மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.12.09

Lessons on Astrology: Births on full moon day: பெளர்ணமியில் பிறந்தவர்கள்!


++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Astrology: Births on full moon day: பெளர்ணமியில் பிறந்தவர்கள்!

இந்திய ஜோதிடத்தில் சந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது நமது அன்னையை அடையாளப் படுத்தும் கிரகம். நமது பெண்களை அடையாளப் படுத்தும் கிரகம்.

சந்திரன் சுபக்கிரகம். குழந்தையாக இருக்கும்போது உடல் நலம், உரிய வயதில் வளர்ச்சி, வாழ்க்கையில் செழிப்பு, அதிர்ஷ்டம், நமது மன உணர்வுகள் ஆகியவற்றிற்கெல்லாம் காரணகர்த்தா அவர்

நீரின்றி அமையாது உலகு. நீருக்கான கிரகம் அவர். கடல் அலைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். ஆறுகளில் நீரோட்டங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர் அவர். தாவரங்கள் அனைத்திற்கும் அதிபதி அவர்தான். உலகைப் பசுமையாக வைத்திருப்பவர் அவர். பசுமைக்கு விருது கொடுத்தால் அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்:-))))

1. Moon rules peace of mind, comfort, general well-being, and also the fortune of a person.
2. The Moon gives sense of purpose, intuitive nature, sensuality, taste, youth, love of poetry, fine arts and music, love of jewelry, attractive appearance, wealth and good fortune.
3. It makes us moody, emotional, and sensitive.

ஜாதகனுக்குச் சந்திரன் (இருப்பிடம், சேர்க்கை அல்லது பார்வையால்) சரியாக அமையாவிட்டால், வெற்றி என்பது கானல் நீராக இருக்கும். வெற்றிகளை நேருக்கு நேராகச் சந்திக்க முடியாது. தலையைச் சுற்றி (அதாவது பின் மண்டையைச் சுற்றி) மூக்கத்தொடுவது போல அனைத்துக் காரியங்களையும் செய்ய நேரிடும். சிலர் அடைப்படை வசதிகளுக்குக் கூட அவதிப்பட நேரிடும். சிலர் சின்ன வயதில் அதாவது 21 வயதுவரை பலவீனமாக அல்லது நோயுடன் இருக்க நேரிடும்.

For persons whose Moon is not rightly placed in their horoscopes or is ill-aspected, success becomes very illusive or difficult. Sometimes it even becomes difficult to achieve a comfortable life on earth. It makes such people weak or sick in their early years.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

வளர்பிறைப் பெளர்ணமி காலத்தில் சுமார் 14 நாட்களை வளர்ச்சியான நாட்கள் என்பார்கள். அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளில் துவங்கி, பெளர்ணமிவரை உள்ள இடைப்பட்ட நாட்கள் சந்திரனுக்கு உகந்த நாட்கள் என்பார்கள்.. பெளர்ணமிக்கு அடுத்த நாளில் துவங்கி, அமாவாசைவரை உள்ள இடைப்பட்ட நாட்கள் சந்திரனுக்கு உகந்த நாட்கள் அல்ல - தேய்பிறை நாட்கள் என்பார்கள். உகந்த நாட்களில் செய்யும் சுப காரியங்கள் நன்றாக இருக்கும் என்பார்கள். அதனால்தான் சிலர் வளர்பிறைச் சந்திர காலத்தில் கிடைக்கும் முகூர்த்த நாட்களில் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.

”வளர்பிறையில் பிறந்தவர்கள் வளமாக இருப்பார்கள்!” என்று சொல்வார்கள்

The Moon is auspicious for those who are born in the ascending Moon cycle and malefic for those who are born in the descending Moon cycle.

நமக்கு அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஜாதகத்தில் சந்திரன் வேறு கிரகங்களின் அமைப்பு மற்றும் பார்வைகளால் நல்ல நிலைமையில் இருந்தால் - அதாவது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கப் பரல்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால் அது நன்மையையே செய்யும். ஜாதகன் எப்போது மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பான். அப்படிப்பட்ட பிறப்பே நமக்குப் போதும். அமாவாசை, பெளர்ணமி குழப்பமெல்லாம நமக்கு வேண்டாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
சில உதாரணங்களைக் கொடுத்துள்ளேன்:

1
சிம்ம லக்கினத்திற்குச் சந்திரன் விரையாதிபதி. அவர் லக்கினத்தில் இருந்து, 7ஆம் வீடான (பகை வீட்டில் - அது சனியின் வீடு) சூரியன் இருந்தால், அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன?

2.
கன்னி லக்கினத்திற்கு, சூரியன் விரைய அதிபதி - அவர் 7ஆம் வீடான மீனத்தில் இருந்து, கன்னியில் இருக்கும் சந்திரனைப் பார்ப்பதால், அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன?
3
துலா லக்கினத்திற்குச் சொல்லவே வேண்டாம் - சூரியன் இங்கே நீசமடைந்து விடுவார். 7ல் சந்திரன் இருந்தாலும் அந்த 2 கிரகங்களும் ஜாதகனுக்குப் பெரிதாக என்ன நன்மையைச் செய்து விடப் போகின்றன?

இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

******ஆகவே உங்கள் பிறப்பு பெளர்ணமியன்றா அல்லது அமாவாசையன்றா என்பது முக்கியமல்ல! உங்களின் லக்கினமும் உங்கள் ஜாதகத்தில் 9 கோள்களின் அமைப்பும் மட்டுமே முக்கியம்.

ஆகவே பெளர்ணமி பிறப்பு என்பதால் யாரும் கலரைத்தூக்கி விட்டுக்கொள்ளவும் வேண்டாம். அமாவாசைப் பிறப்பு என்பதால் சோர்ந்து விடவும் வேண்டாம்

அப்படியே சந்திரன், கைத்தாங்கலாக அமைந்திருந்தால் கவலைப் படவேண்டாம். AV 337 சரக்கில் இரண்டு பெக் அடித்துவிட்டு, ஆனந்தமாக இருங்கள்:-)))))

என்னடா, வாத்தியார் பெக்கைப் பற்றி அடிக்கடி எழுதுகிறார் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது. உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் எளிதில் புரியும் என்பதால் சில சமயம் அப்படி எழுதுவேன்.

என்ன இன்றைய பாடம் Okayயா?

நமது வகுப்பறையில் மூன்று முருகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வந்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்:-))))

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
பாடத்திற்கு சம்பந்தமில்லாத மேலதிகத் தகவல்:

30 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சியில் பெளர்ணமி வரும். வருடத்திற்கு 365.25 நாட்கள் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் கீழே குறிப்பிட்டுள்ள நட்சத்திரத்தன்று, 180 பாகைகள் எதிர் எதிராக நின்று முழுப் பெளர்ணமி திதியை சூரியனும், சந்திரனும் கொடுக்கும். அந்த நாட்களில், தகிழகத்தில் உள்ள முருகன் கோவில்களிலும், சிவாலயங்களிலும் பெரிய அளவில் விழாக்கள் நடைபெறும். பெரும் திரளான மக்கள் வந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பார்கள். தைப்பூசம் பழநியில் விசேசமாக நடைபெறும். வைகாசி விசாகம் திருச்செந்தூரில் விசேஷமாக நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருவண்ணாமலையில் விஷேசமாக நடைபெறும். இது அனைவரும் அறிந்ததே!

பெளர்ணமி சந்திரனுக்கு உகந்த நாட்கள்.
தை - பூச நட்சத்திரம்
மாசி மாதம் - மக நட்சத்திரம்
பங்குனி மாதம் - உத்திர நட்சத்திரம்
சித்திரை மாதம் - சித்திரை நட்சத்திரம்
வைகாசி மாதம் - விசாக நட்சத்திரம்
ஆவணி மாதம் - அவிட்ட நட்சத்திரம்
கார்த்திகை மாதம் - கிருத்திகை நட்சத்திரம்
---------------------------------------------------------
சந்திரனுக்கான நவரத்தினம் முத்து.
சந்திரனுக்கான உலோகம் வெள்ளி.
சந்திரனுக்கான எண் 2
....................................................................................................வாழ்க வளமுடன்!

105 comments:

RaaKul said...

