மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.12.09

Doubts: கேள்வி பதில் பகுதி இரண்டு!

கண்மணிகளுக்கு வாத்தியாரின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
------------------------------------------------------

..................................................................................................................
Doubts: கேள்வி பதில் பகுதி இரண்டு!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் இரண்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email no.4
இளங்கோசீனிவாசன்

அன்புள்ள வாத்தியார் ஐயா,

அடியேனின் சந்தேகம்.

Chhatra யோகம்: இந்த யோகம் பற்றி Google ஆண்டவரிடம் கேட்ட பொழுது மிஞ்சியது குழப்பம் தான்.
இது குறித்த விளக்கம் http://www.indiadivine.org/audarya/vedic-astrology-jyotisha/311012-good-article-gmy-dr-g-k-goel.html என்கிற இணைய தளத்தில் உள்ளதாவது, லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு வரை கிரகங்கள் வரிசையாக இருந்தால் அது Nauka yoga என்று உள்ளது. மேலும் ஏழாம் வீடு முதல் லக்கினம் வரை அனைத்து கிரகங்களும் வரிசையாக இருந்தால் அது Chhatra யோகா என குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தாங்கள் மேலும் விளக்க வேண்டுகிறேன்.
நன்றி,
இளங்கோ

Chhatra Yoga - குடை யோகம் யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். யோகத்தைத் தரும்.

Nauka Yoga - படகு யோகம்
யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். ஆனால் 7ஆம் இடத்தில் நிச்சயம் ஒரு கிரகம் வேண்டும் இருக்க வேண்டும் என்பது இந்த யோகத்தின் விதி.

அதனால் இது Chhatra Yoga யோகத்தில் இருந்து வேறுபடும்.
விளக்கம் போதுமா
?
---------------------------------------------
email no.5
Mrs. உஷா சுரேஷ்
அன்புள்ள ஆசிரியர்க்கு,
வணக்கம்.
தாங்களின் வகுப்பில் சேர்ந்தப் பிறகு, ஜோதிட வல்லுனர்களான ராமன்,ராவ் ஆகியோரின் புத்தங்களை வாங்கி உள்ளேன். அதை படித்தபின் எனது ஜோதிட சந்தேங்கள் மேலும் குழப்பமாகிவிட்டது.
எனது சந்தேங்கள் அஷ்டவர்க்கம், சட பலம் ( Sad bala ), பாவ பலம் சம்பந்தப்பட்டது.

When the Sarva Astavarga paral of a house is very less ( 19 paral ) , that house is having 500 Bhava balam. Further when a planet is having four paral in astavarga, while it is having more than 10 paral/rupa in Sad bala. On this circumstance how to arrive a conclusinon about a planet or a Bhava. Will you please differentiate the above balas for better understanding.


அஷ்டவர்க்கம், சட் பலம், பாவ பலம் என்பது நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்,ஜி, ராமச்சந்திரன், ஜெமினி கணேசன் ஆகியவர்களின் நடிப்பைப் போன்று தனித்தன்மைகள் உடையவை. யாருடைய படங்களைப் பார்ப்பது என்றால், உங்களுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவருடைய படங்களைப் பாருங்கள். அதைபோல உங்களுக்குக் கிரகங்களின் வலிமையைத் தெரிந்து கொள்ள எந்த வழி சுலபமாக இருக்கிறதோ, அதில் செல்லுங்கள். மூன்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அஷ்டவர்க்கம்தான் சுலபமானது. அதானால்தான் அதையே நானும் கடைப்பிடிக்கிறேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.
நீங்கள் சொல்லும் சட்பலத்தின் அமைப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.

அதைக் கணித்துப் பலனை அறிந்து கொள்ள உங்களுக்கு நேரமும், மனத்தெம்பும் இருந்தால், அதை நீங்கள் கடைப் பிடிக்கலாம்.
ஆனால் அதையும், அஷ்டகவர்க்கத்தையும், ஒத்துப் பார்த்துக் குழம்பாதீர்கள். ஒன்று அலோபதி மருத்துவம். ஒன்று ஹோமியோபதி மருத்துவம். அர்த்தமாகியதா சகோதரி?

SHADBALA- சட் என்றால் ஆறு என்று பொருள்.
சட்பலம் என்பது கீழே உள்ள ஆறின் கூட்டல் தொகை!


1. STHANA BALA

This is the positional strength of a planet.


