மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 271 - 280. Show all posts
Showing posts with label Lessons 271 - 280. Show all posts

14.12.09

ME and MY BOSS: நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++

ME and MY BOSS: நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!

அடிப்படைத் தேவைகளுக்கு யாரும் அலையக்கூடாது. என் மொழியில் சொன்னால் சிரமப் படக்கூடாது. அது துன்பமானது.

இன்றையப் பொருளாதாரச் சூழ்நிலையில் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றவில்லை! செலவுகளை இழுத்துப் பிடித்தாலும் போதவில்லை. பற்றாக்குறை

இன்றைய மனிதர்கள் இரண்டுவிதமாகப் பிரிந்திருக்கிறார்கள்

1. பணத்திற்கு என்ன செய்வது என்று அலைபவன் அல்லது கவலைப் படுபவன் முதல்வகை
2. பணத்தை வைத்துக் கொண்டு, அதை என்ன செய்வது? எப்படிக் காப்பாற்றுவது? எப்படி அதைப் பெறுக்குவது என்று கவலைப் படுபவன் இரண்டாவது வகை!

மொத்தத்தில் கவலை இல்லாத மனிதனே கிடையாது!

அது என்ன அடிப்படைத் தேவை?

இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு - இதுதான் அடிப்படைத்தேவை. ரோட்டி, கப்டா அவுர் மக்கான்!
------------------------------------------------------
ஒரு படத்தில் நாகேஷ், புரட்சித்தலைவரிடம் சொல்வார்: “ பணம் பத்தும் செய்யும். என்னிடம் பணத்தைக் கொடுத்தால் நான் பதினொன்றைச் செய்வேன்”

”அதென்ன பதினொன்றாவது?”

”பணத்தால் என்ன முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதையும் நான் செய்து தருகிறேன்”

உண்மைதான்! பணத்தை வைத்துக்கொண்டு எதை வேண்டுமென்றாலும் செய்து முடிக்கலாம். வெளியில் செல்ல வேண்டாம். வீடு தேடி அனைவரையும் வரவைக்கலாம்.

பணத்தால் முடியாதவை என்று சில இருக்கின்றன. நல்ல தாயை பணம் கொடுத்து வாங்க முடியாது! அன்பைப், பரிவைப் பணம் கொடுத்து வாங்க முடியாது.தூய காதலைப் பனம் கொடுத்து வாங்க முடியாது.

அதைச் சொன்னால்: “வரட்டு வேதாந்தம் பேசாதீர்கள்.” என்பான் இன்றைய இளைஞன்.

ஆகவே பணம் என்பது சுவாசத்தைப்போல முக்கியமானது. அதை மறுப்பதற்கில்லை. சுவாசமின்றி யாரும் உயிருடன் இருக்க முடியாது. பணத்தேவையும் அப்படிப்பட்டதுதான்!
-------------------------------------------------------
சரி, பணத்திற்கு என்ன செய்வது?

நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமைய வேண்டும்.

அதற்கு ஜாதகத்தில்

1.பத்தாம் வீடு
2.பத்தாம் வீட்டு அதிபதி
3.பத்தில் வந்து அமரும் கிரகம்
4.பத்தாம் வீட்டின் மேல் விழும்பார்வைகள்
5.பத்தாம் அதிபதியின் மேல் விழும் பார்வைகள்
6.அம்சத்தில் பத்தாம் வீட்டு அதிபதியின் நிலைமை
7.பத்தாம் வீட்டுக்காரகனுடன் கூட்டணி போட்டுள்ள கிரகங்கள்
8.பத்தாம் வீட்டின் அஷ்டகவர்க்கப் பரல்கள்
9.பத்தாம் அதிபதியின் சுய வர்க்கப் பரல்கள்
10. கர்மகாரகன் சனியின் நிலைமை

ஆகியவற்றை அலச வேண்டும். அலசினால் ஒரு முடிவிற்கு வரலாம்.

யாரை வைத்து அலசலாம்.

உங்கள் துணிகளை நீங்களேதான் அலச வேண்டும். வேறு யாரும் வந்து அலசித் தரமாட்டார்கள். அப்படி அலசினாலும் உங்களுக்கு உரிய அக்கறையுடன் அவர்கள் அலச மாட்டார்கள். வாங்குகிற காசுக்கு சும்மா அடித்துப் பிழிந்து போட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.