வணக்கம் ஐயா,
பாடம் அருமை.
திருமண பொருத்ததிற்கும் சந்திரன் (இருப்பிடம், சேர்க்கை அல்லது பார்வையால்ட) ஏதவது தொடர்பு உண்டா,,,?

SP.VR. SUBBIAH said...

////RaaKul said...
வணக்கம் ஐயா,
பாடம் அருமை.
திருமண பொருத்ததிற்கும் சந்திரன் (இருப்பிடம், சேர்க்கை அல்லது பார்வையால்ட) ஏதவது தொடர்பு உண்டா,,,?////////

விடிய விடிய, (இரவு முழுவதும்) ராமாயண உபந்நியாசத்தைக் கேட்டவன், விடிந்தவுடன், என்ன தெரிந்து கொண்டாய்? சீதைக்கு ராமர் என்ன வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, இப்படிச் சொன்னானாம்:

“சீதைக்கு ராமன் சித்தப்பா”

அப்படி இருக்கிறது உங்கள் கேள்வி. முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படித்து மனதில் ஏற்றுங்கள்!

Shyam Prasad said...

மிக்க நன்றி

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்...

சந்திரன் பற்றிய பாடம் அருமை ...எனது தனுசு லக்னம் 7 இல் வளர்பிறை சந்திரன் உடன் தனுசு லக்னத்துக்கு யோக காரகன் செவ்வாய் உடன் இனைந்து சந்திர மங்கள யோகம்
உள்ளது .. சந்திரன் 4 பரல் பெற்றுள்ளார் ...உடன் புதன் இருகிரார் ஆனால் யாரும் யுத்ததிலோ,அசதமனம் இல்லை ....
இந்த அமைப்பு நற்பலன் தருமா அய்யா .....

நன்றி வணக்கம் ...

Arulkumar Rajaraman said...

Dear Sir

Padam Arumai Sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

சிங்கைசூரி said...

காலை வணக்கம் ஆசானே,
பாடம் அருமை.

Arulkumar Rajaraman said...

Dear Sir

Padam Arumai Sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

ananth said...

நான் வளர்பிறைத் துவிதியைத் திதியில் அதுவும் அது முடிய சில நிமிடங்களே இருக்கும் போது பிறந்தேன். சந்திரன் எனக்கு சுயவர்கத்தில் 6 பரலுடன் 10ல் மிதுனத்தில் இருக்கிறார். என்ன ஒரு பக்கம் சூரியன், சனி மறு பக்கம் கேது என்று பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டார். எந்த கிரக பார்வையிலும் படாமல் தனித்தே இருக்கிறார். இதற்கான பலனை எனக்கு நானே பார்த்து தெரிந்து கொண்டேன்.

thirunarayanan said...

வணக்கம் அய்யா.
சந்திரனை பற்றிய தகவல்கள்
அருமை.

"உங்கள் பிறப்பு பெளர்ணமியன்றா அல்லது அமாவாசையன்றா என்பது முக்கியமல்ல! உங்களின் லக்கினமும் உங்கள் ஜாதகத்தில் 9 கோள்களின் அமைப்பும் மட்டுமே முக்கியம்."

இந்த வாசகம் தான்
இந்த பாடத்தின் ஹைலைட்

பாடத்திற்கு நன்றி அய்யா.

rama said...

Birth in full mooon day lesson was good.

For me simha laganm, moon in his own house,sun in sukran(rishabam) house with sukran.Birth day tithi is sukla shasthi.

But both are having 4 points in astavarga.

How is their results sir?

Uma said...

நானும் பவுர்ணமி அன்று கிரகணம் விட்டவுடன் பிறந்தேன், நீச் சந்த், உச்ச ராகுவுடன் 11 ல். நவாம்சத்தில் ச்ந்த் தனியாக 3 ல், அஷ்டவர்க்கத்தில் 6 பரல்கள். ஆனால் எவ்வளவு குழப்பம் வந்தாலும், அதை சமாளிக்கும் அளவு தைரியம் உண்டு.

kmr.krishnan said...

ஆவணித் தேய்பிறைத் திரயோதசி பூசம்; சந்திரன் கடகராசியில் நின்றபோது பிறந்துள்ளேன்.மகரத்திலிருந்து நீசம்,வக்கிரம் வ‌ர்கோத்தமம் பெற்ற குரு பார்வை.குரு நீசம் என்றாலும் சுய வர்கத்தில் 7 பரல் பெற்று சந்திரனை நேர் பார்வையாகப் பார்த்தார்.இந்த ஒரு நன்மையால் ஒரு சராசரி வாழ்க்கை அமைந்தது.அஷ்டவர்கத்தில் 6க்கு 34, 10க்கு 33, 11க்கு 34, 12க்கு 33 பரல் கிடத்ததும்,விரயம் இருந்தாலும் வரவும் இருந்தது.
அஷ்டமியில் கிருஷ்ணர் ஏன் பிறந்தார் என்பதைத் தனியாக எழுதுகிறேன்

rubamathisurenthiran said...

enakkum enathu kanavarukkum indha yogam illai any how vaathiyarin nagasuvaiyodu kalantha pathivu nandraaga ullathu . 337 il irandu beg adiyungal endru solli ullare athu padika haasyamaaga irukirathu


mrs.rubasuren,

SP.VR. SUBBIAH said...

//////Shyam Prasad said...
மிக்க நன்றி////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்...
சந்திரன் பற்றிய பாடம் அருமை ...எனது தனுசு லக்னம் 7 இல் வளர்பிறை சந்திரன் உடன் தனுசு லக்னத்துக்கு யோக காரகன் செவ்வாய் உடன் இனைந்து சந்திர மங்கள யோகம்
உள்ளது .. சந்திரன் 4 பரல் பெற்றுள்ளார் ...உடன் புதன் இருகிரார் ஆனால் யாரும் யுத்ததிலோ,அசதமனம் இல்லை .... இந்த அமைப்பு நற்பலன் தருமா அய்யா .....
நன்றி வணக்கம் .../////

தனிப்பட்ட ஜாதகங்களை வைத்துக் கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும். பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டும் கேளுங்கள். தனிப்பட்ட ஜாதகங்களை அலசிப் பதில் சொல்வதற்கு தற்சமயம் எனக்கு நேரமில்லை!

SP.VR. SUBBIAH said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Padam Arumai Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது.நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
காலை வணக்கம் ஆசானே,
பாடம் அருமை.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////ananth said...
நான் வளர்பிறைத் துவிதியைத் திதியில் அதுவும் அது முடிய சில நிமிடங்களே இருக்கும் போது பிறந்தேன். சந்திரன் எனக்கு சுயவர்கத்தில் 6 பரலுடன் 10ல் மிதுனத்தில் இருக்கிறார். என்ன ஒரு பக்கம் சூரியன், சனி மறு பக்கம் கேது என்று பாப கர்த்தாரி யோகத்தில் மாட்டிக் கொண்டு விட்டார். எந்த கிரக பார்வையிலும் படாமல் தனித்தே இருக்கிறார். இதற்கான பலனை எனக்கு நானே பார்த்து தெரிந்து கொண்டேன்.////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

/////thirunarayanan said...
வணக்கம் அய்யா.
சந்திரனை பற்றிய தகவல்கள் அருமை.
"உங்கள் பிறப்பு பெளர்ணமியன்றா அல்லது அமாவாசையன்றா என்பது முக்கியமல்ல! உங்களின் லக்கினமும் உங்கள் ஜாதகத்தில் 9 கோள்களின் அமைப்பும் மட்டுமே முக்கியம்."
இந்த வாசகம் தான்
இந்த பாடத்தின் ஹைலைட்
பாடத்திற்கு நன்றி அய்யா./////

நல்லது. நன்றி திருநாராயணன்!

SP.VR. SUBBIAH said...

/////rama said...
Birth in full mooon day lesson was good.
For me simha laganm, moon in his own house,sun in sukran(rishabam) house with sukran.Birth day tithi is sukla shasthi.
But both are having 4 points in astavarga.
How is their results sir?////

தனிப்பட்ட ஜாதகங்களை வைத்துக் கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும். பாடத்தில் உள்ள சந்தேகங்களை மட்டும் கேளுங்கள். தனிப்பட்ட ஜாதகங்களை அலசிப் பதில் சொல்வதற்கு தற்சமயம் எனக்கு நேரமில்லை!

