மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.12.09

Doubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது?

....................................................................................................................
Doubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது?
Doubts: கேள்வி பதில் பகுதி மூன்று!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் மூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.9
வித்யா

Dear Sir,
Here are my doubts.

1) ஒரு கிரகம் ராசியில் மறைவிடத்தில் அல்லது நீச்ச வீட்டில் அமர்ந்து, தன்னுடைய சுயவர்க்கதிலும், தான் இருக்கும் வீட்டிலும், தன்னுடைய சொந்த வீட்டிலும் குறைந்த பரல்களுடன் இருந்து, அம்சத்தில் உச்ச வீட்டில் கேந்திரத்தில் அமர்ந்தால், எந்த விதமான பலன்கள் கிடைக்கும்?

Nvamsam is the magnified version of the rasi chart. இதைப் பலமுறை சொல்லியுள்ளேன். அம்சத்தில் உச்சம் பெற்று இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்

2) நற்பலன்கள் கிடைக்கும் என்றால், மத்திமவயதில் தான் கிடைக்குமா? அல்லது எப்போது கிடைக்கும்?

அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் தசா/புத்திகளில் (Major period/sub period of that planet) கிடைக்கும். அது எந்தெந்த வயதில் வரும் என்பதை நீங்கள் கணக்கிட்டுக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

3) சூரியன் பாவகிரகமா? சூரியனின் பார்வை பெறும் இடம் கெட்டுப் போகுமா?

சூரியன் பிரதான கிரகம். தந்தைக்கு உரிய கிரகம். உடல் காரகன். இரண்டு அமைச்சகங்கள் அவர் கையில் உள்ளது. சிம்ம லக்கினக்காரர்களுக்கு அவர் லக்கின அதிபதி. அவர்களுக்கு அவர் பாவ கிரகம் அல்ல! மகர லக்கினக்
காரர்களுக்கு அவர் எட்டாம் இடத்து அதிபதி. அவர் பாபக் கிரகம். அப்படி அவருடைய செயல்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். அதனால் அவருக்குத் தனி முத்திரை கிடையாது/குத்தக்கூடாது!


வரும் ஆனால் வராது. அவர் பாவி ஆனால் பாவி இல்லை:-))))

Regards,
Vidhya.
------------------------------------------------------------
email No.10
தனுஜா

இனிய காலை வணக்கம் சார்,

1. எனக்கு ஒரு பொது கேள்வி இருக்கு, என்னுடய ஜாதகத்தில் வாக்கிய முறையில் துலாமில் சனி இருக்கிறார், ஆனால் திருக்கணிதப்படி அவர் விருச்சிக ராசியில் இருக்கிறார், இதில் எது சரி? சார் இதை ஜகானந்தா ஹோரவில் எப்படி வாக்கியபடி பாப்பது எண்டு எனக்கு தெரியாது, Can u please tell, if u know sir becoz I tried many times and nothing worked.

ராசி சந்திப்புக்களில் பிறந்தவர்களுக்கு (That is border births) அப்படித்தான் இருக்கும். தமிழ்நாடு, கேரள எல்லையில் இருக்கும் தோட்டக்காரர்களுக்கு, இரண்டு மாநிலங்களிலும் வாசல் இருக்கும். அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.

வாக்கியப்படி கணித்தால் அது சரியான ஜாதகத்தைக் கொடுக்கும்.
கணினி ஜாதகங்களில் வாக்கியத்தில் கணிப்பதற்கு உரிய வசதி இருக்கும். அதில் அயனாம்சம் = ராமன், சார்ட் ஸ்டைல் = சவுத் இந்தியன், தசா ஸிஸ்டம் = 360 நாட்கள் என்பதைத் தேர்வு செய்யுங்கள் படம் கீழே உள்ளது


+++++++++++++++++++++

2. சார், அடுத்த கேள்வி ஐந்தாம் வீட்டை பற்றிய கேள்வி, for meena lagna, katakam is fifth house, and ruler is moon, நீங்க சொன்னிங்க சந்திரன் தான் மனோகாரகர், அவர் எனக்கு ஐந்தாம் வீடுக்கு உரியவர், எனக்கு கவலையா இருக்கு சார், becoz he is in 4th house, (12th to 5th house), சில நேரங்களில் நான் சந்தோசமா ஒரு வேலை செய்ய ஆசையா போவேன், ஆனால் போன அடுத்த நிமிஷம் ஏதும் ஒரு கவலை வரும் சார், உற்சாகம் போய்விடும் சார்.

Key informations:
The moon is wanning
4th house (gemini) 24 parals only sir
5th house (katakam) 27 parals
moon suya paral 6
mercury suya paral 5
jupiter suya paral 7
mercury, jupiter, sun giving direct aspect on moon
In navamsa moon is alone in taurus( ucham)

Having some good points sir, chandiran enaku nallathu seivaaraa? chandiranuku eppoluthum maarikondu irukum manasu, I don't like him. Enaku mukiyaamana kelvi sir, fifth house deals with children, will I get good children sir after marriage since fifth lord in fourth house? Only if u get good children, life would he peaceful sir!!!

சந்திரன் தன்னுடைய வீட்டிற்குப் பன்னிரெண்டில் மறைந்தாலும், சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருப்பதால் நன்மைகளைச் செய்வார். கவலையை விடுங்கள்.

எதையும் Take it easy என்று எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளை மனதில் இருந்து அடித்து விரட்டுங்கள்.

கீழ்க்கண்ட பாடலைத் தினமும் பாராயணம் செய்யுங்கள்:


"ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி

வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி


ஒலியும் ஒளியும் கரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி

ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி

தண்ட சோறுன்னு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி

வழுக்கைத் தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி

(ஊர்வசி..)
"

In fourth house only 24 parals, but budhan (lord of 4th house) suya paral is 5, naan mel padipu padipena? (becoz enaku budhan disai is starting in 4 years)

அதே பதில்தான் இதற்கும். புதன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருப்பதால், உங்களுக்கு மேற்படிப்பு உண்டு.

3. சார், இது ஆறாம் வீடை பற்றிய கேள்வி, If sixth house has 31 parals, what are positive things about it having more parals, and what are the negative things? But in my case suryan (6th house lord) is neecham in navamsa? Konjam payama iruku sir?

எதற்குப் பயம்? ஆறாம் வீட்டில்தான் 31 பரல்கள் இருக்கின்றனவே. அது கைகொடுக்கும். கவலையை விடுங்கள்

4. Last question sir, if rahu is with mandi wat is effect sir? I have mandi in 3rd house taurus,(rahu neecham) with 30 parals?

