மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.12.09

Where is God? எங்கேடா இருக்கிறார் கடவுள்?

..............................................................................................................

.....................................................................................................
Where is God? எங்கேடா இருக்கிறார் கடவுள்?

பத்து வயதுக் குழந்தை, தன் தந்தையிடம் பேச்சுக் கொடுத்தது.

"அப்பா....."

"என்னடா செல்லம்?"

"கடவுள் எங்கே இருக்கிறார் அப்பா?"

"ஏனடி செல்லம், கடவுளைத் தேடுகிறாய்?"

"கடவுளை ஒரு தடவையாவது பார்க்க வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது அப்பா!"

"நீ நன்றாகப் படிக்க வேண்டும். டீச்சர் கொடுக்கும் வீட்டுப் பாடங்களையெல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும். அப்பா, அம்மா பேச்சைத் தட்டக்கூடாது. காலையிலும் மாலையிலும் தவறாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்தால் நீ நல்ல பெண்ணாகிவிடுவாய். நல்ல பெண்ணாகி விட்டால் கடவுளே உன்னைப் பார்க்க வருவார்"

"சரி, இப்போது கடவுள் எங்கே இருக்கிறார் அப்பா?"

"கடவுள் சொர்க்கத்தில் இருக்கிறார்!"

"சொர்க்கம் எங்கே இருக்கிறது?"

அப்பா வானத்தை நோக்கி கைகளை உயர்த்திக் காட்டினார். குழந்தை விடவில்லை. தொடர்ந்து கேட்டது:

"சொர்க்கத்திற்கு எப்படிப் போக வேண்டும்? ஏரோப்பிளேனில் போக வேண்டுமா?"

"நாமாகப் போக முடியாது. கடவுள் அழைப்பு அனுப்புவார் அப்போதுதான் போக முடியும்" அப்பா ஒருவழியாகச் சமாளித்தார்.

குழந்தைவிடவில்லை. நச்சரிப்புத் தொடர்ந்தது.

"சொர்க்கத்தை யாரப்பா உருவாக்கினார்கள்? (who created heaven?)"

"கடவுள்தான் உருவாக்கினார்"

"சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் எங்கே அப்பா இருந்தார்?"

அப்பாவிற்கு அதிர்ச்சியாகிவிட்டது. அதோடு கோபமும் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

"அதையெல்லாம் பெரியவளானால் நீயே தெரிந்து கொள்வாய்! இப்போது போய் விளையாடு, போ! என்று அனுப்பிவைத்துவிட்டார்.

ஐந்து நிமிடம் அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று உணர்வு மேலிடப் பேச ஆரம்பித்தது.

"அப்பா நான் கண்டு பிடித்துவிட்டேன். நரகம் இருப்பதாகச் சொல்லுவீர்கள் அல்லவா? சொர்க்கத்தை உருவாக்கும் முன்பு கடவுள் அங்கேதான் இருந்திருக்க வேண்டும்."

அப்பா அசடு வழிய, வேறு வழி தெரியாமல் பதில் சொன்னார்.

"ஆமாம், அங்கேதான் இருந்திருப்பார்"

"நரகத்தை உருவாக்கியவர் யாரப்பா?"

"அதையும் கடவுள்தான் உருவாக்கினார்!"

"நரகத்தை உருவாக்கியது தவறில்லையா? ஏனப்பா கடவுள்கூட தவறுகளைச் செய்வாரா?"

"சில சமயம் செய்வார்" என்று சொல்லித் தன் குழந்தையை அனுப்பிவைத்த தந்தை தனக்குள் முணுமுனுத்துக் கொண்டார்" இந்தக் காலத்துப் பிள்ளைகளைச் சமாளிப்பது பெருங்கஷ்டம்”

இந்தக் காலம், அந்தக்காலம் என்று எதுவுமில்லை. குழந்தைகள் எப்போதும் குழந்தைகள்தான்!
=======================================================
சரி, சொல்ல வந்த செய்திக்கு வருவோம். சொர்க்கம், நரகம் எனும் அமைப்புக்கள் உள்ளனவா?

அதில் உண்மை இல்லை. மனிதன் தானாகக் கற்பனை செய்து கொண்டவை அவைகள்.

சொர்க்கம் நரகம் என்று எந்த அமைப்பும் இல்லை.

கடவுள் இருப்பது மட்டும் உண்மை!

அவரைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் அவர்!

earth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.

அதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
- அருணகிரி நாதர்
----------------------------------------------------------
உருவம் உடையவனாகவும்,
உருவம் இல்லாதவனாகவும்,
உள்ளவனாகவும்,
இல்லாதவனாகவும்,
மாற்றங்களுள்ளதாகவும்,
மலராகவும்,
ஒலியாகவும்,
ஒளியாகவும்,
கருப்பையின் கருவாகவும்,
அனைத்து ஜீவராசிகளின்
இயக்கத்திற்குரிய உயிராகவும்,
அடையும் நிலையாகவும்,
விதிக்கப்பட்டதாகவும்,
ஆசானாகவும்,
வந்து
அருள் செய்து
என்னை
ஆட்கொள்வாய்
குமரக் கடவுளே!
...........................................................
இறைவன் ஒருவன்தான். நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம். அருணகிரியார் குமரக்கடவுளின் வடிவமாக இறைவனை வணங்கினார். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாவுக்கரசர் போன்ற சிவபக்தர்கள் இறைவனைச் சிவ வடிவமாக வணங்கினார்கள்.

அதுபோல உங்களுக்குப் பிடித்த வடிவில் இறைவனை, எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்.

அல்லது இடக்காகக் கேள்விகள் கேட்டு வணங்காமல் இருந்தாலும் இருக்கலாம்.

அது உங்கள் சாய்ஸ்!

இறைவன் கருணை வடிவானவர். தன்னை வணங்குபவனுக்கும் அவர் அருள் செய்வார். வணங்காதவனுக்கும் அவர் அருள் செய்வார்.

இல்லை என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

அதனால்தான் அவரை எல்லாம் வல்ல இறைவன் (almighty) என்கிறோம். இல்லையென்றால் அவர் வெறும் mightyயாகத்தான் இருப்பார்!

அதிகம் படித்தவன்தான் இந்த விஷயத்தில் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவான்

பாமரன் தெளிவாக இருப்பான். அவனைக் கேட்டால், அவன் தீர்க்கமாகச் சொல்ல்வான்:

”கடவுள் எங்கும் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார்”

அந்தத் தெளிவு நமக்கு வர வேண்டும்!

வருமா?

யாருக்குத் தெரியும்? அது அவனவன் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது!

பணத் தேடலில் சிலரது வாழ்க்கையும், கூடலில் சிலரது வாழ்க்கையும் (என்ன கூடல் என்று இங்கே எழுத முடியாது. தெரிந்தவர்களுக்கு மட்டும் அது புரியட்டும்) எதற்கெடுத்தாலும் உரக்கக் குரல் கொடுப்பதில் சிலரது வாழ்க்கையும், சரக்கடிப்பதில் சிலரது வாழ்க்கையும் முடிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், ’அனைவரும் ஒருநாள் இறைவனை உணர்வார்கள்; அவன் தாள் பணிவார்கள்’ என்று எதிர்பார்க்க முடியாது.

அந்த நிலைப்பாட்டைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொன்னார்:

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீர் தணல் போல் எரியும் - செந்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

(உள்ளம் என்பது)
-----------------------------------------
நட்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

74 comments:

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்,

இனிய காலை வேலையில் இனிய பல கருத்துகளை கவிஅரசரின் இனிய வரிகலோடு வழங்கும் உங்கள் நடை படிப்பவர் நெஞ்சை கொள்ளை கொல்லும் என்பதில் அய்யம் ஏது ?சொர்கம் ?நரகம்?பற்றிய வரிகள் அருமை .......
நன்றி வணக்கம்

மதி said...

பதிவு மிக அருமை தூங்கினவர்களை தட்டி எழுப்புகிர பதிவு(ஆனால் தூங்கர மாதிரி நடிக்கரவங்களை எழுப்ப முடியாது-துர்ரதிஷ்ட்டமா இப்படி பட்டவர்கள்தான் அதிகம்)

பாடல் மிகமிக அருமை(எனக்கு பிடித்த பாடல்).

பதிவிர்க்கும் பாடலுக்கும் மிக்க நன்றி.

SP.VR. SUBBIAH said...

/////கோவி.கண்ணன் said...
உள்ளேன் ஐயா/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி கோவியாரே!

SP.VR. SUBBIAH said...

/////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
இனிய காலை வேலையில் இனிய பல கருத்துகளை கவியரசரின் இனிய வரிகளோடு வழங்கும் உங்கள் நடை படிப்பவர் நெஞ்சைக் கொள்ளைகொள்ளும் என்பதில் அய்யம் ஏது ?சொர்கம் ?நரகம்?பற்றிய வரிகள் அருமை .......
நன்றி வணக்கம்/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

csekar2930 said...

பதிவு மிக அருமை

நன்றி வணக்கம்

Chandrasekaran Surya

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,

குட்டிக்கதை குட்டிகளின்கதை,
அதுவும் குட்டிகளை ஒருவாறு
சமாளித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் கணம்.

இது போன்ற அனுபவம் அனைவரும் பெற்றிருப்போம்.
இதைப் பாருங்கள், என் மகள் ஆறு வயது இருக்கும் பொது,
இப்படித்தான், அப்பா ஏசு நாதர் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார்
என்கிறீர்களே, அப்படியானால்;
அவரின் அம்மாவிற்கு யார் அப்பா
ஆபரேசன் செய்தது என்று கேட்டாள்,
ஒருவழியாக சமாளித்தேன்....

கதையும் அதை விட உங்களின் நடையும் அருமை.