SP.VR. SUBBIAH said...

////Uma said...
நானும் பவுர்ணமி அன்று கிரகணம் விட்டவுடன் பிறந்தேன், நீச் சந்திரன், உச்ச ராகுவுடன் 11 ல். நவாம்சத்தில் சந்திரன் தனியாக 3 ல், அஷ்டவர்க்கத்தில் 6 பரல்கள். ஆனால் எவ்வளவு குழப்பம் வந்தாலும், அதை சமாளிக்கும் அளவு தைரியம் உண்டு.////

எது வந்தாலும் சமாளிக்கும் மனப்பாங்கு இருக்கிறதே - அதுவும் ஒருவகையில் பாக்கியம்தான்! வாழ்க வளமுடன்

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
ஆவணித் தேய்பிறைத் திரயோதசி பூசம்; சந்திரன் கடகராசியில் நின்றபோது பிறந்துள்ளேன்.மகரத்திலிருந்து நீசம்,வக்கிரம் வ‌ர்கோத்தமம் பெற்ற குரு பார்வை.குரு நீசம் என்றாலும் சுய வர்கத்தில் 7 பரல் பெற்று சந்திரனை நேர் பார்வையாகப் பார்த்தார்.இந்த ஒரு நன்மையால் ஒரு சராசரி வாழ்க்கை அமைந்தது.அஷ்டவர்கத்தில் 6க்கு 34, 10க்கு 33, 11க்கு 34, 12க்கு 33 பரல் கிடத்ததும்,விரயம் இருந்தாலும் வரவும் இருந்தது./////

தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////அஷ்டமியில் கிருஷ்ணர் ஏன் பிறந்தார் என்பதைத் தனியாக எழுதுகிறேன்////

அவசரமில்லை. மெதுவாக எழுதுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////rubamathisurenthiran said...
enakkum enathu kanavarukkum indha yogam illai any how vaathiyarin nagasuvaiyodu kalantha pathivu nandraaga ullathu . 337 il irandu beg adiyungal endru solli ullare athu padika haasyamaaga irukirathu
mrs.rubasuren,////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

T K Arumugam said...

ஐயா வணக்கம்

இன்றைய பாடம் எளிதாக இருந்தது. அதிகப்படியான தகவல்கள் எனக்கு புதிது. இந்த வருடம் கார்த்திகை ஜோதி அன்று எதேச்சையான பௌர்ணமி என்றுதான் நினைத்தேன். ஆனால் தங்களின் தகவல்கள் படி வருடத்தில் ஏழு மாதங்களில் இந்த நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்றாக வருவது எனக்கு புதிய தகவல்.

தகவலுக்கு நன்றி ஆசிரியரே

வாழ்த்துக்கள்

Alasiam G said...

அம்மா, அழகு, அன்பு, பாசம், காதல்
எல்லாவற்றிற்கும் பொருள் அது
சந்திரன் என்றுக் கொண்டால் அது மிகையாகாது.
அதைப்போல சந்திரன் என்றாலே ஒருவித ஈர்ப்பு உண்டு,
அது இலக்கியமாகட்டும், திரைத் துறையாகட்டும்
சந்திரனுக்கே தனி இடம்.

அந்தச் சந்திரனைப் பற்றிய பாடமும்
அதை வழக்கம் போல் தாங்கள் சமைத்த
விதமும் மிகவும் அருமை.
நன்றிகள் குருவே!

Arul said...

ஐயா,

எனக்கு தனுசு லக்னத்தில் 7க்குடையவன் புதன்,7ல் லக்னாதிபதி குரு மற்றும் சந்திரன்.சந்திரன் மட்டும் 7ல் இருந்திருந்தால் அழகான மனைவி மட்டும் கொடுத்திருப்பார்.குருவோடு சேர்ந்ததால் கலர் கொஞ்சம் குறைவான ஆனால் களையான முகம் கொண்ட,நல்ல குணமுள்ள துணையை காதல் திருமணம் மூலம் கொடுத்திருக்கிறார்.குரு-சந்திர யோகம் கொண்டு 7,10 க்குடைய புதனை பார்ப்பதால் என் தொழில் நுட்பத்திறனை அனைவரும் பாராட்டுகின்றனர்.அது மட்டுமின்றி சந்திரன் ஜோதிட அறிவுக்குண்டான 8க்கு அதிபதியாகி குருவோடு சேர்ந்து புதனை பார்ப்பதால் ஜோதிடத்தில் நல்ல புலமையை கொடுப்பார் என்று நம்புகிறேன்.சந்திரன் குருவோடு சேர்ந்தால் என்ன பலன் என்பதை
அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.

பாடத்துக்கு நன்றி ஆசிறியரே...

Ram said...

present sir,

As usual, moon at 2nd house-Makaram and aspected by mars from 8th house

jee said...

i born on "Chithrai Pournami".
Thank you for your lessions.

tamiltemples said...

அருமையான பாடம் ஐயா. நன்றி.
சேர்மராஜ்

tamiltemples said...

அருமையான பாடம் ஐயா. நன்றி.
சேர்மராஜ்

aryboy said...

வணக்கம் அய்யா,
பவுர்ணமி பதிவு பவுர்னமி போல பிரக்கசமாக‌
மனதில் பதிந்தது.எ.க,சரியான விலக்கமும்
ஆதிபத்தியமே முக்கிய பன்குவக்கமுடியும்
என்பதை தெலிவாக புரிந்துகொன்டென்.
நன்ட்ரியுடன் அரிபாய்.
வாழ்க வழமுடன்.

Ezhil said...

வணக்கம் அய்யா.
சந்திரனை பற்றிய தகவல்கள்
அருமை.

தெய்பிரை சந்திரன் உள்ளவர்கள் அல்ல்து ச்ந்திரன் ப்வர்
குறறைந்து உள்ளவ்ர்கள் வெள்ளியில் முத்து வைத்து மொதிரம் பொட்டுகொண்டால் பலன் உண்டா அய்யா.

டிசம்பர் மாதம் உங்க்ள் ஜொதிடபுத்தகம் வெளியிடு என்ரு சொல்லி இருந்தீர்க்ள்.வெளியிடு எப்பொழுது அய்யா.
நன்றி வணக்கம்.

kmr.krishnan said...

''Ashtami chandra vibhraja dalikasthala shobhita: Whose forehead shines, arching like the crescent moon of the eighth lunar digit (Ashtami)"-----------------------ல‌லிதா ச‌ஹஸ்ரநாம‌த்திலிருந்து எடுத்த‌து.

அம்பிகைக்கு உக‌ந்த‌ நாள் அஷ்ட‌மி.ந‌‌வராத்‌திரியில் துர்காஷ்டமி கொண்டாடுகிறார்க‌ள். கிருஷ்ண‌‌னும், துர்கையும் க‌ம்ச‌ வதத்திற்கா‌க‌ ஒரே நாளில் அவத‌ரிக்கிறார்க‌ள்.துர்கை அவ‌தார‌ம் அஷ்ட‌மியில் நட‌க்க‌ வேண்டும்,
என‌வே க‌ண்ண‌னும் அஷ்ட‌மியில் சிறையில் பிற‌க்கிறார்.இர‌ண்டு தெய்வ‌க்
குழந்தைக‌ளும் இட‌ம் மாற்ற‌ப்ப‌ட்டு க‌ண்ண‌ன் க‌ம்ச‌னிட‌மிருந்து காப்பாற்ற‌ப்
ப‌டுகிறார்.துர்கை க‌ம்ச‌ன் வாளுக்குத்த‌ப்பி அவ‌னை எச்ச‌ரித்துவிட்டு/கண்டித்துவிட்டு விண்ணில் பற‌ந்து விடுகிறார்.

துர்கை அவ‌தார‌த்தை அஷ்ட‌மியில் வைத்துக்கொள்வ‌த‌ற்காக‌, க‌ண்ண‌னும்
அஷ்ட‌மியில் அவ‌தார‌ம் செய்கிறார்.

jadam said...

nice sir

Suresh said...

வணக்கம் ஐயா,

பாடம் அருமை. மேலதிகத் தகவல் உபயோகமானதாக இருந்தது. உங்கள் பதிவுகளை தொடர்ந்து
படித்து வருகிறேன் சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி! மனதளவில் இருந்த பாராட்டுகளை இன்று இந்த
பின்னூட்டம் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் தொண்டு மேலும் சிறக்க இறைவனை பிராத்தி்க்கிறேன்

வால்பையன் said...