மூன்றாம் வீடு தைரிய ஸ்தானம். அங்கே 30 பரல்கள் இருப்பது தேவையான துணிவைக் கொடுக்கும். நீங்கள்தான் அதைக் கை நீட்டி (முழு மனதுடன்) எடுத்துக்கொள்வதில்லை என்று தெரிகிறது!:-)))))

5.சுறு சுறுப்பாக உள்ள மனிதர், what key planets or combinations of planet provide this?

செவ்வாய் வலுவாக உள்ளவர்கள் சுறு சுறுப்பாக இருப்பார்கள். அவர்தான் ஆற்றலுக்கு உள்ள கிரகம். ஆற்றலுக்கு சுறுசுறுப்பு வேண்டுமல்லவா?

I will be thankful if you can answer all of it sir!!!

Thanks,
Thanuja
----------------------------------------------------------
email No.11
வினோத தனஞ்செயன்

ஐயா,
ராகு,கேது உச்சம் பெற்றால் இருக்கும் வீட்டை பொறுத்து அவர்களது திசைகளில் ஓரளவு நன்மைகள் செய்வார்களா? சனி இராசி, நவாம்சத்தில் ஆட்சி,உச்சம் ஆனால் இருக்கும் வீட்டை பொறுத்து சனி திசையில் நன்மைகளை அதிகமாக செய்வாரா?

உச்சம் பெற்றதற்கு அர்த்தம் வேண்டாமா? உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய தசா/ புத்திகளில் ஜாதகனுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்கள்

------------------------------------------------------------------
email No.12
விஜய் ஆனந்த்

Respected sir,
you have given 2 examples for parals(lesson 11), one is relating to marriage and the other profession.
A doubt arises here i.e;
when it comes to profession if the 10th house has less parals(<28),>30)the result is, even with less effort he/she can earn more and be successful in his/her profession( this is practically possible).But when it comes to marriage,

if the 7th house has less parals(<25)>30) it means; as per 7th house= will not get a good pair;
2nd house= will get a good family; but practically, only if a person gets a good pair, he/she can lead a good family.

I am confused......how do you explain the above case, please clarify me sir.

Thanking you,
N.Vijaianand

நல்ல மனைவி அமைந்தால்தான், நல்ல குடும்பம் அமையும் என்றால், இன்று நாட்டில் 75% குடும்பங்கள் கேள்விக்குறியதாகிவிடும்.

சரி பண்ணிக் கொண்டுபோகும்/ சகித்துக்கொண்டு போகும் மனப்பான்மை யால்தான் இன்று பல குடும்பங்களில் சந்தோஷம் நிலவிக்கொண்டிருக்கிறது.

ஒன்று ரயில், ஒன்று தண்டவாளம். அப்படித்தான் பல ஜோடிகள் அமையும். இரண்டுமே ரயில்களாக இருந்தால் என்ன ஆகும்? காலதேவன் அப்படித்தான் ஜோடிகளை உண்டாக்குவான்.

கணவன் ரயில் என்றால்,
மனைவி தண்டவாளம். மனைவி ரயில் என்றால், கணவன் தண்டவாளமாக இருப்பான்.

கணவன் சோம்பேறியாக இருந்தால், மனைவி படு சுறுசுறுப்பானவளாக இருப்பாள்.
கணவன் ஸ்மார்ட்டாக இருந்தால், மனைவி மந்தமாக இருப்பாள். மனைவி புத்திசாலியாக இருந்தால், கணவன் அவள் அளவிற்கு அறிவில்லாத
வனாக இருப்பான்.
இப்படித்தான் ஜோடிகள் அமைந்திருக்கும்.நீங்கள் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்

திரைப்படங்களில் மட்டும்தான் ஜோடிகள் சரியாக இருக்கும்!
வாழ்க்கையில் அபூர்வமாக அப்படி ஜோடிகள் இருக்கும். 1% அல்லது 2% சதவிகிதம் மட்டுமே அப்படி இருக்கும். அதைத்தான் நாம் Made for each other என்போம்!

Face Valueவை வைத்து ஒரு பெண்ணை/ஒரு ஆடவனை நீங்கள் முடிவு செய்ய முடியாது.
திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான முகங்கள் தெரியும்.

7ஆம் வீடு தனி.கணவன்/மனைவி உறவுகளுக்கு மட்டும் உரியது.
2ஆம் வீடு தனி. குடும்பம் என்பதில் கணவன் மனைவி இருவரும் அங்கத்தினர்கள். shelter, Children, social status, உறவுகள், சொந்த பந்தங்கள், போன்று பல் விஷயங்களை உள்ளடக்கியது குடும்பம்.


இரண்டிற்கும் முடிச்சுப்போட்டுப் பார்க்காதீர்கள்

ஒருவருக்கு 7ஆம் வீடு நன்றாக இருந்தது. அவர் பொறியியல் படித்தவர். நல்ல மனைவி கிடைத்தாள், அம்மணி தோற்றத்தில் நடிகை தேவயானி மாதிரி அழகாக இருப்பார். 5ஆம் வீடும் நன்றாக இருந்தது. திருமணமான ஒருவருடத்திலேயே அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது. எல்லாம் இரண்டுவருடம்தான் நிலைத்தது.

அவருடைய ஜாதகத்தில் இரண்டில் மாந்தி. மாந்தி அவரை அள்ளிக் கொண்டுபோய் துபாயில் விட்டு விட்டுவந்துவிட்டான். 25 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் அங்கே இன்னும் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறார். முடிந்தபாடில்லை. ஈட்டிக் கொண்டேடேடே இருக்கிறார்ர்ர்ர்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இங்கே வந்து ஒரு பத்து தினங்கள் மட்டும் இருந்துவிட்டுப்போவார்.
மனைவியின் இளமை, கோவையில் இடம் வாங்கி, இரண்டு வீடுகள் கட்டி, அதைப் பார்த்து மகிழ்வதில் கழிந்தது. கணவனுடைய இளமை வங்கி இருப்பைப் பார்த்து மகிழ்வதில் கழிந்தது.

அதை எப்படிக் குடும்ப வாழ்க்கை என்று சொல்வது?


