மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.12.09

Doubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்?

........................................................................................................
Doubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்?

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஒன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-----------------------------------------------------------------------
email no.1
திருமதி.நாகேஸ்வரி வெங்கடேசன்

ஐயா
பரல்கள் படிக்கும் போது சுய வர்க்கம் (Example சூரியன் சுயவர்க்கம் etc) இன்று கூறி உள்ளீர்கள் . சுய வர்க்கத்திற்கு அர்த்தம் கூறினால் நன்றாக இருக்கும். தொல்லைக்கு மன்னிக்கவும்

சுயவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமை (Strength of an individual planet) அதை எப்படித் தெரிந்து கொள்வது என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் விளக்கியுள்ளேன். கணினியில் ஜாதகத்தைக் கணித்தீர்கள் என்றால் அத்தனை விவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்
-------------------------------------------------------------------------
ஜாதகத்தின் பிறப்பு விவரம்!
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால்
படங்கள் பெரிதாகத் தெரியும்
அட்டவணை 1

அட்டவணை 2


அட்டவணை 3

அட்டவணை 4


அட்டவணை 5


அட்டவணை 6
-------------------------------------------------------------------------
email no.2
கண்ணன் சீதாராமன்

குருவே!
வணக்கம்
1. எம்பெருமான் மாயகண்ணன்!!! ஏன் தனது தாய், தந்தையரை விட்டு விட்டுச் சென்றார்? (எத்தனையோ நபர்கள் இருக்க ) யசோதை @ நந்தகோபரிடம் ஒப்படைக்க காரணம் என்ன ? பெற்றோரை பகவானே தவிக்க விட்டது தவறு இல்லையா ?

என்ன குழப்புகிறீர்கள்? பிறந்த குழந்தையை அதன் தாய் தேவகியும், தந்தை வாசுதேவரும் அல்லவா யசோதை & நந்தகோபர் தம்பதியிடம் ஒப்படைத்தார்கள். அதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. கிருஷ்ண புராணத்தை மீண்டும் நன்றாகப் படியுங்கள்.

2. இன்றைய சூழலில் யசோதை @ நந்தகோபர் போல், ஒரு சாதரணமான குழந்தையை, தனது குழந்தையாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஏன் முடியாது! மனதிருந்தால் முடியும். குழந்தை இல்லாத எத்தனையோ பெற்றோர்கள் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்

3. ஐயா தவறான கேள்வி என தாங்கள் நினைத்தால் விட்டு விடவும் . இங்கு இணைத்துள்ள கண்ணனின் படம்
ஓர் வணிக வகுப்பில் உள்ள குடும்பத்தில் உள்ளது. அடியனும் அதே வகுப்புத் தான், அவர்களை அடையாளம் காண குருநாதர் தான் வழி சொல்ல வேண்டும். ஏன்னெனில் அவர்களிடம் உள்ள கண்ணனின் படத்திற்கும் அடியேனுக்கும் சம்பந்தம் உண்டு என்று ஒரு மகான் சொல்லி உள்ளார் . அது எந்த அளவில் உண்மை என்பது எனக்கு தெரியாது ஐயா!!

இனம், வகுப்பு, பணம், பொருள் எனும் மாயைகளை எல்லாம் உதறிவிட்டு, இறைவனை வணங்குங்கள். எல்லா அடையாளங்களையும் உரிய நேரத்தில் அவன் காட்டுவான்!
------------------------------------------------------------
email no.3
சரவணகுமார்

Dear Sir,
The below are my doubts, Those are really important sir. Please answer them,

1. கால சர்ப தோசம் உள்ளவர்கள் ஆண் , அதே தோசம் உள்ள பெண்ணை மட்டுமே திருமணம் செய்யவேண்டுமா?

தோஷம் உள்ளவர்கள், தோஷம் உள்ள பெண்ணை மணப்பது நல்லதுதான். மைனஸ் பெருக்கல் மைனஸ் ப்ளஸ் ஆகிவிடும். முதலில் நல்ல வரன் கிடைப்பது கஷ்டம். ஆகவே உங்களை மணந்து கொள்ள ஒரு பெண் சம்மதித்தால் அதுவே பெரிய பாக்கியம். இந்தக் காலத்துப் பெண்கள் மிகவும் உஷாரானவர்கள். அதனால் இதைச் சொல்கிறேன்., இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மணந்து கொள்ளுங்கள். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான். இப்போதே திருமண வயதைக் கடந்து விட்டீர்கள். ஜாதகத்தைப் பார்த்துப், பார்த்து,
வயதையும், பெண்ணையும் கோட்டைவிட்டு விடாதீர்கள்.