2. DIG BALA
Each planet is powerful when it is located in a certain direction. Dig Bala means directional strength. Example: The Sun and Mars are powerful in the South.


3. KALA BALA

This has to do with the strength which a planet has because of the time of the day. It is strength of time. example: Moon, Saturn and Mars are powerful during midnight


4. CHESTA BALA
Planets which are relatively slow (among them retrograde planets) get a high Chesta Bala value. Planets which are relatively fast get a low chesta bala value.


5. NAISARGIKA BALA

Each planet gets a certain amount of Shashtiamsas according to the luminosity it has. Because the Sun is the brightest planet it is given 60 Shashtiamsas. Saturn is the faintest and gets 8.57 Shashtiamsas. This means that the amount of Shashtiamsas a planet receives according to Naisargika Bala is in every chart the same.

6. DRIK BALA
Drik Bala is called aspect strength. If a planet is aspected by benefics the planet receives a positive Shashtiamsa value. If a planet is aspected by malefics than it gets negative Drik Bala points.


உங்களுக்குக் காய்ச்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு மருத்துவரிடம் காட்டினால் இரண்டு விதமான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். ஒருவர் Dolobar 650 சாப்பிடச்சொல்வார். இன்னொருவர் calpol சாப்பிடச்சொல்வார். ஆகவே ஒருவரிடம் காண்பித்து மருந்து சாப்பிடுவதுதான் நல்லது. இல்லை இரண்டு மூன்று பேர்களிடம் காட்டுவேன் என்றால், அது உங்கள் விருப்பம்.
------------------------------------------------
email No.6
P.Prakshkumar, Pollachi

What is the meaning for VAKRAM?
which planet VAKRAM position is good?

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் வக்கிரகதியில் இயங்கைக்கூடியவை. அதாவது பின்புறச்சுற்றில் இயங்குவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்து, பூமியின் சுழற்சியால், இருக்கும் இடத்தைவிட்டுப் பின்புறப்பாகைகளில் சுழலக் கூடியவை. அது வக்கிரகதி எனப்படும்

ராகுவும், கேதுவும் எப்போதுமே பின்புறமாகத்தான் சுழலக்கூடியவை

வக்கிரகதியில் இருக்கும் கிரகங்கள் பொதுவாக நன்மையைச் செய்யாது. சுப கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் உரிய பலனைத் தராது.

தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத்
தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும். ஜாதகன் பல வழிகளிலும் அவதிப்பட நேரிடும். தப்பித்து ஓட முடியாது. அவதிப்பட்டே ஆக வேண்டும்.
---------------------------------------------

email No.7
சேகர் வெங்கடேசன்

மிக நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி. என்னோடைய சந்தேகங்கள்

30க்கும் அதிக பரல்கள் இருக்கும் இடங்களில் யாரும் அமரவில்லை என்றால் ( அதன் அதிபதி எப்படி இருந்தாலும்) குறைந்த பட்சம் அந்த வீட்டின் பலம் எப்படி எடுத்துக் கொள்வது?

அந்த வீட்டின் பலன் நன்மைகள் உடையதாகவே இருக்கும்

உச்சமான கிரகம் சுயவர்கத்தில் குறைவான பரல் கொண்டிருந்தால் அதன் பலன் குறையுமா?

ஆமாம்! குறையும்! பின் எதற்காக சுயவர்க்கம்?

என் மகனுக்கு இரண்டாம் வீடான தனுசு ராசியில் புதன், சூரியன்மற்றும் சனி கூட்டாக உள்ளனர். கிரக யுத்தம் இல்லை. இரண்டாம் வீட்டில் சூரியன்மற்றும் சனி என்றால் பொருள் நாசம் என்று சொல்லி இருந்தீர்கள். இங்கே பரல் 30க்கும் மேலே. புதன் 7ம் சூரியன் 4ம் மற்றும் ராசி அதிபதியான சனி 3ம் பரல். அம்சத்தில் சூரியன் உச்சம். குரு 7ஆம் வீட்டில் லக்னத்தை பார்த்து. விலக்கு உண்டா?

30, 7, 4 என்று நீங்களே நல்ல எண்ணிக்கைகளையும், குருவின் பார்வை லக்கினத்தில் விழுவதையும் சொல்லிவிட்டு, சந்தேகம் கொண்டால் எப்படி? அமைப்புக்கள் நன்மைதருவதாகவே உள்ளன! கவலையை விடுங்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. பெற்றொர்களின் ஜாதகப்படிதான் குழந்தைகளுக்குப் பலன்கள் இருக்கும். அதனால்தான் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளன.