எனது பதிவுகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுன்னு ஒரு டெம்ப்ளெட் வச்சிருந்திங்களே!

இடம் பத்தலைன்னு எடுத்துட்டிங்களா?

மைனர் குஞ்சு said...

ஐய்யா சாமே ...என் தெய்வமே ! ... எனக்கு என் பேர்ல தான் பிரச்சன போல ... ஏதாவது பண்ணி கொஞ்சம் நல்லது நடக்க ஏற்பாடு பண்ணுங்க ஐய்யா

Anonymous said...

Dear Sir,

Thanks for the lessons,

Balakumaran.

Thirumal said...

ஐயா எனக்கு விருச்சிகராசி, சந்திரன் நீச்சமடைந்து இருக்கிறார், ஆனால் சுயவர்கப்பரல்கள் 7, அப்படியானால் பலன்கள் என்னவென்று கூறுங்கள்

நன்றி ஐயா ......

பாடங்கள் அருமை....

Success said...

வணக்கம் ஐயா.

சந்திரன் பற்றிய பாடம் நன்று...

நன்றி

minorwall said...

விருச்சிக லக்னம், வளர்பிறைச்சந்திரன், 9ஆம் அதிபதி சந்திரன் 7லே உச்சம். AV 4 . புதன் சுக்ரன் லுக் from லக்னம். இப்பிடி அமைப்பிலே சந்திரன் coupled with the power of 3 ,4 th அதிபதி Mr . Saturn .
என்னை வாழ வைத்த,மென்மேலும் வாழவைக்கப் போகும் சந்திரனுக்கு என் நன்றி.
அந்த நிலாவத்தான் நான் கையிலே புடிச்சேன்... என் ராசத்திக்காக..(சும்ம்ம்மம்மா........)
(luv of poetry, fine arts & music னெல்லாம் எழுதிட்டதாலே)

வால்பையன் said...

//என்னை வாழ வைத்த,மென்மேலும் வாழவைக்கப் போகும் சந்திரனுக்கு என் நன்றி.//

முடிஞ்சா மேலப்போய் ஒரு பொங்க வச்சிட்டு வாங்க தல!

S.SETHU RAMAN said...

உள்ளேன் அய்யா
நான் ரிஷப ராசி அப்படி என்றால் சந்திரன் உச்சம் ஆனால் சுய வர்க்கத்தில் 2 பாயிண்ட் பலன் மைனசா?
விருச்சிக ராசியில் சந்திரன் நீச்சம்
பலன்?

S.SETHU RAMAN said...

உங்கள் பாடங்கள் மிகவும் அருமை
உங்கள் விளக்கங்கள் அதை விட அருமை
நன்றி அயயா

thirunarayanan said...

சற்று முன் கிடைத்த தகவல்
கோவை ஈச்சநாரியில் உள்ள‌
கற்பகம் பல்கலைக்கழகத்தில்
உள்ள பாரதி அரங்கத்தில்
வரும் 19௧‍_12_2009 அன்று
சோதிடவியல் கருத்தரங்கம்
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
நடை பெறவுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இலவசம்

minorwall said...

இப்பத்தானே பொங்கலுக்கு essential item தண்ணி சந்திரன்லே இருக்குன்னு நம்ம அண்ணாதுரை சந்திராயனை அனுப்பி கண்டுபுடிச்சுருகாரு..2013லே அடுத்த ஆளில்லா ட்ரிப்.
Chandrayan-1 discovered traces of water on moon with its ‘moon minerology mapper’.
courtesy:
http://whatslatest.com/blog/?p=14535
என்னை வாழ வைத்த,மென்மேலும் வாழவைக்கப் போகும் கிரகம் மனசு வெச்சா futureலே ஒரு ட்ரிப் அடிசுட்டாப் போச்சு.
என்னா வால்பையன்..நீங்களும் வாரீங்களா?

sundari said...

ஐயா வ்ணக்க்ம்,
ஆ நான் பவுர்ணமியிலும் பிறக்க்லா அமாவசையிலும் பிறக்கவில்லை.
சுக்ல ப்ட்ச ஏகாதசி வளர்பிறை திதிலா இந்த உலகத்திற்கு வந்து விட்டேன் தரித்திரம் பிடித்தவன் எண்ணை தேய்த்து குளிக்க போன ஏகாதசி குறுக்க வ்ந்தது
சொல்லு வாங்க அந்த தரித்திரம் எனக்கு பொருந்தும் ஐயா.]
சுந்தரி

வால்பையன் said...

//என்னா வால்பையன்..நீங்களும் வாரீங்களா? //

எனக்கு தண்ணியில கண்டம்!

Karthi said...

"Paadam miga arumai ayya"!!!!!

minorwall said...

////வால்பையன் said... எனக்கு தண்ணியில கண்டம்!///
நல்லது. பொழச்சு போங்க.உங்க பொழப்ப நான் கெடுக்கமாட்டேன்..

minorwall said...

சுந்தரியம்மா,
இந்த தரித்திரத்தைஎல்லாம் தைப்பொங்கல் போகியோட சேர்த்துப்போட்டு கொளுத்திடுங்க..புதுசா வந்து பொறந்தோமுன்னு நெனச்சுக்குங்க.
AV337 tonic சாப்பிடுங்க..medicinal purpose. நம்ம வாத்தியாரையாவே இந்த tonic தான் சாப்பிடுராராம்.

SP.VR. SUBBIAH said...

/////T K Arumugam said...
ஐயா வணக்கம்
இன்றைய பாடம் எளிதாக இருந்தது. அதிகப்படியான தகவல்கள் எனக்கு புதிது. இந்த வருடம் கார்த்திகை

ஜோதி அன்று எதேச்சையான பௌர்ணமி என்றுதான் நினைத்தேன். ஆனால் தங்களின் தகவல்கள் படி

வருடத்தில் ஏழு மாதங்களில் இந்த நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் ஒன்றாக வருவது எனக்கு புதிய தகவல்.
தகவலுக்கு நன்றி ஆசிரியரே. வாழ்த்துக்கள்//////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
அம்மா, அழகு, அன்பு, பாசம், காதல் எல்லாவற்றிற்கும் பொருள் அது. சந்திரன் என்றுக் கொண்டால் அது

மிகையாகாது. அதைப்போல சந்திரன் என்றாலே ஒருவித ஈர்ப்பு உண்டு, அது இலக்கியமாகட்டும், திரைத்

துறையாகட்டும் சந்திரனுக்கே தனி இடம். அந்தச் சந்திரனைப் பற்றிய பாடமும் அதை வழக்கம் போல்

தாங்கள் சமைத்தவிதமும் மிகவும் அருமை. நன்றிகள் குருவே!/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBIAH said...

////Arul said...
ஐயா,
எனக்கு தனுசு லக்னத்தில் 7க்குடையவன் புதன்,7ல் லக்னாதிபதி குரு மற்றும் சந்திரன்.சந்திரன் மட்டும் 7ல்

இருந்திருந்தால் அழகான மனைவி மட்டும் கொடுத்திருப்பார்.குருவோடு சேர்ந்ததால் கலர் கொஞ்சம்

குறைவான ஆனால் களையான முகம் கொண்ட,நல்ல குணமுள்ள துணையை காதல் திருமணம் மூலம்

கொடுத்திருக்கிறார்.குரு-சந்திர யோகம் கொண்டு 7,10 க்குடைய புதனை பார்ப்பதால் என் தொழில்

நுட்பத்திறனை அனைவரும் பாராட்டுகின்றனர்.அது மட்டுமின்றி சந்திரன் ஜோதிட அறிவுக்குண்டான 8க்கு

அதிபதியாகி குருவோடு சேர்ந்து புதனை பார்ப்பதால் ஜோதிடத்தில் நல்ல புலமையை கொடுப்பார் என்று

நம்புகிறேன்.சந்திரன் குருவோடு சேர்ந்தால் என்ன பலன் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.
பாடத்துக்கு நன்றி ஆசிரியரே.../////

வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

SP.VR. SUBBIAH said...

