மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

18.8.17

Astrology: ஜோதிடம்: அரிஷ்ட யோகம் - (படுக்கவைக்கும் யோகம்)


Astrology: ஜோதிடம்: அரிஷ்ட யோகம் - (படுக்கவைக்கும் யோகம்)

யோகங்களைப் பற்றிய பாடங்கள்!!!!

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால்
அதன் பொருள் வேறு.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும்.
ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய
ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே
பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.

உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!

1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில்
இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga:
The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)
-----------------------------------------------------------------
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).
--------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.8.17

வருவாய் (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?


வருவாய்  (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?

வருவாய்  (Income) உங்களுக்கு சரளமாக வர வேண்டுமா?  கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்!!!!


கடவுளைத் தனிமைப் படுத்தி எந்தவொரு அம்சமாகவும் பார்ப்பது கடினம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் அவர். நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் அவர்!

earth, space, time, light, என்று எல்லா வடிவமாகவும் இருப்பவர் அவர்.

அதைத்தான் அருணகிரியார் இப்படிச் சொன்னார்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
- அருணகிரி நாதர்
----------------------------------------------------------
உருவம் உடையவனாகவும்,
உருவம் இல்லாதவனாகவும்,
உள்ளவனாகவும்,
இல்லாதவனாகவும்,
மாற்றங்களுள்ளதாகவும்,
மலராகவும்,
ஒலியாகவும்,
ஒளியாகவும்,
கருப்பையின் கருவாகவும்,
அனைத்து ஜீவராசிகளின்
இயக்கத்திற்குரிய உயிராகவும்,
அடையும் நிலையாகவும்,
விதிக்கப்பட்டதாகவும்,
ஆசானாகவும்,
வந்து
அருள் செய்து
என்னை
ஆட்கொள்வாய்
குமரக் கடவுளே!
...........................................................
இறைவன் ஒருவன்தான். நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம். அருணகிரியார் குமரக்கடவுளின் வடிவமாக இறைவனை வணங்கினார். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாவுக்கரசர் போன்ற சிவபக்தர்கள் இறைவனைச் சிவ வடிவமாக வணங்கினார்கள்.

அதுபோல உங்களுக்குப் பிடித்த வடிவில் இறைவனை, எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்.

ஞானத்தைத் தரும் இறைவன் பணத்தைத் தரமாட்டாரா என்ன?

அதைத்தான் இந்த வீடியோவில் உள்ள செய்தி சொல்கிறது!

ஆகவே நீங்களும் அந்தப் பாடலைப் பதம் பிரித்து “வருவாய் அருள்வாய் குகனே!” என்று தினமும் பிரார்த்தனை செய்ய்ங்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து உங்கள் கஷ்டங்களைத் தீர்ப்பார் நம் குமரக் கடவுள்!!!!

video

-----------------------------------------
நட்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.8.17

கோவையில் திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட புரோசோன் மால் (prozone mall)கோவையில் திறக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட புரோசோன் மால் (prozone mall)

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில், ‘புரோசோன் மால்’ எனும் பிரம்மாண்ட வர்த்தக வளாகம், சென்ற ஜூலை 21ம் தேதி திறக்கப்பெற்றுள்ளது.

சர்வதேச தர பொருட்களை சந்தைப்படுத்தும் நகரங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னைக்கு அடுத்தப்படியாக, பெரிய நகரமாக வளர்ந்து வரும் கோவையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புரூக் பீல்டு மால், பன் மால் என இரண்டு மிகப்பெரிய வர்த்தக மால்கள் திறக்கப்பட்டது.

உலகம் எல்லாம் சுற்றி வந்தவர்களுக்கும், உலகம் தெரியாதவர்களுக்கும் கூட, இனி உலகத் தரம் வாய்ந்த மால் ஒன்றை உள்ளூரிலேயே கண்டுகளித்து கொண்டாடலாம். ஒரே இடத்தில் அவசியமான அத்தனை பொருட்களையும் வாங்கலாம்.

