மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 941 - 950. Show all posts
Showing posts with label Lessons 941 - 950. Show all posts

7.10.16

ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி ஒன்று


ஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி? பகுதி ஒன்று

ஜாதகத்தில் ஒரு நல்லவனும், ஒரு கெட்டவனும் சேர்ந்திருந்தால் என்ன ஆகும்? அதை இன்று அலசுவோம்!

Association of Moon & Rahu

சந்திரனும் ராகுவும் சேர்ந்திருப்பதால் ஏற்படும் பாதகங்கள்

சந்திரன் மனகாரகன். Authority for mind

ஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருந்தால், ஜாதகன் எப்பொதும் மன மகிழ்ச்சியுடன் இருப்பான். ஜாதகியாக இருந்தால், “லல லல்லல்லா...லல லல்லல்லா...” என்று பிண்ணனி இசை ஒலிக்க எப்பொதும் குஷியாக இருப்பாள்.

சந்திரன் வலிமை இழந்திருந்தால் மட்டும்தான் பிரச்சினை. அதைவிடப் பெரிய பிரச்சினை ராகுவுடன் சேர்ந்திருப்பது. சில (நன்றாகக் கவனிக்கவும்) சில ஜாதகர்களை அந்தக் கூட்டணி மன நோயாளியாக்கக்கூடும்.

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருப்பாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருப்பாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருப்பாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கும்.

சந்திரனுடன் ராகு சேரும்போது ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மை மிகுந்திருக்கும். யாரையும், எதையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.

சில சந்தேகப் பிறவிகளின் சந்தேகங்கள் வினோதமாக இருக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்குப் போகும்போது, பேருந்து நிலையத்திற்குச் சென்று, பேருந்தில் ஏறி அமர்ந்து, பயணச் சீட்டை வாங்கிய பிறகுதான் வீட்டை நன்றாகப் பூட்டினோமா? என்ற சந்தேகம் கிளம்பும். தன் மனைவி யாருடன் பேசினாலும் சந்தேகம் கொள்வான்.

அதுபோன்ற அமைப்புடைய பெண்னும் குழப்பமானவள்தான். தன்னுடைய கணவன் யதேட்சையாக வேறு ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால், அவன் நாம் இருக்கும்போதே, இப்படி சைட் அடிக்கிறானே, இல்லாத போது என்னென்ன செய்வான் என்கின்ற சந்தேகம் எழும். கணவனின் நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவன் இல்லாத நேரங்களில் அவனுடைய சட்டைப் பையில் உள்ள காகிதங்களை படித்துப் பார்ப்பாள். அவனுக்கு வந்துள்ள அலைபேசி எண்களை நோண்டிப் பார்ப்பாள்.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாம் சந்திரனுடன் சேரும் ராகுவின் திருவிளையாடல்

வாழ்க்கையைப் பற்றி ஒற்றை வரியில் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

Life is nothing but adjusting with the people around us.

நம்மைச் சுற்றியுள்ளவர்களை அனுசரித்துக்கொண்டு போவதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம்.

அது இல்லாவிட்டால் என்ன ஆகும்?

ஒரு உதாரண ஜாதகத்துடன் இன்று விரிவாக விளக்குகிறேன்

சந்திரனும் ராகுவும் ஒருவரின் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டு கூட்டாக இருப்பது நன்மையானதல்ல!.

அந்த அமைப்பு இருந்து மற்ற கிரகங்கள் எல்லாம் ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நன்றாக இல்லாவிட்டால் மட்டுமே பிரச்சினைகள் தலை தூக்கும்.

கீழே கொடுத்துள்ளது ஒரு அம்மணியின் ஜாதகம்.


அம்மணி படித்தவர். உரிய வயதில் திருமணமாகிவிட்டது. கணவர் ஒரு அரசியல்வாதி. வீடு தங்கமாட்டார். எப்போதும் கட்சி, காட்சி என்று சுற்றிக் கொண்டிருப்பார். ஓரளவு செல்வாக்குடனும் இருந்தார். கட்சி மற்றும் கட்சியைவைத்துச் செய்யும் பணிகளின் மூலம் குறைவில்லாத பணவரவும் இருந்தது. அவர் மகிழ்ச்சியுடன்தான் இருந்தார்.

ஆனால் அவரைக் கைபிடித்த மனைவிக்கு திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. கணவரின் நடத்தை மீது சந்தேகம் வேறு ஏற்பட்டு, அவரை வாட்டிக்கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல வெறுப்படைந்துவிட்டார். அத்துடன் தனது 27ஆவது வயதில் கணவரை விட்டுப் பிரிந்து விவாகரத்தும் பெற்றுவிட்டார். தனிப்பட்டுப் போய்விட்டார்.

என்ன காரணம்?

லக்கினத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகி அழகான தோற்றத்துடன் இருப்பாள். உடன் ராகுவும் இருந்தால் ஜாதகி சுய கட்டுப்பாடுகள் மிகுந்தவளாக இருந்தாள். தன்முனைப்பு (ego) உள்ளவளாக இருந்தாள். யாருடனும் அனுசரித்துப் போகும் மனநிலை இல்லாதவளாக இருந்தாள். மனகாரகன் சந்திரனுடன் ராகு கூட்டாக இருந்தால் அந்த நிலை ஏற்பட்டது. அத்துடன் ஜாதகிக்கு சந்தேக மனப்பான்மையும் மிகுந்திருந்தது.

அந்த சந்தேகங்கள்தான் வலுத்து கடைசியில் விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்துவரை சென்றதற்கு அது மட்டும்தான் காரணமா?

இல்லை!

லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு மிகவும் பலவீனமடைந்திருப்பதைப் பாருங்கள். ஏழில் மூன்று கிரகங்களின் ஆதிக்கம். அவர்களில் ஒருவன் வில்லன். ஆறாம் வீட்டு அதிபதியான புதன். பூர்வபுண்ணியாதிபதியான சூரியனும் நீசம்பெற்று அங்கே ஆதிக்கம் செலுத்துகிறான். அவர்கள் இருவருடன் கேதுவும் உள்ளார். ஏழாம் அதிபதி சுக்கிரன் பகைவீட்டில். பகை வீட்டில் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்துடன் உள்ளார். அதனால்தான் திருமணமே நடந்தது.

12ல் சனி. அது அயன, சயன போக பாகியத்திற்கான வீடு. அங்கே சனி இருப்பது நல்லதல்ல. போக பாக்கியத்தைக் குறைத்தான். அவளுடைய தூக்கத்தைக் கெடுத்தான். அவன் தன்னுடைய வேலையைக் கச்சிதமாகச் செய்தான். ஜாதகியின் புணர்ச்சி இன்பத்தில் கையை வைத்தான். ஜாதகிக்கு அது தொடர்ந்து கிடைக்காமல் இருக்கும் வழியைச் செய்தான். திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

ஜாதகிக்குக் கேது திசை நடக்கும்போது அது இரண்டும் நடந்தது. அதாவது விவாகம் மற்றும் விவாகரத்து ஆகிய இரண்டுமே கேது திசையில் அரங்கேறியது. கேது ஏழில் இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் அவர் வேறு இரு முக்கியமான கிரகங்களுடன் கிரகயுத்தத்தில் இருப்பதையும் கவனியுங்கள்

விளக்கம் போதுமா?