/////Ram said...
present sir,
As usual, moon at 2nd house-Makaram and aspected by mars from 8th house//////

யோகம் இல்லாத ஜாதகம் கிடையாது. உங்களுக்கு வேறு நல்ல யோகம் இருக்கலாம். தொடரும் யோகப்

பாடங்களைப் பொறுமையாகப் படியுங்கள்

SP.VR. SUBBIAH said...

jee said...
i born on "Chithrai Pournami". Thank you for your lessions./////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////tamiltemples said...
அருமையான பாடம் ஐயா. நன்றி.
சேர்மராஜ்/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////aryboy said...
வணக்கம் அய்யா,
பவுர்ணமி பதிவு பவுர்ணமி போல பிரகாசமாக‌ மனதில் பதிந்தது.எ.க,சரியான விளக்கமும்
ஆதிபத்தியமே முக்கிய பங்கு வகிக்கமுடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
நன்றியுடன் அரிபாய். வாழ்க வளமுடன்.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Ezhil said...
வணக்கம் அய்யா.
சந்திரனை பற்றிய தகவல்கள் அருமை.தேய்பிறைச் சந்திரன் உள்ளவர்கள் அல்லது சந்திரன் பவர்
குறைந்து உள்ளவர்கள் வெள்ளியில் முத்து வைத்து மோதிரம் போட்டுகொண்டால் பலன் உண்டா

அய்யா.//////

எனக்கு அனுபவமில்லை. போட்டுப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். தெரிந்துகொள்கிறேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////டிசம்பர் மாதம் உங்கள் ஜோதிடபுத்தகம் வெளியிடு என்று சொல்லி இருந்தீர்க்ள்.வெளியீடு எப்பொழுது

அய்யா? நன்றி வணக்கம்.//////

லே அவுட் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அச்சாகி வந்தவுடன், முறையான அறிவிப்பு வெளியாகும்!
பொறுத்திருங்கள் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
''Ashtami chandra vibhraja dalikasthala shobhita: Whose forehead shines, arching like the crescent moon

of the eighth lunar digit (Ashtami)"-----------------------ல‌லிதா ச‌ஹஸ்ரநாம‌த்திலிருந்து எடுத்த‌து.
அம்பிகைக்கு உக‌ந்த‌ நாள் அஷ்ட‌மி.ந‌‌வராத்‌திரியில் துர்காஷ்டமி கொண்டாடுகிறார்க‌ள். கிருஷ்ண‌‌னும்,

துர்கையும் க‌ம்ச‌ வதத்திற்கா‌க‌ ஒரே நாளில் அவத‌ரிக்கிறார்க‌ள்.துர்கை அவ‌தார‌ம் அஷ்ட‌மியில் நட‌க்க‌

வேண்டும், என‌வே க‌ண்ண‌னும் அஷ்ட‌மியில் சிறையில் பிற‌க்கிறார்.இர‌ண்டு தெய்வ‌க் குழந்தைக‌ளும் இட‌ம்

மாற்ற‌ப்ப‌ட்டு க‌ண்ண‌ன் க‌ம்ச‌னிட‌மிருந்து காப்பாற்ற‌ப் ப‌டுகிறார்.துர்கை க‌ம்ச‌ன் வாளுக்குத்த‌ப்பி அவ‌னை

எச்ச‌ரித்துவிட்டு/கண்டித்துவிட்டு விண்ணில் பற‌ந்து விடுகிறார். துர்கை அவ‌தார‌த்தை அஷ்ட‌மியில்

வைத்துக்கொள்வ‌த‌ற்காக‌, க‌ண்ண‌னும் அஷ்ட‌மியில் அவ‌தார‌ம் செய்கிறார்.//////

மாயக்கண்ணனின் அவதாரம் குறித்த நல்ல செய்திகளுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBIAH said...

////jadam said...
nice sir/////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Suresh said...
வணக்கம் ஐயா,
பாடம் அருமை. மேலதிகத் தகவல் உபயோகமானதாக இருந்தது. உங்கள் பதிவுகளை தொடர்ந்து
படித்து வருகிறேன் சிறப்பாக உள்ளது. மிக்க நன்றி! மனதளவில் இருந்த பாராட்டுகளை இன்று இந்த
பின்னூட்டம் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் தொண்டு மேலும் சிறக்க இறைவனை

பிரார்த்தி்க்கிறேன்/////

ஆகா, அப்படியே செய்யுங்கள்! பாடங்கள் உங்கள் மனதில் பதிவதற்கும் இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBIAH said...

//////வால்பையன் said...
எனது பதிவுகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுன்னு ஒரு டெம்ப்ளெட் வச்சிருந்திங்களே!
இடம் பத்தலைன்னு எடுத்துட்டிங்களா?/////

பகுக்கவும், வகுக்கவும், கழிக்கவும், கூட்டவும், பெருக்கவும், ஒதுக்கவும், அள்ளவும், கொட்டவும் எனக்கு
நேரமில்லை. ஆனால் பகுத்தறிவு பற்றி அந்த டெம்பிளேட்டில் எதுவும் சொல்லவில்லையே? இறைவனை
நம்புபவனுக்கும், நம்பாதவனுக்கும், அறிவு பொதுவானதுதான். அறிவை வைத்து பகுப்பதும் வகுப்பதும்
அவரவர்கள் இஷ்டம்.

SP.VR. SUBBIAH said...

/////மைனர் குஞ்சு said...
ஐய்யா சாமி ...என் தெய்வமே ! ... எனக்கு என் பேர்ல தான் பிரச்சன போல ... ஏதாவது பண்ணி கொஞ்சம்

நல்லது நடக்க ஏற்பாடு பண்ணுங்க ஐய்யா/////

நான் என்ன செய்யமுடியும்? நீங்கள் ஏதாவது ஒரு தேசியக் கட்சியில் சேர்ந்து விடுங்கள். அங்கே உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் நல்லது நடக்கும். ஏற்பாடு செய்ய வேண்டாம். அங்கே எல்லாம்
தானாகவே நடக்கும்!

SP.VR. SUBBIAH said...

/////KUMARAN said...
Dear Sir,
Thanks for the lessons,
Balakumaran./////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

///Thirumal said...
ஐயா எனக்கு விருச்சிகராசி, சந்திரன் நீச்சமடைந்து இருக்கிறார், ஆனால் சுயவர்கப்பரல்கள் 7,
அப்படியானால் பலன்கள் என்னவென்று கூறுங்கள்
நன்றி ஐயா ......
பாடங்கள் அருமை....//////

உங்கள் லக்கினம் என்னவென்று சொல்லவில்லையே?

SP.VR. SUBBIAH said...

////Success said...
வணக்கம் ஐயா.
சந்திரன் பற்றிய பாடம் நன்று...
நன்றி///////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////minorwall said...
விருச்சிக லக்னம், வளர்பிறைச்சந்திரன், 9ஆம் அதிபதி சந்திரன் 7லே உச்சம். AV 4 . புதன் சுக்ரன் லுக்

from லக்னம். இப்பிடி அமைப்பிலே சந்திரன் coupled with the power of 3 ,4 th அதிபதி Mr . Saturn .
என்னை வாழ வைத்த,மென்மேலும் வாழவைக்கப் போகும் சந்திரனுக்கு என் நன்றி.
அந்த நிலாவத்தான் நான் கையிலே புடிச்சேன்... என் ராசத்திக்காக..(சும்ம்ம்மம்மா........)
(luv of poetry, fine arts & music னெல்லாம் எழுதிட்டதாலே)//////

1985ல் வந்த பழைய படத்தின் பாட்டைப் பாடாமல், உங்கள் பெயருக்கு ஏற்றபடி புதுப்பாட்டாகப் பாடுங்கள் மைனர்!

SP.VR. SUBBIAH said...

/////வால்பையன் said...
//என்னை வாழ வைத்த,மென்மேலும் வாழவைக்கப் போகும் சந்திரனுக்கு என் நன்றி.//
முடிஞ்சா மேலப்போய் ஒரு பொங்க வச்சிட்டு வாங்க தல!//////

போய்ப் பொங்க வைக்கிறதுக்கு அவர் ரெடி. செலவுக்கு ஸ்பான்சரைத் தேடிக்கிட்டிருக்கிறார். நீங்க ரெடியா?

SP.VR. SUBBIAH said...