அதைத்தான் ஒரு அற்புதக் கவிஞன் இப்படிச் சொன்னான்:


“மடி நிறையப் பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்”

தோற்றம் (appearance) , அறிவு (skill) , கல்வி (education) , திறமை (Talent) , குணம் (character), அதிர்ஷ்டம் (Luck) ஆகிய ஆறும் ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு வேண்டும். அப்படி ஆறும் அமைந்த ஒருவரை அல்லது ஒருத்தியைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

அதில் இரண்டு அல்லது மூன்று மட்டுமே, ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு இருக்கும். இருப்பதைக் கொண்டு, வந்தவரை அல்லது வந்தவளை வைத்துக் குடும்பம் நடத்துவதுதான் வாழ்க்கை!

அந்த ஆறில் மிகவும் முக்கியமானது குணம். அதை மனதில் வையுங்கள்!

உங்களுக்குப் புரிந்தால் சரி!!!!!!
=====================================================================

email No.13
வெங்கட். என். மஸ்கட்

Respected Vaathiyaar avargalukku,
For Vrishaba Lagna subject, if lagna lord is in 12th along with Uchham Sun will it form a raja yoga - can we apply 6th in 12th rule (kettavan kedugiran endru arthama)? Will it help during the lagna maha dasa?
Nandrigal pala.
Anbudan
Venkat, Muscat

என்ன குழப்பம்? 4ஆம் அதிபதி(Lord of the house of comforts) உச்சம் பெற்று மேஷத்தில் இருக்கிறார். அது 4ஆம் வீட்டில் இருந்து ஒன்பதாம் இடம். ஆகவே அவர் உங்களுக்கு சகல செளகரியங்களையும் பெற்றுத் தருவார். அதனால்தான் அவர் உங்களை மஸ்கட்வரை கொண்டுபோய் விட்டிருக்கிறார். லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் மறைந்ததற்கு அது ஈடாகக் கொடுக்கப்பெற்றுள்ளது. மற்றதை எல்லாம் மறந்து விட்டு சந்தோஷமாக இருங்கள்!
---------------------------------------
email No.14
செல்வா ரமேஷ்

////I have few doubt on Parivarthana yoga. The below cases are from my Jataga, I'm asking as it was missing in your lessons.
What if parivartana between Venus(4) and Jupiter(11)? (This is not specified in earlier lesson)
Assuming there is parivartana yoga between Venus and Jupiter, and during Venus dasa will it actually be Venus dasa or Jupiter dasa?
Thanks and regards
Selvaramesh//////

பரிவர்த்தனையில் இடம் மாறி அமரும் கிரகங்கள், தாங்கள் அமர்ந்த வீட்டிற்கான பலனைத் தங்களது தசா புத்திகளில் அள்ளித் தருவார்கள். ஆகவே இங்கே, அது சுக்கிரனா அல்லது குருவா என்று பார்ப்பதைவிட, அவர்கள் அமர்ந்த வீடு, 2ஆ, 10ஆ, அல்லது 11ஆ எனும் கணக்கில் பாருங்கள்

Out of all the Parivarthana yoga, the Parivarthana between the lord of Kendra and Trikona is very powerful அதையும் மனதில் வையுங்கள்

-------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

43 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. /////Thanuja said...
  Vanakam sir,
  Really a lot of thanks for answering all of the questions. thanks also for the quick reply sir!!!
  For question number one sir,I tried it in jahanatha hora, but it is still not working...the software you have sir is different. Maybe, I will check it again.
  ஆனால், எனக்கு பதில் நம்பர் two தான் ரொம்ப பிடிச்சிருக்கு.
  எனக்கு என்னும் ஒரு கேள்வி இருக்கு, It is about todays's title அம்மணியின் இளமை எதில் கழிந்தது? Any special reason sir?
  Thanks,
  Thanuja////

  email question number 12ஐப் படியுங்கள். தலைப்பிற்கான செய்தி அதில் உள்ளது! அதை ஏன் நீங்கள் படிக்கவில்லை?

  ReplyDelete
 3. Vanakam sir,
  REally a lot of thanks for answering all of the questions. thanks also for the quick reply sir!!!

  For question number one sir,I tried it in jahanatha hora, but it is still not working...the software you have sir is different. Maybe, I will check it again.

  ஆனால், எனக்கு பதில் நம்பர் two தான் ரொம்ப பிடிச்சிருக்கு.

  Really sorry sir, my mistake...I understand now!!!

  Thanks,
  Thanuja

  ReplyDelete
 4. Ayoo sir, the title did not match for the all questions ...because I read too fast the others, maanithividinkal sir!!!

  Thanks
  Thanuja

  ReplyDelete
 5. ஐயா!!!

  எம்பெருமான்!!!! அகிலத்தையும் கட்டி ஆளும் சிவபெருமான், பாண்டிய மன்னன் வாயிலாக கூந்தலுக்கு இயக்கையில் மனம் உண்டா? எனும் ஐயப்பாடு ( ஏற்படுத்தியதனால் தான்) வந்ததினால்தான் நக்கீரரின் புகழ் இன்றும் தரணில் புகழ் நிலைத்து நிக்கின்றது . அதுபோல் எமது குருநாதரின் புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டாமா ?

  2. புகழ் பெற்ற ஒரு விளம்பரத்தில் கதாநாயகனின் பெயர் சந்த்ரு ( ஐயா விற்கும் நான்கு தெரிந்தும் இருக்கும்( உண்மை) அல்லவா ! )

  --

  ReplyDelete
 6. /////Thanuja said...
  Ayoo sir, the title did not match for the all questions ...because I read too fast the others, maanithividinkal sir!!!
  Thanks
  Thanuja//////

  உங்கள் ஜாதகத்திற்கு ஒத்துவராத பாடங்களையும் இப்படித்தான் (too fast) படிப்பீர்களா?:-)))))

  ReplyDelete
 7. /////kannan said...
  ஐயா!!!
  எம்பெருமான்!!!! அகிலத்தையும் கட்டி ஆளும் சிவபெருமான், பாண்டிய மன்னன் வாயிலாக கூந்தலுக்கு இயக்கையில் மனம் உண்டா? எனும் ஐயப்பாடு ( ஏற்படுத்தியதனால் தான்) வந்ததினால்தான் நக்கீரரின் புகழ் இன்றும் தரணில் புகழ் நிலைத்து நிக்கின்றது . அதுபோல் எமது குருநாதரின் புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டாமா ?
  2. புகழ் பெற்ற ஒரு விளம்பரத்தில் கதாநாயகனின் பெயர் சந்த்ரு ( ஐயா விற்கும் நான்கு தெரிந்தும் இருக்கும்( உண்மை) அல்லவா ! )/////

  முதலில் குருநாதர், அடுத்து சந்துரு, அடுத்து நக்கீரர், அடுத்து என்ன? (திரைப்பட வேலனா?) வடிவேலா? :-))))

  ReplyDelete
 8. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
  மிகவும் அருமை கேள்விகளும் அதற்கானப் பதில்களும்.
  இது, உமது புண்ணியத்தில் எமது பாக்கியம்
  நன்றிகள் குருவே!

