மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.8.16

Quiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனால் மனம் லயிக்கவில்லை!Quiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனால் மனம் லயிக்கவில்லை!

13-8-2016

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஒரு அம்மணியின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை அலசிப் பதில் எழுதும்படி கேட்டுக்கொண்டிருந்தேன்.

பதில்:

அம்மணிக்குத் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாதபோது குடும்ப வாழ்க்கை ஏது? ஆகவே குடும்பவாழ்க்கையும் இல்லை. புதனும், சுக்கிரனும் சேர்ந்துள்ளதால் அம்மணி அதிபுத்திசாலியாக இருந்தார். கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை செய்து கை நிறைய சம்பளம் வாங்கித் தன் பெற்றோர்களுடன் அன்பாக வாழ்ந்தார். தன் வரையில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தார்.

இதுதான் சரியான விடை!

காரணம் என்ன? வாருங்கள் ஜாதகத்தைப் பார்ப்போம்!
--------------------------------------------------


அம்மணி கும்ப லக்கின ஜாதகக்காரர். கும்ப லக்கினம் நல்ல லக்கினம். அதுவும் பெண்களுக்கு உயரிய லக்கினம். கும்ப லக்கினப் பெண் என்றால் கண்னை மூடிக்கொண்டு திருமணம் செய்யலாம் என்று நான் அடிக்கடி கூறுவேன். ஆனாலும் அம்மணிக்குத் திருமணம் கூடி வரவில்லை.

லக்கினாதிபதி சனி 11ல். ஆனாலும் செவ்வாயின் பார்வையில் மற்றும் மாந்தியின் கூட்டுடன். அது நல்ல அமைப்பு அல்ல!

ஏழாம் வீட்டில் அதன் அதிபதி சூரியனுடன் ராகு. லக்கினத்தில் கேது. ஆக மொத்தம் லக்கினமும் கெட்டுள்ளது. ஏழாம் வீடும் கெட்டுள்ளது,

பெண்களுக்கு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு முக்கியம். அம்மணியின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டான். அத்துடன் எட்டாம் அதிபதி புதனுடன் கூட்டணியில் உள்ளான். சுகமில்லை. பாக்கிய ஸ்தானமும் கெட்டுள்ளது. ஆகவே அம்மணிக்குத் திருமணம் கூடிவரவில்லை.

சந்திரன் அமர்ந்திருக்கும் இடத்தை வைத்துப்பார்த்தால், 7ல் சனி அத்துடன் சனியின் மீது செவ்வாயின் நேரடிப்பார்வை. கடுமையான புனர்பூ தோஷம். ஆகவே திருமணம் நடைபெற்றிருந்தால் கூட கணவனைப் பிரிந்து, விவாகத்தை ரத்து செய்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் அப்படிப்பட்ட சிரமங்களுக்கு ஜாதகியை ஆளாக்க விடாமல் மற்ற கிரகங்கள் காப்பாற்றியுள்ளன. குறிப்பாக 11ல் இருக்கும் லக்கினாதிபதி காப்பாற்றியுள்ளார்!

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இது. ஆகவே அம்மணிக்கு கடைசிவரை திருமணம் நடைபெறவில்லை! திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அது நடைபெறவில்லை என்பதால் உயிரைவிட முடியுமா என்ன? மற்ற சந்தோஷங்களுடன் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டியதுதான்.

விளக்கம் போதுமா?
------------------------
போட்டியில் 19 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சரியான விடையை நெற்றியில் அடித்தாற்போல இருவர் மட்டுமே எழுதியுள்ளார்கள். ஒருவர் திரு. சந்திரசேகரன் சூர்யநாராயணா, இன்னொருவர் திரு. சதீஷ்குமார். இருவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பதிலை/ கணிப்பைக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
******/////Blogger Chandrasekaran Suryanarayana said...
திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்
7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.
Friday, August 12, 2016 7:06:00 AM//////