ஒரு ஜாதகத்தை சர்ப் எக்செல் போட்டு அலசுவது இப்படித்தான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.16

Quiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான். மயங்காதே!

Quiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான். மயங்காதே!

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், இறைவன் இருக்கிறார். அவர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு இருந்தால், தலைவலி இல்லை அல்லவா?

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, அலசச் சொல்லியிருந்தேன்!

1. நிரந்தர வேலை இல்லை. கையில் போதிய அளவு வருமானம் இல்லை!.
ஜாதகத்தை அலசி என்ன காரணம் என்பதையும் - தீர்வு உண்டா இல்லையா என்பதையும் எழுதுங்கள் என்று சொல்லியிருந்தேன்
-------------------------
இதே ஜாதகத்தை 27-3-2016 (quiz: புதிர் எண்.106) அன்று நாம் அலசிவிட்டதாக நமது வகுப்பறை மாணவர் திலகம் ஸ்ரீனிவாஸ ராஜுலு தெரிவித்திருந்தார். அவருடைய நினைவாற்றலுக்குப் பாராட்டுக்கள்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்!

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால் நல்லது. அதிலும் ஸ்திரமான வேலை கிடைத்தால் மிகவும் நல்லது.எல்லோருக்கும் அப்படிக்கிடைத்துவிடுகிறதா என்ன? ஸ்திரமான வேலை கிடைக்காமல் எத்தனை பேர் அவதிப் படுகிறார்கள்?

அதற்குக் காரணம் என்ன? நிவர்த்தி என்ன? ஜாதகக் கோளாறுகள்தான் காரணம்!! ஜாதகத்தில் நிவர்த்தி இருந்தால் நிவர்த்தியாகிவிடும்!
-----------------------------------------------------------------------------------


ஜாதகத்தைப் பாருங்கள்.
கும்ப லக்கின ஜாதகம். கும்பலக்கினத்திற்கு லக்கினாதிபதியும், 12ஆம் அதிபதியும் ஒருவரே. அதாவது சனீஷ்வரன். இந்த லக்கினத்திற்கு மட்டும்
அப்படியொரு அவஸ்தையான அமைப்பு. இந்த லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரம் அல்லது திரிகோணங்களில்
அமர்ந்திருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை. இல்லையென்றால் தோல்விகள் நிறைந்த வாழ்க்கை. கும்ப லக்கினத்திற்கு லக்கினநாதன் சனீஷ்வரன் 3, 6, 8  &12 ஆம் இடங்களில் மறையக்கூடாது!

ஜாதத்தில் சனி ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளது. அது நட்பு வீடும் கூட. அதானால் ஜாதகனின் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கைதான்.

லக்கினநாதன் திரிகோண வீட்டில் (5ல்) அமர்ந்திருப்பது. அதுவே ஜாதகனின் ஜாதகத்தில் முக்கியமான அமைப்பாகும். அத்துடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை யோகத்திலும் உள்ளார். இந்தக் கருத்தை நமது மூத்த மாணவர்களில் ஒருவரான யு.எஸ்.ஏ சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார் (பதில் எண்.12ஐ பார்க்கவும்) அவருக்கு ஒரு விஷேசமான பாராட்டு.

ஜாதகன் பொறியியல் படித்தவன்.
ஆனால் துவக்கத்தில் ஜாதகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளில் 9 வேலைகளுக்கு  மாறியுள்ளான்.
ஏன் அப்படி?
பத்தாம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்துள்ளான். அது விரும்பத்தக்கதல்ல! அத்துடன் 3ல் உள்ள  செவ்வாயின் பார்வையும் (பத்தாம்
வீட்டின்மேல் உள்ளது) உள்ளது, அத்துடன் கேது திசையும் நுழைந்து ஜாதகரைப் படுத்தி விட்டது.
28 வயதிற்குப் பிறகு யோககாரகன் சுக்கிரனின் திசையில் ஜாதகனுக்கு ஸ்திரமான நல்ல வேலை கிடைத்தது.
சுக்கிரன் ஜாதகத்தில் 12ல் இருந்தாலும் நவாம்சத்தில் அதே மகரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றிருப்பதால் அவர் சரி செய்து ஜாதகனின்
வாழ்க்கையை சீரமைத்தார். அத்துடன் அவர் பத்தாம் வீட்டின் அதிபதி அவர் 12ல் மறைந்தாலும் தன்னுடைய வர்கோத்தம பலத்தால் சரி செய்தார்.

விளக்கம் போதுமா?

கலந்துகொண்டவர்களில் 8 பேர்கள் பாதிக் கிணறைத் தாண்டியுள்ளார்கள். முழுக்கிணறையும் தாண்டியவர்கள் 5 பேர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 13 பேர்களின் பெயர்களையும் உங்களின் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

எந்து உடல்நிலை காரணமாக பதிவை உரிய நேரத்தில் பதிவிட முடியவில்லை. வருந்துகிறேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

1. Blogger Ramanathan said... பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
2.Blogger kmr.krishnan said... இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
3.Blogger amuthavel murugesan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
4.Blogger Sathish Kumar said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
5.க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை. இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
6.Blogger venkatesh r said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
7.Blogger mohan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
8.Blogger adithan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
9.Blogger Gajapathi Sha said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
10.Blogger Chandrasekaran Suryanarayana said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
11.Blogger seenivasan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
12.Blogger Ravichandran said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
13.Blogger Kondal Vannan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.8.16

Quiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனால் மனம் லயிக்கவில்லை!



Quiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனால் மனம் லயிக்கவில்லை!

13-8-2016

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஒரு அம்மணியின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை அலசிப் பதில் எழுதும்படி கேட்டுக்கொண்டிருந்தேன்.

பதில்:

அம்மணிக்குத் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாதபோது குடும்ப வாழ்க்கை ஏது? ஆகவே குடும்பவாழ்க்கையும் இல்லை. புதனும், சுக்கிரனும் சேர்ந்துள்ளதால் அம்மணி அதிபுத்திசாலியாக இருந்தார். கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை செய்து கை நிறைய சம்பளம் வாங்கித் தன் பெற்றோர்களுடன் அன்பாக வாழ்ந்தார். தன் வரையில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தார்.

இதுதான் சரியான விடை!