எப்படி அலச வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன். அழுக்குப்போகத் துவைத்து அலசி, நீங்களே காயப் போடுங்கள்.

அடுத்த பாடம் அதுதான். அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடம். நாளைக் காலை அனைவருக்கும் வரும். பொறுத்திருந்து படியுங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.
----------------------------------------------------------
“வாத்தியார், தலைப்பிற்கான செய்தி எங்கே?

”அது கீழே உள்ளது, படித்துப் பாருங்கள்”
------------------------------------------------------------
நான் கடந்த 25 ஆண்டுகளாக சுதந்திர மனிதன். சுய தொழில் செய்பவன். ஆனால் அதற்கு முன் சுமார் 10 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தவன். அதனால் எனக்கு அதன் அவலங்கள் தெரியும். அதாவது வேலைக்குச் செல்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எனக்குத் தெரியும். அதை நீங்களும் அறியக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்








ME and MY BOSS
நானும், என்னை வேலைக்கு வைத்திருப்பவரும்!

When I Take a long time to finish, I am slow,
When my boss takes a long time, he is thorough
When I don't do it, I am lazy,
When my boss does not do it, he is busy,
When I do something without being told, I am trying to be smart,
When my boss does the same, he takes the initiative,
When I please my boss, I am apple polishing,
When my boss pleases his boss, he is cooperating,
When I make a mistake, I' am an idiot.
When my boss makes a mistake, he's only human.
When I am out of the office, I am wondering around.
When my boss is out of the office, he's on business.
When I am on a day off sick, I am always sick.
When my boss is a day off sick, he must be very ill.
When I apply for leave, I must be going for an interview
When my boss applies for leave, it's because he's overworked
When I do good, my boss never remembers,
When I do wrong, he never forgets
++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

8.12.09

Lessons on Astrology: Births on full moon day: பெளர்ணமியில் பிறந்தவர்கள்!


++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: Births on full moon day: பெளர்ணமியில் பிறந்தவர்கள்!

இந்திய ஜோதிடத்தில் சந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது நமது அன்னையை அடையாளப் படுத்தும் கிரகம். நமது பெண்களை அடையாளப் படுத்தும் கிரகம்.

சந்திரன் சுபக்கிரகம். குழந்தையாக இருக்கும்போது உடல் நலம், உரிய வயதில் வளர்ச்சி, வாழ்க்கையில் செழிப்பு, அதிர்ஷ்டம், நமது மன உணர்வுகள் ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தா அவர்

நீரின்றி அமையாது உலகு. நீருக்கான கிரகம் அவர். கடல் அலைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். ஆறுகளில் நீரோட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். தாவரங்கள் அனைத்திற்கும் அதிபதி அவர்தான். உலகைப் பசுமையாக வைத்திருப்பவர் அவர். பசுமைக்கு விருது கொடுத்தால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்:-))))

1. Moon rules peace of mind, comfort, general well-being, and also the fortune of a person.
2. The Moon gives sense of purpose, intuitive nature, sensuality, taste, youth, love of poetry, fine arts and music, love of jewelry, attractive appearance, wealth and good fortune.
3. It makes us moody, emotional, and sensitive.

ஜாதகனுக்குச் சந்திரன் (இருப்பிடம், சேர்க்கை அல்லது பார்வையால்) சரியாக அமையாவிட்டால், வெற்றி என்பது கானல் நீராக இருக்கும். வெற்றிகளை நேருக்கு நேராகச் சந்திக்க முடியாது. தலையைச் சுற்றி (அதாவது பின் மண்டையைச் சுற்றி) மூக்கத்தொடுவது போல அனைத்துக் காரியங்களையும் செய்ய நேரிடும். சிலர் அடைப்படை வசதிகளுக்குக் கூட அவதிப்பட நேரிடும். சிலர் சின்ன வயதில் அதாவது 21 வயதுவரை பலவீனமாக அல்லது நோயுடன் இருக்க நேரிடும்.