ரமண மகரிஷி அவர்கள் கூறியது,
இறப்பிற்கு பிறகு ஒவ்வரின் ஆத்மாவிற்கும்
அவரவர் செய்த பாவப் புண்ணியத்தைப் பொறுத்து,
நல்ல அல்லது கேட்ட அனுபவம் கிடைக்கும் என்றும்;
அதுவே சொர்க்கம், நரகம் அன்றி வேறு இல்லை என்றார்கள்.

தங்கள் கருத்தும் ஒருவாறு அப்படியே!
(இது முதலுதவி இப்படித்தானே இருக்க வேண்டும்).
மனித அறிவுத்தான் எல்லாவற்றையும் நிரூபிக்க சொல்லுகிறதே.

வலது பக்கம் உள்ள இதயத்தை (ஆத்மாவினது),
இடது பக்கம் உள்ள இதயம் பார்க்கும் (உணரும்) போது;
இவைகள் தானாகப் புரியும்.

நன்றிகள் குருவே!

krish said...

There is no Heaven and Hell apart from the mind. God is the feeling that we have as "I" which we always have with us from the time we came into existence.Good Day.

kannan said...

அப்பனே !!!!!!!!!

தாங்கள் சொல்லி உள்ளத்தில்

இத்தனை வருடம் அனுபவத்தை மட்டும் கற்ற நான் பொருள் சேர்க்க போகும் பலனை அறிய ஆவலாக உள்ளேன் ஐயா !!!!

கும்ப லக்னம், 10 க்கு உரியவன் (செவ்வாய் ), அவர் இருப்பது 6 ல் (கடகத்தில் நீசம்) . அங்கு சந்திரன் கூட அங்கு அவர் ஆட்சி வீடு ( நீசபங்க ராஜயோக ஜாதகம் ) அவருடன் சனி உள்ளார் இவர் இங்கு பகை நல்லது அப்படி தானே? இந்த அமைப்பு ( செவ்வாய்,சந்திரன், சனி ) கிரஹா ய்த்ததில் வருமா அல்லது சந்த்ரமங்கள யோகத்தில் வருமா ஐய!!!

தாங்கள் சொல்லி உள்ளீர்கள் சந்திரன் கூட செவ்வாய் இருந்தால் அது சசி மங்கள யோகம் என்று சிறிய குழப்பம் ஐயா!!!1

ஐயா தயவ் பதில் சொல்ல வேண்டும் குருவே!!!

DHANA said...

உள்ளேன் ஐயா!

kmr.krishnan said...

கோவி.கண்ணன் அவர்களுக்கு!இராமகிருஷ்ணரின் உரையாடல்களை அவருடைய அநுமதி பெற்று எழுதி வைத்தவர் மஹேந்திரநாத குப்தர்‍என்னும்
மாஸ்டர் மகாசயர்.அமுதமொழிகளில் 'ம'என்று குறிப்பிடப்படுபவர்.
'ம'ஒரு நாள் பரமஹம்ஸரை நேரடியாகவே கேட்டார்:"இறைவன் எப்படித்
தோற்றமளிக்கிறார்?" பரமஹம்ஸர் நீண்டநேரம் மெளனமாக இருந்துவிட்டு
ஏதோ சிறிது விளக்கினார்.என்ன விளக்கம் என்பதை 'ம'ப‌திவு செய்யவில்லை
"உப்பு பொம்மை ஒன்று க‌ட‌லில் ஆழ‌த்திற்குச் செலுத்த‌ப்ப‌ட்டு க‌ட‌லின் அள‌வு
காண‌ முய‌ற்சித்தால் யார் மீண்டு வ‌ந்து விடை சொல்ல முடியும்?" என்பார்
ப‌ர‌ம‌ஹம்ச‌ர்.உப்புட‌ன் பொம்மையும் க‌ட‌லில் கரைந்துவிடும்.க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர் விண்ட‌வ‌ர் கண்டில‌ர்."நான் பார்த்தேன்"என்ற பரமஹம்சர் என்ன பார்த்தார் என்பதைக் கூறவே இல்லை.அவர் மூலமாக இறைக் காட்சி பெற்ற‌
சுவாமி விவேகானதரும்,"ஒரு உயிரற்ற உடல், மயானம் ஆகியகாட்சிகளைக்
கண்டேன்"என்றார்.என்ன பொருள்? வாழ்க்கை நிலையாமை அவருக்கு உணர்த்தப்பட்டது."இறைவன் ஒருவனே இன்னும் எச்சில் படாதவன்" என்பார்
பரமஹம்சர்.என்ன பொருள்?வாய் மூலம் முழுமையாகக் கூறப்படாதவன்
என்பது பொருள். "பார்க்கும் இட‌ம் எங்கும் ஒரு நீக்க‌ம் அற‌ நிறைகின்ற‌
ப‌ரிபூர‌ண‌ ஆனந்த‌ம், சுக‌வாரி,அமிர்த‌ம்,........"
சென்ற‌ ப‌திவில் க‌டைசியாகப்போய்விட்ட‌தால் எல்லோரும் ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்தில் மீண்டும் இங்கே கொடுத்து உள்ளேன்.

tamiltemples said...

உள்ளேன் ஐயா
சேர்மராஜ்

arumuga nainar said...

Dear Sir,
காலை வணக்கம், மிக அருமையான கருத்து, நன்றி

Rgds
Nainar

RVC said...

present sir

SP.VR. SUBBIAH said...

/////மதி said...
பதிவு மிக அருமை தூங்கினவர்களை தட்டி எழுப்புகிற பதிவு(ஆனால் தூங்கர மாதிரி நடிக்கரவங்களை

எழுப்ப முடியாது-துர்ரதிஷ்ட்டமா இப்படி பட்டவர்கள்தான் அதிகம்)
பாடல் மிகமிக அருமை(எனக்கு பிடித்த பாடல்).
பதிவிற்கும் பாடலுக்கும் மிக்க நன்றி./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////csekar2930 said...
பதிவு மிக அருமை
நன்றி வணக்கம்
Chandrasekaran Surya////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
குட்டிக்கதை குட்டிகளின்கதை, அதுவும் குட்டிகளை ஒருவாறு சமாளித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் கணம். இது போன்ற அனுபவம் அனைவரும் பெற்றிருப்போம். இதைப் பாருங்கள், என் மகள் ஆறு வயது இருக்கும் பொது, இப்படித்தான், அப்பா ஏசு நாதர் மாட்டுக் கொட்டகையில் பிறந்தார் என்கிறீர்களே, அப்படியானால்; அவரின் அம்மாவிற்கு யார் அப்பா ஆபரேசன் செய்தது என்று கேட்டாள், ஒருவழியாக சமாளித்தேன்....
கதையும் அதை விட உங்களின் நடையும் அருமை.
ரமண மகரிஷி அவர்கள் கூறியது, இறப்பிற்கு பிறகு ஒவ்வரின் ஆத்மாவிற்கும் அவரவர் செய்த பாவப் புண்ணியத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கேட்ட அனுபவம் கிடைக்கும் என்றும்; அதுவே சொர்க்கம், நரகம் அன்றி வேறு இல்லை என்றார்கள்.
தங்கள் கருத்தும் ஒருவாறு அப்படியே! (இது முதலுதவி இப்படித்தானே இருக்க வேண்டும்).
மனித அறிவுத்தான் எல்லாவற்றையும் நிரூபிக்க சொல்லுகிறதே.
வலது பக்கம் உள்ள இதயத்தை (ஆத்மாவினது), இடது பக்கம் உள்ள இதயம் பார்க்கும் (உணரும்) போது;
இவைகள் தானாகப் புரியும்.
நன்றிகள் குருவே!/////

தகவலுக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBIAH said...

/////krish said...
There is no Heaven and Hell apart from the mind. God is the feeling that we have as "I" which we always have with us from the time we came into existence.Good Day./////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////kannan said...
அப்பனே !!!!!!!!!
தாங்கள் சொல்லி உள்ளதில்
இத்தனை வருடம் அனுபவத்தை மட்டும் கற்ற நான் பொருள் சேர்க்க போகும் பலனை அறிய ஆவலாக

உள்ளேன் ஐயா !!!!
கும்ப லக்னம், 10 க்கு உரியவன் (செவ்வாய் ), அவர் இருப்பது 6 ல் (கடகத்தில் நீசம்) . அங்கு சந்திரன் கூட

அங்கு அவர் ஆட்சி வீடு ( நீசபங்க ராஜயோக ஜாதகம் ) அவருடன் சனி உள்ளார் இவர் இங்கு பகை நல்லது

அப்படி தானே? இந்த அமைப்பு ( செவ்வாய்,சந்திரன், சனி ) கிரஹா ய்த்ததில் வருமா அல்லது சந்த்ரமங்கள

யோகத்தில் வருமா ஐய!!!
தாங்கள் சொல்லி உள்ளீர்கள் சந்திரன் கூட செவ்வாய் இருந்தால் அது சசி மங்கள யோகம் என்று சிறிய

குழப்பம் ஐயா!!!1
ஐயா தயவு பதில் சொல்ல வேண்டும் குருவே!!!//////

சசி மங்கள யோகத்தைப் பற்றிய பாடம் 10.9.2009 பதிவில் உள்ளது. அதை முதலில் படியுங்கள்
சொந்த ஜாதகங்களுடன் வரும் கேள்விகளுக்கு, முழு ஜாதகத்தையும் அலசிப் பதில் சொல்ல நேரமில்லை.
முழு ஜாதகத்தையும் அலசாமல் பதில் சொல்லும் டெக்னிக் ஜோதிடத்தில் இல்லை! மன்னிக்கவும்!

SP.VR. SUBBIAH said...