/////S.SETHU RAMAN said...
உள்ளேன் அய்யா
நான் ரிஷப ராசி அப்படி என்றால் சந்திரன் உச்சம் ஆனால் சுய வர்க்கத்தில் 2 பாயிண்ட் பலன் மைனசா?
விருச்சிக ராசியில் சந்திரன் நீச்சம்- பலன்?/////

பழைய பாடங்களில் விவரமாக உள்ளது. அவற்றைப் படியுங்கள் நண்பரே.

SP.VR. SUBBIAH said...

////S.SETHU RAMAN said...
உங்கள் பாடங்கள் மிகவும் அருமை
உங்கள் விளக்கங்கள் அதை விட அருமை
நன்றி அயயா/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////thirunarayanan said...
சற்று முன் கிடைத்த தகவல். கோவை ஈச்சநாரியில் உள்ள‌ கற்பகம் பல்கலைக்கழகத்தில்
உள்ள பாரதி அரங்கத்தில் வரும் 19௧‍_12_2009 அன்று சோதிடவியல் கருத்தரங்கம்
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெறவுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளலாம். இலவசம்/////

தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////minorwall said...
இப்பத்தானே பொங்கலுக்கு essential item தண்ணி சந்திரன்லே இருக்குன்னு நம்ம அண்ணாதுரை

சந்திராயனை அனுப்பி கண்டுபுடிச்சுருகாரு..2013லே அடுத்த ஆளில்லா ட்ரிப்.
Chandrayan-1 discovered traces of water on moon with its ‘moon minerology mapper’.
courtesy: http://whatslatest.com/blog/?p=14535
என்னை வாழ வைத்த,மென்மேலும் வாழவைக்கப் போகும் கிரகம் மனசு வெச்சா futureலே ஒரு ட்ரிப்

அடிசுட்டாப் போச்சு. என்னா வால்பையன்..நீங்களும் வாரீங்களா?/////

என்னையும் சேர்த்துக்குங்க மைனர்! பயப்படாதீங்க, வயச மறந்திட்டுக் கலக்கலா கம்பெனி கொடுப்பேன்!

SP.VR. SUBBIAH said...

//////sundari said...
ஐயா வணக்கம்,
ஆ நான் பவுர்ணமியிலும் பிறக்கlலை அமாவசையிலும் பிறக்கவில்லை.
சுக்ல ப்ட்ச ஏகாதசி வளர்பிறை திதியில் இந்த உலகத்திற்கு வந்து விட்டேன் தரித்திரம் பிடித்தவன்

எண்ணை தேய்த்து குளிக்க போன ஏகாதசி குறுக்க வந்தது
சொல்லு வாங்க அந்த தரித்திரம் எனக்கு பொருந்தும் ஐயா.
சுந்தரி////

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகத்தான் பதிவில் விதம் விதமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்படித் தன்னம்பிக்கை இழந்து பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

SP.VR. SUBBIAH said...

/////வால்பையன் said...
//என்னா வால்பையன்..நீங்களும் வாரீங்களா? ////
/////எனக்கு தண்ணியில கண்டம்!////

வால் இருப்பவர்களுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரமாக இருக்குமாம். அப்படி இருப்பவர்களுக்கு எந்த கண்டமும் கிடையாது! நீங்கள் தைரியமாகப் போய்வரலாம்.:-)))))

SP.VR. SUBBIAH said...

/////Karthi said...
"Paadam miga arumai ayya"!!!!!/////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////minorwall said...
////வால்பையன் said... எனக்கு தண்ணியில கண்டம்!///
நல்லது. பொழச்சு போங்க.உங்க பொழப்ப நான் கெடுக்கமாட்டேன்../////

யார் பிழைப்பையும் யாரும் கெடுக்க முடியாது; மேன்மைப் படுத்தவும் முடியாது மைனர்.

SP.VR. SUBBIAH said...

/////minorwall said...
சுந்தரியம்மா,
இந்த தரித்திரத்தைஎல்லாம் தைப்பொங்கல் போகியோட சேர்த்துப்போட்டு கொளுத்திடுங்க..புதுசா வந்து

பொறந்தோமுன்னு நெனச்சுக்குங்க.
AV337 tonic சாப்பிடுங்க..medicinal purpose. நம்ம வாத்தியாரையாவே இந்த tonic தான் சாப்பிடுராராம்./////

ஆமாம்! எனக்கு அந்த டானிக்கைத் தயாரிப்பாளர்களே இலவசமாக - பெட்டி பெட்டியாக அனுப்பிக்
கொண்டிருக்கிறார்கள். கைமாத்தாக, அந்த டானிக் விற்பதற்கு அவர்களுக்கு நான் உதவிக்கொண்டிருக்கிறேன்! அதனால்தான் பதிவில் அனைவருக்கும் அதை அடிக்கடி பரிந்துரைக்கிறேன்.

kannan said...

குருவே வணக்கம் !

" அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா "!

தாங்கள் சொல்கின்றிர்கள் நான் குரு நாதன் இல்லை என்று
இது என்ன ஐயா நியாயம்

நன்றி உணர்வை சொல்லித்தரும் நாய் இம் ஒரு குரு என்று
கைலாச பரம்பரை திருவாவடுதுறை ஆதினம் திரு குமாரசாமி தம்பிரான் (அவர்களின் பூர்விகம் காரைக்குடி தான், சொந்த பெயர் சுந்தரர் என்று நினைக்கின்றேன் ஐயா ) 15 வருடதிக்கு முன்னர் நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ல் திரு அர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தில், ஆதினத்தின் மடத்தில் வைத்து அடியேனுக்கு சொன்னது ஐயா !!!!!1

ஐயா கவனிக்கவேண்டும் !!

சுமார் 12 வருடதிக்கு முன்னர் தாங்கள் கூறும் அதே பழனி ஆண்டவரை தரிசனம் செய்ய வேண்டி, தை பொங்கலுக்கு இப்பாலகன் பழனி ஆண்டவரையே குருநாதராக ஏற்று கொண்டு (ஆதினனத்தின் ஆசியுடன்) தனியாக செல்லும் போது , திருச்செந்தூர் க்கு 14 வருடமாக செல்லும் ஒரு குரு சாமீ ( அப்பவெம் மாலை போட்டு இருந்தார், ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தவர் அவராக வந்து ஐயா) இப்பாலகனுக்கு விரதத்தின் அடிப்படை சம்பிரதாயம் முதல் ஒரு சில விபரங்களை கூறினார். அவர்
சொன்னார் தாங்கள்
கண்டிப்பாக பழனி சென்று விடுவீர்கள் என்றார் , அதே போல் (திருபரம்குன்றம் + மீனாக்ஷி அம்மனை தரிசனம் செய்துவிட்டு ) 4 பகல் + 3 ராத்திரில் பழனி ஆண்டவரை தரிசனம் செய்தேன் ஐயா (3 1/2 நாளில் ) சுமார் 220 கிலோமீட்டர் மேல் எப்படி சென்றேன் என்று இன்றும் புரியவில்லை ஐயா!!

நிற்க!

அடியேன் திருவில்லிபுத்துரை தாண்டி வரும்போது நடந்த மேர்கண்டதிர்க்கு தொடர்புள்ள நிகழ்ச்சி இது, அப்பொழுது

ஒரு வழி போக்கு சந்நியாசி (துரவிகோலம், நடுத்தர வயது ) நாங்கள் ( அடியேன் + திருசெந்தூர் குரு சாமி ) உள்ள இடத்திற்கு அருகில் வந்து ஒருஉண்மையை @ உம்மையை சொல்லபோகின்றேன் என்றார்.

அந்த உண்மை எது என்று தெரியுமா ஐயா பெரும்தகையே !!!!!!!!!!!!!!!!!!!!

" அம்மா அப்பா தான் உலகம் " என்றார் ஐயா!!

(இன்னும் சில தனிப்பட்ட உண்மைகளைஎம் தான்)
தாங்கள் நேற்று என்ன சொன்னீர்கள் அதை தான் 1997 வருடம் ஜனவரி மாதம் போகி பொங்கல் அன்று கூறியது ஐயா!!!!!!!!!!!!!!!