காரணம் என்ன? வாருங்கள் ஜாதகத்தைப் பார்ப்போம்!
--------------------------------------------------


அம்மணி கும்ப லக்கின ஜாதகக்காரர். கும்ப லக்கினம் நல்ல லக்கினம். அதுவும் பெண்களுக்கு உயரிய லக்கினம். கும்ப லக்கினப் பெண் என்றால் கண்னை மூடிக்கொண்டு திருமணம் செய்யலாம் என்று நான் அடிக்கடி கூறுவேன். ஆனாலும் அம்மணிக்குத் திருமணம் கூடி வரவில்லை.

லக்கினாதிபதி சனி 11ல். ஆனாலும் செவ்வாயின் பார்வையில் மற்றும் மாந்தியின் கூட்டுடன். அது நல்ல அமைப்பு அல்ல!

ஏழாம் வீட்டில் அதன் அதிபதி சூரியனுடன் ராகு. லக்கினத்தில் கேது. ஆக மொத்தம் லக்கினமும் கெட்டுள்ளது. ஏழாம் வீடும் கெட்டுள்ளது,

பெண்களுக்கு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு முக்கியம். அம்மணியின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டான். அத்துடன் எட்டாம் அதிபதி புதனுடன் கூட்டணியில் உள்ளான். சுகமில்லை. பாக்கிய ஸ்தானமும் கெட்டுள்ளது. ஆகவே அம்மணிக்குத் திருமணம் கூடிவரவில்லை.

சந்திரன் அமர்ந்திருக்கும் இடத்தை வைத்துப்பார்த்தால், 7ல் சனி அத்துடன் சனியின் மீது செவ்வாயின் நேரடிப்பார்வை. கடுமையான புனர்பூ தோஷம். ஆகவே திருமணம் நடைபெற்றிருந்தால் கூட கணவனைப் பிரிந்து, விவாகத்தை ரத்து செய்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் அப்படிப்பட்ட சிரமங்களுக்கு ஜாதகியை ஆளாக்க விடாமல் மற்ற கிரகங்கள் காப்பாற்றியுள்ளன. குறிப்பாக 11ல் இருக்கும் லக்கினாதிபதி காப்பாற்றியுள்ளார்!

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இது. ஆகவே அம்மணிக்கு கடைசிவரை திருமணம் நடைபெறவில்லை! திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அது நடைபெறவில்லை என்பதால் உயிரைவிட முடியுமா என்ன? மற்ற சந்தோஷங்களுடன் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டியதுதான்.

விளக்கம் போதுமா?
------------------------
போட்டியில் 19 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சரியான விடையை நெற்றியில் அடித்தாற்போல இருவர் மட்டுமே எழுதியுள்ளார்கள். ஒருவர் திரு. சந்திரசேகரன் சூர்யநாராயணா, இன்னொருவர் திரு. சதீஷ்குமார். இருவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பதிலை/ கணிப்பைக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
******/////Blogger Chandrasekaran Suryanarayana said...
திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்
7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.
Friday, August 12, 2016 7:06:00 AM//////

--------------------------------------------------------
****//////////Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 13 – 09 – 1960
கும்ப லக்னம். லக்கினாதிபதி சனியுடன் மாந்தி
லக்கினாதிபதி சனி வக்கிரம். லக்கினத்தில் கேது. லக்னம் வர்கோத்தமம்
சனி பார்வையில் சந்திரன், புனர்பூ தோஷம்
சனி குரு சேர்க்கை, பிரம்மஹத்தி தோஷம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி சந்திரன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன்.
பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி புதன் நவாம்சத்தில் நீச்சம்
பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சம். மேலும் பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள கெட்ட அமைப்பு.
களத்திரகாரன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைவு
ஏழில் சூரியன் களத்திர தோஷம்
ஏழாம் அதிபதி சூரியன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவின் பிடியில்
கேதுவின் பார்வையில் ஏழாம் வீடு
இரண்டாம் வீடு அதிபதி குரு ஆட்சி பலத்துடன் இருந்தாலும் சனி & மாந்தியின் பிடியில்
பாக்கிய ஸ்தான அதிபதி சுக்கிரன், ஏழாம் அதிபதி & ஏழாம் வீடு ஆகிய மூன்றும் கெட்டு இருப்பதால் இது திருமண தடை ஜாதகம்.
கன்னியில் உச்ச புதன் & நீச சுக்கிரன் இணைவு. நீசபங்க ராஜயோகம்.
குரு தனது ஒன்பதாம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்க்கின்றார். குரு பார்வையால் தாமத திருமணம் நடந்து இருந்தாலும் பிரிவை தந்து இருக்கும்.
லக்கினாதிபதி சனியுடன் தனக்காரன் குரு லாபஸ்தானத்தில் உள்ளதால் வருமானத்திற்கு குறைவில்லை.
Saturday, August 13, 2016 2:10:00 PM//////
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந்தது உங்களுக்காக!!!!


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந்தது உங்களுக்காக!!!!

12-8-2016

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


கட்டத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் முழுமையாகத் தெரியும்

இது ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் திருமண வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் பற்றிய உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

சரியான விடையை நாளை 13-8-2016 சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் எழுதுங்கள். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.16

Quiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்

வெள்ளிக்கிழமை (5-8-2016) புதிருக்கான பதில்:

பணிச் சுமை காரணமாக நேற்று இந்தப் பதிலை வெளியிட முடியவில்லை. காத்திருந்த அனைவரும் மன்னிக்கவும்!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவர் பிறந்தது 1962ம் வருடம் என்றும், ஜாதகருக்கு அவருடைய 34வது வயதில் கடுமையான பணக் கஷ்டம் ஏற்பட்டது என்றும் ஜாதகப்படி 1.பணக் கஷ்டம் எதனால் ஏற்பட்டது? என்ற கேள்வியையும், 2.அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா? என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன்.

வித்தியாசமாக ஜாதகர் பிறந்த வருடத்தையும், கஷ்டம் ஏற்பட்ட காலத்தையும் கொடுத்தன் காரணமே நீங்கள் அன்றைய தேதியில் கோள்சாரச் சனியை உற்று நோக்குவீர்கள் என்ற எண்ணத்தில்தான். ஆமாம், அது சமயம் ஜாதகருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருந்தது. ஏழரைச் சனி தொழில், மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கும். அது ஜாதகருக்கும் அத்தகைய நெருக்கடியை உண்டாக்கியது. 1996ம் ஆண்டு ஜாதகரின் ராசியில் சனி. இப்போதாவது அதைக் கவனியுங்கள். அது முக்கிய காரணம்.

1.மேஷ லக்கின ஜாதகர். லக்கினாதிபதி செவ்வாய் 11ல்
2.கஷ்டம் ஏற்பட்டபோது ஆறாம் வீட்டுக்காரன் புதனின் மகாதிசை.
3.புதன் சனி மற்றும் கேதுவோடு மாட்டிக்கொண்டு உள்ளார். அவரும் கூடுதலான கெடுதல்களைச் செய்தார்.