2. பாதகதிபதியின் திசையில் மரணம் நிகழுமா? eg. மேஷ லக்னம், 8 இல் செவ்வாய் & சனி, சனி திசையில் மரணமா?

உங்கள் வயதிற்கு மரணத்தைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது.மரணம் வரும்போது வரட்டும். அதற்காகக் கவலைப் பட்டு, இருக்கிற பொழுதை எதற்காக வீணாக்க வேண்டும்?

3. எனக்கு துலாலக்னம், சனி திசை. (யோகா திசை) அனால் சனி 11 இல் சிம்மம் - பகை. 44 பரல்கள், சுயவர்க்க பரல் 6. சனி திசை எனக்கு நல்லதா அய்யா?

11, 44, 6 என்ற எண்ணிக்கைகளைப் போட்டு நீங்களே பதிலைச் சொல்லிவிட்டீர்கள். பிறகென்ன? மகிழ்ச்சியாக இருங்கள்.

4. 7 இல் சந்திரன் & கேது இருந்தால், கேட்ட பெண்கள் சாகவசம் ஏற்படும். (பாடத்தில் படித்தேன்). குருவின் 9 ஆம் பார்வை இருந்தால் இந்த தோசம் நிவர்த்தியா?

அதே பாடத்தை மீண்டும் படியுங்கள். குரு பார்த்தால் தீமைகள் விலகிவிடும்/குறையும் என்று எழுதியிருப்பேன்

5. ஒரு ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அனால், வேறு என்ன கவனிக்க வேண்டும் அய்யா? திருமண சமாச்சாரத்திற்கு சுக்ரன் முக்கியம் அல்லவா? அவரே 5 ஆம் அதிபதியாகவும் வருகிறார். மிதுன லக்னம், 4 இல் சுக்ரன் நீசம்?

சுக்கிரனை மட்டும் பார்த்து ஓட்டுப்போட்டால் போதுமா? உங்கள் தொகுதியையும் அதன் அமைச்சரையும் பாருங்கள். அதாவது உங்கள் ஜாதகத்தின் ஏழாம் வீட்டையும், அதன் அதிபதி குரு பகவானின் வலிமையையும் பாருங்கள்
------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

39 comments:

Shyam Prasad said...

மிக்க நன்றி

Saravana said...

Dear sir,

Thank you so much for the clarifications.
Preparing another 5 questions.

Thanks
Saravana

Saravana said...

Dear sir,

இன்னும் ஒரே ஒரு கேள்வி "My Doubts 2‏" என்ற தலைப்பில், திருமணத்தை பற்றியது.

நன்றி
சரவணா
கோயம்புத்தூர்

thirunarayanan said...

கேள்வி பதில் பகுதி
பலருடைய சந்தேகங்களுக்கு
விளக்கம் கிடைக்கும்.
நன்றி அய்யா.

krish said...

Super.

SP.VR. SUBBIAH said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

//////Saravana said...
Dear sir,
Thank you so much for the clarifications.
Preparing another 5 questions.
Thanks
Saravana//////

No! No! No! You need not send any questions regarding 7th house till your marriage is fixed/performed!

SP.VR. SUBBIAH said...

Saravana said...
Dear sir,
இன்னும் ஒரே ஒரு கேள்வி "My Doubts 2‏" என்ற தலைப்பில், திருமணத்தை பற்றியது.
நன்றி
சரவணா
கோயம்புத்தூர்/////

Do not try to fill up the Q & A session with your own questions connected with horoscope of brides coming on your way. Nothing will be answered! Your quota is over

SP.VR. SUBBIAH said...

/////thirunarayanan said...
கேள்வி பதில் பகுதி பலருடைய சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கும். நன்றி அய்யா./////

நல்லது.நன்றி!

Alasiam G said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

இது போன்ற
வினா விடை அங்கம்,
அருமையானச் சொக்கத் தங்கம்.