ஏழாம் பார்வையை தவிர மற்ற பார்வை உண்டா?

செவ்வாய், குரு,சனி ஆகிய கோள்களுக்கு (7ஆம் பார்வையுடன்) விஷேச பார்வைகள் உண்டு.பழைய பாடங்களைப் படியுங்கள்

மறைவிடங்களில் நன்மையை தரும் கிரகங்கள் மறையக்கூடாது எனும்போது தீய கிரகங்கள் மறைந்து போவது நல்லதில்லையா?லக்னாதிபதி கெடுதலை செய்ய மாட்டாரா?

சனி தீய கிரகம்தான். அதே நேரத்தில் அவர் ஆயுள்காரகன். கர்மகாரன். இரண்டு அமைச்சகங்கள் அவர் வசம் உள்ளன! இப்போது சொல்லுங்கள் அவர் மறைவது நல்லதா?

சந்தேகங்களை உங்களிடம் கேட்காமல் யாரிடம் உரிமையாக கேட்க முடியும்? நன்றி.

ஆகா, கேளுங்கள். ஆனால் சொந்த ஜாதகத்தை வைத்து யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம்!
----------------------------
email No.8
சங்கர் நாராயணன்

ஐயா!

1 . வக்கிரம் ஆன கிரகங்கள் பற்றி ........2 . ஆட்சி கிரகம் வக்கிரம் ஆனால்.......

email No.6ல் இதே கேள்வி. பதில் அளித்துள்ளேன். அதைப் படியுங்கள்

3 . சனி பாதிப்பை தவிர்க்க கருப்பு ஆடை அணிவதும், குருவிற்கு மஞ்சள் ஆடை அணிவதும் எந்த அளவிற்கு சரி ?

பாதிப்பைத் தவிர்க்க என்று ஏன் எதிர்மறையான சிந்தனை? அக்கிரகங்களால் நன்மை அடைய என்று சொல்லுங்கள். கிடைக்கலாம். எனக்கு அனுபவம் இல்லை!

4 . சத்தத்தில் சதாசிவமும் சித்தத்தில் சிவமயமும் என சாதாரண மனிதனால் இருக்க (ஜாதகம் பூர்வபுண்ணியம் தவிர்த்து) வழி?

ஏன் வழி இல்லை? எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம். மனதைக் கட்டுப்படுத்தினால், சதாசிவம் வசப்படும். சிவமயம் தேடி வந்து குடி கொள்ளும்.

5 . கிறுக்குத்தனமாக வாழ்வது, கேட்பது அறியாமைதானே! அவர்கள் ஞானிகளா?

அவரவர் வழி அவரவருக்கு உயர்வானது. அதைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இல்லை. கேட்டால் சச்சரவுதான் மிஞ்சும்.
------------------------------------
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

33 comments:

  1. ஐயா!!!

    எப்படி பந்து போட்டாலும் ஒரே 4 and 6 தான்
    (கலக்கிற சந்துரு கலக்கிற )

    எங்கே போனார்கள் எமது ஆஸ்தான பந்து வீட்சாளர்கள்

    நன்றி ஐயா !

    ReplyDelete
  2. ///kannan said...
    ஐயா!!!
    எப்படி பந்து போட்டாலும் ஒரே 4 and 6 தான்
    (கலக்கிற சந்துரு கலக்கிற )
    எங்கே போனார்கள் எமது ஆஸ்தான பந்து வீட்சாளர்கள்
    நன்றி ஐயா !////

    அடுத்தடுத்த ஓவர்களில் வருவார்கள். பொறுமையாக இருங்கள்
    எப்படியும் வாத்தியாரை அவுட்டாக்கிப் பார்க்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம் - இல்லையா?:-))))))
    சந்துரு யார் சாமி?

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    இறைத் தூதரின் பிறந்த நன் நாள்
    வாழ்த்துக்கள் அட்டை அருமை
    நன்றி!

    வினா விடை அங்கம் மிகவும் அருமை
    நான் இந்த விடைகளை படித்து
    வந்தாலே போதும் போலும்.
    என் போன்றோரை இன்னும் நுண்ணியப்
    படுத்துகிறது.
    நன்றிகள்!