ஆனால்
4. 2 மற்றும் 7க்குரிய சுக்கிரன் உச்சமாகியுள்ளார். 12ல் இருந்தாலும் உச்சமானதன் பலனை அவர் தராமல் விடமாட்டார். அவருடன் இன்னொரு சுபக்கிரகமான (4ம் அதிபதி) சந்திரனும் உள்ளார். அத்துடன் இருவர் மீதும் கர்மகாரகன் சனியின் பார்வை உள்ளது (3ம் பார்வை). ஆகவே ஜாதகர் சுக்கிர திசையில் பணப்பிரச்சினையில் இருந்து மீண்டுவந்தார். பத்து ஆண்டுகள் கழித்து ஜாதகரின் 44வது வயதில் இருந்து பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து அவரை சுக்கிர திசை மீள வைத்தது.

விளக்கம் போதுமா?
--------------------------------
போட்டியில் எட்டு பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அவர்களில் ஐந்து பேர்கள் மட்டும் மிகச்சரியான விடையை எழுதியுள்ளார்கள். அதாவது கோள்சார  ஏழரை
சனியின் சேட்டையையும் கவனித்து எழுதியுள்ளார்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ****** போட்டு விஷேசமாக அவர்களைப் பாராட்டியுள்ளேன். பின்னூட்டங்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பராட்டுக்கள்!!!

அன்புடன்,
வாத்தியார்
=================================================
1
******/////Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 07 – 03 – 1962
மேஷ லக்னம். திரிகோண அதிபதிகள் மூவரும் லாப ஸ்தானத்தில் உள்ள நல்ல அமைப்பு.
தனஸ்தானத்தில் மாந்தி
ஆறாம் அதிபதி புதன், கேது & பாதகாதிபதி சனி மூவரும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தொழிலில் கடுமையான பிரச்னை கொடுத்து இருப்பார்கள்.
பாதகாதிபதி சனி ஆட்சி பலத்துடன் உள்ளது நல்ல அமைப்பு இல்லை.
ஜாதகருடைய 34வது வயதில் ஆறாம் அதிபதி புதன் தசை மற்றும் ஏழரைசனி நடந்தாலும் கடனில் மூழ்கி இருப்பார். கேது திசையிலும் சிரமப்பட்டு இருப்பார்.
45வது வயதில் வந்த சுக்கிர திசையில் கடனில் இருந்து மீண்டு இருப்பார். (தனஸ்தான அதிபதி சுக்கிரன் உச்சம்)
காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். இளமையில் சிரமப்பட்டு மத்திய வயதில் முன்னுக்கு வரும் அமைப்பு.
--------------------------------------------------------------------
2
******///////Blogger Chandrasekaran Suryanarayana said...
1. ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.
2. ஜாதகர் தனது மத்திய வயதில் பணத்தட்டுப்பாட்டிற்கு ஆளாகி, கடனில் மூழ்கி, பிறகு மீண்டு வந்தவர்.
மேஷ லக்கினம். லக்கினாதிபதி 11ல்
இரண்டாம் வீட்டிற்கு உரிய (தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.
11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.
ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் தசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப் போட்டு விட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. பிறகு சுக்கிரதிசை நடந்த காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.
Saturday, August 06, 2016 6:41:00 AM//////
-----------------------------------------------------
3
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 113 க்கான பதில்.
கடன் தீர்ந்து, ஜாதகர் பிரச்சினையில் இருந்து சுக்கிர திசையில் மீண்டார்
ஜாதகர் பிறந்த தேதி : 07/Mar/1962 , 09.00 am
நட்சத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்.
மேஷ லக்கினம், மீன ராசி.
6ம் அதிபதி புதனின் திசையில்; புதன், கேது மற்றும் சனியுடன்
கூடி 10ல் நின்று ஜாதகரை தொழிலுக்காக கடன் வாங்க வைத்தார்.
கேந்திரத்தில் இருக்கும் புதன் கடன் வாங்க வைக்கும்.
சனியுடன் கூடிய கேதுவால் பண வரவில் சிக்கல் ஏற்பட்டு கேது திசை முழுவதும் அவமான பட்டிருப்பார்.
அடுத்து வந்த சுக்கிர திசை ஆறாம் இடத்தை பார்ப்பதால் ஜாதகர் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார்.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Saturday, August 06, 2016 12:28:00 PM///////
--------------------------------------------------
4
******/////Blogger asbvsri said...
Astrology Quiz: 113 Answer
ஜாதகர் மேஷலக்னம். லக்னாதிபதியும் 8 ஆம் அதிபதியுமான செவ்வாய், 12 ஆம் அதிபதி மற்றும் 9 ஆம் அதிபதியான குரு மற்றும் யோகாதிபதி சூரியனுடன் 11 ஆம் இடத்தில்.
இரண்டுக்கும் 7 க்கும் அதிபதியான சுக்ரன் உச்சமாகி அவருடய பகைவர் சந்த்ரனுடன் ( 4ஆம் அதிபதி) 12 ஆம் இடத்தில்.
சனியும் புதனும் கேதுவுடன் கூடி 10 ஆம் வீட்டில். சனி நவாம்சத்தில் 12 ஆம் வீட்டில்.
34 வயதில் 1996 ல் அவருக்கு புதன் தசையில் சனி புக்தி ஆரம்பமானது. இருவரும் பகைவர்களாதலால் கேதுவுடன் கூடி நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள். கோள்சாரத்தில் சனி 1996 ல் 12 ஆம் இடத்திற்கு வந்து கேதுவுடன் மிகுந்த விரையங்களை ஏற்படுத்தினார். பின்னர் வந்த கேது தசையும் அவருக்கு நன்மை விளைவிக்கவில்லை. 1996 லிருது 2005 வரை சனி கோள்சாரத்தில் 12, லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டிலிருப்பதால் அவருடைய பணக்கஷ்டம் தீர்ந்திருக்காது.
கேது தசை 2005 ல் முடிந்தபிறகு வந்த சுக்ர தசையில் 2 க்கும் 7க்கும் அதிபதியாதலால் உச்சமாகியிருப்பதாலும் அவருடைய தசையில் பணக்கஷ்டத்திலிருந்து மீளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பார். சூரியன் புக்தியில் யோகாதிபதியாதலால் கஷ்டத்திலிருந்து முழுவதும் மீண்டுருப்பார்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை
Saturday, August 06, 2016 1:10:00 PM//////
----------------------------------------------------
5
/////Blogger Srinivasa Rajulu.M said...
1962 - மார்ச் மாதம் 7-ஆம் தேதி பிறந்த அன்பர், நல்ல உழைப்பாளி. சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர். புத தசை சனி புக்திக்கு முன் வரை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
1. தன ஸ்தானாதிபதி விரைய ஸ்தானத்தில் (சுக்கிரன்) என்ற ரீதியில் பார்க்கும்போது, பெரிய சொத்து ஒன்றும் கிடையாது. ருண ஸ்தானாதிபதி புதன் திசையில் வாங்கிய கடன் சனி புக்தியில் திருப்ப முடியாமல் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொண்டார். லாப ஸ்தானாதிபதி சனி அவ்விடத்திற்குப் பன்னிரண்டில் மறைந்ததால் இந்த நிலைமை.
பின் தொடர்ந்து வந்த கேதுவின் ஏழு வருடங்களும் கஷ்டங்களும் தொடர்ந்தன.
௨. ஆனால் உச்சனான சுக்கிரன் தசை வந்தபோது நிலைமையில் முன்னேற்றம். சுக்கிரனுக்குப் பன்னிரண்டாம் இடம் மறைவு கிடையாது. மேலும் தனஸ்தானத்திற்குப் பதினொன்றில் சுபரான சந்திரனுடன் நிற்பது பண வரவைக் கொடுத்தது. 2012-ஆம் வருடம் வந்த லக்னாதிபன் புக்தி நல்லதாக அமைந்து இப்போது நன்றாக இருக்கிறார்.
Saturday, August 06, 2016 1:27:00 PM/////
---------------------------------------------------------
6
******/////Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்,
ஜாதகர் 07-03-1962 பூரட்டாதி 4ம் பாதத்தில் மீன ராசியில் ஜனனம் ஆனார்.
தோசங்கள் – யோகங்கள்,
1. கால சர்ப்ப தோசம்
2. எல்லா சுபர்களும் பாபகார்த்திரி யோகத்தினிலுள்ளனர்
3. சனி, ஆட்சியில் 10ம் வீட்டிலுள்ளார் கேந்திரத்திலுள்ளார் – சஷ்ய யோகம்
4. ஏழரை சனி – கும்பத்தில் 5-3-93ல் தொடங்கி 6-6-2000ல் ரிசபத்தில் போகும்போது முடிவடைந்த்து. 36ம் வயது இந்தக்காலகட்டத்தில் வரும்.
5. புதன் திசை முடிய கேது திசை ஆரம்பமாகின்றது. அது 2005 ஆவணி மாதத்தில் முடியும்.
6. 2006 ஐப்பசி மாதம் குரு விருச்சிக ராசிக்கு வருகிறார், 7ல் குரு.
புதிரிற்கு விடை
பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
மேற்கொண்ட காரணங்களினால்
அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
2005ம ஆண்டிற்கு பின் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
நன்றி
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, August 07, 2016 2:47:00 AM//////
------------------------------------------------
7
******/////Blogger venkatesh r said...
முதலில் வாத்தியார் அவர்களுக்கு "10000" பேர்கள் தினமும் அவரின் பதிவை பார்வையிட்டதற்கான வாழ்த்துக்கள். அது மேலும் பெருகி ஒரு லட்சம், ஒரு கோடி பேர் என்று வளர‌, பழனி முருகப் பெருமானை வேண்டுகிறேன்.