  ஒரே ஓவரில் வந்தப் பந்துகள், ஹால்ப் ஸ்பின், லெக் ஸ்பின்
  மற்றும் சூப்பர் பாஸ்ட் என்று அத்தனையும் கலந்து அல்லவா!
  அத்தனையும் சிக்ஷ்சராக அல்லவா பறந்தது.
  என்னவென்றுச் சொல்வது அத்தனை லாவகம்!
  எதிரணியில் இருக்கும் நாங்கள்
  உங்கள் ஆட்டத்தை ரசிப்பதிலே ஆழ்ந்து விடுகிறோம்
  பிறகு எப்படி வீழ்த்துவது.
  எனக்கு மட்டும் வேலை மிச்சம் காரணம்,
  நான் தான் கீப்பிங் செய்துக் கொண்டு இருக்கிறேனே!
  அருமையாகப் பந்து வீசிய சகோதிரிகலாகிய
  பாரதிகள் (வித்யா மற்றும் தனூஜா) இருவருக்கும் பாராட்டுக்கள்.

  அருமை அருமை ஆறுமுகனின்
  அருளுடன் அத்தனையும் அருமை.

  அய்யா நான் இப்படிப் புரிந்துக் கொண்டேன்:
  மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு இவைகளில்
  பொதுவாக, தீய கிரகம் என்றுக் கூறக் கூடிய
  ராகு,சனீஸ்வரன்,கேது,சூரியன் மற்றும்
  செவ்வாய் கிரகங்கள் இருந்தால் நன்று.

  அதே சமயம் மேற்க் கூறிய தீயக் கிரகங்கள்
  தனிப் பட்ட ஜாதகப் படி: மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு
  ஆகிய வீடுகள் அல்லாத மற்ற வீடுகளுக்கு அதிபதியாக
  இருந்தால் அவைகள் (சனீஸ்வரன்,சூரியன், செவ்வாய்)
  அந்த ஜாதகத்திற்கு நல்ல கிரகங்கள். அதிலும் உச்சம் ஆட்சி
  என்றால் மிகவும் சிறப்பு. நல்லப் பலனையேத் தரும். சரித்தானே!

  நன்றிகள் குருவே!!
  அன்புடன்,
  ஆலாசியம் கோ.

  ReplyDelete
 9. காலை வணக்கம் .
  உள்ளேன் ஐயா!

  ReplyDelete
 10. சுவாமி விவேகானந்தருக்கு நீங்கள் கூறியுள்ள 6ம் இருந்தது. குடும்பம் வேண்டாம் என்று அவராக முடிவு செய்து கொண்டார். மணம் பேசி முடிக்கப்
  பலரும் வந்தனர். வேறு வகையிலும் அவருக்கு அழைப்பு வந்தது.ஆனால்
  தன் எதிர்காலப் பணிக்கு உலகாயதம் ஒத்து வராது என்று தானாகத்தான் உதறித் தள்ளினார்.என‌வே ந‌ரேந்திரன் (நர+இந்திரன்=மனித+குலத்தலைவன்)
  என்ற‌ பெய‌ர் அவ‌ருக்கே பொருந்தும்!
  உங்கள் பதில்கள் அருமை! இரண்டு பேருக்கு சந்தேக‌ம் வராது. ஒன்று நன்கு கற்றவர்களுக்கு!( உ.ம்: ஆனந்த்,சுவாமிஜி...) மற்றொருவர் எதுவுமே கல்லாதவர்களுக்கு!நான் எந்த வகையைச் சார்ந்தவன் என்பது தங்களுக்கும்
  சகமாணவர்களுக்கும் நன்றாகத் தெரியும்!

  ReplyDelete
 11. ////Alasiam G said...
  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
  மிகவும் அருமை கேள்விகளும் அதற்கானப் பதில்களும். இது, உமது புண்ணியத்தில் எமது பாக்கியம்
  நன்றிகள் குருவே!
  ஒரே ஓவரில் வந்தப் பந்துகள், ஹால்ப் ஸ்பின், லெக் ஸ்பின், மற்றும் சூப்பர் பாஸ்ட் என்று அத்தனையும் கலந்து அல்லவா! அத்தனையும் சிக்ஷ்சராக அல்லவா பறந்தது. என்னவென்றுச் சொல்வது அத்தனை லாவகம்!
  எதிரணியில் இருக்கும் நாங்கள் உங்கள் ஆட்டத்தை ரசிப்பதிலே ஆழ்ந்து விடுகிறோம்
  பிறகு எப்படி வீழ்த்துவது. எனக்கு மட்டும் வேலை மிச்சம் காரணம், நான் தான் கீப்பிங் செய்துக் கொண்டு இருக்கிறேனே! அருமையாகப் பந்து வீசிய சகோதிரிகளாகிய பாரதிகள் (வித்யா மற்றும் தனுஜா) இருவருக்கும் பாராட்டுக்கள்.
  அருமை அருமை ஆறுமுகனின் அருளுடன் அத்தனையும் அருமை.
  அய்யா நான் இப்படிப் புரிந்துக் கொண்டேன்:
  மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு இவைகளில் பொதுவாக, தீய கிரகம் என்றுக் கூறக் கூடிய ராகு,சனீஸ்வரன்,கேது,சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் இருந்தால் நன்று.
  அதே சமயம் மேற்க் கூறிய தீயக் கிரகங்கள் தனிப் பட்ட ஜாதகப் படி: மூன்று, ஆறு, எட்டு, பன்னிரெண்டு
  ஆகிய வீடுகள் அல்லாத மற்ற வீடுகளுக்கு அதிபதியாக இருந்தால் அவைகள் (சனீஸ்வரன்,சூரியன், செவ்வாய்) அந்த ஜாதகத்திற்கு நல்ல கிரகங்கள். அதிலும் உச்சம் ஆட்சி என்றால் மிகவும் சிறப்பு. நல்ல பலனையேத் தரும். சரிதானே!
  நன்றிகள் குருவே!!
  அன்புடன்,
  ஆலாசியம் கோ./////

  சரிதான்.புரிதலுக்கு நன்றி ஆலாசியம்! உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
  ஓகோ நீங்கள்தான் விக்கெட் கீப்பரா? ஸ்டம்பிங் ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்:-))))