    கவியரசு கண்ணதாசன் அவர்கள்
    எழுதிய ஏசு காவியம்
    மின்னணுவடிவில் தங்களிடம் இருக்குமா?
    இருந்தால் கிடைக்குமா?
    நன்றிகள் குருவே!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  4. அய்யா இனிய காலை வணக்கம்,
    அய்யா விளக்கங்கள் அருமை ,ஆனால் தாங்கள் அளித்த விளக்கத்தில் இருந்து சந்தேகம் அய்யா ....வக்கிரம் பெற்ற பாப கிரகங்கள் குரு போன்ற சுப கிரகத்தின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்கு துன்பத்தை அளிக்குமா?அவதி பட நேரிடுமா?
    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  5. சிவாஜி,எம்.ஜி.ஆர்,ஜெமினி பட உதாரணம் சூப்பர். என்னுடைய குழப்பம் நீங்கியது. ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதை விளக்கி என் நண்பர் கற்றுக் கொடுத்தார்.நீங்களும் அவ்வாறு செய்தால் மிகவும் நன்றாகயிருக்கும். கலக்குற சந்துரு எசியன் பெயிண்ட் விளம்பரம்.அதில் மாருதி காரை பழையதாக காட்டியதால் அந்நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.ஒரு பிரபலமான விளம்பரம். MBA மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ஒரு விளம்பரம்.You Tubeல் உள்ளது.

    ReplyDelete
  6. ////Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம், இறைத் தூதரின் பிறந்த நன் நாள்
    வாழ்த்துக்கள் அட்டை அருமை நன்றி!

    வினா விடை அங்கம் மிகவும் அருமை. நான் இந்த விடைகளை படித்து வந்தாலே போதும் போலும்.
    என் போன்றோரை இன்னும் நுண்ணியப் படுத்துகிறது.
    நன்றிகள்!

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஏசு காவியம்
    மின்னணுவடிவில் தங்களிடம் இருக்குமா? இருந்தால் கிடைக்குமா?
    நன்றிகள் குருவே! அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    இல்லை. என்னிடம் புத்தகம் மட்டுமே உள்ளது. புத்தகம் கடைகளில் கிடைக்கும்!

    ReplyDelete
  7. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    அய்யா விளக்கங்கள் அருமை ,ஆனால் தாங்கள் அளித்த விளக்கத்தில் இருந்து சந்தேகம் அய்யா ....வக்கிரம் பெற்ற பாப கிரகங்கள் குரு போன்ற சுப கிரகத்தின் பார்வை பெற்றாலும் ஜாதகனுக்கு துன்பத்தை அளிக்குமா?அவதி பட நேரிடுமா?
    நன்றி வணக்கம்.//////

    சுபக் கிரகங்களின் பார்வை பெற்றால் குறைகள் நீங்கிவிடும். நிவர்த்தியாகிவிடும்.

    ReplyDelete
  8. ////krish said...
    சிவாஜி,எம்.ஜி.ஆர்,ஜெமினி பட உதாரணம் சூப்பர். என்னுடைய குழப்பம் நீங்கியது. ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதை விளக்கி என் நண்பர் கற்றுக் கொடுத்தார்.நீங்களும் அவ்வாறு செய்தால் மிகவும் நன்றாகயிருக்கும். //////

    பாடம் எல்லாம் முடிந்த பிறகு. அடுத்த கட்டம் அதுதான். பொறுத்திருங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////கலக்குற சந்துரு எசியன் பெயிண்ட் விளம்பரம்.அதில் மாருதி காரை பழையதாக காட்டியதால் அந்நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.ஒரு பிரபலமான விளம்பரம். MBA மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ஒரு விளம்பரம்.You Tubeல் உள்ளது.//////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  9. எல்லா கேள்விகளுக்கும் "நச்"
    பதில்கள்.அசத்துறீங்க சாமி.
    தொடர்ந்து அசத்துங்கள்.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  10. ஐயா வணக்கம்

    ஆஹா, பேஷ் பேஷ் . இப்போதுதான் கலை கட்டுகிறது பள்ளிக்கூடம். தங்களுடைய வகுப்பறை பாடங்களில் 75 சதவீதம், கேள்வி பதிலில் உள்ள reference- இல் வந்துவிடும் போலுள்ளது. இந்த மாதிரி பாடங்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது. தொடரட்டும் தங்களது பணி.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. Sir,