/////DHANA said...
உள்ளேன் ஐயா!/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////kmr.krishnan said...
கோவி.கண்ணன் அவர்களுக்கு!இராமகிருஷ்ணரின் உரையாடல்களை அவருடைய அநுமதி பெற்று எழுதி

வைத்தவர் மஹேந்திரநாத குப்தர்‍என்னும்
மாஸ்டர் மகாசயர்.அமுதமொழிகளில் 'ம'என்று குறிப்பிடப்படுபவர்.
'ம'ஒரு நாள் பரமஹம்ஸரை நேரடியாகவே கேட்டார்:"இறைவன் எப்படித்
தோற்றமளிக்கிறார்?" பரமஹம்ஸர் நீண்டநேரம் மெளனமாக இருந்துவிட்டு
ஏதோ சிறிது விளக்கினார்.என்ன விளக்கம் என்பதை 'ம'ப‌திவு செய்யவில்லை
"உப்பு பொம்மை ஒன்று க‌ட‌லில் ஆழ‌த்திற்குச் செலுத்த‌ப்ப‌ட்டு க‌ட‌லின் அள‌வு
காண‌ முய‌ற்சித்தால் யார் மீண்டு வ‌ந்து விடை சொல்ல முடியும்?" என்பார்
ப‌ர‌ம‌ஹம்ச‌ர்.உப்புட‌ன் பொம்மையும் க‌ட‌லில் கரைந்துவிடும்.க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர் விண்ட‌வ‌ர் கண்டில‌ர்."நான்

பார்த்தேன்"என்ற பரமஹம்சர் என்ன பார்த்தார் என்பதைக் கூறவே இல்லை.அவர் மூலமாக இறைக் காட்சி

பெற்ற‌ சுவாமி விவேகானதரும்,"ஒரு உயிரற்ற உடல், மயானம் ஆகியகாட்சிகளைக்
கண்டேன்"என்றார்.என்ன பொருள்? வாழ்க்கை நிலையாமை அவருக்கு உணர்த்தப்பட்டது."இறைவன்

ஒருவனே இன்னும் எச்சில் படாதவன்" என்பார்
பரமஹம்சர்.என்ன பொருள்?வாய் மூலம் முழுமையாகக் கூறப்படாதவன்
என்பது பொருள். "பார்க்கும் இட‌ம் எங்கும் ஒரு நீக்க‌ம் அற‌ நிறைகின்ற‌
ப‌ரிபூர‌ண‌ ஆனந்த‌ம், சுக‌வாரி,அமிர்த‌ம்,........"
சென்ற‌ ப‌திவில் க‌டைசியாகப்போய்விட்ட‌தால் எல்லோரும் ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ ஆர்வ‌த்தில் மீண்டும்

இங்கே கொடுத்து உள்ளேன்./////

விரிவான உங்கள் பதிலுக்கும், என்னுடைய வேலையை எளிதாக்கிவிட்ட உங்கள் உதவிக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBIAH said...

/////tamiltemples said...
உள்ளேன் ஐயா
சேர்மராஜ்/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////arumuga nainar said...
Dear Sir,
காலை வணக்கம், மிக அருமையான கருத்து, நன்றி
Rgds
Nainar/////

நல்லது. நன்றி நைனா(ர்)

கோவி.கண்ணன் said...

//உப்புட‌ன் பொம்மையும் க‌ட‌லில் கரைந்துவிடும்.க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர் விண்ட‌வ‌ர் கண்டில‌ர்."நான் பார்த்தேன்"என்ற பரமஹம்சர் என்ன பார்த்தார் என்பதைக் கூறவே இல்லை.//

இராமகிருஷ்ணர் காளிதேவியை கண்டதாகத்தான் நான் படித்திருக்கிறேன்.

தெனாலி இராமனும் கூட

(அவற்றையெலலம் நான் நம்புகிறேனா ? என்பது வேறு)

கோவி.கண்ணன் said...

//விரிவான உங்கள் பதிலுக்கும், என்னுடைய வேலையை எளிதாக்கிவிட்ட உங்கள் உதவிக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!//

அவரோடு சேர்ந்து நீங்களும்...கடவுள் காட்சி கொடுக்க மாட்டார்னே முடிவு செய்திவிட்டீர்களா ?
:)

இதையே ... (போதும்...போதும்)
:))

SP.VR. SUBBIAH said...

////கோவி.கண்ணன் said...
//உப்புட‌ன் பொம்மையும் க‌ட‌லில் கரைந்துவிடும்.க‌ண்ட‌வ‌ர் விண்டில‌ர் விண்ட‌வ‌ர் கண்டில‌ர்."நான் பார்த்தேன்"என்ற பரமஹம்சர் என்ன பார்த்தார் என்பதைக் கூறவே இல்லை.//
இராமகிருஷ்ணர் காளிதேவியை கண்டதாகத்தான் நான் படித்திருக்கிறேன்.
தெனாலி இராமனும் கூட
(அவற்றையெல்லாம் நான் நம்புகிறேனா ? என்பது வேறு)/////

நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி யாருக்கும் நஷ்டமில்லை!:-)))

SP.VR. SUBBIAH said...

/////கோவி.கண்ணன் said...
//விரிவான உங்கள் பதிலுக்கும், என்னுடைய வேலையை எளிதாக்கிவிட்ட உங்கள் உதவிக்கும் நன்றி கிருஷ்ணன் சார்!// அவரோடு சேர்ந்து நீங்களும்...கடவுள் காட்சி கொடுக்க மாட்டார்னே முடிவு செய்திவிட்டீர்களா ? :)
இதையே ... (போதும்...போதும்) :))/////

எங்களுக்குக் காட்சி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.உங்களுக்குக் காட்சி கொடுக்குமாறு அவரை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். என் பிரார்த்தனைக்கு அவர் செவி சாய்ப்பாரா என்பது வேறு!

SP.VR. SUBBIAH said...

////Blogger RVC said...
present sir///

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

kmr.krishnan said...

அமெரிக்கப் பழமொழியை மகாகவி பாரதியார் இப்படிச் சொன்னார்:
" சென்றது இனி மீளாது மூடரே!நீவிர் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற
வ‌குத்துக்கொண்டு
தின்று விளையாடி ம‌கிழ்ந்து இருப்பீர்!தீமை எலாம்
அழிந்துபோம்;திரும்பி வாரா!"
பார‌தியார் சொர்க்க‌ம், ந‌ர‌க‌ம் ப‌ற்றி சொல்வ‌து என்ன?
"க‌வ‌லைப்ப‌டுத‌லே க‌ருந‌‌ரக‌‌ம்மா
க‌வ‌லை அற்று இருப்ப‌தே சொர்க்க‌ம்"
ச‌னாத‌ன‌ த‌ர்ம‌த்தின்ப‌டி(இந்தும‌த‌த்தின்ப‌டி) ஒருவ‌ரின் ந‌ற்செய‌லுக்கு சொர்க்க வாச‌மும்,அந்த‌க் க‌ண‌க்கு முடிந்த‌வுட‌ன் தீச்செய‌லுக்காக‌ ந‌ர‌க‌ வாச‌மும் செய்துவிட்டு, அந்த‌க்க‌ண‌க்கு முடிந்த‌வுட‌ன் மீண்டும் க‌ருவாய்ப்ப‌ட்டு பூமியில் பிற‌வி எடுக்க‌ வேண்டும்.(மேற்க‌த்திய‌ ம‌த‌க் கொள்கைப் ப‌டி தீர்ப்பு நாள் அன்று சொர்க்க‌ம் அல்ல‌து ந‌ர‌க‌ம் கிடைக்க‌ப்போகிற‌து. இதுவ‌ரை இற‌ந்த‌வ‌ர்க‌ள் எல்லாரும் இனி இற‌க்க‌ப்போகும் அனைவ‌ரும் அந்த‌ நாளுக்காக‌க் கா‌த்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் சொர்க்க‌ம்/ந்ர‌க‌ம் த‌ற்ச‌ம‌ய‌ம்
காலியாக‌வே உள்ள‌து.)
ச‌னா‌த‌ன‌ம‌த‌த்தின் இல‌ட்சிய‌ம் சொர்க்க‌மோ ந‌ர‌க‌மோ அல்ல‌. இறைவ‌னை
அடைத‌ல் என்ற‌ மோட்ச‌ம். ந‌ற்செய‌ல் செய்தாலும் பிற‌வி உண்டு.ந‌ற்பிற‌ப்பு
கிடைக்கும். தீச் செய‌ல் செய்தாலும் பிற‌வி உண்டு.தீய‌வ‌ர்க‌ளுட‌ன் பிற‌ப்போம்.
ந‌ற்செய‌ல் பொன்வில‌ங்கு. தீச்செய‌ல் இரும்பு வில‌ங்கு.ஆனால் இர‌ண்டுமே
வில‌ங்கு தான்.இந்த‌ வில‌ங்கை உடைத்து, க‌ட்டை அவிழ்த்து, முடிச்சை
அறுத்துக்கொண்டு, தாயைத் தேடி ஓடும் க‌ன்றுபோல் கூவிக் கூவி அழைத்து,இறைவ‌னிட‌ம் துள்ளி ஓட‌ வேண்டும்.அவ‌ர் ந‌ம்மைத் த‌டுத்து ஆட்கொண்டு மோட்ச‌ம் கொடுப்பா‌ர்.மீண்டும் பிற‌வி அளிக்காம‌ல் த‌ம்முட‌னேயே இருத்திக் கொள்வார்.

கோவி.கண்ணன் said...

//எங்களுக்குக் காட்சி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.உங்களுக்குக் காட்சி கொடுக்குமாறு அவரை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

எனக்கு காட்சி கிடைத்ததா இல்லையான்னு உங்களுக்கு எப்படி தெரியும் ?
:)

எனக்கு ஏற்கனவே கிடைத்ததுன்னு சொன்னால் உங்க வேண்டுதலே பொருளற்றதாகிடுமே !

ananth said...