பாஞ்சாலி சபதத்தில்
பாரதிச் சொன்னது போல்
வேள்விப் பொருட்களை
-------- கவ்விக்கொண்டு போனது போல்
வேறதுவும் நுழைத்து விடாமல்
(கவ்விக்கொடுப் போய்விடாமல்)
பூட்டுப் போட்டுக் வையுங்கள்.

திண்டுக்கல் மாணவர்கள் யாராவது
பூட்டு அனுப்பிவையுங்கள்.

வினா விடைக்கு நன்றிகள் குருவே!

kannan said...

ஐயா !!!

1. அடியேன் கேட்பது (பகவான் மாயகண்ணனை பற்றியது, தாங்கள் கூறுவது அவதாரத்தின் நோக்கம் ) ஒரு தாய் @ தந்தையர் ஸ்தானத்தில் இருந்து பார்த்தால் .(ஆயிரம் காரணம் இருந்தாலும்) பெற்றவர்கள் மனது என்ன பாடு பட்டு இருக்கும் என்பது ஐயா!

2. குருவின் வாக்கை வேத வாக்காக ஏற்றுக்கொண்டு இறைவனை (எம்பெருமான் மாயகண்ணனை ) நேற்று போல் நித்தம் தொழ, இப்பிறப்பு மட்டும் அல்லாது எம்பெருமான் கார்முகில் வண்ணன் கண்ணனை எழு எழு பிறவிக்கும் தொழ வேண்டி ஐயா ஆசி வழங்கவேண்டும் !!!

ஈழத்துப் புயல் said...

something wrong with " அட்டவணை 4"
guru - 4 barals
mars - 4 barals
sani - 4 barals

if i am wrong please correct me sir.

அனைவருக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!!!!!

Sekar said...

அஷ்டகவர்க்கம் அட்டவணை ஒன்றும் இரண்டும் எண்ணிக்கையில் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அட்டவணை மூன்று வேறு பட்டு இருக்கிறதே. அது அப்படித்தானா?

Arul said...

ஐயா!!!

விளக்கங்களுக்கு மிக்க நன்றி...

உங்கள் முதல் ஜோதிட நூல் வெளியிட தயாராகி விட்டதா???

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
இது போன்ற வினா விடை அங்கம்,
அருமையானச் சொக்கத் தங்கம்.
பாஞ்சாலி சபதத்தில் பாரதி சொன்னது போல்
வேள்விப் பொருட்களை -------- கவ்விக்கொண்டு போனது போல்
வேறதுவும் நுழைத்து விடாமல் (கவ்விக்கொடுப் போய்விடாமல்)
பூட்டுப் போட்டுக் வையுங்கள்.
திண்டுக்கல் மாணவர்கள் யாராவதுபூட்டு அனுப்பிவையுங்கள்.
வினா விடைக்கு நன்றிகள் குருவே!///

கூகுள் ஆண்டவர் கொடுத்த பூட்டு உள்ளது! அதைவிடச் சிறந்த பூட்டு எங்கேயும் கிடைக்காது!:-)))

SP.VR. SUBBIAH said...

//////kannan said...
ஐயா !!!
1. அடியேன் கேட்பது (பகவான் மாயகண்ணனை பற்றியது, தாங்கள் கூறுவது அவதாரத்தின் நோக்கம் ) ஒரு தாய் @ தந்தையர் ஸ்தானத்தில் இருந்து பார்த்தால் .(ஆயிரம் காரணம் இருந்தாலும்) பெற்றவர்கள் மனது என்ன பாடுபட்டு இருக்கும் என்பது ஐயா!

பேற்றோர்களே கம்சனுக்குப் பயந்து ஆண் குழந்தையான கண்ணனை யசோதாவைடம் கொடுத்தாகப் புராணம் சொல்கிறது. இதில் மனம் பாடு படுவதற்கு ஒன்று மில்லை. அப்படியே பாடுபட்டாலும் அது ஒவ்வாத செயல். நான் எனக்குத் தெரிந்ததை இரண்டு விதமாகச் சொல்லிவிட்டேன். இனி இந்த ஆட்டத்திற்கு அடியேன் வரவில்லை.ஜூட்! ஜூட்!