For persons whose Moon is not rightly placed in their horoscopes or is ill-aspected, success becomes very illusive or difficult. Sometimes it even becomes difficult to achieve a comfortable life on earth. It makes such people weak or sick in their early years.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

வளர்பிறைப் பெளர்ணமி காலத்தில் சுமார் 14 நாட்களை வளர்ச்சியான நாட்கள் என்பார்கள். அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளில் துவங்கி, பெளர்ணமிவரை உள்ள இடைப்பட்ட நாட்கள் சந்திரனுக்கு உகந்த நாட்கள் என்பார்கள்.. பெளர்ணமிக்கு அடுத்த நாளில் துவங்கி, அமாவாசைவரை உள்ள இடைப்பட்ட நாட்கள் சந்திரனுக்கு உகந்த நாட்கள் அல்ல - தேய்பிறை நாட்கள் என்பார்கள். உகந்த நாட்களில் செய்யும் சுப காரியங்கள் நன்றாக இருக்கும் என்பார்கள். அதனால்தான் சிலர் வளர்பிறைச் சந்திர காலத்தில் கிடைக்கும் முகூர்த்த நாட்களில் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.

”வளர்பிறையில் பிறந்தவர்கள் வளமாக இருப்பார்கள்!” என்று சொல்வார்கள்

The Moon is auspicious for those who are born in the ascending Moon cycle and malefic for those who are born in the descending Moon cycle.

நமக்கு அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஜாதகத்தில் சந்திரன் வேறு கிரகங்களின் அமைப்பு மற்றும் பார்வைகளால் நல்ல நிலைமையில் இருந்தால் - அதாவது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கப் பரல்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் அது நன்மையையே செய்யும். ஜாதகன் எப்போது மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பான். அப்படிப்பட்ட பிறப்பே நமக்குப் போதும். அமாவாசை, பெளர்ணமி குழப்பமெல்லாம நமக்கு வேண்டாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
சில உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்:

1
சிம்ம லக்கினத்திற்குச் சந்திரன் விரையாதிபதி. அவர் லக்கினத்தில் இருந்து, 7ஆம் வீடான (பகை வீட்டில் - அது சனியின் வீடு) சூரியன் இருந்தால், அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன?

2.
கன்னி லக்கினத்திற்கு, சூரியன் விரைய அதிபதி - அவர் 7ஆம் வீடான மீனத்தில் இருந்து, கன்னியில் இருக்கும் சந்திரனைப் பார்ப்பதால், அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன?
3
துலா லக்கினத்திற்குச் சொல்லவே வேண்டாம் - சூரியன் இங்கே நீசமடைந்து விடுவார். 7ல் சந்திரன் இருந்தாலும் அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன?

இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

******ஆகவே உங்கள் பிறப்பு பெளர்ணமியன்றா அல்லது அமாவாசையன்றா என்பது முக்கியமல்ல! உங்களின் லக்கினமும் உங்கள் ஜாதகத்தில் 9 கோள்களின் அமைப்பும் மட்டுமே முக்கியம்.

ஆகவே பெளர்ணமி பிறப்பு என்பதால் யாரும் கலரைத்தூக்கி விட்டுக்கொள்ளவும் வேண்டாம். அமாவாசைப் பிறப்பு என்பதால் சோர்ந்து விடவும் வேண்டாம்

அப்படியே சந்திரன், கைத்தாங்கலாக அமைந்திருந்தால் கவலைப் படவேண்டாம். AV 337 சரக்கில் இரண்டு பெக் அடித்துவிட்டு, ஆனந்தமாக இருங்கள்:-)))))

என்னடா, வாத்தியார் பெக்கைப் பற்றி அடிக்கடி எழுதுகிறார் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது. உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் எளிதில் புரியும் என்பதால் சில சமயம் அப்படி எழுதுவேன்.

என்ன இன்றைய பாடம் Okayயா?