இங்கே சொர்கம் நரகம் என்று படித்ததும், ’காதலித்துப் பார் சொர்கம் நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம் ஆகவே காதலித்துப் பார்’ என்ற வைரமானவரின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வந்தது.

பாவம் செய்தால் நரகத்திற்கு போவோம் என்ற பயத்தில்தான் சிலர் பாவம் செய்ய அஞ்சுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வருகிறது. பாவம் செய்தாலும் புண்ணியம் செய்தாலும் ஒன்றுதான் என்றாகி விட்டால் கேட்கவே வேண்டாம்.

இன்றைய பாடலும் நன்று. சரி இத்தோடு முடித்துக் கொள்கிறேன். வார இறுதி விடுமுறையை இனிதாக கழித்து விட்டு இனி திங்களன்று சந்திக்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

kmr.krishnan said...
அமெரிக்கப் பழமொழியை மகாகவி பாரதியார் இப்படிச் சொன்னார்:
சென்றது இனி மீளாது மூடரே!நீவிர்
சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலை எனும்
குழியில் வீழ்ந்து குமையாதீர்!
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற
எண்ணமதைத் திண்ணமுற வ‌குத்துக்கொண்டு
தின்று விளையாடி ம‌கிழ்ந்து இருப்பீர்!
தீமை எலாம் அழிந்துபோம்;திரும்பி வாரா!"

பார‌தியார் சொர்க்க‌ம், ந‌ர‌க‌ம் ப‌ற்றி சொல்வ‌து என்ன?
"க‌வ‌லைப்ப‌டுத‌லே க‌ருந‌‌ரக‌‌ம்மா
க‌வ‌லை அற்று இருப்ப‌தே சொர்க்க‌ம்"

ச‌னாத‌ன‌ த‌ர்ம‌த்தின்ப‌டி(இந்தும‌த‌த்தின்ப‌டி) ஒருவ‌ரின் ந‌ற்செய‌லுக்கு சொர்க்க வாச‌மும்,அந்த‌க் க‌ண‌க்கு முடிந்த‌வுட‌ன் தீச்செய‌லுக்காக‌ ந‌ர‌க‌ வாச‌மும் செய்துவிட்டு, அந்த‌க்க‌ண‌க்கு முடிந்த‌வுட‌ன் மீண்டும் க‌ருவாய்ப்ப‌ட்டு பூமியில் பிற‌வி எடுக்க‌ வேண்டும்.(மேற்க‌த்திய‌ ம‌த‌க் கொள்கைப் ப‌டி தீர்ப்பு நாள் அன்று சொர்க்க‌ம் அல்ல‌து ந‌ர‌க‌ம் கிடைக்க‌ப்போகிற‌து. இதுவ‌ரை இற‌ந்த‌வ‌ர்க‌ள் எல்லாரும் இனி இற‌க்க‌ப்போகும் அனைவ‌ரும் அந்த‌ நாளுக்காக‌க் கா‌த்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் சொர்க்க‌ம்/நர‌க‌ம் த‌ற்ச‌ம‌ய‌ம் காலியாக‌வே உள்ள‌து.)
ச‌னா‌த‌ன‌ம‌த‌த்தின் இல‌ட்சிய‌ம் சொர்க்க‌மோ ந‌ர‌க‌மோ அல்ல‌. இறைவ‌னை
அடைத‌ல் என்ற‌ மோட்ச‌ம். ந‌ற்செய‌ல் செய்தாலும் பிற‌வி உண்டு.ந‌ற்பிற‌ப்பு
கிடைக்கும். தீச் செய‌ல் செய்தாலும் பிற‌வி உண்டு.தீய‌வ‌ர்க‌ளுட‌ன் பிற‌ப்போம்.
ந‌ற்செய‌ல் பொன்வில‌ங்கு. தீச்செய‌ல் இரும்பு வில‌ங்கு.ஆனால் இர‌ண்டுமே
வில‌ங்கு தான்.இந்த‌ வில‌ங்கை உடைத்து, க‌ட்டை அவிழ்த்து, முடிச்சை
அறுத்துக்கொண்டு, தாயைத் தேடி ஓடும் க‌ன்றுபோல் கூவிக் கூவி அழைத்து,இறைவ‌னிட‌ம் துள்ளி ஓட‌ வேண்டும்.அவ‌ர் ந‌ம்மைத் த‌டுத்து ஆட்கொண்டு மோட்ச‌ம் கொடுப்பா‌ர்.மீண்டும் பிற‌வி அளிக்காம‌ல் த‌ம்முட‌னேயே இருத்திக் கொள்வார்.//////

நன்று. விளக்கங்களுக்கு நன்றி சார்!

SP.VR. SUBBIAH said...

//////கோவி.கண்ணன் said...
//எங்களுக்குக் காட்சி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.உங்களுக்குக் காட்சி கொடுக்குமாறு அவரை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
எனக்கு காட்சி கிடைத்ததா இல்லையான்னு உங்களுக்கு எப்படி தெரியும் ? :)
எனக்கு ஏற்கனவே கிடைத்ததுன்னு சொன்னால் உங்க வேண்டுதலே பொருளற்றதாகிடுமே !///////

ஏற்கனவே கிடைத்திருக்க வாய்ப்பில்லை!:-))))கிடைத்திருந்தால் உங்கள் வலைப் பதிவில் பின்னி எடுத்திருப்பீர்களே!!!!!!

SP.VR. SUBBIAH said...

//////ananth said...
இங்கே சொர்கம் நரகம் என்று படித்ததும், ’காதலித்துப் பார் சொர்கம் நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம் ஆகவே காதலித்துப் பார்’ என்ற வைரமானவரின் வரிகள்தான் ஞாபகத்திற்கு வந்தது.
பாவம் செய்தால் நரகத்திற்கு போவோம் என்ற பயத்தில்தான் சிலர் பாவம் செய்ய அஞ்சுகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துக் கொண்டே வருகிறது. பாவம் செய்தாலும் புண்ணியம் செய்தாலும் ஒன்றுதான் என்றாகி விட்டால் கேட்கவே வேண்டாம்.
இன்றைய பாடலும் நன்று. சரி இத்தோடு முடித்துக் கொள்கிறேன். வார இறுதி விடுமுறையை இனிதாக கழித்து விட்டு இனி திங்களன்று சந்திக்கிறேன்./////

நல்லது. வார விடுமுறை இனிதாகக் கழிய வாழ்த்துக்கள்!

Ram said...

presnts sir,

Alasiam G said...

15.
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. ௧௫

129.
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. ௧௭

133.
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. 21

திருமூலர் கூறியது அவைகள்.

ஒன்றை மட்டும் நான் கூறுவேன்.
அரிச்சுவடி தெரியாதோர்-எப்படி
ஐம்பெருங் காப்பியத்தைப் படித்துணர்வது.

"பைனறித் தெரியாதோர் எப்படி கம்பியூட்டர்
ப்ரோகிராம் எழுதுவது."

புரியாதக் காரணத்தால் சுவை இல்லை எனக் கூறலாகுமோ?
புசித்தவர் தாம் அதைக் கூறவேண்டும்.
புசிக்கப் புகுங்கால் தன்னை புடம் போட்டுப்
புகுங்கால் புரிவது உறுதி.

நிகழ்காலத்தில்... said...

\\பணத் தேடலில் சிலரது வாழ்க்கையும், கூடலில் சிலரது வாழ்க்கையும் (என்ன கூடல் என்று இங்கே எழுத முடியாது. தெரிந்தவர்களுக்கு மட்டும் அது புரியட்டும்) எதற்கெடுத்தாலும் உரக்கக் குரல் கொடுப்பதில் சிலரது வாழ்க்கையும், சரக்கடிப்பதில் சிலரது வாழ்க்கையும் முடிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், ’அனைவரும் ஒருநாள் இறைவனை உணர்வார்கள்; அவன் தாள் பணிவார்கள்’ என்று எதிர்பார்க்க முடியாது.\\

சரியாக சொன்னீர்கள்..

அவரவர் வினைப்பதிவிற்கேற்பவே
வருங்காலத்தில் பதிவுகளை ஏற்படுத்திக்கொள்வார்கள்.

சரியாக சொன்னால் விதிப்படி வாழ்பவர்கள்.

கோவி.கண்ணன் said...

//ஏற்கனவே கிடைத்திருக்க வாய்ப்பில்லை!:-))))கிடைத்திருந்தால் உங்கள் வலைப் பதிவில் பின்னி எடுத்திருப்பீர்களே!!!!!!

Friday, December 18, 2009 12:50:00 PM//

அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று தெரியல.

ஐந்து (வழக்கமாக நான்கு தான் சொல்லுவாங்க) குருடர்களும் ஒரு (கல்) யானையும் கதை என் வலைப்பதிவில் போட்டு இருந்தேன்.

அதுல நீங்களும் பின்னூட்டி இருக்கிங்க

:)

நான் எதையும் வழியுறுத்துவது இல்லை. அதனால் அதை வலைப்பதிவில் எழுதுவதில்லைன்னு சொல்லலாம் !

kmr.krishnan said...

கோவி. கண்ணனுக்கு!கடவுள் காட்சி கொடுக்கமாட்டார் என்று எங்கே கூறியுள்ளேன்?
காட்சியைக் கண்டவருக்கு அதை நம் சிற்ற‌றிவுக்குப் புரியும்படியாக விண்டு உரைக்க முடியாது என்பதே என் கூற்று.காளிதேவியாகக் கண்ட பரமஹம்சர் அக்காட்சியைப் பற்றி முழுவதுமாகக் கூறி நமக்குப் புரியவைக்க இயலாது. எனெனில் அக்காட்சி என்பதே ஓர் உணர்வுதான்.அறிவு சார்ந்த செய்திகளை
சொற்களால் விளக்கமுடியும்.அறிவுக்கும் மேம்பட்ட அதீத இறை உணர்வுகளை சொற்களால் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளேனே தவிர‌
இறைவன் காட்சியளிக்க மாட்டார் என்று கூறவில்லை.அது போலவே காளி உருவம் ஒன்று மட்டுமே கடவுள் உருவம் என்று பரமஹம்சர் சாதிக்கவில்லை.பல உருவங்களில் தியானித்துப் பார்த்து, பல மதக்கோட்பாடுகளைப் பரீட்சை செய்து பார்த்து, "எல்லாமும் ஒரே மாதிரியான‌ அதீதப் புனித உணர்வைத்தான் தருகின்றன" என்று கூறியுள்ளார்.