    You Have told That Suyavargam Which has less than 4 will not give good results. But in Ex.C.M jayalalitha's Horoscope most of the planets are below 4. then how she had succeded

    ReplyDelete
  12. சிக்ஸரும் பெளண்டரியுமாக அடித்து வெளுத்துக் கட்டுகிறீர்கள்.மிகவும் அடிப்படைக் கேள்விகள் இல்லாமல் கொஞ்சம் பெரியவகுப்புக் கேள்விகளாக‌த்தான் மாணவர்கள் கேட்கிறார்கள் என்பது ஆறுதலாக உள்ள‌து.
    ஓர் அன்பர் அவுதர்யா இணையதளம் பற்றிக் கூறியுள்ளார். கீழ்க்காணும் இணையதளங்களும் உபாயோகமானவை.
    http://jayasreesaranathan.blogspot.com
    www.astrojyothi.com
    http;//www.laurabarat.org/free lessons.htm
    www.trsiyengar.com

    ReplyDelete
  13. /////thirunarayanan said...
    எல்லா கேள்விகளுக்கும் "நச்" பதில்கள்.அசத்துறீங்க சாமி.
    தொடர்ந்து அசத்துங்கள். நன்றி அய்யா.////

    இடையில் டீ பிரேக்கிற்குப் பதிலாக, சிற்றுண்டி பிரேக் வைத்துக்கொள்ளலாமா? ஸ்ரீரங்கம் புகழ் புளியோதரை
    கிடைக்குமா?

    ReplyDelete
  14. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    ஆஹா, பேஷ் பேஷ் . இப்போதுதான் களை கட்டுகிறது பள்ளிக்கூடம். தங்களுடைய வகுப்பறை பாடங்களில் 75 சதவீதம், கேள்வி பதிலில் உள்ள reference- இல் வந்துவிடும் போலுள்ளது. இந்த மாதிரி பாடங்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது. தொடரட்டும் தங்களது பணி.
    நன்றி
    வாழ்த்துக்கள்//////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////RameshVeluswami said...
    Sir,
    You Have told That Suyavargam Which has less than 4 will not give good results. But in Ex.C.M jayalalitha's Horoscope most of the planets are below 4. then how she had succeded/////

    அரசியல் தலைவர்களைப் பற்றி எழுதாமல் இருப்பது உசிதமானது. ஆகவே நோ கமெண்ட்ஸ்!

    ReplyDelete
  16. /////kmr.krishnan said...
    சிக்ஸரும் பெளண்டரியுமாக அடித்து வெளுத்துக் கட்டுகிறீர்கள்.மிகவும் அடிப்படைக் கேள்விகள் இல்லாமல் கொஞ்சம் பெரியவகுப்புக் கேள்விகளாக‌த்தான் மாணவர்கள் கேட்கிறார்கள் என்பது ஆறுதலாக உள்ள‌து.
    ஓர் அன்பர் அவுதர்யா இணையதளம் பற்றிக் கூறியுள்ளார். கீழ்க்காணும் இணையதளங்களும் உபாயோகமானவை.
    http://jayasreesaranathan.blogspot.com
    www.astrojyothi.com
    http;//www.laurabarat.org/free lessons.htm
    www.trsiyengar.com////

    Short Length Ballகளாக இல்லாமல் இருப்பதால் அடிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது:-)))
    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. /////Blogger Lans said...
    Thanks for your explanation sir! Happy christmas:)/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  18. ஐயா !

    ஜாதகம் கணி்க்கும் மென் பொருளில் வக்கிரம்-க்கு கீழ் கொடு்க்க பட்டுள்ள விளக்கம் குழப்பமாக உள்ளது.

    //
    ஜாதகத்தில் வக்கிரம் என்பது சூரியனுக்கு ஐந்து மற்றும் ஆறு மற்று ஏழாம் இடங்களில் கிரகங்கள் இருந்தால் அக்கிரகம் வக்கிரம் அடைந்துள்ளது என்று நூல்கள் குறிப்பிடுகின்றது வக்கிரம் அடைந்த கிரகம் உச்சம் அடைந்த கிரகத்திர்க்கு இணையான பலனை தரும்.//

    நன்றி
    Suresh

    ReplyDelete
  19. ////You Have told That Suyavargam Which has less than 4 will not give good results. But in Ex.C.M jayalalitha's Horoscope most of the planets are below 4. then how she had succeded/////

    இதற்கு பதில் சொல்லும் விதமாக அல்ல. பொதுவாக சொல்வதானால் அஷ்டக வர்கத்திற்கு அப்பாலும் பல விஷயங்கள் இருக்கின்றன. உதாரணம் ராஜயோகங்கள். பரல் குறைவாக இருந்தால், கிடைக்க வேண்டிய பலன் குறையலாம். தொடர்ந்து பதவியில் இருக்க முடியாமல் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க வேண்டி வரும்.