  ReplyDelete
 12. ////DHANA said...
  காலை வணக்கம் .
  உள்ளேன் ஐயா!/////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 13. /////kmr.krishnan said...
  சுவாமி விவேகானந்தருக்கு நீங்கள் கூறியுள்ள 6ம் இருந்தது. குடும்பம் வேண்டாம் என்று அவராக முடிவு செய்து கொண்டார். மணம் பேசி முடிக்கப் பலரும் வந்தனர். வேறு வகையிலும் அவருக்கு அழைப்பு வந்தது.ஆனால் தன் எதிர்காலப் பணிக்கு உலகாயதம் ஒத்து வராது என்று தானாகத்தான் உதறித் தள்ளினார்.என‌வே ந‌ரேந்திரன் (நர+இந்திரன்=மனித+குலத்தலைவன்) என்ற‌ பெய‌ர் அவ‌ருக்கே பொருந்தும்!
  உங்கள் பதில்கள் அருமை! இரண்டு பேருக்கு சந்தேக‌ம் வராது. ஒன்று நன்கு கற்றவர்களுக்கு!( உ.ம்: ஆனந்த்,சுவாமிஜி...) மற்றொருவர் எதுவுமே கல்லாதவர்களுக்கு!நான் எந்த வகையைச் சார்ந்தவன் என்பது தங்களுக்கும் சகமாணவர்களுக்கும் நன்றாகத் தெரியும்!/////

  உங்களின் தொடர் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
  வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

  ReplyDelete
 14. ஜோதிட கேள்வி பதில் படிக்கும் போது உங்கள் ஜோதிட ஞானம் வெளிப்படுகிறது. இதுதாண்ட வாத்தியார் என்று சொல்ல தோன்றுகிறது. ஊர்வசி,ஊர்வசி பாடல் பாராயணத்திற்குறிய பக்திப்பாடல் என்று தமிழ் கூறும் நல் உலகத்திற்கு எடுத்துரைத்த வாத்தியார் அவர்களுக்கு நேரு உள்விளையாட்டரங்கில் விழா எடுத்து விருது வழங்குமாறு திரைப்படக்கவிஞர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 15. அய்யா வணக்கம்,
  கேள்விகள் பரமாதம் அதற்க்கு பதில்களோ அதை விட பரமாதம்.....21 ஒரு நாள் போதாது என்று என்னுகின்றேன் ,,,,

  நன்றி

  ReplyDelete
 16. வர.. வர.. உங்களுக்கு இளமை திரும்பிக்கிட்டே இருக்குன்னு நினைக்கிறேன்..!

  தலைப்பு வைக்குறது எப்படீன்றதையும் உங்ககிட்ட கத்துக்கணும் போலிருக்கு..!

  கொல்றீங்க..!!!

  ReplyDelete
 17. /////krish said...
  ஜோதிட கேள்வி பதில் படிக்கும் போது உங்கள் ஜோதிட ஞானம் வெளிப்படுகிறது. இதுதாண்ட வாத்தியார் என்று சொல்ல தோன்றுகிறது. ஊர்வசி,ஊர்வசி பாடல் பாராயணத்திற்குறிய பக்திப்பாடல் என்று தமிழ் கூறும் நல் உலகத்திற்கு எடுத்துரைத்த வாத்தியார் அவர்களுக்கு நேரு உள்விளையாட்டரங்கில் விழா எடுத்து விருது வழங்குமாறு திரைப்படக்கவிஞர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்./////

  மனதிற்கு தெம்பைக் கொடுக்கும் பாடல்களை - அது திரைப்படப் பாடலாக இருந்தாலும் மனனம் செய்வதில் தவறில்லை. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்’ என்று வலியுறுத்தும் இந்தப்பாடலுக்கு என்னகுறை சாமி?

  ReplyDelete
 18. Dear sir,

  Thanks for answer all this questions and answer. I heard the proverb that if we keep learning from our own mistakes we cont learn anythihg, learn from others mistakes u will excell in your life. so its better to keep watching the questions and answers.

  ReplyDelete
 19. /////astroadhi said...
  அய்யா வணக்கம்,
  கேள்விகள் பிரமாதம். அதற்கு பதில்களோ அதை விடப் பிரமாதம்.....21 ஒரு நாள் போதாது என்று எண்ணுகிறேன் ,,,,
  நன்றி/////

  21 நாட்கள் போதாது எனும் நிலையில், தொடர்வது குறித்து, மாணவர்களின் சாய்ஸிற்கே விட்டு விடுவேன்!

  ReplyDelete
 20. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  வர.. வர.. உங்களுக்கு இளமை திரும்பிக்கிட்டே இருக்குன்னு நினைக்கிறேன்..!
  தலைப்பு வைக்குறது எப்படீன்றதையும் உங்ககிட்ட கத்துக்கணும் போலிருக்கு..!
  கொல்றீங்க..!!!/////

  எனக்கு எப்போது வயதானது?

  நவீன மார்க்கண்டேயன் நான். வரத்தை பழநியப்பனிடம் இருந்து வாங்கி வந்திருக்கிறேன். மனதால் என்னுடைய வயது என்றுமே 21 தான்! அதனால்தான் என்னால் உங்களுடன் விளையாட முடிகிறது. உங்களுடன் சேர்ந்து உங்கள் வயசிற்கு உரிய அனைத்தையும் ரசிக்க முடிகிறது!
  சரிதானா தமிழரே?

  ReplyDelete
 21. விளையாட்டாக நல்ல கருத்தை கூறிய பாடல். வாலி அவர்கள் வாய்ப்புகள் இன்றி தளர்வுற்றபோது கவிஞரின் ”நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் பாதையில் அமைதியை தேடு.உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்த நிம்மதி நாடு ”வரிகளால் தெம்படைந்தாக கூறிவுள்ளார்.அதுவும் ஒரு Affirmation தான். அதுபோல் இப்பாடலும் எத்தனையோ பேருக்கு மனத்தளர்ச்சியை நீக்கும்.அதனால் விருது உங்களுககு உண்டு.

  ReplyDelete
 22. //////Ram said...
  Dear sir,
  Thanks for answer all this questions and answer. I heard the proverb that if we keep learning from our own mistakes we cont learn anythihg, learn from others mistakes u will excell in your life. so its better to keep watching the questions and answers.//////

  எப்படியோ கற்றுணர்ந்தால் சரிதான் நண்பரே! நன்றி!