அனந்த் அவர்களுக்கு! பிறவி இல்லாத, இறைவனுடன் கலத்தல் என்ற கோட்பாட்டில், புண்ணியம் பாவம் என்ற இவ்வுலகச் சட்ட திட்டங்கள் மீண்டும் பிறவியைக்கொடுக்கும்.இருமையாகிய நன்மை‍‍ தீமை, இன்பம் துன்பம், சுத்தம் அசுத்தம்,உயர்வு தாழ்வு முதலிய்வைகளைக் கடக்க வேண்டும். காரிய காரண‌மும் அதற்கான விளைவுகளும் இல்லை என்று
கூற்வில்லை. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன்
வினை அறுப்பான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.உப்புத்தின்ற‌வன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும்.புண்ணியத்துக்கு சொர்க்கமும்,பாவத்திற்கு நர‌கமும் மீண்டும் பிறவியும் கட்டாயம் உண்டு.
ஆனால் நம்முடைய குறிக்கோள் பிற‌விப்பெருங்கடலைத் தாண்டுவதே!
பிறவாமை வேண்டும். மீட்டுப் பிறந்தால் ஆண்டவனை மற்வாமை வேண்டும்
என்பதே நமது கோட்பாடு.

Balasubramanian Pulicat said...

I am one of your new students, and am working on old lessons. My comment is not connected to this posting but choose this option for your prompt reply. I find lesson 18 is missing. Can I know is it missed out in serial, or removed or otherwise. I will be greatful for your prompt reply.

JOE said...

ஐயா உங்களீன் இறைவன் பற்றிய விளக்கம் மிகவும் அறுமை. இறைவன் தான் அனைத்து ஜிவராசிகளையும் துன்பத்தின் பொது காத்து வழினடத்த வேண்டும். மனிதன் கஸ்ட படும் பொதுதான் இறைவனை உணர்கிறான் என்பதை மிகவும் அழகாக வளக்கியுள்ளிர்கள்.

ஜோதிடம் விதியை அரியதானே ஒழிய விதியை மற்ற அல்ல இறைவன் ஒருவனே விதியின் போக்கை சமளிக்கும் வலிமையை கொடுக்கும் வல்லமை கொண்டவன் என்பதை உண‌ர்துகிறது உங்கள் படம்

ஐயா எனக்கு இப்பொது குழந்தை பிற‌க்க‌ப்போகிற‌து, டாக்ட‌ர் ஜ‌ன‌வ‌ரி 14 2010 தேதி கொடுத்து உள்ளார்க‌ள். தேதி என்ப‌து தோறாய‌மான‌துதான். ஒரு வார‌ம் முன்னே/பின்னே இருக்க‌லாம். என் க‌வ‌லை என்ன‌வென்றால் ஜ‌ன‌வ‌ரி 2 2010 ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம், ஜ‌ன‌வ‌ரி 14 2010 அம்ம‌வ‌சை, ஜ‌ன‌வ‌ரி 15 2010 சூரிய‌கிர‌க‌ண‌ம். என் குழந்தை ஆணோ/பெண்ணோ ஒரு வேளை மெற் குறிப்பிட் தேதிக‌ளில் பிற‌ந்து விட்டால் குழந்தையின் ஜ‌த‌க‌த்தில் ச‌ந்திர‌ன் அஷ்த‌ம‌ன‌ம் ஆகிவிடுவார். ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம், சூரிய‌கிர‌க‌ண‌ம் ம‌ற்றும் அம்ம‌வ‌சையில் பிற‌ப்ப‌வ‌ர்க‌ளின் வாழ்க்கை போராட்ட‌ம் நிறைந்த‌தாக‌ இருக்கும், மேலும் தைரிய‌த்துக்கு க‌ர‌கணாகிய‌ செவ்வாயும் வ‌ருகிற‌ பிப்ர‌வ‌ரி வ‌ரை க‌ட‌க‌த்தில் நிச‌ம‌கி உள்ளார். தாங்க‌ள் த‌ய‌வுகூந்து மேற்ப‌ட்ட‌ தேதிக‌ளில் குழந்தை பிற‌ந்துவிட்டால் குழந்தையின் எதிர்கால‌ம் எவ்வாறு இருக்கும் என்று பார்த்து சொல்ல‌வும்

krish said...

வாத்தியார் அவர்கள் hebeus corpus பதிவு செய்து கடவுளை கண்டுபிடித்து கோவிக்கண்ணனின் செலவில் சிங்கப்பூர் அழைத்து சென்று அவரிடம் ஆஜர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

SP.VR. SUBBIAH said...

/////Ram said...
presnts sir,////

வருகைப்பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
15.
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. ௧௫

129.
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. ௧௭

133.
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே. 21
திருமூலர் கூறியது அவைகள்.
ஒன்றை மட்டும் நான் கூறுவேன்.
அரிச்சுவடி தெரியாதோர்-எப்படி
ஐம்பெருங் காப்பியத்தைப் படித்துணர்வது.
"பைனறித் தெரியாதோர் எப்படி கம்பியூட்டர்
ப்ரோகிராம் எழுதுவது."
புரியாதக் காரணத்தால் சுவை இல்லை எனக் கூறலாகுமோ?
புசித்தவர் தாம் அதைக் கூறவேண்டும்.
புசிக்கப் புகுங்கால் தன்னை புடம் போட்டுப்
புகுங்கால் புரிவது உறுதி./////

இரண்டாவது பாடல் அசத்தலாக உள்ளது ஆலாசியம். நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////நிகழ்காலத்தில்... said...
\\பணத் தேடலில் சிலரது வாழ்க்கையும், கூடலில் சிலரது வாழ்க்கையும் (என்ன கூடல் என்று இங்கே எழுத முடியாது. தெரிந்தவர்களுக்கு மட்டும் அது புரியட்டும்) எதற்கெடுத்தாலும் உரக்கக் குரல் கொடுப்பதில் சிலரது வாழ்க்கையும், சரக்கடிப்பதில் சிலரது வாழ்க்கையும் முடிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால், ’அனைவரும் ஒருநாள் இறைவனை உணர்வார்கள்; அவன் தாள் பணிவார்கள்’ என்று எதிர்பார்க்க முடியாது.\\
சரியாக சொன்னீர்கள்..
அவரவர் வினைப்பதிவிற்கேற்பவே
வருங்காலத்தில் பதிவுகளை ஏற்படுத்திக்கொள்வார்கள்.
சரியாக சொன்னால் விதிப்படி வாழ்பவர்கள்./////

புரிதலுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////கோவி.கண்ணன் said...
//ஏற்கனவே கிடைத்திருக்க வாய்ப்பில்லை!:-))))கிடைத்திருந்தால் உங்கள் வலைப் பதிவில் பின்னி எடுத்திருப்பீர்களே!!!!!!
அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள் என்று தெரியல.
ஐந்து (வழக்கமாக நான்கு தான் சொல்லுவாங்க) குருடர்களும் ஒரு (கல்) யானையும் கதை என் வலைப்பதிவில் போட்டு இருந்தேன்.
அதுல நீங்களும் பின்னூட்டி இருக்கிங்க :)
நான் எதையும் வழியுறுத்துவது இல்லை. அதனால் அதை வலைப்பதிவில் எழுதுவதில்லைன்னு சொல்லலாம் !////

நல்லது நன்றி கோவியாரே!

SP.VR. SUBBIAH said...

//////kmr.krishnan said...
கோவி. கண்ணனுக்கு!கடவுள் காட்சி கொடுக்கமாட்டார் என்று எங்கே கூறியுள்ளேன்?
காட்சியைக் கண்டவருக்கு அதை நம் சிற்ற‌றிவுக்குப் புரியும்படியாக விண்டு உரைக்க முடியாது என்பதே என் கூற்று.காளிதேவியாகக் கண்ட பரமஹம்சர் அக்காட்சியைப் பற்றி முழுவதுமாகக் கூறி நமக்குப் புரியவைக்க இயலாது. எனெனில் அக்காட்சி என்பதே ஓர் உணர்வுதான்.அறிவு சார்ந்த செய்திகளை
சொற்களால் விளக்கமுடியும்.அறிவுக்கும் மேம்பட்ட அதீத இறை உணர்வுகளை சொற்களால் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளேனே தவிர‌
இறைவன் காட்சியளிக்க மாட்டார் என்று கூறவில்லை.அது போலவே காளி உருவம் ஒன்று மட்டுமே கடவுள் உருவம் என்று பரமஹம்சர் சாதிக்கவில்லை.பல உருவங்களில் தியானித்துப் பார்த்து, பல மதக்கோட்பாடுகளைப் பரீட்சை செய்து பார்த்து, "எல்லாமும் ஒரே மாதிரியான‌ அதீதப் புனித உணர்வைத்தான் தருகின்றன" என்று கூறியுள்ளார்.
அனந்த் அவர்களுக்கு! பிறவி இல்லாத, இறைவனுடன் கலத்தல் என்ற கோட்பாட்டில், புண்ணியம் பாவம் என்ற இவ்வுலகச் சட்ட திட்டங்கள் மீண்டும் பிறவியைக்கொடுக்கும்.இருமையாகிய நன்மை‍‍ தீமை, இன்பம் துன்பம், சுத்தம் அசுத்தம்,உயர்வு தாழ்வு முதலிய்வைகளைக் கடக்க வேண்டும். காரிய காரண‌மும் அதற்கான விளைவுகளும் இல்லை என்று
கூற்வில்லை. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன்
வினை அறுப்பான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.உப்புத்தின்ற‌வன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும்.புண்ணியத்துக்கு சொர்க்கமும்,பாவத்திற்கு நர‌கமும் மீண்டும் பிறவியும் கட்டாயம் உண்டு.
ஆனால் நம்முடைய குறிக்கோள் பிற‌விப்பெருங்கடலைத் தாண்டுவதே!
பிறவாமை வேண்டும். மீட்டுப் பிறந்தால் ஆண்டவனை மற்வாமை வேண்டும்
என்பதே நமது கோட்பாடு.////

உங்களின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBIAH said...