    ReplyDelete
  20. நான் படித்தவரை அல்லது எனக்கு தெரிந்த வரை ஷட் பலம் என்பது ஒரு கிரகத்தின் தனிப்பட்ட பலம். ஷட் பலம் அதிகம் உள்ள கிரகம் தனித்தே அதன் பலன்களைக் கொடுக்க முடியும். அஷ்டக வர்க பலம்/பரல் அதிகம் உள்ள கிரகம் மற்ற கிரகங்களுடன் இணைந்து (friendly/or well interact with other planets) ஒரு ஜாதகத்திற்கு பலன் கொடுப்பது. ஆக இரண்டும் வேறு வேறு.

    ReplyDelete
  21. உலக நண்பர்களுக்கு மனமார்ந்த கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
    இயேசு காவியம்




    "தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
    யூத நிலத்தினிலே
    சத்திய வேதம் நின்று நிலைத்தது
    தாரணி மீதினிலே!
    எத்தனை உண்மை வந்து பிறந்தது
    இயேசு பிறந்ததிலே!
    இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
    இயேசுவின் வார்த்தையிலே!

    மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
    என்பது சத்தியமே!
    புண்கள் இருக்கும் வரையில் மருந்து
    தேவை நித்தியமே!
    விண்ணர சமையும் உலகம் முழுவதும்
    இதுதான் தத்துவமே!
    எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
    இயேசுவை நம்புவமே!"
    - கண்ணதாசன்

    ReplyDelete
  22. /////Suresh said...
    ஐயா !
    ஜாதகம் கணி்க்கும் மென் பொருளில் வக்கிரம்-க்கு கீழ் கொடு்க்க பட்டுள்ள விளக்கம் குழப்பமாக உள்ளது.
    //
    ஜாதகத்தில் வக்கிரம் என்பது சூரியனுக்கு ஐந்து மற்றும் ஆறு மற்று ஏழாம் இடங்களில் கிரகங்கள் இருந்தால் அக்கிரகம் வக்கிரம் அடைந்துள்ளது என்று நூல்கள் குறிப்பிடுகின்றது வக்கிரம் அடைந்த கிரகம் உச்சம் அடைந்த கிரகத்திர்க்கு இணையான பலனை தரும்.//
    நன்றி
    Suresh/////

    அந்த கணிக்கும் பொருளிற்கான சுட்டியைக் கொடுங்கள். நானும் பார்க்கிறேன்!

    ReplyDelete
  23. /////ananth said...
    ////You Have told That Suyavargam Which has less than 4 will not give good results. But in Ex.C.M jayalalitha's Horoscope most of the planets are below 4. then how she had succeded/////
    இதற்கு பதில் சொல்லும் விதமாக அல்ல. பொதுவாக சொல்வதானால் அஷ்டக வர்கத்திற்கு அப்பாலும் பல விஷயங்கள் இருக்கின்றன. உதாரணம் ராஜயோகங்கள். பரல் குறைவாக இருந்தால், கிடைக்க வேண்டிய பலன் குறையலாம். தொடர்ந்து பதவியில் இருக்க முடியாமல் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்க வேண்டி வரும்.//////

    அவருடைய ஜாதகத்தில் வேறு பல நல்ல அம்சங்கள் உள்ளன. தற்சமயம் ராகு திசை நடப்பதுதான் உள்ள குறை! அதிலும், புத்திகள், அந்தரங்கள் மாறும்போது நிலமை மாறும்!