2. குருவின் வாக்கை வேத வாக்காக ஏற்றுக்கொண்டு இறைவனை (எம்பெருமான் மாயகண்ணனை ) நேற்று போல் நித்தம் தொழ, இப்பிறப்பு மட்டும் அல்லாது எம்பெருமான் கார்முகில் வண்ணன் கண்ணனை எழு எழு பிறவிக்கும் தொழ வேண்டி ஐயா ஆசி வழங்கவேண்டும் !!!////

உங்கள் எண்ணம் ஈடேற எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவான்! வாழ்க வளமுடன்!
நான் எளியவன். என்னுடைய ஆசி அதையும் பெற்றுத் தராது. இருந்தாலும் நீங்கள் கேட்டுள்ளதால். பிடியுங்கள் பத்து டன் ஆசிகள்!

SP.VR. SUBBIAH said...

/////ஈழத்துப் புயல் said...
something wrong with " அட்டவணை 4"
guru - 4 barals
mars - 4 barals
sani - 4 barals
if i am wrong please correct me sir.
அனைவருக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!!!!!/////

நானாக எதையும் எழுதவில்லை! கணினி கணித்துக் கொடுத்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது மட்டுமே என் வேலை. அப்படி எடுக்கும்போது கட்டங்கள் மாறியுள்ளன. இப்போது சரி செய்துவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
Super.
வாழ்த்துக்கள்!!!!!/////

நன்றி க்ரீஷ்!

SP.VR. SUBBIAH said...

Blogger Sekar said...
அஷ்டகவர்க்கம் அட்டவணை ஒன்றும் இரண்டும் எண்ணிக்கையில் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் அட்டவணை மூன்று வேறு பட்டு இருக்கிறதே. அது அப்படித்தானா?
இருக்கிறதே. அது அப்படித்தானா?

முதல் இரண்டும் சுயவர்க்க அட்டவணைகள்
மூன்றாவது கூட்டு அட்டவணை

SP.VR. SUBBIAH said...

//////Blogger Arul said...
ஐயா!!!
விளக்கங்களுக்கு மிக்க நன்றி...
உங்கள் முதல் ஜோதிட நூல் வெளியிட தயாராகி விட்டதா???/////

வேலை நடந்து கொண்டு உள்ளது!

astroadhi said...

அய்யா இனிய வணக்கம்,

பரல் பற்றிய மறுவிளக்கம் அருமை ,,,,நன்றி வணக்கம்

kmr.krishnan said...

கேள்வி‍ பதில் பகுதி கனஜோராக ஆரம்பித்துவிட்டது.பூபாளம் வாசித்துத் துவங்கும்போதே கல்யாணக் களை கட்டிவிட்டது.
பரலைத் திருத்தம் செய்தது போலவே காலசர்ப தோஷம் பதிலில் மைனஸ் கூட்டல் மைனஸ் என்பது மைனஸ் 2 ஆகிவிடும்;எனவே மைனஸ்பெருக்கல் மைனஸ் என்று திருத்தம் செய்து விடுவது நலம்.அப்போது தான் பிளஸ் என்று ஆகும்.

T K Arumugam said...

ஐயா வணக்கம்

கேள்வி பதில் பதிவு மிகவும் சுவையாக உள்ளது. 21 நாட்களுக்கு மட்டுமில்லாமல் வாரம் ஒரு பதிவு அல்லது இரு பதிவுகளை கேள்வி பதிலுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்குமே. அடியேன் ஆசை. தங்கள் சித்தம்.

நன்றி

வாழ்த்துக்கள்

ananth said...

பலன் காண்பது என்பது சுருக்கமாக சொல்வதானால், (உதாரணம்: திருமணம், குழந்தை பேறு இது போல்) அந்தந்த பாவம், அதன் அதிபதி, அதற்கு காரகர் இந்த மூவரின் நிலையை அறிய வேண்டும். மூவரும் பலமானால் அந்த பாவ பலன் அந்தந்த கிரக தசா புத்தி அந்தரங்களில் நிச்சயம் நடக்கும். அவர்களுடைய பலத்திற்கு தகுந்த பலன். சரிதானே.

Sekar said...

I read this in a site and I think it is appropriate to give here for Mr.Kannan Seetharaman.

"What is God?

God is a supreme being that is shapeless, timeless, eternal and impassive. The concept of God is indefinable that should be felt.

If such a God is going to be born in this world, he shouldn’t be bounded to feelings and temporal things.

If Krishna had born as the first child of his parents, then it would be purely because of his parent’s longing on discovering what’s not in them.