//////Balasubramanian Pulicat said...
I am one of your new students, and am working on old lessons. My comment is not connected to this posting but choose this option for your prompt reply. I find lesson 18 is missing. Can I know is it missed out in serial, or removed or otherwise. I will be greatful for your prompt reply.//////

9.3.07
ஜாதிகள் இருக்குதடி பாப்பா!
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 16
-----------------------------------------
20.3.07
திமுக' வின் ஜாதகம்
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 16
-------------------------------------
21.3.07
கலைஞரின் ஜாதகம்
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 17
-------------------------------------
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 19
கிரகங்களின் சேர்க்கை (Association of Planets)

missing ஆகவில்லை. எண் தவறாக எழுதப்பெற்றுள்ளது. 20.3.07 (17) 21.3.07 எனும் பதிவை 18 என்று வாசித்துக்கொள்ளுங்கள். ஓக்கேயா?

SP.VR. SUBBIAH said...

///////JOE said...
ஐயா உங்களீன் இறைவன் பற்றிய விளக்கம் மிகவும் அறுமை. இறைவன் தான் அனைத்து ஜிவராசிகளையும் துன்பத்தின் பொது காத்து வழினடத்த வேண்டும். மனிதன் கஷ்டப்படும் போதுதான் இறைவனை உணர்கிறான் என்பதை மிகவும் அழகாக வளக்கியுள்ளிர்கள்.
ஜோதிடம் விதியை அரியதானே ஒழிய விதியை மற்ற அல்ல இறைவன் ஒருவனே விதியின் போக்கை சமளிக்கும் வலிமையை கொடுக்கும் வல்லமை கொண்டவன் என்பதை உண‌ர்துகிறது உங்கள் படம்
ஐயா எனக்கு இப்பொது குழந்தை பிற‌க்க‌ப்போகிற‌து, டாக்ட‌ர் ஜ‌ன‌வ‌ரி 14 2010 தேதி கொடுத்து உள்ளார்க‌ள். தேதி என்ப‌து தோறாய‌மான‌துதான். ஒரு வார‌ம் முன்னே/பின்னே இருக்க‌லாம். என் க‌வ‌லை என்ன‌வென்றால் ஜ‌ன‌வ‌ரி 2 2010 ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம், ஜ‌ன‌வ‌ரி 14 2010 அம்ம‌வ‌சை, ஜ‌ன‌வ‌ரி 15 2010 சூரிய‌கிர‌க‌ண‌ம். என் குழந்தை ஆணோ/பெண்ணோ ஒரு வேளை மெற் குறிப்பிட் தேதிக‌ளில் பிற‌ந்து விட்டால் குழந்தையின் ஜ‌த‌க‌த்தில் ச‌ந்திர‌ன் அஷ்த‌ம‌ன‌ம் ஆகிவிடுவார். ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம், சூரிய‌கிர‌க‌ண‌ம் ம‌ற்றும் அம்ம‌வ‌சையில் பிற‌ப்ப‌வ‌ர்க‌ளின் வாழ்க்கை போராட்ட‌ம் நிறைந்த‌தாக‌ இருக்கும், மேலும் தைரிய‌த்துக்கு க‌ர‌கணாகிய‌ செவ்வாயும் வ‌ருகிற‌ பிப்ர‌வ‌ரி வ‌ரை க‌ட‌க‌த்தில் நிச‌ம‌கி உள்ளார். தாங்க‌ள் த‌ய‌வுகூந்து மேற்ப‌ட்ட‌ தேதிக‌ளில் குழந்தை பிற‌ந்துவிட்டால் குழந்தையின் எதிர்கால‌ம் எவ்வாறு இருக்கும் என்று பார்த்து சொல்ல‌வும்//////

எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். குழந்தையின் எதிர்காலத்தைக் காலதேவன் நிர்ணயிப்பான். நீங்கள் கவலையை விட்டுவிட்டு, குழந்தை நல்லபடியாகப் பிறப்பதற்கு உரிய மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் உதவியாக இருங்கள். போதும்!

SP.VR. SUBBIAH said...

/////krish said...
வாத்தியார் அவர்கள் hebeus corpus பதிவு செய்து கடவுளை கண்டுபிடித்து கோவிக்கண்ணனின் செலவில் சிங்கப்பூர் அழைத்து சென்று அவரிடம் ஆஜர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்./////

கடவுளைக் கண்டு பிடித்துவிட்டால், சிங்கப்பூர் செல்வது என்ன சிரமமா? அவர் (கடவுளின்) செலவிலேயே, நம் வகுப்பறை மாணவர்கள் 1,116 (இன்றையத்தேதியில் உள்ளவர்கள் எண்ணிக்கை) பேர்களும், அவருடன் சிங்கப்பூர் மலேசியா, சென்று வருவோம்! வகுப்பறைக்குப் பத்து நாட்கள் விடுமுறை விட்டு விடுவோம்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எப்பொழுதும் என்கூடவே என் அப்பனும் இருக்கிறான் வாத்தியாரே..!

sundari said...

///////JOE said...
ஐயா உங்களீன் இறைவன் பற்றிய விளக்கம் மிகவும் அறுமை. இறைவன் தான் அனைத்து ஜிவராசிகளையும் துன்பத்தின் பொது காத்து வழினடத்த வேண்டும். மனிதன் கஷ்டப்படும் போதுதான் இறைவனை உணர்கிறான் என்பதை மிகவும் அழகாக வளக்கியுள்ளிர்கள்.
ஜோதிடம் விதியை அரியதானே ஒழிய விதியை மற்ற அல்ல இறைவன் ஒருவனே விதியின் போக்கை சமளிக்கும் வலிமையை கொடுக்கும் வல்லமை கொண்டவன் என்பதை உண‌ர்துகிறது உங்கள் படம்
ஐயா எனக்கு இப்பொது குழந்தை பிற‌க்க‌ப்போகிற‌து, டாக்ட‌ர் ஜ‌ன‌வ‌ரி 14 2010 தேதி கொடுத்து உள்ளார்க‌ள். தேதி என்ப‌து தோறாய‌மான‌துதான். ஒரு வார‌ம் முன்னே/பின்னே இருக்க‌லாம். என் க‌வ‌லை என்ன‌வென்றால் ஜ‌ன‌வ‌ரி 2 2010 ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம், ஜ‌ன‌வ‌ரி 14 2010 அம்ம‌வ‌சை, ஜ‌ன‌வ‌ரி 15 2010 சூரிய‌கிர‌க‌ண‌ம். என் குழந்தை ஆணோ/பெண்ணோ ஒரு வேளை மெற் குறிப்பிட் தேதிக‌ளில் பிற‌ந்து விட்டால் குழந்தையின் ஜ‌த‌க‌த்தில் ச‌ந்திர‌ன் அஷ்த‌ம‌ன‌ம் ஆகிவிடுவார். ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம், சூரிய‌கிர‌க‌ண‌ம் ம‌ற்றும் அம்ம‌வ‌சையில் பிற‌ப்ப‌வ‌ர்க‌ளின் வாழ்க்கை போராட்ட‌ம் நிறைந்த‌தாக‌ இருக்கும், மேலும் தைரிய‌த்துக்கு க‌ர‌கணாகிய‌ செவ்வாயும் வ‌ருகிற‌ பிப்ர‌வ‌ரி வ‌ரை க‌ட‌க‌த்தில் நிச‌ம‌கி உள்ளார். தாங்க‌ள் த‌ய‌வுகூந்து மேற்ப‌ட்ட‌ தேதிக‌ளில் குழந்தை பிற‌ந்துவிட்டால் குழந்தையின் எதிர்கால‌ம் எவ்வாறு இருக்கும் என்று பார்த்து சொல்ல‌வும்//////

எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான். குழந்தையின் எதிர்காலத்தைக் காலதேவன் நிர்ணயிப்பான். நீங்கள் கவலையை விட்டுவிட்டு, குழந்தை நல்லபடியாகப் பிறப்பதற்கு உரிய மருத்துவத் தேவைகளுக்கு மட்டும் உதவியாக இருங்கள். போதும்!///
உங்கள் குழந்தையின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் நீங்கள் ஒரு தலைசிறந்த அப்பாவாயிருக்கிறீர்கள் மேலும் அடுத்த ஜென்னம் என்று ஒன்று எனக்கு இருந்த உங்களை மாதரி அப்பா வேண்டும் தப்ப சொல்லியிருந்த மன்னிக்கவும் எனக்கு 9ல் ராகு ஐயோ நான் ப்ட்ட கஷ்டம் எங்க அப்பாகிட்ட என் பரம விரோதிக்கு கூட வர கூடாது.
சுந்தரி.

Success said...

அய்யா வணக்கம்

இறைவன் கருணை வடிவானவர். தன்னை வணங்குபவனுக்கும் அவர் அருள் செய்வார். வணங்காதவனுக்கும் அவர் அருள் செய்வார்.