--------------------------------------------------------
****//////////Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 13 – 09 – 1960
கும்ப லக்னம். லக்கினாதிபதி சனியுடன் மாந்தி
லக்கினாதிபதி சனி வக்கிரம். லக்கினத்தில் கேது. லக்னம் வர்கோத்தமம்
சனி பார்வையில் சந்திரன், புனர்பூ தோஷம்
சனி குரு சேர்க்கை, பிரம்மஹத்தி தோஷம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி சந்திரன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன்.
பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி புதன் நவாம்சத்தில் நீச்சம்
பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சம். மேலும் பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள கெட்ட அமைப்பு.
களத்திரகாரன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைவு
ஏழில் சூரியன் களத்திர தோஷம்
ஏழாம் அதிபதி சூரியன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவின் பிடியில்
கேதுவின் பார்வையில் ஏழாம் வீடு
இரண்டாம் வீடு அதிபதி குரு ஆட்சி பலத்துடன் இருந்தாலும் சனி & மாந்தியின் பிடியில்
பாக்கிய ஸ்தான அதிபதி சுக்கிரன், ஏழாம் அதிபதி & ஏழாம் வீடு ஆகிய மூன்றும் கெட்டு இருப்பதால் இது திருமண தடை ஜாதகம்.
கன்னியில் உச்ச புதன் & நீச சுக்கிரன் இணைவு. நீசபங்க ராஜயோகம்.
குரு தனது ஒன்பதாம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்க்கின்றார். குரு பார்வையால் தாமத திருமணம் நடந்து இருந்தாலும் பிரிவை தந்து இருக்கும்.
லக்கினாதிபதி சனியுடன் தனக்காரன் குரு லாபஸ்தானத்தில் உள்ளதால் வருமானத்திற்கு குறைவில்லை.
Saturday, August 13, 2016 2:10:00 PM//////
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

 1. பலமான குரு பார்வை என்பதெற்கெல்லாம் ஒன்றும் பயனில்லை????

  ReplyDelete
 2. அருமை. சந்திரசேகரன் சூரிய நாராயணா அவர்கள், ஒரே வரியில் புரியும்படி சொல்லி உள்ளார்கள். வாழ்த்துக்கள்.

  நீங்கள் சொல்லிய பாங்கு அருமை ஐயா. திருமணம் என்பது வாழ்வின் ஒரு பகுதி. ஆகவில்லை என்பதற்காய் உயிரை விடமுடியுமா என்ன...

  நல்ல புதிர் பாடம்.

  நன்றி ஐயா.

  ReplyDelete
 3. உயர்திரு சந்திரசேகரன் சூரிய நாராயணன் தொடர்ந்து சரியான பதில்களைக் கூறி வருகிறார்.அவருக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்க்கள்.

  ReplyDelete
 4. ஆசிரியர் ஐயா வனக்கம்.

  1962ல் எட்டுக்கிரகம் ஒன்று சேர்ந்த நிலை பற்றிய விபரம் கேட்டிருந்தேன். அதுபற்றிய இணையத்தேடலில் ஒரு சுவையான கட்டுரை கிடைத்தது. அதன் தொடுப்பை இங்கு பதிவிட்டுள்ளேன். எல்லோரும் படித்து ரசிக்கலாம். நன்றி ஐயா.

  http://bharathiadi.blogspot.in/2012/08/blog-post_4784.html?m=1

  ReplyDelete
 5. ////Blogger kmr.krishnan said...
  பலமான குரு பார்வை என்பதெற்கெல்லாம் ஒன்றும் பயனில்லை????/////

  ஏழாம் அதிபதியும், அவருடன் கூட்டாக இருக்கும் ராகுவும் அதைச் செல்லாததாக்கிவிட்டார்கள்!~

  ReplyDelete
 6. /////Blogger mohan said...
  அருமை. சந்திரசேகரன் சூரிய நாராயணா அவர்கள், ஒரே வரியில் புரியும்படி சொல்லி உள்ளார்கள். வாழ்த்துக்கள்.
  நீங்கள் சொல்லிய பாங்கு அருமை ஐயா. திருமணம் என்பது வாழ்வின் ஒரு பகுதி. ஆகவில்லை என்பதற்காய் உயிரை விடமுடியுமா என்ன...
  நல்ல புதிர் பாடம்.
  நன்றி ஐயா.//////

  உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி மோகன்!

  ReplyDelete
 7. /////Blogger kmr.krishnan said...
  உயர்திரு சந்திரசேகரன் சூரிய நாராயணன் தொடர்ந்து சரியான பதில்களைக் கூறி வருகிறார்.அவருக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்க்கள்./////

  உண்மைதான். அவருடைய ஜோதிட அறிவிற்கு நானும் தலை வணங்குகிறேன். அவரை வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 8. /////Blogger mohan said...
  ஆசிரியர் ஐயா வனக்கம்.
  1962ல் எட்டுக்கிரகம் ஒன்று சேர்ந்த நிலை பற்றிய விபரம் கேட்டிருந்தேன். அதுபற்றிய இணையத்தேடலில் ஒரு சுவையான கட்டுரை கிடைத்தது. அதன் தொடுப்பை இங்கு பதிவிட்டுள்ளேன். எல்லோரும் படித்து ரசிக்கலாம். நன்றி ஐயா.
  http://bharathiadi.blogspot.in/2012/08/blog-post_4784.html?m=1/////

  தகவலுக்கு நன்றி படித்துப் பார்க்கிறேன்!

  ReplyDelete
 9. /////Blogger selva kumar said...
  வணக்கம் ஐயா.../////

  வணக்கம் நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com