மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.5.17

இறைவன் தரும் வாய்ப்பு!


இறைவன் தரும் வாய்ப்பு!

எத்தனை அயோக்கியனாக இருந்தாலும் அவன் திருந்த, சிந்திக்க இறைவன் ஒரு வாய்ப்பை அளிப்பான். இரணியனுக்கு அந்த வாய்ப்பு நரசிம்மபிரபுவின் மடியில் படுத்திருந்தபோது கிடைத்தது.

அவன் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. ராவணனுக்கு அந்த வாய்ப்பு "இன்றுபோய் நாளைவா" வில் கிடைத்தது.

அவனும் அதை கோட்டை விட்டான். துரியனுக்கு கண்ணன் தூதின்போது கிடைத்தது.

விஸ்வரூபமெடுத்து நாராயணனாய் துரியன் முன் நின்று தான் யார் என்பதை உணர்த்தி துரியன் சிந்திக்க ஒரு வினாடியை கொடுத்தான்

இறைவன். இதை "moment of truth" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறை இந்த "moment of truth" வரும்.....அந்த வினாடியில் எடுக்கும் முடிவு தான் அவர்கள் வாழ்க்கையை மாற்றும்.

அருச்சுனனுக்கு போரின்போது இந்தக் குழப்பம் நேர்ந்தது. கீதையை உபதேசித்து "போரிடுகிறாயா,வில்லை கீழே போடுகிறாயா?" என்று கேட்டான் இறைவன்.

கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பற்றிக்கொண்டான் அருச்சுனன்.

கர்ணன் முன் தோன்றி அவன் திருந்த ஒரு சந்தர்ப்பம் அளித்தான் இறைவன்.

செஞ்சோற்றுகடனின் பேரில் அதை முட்டாள்தனமாக நிராகரித்தான் கருணன்.

கும்பகருண்னைபோல் கருணனும் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க இறைவன் அளித்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டான்....
பாகவதத்தில், புராணத்தில் இது வழக்கமாக கானப்படும் நிகழ்வுதான்.

இறைவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.

திருந்த எத்தனை தூரம் சந்தர்ப்பம் தர முடியுமோ  அத்தனை
தூரம் சந்தர்ப்பம் கொடுக்கிறான்.

இரணியனை எப்போது அவன் கொன்றான்?

பிரகாலாதனை வருடக்கனக்காய் சித்திரவதை செய்தபோதும் அவன் திருந்த சந்தர்ப்பம் கொடுத்து காத்திருந்தான்....

ஒரு சிறுவனை கூட தன்னால் கொல்ல முடியவில்லை என்பதை உனர்ந்தும் இரணியன் திருந்தவில்லை.

இறுதியில் நரசிம்மமாய் வந்து இரணியனை எடுத்து தன் மடிமேல் அமர்த்தி அவன் விழிகளை உற்றுநோக்கினான் நாராயணன்.

அப்போதும் இரணியன் மனதில் துளி பக்தி வரவில்லை.துளியும் அவன் திருந்தவில்லை.இரணியனின் விழிகளில் நாராயனன் கண்டது வெறுப்பைத்தான்.

இனிமேல் இவன் திருந்தவே மாட்டான் என்பதை அறிந்தபின்னரே அவன் வயிற்றை கிழித்து அவனை மாய்த்தான் நாராயணன்

ஆகவே இறைவன் தரும் வாய்ப்பைப் பயன் படுத்தத் தவறாதீர்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

K.P.Shanmuga Sundaram Sundaram said...

Nice sir thanks sir vazhga valamudan

kmr.krishnan said...

True, Sir

Hari Krishna said...

sir எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா போஸ்டிங் ஒன்றுமே இல்லையா? நாம் ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறதா ? பதில் சொல்லுங்க .. Dr ஹரி கிருஷ்ணா

Mani Maran said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Nice sir thanks sir vazhga valamudan////

நல்லது. நன்றி நண்பரே!!!!

Subbiah Veerappan said...

///Blogger kmr.krishnan said...
True, Sir///

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருச்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Hari Krishna said...
sir எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா போஸ்டிங் ஒன்றுமே இல்லையா? நாம் ஸ்பெஷல் கிளாஸ் நடக்கிறதா ? பதில் சொல்லுங்க .. Dr ஹரி கிருஷ்ணா/////

உடல்நிலை காரணமாக புதிய பதிவுகளை எழுதிப் பதிவிட முடியவில்லை. பொறுத்திருங்கள். இன்னும் 25 பாடங்களை எழுதிப் பதிவிட உள்ளேன். அடுத்த மாதம் செய்யலாம் என்று உள்ளேன்.

Subbiah Veerappan said...

/////Blogger Mani Maran said...
வணக்கம் ஐயா, தங்கள் அனைத்து பதிவுகளையும் படித்து வரும் புதிய மாணவன் நான்.நீங்கள் இந்த பதிவில்"செஞ்சோற்றுகடனின் பேரில் அதை முட்டாள்தனமாக நிராகரித்தான் கருணன்" என்று கூறியது வருத்தம் தருகின்றது.இதை "செஞ்சோற்றுகடனுக்காக நிராகரித்தான் கருணன்" என்று மாற்றுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி ஐயா/////

உங்கள் வருத்தம் நியாயமானதுதான். திருத்தம் செய்து விடுகிறேன் நண்பரே!!!! நன்றி!!!!