இல்லை என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

அதனால்தான் அவரை எல்லாம் வல்ல இறைவன் (almighty) என்கிறோம். இல்லையென்றால் அவர் வெறும் mightyயாகத்தான் இருப்பார்!

மிக அருமை நன்றிகள் குருவே!

krajan said...

ஐயா வணக்கம் ஜோதிடப்பாடங்களோடு
வாழ்வியல் பாடங்களையும் தரும் குருவிற்கு எனது நன்றி.

கே.ராஜன் பவானி

sundari said...

/////krish said...
வாத்தியார் அவர்கள் hebeus corpus பதிவு செய்து கடவுளை கண்டுபிடித்து கோவிக்கண்ணனின் செலவில் சிங்கப்பூர் அழைத்து சென்று அவரிடம் ஆஜர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்./////

கடவுளைக் கண்டு பிடித்துவிட்டால், சிங்கப்பூர் செல்வது என்ன சிரமமா? அவர் (கடவுளின்) செலவிலேயே, நம் வகுப்பறை மாணவர்கள் 1,116 (இன்றையத்தேதியில் உள்ளவர்கள் எண்ணிக்கை) பேர்களும், அவருடன் சிங்கப்பூர் மலேசியா, சென்று வருவோம்! வகுப்பறைக்குப் பத்து நாட்கள் விடுமுறை விட்டு விடுவோம்!///
வணக்கம் சார் இந்த பதில் ரொம்ப நல்ல இருக்குது. 10 நாள் விடுமுறை கிடைக்கும் ஐய்யா. இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் என்றும் நல்லதை நம்க்கு செய்வார். நம்ம எதாவது விபத்திலிருந்து தப்பித்த ஐயேர் கடவுளே ஐயேர்
அப்பா, ஐயேர் அம்மா என்று சொல்லுவோம் அந்த சமயம் அப்பா அம்மாவை கூப்பிட்டா அவங்க இருக்கிறாங்க கடவுளை கூப்பிட்டா அவரும் இருக்கிறார்.
சுந்தரி.

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
அப்பன் முருகனைப் போ(ப)ற்றிய
என் முதல் கவிதை.

தமிழ்க் கடவுளே போற்றி! போற்றி!!
என் அப்பன் அவன்
அப்பனுக்கேப் பாடம் சொன்ன
ஞானப்பன் அவன்.
எப்பொழுதும் என்னுள்ளே
நிறைந்திருக்கும் நித்யமானவன் அவன். (என் அப்பன்..)

உலகப்பன் மைந்தன் அவன்
உண்மையுள் உறைபவன் அவன்
அறுபடை வீடுடையோன் - அவன்
ஆறுமுகம் எனும் பெயருடையோன். (என் அப்பன்..)

வேழமுகத்தானின் தம்பி அவன்
வினைதீர்த்து செந்தூரில் நின்றவனாம்,
வேல் கொண்ட நாயகனாம் - அவன்
வேண்டும் வரம் தந்திடுவான். (என் அப்பன்...)

வண்ண மயில் வாகனன் அவன்
வள்ளி தெய்வானையின் தலைவன் - அவன்
வானோர் போற்றும் தெய்வமாவான். (என் அப்பன்..)

பொய்கையிலேப் பிறந்தவனாம் அவன்
பூதப்படை நாயகனாம் - அவன்
பொய்யர்களை புடம்போட்டு எரிப்பவனாம். (என் அப்பன்..)

அழகப்பன் அவன் பெயராம் அவன்
அண்டினோரை ஆதரிக்கும் ஆண்டியுமாவான் - அவன்
மெய்யான அன்பருக்கே மெய்யப்பன் ஆவான். (என் அப்பன்..)

ஔவைக்கு அருளியவனாம் அவன்
அறியாமை பிணிக்கு ஒளடதமாவான்.
பன்னிரு கையுடையோன் அவன்
பவளச் செவ்வயினனாவான். (என் அப்பன்..)

சேவர்க் கொடியோனை, செங்கமல நிறத்தோனை;
ஆயர்க் குல மருமகனை, தேவாதி தேவனை;
சிவசக்தி மைந்தனை, சிங்கார வேலனை;
பஞ்சமிர்தப் பிரியனை, பார்வதியின் செல்வக்குமரன் அந்தக்-
கருணைக் கடலின் திருவடிப் பணிவோம் நாமே!

அன்புடன் ஆலாசியம் கோ.

SP.VR. SUBBIAH said...

/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
எப்பொழுதும் என்கூடவே என் அப்பனும் இருக்கிறான் வாத்தியாரே..!////

எனக்குத் தெரியாதா என்ன? அதனால்தான் உங்களிடம் உண்மை குடி கொண்டுள்ளது!

SP.VR. SUBBIAH said...

Success said...
அய்யா வணக்கம்
இறைவன் கருணை வடிவானவர். தன்னை வணங்குபவனுக்கும் அவர் அருள் செய்வார். வணங்காதவனுக்கும் அவர் அருள் செய்வார்.
இல்லை என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?
அதனால்தான் அவரை எல்லாம் வல்ல இறைவன் (almighty) என்கிறோம். இல்லையென்றால் அவர் வெறும் mightyயாகத்தான் இருப்பார்!
மிக அருமை நன்றிகள் குருவே!////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

////krajan said...
ஐயா வணக்கம் ஜோதிடப்பாடங்களோடு
வாழ்வியல் பாடங்களையும் தரும் குருவிற்கு எனது நன்றி.
கே.ராஜன் பவானி////

உங்களின் பாராட்டிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

sundari said...
/////krish said...
வாத்தியார் அவர்கள் hebeus corpus பதிவு செய்து கடவுளை கண்டுபிடித்து கோவிக்கண்ணனின் செலவில் சிங்கப்பூர் அழைத்து சென்று அவரிடம் ஆஜர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்./////
கடவுளைக் கண்டு பிடித்துவிட்டால், சிங்கப்பூர் செல்வது என்ன சிரமமா? அவர் (கடவுளின்) செலவிலேயே, நம் வகுப்பறை மாணவர்கள் 1,116 (இன்றையத்தேதியில் உள்ளவர்கள் எண்ணிக்கை) பேர்களும், அவருடன் சிங்கப்பூர் மலேசியா, சென்று வருவோம்! வகுப்பறைக்குப் பத்து நாட்கள் விடுமுறை விட்டு விடுவோம்!///
வணக்கம் சார் இந்த பதில் ரொம்ப நல்ல இருக்குது. 10 நாள் விடுமுறை கிடைக்கும் ஐய்யா. இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் என்றும் நல்லதை நமக்கு செய்வார். நம்ம எதாவது விபத்திலிருந்து தப்பித்த ஐயேர் கடவுளே ஐயேர்
அப்பா, ஐயேர் அம்மா என்று சொல்லுவோம் அந்த சமயம் அப்பா அம்மாவை கூப்பிட்டா அவங்க இருக்கிறாங்க கடவுளை கூப்பிட்டா அவரும் இருக்கிறார்.
சுந்தரி./////

நல்லது.நன்றி சகோதரி!

Sakthi Ganesh said...

iyya,
kadavulai patri ivvalavu elimaiyagavum, confident agavum solli engalukkum confidence koduppatharkku nandri, ungal eluthukkalai padipathil manathukku thairiyam varigirathu. pls continue to write and give us confidence always.Thanks a lot, pls give us more confidence. sakthi ganesh.

கோவி.கண்ணன் said...

//பிற‌விப்பெருங்கடலைத் தாண்டுவதே!
பிறவாமை வேண்டும்//

பிறவிப் பெருங்கடலில் விழுந்தது எப்படி என்று தெரிந்து கொண்டால் தாண்டுவது எளிதாகிவிடுமே !

(அப்படியே தாண்டினாலும் மீண்டும் தள்ளப்படப் மாட்டோம் என்பதற்கு ஏந்த உத்திரவாதமும் கிடையாது ஏனெனில்)

வினை செய்வதால் பிறக்கிறோம் என்றே ஒப்புக் கொண்டாலும் எந்த வினை முதன் முதலில் பிறக்க வைத்தது ? (புல்லாகி பூண்டாகி... என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை)

கோவி.கண்ணன் said...

//இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் என்றும் நல்லதை நம்க்கு செய்வார்.//

நல்லது செய்வார் என்று நினைப்பது ஓகே. பாசிடிவ் திங்கிங்க். எல்லா இடத்திலும் இருப்பார் என்பது சரியா ?

சூரிய வெளிச்சம் எல்லா இடத்திலும் இருக்கிறது என்கிற புரிதலில் சூரியன் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா ? அப்படிச் சொல்வது சரியா ? சூரியனுக்கு ஒரு இடத்தில் தானே இருக்கு. சூரிய வெளிச்சம் வேண்டுமானால் எங்கும் இருக்க வாய்ப்பு இருக்கு. அதுவும் (வெளிச்சம் கூட) சூரியனை நோக்கி இருக்கும் இடத்தில் தானே இருக்கும். சூரிய ஒளியை பிடித்து வைத்து எடுத்துச் செல்ல முடியுமா ?
:)

கோவி.கண்ணன் said...

//கடவுளைக் கண்டு பிடித்துவிட்டால், சிங்கப்பூர் செல்வது என்ன சிரமமா? அவர் (கடவுளின்) செலவிலேயே, நம் வகுப்பறை மாணவர்கள் 1,116 (இன்றையத்தேதியில் உள்ளவர்கள் எண்ணிக்கை) பேர்களும், அவருடன் சிங்கப்பூர் மலேசியா, சென்று வருவோம்! வகுப்பறைக்குப் பத்து நாட்கள் விடுமுறை விட்டு விடுவோம்!//

மெகா டூர்......!

:)

அது தேவை இல்லைன்னு சொல்லுவேன்.