புதிர் எண் 113க்கான அலசல்:
மேச லக்கினம், மீன ராசி ஜாதகர். கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்து குருவுடன் கிரகயுத்ததிலுள்ளார். 5ம் அதிபதி சூரியனும் அவருடன் கூட்டணியில் இருக்கிறார். தனாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தாலும் உச்சமடைந்துள்ளார்.
இப்ப வாத்தியாரின் கேள்விக்கு வருவோம். ஜாதகரின் 34 வயதில் மிகக் கடுமையான பணக்கஷ்டம் ஏன் ஏற்பட்டது? ஜாதகப்படி அதன் காரணம் என்ன?
ஜாதகரின் 34 வயதில் புதன் மகாதசை, சனி அந்தரம் நடைபெற்ற நேரம். கர்மாதிபதி சனி 6ம் அதிபதி வில்லன் புதன் மற்றும் கேதுவுடன் கூட்டணியில் 10மிடத்தில் தன் சொந்த வீட்டில் உள்ளார்.
அதே சமயம் கோச்சார ஜன்ம சனி வேறு ஜாதகரை புரட்டிப் போட்டது. ஜாதகருக்கு மேற்கண்ட காரணங்களால் இருந்த வேலையும் போய், கடுமையான பண நெருக்கடி, கடன் சுமை ஏற்பட்டது.
ஜாதகர் பணப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா?
புதன் மகாதசை முடிந்து, கேதுவின் தசை 7 வருடம் வரை ஜாதகருக்கு அந்த பணப்பிரச்சினை இருந்தது. பிறகு வந்த சுக்கிர தசையில் அதாவது ஜாதகரின் 46 வயதில் எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்து மீண்டு வந்தார்.
Sunday, August 07, 2016 2:39:00 PM//////
----------------------------------------------------
8
/////Blogger bala said...
Vanakkam Iyya,
Mesha lagna kaarar. Pooratadhi natchathram paadham 4.
Lagnathipathi sevvai 11il + 5 aam athipathi + 9 aam athipathi guru vudan
Jaathagarin 34 aam vayathil Budhan (3&6 - Villan) dasa sukra bukthi nadai petru ullathu
Sukran 2 aam veetirku uriyavan, lagnathirku 12il + uchaam+ chandran udan graha yudhham.
11 aam veetilum graha yuddham.
Chandra rasi yil irundhu paarthalum, irandam veetiruku uriyavan (sevvai) antha veetirku 11il, aana chandra rasi ku 12il..
Ivaye jaathagarin pana kastathirku kaaranam.
Pana Prachanayil irundhu meendar. Sukra dasai chandra bukthiyil.
Sukranum chandranum sernthu kaapatrinar. sukkran (2&7 irku uriyavan, chandran 4iruku uriyavan)
nandri,
Bala
Sunday, August 07, 2016 2:47:00 PM/////
------------------------------------------
பாராட்டி வந்த கடிதங்களுக்கான பதில்

/////Blogger mohan said...
ஆசிரியர் ஐயா வணக்கம்.
மெஞ்ஞானமும், விஞ்ஞானமும்
தங்களுக்கு ஒன்று சேர்ந்ததுடன்
எழுத்தாற்றலும், நகைச்சுவை உணர்வும்
சமவிகிதத்தில் உள்ளதாலும்
நல்ல எண்ணத்தாலும் , உழைப்பாலும்
இலவச சேவையினாலும் தினசரி பார்வையிடுவோர்
எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி உள்ளது.
வாழ்க நீ எம்மான்./////

நல்லது. உங்களின் மேலான விளக்கத்திற்கும் அன்பிற்கும் நன்றி மோகன்!
-------------------------------------------------
/////Blogger kittuswamy palaniappan said...
Ayya vanakkam, as the viewers increased the responsibilities increase but this is not a days job, your efforts made you to have this numbers. we all pray you a better health and the best of everything,. let LORD PALANIAPPAN showers bleesings regards,/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
-------------------------------------------------
/////Blogger ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம் .
இன்னும் பத்து பத்தாயிரம் பேர் படித்து பயனடையும் வண்ணம் பழனி முருகனின் அருள் தங்களை
வழி நடத்தி செல்ல வேண்டுகிறேன் .
அன்புடன்
அரசு//////

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே!
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.113: கேள்வி பிறந்தது இன்று!!!