When Devaki found each child for her been killed one after the other, she wept and mourned. And as time grew, she accepted and understood that it was her duty to lead that existence till her 8th delivery.

So when she conceived for the 8th time, neither Vasudevar nor Devaki were delighted.

For any avatar to happen, the father shouldn’t be interested in lust rather consider it to be a duty and mother should be free from fear and desires, not bothered about her comforts and concentrates only about her child.

The slaughter of their 6 children made Vasudevar and Devaki to attain that state and realized the fact that they were only the gateway of divine venture. So they welcomed Krishna with no feel of ownership.

Everything happens around us has its reason. It may not be understandable at that instant, but time will never fail to teach us - provided we should be ready for it."

jadam said...

ஐயா!!!

விளக்கங்களுக்கு மிக்க நன்றி...

karmegaraja said...

ஐயா!

கேள்வி பதில் ஆரம்பித்ததற்கு நன்றி. என்னுடைய கேள்வி என்னவென்றால், கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பாடத்தில் சிறு குறிப்பு மட்டும் கூறினீர்கள். அதனைப்பற்றி தெளிவுபடித்தவும் ஐயா! கேந்திராதிபத்திய தோஷம் எத்த்னையாண்டுகள் நீடிக்கும்?

மற்றுமொரு கேள்வி: குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை, பார்வை பெறும் இடங்கள் மட்டுமே பலன் பெறும் என சிலர் சொல்ல கேட்கிறேன். நிஜமா ஐயா?

ஆவலுடன்,
கார்.

Balasubramanian Pulicat said...

The Strength of Individual Planet implies positive strength. Is that right. For example, if the suyavargam of negative planets like Rahu, Ketu etc are more, then it implies that their negative effects will be less. Please clarify. I will also be glad if you can (only if possible), in the given example, explain step by step how that suyavargam paral is obtained for any one planet, though astro softwares like JH provides them handy.

SP.VR. SUBBIAH said...

astroadhi said...
அய்யா இனிய வணக்கம்,
பரல் பற்றிய மறுவிளக்கம் அருமை ,,,,நன்றி வணக்கம்////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
கேள்வி‍ பதில் பகுதி கனஜோராக ஆரம்பித்துவிட்டது.பூபாளம் வாசித்துத் துவங்கும்போதே கல்யாணக் களை கட்டிவிட்டது. பரலைத் திருத்தம் செய்தது போலவே காலசர்ப தோஷம் பதிலில் மைனஸ் கூட்டல் மைனஸ் என்பது மைனஸ் 2 ஆகிவிடும்;எனவே மைனஸ்பெருக்கல் மைனஸ் என்று திருத்தம் செய்து விடுவது நலம்.அப்போது தான் பிளஸ் என்று ஆகும்./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி! பதிவை எழுதும்போது அதிகாலை மணி 3:00. முடித்து வலை ஏற்றும்போது அதிகாலை மணி 4:00. தூக்கக் கலக்கம். கவனக்குறைவு. தவறைப் பதிவில் திறுத்திவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBIAH said...

/////T K Arumugam said...
ஐயா வணக்கம்
கேள்வி பதில் பதிவு மிகவும் சுவையாக உள்ளது. 21 நாட்களுக்கு மட்டுமில்லாமல் வாரம் ஒரு பதிவு அல்லது இரு பதிவுகளை கேள்வி பதிலுக்கு ஒதுக்கினால் நன்றாக இருக்குமே. அடியேன் ஆசை. தங்கள் சித்தம்.
நன்றி, வாழ்த்துக்கள்////

எல்லோரும் விரும்பினால்,அப்படியே செய்யலாம்! நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////ananth said...
பலன் காண்பது என்பது சுருக்கமாக சொல்வதானால், (உதாரணம்: திருமணம், குழந்தை பேறு இது போல்) அந்தந்த பாவம், அதன் அதிபதி, அதற்கு காரகர் இந்த மூவரின் நிலையை அறிய வேண்டும். மூவரும் பலமானால் அந்த பாவ பலன் அந்தந்த கிரக தசா புத்தி அந்தரங்களில் நிச்சயம் நடக்கும். அவர்களுடைய பலத்திற்கு தகுந்த பலன். சரிதானே.////