நமது வகுப்பறையில் மூன்று முருகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்:-))))

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
பாடத்திற்கு சம்பந்தமில்லாத மேலதிகத் தகவல்:

30 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சியில் பெளர்ணமி வரும். வருடத்திற்கு 365.25 நாட்கள் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் கீழே குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தன்று, 180 பாகைகள் எதிர் எதிராக நின்று முழுப் பெளர்ணமி திதியை சூரியனும், சந்திரனும் கொடுக்கும். அந்த நாட்களில், தகிழகத்தில் உள்ள முருகன் கோவில்களிலும், சிவாலயங்களிலும் பெரிய அளவில் விழாக்கள் நடைபெறும். பெரும் திரளான மக்கள் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பார்கள். தைப்பூசம் பழநியில் விசேசமாக நடைபெறும். வைகாசி விசாகம் திருச்செந்தூரில் விசேஷமாக நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருவண்ணாமலையில் விஷேசமாக நடைபெறும். இது அனைவரும் அறிந்ததே!

பெளர்ணமி சந்திரனுக்கு உகந்த நாட்கள்.
தை - பூச நட்சத்திரம்
மாசி மாதம் - மக நட்சத்திரம்
பங்குனி மாதம் - உத்திர நட்சத்திரம்
சித்திரை மாதம் - சித்திரை நட்சத்திரம்
வைகாசி மாதம் - விசாக நட்சத்திரம்
ஆவணி மாதம் - அவிட்ட நட்சத்திரம்
கார்த்திகை மாதம் - கிருத்திகை நட்சத்திரம்
---------------------------------------------------------
சந்திரனுக்கான நவரத்தினம் முத்து.
சந்திரனுக்கான உலோகம் வெள்ளி.
சந்திரனுக்கான எண் 2
....................................................................................................



வாழ்க வளமுடன்!

7.12.09

Lessons on Astrology: Births on Amavasa Thithi: அமாவாசையன்று பிறந்தவர்கள்


++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: Births on Amavasa Thithi: அமாவாசையன்று பிறந்தவர்கள்

ஒரு திரைப்படத்தில் நம்ம மணியண்ணன், செந்திலைப் பார்த்து அடிக்கடி இப்படிச் சொல்வார்:

“அட, அமாவாசைக்குப் பொறந்தவனே!”

அமாவாசையன்று பிறந்தால் இழிவா? இல்லை.

எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான். அதை உணர்த்தத்தான் கோகுல கிருஷ்ணன் அஷ்டமித் திதியில் பிறந்தார். ஸ்ரீராமபிரான் நவமித் திதியில் அவதரித்தார்.

சூரியனும் சந்திரனும் ஒரு ராசியின் 12 பாகைகளுக்குள் இருக்கும் தினம் அமாவாசை. அதுவும் ஒரு பாகை வித்தியாசத்தில் இருக்கும் நேரம் முழு அமாவாசை. அமாவாசையன்று சூரியனின் நெருக்கத்தால் சந்திரன் அஸ்தமனமாகிவிடும். அமாவாசை திதியில் பிறப்பது அவயோகமாகக் கருதப்படுகிறது.

அந்த தினத்தில் பிறக்கும் ஜாதகனின் வாழ்க்கை (மனப்) போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும். சந்திரன் மனதிற்கு உரிய காரகன். அதை நினைவில் வையுங்கள்.

ஒரு கவிஞன் சொன்னான்:

”சுற்றும்வரை பூமி
எரியும்வரை நெருப்பு
போராடும்வரை மனிதன்!”

ஆகவே போராட்டம் இல்லாத வாழ்க்கை இரசிக்காது. அமாவாசையன்று பிறந்தவர்கள் கவலைப் பட வேண்டாம். உங்கள் வாழ்க்கை ரசனைக்குரியதாக இருக்கும். பலவிதமான உணர்வுகள் நிரம்பியதாக இருக்கும்.

அதோடு (மனப்) போராட்டங்களுக்கான ஆயுதங்களும் உங்களுக்கு வழங்கப்பெற்றிருக்கும். அதவது உங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பெற்றிருக்கும். இல்லையென்றால் உங்களுடைய ஜாதகத்தின் மதிப்பெண் எப்படி 337ஆக வரும் - சொல்லுங்கள்?

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

2.12.09

Lessons on yogas: Maha Bagya Yoga: மகாபாக்கிய யோகம்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: 

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++++++

1.12.09

Lessons on yogas: Daridra Yoga: தரித்திர யோகம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas: தரித்திர யோகம்.