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.113: கேள்வி பிறந்தது இன்று!!!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்

:

இது ஒரு அன்பரின் ஜாதகம். அவர் பிறந்தது 1962ம் வருடம். ஜாதகருக்கு அவருடைய 34வது வயதில் கடுமையான பணக் கஷ்டம்.
1.பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
2.அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

சரியான விடை. 7-8-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
======================================
2
உங்கள் அனைவருக்கும் நன்றி!

நான் வகுப்பறை துவங்கிய காலத்தில் முதலில் தினமும் 30 அல்லது 40 பேர்கள்தான் வந்து படித்துக்கொடிருந்தார்கள். 9 ஆண்டுகளாக எழுதியதன் பலன் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்து இன்று அந்த எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. படம் கீழே உள்ளது.
Google blogger page views taken from my blogger dash board



நான் எண்ணிக்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டேன். ஆனால் இத்தனை (பத்தாயிரம் பேர்கள்) எனும் போது, என் பொறுப்பு அதிகமாகியுள்ளது. ஆகவே நான் இன்னும் சிரத்தையோடு பதிவுகளை எழுத வேண்டும். எழுதுவேன்
உங்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.16

Quiz: புதிர் எண்.112 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.112 புதிருக்கான பதில்

வெள்ளிக்கிழமை (22-7-2016) புதிருக்கான பதில்:

ஜாதகிக்குத் திருமணம் ஆனது. ஆன மறுவருடமே விவாகரத்தும் ஆனது. மீண்டும் நான்காண்டுகளில் மறுமணமும் சிறப்பாக அமைந்தது. இதுதான் சரியான விடை
---------------------------------------------------------------------------------
ஜாதகி சிம்ம லக்கினக்காரர்.
லக்கினத்தில் யோககாரகன் செவ்வாய் நல்ல நிலைமையில் அமர்ந்துள்ளார்.
திருவோண நட்சத்திரம். சந்திரன், குரு பகவானின் நேரடிப் பார்வையில் உள்ளார்
பாக்கிய ஸ்தானத்தில் (9ல்) ராகு
7ம் அதிபதி சனீஷ்வரன் செவ்வாயின் பார்வையுடன் 7ல்
----------------------------------------
ஜாதகிக்கு அவளுடைய 28வது வயதில் திருமணமானது. ராகு திசையில் புத்தி நாதன் செவ்வாய் திருமணத்தை முடித்து வைத்தார். அதே ராகு திசை முடியும் போது ராகு, திருமண வாழ்க்கையை கவிழ்த்து விட்டுப் போய் விட்டார்.

7ம் அதிபதி சனீஷ்வரன் 7ல் இருப்பதாலும், செவ்வாயின் பார்வை சனி மேல் விழுவதாலும், சந்திரனில் இருந்து 4ல் ராகு இருப்பதாலும், சந்திரனுக்கு எட்டில் செவ்வாய் இருப்பதாலும், முதல் திருமணம் நிலைக்கவில்லை.

ஏழாம் அதிபதி சனீஷ்வரன் குரு பகவான் வீட்டில் இருப்பதாலும், அவரை உச்சமான குரு வலிமையாகப் பார்ப்பதாலும்,  ஜாதகிக்கு மீண்டும் திருமணம் ஆனது. கோச்சார குருபகவான் அதை நடத்தி வைத்தார்

குரு கெட்டிருந்தாலும் முடிந்தவரை நன்மைகளைச் செய்யக்கூடியவர். களத்திரகாரகன் சுக்கிரன் மேல் குருவின் 5ம் பார்வை விழுவதைப் பாருங்கள். இருவரும் சேர்ந்து குரு மகாதிசை சுக்கிர புத்தியில் ஜாதகிக்கு மறுபடியும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

விளக்கம் போதுமா?
--------------------------------
போட்டியில் ஒன்பது பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒருவர் மட்டும் மிகச்சரியான விடையை எழுதியுள்ளார். அந்த அன்பர் பெயர் திருவாளர்.எம்.ஸ்ரீஇனிவாச ராஜூலு! அவருக்கு எனது மனம் உவந்த பராட்டுக்கள்: அவருடைய விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:

1
******////////Blogger Srinivasa Rajulu.M said...
அம்மணி 1966-நவம்பர் 18 நள்ளிரவில் (பிறந்த ஊரைப் பொறுத்து, அது 19-ஆம் தேதி ஆகவும் இருக்கலாம்) திருவோண தினத்தில் பிறந்தவர்.
பத்து வயதில் வந்த ராஹு தசை நல்ல தசை. சுமார் 23 வயதில் சுக்கிர புத்தியில் காதல் திருமணம் (லக்னாதிபனுடன் சேர்ந்த களத்திர காரகனைப் பார்க்கும் செவ்வாயினால்). குரு பார்வையும் திருமணத்திற்கு உதவியது.
ஆனால் ஏழில் நிற்கும் வக்கிர சனியும், அவரைப் பார்க்கும் செவ்வாயும் திருமண வாழ்வை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இன்னொரு காரணம் மாங்கல்ய ஸ்தானாதிபதி பன்னிரண்டில் - உச்சமானாலும் - மறைந்துவிட்டது என்பதால்.
ஏழாம் இடத்தில் இருக்கும் சனியை, இயற்கையில் பாவியான செவ்வாய் பார்ப்பதால் மறுமணத்திற்கு இடமுண்டு. லக்ன மாந்தியாலும், லக்னத்தில் அமர்ந்த செவ்வாயாலும் கோபமும் பிடிவாதமும் மிகுந்திருக்கும் - அது அவ்வப்போது திருமண வாழ்வில் பிரச்சினைகள் கொடுக்கும்.
குடும்ப ஸ்தானாதிபதி மூன்றில் மறைவு. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை - இவையெல்லாம் அமைதியான வாழ்விற்கு அனுகூலமாக இல்லை.//////
Friday, July 22, 2016 10:51:00 AM //////

,அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.112: கேள்வி பிறந்தது இன்று!!!