  ReplyDelete
 23. /////krish said...
  விளையாட்டாக நல்ல கருத்தை கூறிய பாடல். வாலி அவர்கள் வாய்ப்புகள் இன்றி தளர்வுற்றபோது கவிஞரின் ”நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் பாதையில் அமைதியை தேடு.உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்த நிம்மதி நாடு ”வரிகளால் தெம்படைந்தாக கூறிவுள்ளார்.அதுவும் ஒரு Affirmation தான். அதுபோல் இப்பாடலும் எத்தனையோ பேருக்கு மனத்தளர்ச்சியை நீக்கும்.அதனால் விருது உங்களுககு உண்டு.//////

  எனக்கு விருது என்பது நியாமில்லாத செயல்! எழுதிய கவிஞருக்குத்தான் விருது கொடுக்கவேண்டும். பாடலைக் கையாண்டவர்கள் அத்தனை பேருக்கும் விருது என்றால்? விருதுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்!

  ReplyDelete
 24. போகப்போக கவர்ச்சி அட்டைப்படம் கூட போடுவீங்க போலேருக்கே சார்...பழனியப்பன்கிட்டே வாங்கின வரம் எந்த அளவுக்கு போகுமோ?
  எது வரை போகுமோ அதுவரை போகட்டும்....
  பழனியப்பன் என்றவுடன் எனக்கு பசுமையாக நினைவுக்கு வருவது எனது பேராசிரியர்தான்.நாங்கள் கல்லூரியில் நான்காம் ஆண்டு முடித்தபோது அவர் சேர்ந்து ஓய்வு பெற்றார்.(கிட்டத்தட்ட 60 வயது..)
  ஆனால் அந்த நாளிலே எங்கள் கல்லூரியிலேயே மிகவும் உற்சாகத்துடன் கூடிய வாலிபராக நான் பார்த்தது அவரைத்தான்.(சரியான ஆளாப்பார்த்துதான் வரம் வாங்கிருக்கீங்க.)
  so for I cant come across such a great personality.....
  வாலிபத்துக்கு தடை போடும் சக்தி வயதுக்கு இல்லை....
  மார்க்கண்டேயன் 2010க்கு வாழ்த்துக்கள் ..(வாழ்த்த வயது இல்லை என்று சொன்னால் உங்கள் வயது அதிகமாகிவிடும்..அதனால் வாழ்த்துகிறேன்..)

  ReplyDelete
 25. வணக்கம் ஐயா..

  நல்ல முயற்சி. தங்களுடய இந்த முயற்சி முழுமையாக உரியவர்களுக்கு சென்று பயனடய எல்லாம் வல்லவனை வேண்டுகின்றேன்.

  தனுஜாவின் கேள்விக்கு அளித்துள்ள பதில் உள்ள image எந்த மென்பொருளின் screen shot. என்று அடியேன் தெரிந்துகொள்ள விருப்பம்...

  ReplyDelete
 26. //////minorwall said...
  போகப்போக கவர்ச்சி அட்டைப்படம் கூட போடுவீங்க போலேருக்கே சார்...பழனியப்பன்கிட்டே வாங்கின வரம் எந்த அளவுக்கு போகுமோ?
  எது வரை போகுமோ அதுவரை போகட்டும்....
  பழனியப்பன் என்றவுடன் எனக்கு பசுமையாக நினைவுக்கு வருவது எனது பேராசிரியர்தான்.நாங்கள் கல்லூரியில் நான்காம் ஆண்டு முடித்தபோது அவர் சேர்ந்து ஓய்வு பெற்றார்.(கிட்டத்தட்ட 60 வயது..)
  ஆனால் அந்த நாளிலே எங்கள் கல்லூரியிலேயே மிகவும் உற்சாகத்துடன் கூடிய வாலிபராக நான் பார்த்தது அவரைத்தான்.(சரியான ஆளாப்பார்த்துதான் வரம் வாங்கிருக்கீங்க.)
  so for I cant come across such a great personality.....
  வாலிபத்துக்கு தடை போடும் சக்தி வயதுக்கு இல்லை....
  மார்க்கண்டேயன் 2010க்கு வாழ்த்துக்கள் ..(வாழ்த்த வயது இல்லை என்று சொன்னால் உங்கள் வயது அதிகமாகிவிடும்..அதனால் வாழ்த்துகிறேன்..)/////

  அதெல்லாம் போடமாட்டேன். வகுப்பறையின் கண்ணியம் முக்கியம்/கடைப்பிடிக்கப்படும். பாடத்தில் வரும் செய்திதான் தலைப்பாகி உள்ளது. அதைப் பலரும் கவனிக்கவில்லை மைனர்! உங்களையும் சேர்த்து! :-((((

  ReplyDelete
 27. ////Success said...
  வணக்கம் ஐயா..
  நல்ல முயற்சி. தங்களுடய இந்த முயற்சி முழுமையாக உரியவர்களுக்கு சென்று பயனடய எல்லாம் வல்லவனை வேண்டுகின்றேன்.
  தனுஜாவின் கேள்விக்கு அளித்துள்ள பதில் உள்ள image எந்த மென்பொருளின் screen shot. என்று அடியேன் தெரிந்துகொள்ள விருப்பம்...////

  மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் கொடுத்த மென் பொருள் அது. அதை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான சுட்டி பதிவின் கீழ்ப்பகுதியில் நிரந்தரமாக உள்ளது.

  ReplyDelete
 28. மிகவும் சுவாரசியமாக பதில் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 29. //////Dr.Vidhya said...
  மிகவும் சுவாரசியமாக பதில் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா./////

  ஜோதிடம் கடினமானது. அதை அப்படியே எழுதினால், நிறையப் பேர்களுக்குக் கசக்கும். ஆகவே தேன் (சுவாரசியம்) கலந்து கொடுக்கிறேன். மருத்துவரான உங்களுக்கு இதைச் சொல்ல வேண்டுமா என்ன? நன்றி சகோதரி!

  ReplyDelete
 30. அருமை அருமை அருமை,வேறு வார்த்தைகள் இல்லை.
  Thanks correct setting in Astro Vision software.

  ReplyDelete
 31. Dear Sir,

  Thanks for the clarifications.

  Balakumaran

  ReplyDelete
 32. ////சிங்கைசூரி said...
  அருமை அருமை அருமை,வேறு வார்த்தைகள் இல்லை.
  Thanks correct setting in Astro Vision software./////

  நல்லது.நன்றி!

  ReplyDelete
 33. /////KUMARAN said...
  Dear Sir,
  Thanks for the clarifications.
  Balakumaran////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

  ReplyDelete
 34. வாத்தியார் ஐயா,
  ஏன் தமிழ் நாட்டுக்காரங்கள் ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதில் விரும்பிரார்கள்?
  அதை பார்த்தா தமிழ் என்கிற கயிரால ஆங்கிலத்த தூக்கில தொங்கவிட்ட மாதிரி இருக்கு ஐயா.