கோவை–சத்தி சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த மால் திறப்பு விழா, ஜூலை 21 ந்தேதி நடந்துள்ளது. சர்வதேச அளவில் பெயர் பெற்ற, 5 லட்சம் சதுரடிக்கும் மேல் உருவாக்கிய தென் ஆப்பிரிக்காவில் உள்ள பெண்டால் ஆர்க்கிடெக்ட் இன்டு பிராபர்ட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்த மால்– ஐ உருவாக்கியுள்ளது. இன்ட்டு நிறுவனம், இங்கிலாந்தில் 20 உள்ள ஷாப்பிங் சென்டர்களில் 9 சென்டர்களை நிர்வகித்து வருகிறது.

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் குறிப்பாக மும்பை, அவுரங்காபாத், கோயம்புத்துார், நாக்பூர், இந்துார் மற்றும் ஜெய்ப்பூரில் 20 மில்லியன் சதுரடி நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.

சிறந்த உள்கட்டமைப்பு

புரோவோக் மற்றும் புரோசோன் நிர்வாக இயக்குனர் நிகில் சதுர்வேதி கூறுகையில், ‘‘ஒரு குடும்பத்துக்கு தேவையான அத்தனை பொருட்களும், ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்பது தான் புரோசோன் மந்திரம். அதற்கு ஏற்ப, ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளோம். இதில், அனைத்து வசதிகள் மட்டுமின்றி, அனைத்து சேவைகளும் கிடைக்கும் வகையில் அமைத்துள்ளோம்.

உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, வெளியூரிலிருந்து வருவோர், விமான நிலையம், ஊட்டி, கொடைக்கானல், மூணாறு மற்றும் கூர்க் ஆகிய பகுதிகளிலிருந்து வந்து செல்வோருக்கும் இது எளிதாக வந்தடையும் இடமாக உள்ளது. அன்னூர், மேட்டுப்பாளையம், பல்லடம், சேலம், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோழிக்கோடு போன்ற நகரங்களுக்கும், பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளையும் ஆண்டு முழுவதும் 365 நாட்கள் கவரும். தகவல் தொழில்நுட்ப மையமாக திகழும் கோவையில், சில்லறை விற்பனையகமாக இது அமைந்துள்ளது.

11 ஏக்கரில் பிரம்மாண்ட மால்

சத்தியமங்கலம் ரோட்டில் 11 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த மாலில், வாடிக்கையாளர்கள் வந்து செல்ல இரண்டு இடங்களில் பிக் அப் பாயிண்ட்டுகள் உள்ளன. கிராண்ட் என்ட்ரன்ஸ் பியாஸா செல்பி பாய்ன்ட் ஒரு இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாலில் மட்டுமே கிரவுண்ட் பிளஸ் ஒன் தளங்களும், பரந்து விரிந்த இடங்களும், மாலின் பல தோற்றங்களையும் காண முடியும்.

பல இடங்களில் எஸ்கலேட்டர், டிராவலட்டர்ஸ், எலிவேட்டர், படிக்கட்டுகள் என 100 சதவீதம் மின்சக்தியுடன் நிறுவப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும், பல்வேறு கலச்சார நிகழ்வுகளை இங்கு கண்டு கொண்டாடலாம். இயற்கையான காற்றும், சூரிய ஒளியும் வரும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

2500 கார்களை நிறுத்த வசதி

பந்தய பாதை போன்ற வட்டவடிவிலான நடைபாதைகள் இருப்பதால், எங்கும் முடிவில்லாத இட வசதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். போதுமான கார்பார்க்கிங் வசதி, ஒரே சமயத்தில் 2500 கார்களை நிறுத்தவும், விரைவாக பார்க்கிங் செய்யவும் வசதிகள் உள்ளன.

பார்க்கிங் இடத்திலிருந்து எளிதாக செல்ல எஸ்கலேட்டர், எலிவேட்டர்கள் இடம் பெற்றுள்ளன. கால் டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா போன்ற பொது போக்குவரத்து வசதிகளும் உள்ளன.