இது ஒரு அவயோகம். எனக்கு இல்லையே சார் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். ஆண்டிக்கும், அரசனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் டிக்கெட்டின் மதிப்பு 337தான் அதை நினைவில் வையுங்கள்! இருவரும் சமமாக உட்கார்ந்து வாழ்க்கை நாடகத்தைப் பார்க்கலாம்!
++++++++++++++++++++++++++++++++++++++
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++++

30.11.09

Lessons on Astrology: Moolaththrikonam: மூலத்திரிகோணம்!

”வாத்தி(யார்), எத்ற்காக இந்தப் படம்?”
”மனிதனின் மூலத்திரிகோணம் இவர்தானே?”
”சரி, கையில் ஏன் பாட்டிலோடு?”
”அண்ணனுக்கு இன்னும் வீக்என்ட் முடியவில்லை!”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: Moolaththrikonam: மூலத்திரிகோணம்!

திரிகோணம் என்றால் தெரியும். அது என்ன மூலத்திரிகோணம்?

மூலத்திரிகோணம் என்பது ஒரு கிரகத்திற்கு வேர்ப் பகுதி. ஒரு மரத்தின் வேர்ப்பகுதி பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் நமக்குத் தெரியும். அதுபோல ஒரு கிரகத்தின் வேர்ப் பகுதி மூலத்திரிகோணம் எனப்படும்!

புதன், சுக்கிரன்,செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு வீடுகள் சொந்தம். அந்த இரண்டு வீடுகளில் எது வேர்ப்பகுதியோ அதுதான் அந்த கிரகத்தின் மூலத்திரிகோணம்!சந்திரனுக்கு மட்டும் அதன் உச்ச வீடான ரிஷபம் வேர்ப்பகுதி. அதாவது அதன் மூலத்திரிகோணம்.

மற்ற கிரகங்களுக்கான மூலத்திரிகோண வீட்டைக் கீழே கொடுத்துள்ளேன்:

சூரியன் - சிம்மம்
சந்திரன் - ரிஷபம்
செவ்வாய் - மேஷம்
புதன் - கன்னி
குரு - தனுசு
சுக்கிரன் - துலாம்
சனி - கும்பம்
---------------------
ராகுவிற்கு - கன்னி
கேதுவிற்கு - மீனம்

(ராகு, கேதுவிற்கு சொந்த வீடு கிடையாதே? அவைகளுக்கு எப்படிக் கன்னியும், மீனமும் வேர்ப்பகுதிகளாக இருக்க முடியும் என்று யாரும் கேட்க வேண்டாம். பழைய ஜோதிட நூல் ஒன்றில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்வோம். கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். எடுத்துக் கொண்டால், வாழ்க்கை முழுவதும் எடுத்துக் கொண்டே இருக்கலாம். அதை மனதில் வையுங்கள்)
++++++++++++++++++++++++++++++++

மூலத்திரிகோணத்தில் இருக்கும் கிரகம் அலுவலகத்தில் இருப்பதைப் போன்றது. அவைகள் தூங்காமல் வேலை செய்து கொண்டிருக்கும். அலுவலகத்தில் அரைத் தூக்கத்தில் வேலை செய்யும் சிகாமணிகளுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். அவர்கள் பதிவைவிட்டு விலகவும்!

மூலத்திரிகோணத்தில் இருக்கும் சுக்கிரன் இயற்கையாகவே ஜாதகனுக்கு நல்ல மனைவியைப் பிடித்துத் தருவார் (அட, இது நன்றாக இருக்கிறதே!) ராசி வரிசையில்/கிரகச்சுற்றில் இது ஏழாம் இடம். அதை மனதில் வையுங்கள்.

மூலத்திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான் இயற்கையாகவே ஜாதகனுக்குத் தர்மப்படி நடக்கும் சூழ்நிலையையும், உரிய காலத்தில் குழந்தை பாக்கியத்தையும் கொடுப்பார் (அட, இதுவும் நன்றாக இருக்கிறதே!)