வழி போக்கு சந்நியாசி (துரவிகோலம், நடுத்தர வயது அவரின் பெயர் மயில்வேல் ) சென்ற பின்னர் திருசெந்தூர் குரு சாமி சொன்னார் பெயரை (மயில்வேல்) பார்த்தீர்களா? பழனி ஆண்டவர் நேரிழையா வருவார் இவர் மாதிரியாகதான் வருவர் என்றார்

குருநாதரே !!!!!!!!!!!!!!!!!!!
இப்பொழுது கூறுங்கள்

தங்களை அடியேன் குருநாதர் என்றது தவறு இல்லையே !!!!!!!!!!!!!!!!!!!!!!!

Thirumal said...

///SP.VR. SUBBIAH said...

///Thirumal said...

ஐயா எனக்கு விருச்சிகராசி, சந்திரன் நீச்சமடைந்து இருக்கிறார், ஆனால் சுயவர்கப்பரல்கள் 7,
அப்படியானால் பலன்கள் என்னவென்று கூறுங்கள்
நன்றி ஐயா ......
பாடங்கள் அருமை....//////

உங்கள் லக்கினம் என்னவென்று சொல்லவில்லையே? //////


என்னுடைய லக்கின்ம் கண்ணி லக்கினம் ஐயா

SP.VR. SUBBIAH said...

////kannan said...
குருவே வணக்கம் !
" அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா "!
தாங்கள் சொல்கின்றிர்கள் நான் குரு நாதன் இல்லை என்று
இது என்ன ஐயா நியாயம்//////

அததனை சுப்பையாக்களுமே சுவாமிநாதனாகிவிடமுடியாது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////அந்த உண்மை எது என்று தெரியுமா ஐயா பெரும்தகையே !!!!!!!!!!!!!!!!!!!!
" அம்மா அப்பா தான் உலகம் " என்றார் ஐயா!!
(இன்னும் சில தனிப்பட்ட உண்மைகளையு தான்)
தாங்கள் நேற்று என்ன சொன்னீர்கள் அதைத் தான் 1997 வருடம் ஜனவரி மாதம் போகி பொங்கல் அன்று கூறியது ஐயா!!!!!!!!!!!!!!!
வழி போக்கு சந்நியாசி (துரவிகோலம், நடுத்தர வயது அவரின் பெயர் மயில்வேல் ) சென்ற பின்னர் திருசெந்தூர் குரு சாமி சொன்னார் பெயரை (மயில்வேல்) பார்த்தீர்களா? பழனி ஆண்டவர் நேரிழையா வருவார் இவர் மாதிரியாகதான் வருவர் என்றார்
குருநாதரே !!!!!!!!!!!!!!!!!!!
இப்பொழுது கூறுங்கள்
தங்களை அடியேன் குருநாதர் என்றது தவறு இல்லையே !!!!!!!!!!!!!!!!!!!!!!!/////

சொல்வதில் தவறில்லை. அடுத்த ஸ்டேஜிற்குப்போய் காவி, கமண்டலத்துடன் வந்து விடாதீர்கள்:-))))))

SP.VR. SUBBIAH said...

/////Thirumal said...
///SP.VR. SUBBIAH said...
///Thirumal said...
ஐயா எனக்கு விருச்சிகராசி, சந்திரன் நீச்சமடைந்து இருக்கிறார், ஆனால் சுயவர்கப்பரல்கள் 7,
அப்படியானால் பலன்கள் என்னவென்று கூறுங்கள்
நன்றி ஐயா ......
பாடங்கள் அருமை....//////
உங்கள் லக்கினம் என்னவென்று சொல்லவில்லையே? //////
என்னுடைய லக்கின்ம் கன்னி லக்கினம் ஐயா////

கன்னி லக்கினத்திற்கு பதின்னொறாம் இடத்திற்கு உரிய சந்திரன் ராசியில் நீசமடைந்துள்ளார். அம்சத்தில் எப்படியிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் அவருடைய சுயவர்க்கப்பரல்கள் 7 இருப்பதால் தன லாபத்திற்குக் குறையிருக்காது!

Thirumal said...

மிக்க நன்றி ஐயா

minorwall said...

நான் சொன்னது அன்பே சிவம் வசனம்.last சீன் லே கமல் சொல்றது. டபுள் மீனிங். மெயின் audience க்கு `எல்லோரும் வீட்டுக்கு போங்க. போயி பொழப்பப் பாருங்க` அப்பிடிங்குற அர்த்தத்துலே `பொழச்சுப் போங்க.உங்க பொழப்ப நான் கெடுக்க மாட்டேன்` னு சொல்வார்.
அதே வசனம் இங்கேயும் பொருந்தி வந்தது. ஒரு சுவாரஸ்யத்துக்காக சொன்னேன்.(நேத்து நைட் நான்
போஸ்ட் பண்ணப்போ இங்கே ஜப்பான் லே மணி 1 AM . அதுக்கு மேல நான் தூங்கப்போகலை
என்றால் மறுநாள் என் பொழப்பு கெட்டுடும்.அங்கேயும் இந்தியாவிலே நைட் 9.30PM.அவர் பொழப்பும் கெட்டுடும். )
இது வால் பையனுக்கு புரிந்திருக்கும்னு நினைச்சேன்..உங்க மாதிரி அவரும் காமெடி track வசனத்தை சீரியஸ் trackலே புரிஞ்சுக்கிட்டுருந்தாருன்னால் அத clear பண்ண ஆசிரியர் மூலமா இப்பிடி ஒரு chance அமைச்சு கொடுத்ததுக்கு சந்திரன் (மனோ காரகன்) அவர்களுக்கு நன்றி.
`நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்`என்பார்களே. அது இதுதானா தெய்வமே?
(மாதா,பிதா,குரு தெய்வம் என்று சமீபத்தில் யாரோட பின்னூட்டத்திலோ படித்த ஞாபகம்.)

வால்பையன் said...

//உங்க மாதிரி அவரும் காமெடி track வசனத்தை சீரியஸ் trackலே புரிஞ்சுக்கிட்டுருந்தாருன்னால்//


நானே ஒரு காமெடி பீஸு!
நான் எதுக்கு தல சீரியஸ் ஆகப்போறேன்!

minorwall said...

தேங்க்ஸ் வாலு..நீங்க நீங்களாவே இருங்க.அதுதான் உங்கள் ஸ்பெஷல் identity ...keep it up Mr .வால் பையன்...
பட் உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒத்துமை கவனிச்சீங்களா? photo backgroundஐ நல்லா டீப்பா பாருங்க.
Nature is so great..That can only connect,corelate, vibrate, tune, resonate the human frequencies beyond the space...Though there is no obvious formulae as in euqlidean 3D space connectivity, it is true..

தமிழ்தோட்டம் said...

அருமை, வாழ்த்துக்கள்

SP.VR. SUBBIAH said...

////Thirumal said...
மிக்க நன்றி ஐயா////

நல்லது நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////minorwall said...
நான் சொன்னது அன்பே சிவம் வசனம்.last சீன் லே கமல் சொல்றது. டபுள் மீனிங். மெயின் audience க்கு `எல்லோரும் வீட்டுக்கு போங்க. போயி பொழப்பப் பாருங்க` அப்பிடிங்குற அர்த்தத்துலே `பொழச்சுப் போங்க.உங்க பொழப்ப நான் கெடுக்க மாட்டேன்` னு சொல்வார்.
அதே வசனம் இங்கேயும் பொருந்தி வந்தது. ஒரு சுவாரஸ்யத்துக்காக சொன்னேன்.(நேத்து நைட் நான்
போஸ்ட் பண்ணப்போ இங்கே ஜப்பான் லே மணி 1 AM . அதுக்கு மேல நான் தூங்கப்போகலை
என்றால் மறுநாள் என் பொழப்பு கெட்டுடும்.அங்கேயும் இந்தியாவிலே நைட் 9.30PM.அவர் பொழப்பும் கெட்டுடும். )
இது வால் பையனுக்கு புரிந்திருக்கும்னு நினைச்சேன்..உங்க மாதிரி அவரும் காமெடி track வசனத்தை சீரியஸ் trackலே புரிஞ்சுக்கிட்டுருந்தாருன்னால் அத clear பண்ண ஆசிரியர் மூலமா இப்பிடி ஒரு chance அமைச்சு கொடுத்ததுக்கு சந்திரன் (மனோ காரகன்) அவர்களுக்கு நன்றி.
`நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்`என்பார்களே. அது இதுதானா தெய்வமே?
(மாதா,பிதா,குரு தெய்வம் என்று சமீபத்தில் யாரோட பின்னூட்டத்திலோ படித்த ஞாபகம்.)/////

விளக்கங்களுக்கு நன்றி மைனர்!