  ReplyDelete
 35. ஆசானே !!!

  "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் "!

  எம்பெருமான் "மாயாகண்ணனுக்கு உற்ற தாய் ஆக யசோதா" கிடைத்தது போல

  "ஆயகலைகள் அறுபத்திநான்கு க்கு அன்னையாக சரஸ்வதி" கிடைத்தது போல

  "செல்வதிக்கே என்று அன்னையாக லக்ஷ்மி " கிடைத்தது போல

  "வீரதிக்கே என்று அன்னையாக சக்தி " கிடைத்தது போல

  இந்து மதத்திற்கு மூலகருவாக " தாய்தந்தையர் " கிடைத்தது போல

  எம்பெருமான் "இராமனுக்கு உற்ற தந்தையாக தசரதன்" கிடைத்தது போல

  "அர்சுனனுக்கு என்றே ஒரு பார்த்தசாரதி" கிடைத்தது போல

  "பஞ்சபாண்டவருக்கு குருவாக துரோனாச்சாரியார் " கிடைத்தது போல

  "கர்ணனுக்கு நல்ல நண்பனாக துரியோதனன்" கிடைத்தது போல

  "இலஷ்மனனுக்கு உயிரினும் மேலான அண்ணன் இராமன்" கிடைத்தது போல

  "இராமனுக்கு உடன்பிறவாத் தம்பியாக குகன் " கிடைத்தது போல

  "எம்பெருமான் முருக கடவிலுக்கு சிறந்த தளபதியாக வீரபாகு " கிடைத்தது போல

  எம்தாயர் தமயந்திக்கு ஏற்ற கணவன் ஆகநலன்" கிடைத்தது போல

  "சத்யவான் க்கு ஏற்ற மனைவியாக சாவித்திரி " கிடைத்தது போல

  " மாயா கண்ணனுக்கு ஏற்ற தோழியாக ராதா" கிடைத்தது போல

  " பெற்றோர்க்கு சிறந்தமகன் ஆக மார்கண்டேச்வரன் கிடைத்தது போல

  "இறை (வன்) பக்திக்கு என்றே பிறந்த பிரகலாதன் கிடைத்தது போல

  "ஏகபத்தினி விரததிர்க்கே என்றே பிறந்த சீதாராமன் " கிடைத்தது போல

  கவிக்கே என்று "கம்பன்" கிடைத்தது போல

  "அல்லிக்கே உரித்தான சந்திரன்" கிடைத்தது போல

  அனைத்து உயிர்களுக்கு, உயிர் ஜீவன் ஆக" சூரியன்" கிடைத்தது போல

  "தர்ம சாஸ்ரதிக்கு மனு " கிடைத்தது போல

  சாணக்கிய தந்திரதிக்கு சாணக்கியர் கிடைத்தது போல

  காதலுக்கே என்றே " தேவதாஸ் பார்வதி " கிடைத்தது போல

  விஞ்ஞான உலகிற்கு தந்தை ஆக கலிலியோ " கிடைத்தது போல

  மேலும் ,

  ஒரு மகானின் பாடல் , நவரத்தினத்தால் எழுத படவேண்டிய நவரத்தின பாடல் வரிகள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  உற்ற தாயும் நீயே!

  உற்ற தந்தையும் நீயே!

  உற்ற மாமியும் நீயே!

  உற்ற மாமனும் நீயே!

  என்பன போல

  அடியேனின் அறியாமை இருளை போக்க வந்த, அப்பனுக்கே ( சிவபெருமானுக்கே ) பாடம் சொன்ன சுப்பையாவின் பெயரை உடைய எம் குருநாதருக்கு (ஆர்தார்த்தமான வணக்கம் ) மானசிகமான நமஸ்காரம் !!!!!

  ReplyDelete
 36. வாத்தியார்க்கு என்றே கண்ணன் கிடைத்தது போல‌
  கண்ணனுக்கேற்ற வாத்தியார் கிடைத்தது போல‌
  பின்னூட்டத்திர்க்கு ஒரு புலவர் கிடைத்தது போல‌
  புலவருக்கேற்ற கண்ணன் கிடைத்தது போல‌

  எல்லோருக்கும் எல்லா ந‌ல‌மும் ஆங்கில‌ப் புத்தாண்டு 2010ல் கிடைக்கட்டும்
  என்று முன்கூட்டியே பின்னூட்ட‌ம் இடும் அன்ப‌ன்

  கேஎம்ஆர்.
  கிருஷ்ண‌ன்

  ReplyDelete
 37. /////ஈழத்துப் புயல் said...
  வாத்தியார் ஐயா,
  ஏன் தமிழ் நாட்டுக்காரங்கள் ஆங்கிலத்தை தமிழில் எழுதுவதில் விரும்பிரார்கள்?
  அதை பார்த்தா தமிழ் என்கிற கயிரால ஆங்கிலத்த தூக்கில தொங்கவிட்ட மாதிரி இருக்கு ஐயா.////

  ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்காரர்கலையும் சொல்லாதீர்கள். சிலர் மட்டும் அப்படி எழுதுகிறார்கள். தமிழில் தட்டச்சும் முறை அவர்களுக்குத் தெரியாததும், தெரிந்து கொள்ள நேரமில்லாததுமே அதற்குக் காரணமாகும்!