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.112: கேள்வி பிறந்தது இன்று!!!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:



இது ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகியின் திருமண வாழ்க்கையைப் பற்றி உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

உப கேள்விகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் கேட்டால் நானே உங்களுக்குக் க்ளூ கொடுத்தது போலாகிவிடும். ஆகவே இன்று ஒரே ஒரு பிரதான கேள்வி மட்டும்தான். நீங்கள் பதிலை விலாவரியாக (write in detail) எழுதுங்கள்

சரியான விடை. 24-7-2016 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.6.16

Quiz: புதிர் எண்.111 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.111 புதிருக்கான பதில்

நேற்றைய புதிருக்கான பதில்:

ஜாதகிக்குத் திருமணம் ஆனது. ஆன கையோடு விவாகமும் ரத்தானது. இதுதான் சரியான விடை
---------------------------------------------------------------------------------
ஜாதகி கடக லக்கினக்காரர்.
காலசர்ப்ப தோஷ ஜாதகம்.
லக்கினத்தில் மாந்தி - குணக்கேடானவர்.
பாக்கியாதிபதி குரு 12ல், விரையத்தில் மறைந்துவிட்டார். பெண்களின் ஜாதகத்தில் பாக்கியாதிபதி முக்கியம். இந்த ஜாதகிக்கு அது இல்லை.
கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் 6ல் மறைந்து விட்டார். யோகங்களும் அடிபட்டுவிட்டது.
லக்கினாதிபதி சந்திரன் கேந்திரத்தில், 4ல் அமர்ந்தாலும் சனியின் பிடியில் சிக்கியுள்ளார். கிரகயுத்தம்
இவை எல்லாம் சேர்ந்து ஜாதகியை அதிர்ஷ்டமில்லாதவராகச் செய்துவிட்டன.
----------------------------------------
குரு கெட்டிருந்தாலும் முடிந்தவரை நன்மைகளைச் செய்யக்கூடியவர். களத்திரகாரகன் சுக்கிரன் மேல் குருவின் 5ம் பார்வை விழுவதைப் பாருங்கள்.

இருவரும் சேர்ந்து குரு மகாதிசை சுக்கிர புத்தியில் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

ஜாதகத்தில் கடுமையான புனர்பூ தோஷம் இருக்கிறது. புனர்பூ தோஷம் தன்னுடைய வேலையைக் காட்டியது. ஜாதகி, திருமணமான மூன்றாவது மாதமே கணவனைப் பிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். கணவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள். அத்துடன் ஜாதகியின் திருமணவாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது.

குடும்ப ஸ்தானத்தில் விரையாதிபதி புதனின் ஆதிக்கமும் சேர்ந்து ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கை இல்லாமல் செய்து விட்டது.
ஜாதகியின் பூர்வபுண்ணிய மற்றும் குழந்தை பாக்கியத்திற்கான 5ம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கெட்டுள்ளது. ஒரு பக்கம் சனி மறு பக்கம் ராகு. அதனால் ஜாதகிக்குக் குழந்தையும் இல்லை. குணக்கேட்டால் மறுமணமும் செய்து கொள்ளவில்லை.

விளக்கம் போதுமா?
--------------------------------
புதிர்ப் போட்டியில் மொத்தம் 20 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சரியான விடையையோ அல்லது அதை ஒட்டிய விடையையோ 7 பேர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.

அவர்களின் பதில்கள் கீழே உள்ளன.
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
1
/////Blogger Srinivasa Rajulu.M said...
02-செப்டம்பர்-1954 அன்று ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் - கடக லக்னம்.
சுக்ரன் ஆட்சி பலத்துடனும், களத்திர ஸ்தானாதிபதி உச்சமாகவும் இருப்பதால் திருமணம் நடைபெற்றது.
ஆனாலும், லக்ன-மாந்தியால் பிடிவாத குணம்; சயனபோக ஸ்தானத்தில் ஆறாம் அதிபன் கேதுவுடன்; யோககாரகன் ராஹுவுடன் ஆறில் மறைவு,
பாக்கியஸ்தானாதிபதி மறைவு, புத்திர-பூர்வ புண்ணிய ஸ்தானம் கத்தரியில் மற்றும் புனர்பூ தோஷம் ஆகியவற்றால் 35 வயதில் விவாக ரத்து ஆகியிருக்கும்.
Friday, June 10, 2016 9:24:00 AM /.////////
------------------------------------------
2
///Blogger KJ said...
Sir,
In Native Horoscope, There is Punarpoosa Dosam (Saniswaran + Chandran). So Marraige Life will be troubled. Also Delay marraige is possible, Still problem in Marriage life.
Thanks,
Sathishkumar GS
Friday, June 10, 2016 5:11:00 PM/////
--------------------------------------
////Blogger mohan said...
ஐயா, தலைப்பிற்கான படம் அருமை. எங்கிருந்தையா இவ்வளவு ரசனையோடு எடுக்கின்றீர்கள்./////

கூகுள் அண்டவரிடம் இருந்துதான் சாமி!
-----------------------------------------------
3
///////Blogger கலையரசி said...
திருமணம் குரு திசையில் நடந்து இருக்கும் .
குழந்தை இல்லாமை தெரிகிறது .
கணவனுடன் பிரிந்து வாழ்வார் .
கடல் கடந்து , வெளி நாட்டில் வாழ வாய்ப்பு உள்ளது.
பொருளாதரத்திற்கு குறைவு இருக்காது.
நிறைய ஆன்மீக பணியில் செய்பவர் . முக்கியமாக குழந்தைகள் நலனையொட்டிய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வாழ்வார்.
தந்தை சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பார் .
Saturday, June 11, 2016 2:21:00 AM////
------------------------------------------
4
///////Blogger Raja C said...
கடக லக்னம் , துலா ராசி , சுவாதி நட்சத்திரம். சூரியன் சிம்மத்தில், செவ்வாய் ராஹு ஆறாம் வீட்டில். எதற்கும் பயபடாதவர், அதிகார எண்ணம் உடையவர் ! சந்திரன் , சனி சேர்கை கணவனை மனதளவில் காயபடுத்தி கொண்டே இருத்தல் ! லக்னத்துக்கு எதிரான சனி நவாம்சத்தில் ஆட்சி .

சனி திசையில் கணவர் பிரிந்து இருப்பார் ! 12இல் கேது , மீண்டும் இல்லற வாழ்கை அமையாமல் , கடைசி காலத்தில் , இறைவனை நினைத்து வாழ்ந்து இருப்பார் !
Saturday, June 11, 2016 9:24:00 AM //////
-----------------------------------------------
5
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO: 111
02-09-1954 ஆம் அண்டு காலை 4.50 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தில் துலா ராசியில் கடக லக்கினத்தில் பிறந்தவர் இந்த ஜாதகி. (எடுத்து கொண்ட இடம்: சென்னை)
கடக லக்கினம்: யோகக்காரர்கள் - குரு சந்திரன் செவ்வாய் யோகமில்லாதவர்கள்: சுக்கிரன் புதன்.
சனி உச்சம் புதன் அஸ்தங்க்கம். வர்கோத்தமம் : சூரியன் சுக்கிரன் குரு
லக்கினம்:
ஜாதகி கடக லக்கினக்காரர். லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் ஒரு பக்கம் கேது. இன்னொரு பக்கம் சூரியன். சங்கடமான அமைப்பு. லக்கினம் (26 பரல்) அடிக்கடி நோய்வாய்ப்படுவார். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் இருக்கும்.லக்கினத்தில் மாந்தி இருப்பதால்