மூலத்திரிகோணம் என்பது உச்சத்திற்கு நிகரானது. அதோடு பாதுகாப்பானது. சொந்த வீட்டில் அக்கிரகம் இருப்பதால் பாதுகாப்பானது. அக்கிரகம் வலிமையாக இருப்பதுடன், ஜாதகனுக்குப் பல நன்மைகளையும் அள்ளித்தரும்!
+++++++++++++++++++++++++++++++++++
ஒரு கிரகம் வர்கோத்தமம் பெறுவதைவிட, மூலத்திரிகோணம் பெற்றிருப்பது அதிக நன்மை பயக்கும். வர்கோத்தமத்தில் பலன்கள் இரட்டிப்பாகும். நல்லதும் இரட்டிப்பாகும், தீய கிரகங்கள் வர்கோத்தமம் பெறும்போது தீமைகளும் இரட்டிப்பாகும். மூலத்திரிகோணத்தில் அந்தப் பிரச்சினை இல்லை! அதை மனதில் வையுங்கள்

நட்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! 

25.11.09

Lesson on Astrology: Basic Strength: அடிப்படை வலிமை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Astrology: Basic Strength: அடிப்படை வலிமை!
--------------------------------------------------
உச்சம் பெற்ற கிரகத்திற்கும், வர்கோத்தமம் பெற்ற கிரகத்திற்கும், மூலத்திரி கோணத்தில் இருக்கும் கிரகத்திற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு? அந்த நிலைப்பாடுகளில் எது வலிமையானது? எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
--------------------------------------------------
முதலில் கிரகங்களின் அடிப்படை நிலைமையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு, பிறகு மேலே உள்ள கேள்விக்கு வருவோம்.

1. இயற்கைத் தன்மை அல்லது இயற்கைக் குணம்:
நன்மை செய்யக்கூடிய கிரகம் அல்லது தீமை செய்யக்கூடிய கிரகம்
(நல்லவன் அல்லது கெட்டவன்) (benefic or malefic)

2. வலிமை:
பலம் பொருந்தியவன் அல்லது பலமில்லாதவன். அல்லது இப்படி வைத்துக்கொள்ளுங்கள்: வலிமை உடையவன் அல்லது வலிமை இல்லாதவன் strength (strong or weak)

கிரகங்களுக்கு இந்த நிலைப்பாடுகள் உண்டு. அதை உதாரணங்களுடன் விரிவு படுத்திப்பார்ப்போம்:
------------------------------------------------
1
சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஜாதகத்தில் வலிமையான நிலையில்:

பலன்: உங்களை விரும்பும் மாமனார். உங்களுக்காக உயிரையும் தரக்கூடியவர். அதோடு அவர் கோடிஸ்வரர்! (அட, நன்றாக இருக்கிறதே:-)))
-------------------------------------------------
1 -A
சுபக்கிரகம் அல்லது நன்மை செய்யக்கூடிய கிரகம்: ஆனால் வலிமை குன்றிய நிலையில்:

பலன்: தன் குழந்தைகளின் மேல் மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாய் - ஆனால் குழந்தைகளைக் கவனித்து, சீராட்டி வளர்ப்பதற்கு வேண்டிய பொருளாதாரம் இல்லாத நிலைமை. உங்கள் மொழியில் சொன்னால் தினமும் இரண்டு வேளை உணவிற்குக் கூட வழியில்லாத நிலைமையில் உள்ள தாய்!
---------------------------------------------------
2
தீய கிரகம் - ஆனால் வலிமை குன்றிய நிலையில்:

பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் அவன் இருப்பதோ சிறையில் எனும் நிலைப்பாடு!
----------------------------------------------------
2 -A
தீய கிரகம் - ஜாதகத்தில் வலிமையான நிலையில்:

பலன்: உங்களைக் கொல்ல விரும்பும் மனிதன். ஆனால் பார்க்கும் உத்தி யோகமோ காவல்துறையில் உயர் அதிகாரி! Deputy Commissioner of Police என்று வைத்துக் கொள்ளூங்கள்!
-------------------------------------------------
சரி, இப்போது கேள்விக்கு வருவோம். உச்சம், வர்கோத்தமம், மூலத்திரிகோணம் என்று ஒரு கிரகம் கையில் என்ன ஆயுதத்தை வைத்திருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள 1, 1-A, 2, 2-A என்னும் கட்டுப்பாட்டுக்குள் ஒடுங்கிவிடும்! அல்லது ஒதுங்கிவிடும்.

