point no 1&2 ok sir...3&4 not ok sir...Benz Ellam venam sir. Alto vathu kidaikuma///

  முயற்சி திருவினையாக்கும். கிடைக்கும்.கிடைக்க வாழ்த்துக்கள்! நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 25. ////Blogger Manivannan said...
  ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
  முதலில் மன்னிக்கவும் இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாமல் பின்னுட்டம் இடுவதற்கு ஐயா!
  மதிப்பெண்கள் பற்றி பாடத்தை தங்கள் வகுப்பறையில் படித்தவன் என்ற முறையில் தங்களிடம் ஒரு சந்தேகம் ஐயா!
  **ஒரு ஜாதகம் கணிக்க பெரும்பாலும் என்.சி.லஹிரி அயனாம்சம முறைகள் பின்பற்றப்படுகிறது.
  (தவறிருப்பின் திருத்தவும் ஆசானே!)
  அதுபோல ராமன் அயனாம்சம முறையும் உள்ளது. (ராமன் அவர்களிடமும் தாங்கள் ஜாதகம் கணித்து வாங்கியிருப்பதாக பதிவிட்டிருந்ததாக ஞாபகம்.)
  அப்படி அயனாம்சம முறை மாறும் போது அஷ்டவர்க்கப் பரல்களின் எண்ணிக்கை வேறுபடுகிறது. பரல்களின் வேறுபடும் முறை குறித்து டாக்டர் புருனோ அவர்கள் எழுதிய பின்னுட்டத்தை படித்தப்பின்னும் எனக்கு தெளிவு பிறக்கவில்லை ஐயா!
  அதைப்பற்றி தாங்கள் தெளிவுற விளக்குவீர் என நம்புகிறேன் ஐயா!
  எனக்கு லஹிரி முறையில் லக்னத்திற்கு 37 மதிப்பெண்ணும், ராமன் முறையில் லக்னத்திற்கு 40 மதிப்பெண்ணும் வழங்கப்படுவதினாலேயே அந்த சந்தேகம் ஐயா!
  **ஒரு வேளை தங்களைப்போல காலச்சந்திப்பில் பிறந்திருப்பேனோ என அறிந்துக்கொள்ள தங்களது பதிவுகளில் கால சந்திப்பைப்பற்றி தேடினால் அதைப்பற்றி ஆசான் விளக்காதது வருத்தமே! அந்த விதியைப்பற்றியும் தாங்கள் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
  இது அனைத்தையும் விட பிறந்த போது கணித்து எழுதப்பெற்ற ஜாதகத்தில் அமைப்பு ஒன்றாகவும், தற்போது கணிக்கும் திருக்கணித முறையாகிய லஹிரியில் ஒன்றாகவும், ராமன் முறையில் ஒன்றாகவும் இருப்பது குழப்பம் அளிக்கிறது.
  சொந்த ஜாதகத்தை வைத்து வரும் கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிப்பதில்லை என்ற தங்கள் கோட்பாடை முற்றும் அறிந்தவனாயினும் மாணவணின் குழப்பத்தை தீர்க்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்னும் மிக உன்னதமான ஒன்றிற்கு முன் தங்களின் கோட்பாடு நீசபங்கம் அடையும் என கருதுகிறேன்.
  பிறந்தநாள் 01-01-1995
  இடம் ஶ்ரீரங்கம்
  நேரம் 12.05AM
  மார்கழி மாத மூல நட்சத்திர அமாவாசை அன்று (அதன் சிறப்பை தாங்களுக்கு சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை என தெரிந்தும் அதை சுயதம்பட்டம் அடிக்க என் மனம் விரும்புவதாலேயே இது! இது சிம்ம லக்னம்! ஹுரோக்களுக்கான லக்னம்! என்பது போல☺☺☺)
  கணித்த ஜாதகத்தில் ஐந்தாகிய மகரத்தில் புதன்.
  ராமன் முறையில் சுக்கிரன் தனது முதல்நிலை எதிரியாகிய குருவுடன் விருச்சகத்தில்.
  லஹிரி முறையில் சுக்கிரன் ராகுவுடன் இணைந்து ஆட்சி வீட்டில்.
  கன்னியா லக்னம் 2ல் சுக்கிரன்,ராகு
  3ல் குரு
  4ல் சூரியன் சந்திரன் புதன்
  6ல் சனி
  8ல் கேது
  12ல் செவ்வாய்
  **ஒரே ராசியில் இணைந்த இரண்டு மூன்று கிரகங்கள் கிரக யுத்தத்தில் இருக்கும் என தாங்கள் எனது புத ஆதித்ய யோகம் பற்றிய பின்னுட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தீர்கள் அந்த கிரகயுத்தத்தைப்பற்றியும் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
  கடைசியாக வகுப்பறை மாணவரின் வேலையை சுலபமாக்கவேண்டியது ஆசிரியரின் கடமை என்னும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு கோரிக்கை!
  ஒரு தேடல் கருவி(searchbox) அமைத்தால் பதிவுகளை தேட வசதியாக இருக்கும். என் முன் வகுப்பு மூத்தவர் சுந்தர் அவர்களின் வரிசைப்படுத்தும் முயற்சியும் பாரட்டப்படவேண்டியது. எனினும் ஒரு தேடுதல் கருவி தரும் அனுபவம் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. அது வலைப்பூவிற்கு நடைமுறை சாத்தியமான என அறியாதவன் நான் . தவறிருப்பின் மன்னிக்க!
  இந்த பின்னூட்டங்களுக்கு தாங்கள் பதிலளிப்பதற்கு தேவையான கால அளவை
  ஏற்படுத்தி தருமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
  நம்பிக்கைகளுடனும் வாழ்த்துக்களுடனும்,
  மணிவண்ணன் நம்பியப்பன்.//////

  திருக்கணிதத்தைப் பின்பற்றுங்கள். அது சரியாக இருக்கும். பின்னொரு சமயம் நேரம் கிடைக்கும் போது இது பற்றி விவாதிப்போம். பொறுத்துக்கொள்ளுங்கள்!!!!!

  ReplyDelete
 26. வணக்கம் வாத்தியார் அவர்களே!!!

  வாத்தியார் அவர்களின் BLOG படிக்கும் யோகமே பெரிது...
  இந்த இந்திர யோகம் பொறாமை நிறைந்தது... ஆபத்தானது...

  வகுப்பறைக்கு ஒழுங்காக வரமுடியவில்லை... மன்னிக்கவும்...

  அன்புள்ள மாணவன்,
  லெக்ஷ்மி நாராயணன்
  தூத்துக்குடி

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com