    ReplyDelete
  24. /////ananth said...
    நான் படித்தவரை அல்லது எனக்கு தெரிந்த வரை ஷட் பலம் என்பது ஒரு கிரகத்தின் தனிப்பட்ட பலம். ஷட் பலம் அதிகம் உள்ள கிரகம் தனித்தே அதன் பலன்களைக் கொடுக்க முடியும். அஷ்டக வர்க பலம்/பரல் அதிகம் உள்ள கிரகம் மற்ற கிரகங்களுடன் இணைந்து (friendly/or well interact with other planets) ஒரு ஜாதகத்திற்கு பலன் கொடுப்பது. ஆக இரண்டும் வேறு வேறு./////

    இரண்டும் மேன்மையானதுதான். ஷ்ட் பலம் ஆறு நிலைகளைவைத்து கணக்கிடப்படுகிறது. சுயவர்க்கம் 8 நிலைகளை வைத்துக் கணக்கிடப்படுகிறது! ஒருகிரகம், லக்கினத்தில் இருந்தும், மற்ற கிரகங்களில் இருந்து இருக்க வேண்டிய இடங்களை வைத்தும் அது இருக்க வேண்டிய இடத்தை வைத்தும் மதிப்பெண் கொடுக்கப்பெற்று, மொத்தம் எட்டு நிலைப்பாடுகளின் கூட்டு மதிப்புதான் சுயவர்க்கம். ஆகவே அதைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. எல்லாம் followerகளைப் பொறுத்தது.

    ஒருவருக்கு டி.எம்.எஸ்ஸின் பாடல்களைப் பிடிக்கும். ஒருவருக்கு எஸ்.பி.பியின் பாடல்களைப் படிக்கும்
    ஒருவருக்கு முகமத்ரஃபியின் பாடல்கள் உயிராக இருக்கும். இன்னொருவர் கிஷோர் குமார் பாடல்களுக்கு உயிரைக் கொடுப்பார். இதுவும் அப்படித்தான்!

    ReplyDelete
  25. /////கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...
    உலக நண்பர்களுக்கு மனமார்ந்த கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
    இயேசு காவியம்
    "தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
    யூத நிலத்தினிலே
    சத்திய வேதம் நின்று நிலைத்தது
    தாரணி மீதினிலே!
    எத்தனை உண்மை வந்து பிறந்தது
    இயேசு பிறந்ததிலே!
    இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
    இயேசுவின் வார்த்தையிலே!
    மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
    என்பது சத்தியமே!
    புண்கள் இருக்கும் வரையில் மருந்து
    தேவை நித்தியமே!
    விண்ணர சமையும் உலகம் முழுவதும்
    இதுதான் தத்துவமே!
    எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
    இயேசுவை நம்புவமே!"
    - கண்ணதாசன்/////

    ஆகா, கவயரசரின் வார்த்தைகளில் இயேசு பிரான் கண் முன் வந்து நிற்கிறார் சாமி!
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  26. ` ஊரார் கேள்விகளின் பதிலைப் படித்தால் தன் கேள்விக்கு பதில் தானே விளங்கும்.`..
    இது எப்பிடி இருக்கு.?...

    ReplyDelete
  27. அடிப்படையில் பாரத/இந்திய மக்கள் மனதில் ஆண்டவனைப் ப‌ற்றிய எண்ணமும் தேடலும் எப்போதுமே அடிநாதமாக ஒலித்துக்கொண்டே உள்ளது.விவேகானந்தர் கூறினார்:"எங்கள் நாட்டில் யாரேனும் வந்து,ஒற்றைக் காலில் 40 நாட்கள் நின்றால் கடவுள் காட்சி கொடுப்பார் என்று
    கூறினால், அவர் பின்னால் ஒற்றைக் காலில் நிற்க ஆயிரம் பேர் முன் வருவார்கள்.எங்கள் நாட்டில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் கூடத் தங்கள்
    தொழிலைத் துவ‌ங்கு முன் அத‌ற்கான‌ பிர‌த்யேக‌ தெய்வ‌ வ‌டிவ‌த்தை வ‌ண‌ங்கிவிட்டுத்தான் துவ‌ங்குவார்க‌ள்" இப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளிடையே ப‌ல‌ ம‌தங்கள், வழிபாட்டு முறைகள் தோன்றியும், பிற‌ நாட்டில் தோன்றிய மதங்கள் இங்கு செழித்து வள‌ரவும் வாய்ப்பு ஆயிற்று.ஆப்ரஹாமிக் மதங்கள், ம‌தத்தின் மூலமாக உலக அளவிலான ஒரே எதேச்சதிகார ஆட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மதமாற்றத்தைத் தீவரப்படுத்தி உள்ளார்கள்.அவர்களுக்குள் இதற்கான் போட்டியும் நிலவுகிறது. இந்தியா அளிக்கும் மத சுதந்திரம், தவறாகப் பயன்படுத்தப்படுகிற்து.இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் பாரதத்தின் பாரம்பரியமிக்க மதம்,கலாசாரம், கலை, பண்பாடு, நாகரிகம்,இசை,யோகம் இன்னபிற சுவடுகள் மேலை நாட்டு கவர்ச்சி வெள்ளத்தில் அடித்து சென்று விடாமல் இருக்க அந்த தேவகுமாரனின் அருளை வேண்டுவோமாக. ஆமென்!