உச்சத்திற்கும், மூலத்திரிகோணத்திற்கும் தனி மதிப்பு, மரியாதை உண்டு. முறையாகக் கல்லூரியில் படித்த பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள். வர்கோத்தமம், அவற்றிற்கு அடுத்தபடிதான். அஞ்சல் வழிக் கல்வியில் கற்ற பட்டதாரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

அப்படி முறையாகப் படித்த பட்டதாரிகளிலும், பிலானி, ஐ.ஐ.டி, களில் படித்த பட்டதாரிகளுக்கும் உப்புமா கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப்போல, கிரகங்களுக்கும் படித்த விதத்திற்கான தனி மதிப்பு உண்டு. படிப்பை வைத்து உத்தியோகமும் சம்பளமும் கிடைப்பதைப் போல, கிரகங்கள் வாங்கிய மதிப்பெண்களை வைத்து ஜாதகனுக்குப் பலன்கள்
கிடைக்கும்.பெற்ற மதிப்பெண்களையும், கிடைத்த வேலையையும் வைத்துத்தான் கிரகங்கள் ஜாதகத்தில் வேலை செய்யும்!

கிரகங்களின் மதிப்பெண்கள்: தராதரம் என்று வைத்துக்கொள்ளுங்கள்:

உச்சம் - 100% வலிமை
மூலத்திரிகோணம் - 90% வலிமை
சொந்த வீடு - 80% வலிமை
நட்பு வீடுகள் - 60% வலிமை
சம வீடுகள் - 50% வலிமை
பகை வீடுகள் - 40% வலிமை
நீச வீடுகள் - 10% வலிமை

இந்த அளவுகள் எல்லாம் எடைபார்க்கும் இயந்திரத்தை வைத்துச் சொல்லப் பட்டதல்ல! அனுபவத்தில் பெற்ற உத்தேச அளவுகள்.

40% வரை பாஸ். 40% ற்குக்கீழே ஃபெயில்

ஒருவரின் ஜாதகத்தில் சனீஷ்வரன் துலா ராசியில் இருந்தால் அவன் உச்சம் பெற்று இருப்பான். உச்சம் பெற்று அவன் அங்கே வலிமையோடு இருந்தால், உங்களுக்கு அவன் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல உங்களை விரும்பும் கோடீஸ்வர மாமனாராக இருப்பான். அல்லது அங்கே உச்சம் பெற்றும் வலிமை குன்றிய நிலையில் இருந்தால், உங்கள் மீது மாறாத அன்பும், பரிவும் கொண்ட தாயைப் போல இருப்பான். அதே சனீஷ்வரன் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ ராசியில் இருந்தால் நீசமாகி இருப்பான். நீசம் பெற்றவன் வலிமையின்றி இருந்தால் 2ஆம் எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள். வலிமையோடு இருந்தால் 2-A எண்ணுள்ள பலனை எடுத்துக்கொள்ளுங்கள்.

அர்த்தமானதா? புரியும்படி உள்ளதா?
-----------------------------------------------
வர்கோத்தமத்தைப் பற்றி முன்பே எழுதிவிட்டேன். மூலத்திரிகோணத்தைப்பற்றி எழுத வேண்டும். அதை நாளை எழுதுகிறேன். பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

20.11.09

Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson: Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

ஒரு திரைப்படத்தில், நடிகர் பாண்டியராஜன் மாணவராக வருவார். வகுப்பில் ஆசிரியர், அன்பிற்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கும்போது, இப்படிப் பதில் சொல்வார்:

“சார், உங்கள் பெண்ணிற்கு நீங்கள் லெட்டர் எழுதினா, அது அன்பு. நான் எழுதினா, அது காதல்!”

அதுபோல, கிரகங்களின் பரஸ்பர பார்வைக்கும் (mutual aspect) பரிவர்த்தனைக்கும் (mutual exchange of places) வித்தியாசம் உண்டு!

பரஸ்பர பார்வை என்பது அன்பு. பரிவர்த்தனை என்பது காதல்.

காதலில், காதலர்கள் இருவருமே நேசம் மிகுந்தவர்களாக, விசுவாசமிக்கவர் களாக, ஒத்த மனப்பான்மை உடையவர்களாக இருந்தால் காதல் திருமணத்தில் முடியும். வாழ்க்கை ஒளி மயமாக இருக்கும்.