********

ஒலி/ஒளி பரப்ப டவர் வைத்திருப்பார்கள். எந்த ரேடியோ/டிவி சரியாக டியூன் பண்ணப் பட்டிருக்கிறதோ (டிவி ஸ்டேசன் அருகில் இல்லாமலேயே) அதை ரேடியோ / டிவியில் ஒலி/ஒளிபரப்பை (உள்)வாங்க முடியும்.

ஓட்டை / அரை குறை ட்யூன் செய்யப்பட்ட ரேடியோ/தொலைகாட்சிகள் ஓவர் சவுண்டாக இருக்கும் எதுவும் சரியாகக் கேட்காது.

அரும்சொற்பொருள்:

டவர் - கடவுள்/இறைவன்
ரேடியோ/டிவி - அடியார்கள்

:)

SP.VR. SUBBIAH said...

//////Sakthi Ganesh said...
iyya,
kadavulai patri ivvalavu elimaiyagavum, confident agavum solli engalukkum confidence koduppatharkku nandri, ungal eluthukkalai padipathil manathukku thairiyam varigirathu. pls continue to write and give us confidence always.Thanks a lot, pls give us more confidence. sakthi ganesh./////

தன்நம்பிக்கை வர வேண்டும்/இருக்க வேண்டும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும். என் எழுத்துக்கள் அதைச் செய்ய வேண்டும் எனும் நோக்கில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இறையருள் (எனக்கு) இருக்கின்றவரையில் அதைத் தொடர்ந்து செய்வேன் நண்பரே! நன்றி!

SP.VR. SUBBIAH said...

Blogger Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
அப்பன் முருகனைப் போ(ப)ற்றிய என் முதல் கவிதை.

தமிழ்க் கடவுளே போற்றி! போற்றி!!
என் அப்பன் அவன்
அப்பனுக்கேப் பாடம் சொன்ன
ஞானப்பன் அவன்.
எப்பொழுதும் என்னுள்ளே
நிறைந்திருக்கும் நித்யமானவன் அவன். (என் அப்பன்..)

உலகப்பன் மைந்தன் அவன்
உண்மையுள் உறைபவன் அவன்
அறுபடை வீடுடையோன் - அவன்
ஆறுமுகம் எனும் பெயருடையோன். (என் அப்பன்..)

வேழமுகத்தானின் தம்பி அவன்
வினைதீர்த்து செந்தூரில் நின்றவனாம்,
வேல் கொண்ட நாயகனாம் - அவன்
வேண்டும் வரம் தந்திடுவான். (என் அப்பன்...)

வண்ண மயில் வாகனன் அவன்
வள்ளி தெய்வானையின் தலைவன் - அவன்
வானோர் போற்றும் தெய்வமாவான். (என் அப்பன்..)

பொய்கையிலேப் பிறந்தவனாம் அவன்
பூதப்படை நாயகனாம் - அவன்
பொய்யர்களை புடம்போட்டு எரிப்பவனாம். (என் அப்பன்..)

அழகப்பன் அவன் பெயராம் அவன்
அண்டினோரை ஆதரிக்கும் ஆண்டியுமாவான் - அவன்
மெய்யான அன்பருக்கே மெய்யப்பன் ஆவான். (என் அப்பன்..)

ஔவைக்கு அருளியவனாம் அவன்
அறியாமை பிணிக்கு ஒளடதமாவான்.
பன்னிரு கையுடையோன் அவன்
பவளச் செவ்வயினனாவான். (என் அப்பன்..)

சேவர்க் கொடியோனை, செங்கமல நிறத்தோனை;
ஆயர்க் குல மருமகனை, தேவாதி தேவனை;
சிவசக்தி மைந்தனை, சிங்கார வேலனை;
பஞ்சமிர்தப் பிரியனை, பார்வதியின் செல்வக்குமரன் அந்தக்-
கருணைக் கடலின் திருவடிப் பணிவோம் நாமே!
அன்புடன் ஆலாசியம் கோ./////

எதுகை, மோனை, சீர் என்று கவிதை இலக்கணங்கள் உங்களுக்குக் கூடி வர வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நன்றி ஆலாசியம்

SP.VR. SUBBIAH said...

/////கோவி.கண்ணன் said...
//பிற‌விப்பெருங்கடலைத் தாண்டுவதே!
பிறவாமை வேண்டும்//
பிறவிப் பெருங்கடலில் விழுந்தது எப்படி என்று தெரிந்து கொண்டால் தாண்டுவது எளிதாகிவிடுமே !
(அப்படியே தாண்டினாலும் மீண்டும் தள்ளப்படப் மாட்டோம் என்பதற்கு ஏந்த உத்திரவாதமும் கிடையாது ஏனெனில்) வினை செய்வதால் பிறக்கிறோம் என்றே ஒப்புக் கொண்டாலும் எந்த வினை முதன் முதலில் பிறக்க வைத்தது ? (புல்லாகி பூண்டாகி... என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை)//////

எப்படி விழுந்தோம் என்பது முக்கியமில்லை. எப்படித் தப்பிக்க வேண்டும் என்று உணர்ந்து செயல்பட்டால் போதும் கோவியாரே!

SP.VR. SUBBIAH said...

//////கோவி.கண்ணன் said...
//இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் என்றும் நல்லதை நம்க்கு செய்வார்.//
நல்லது செய்வார் என்று நினைப்பது ஓகே. பாசிடிவ் திங்கிங்க். எல்லா இடத்திலும் இருப்பார் என்பது சரியா ? சூரிய வெளிச்சம் எல்லா இடத்திலும் இருக்கிறது என்கிற புரிதலில் சூரியன் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா ? அப்படிச் சொல்வது சரியா ? சூரியனுக்கு ஒரு இடத்தில் தானே இருக்கு. சூரிய வெளிச்சம் வேண்டுமானால் எங்கும் இருக்க வாய்ப்பு இருக்கு. அதுவும் (வெளிச்சம் கூட) சூரியனை நோக்கி இருக்கும் இடத்தில் தானே இருக்கும். சூரிய ஒளியை பிடித்து வைத்து எடுத்துச் செல்ல முடியுமா ? :)/////

கடவுளின் அருள்தான் சூரிய ஒளி. அது எங்கும் இருக்கும். அதற்கு இன்னொரு பெயர் கருணை! அதனால்தான் வேண்டுதல் வேண்டாமை இன்றி அனைவருக்கும் அருள் பாலிக்கின்றார்.

“வேண்டுதல் வவேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”
- தெய்வப்புலவர் திருவள்ளுவர்

SP.VR. SUBBIAH said...

/////கோவி.கண்ணன் said...
//கடவுளைக் கண்டு பிடித்துவிட்டால், சிங்கப்பூர் செல்வது என்ன சிரமமா? அவர் (கடவுளின்) செலவிலேயே, நம் வகுப்பறை மாணவர்கள் 1,116 (இன்றையத்தேதியில் உள்ளவர்கள் எண்ணிக்கை) பேர்களும், அவருடன் சிங்கப்பூர் மலேசியா, சென்று வருவோம்! வகுப்பறைக்குப் பத்து நாட்கள் விடுமுறை விட்டு விடுவோம்!//
மெகா டூர்......! :)
அது தேவை இல்லைன்னு சொல்லுவேன்.///////

நீங்கள் வேண்டாமென்று சொன்னால் விடுவோமா? நாங்கள் வருவோம். உங்களுக்கு ஒரு செலவும் வைக்க மாட்டோம். எல்லா செலவையும் அவர் பார்த்துக்கொள்வார்!
அவர் = கடவுள்

SP.VR. SUBBIAH said...

/////கோவி.கண்ணன் said...
////// ஒலி/ஒளி பரப்ப டவர் வைத்திருப்பார்கள். எந்த ரேடியோ/டிவி சரியாக டியூன் பண்ணப் பட்டிருக்கிறதோ (டிவி ஸ்டேசன் அருகில் இல்லாமலேயே) அதை ரேடியோ / டிவியில் ஒலி/ஒளிபரப்பை (உள்)வாங்க முடியும்.
ஓட்டை / அரை குறை ட்யூன் செய்யப்பட்ட ரேடியோ/தொலைகாட்சிகள் ஓவர் சவுண்டாக இருக்கும் எதுவும் சரியாகக் கேட்காது.
அரும்சொற்பொருள்:
டவர் - கடவுள்/இறைவன்
ரேடியோ/டிவி - அடியார்கள் :)//////

கடவுளை டவராக்கி விடாதீர்கள். அவர்தான் நிலையம் (ஸ்டேசன்) என்றும் சொல்லி அடக்கிவிடவும் முடியாது. அவர் அதற்கும் மேலே! மக்களை வேண்டுமென்றால் ரேடியோ/டிவி என்று குறிப்பிட்டுச் சொல்லலாம்!
தேவைப்படுபவர்கள் கேட்கலாம். மற்றவர்கள் பெட்டியை அணைத்துவிட்டுத் தங்களுக்கு விருப்பமான செயல்களைச் செய்யலாம்!

Priya said...

present sir

ramakrishnan said...

உள்ளேன் ஐயா!

Sabarinathan TA said...

அய்யா,

பதிவு

கதை

பாடல்

மற்றும் கமெண்ட் எல்லாமே சூப்பர்.

நல்ல பதிவிற்கும், பாடலுக்கும், தகவல் பகிர்விர்க்கும் நன்றி அய்யா :-)

SP.VR. SUBBAIYA said...

/////Sabarinathan TA said...
அய்யா,
பதிவு
கதை
பாடல்
மற்றும் கமெண்ட் எல்லாமே சூப்பர்.
நல்ல பதிவிற்கும், பாடலுக்கும், தகவல் பகிர்விர்க்கும் நன்றி அய்யா :-)////

நல்லது. நன்றி சபரிநாதன்!