முரட்டு குணம் உள்ளவர்.பிடிவாதக்காரர்.
லக்கினாதிபதி சந்திரன் கேந்திரத்தில் உள்ளார். நல்ல அமைப்பு. 4ம் வீட்டு அதிபதி 4ம் வீட்டில் களத்திரகாரகன் சுக்கிரன் துலா ராசியில்
கேந்திரத்தில் அமர்ந்துள்ளார்.
7ம் வீட்டு அதிபதி சனி 4ம் வீட்டில் துலா ராசியில் உச்சம்.
ஏழாம் வீட்டுக்காரன் சனீஷ்வரன் கேந்திரத்தில். அத்துடன் அவர் லக்கின வீட்டிற்கு 4ல் நல்ல நிலைமையில் உள்ளார்.
பாக்கியஸ்தான அதிபதி குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்து 5ம் பார்வை சனி சந்திரன் மற்றும் சுக்கிரனின் மேல் விழுவதைப் பாருங்கள். அவர்தான் சந்திரனுடன் கை கோர்த்து ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார். குரு தசை சந்திர புக்தியில் 29 வயதில் திருமணம் நடைபெற்றது இந்த கடக லக்கினத்தில் ஜாதகத்திற்கு சந்திரனும் குருவும் யோகக்காரர்கள்.
2ம் வீடு: (குடும்பஸ்தானம்) :
இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.
12ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்: ஜாதகி பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல் படுவாள். கடன் தொல்லைகள்

ஏற்பட்டு அவதிப்படுவாள். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வாள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.
6ம் வீட்டு அதிபதி குரு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தால் வாழ்க்கை தொல்லைகளும் துயரங்களும் நிறைந்ததாக இருக்கும். ஜாதகியினால் மற்றவர்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படும். இந்த அமைப்பு நல்ல பார்வை பெறாமல் தீய பார்வைகள் பெற்றிருப்பதால் வாழ்க்கை அவலமாகவும் கடினமாகவும் இருக்கும். செவ்வாய் ராகுவின் 7ம் பார்வை, 12ம் வீட்டின் மீது இருப்பதாலும் 12ம் வீட்டில் குருவுடன் கேது கூட்டு இருப்பதாலும் 12ம் வீடு
பாதிக்க பட்டுள்ளது.
சனியும் சந்திரனும் ஒன்று சேர்ந்து இருப்பதால் புணர்ப்பு தோஷம் ஏற்படும் . சனி தசை சந்திர புக்தியில் 45 வயதில் திருமணம் பிரிவில் முடியும்.
குழந்தை பாக்கியம்: (ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை)
5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் ஒரு பக்கம் சனி மறு பக்கம் ராகு செவ்வாய் .5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் அமர்ந்து ராகுவுடன் கூட்டு மேலும் கேதுவின் 7ம் பார்வையில் உள்ளார் . ஆகையால் 5ம் வீடு கடுமையாக பாதிக்க பட்டுள்ளது. ஆகையினால் ஜாதிக்கிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
சந்திர ராசியிலிருந்து 7ம் வீடு 10ம் வீடு ஆகும். அதன் அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் .தீய கிரங்க்களினால் பாதிக்க பட்டுள்ளார்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்:தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி
உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது.குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும்.
எட்டாம் வீட்டுச் சனியுடன் பதினொன்றாம் வீட்டுக்காரனும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஜாதகினுடைய அதிர்ஷ்டமும், வெற்றிகளும் கடுமையான
பாதிப்புக்களுக்கு உள்ளாகும்.
Sunday, June 12, 2016 7:06:00 AM//////
-----------------------------------------
6
////Blogger asbvsri said...
Answer for Puthir 111:
Vanakkam.
Kadaga lagnam, Lagnathipathi Chandran in 4th house kendrathil. 7th house owner Sani in 4th house - Kendrathil Ucham. Kudumbasthanathipathi
Suriyan in 2nd house - atchi, 9th house owner Gurn in 12th house - bogastanathil. All these helped her to get a family life.
But Sani, Chandran, plus Sukran kootu Nallathalla. Also they are affecting the Aruda Lagnam. Sani, Sevvai parvai to Lagnam. Lganam is in Papa
Karthari yogathil. Navamsathil lagnam is aflicted by Ketu with Rahu, sani parvai. Rasiyil Virayathipathi Budan in kudumbasthanathil.
She could have had a decent family life till Guru Dasa i.e till the age of 34. During Sani dasa at the age of 35 problems would have started and
she might have lived like a saint.
Thanks,
K R Ananthakrishnan - Chennai
Sunday, June 12, 2016 12:39:00 PM//////
--------------------------------------------
7
//////Blogger ambharish said...
வணக்கம் தங்கள் வினாவினை கண்டேன். இந்த ஜாதகிக்கு 33வது வயது முதல் திருமண வாழ்க்கை சுமுகமாக இல்லை .பொருளாதாரம் மற்றும் அசையும் அசைய சொத்துக்கள் அபரிமிதமாக சேரும் ஆனால் அவைகள் இவர்களுக்கு பிரயாஜநம் அற்றுபோகும் 42வது வயதில் கணவருக்கு ஒருகண்டமும் பொருளாதார இழப்பையும் சந்தித்திருப்பார்கள். அனைவரோடும் சேர்ந்து இருந்தாலும் இந்தப்பெண் ஒரு சந்நியாசி போலவே வாழ்வாள்.
காரணம்.
7குடையவன் சனி 4ல் உச்சஸ்தானத்தில் சச யோகத்துடன் உள்ளார் .33வது வயதில் தனது திசையை ஆரம்பித்து உள்ளார் .7குடையவன்
உச்சமானால் திருமண வாழ்க்கை கிடையாது. சிலருக்கு திருமணமே ஆகாது . வீடு கொடுத்த சுக்கிரன் தன பாவத்திலேயே இருப்பதால் திருமணம் நடந்தே தீரும் .ஆனால் சனியானவர் 7குடையவர் மட்டுமின்றி 8குடையவராகவும் உள்ளார். ஆகவே அவர் தனது திசை காலத்தில் இல்லறத்தை கெடுதலும் பொருளாதாரத்தை அதிகம் கெடுக்காமல் தனிமையில் வாழவைக்கிறார்.
அம்பரீஷ் சாஸ்திரிகள்
============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.6.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிறந்தது இன்று


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிறந்தது இன்று

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:



இது ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகியின் திருமண வாழ்க்கையைப் பற்றி உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

உப கேள்விகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் கேட்டால் நானே உங்களுக்குக் க்ளூ கொடுத்தது போலாகிவிடும். ஆகவே இன்று ஒரே ஒரு பிரதான கேள்வி மட்டும்தான். நீங்கள் பதிலை விலாவரியாக எழுதுங்கள்

சரியான விடை. 12-6-2016 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!