அதுபோல பரிவத்தனையாகும் கிரகங்கள் இருவருமே சுபக்கிரகங்களாக இருந்தால், அவர்கள் பரிவர்த்தனையான வீட்டிற்கான பலன்கள் அசத்தலாக இருக்கும். ஜாதகனின் வாழ்க்கை அந்த இரண்டு வீடுகளைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும்

காதலர்கள் இருவரில், ஒருவர் வேஷக்காரராக, வில்லத்தனம் மிகுந்தவராக இருந்தால் காதலின் முடிவு அல்லது அவர்களின் மண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
+++++++++++++++++++++++++++++++++
சரி, காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு, வேறு உதாரணம் சொல்கிறேன்.

பரஸ்பர பார்வை:
1
உங்கள் நண்பர் - அதாவது உங்களுக்காக எதையும் செய்யக்கூடியவர், அன்பு மிக்கவர், உங்கள் மேல் பிரியமுள்ளவர், உங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?
2.
உங்களுக்கு வேண்டாத விரோதி எதிர் வீட்டில் குடியிருந்தால் எப்படி இருக்கும்?

பரிவர்த்தனை:
1. மிகவும் செல்வாக்கு, சொல்வாக்கு, பண பலம் மிகுந்த நண்பர் உங்களுக்குத் தொழிலில் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?

2.உங்கள் விருப்பத்திற்கு மாறாக, தீயவன் ஒருவன், ஏமாற்றிக் கவிழ்க்கக் கூடியவன் ஒருவன் உங்களுக்குக் கூட்டாளியாக வந்தால் எப்படி இருக்கும்?
+++++++++++++++++++++++++++++++++
கோள்களின் பரஸ்வர பார்வையாலும், பரிவர்த்தனையாலும் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றிய விரிவான பாடம் அடுத்த பாடம். பாடத்தின் தலைப்பு: கிரகங்களின் பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும் (Mutual aspect and exchange of planets)

அது மேல் நிலைப் பாடம். மின்னஞ்சல் பாடமாக வரும்!
++++++++++++++++++++++++++++++++++

“வாத்தி (யார்) எப்போது அது வரும்?”

”மூன்று நாட்கள் கழித்து 24.11.2009 செவ்வாய்க்கிழமையன்று வரும்”

”ஏன் அப்படி?”

”இடையில் மூன்று நாட்கள் வாத்தியார் வெளியூர் செல்வதால் வகுப்பறைக்கு விடுமுறை!”

“சரி, அதை ஏன் இப்போதே சொல்லி, எங்களைச் சஸ்பென்ஸில் வைத்துவிட்டுப் போகிறீர்கள்?”

“பத்திரிக்கைகளுக்குக் கதைகள் எழுதி எழுதி, அடுத்தவர்களை சஸ்பென்சில் வைப்பது வாத்தியாருக்குக் பழகிவிட்டது. ஆகவே குறுகுறுப்போடு பொறுத்திருங்கள். பாடம் சுவையாக இருக்கும்!”
........................................................................
வகுப்பறை பதிவேட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,012
மின்னஞ்சல் வகுப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 760 மட்டுமே!
மீதம் உள்ளவர்களுக்குப் பாடம் வேண்டாமா?
உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தெரிந்தால்தானே பாடங்களை அனுப்ப முடியும்?

ஆகவே இதுவரை மின்னஞ்சல் பாடங்கள் கிடைக்காதவர்கள், தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை வாத்தியாருக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

gmail contacts folderல் வருகின்ற பெயர்களைச் சேர்ப்பதற்கு (வாத்தியாரின் பல வேலைகளுக் கிடையே) இரண்டு அல்லது மூன்று நாட்கள் பிடிக்கும். ஆகவே தெரிவித்த பிறகு மூன்று நாட்கள் பொறுமை காக்க வேண்டும். அதையும் மனதில் வையுங்கள்

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
........................................................................
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

19.11.09

Lesson on yoga: Amala Yoga: அம்லா யோகம்!



++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yoga: 

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++

 

18.11.09

Lessons on yogas: சரஸ்வதி யோகம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas:

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++