    ReplyDelete
  28. பலப்பல விஷயங்கள் இப்போது மேலும் தெளிவாக புரிகிறது ஐயா...மிக்க நன்றி
    சேர்மராஜ்

    ReplyDelete
  29. ////minorwall said...
    ` ஊரார் கேள்விகளின் பதிலைப் படித்தால் தன் கேள்விக்கு பதில் தானே விளங்கும்.`..
    இது எப்படி இருக்கு.?...////

    பத்தவச்சிட்டீங்களே...மைனர்! இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  30. /////kmr.krishnan said...
    அடிப்படையில் பாரத/இந்திய மக்கள் மனதில் ஆண்டவனைப் ப‌ற்றிய எண்ணமும் தேடலும் எப்போதுமே அடிநாதமாக ஒலித்துக்கொண்டே உள்ளது.விவேகானந்தர் கூறினார்:"எங்கள் நாட்டில் யாரேனும் வந்து,ஒற்றைக் காலில் 40 நாட்கள் நின்றால் கடவுள் காட்சி கொடுப்பார் என்று
    கூறினால், அவர் பின்னால் ஒற்றைக் காலில் நிற்க ஆயிரம் பேர் முன் வருவார்கள்.எங்கள் நாட்டில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் கூடத் தங்கள்
    தொழிலைத் துவ‌ங்கு முன் அத‌ற்கான‌ பிர‌த்யேக‌ தெய்வ‌ வ‌டிவ‌த்தை வ‌ண‌ங்கிவிட்டுத்தான் துவ‌ங்குவார்க‌ள்" இப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளிடையே ப‌ல‌ ம‌தங்கள், வழிபாட்டு முறைகள் தோன்றியும், பிற‌ நாட்டில் தோன்றிய மதங்கள் இங்கு செழித்து வள‌ரவும் வாய்ப்பு ஆயிற்று.ஆப்ரஹாமிக் மதங்கள், ம‌தத்தின் மூலமாக உலக அளவிலான ஒரே எதேச்சதிகார ஆட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மதமாற்றத்தைத் தீவரப்படுத்தி உள்ளார்கள்.அவர்களுக்குள் இதற்கான் போட்டியும் நிலவுகிறது. இந்தியா அளிக்கும் மத சுதந்திரம், தவறாகப் பயன்படுத்தப்படுகிற்து.இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் பாரதத்தின் பாரம்பரியமிக்க மதம்,கலாசாரம், கலை, பண்பாடு, நாகரிகம்,இசை,யோகம் இன்னபிற சுவடுகள் மேலை நாட்டு கவர்ச்சி வெள்ளத்தில் அடித்து சென்று விடாமல் இருக்க அந்த தேவகுமாரனின் அருளை வேண்டுவோமாக. ஆமென்!/////

    ஆமாம், நானும் வேண்டுகிறேன்.ஆமென்!

    ReplyDelete
  31. /////tamiltemples said...
    பலப்பல விஷயங்கள் இப்போது மேலும் தெளிவாக புரிகிறது ஐயா...மிக்க நன்றி
    சேர்மராஜ்/////

    புரிந்தால் சரிதான். எனக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  32. superb..sir, you have lot of patience...It is practically impossible for any one to spend time on others questions..without any profit..

    This is a very great seva..u did for this group of people...

    you are a living legend...

    Thank you.

    ReplyDelete
  33. /////Self Realization said...
    superb..sir, you have lot of patience...It is practically impossible for any one to spend time on others questions..without any profit..
    This is a very great seva..u did for this group of people...
    you are a living legend...
    Thank you./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! காசு கொடுத்து வாங்க முடியாத ஒன்று எனக்கு இங்கே கிடைக்கிறது. அதனால்தான் தொடர்ந்து எழுதுகிறேன். அதன் பெயர்: ஆத்மதிருப்தி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com