உண்மை! நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

/////Sekar said...
I read this in a site and I think it is appropriate to give here for Mr.Kannan Seetharaman.
"What is God?
God is a supreme being that is shapeless, timeless, eternal and impassive. The concept of God is indefinable that should be felt.
If such a God is going to be born in this world, he shouldn’t be bounded to feelings and temporal things.
If Krishna had born as the first child of his parents, then it would be purely because of his parent’s longing on discovering what’s not in them.
When Devaki found each child for her been killed one after the other, she wept and mourned. And as time grew, she accepted and understood that it was her duty to lead that existence till her 8th delivery.
So when she conceived for the 8th time, neither Vasudevar nor Devaki were delighted.
For any avatar to happen, the father shouldn’t be interested in lust rather consider it to be a duty and mother should be free from fear and desires, not bothered about her comforts and concentrates only about her child.
The slaughter of their 6 children made Vasudevar and Devaki to attain that state and realized the fact that they were only the gateway of divine venture. So they welcomed Krishna with no feel of ownership.
Everything happens around us has its reason. It may not be understandable at that instant, but time will never fail to teach us - provided we should be ready for it."////

விளக்கங்களுக்கு மிக்க நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////jadam said...
ஐயா!!!
விளக்கங்களுக்கு மிக்க நன்றி.../////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

////karmegaraja said...
ஐயா!
கேள்வி பதில் ஆரம்பித்ததற்கு நன்றி. என்னுடைய கேள்வி என்னவென்றால், கேந்திராதிபத்திய தோஷம் பற்றி ஒரு பாடத்தில் சிறு குறிப்பு மட்டும் கூறினீர்கள். அதனைப்பற்றி தெளிவுபடித்தவும் ஐயா! கேந்திராதிபத்திய தோஷம் எத்த்னையாண்டுகள் நீடிக்கும்?
மற்றுமொரு கேள்வி: குரு இருக்கும் வீட்டுக்கு பலன் இல்லை, பார்வை பெறும் இடங்கள் மட்டுமே பலன் பெறும் என சிலர் சொல்ல கேட்கிறேன். நிஜமா ஐயா?
ஆவலுடன்,
கார்./////

உங்கள் கேள்விகளை மின்னஞ்சலில் கேளுங்கள். எல்லோருக்கும் ஒரே வழி!
என்னுடைய மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

SP.VR. SUBBIAH said...

/////Balasubramanian Pulicat said...
The Strength of Individual Planet implies positive strength. Is that right. For example, if the suyavargam of negative planets like Rahu, Ketu etc are more, then it implies that their negative effects will be less. Please clarify. I will also be glad if you can (only if possible), in the given example, explain step by step how that suyavargam paral is obtained for any one planet, though astro softwares like JH provides them handy./////

No special door! Please send your queries through email!
My email ID is classroom2007@gmail.com

kannan said...

ஆசானே !!!!!

வணக்கம் !

தங்களின் அறியுரைக்கு மிக்க நன்றி ஐயா!!!

தாங்கள் மற்றும் இங்குவரும் பல ஆன்மிக சிந்தனை உள்ள ஆன்மிகவாதிகள் நன்றாக கல்வி கற்று தேர்ச்சி அடைந்தவர்,

அடியேனின் கருத்து ஒன்றில் தெளிவே இல்லாமல் இருப்பதை விட, விளக்கம் பெரும் நோக்கத்தில் தான் இச் சிருபாலகன் கேள்விகள் கேட்டது ஐயா!!!

இந்த சிருவனுக்கு பலகாலமாக இருந்த சந்தேகத்தை மிக அருமையாக விளக்கிய மற்றும் ஒரு ஆசிரியருக்கும் ( ஐயா திருவாளர் சேகர் அவர்கள் ) அடியேனின் பணிவான நன்றி கலந்த வணக்கம். >>>>>

Lakshmanan said...

ஐயா வணக்கம்,

கேள்வி பதில் பகுதி அருமை. அட்டவணை 6 ல் கும்பம் என்பதற்கு பதில் தனுசு (லக்கினம்) என்று இருக்க வேண்டும். தட்டச்சுப் பிழை என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு
தி. லெட்சுமணன்

Raja said...

அஷ்டவர்க்க பாடத்தில் தயவு செய்து என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் குருவே. எனது மின்னஞ்சல் முகவரி v.kajen1@gmail.com OR v.kajenthiran@gmail.com