  ReplyDelete
 38. kannan said...
  ஆசானே !!!
  "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் "!
  எம்பெருமான் "மாயாகண்ணனுக்கு உற்ற தாய் ஆக யசோதா" கிடைத்தது போல
  "ஆயகலைகள் அறுபத்திநான்குக்கு அன்னையாக சரஸ்வதி" கிடைத்தது போல
  "செல்வத்திற்கு என்று அன்னையாக லக்ஷ்மி " கிடைத்தது போல
  "வீரத்திற்கு என்று அன்னையாக சக்தி " கிடைத்தது போல
  இந்து மதத்திற்கு மூலகருவாக " தாய்தந்தையர் " கிடைத்தது போல
  எம்பெருமான் "இராமனுக்கு உற்ற தந்தையாக தசரதன்" கிடைத்தது போல
  "அர்சுனனுக்கு என்றே ஒரு பார்த்தசாரதி" கிடைத்தது போல
  "பஞ்சபாண்டவருக்கு குருவாக துரோனாச்சாரியார் " கிடைத்தது போல
  "கர்ணனுக்கு நல்ல நண்பனாக துரியோதனன்" கிடைத்தது போல
  "இலஷ்மனனுக்கு உயிரினும் மேலான அண்ணன் இராமன்" கிடைத்தது போல
  "இராமனுக்கு உடன்பிறவாத் தம்பியாக குகன் " கிடைத்தது போல
  "எம்பெருமான் முருக கடவிலுக்கு சிறந்த தளபதியாக வீரபாகு " கிடைத்தது போல
  எம்தாயர் தமயந்திக்கு ஏற்ற கணவன் ஆகநலன்" கிடைத்தது போல
  "சத்யவான் க்கு ஏற்ற மனைவியாக சாவித்திரி " கிடைத்தது போல
  " மாயா கண்ணனுக்கு ஏற்ற தோழியாக ராதா" கிடைத்தது போல
  " பெற்றோர்க்கு சிறந்தமகன் ஆக மார்கண்டேச்வரன் கிடைத்தது போல
  "இறை (வன்) பக்திக்கு என்றே பிறந்த பிரகலாதன் கிடைத்தது போல
  "ஏகபத்தினி விரததிர்க்கே என்றே பிறந்த சீதாராமன் " கிடைத்தது போல
  கவிக்கே என்று "கம்பன்" கிடைத்தது போல
  "அல்லிக்கே உரித்தான சந்திரன்" கிடைத்தது போல
  அனைத்து உயிர்களுக்கு, உயிர் ஜீவன் ஆக" சூரியன்" கிடைத்தது போல
  "தர்ம சாஸ்ரதிக்கு மனு " கிடைத்தது போல
  சாணக்கிய தந்திரதிக்கு சாணக்கியர் கிடைத்தது போல
  காதலுக்கே என்றே " தேவதாஸ் பார்வதி " கிடைத்தது போல
  விஞ்ஞான உலகிற்கு தந்தை ஆக கலிலியோ " கிடைத்தது போல
  மேலும் ,
  ஒரு மகானின் பாடல் , நவரத்தினத்தால் எழுத படவேண்டிய நவரத்தின பாடல் வரிகள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
  உற்ற தாயும் நீயே!
  உற்ற தந்தையும் நீயே!
  உற்ற மாமியும் நீயே!
  உற்ற மாமனும் நீயே!
  என்பன போல
  அடியேனின் அறியாமை இருளை போக்க வந்த, அப்பனுக்கே ( சிவபெருமானுக்கே ) பாடம் சொன்ன சுப்பையாவின் பெயரை உடைய எம் குருநாதருக்கு (ஆர்தார்த்தமான வணக்கம் ) மானசிகமான நமஸ்காரம் !!!!!///////

  பதிவு உலகத்தில் இதற்குப் பெயர் ஜல்லி அடித்தல்: முதுகு சொறிதல்
  நான் எளியவன். நீங்கள் கூறியுள்ள எதற்குமே நான் தகுதியில்லாதவன். ஒரு வேண்டுகோள்; இப்படியெல்லாம் தினமும் எழுதி, அடியேனைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்வதற்கு முயற்சிக்க வேண்டாம்.

  நீங்கள் எழுதிய வரிகளைத் தகுதியுள்ள வேறு யாருக்காவது சமர்ப்பியுங்கள்.
  அதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்:

  கமலஹாசனுக்கு ஒரு கிரேசி மோகன் கிடைத்ததுபோல
  விகடனுக்கு ஒரு மதன் கிடைத்தது போல
  தினமணிக்கு கார்டூனிஸ்ட் மதி கிடைத்தது போல
  பிரபுதேவாவிற்கு நயன்தாரா கிடைத்ததைப்போல
  ஏஆர். ரஹ்மானுக்கு, பாடகர் ஹரிஹரன் கிடைத்ததைப்போல
  ஜி.கே வாசனுக்குத் தொண்டர்கள் கிடைத்ததைப்போல!

  ReplyDelete
 39. /////kmr.krishnan said...
  வாத்தியார்க்கு என்றே கண்ணன் கிடைத்தது போல‌
  கண்ணனுக்கேற்ற வாத்தியார் கிடைத்தது போல‌
  பின்னூட்டத்திர்க்கு ஒரு புலவர் கிடைத்தது போல‌
  புலவருக்கேற்ற கண்ணன் கிடைத்தது போல‌

  :-(((((((((((((((

  எல்லோருக்கும் எல்லா ந‌ல‌மும் ஆங்கில‌ப் புத்தாண்டு 2010ல் கிடைக்கட்டும்
  என்று முன்கூட்டியே பின்னூட்ட‌ம் இடும் அன்ப‌ன்
  கேஎம்ஆர்.
  கிருஷ்ண‌ன்////////

  நன்றி கிருஷ்ணன் சார். உங்களுக்கும் வகுப்பறை சக மாணவர்கள், மற்றும் வாத்தியார் சார்பில் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 40. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
  மிகவும் அருமை கேள்விகளும் அதற்கானப் பதில்களும்.
  இது,

  ReplyDelete
 41. ////rame said...
  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
  மிகவும் அருமை கேள்விகளும் அதற்கானப் பதில்களும்.
  இது,////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 42. ஜாதகத்தில் ஐந்தாம் வீடு முற்பிறவியைக் குறிக்கும். பன்னிரெண்டாம் வீடு அடுத்த பிறவியைக் குறிக்கும். அந்த வீட்டில் (அதாவது 12ல்) கேது இருந்தால் அடுத்த பிறவி இல்லையென்பார்கள். படித்திருக்கிறேன்.

  ஆனால் அனுபவம் இல்லை; அனுபவித்ததில்லை.உறுதியாகச் சொல்ல முடியவில்லை:-))))

  Ungal Nagaichuvaiunarvukku oru Azhagana eduthukaatu.

  Anbudan,
  Sara,CMB

  ReplyDelete
 43. /////R.Saravanakumar said...
  ஜாதகத்தில் ஐந்தாம் வீடு முற்பிறவியைக் குறிக்கும். பன்னிரெண்டாம் வீடு அடுத்த பிறவியைக் குறிக்கும். அந்த வீட்டில் (அதாவது 12ல்) கேது இருந்தால் அடுத்த பிறவி இல்லையென்பார்கள். படித்திருக்கிறேன்.
  ஆனால் அனுபவம் இல்லை; அனுபவித்ததில்லை.உறுதியாகச் சொல்ல முடியவில்லை:-))))
  Ungal Nagaichuvaiunarvukku oru Azhagana eduthukaatu.
  Anbudan,
  Sara,CMB/////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com