SP.VR. SUBBIAH said...

/////தமிழ்தோட்டம் said...
அருமை, வாழ்த்துக்கள்///

நன்றி நண்பரே!

ஈ ரா said...

வளர்பிறை பஞ்சமி முதல் தேய்பிறை பஞ்சமி வரை சந்திரனுக்கு சுப பலம் என்ற கருத்து நிலவுகிறதே..? அது குறித்து ?

minorwall said...

சந்திரனின் விளைவாக பூமியில் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து படம் பிடித்து discovery சேனல் வெளியிட்ட
நிகழ்ச்சியின் தமிழாக்கத்தை இங்கே மீடியா பிளேயர் உதவியுடன் கேட்க இங்கிருந்து டவுன்லோட் செய்யவும்.http://www.easy-share.com/1908703037/chandraneffect.wav

Anonymous said...

Fantastic dear, really fantastic..
Cheers !!!!

Anonymous said...

Beautiful ideas. . . .

SP.VR. SUBBIAH said...

////ஈ ரா said...
வளர்பிறை பஞ்சமி முதல் தேய்பிறை பஞ்சமி வரை சந்திரனுக்கு சுப பலம் என்ற கருத்து நிலவுகிறதே..? அது குறித்து ?///

ஒத்த கருத்து எங்கே இருக்கிறது? மாற்றுக் கருத்துச் சொல்வதற்கென்றே சில ஜென்மங்கள் பிறவி எடுக்கும். அவர்களைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம்!

SP.VR. SUBBIAH said...

/////minorwall said...
சந்திரனின் விளைவாக பூமியில் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து படம் பிடித்து discovery சேனல் வெளியிட்ட
நிகழ்ச்சியின் தமிழாக்கத்தை இங்கே மீடியா பிளேயர் உதவியுடன் கேட்க இங்கிருந்து டவுன்லோட் செய்யவும்.http://www.easy-share.com/1908703037/chandraneffect.wav////

அரிய தகவல்களுக்கு நன்றி மைனர்!

முருகன் அடிமை said...

வாத்தியாரே,
அடியேன் கிரகணமும் பவுர்ணமியும் இணைந்த நாளில் (14.08.1981)பிறந்தேன். பாடத்தை படித்ததை விட ரசித்தேன். எழுத்து நடைகள் சூப்பர்.

நன்றியுடன்,
முருகன் அடிமை

SP.VR. SUBBIAH said...

////முருகன் அடிமை said...
வாத்தியாரே,
அடியேன் கிரகணமும் பவுர்ணமியும் இணைந்த நாளில் (14.08.1981)பிறந்தேன். பாடத்தை படித்ததை விட ரசித்தேன். எழுத்து நடைகள் சூப்பர்.
நன்றியுடன்,
முருகன் அடிமை////

நன்றி! எங்கே ஸ்வாமி நடுவில் சில வாரங்களாக உங்களை வகுப்பறைப் பக்கம் காணோம்?

முருகன் அடிமை said...

மரியாதைக்குரியா வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
அடியேன் தங்கள் பாடங்களை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். தொணதொணவென்று கேள்விகள் கேட்டு தங்களை வெறுப்பேத்த விரும்பாமல் அடிப்படை பாடங்களை மனதில் எற்றிக்கொண்டிறுக்கிறேன். தங்களுடைய பாடங்கள் அனைத்தும் சுவைகள் மாறாமல் இருப்பது படிப்பதற்கு ஆர்வத்தை மென்மேலும் தூண்டுகிறது. தொடர்ந்து தங்கள் சேவையை எதிர்பார்க்கும் மாணவனாய்......

நன்றியுடன்,
முருகன் அடிமை

முருகன் அடிமை said...

மரியாதைக்குரியா வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
ஒரு சின்ன சந்தேகம்!
கேட்கலாமா?
அதாவது, கிரகங்கள் குறிப்பிட்ட தேதியில் எத்தனை பாகையில் இருக்கிறது என்பதை அறிய வாய்ப்புள்ளதா? சொல்லித்தாருங்களேன்? Please.

நன்றியுடன்,
முருகன் அடிமை

SP.VR. SUBBIAH said...

/////முருகன் அடிமை said...
மரியாதைக்குரியா வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
அடியேன் தங்கள் பாடங்களை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். தொணதொணவென்று கேள்விகள் கேட்டு தங்களை வெறுப்பேத்த விரும்பாமல் அடிப்படை பாடங்களை மனதில் எற்றிக்கொண்டிறுக்கிறேன். தங்களுடைய பாடங்கள் அனைத்தும் சுவைகள் மாறாமல் இருப்பது படிப்பதற்கு ஆர்வத்தை மென்மேலும் தூண்டுகிறது. தொடர்ந்து தங்கள் சேவையை எதிர்பார்க்கும் மாணவனாய்......
நன்றியுடன்,
முருகன் அடிமை////

நல்லது. படித்து முடித்து ஜோதிடத்தை ஒரு வழி பண்ணுங்கள்!:-)))

SP.VR. SUBBIAH said...

/////முருகன் அடிமை said...
மரியாதைக்குரியா வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
ஒரு சின்ன சந்தேகம்!
கேட்கலாமா?
அதாவது, கிரகங்கள் குறிப்பிட்ட தேதியில் எத்தனை பாகையில் இருக்கிறது என்பதை அறிய வாய்ப்புள்ளதா? சொல்லித்தாருங்களேன்? Please.
நன்றியுடன்,
முருகன் அடிமை/////

கணினியில் ஜாதகத்தைக் கணித்துக் கையில் வைத்துக்கோண்டு பார்த்தால், கீழ்க் கண்ட தலைப்பில், கீழ்க்கண்ட விவரங்களுடன் நீங்கள் குறிப்பிடும் கிரகங்களின் பாகைகள் கிடைக்கும்:

நிராயன ஸ்புடங்கள்
ஈந்திய ஜோதிடம் கிரஹங்களின் நிராயன முறையை பின்பற்றுகிறது. ஆது மேல்நாட்டு முறைப்படி
கணிக்கப்பட்ட சாயன நிலையி−ருந்து ஆயனாம்சத்தை கழித்து பெறப்பட்டது.
ஆயனாம்சத்தை கணிப்பதில் பல முறைகள் ஊள்ளன. ஈந்த ஜாதகம் ராமன் ஆயனாம்சத்தை பின்பற்றியது.
ராமன் = 21 பாகை. 52 கலை. 17 விகலை.
கிரஹம் தீர்காம்சம் ராசி ராசி ஸ்புடம் நட்சத்திரம் பாதம்
பா. க. வி. பா. க. வி.
லக்னம் 246:13:47 தனுசு 6:13:47 மூலம் 2
சந்திரன் 334:53:05 மீனம் 4:53:05 ஊத்திரட்டாதி 1
சூரியன் 278:48:44 மகரம் 8:48:44 ஊத்திராடம் 4
புதன் 288:38:05 மகரம் 18:38:05 திருவோணம் 3
சுக்கிரன் 325:32:30 கும்பம் 25:32:30 பூரட்டாதி 2
செவ்வாய் 69:51:12 மிதுனம் 9:51:12வக்ரம் திருவாதிரை 1
வியாழன் 266:52:30 தனுசு 26:52:30 ஊத்திராடம் 1
சனி 270:05:15 மகரம் 0:05:15 ஊத்திராடம் 2
ராகு 136:24:58 சிம்மம் 16:24:58 பூரம் 1
கேது 316:24:58 கும்பம் 16:24:58 சதயம் 3
குளிகன் 208:34:27 துலாம் 28:34:27 விசாகம் 3

ஓக்கேயா?

முருகன் அடிமை said...

மரியாதைக்குரிய வாத்தியார் ஐயா அவர்களுக்கு,
உடனடியாக பதில் அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து தங்கள் சேவையை விரும்புகிறேன்.

நன்றியுடன்,
முருகன் அடிமை

18-siddhargal said...

super

18-siddhargal said...

Arumai....,