இங்கு ஹைபர் மார்க்கெட், உணவு கோர்ட், மல்டிப்ளக்ஸ், குடும்பத்துக்கான பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன. ஸ்பர் ஹைபர் மார்க்கெட் 30000 சதுரடியில் இடம் பெற்றுள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜிவ் கிருஷ்ணன் கூறுகையில், ‘‘ கோவையில் ஹைபர் மார்க்கெட் வெற்றியை தொடர்ந்து, புரோசோன் மாலிலும் இதை துவக்கியுள்ளோம். வாடிக்கையாளர்களை மையமாக வைத்து, புதுமையான பொருட்கள் இங்கு அறிமுகமாகின்றன. தொடர்ந்து ஆதரவளித்து வரும் கோயம்புத்துார் வாடிக்கையாளர்களுக்கு நன்றி,’’ என்றார்.

2100 இருக்கைகளுடன் 9 தியேட்டர்கள்:

கோவையில் 2100 இருக்கைகளுடன் 9 திரைகள் கொண்ட ஐனாக்ஸ் சினிபிளக்ஸ், பொழுதுபோக்கு அம்சங்களாக இடம் பெற்றுள்ளன. தமிழ், இந்தி மற்றும் சர்வதேச சினிமாக்கள் இங்கு திரையிடப்படும். இதன் தலைமை செயல் அலுவலர் அலோக் டண்டன் கூறுகையில், ‘‘கோவையில் எங்களது மல்டிப்ளக்ஸ் தியேட்டரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இது, தமிழ்நாட்டில் 4வது ஆகும். கலைநயமிக்க, இந்த கோவை தியேட்டரில் 9 திரைகள் உள்ளன. இத்தகைய தியேட்டர் அவுரங்கா பாத்தில் மட்டுமே உள்ளது. தொடர்ந்து இந்த நிறுவனத்துடன் உறவுகள் தொடரும்’’, என்றார்.

பொழுதுபோக்கு அம்சங்கள்

20 ஆயிரம் சதுரடிக்கும் மேல் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், விளையாட்டு, பூல் டேபிள், பம்பர் கார் போன்ற குழந்தைகளுக்கான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த மையத்தின் நிர்வாக இயக்குனர் ராஜூ ஜெயின் கூறுகையில், ‘‘பொழுதுபோக்கு அம்சங்களை, கோவையில் அறிமுகப்படுத்துவதில் பரவசமடைகிறோம், சர்வதேச தரத்தில் இவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.

இவை தவிர, புட்எச்டி, அன்னபூர்ணா, மெக்டொனால்டு, கேஎப்சி, பிஸ்சா ஹட், டோமினோஸ், மர்ஹபா, கபே பாலிவுட், எஸ்எம்எஸ், ஹரிபவன், புஜ்ஜியன் எக்ஸ்பிரஸ், நாகாஸ், ஹாட்டி ஸ்மோக்கி, கப்பா கடா சீசான்ஸ் உள்ளிட்ட பல அறுசுவை உணவுக் கூடங்கள் அமைந்துள்ளன.

சர்வதேச பிராண்டுகள்

இந்தியாவின் அருமயைான சில்லறை விற்பனையகங்களாக 100 கடைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வகையான பிராண்டுகள், உலகப்புகழ் பெற்ற பெயர் பெற்ற நிறுவனங்கள் தங்களது பொருட்களை இடம் பெறச் செய்துள்ளன.

24 மணி நேரமும் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் நிர்வகிக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆபத்து ஏற்படும் போது எளிதாக வெளியேற வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. முதலுதவி மையங்களும் உள்ளன. மாற்று திறனாளிகளுக்கும், முதியோருக்கும் பல இடங்களில் ஓய்வு இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வசதியான, சொகுசான ஷாப்பிங் அனுபவத்தை அனைவரும் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

கோவைக்கு வரும் வாய்ப்புக் கிடைத்தால், நாளொன்றை ஒதுக்கி இந்த மாலுக்கு ஒருமுறை சென்று, கண்டு களித்துவிட்டு வாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.8.17

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

நம் வகுப்பறையின் மாணவக் கண்மணிகள், வலைப்பதிவு நண்பர்கள், மற்றும் நம் வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர்கள் என்று அனைவருக்கும் வாத்தியாரின் சுதந்திரதின வாழ்த்துக்கள்!


சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது வகுப்பறைக்கு இன்று விடுமுறை!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.8.17

இந்த மாமனிதரைத் தெரியுமா உங்களுக்கு?


இந்த மாமனிதரைத் தெரியுமா உங்களுக்கு?

ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பிப்ரவரி 12, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

அவரின் வாழ்க்கைச் சுருக்கம்:

கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார் போப். ஜீயார்ஜ் யூக்ளோ என்பது போப்பின் இயற்பெயர். தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம், போப்பின் குழந்தைப் பருவத்திலேயே 1826 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது. 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

தமிழ்நாட்டிற்கு வருகை:

விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

சென்னைக்கு வந்த போப் சாந்தோம் பகுதியில் தங்கினார். வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப், சென்னையில் இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார். அங்கு ’குரு’ பட்டம் பெற்றார். எஸ். பி. ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் சாயர்புரம் சிற்றூருக்கு சமயத்தொண்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்

தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை , இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூட்டினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு திருமணம் செய்து கொண்டார்.

போப்பின் சாயர்புர பணி சமயப்பணி, கல்விப்பணி என இரு பகுதிகள் கொண்டது.

தஞ்சாவூரில்:

தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.

போப்பின் தஞ்சாவூர் பணி சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.[1]

உதகமண்டலத்தில்:

தஞ்சையில் கிறித்துவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டோர் தங்களுக்கு முதலிடம் கேட்டனர். போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதலிடம் கேட்டோரால் ஏற்கப்படவில்லை. கிறித்துவ சபையான நற்செய்திக் கழகத்தாரும் உயர் சமூகத்தைச் சேர்ந்தோராகக் கருதப்பட்டவர்களைச் சார்ந்து நின்றதால், போப் தமது 16 வருட நற்செய்திக் கழகத் தொண்டர் பணியிலிருந்து விலகி கிறித்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவியின்றி தனிப்பட்ட முறையில் சமயப் பணியாற்றும் நோக்குடன், போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் ஐந்து மக்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றார்.

உதகையில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொன்னார், பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார், சிறைத் தண்டனை பெற்றிருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது பழைய தமிழ்நூல்களைக் கற்றுவந்தார். பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சேகரித்தார்.

உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் ’மறை நூற் புலவர்’ எனும் பட்டம் அளித்தார்.

பெங்களூரில்:

1871இல் சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்விப் பணியும் சமயப்பணியும் ஆற்றினார். அங்கு உடல் நலம் குன்றியதால் 1882இல் இங்கிலாந்து திரும்பினார்.

தமிழ்த் தொண்டுகள்:

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.
புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.
தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்தார்.

மூன்று இறுதி விருப்பங்கள்:

முதுமையில் தளர்ச்சியடைந்த சமயம் தமது நண்பரிடம் மூன்று விருப்பங்களைத் தெரிவித்திருந்தார் ஜி.யு.போப்.

இறப்புக்கு பின் தனது கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்ற வாசகம் இடம்பெற வேண்டும்
(அவரது உயிலிலோ அவரது கல்லறையிலோ அத்தகைய கருத்து சேர்க்கப்படவில்லை).

தமது கல்லறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறுபகுதியாவது தமிழ் மக்களின் நன்கொடையால் அமைய வேண்டும். பச்சையப்பன் கல்லூரித் தமிழ் பேராசிரியர் செல்வக் கேசவராயர் தமிழன்பர்களிடம் நன்கொடை திரட்டி இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார்.

கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும் போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசத்தையும் உடன் வைக்க வேண்டும் என்பதையும் தன் விருப்பமாகத் தெரிவித்திருந்தார்.

தமிழை வளர்த்த பிற மொழியினர்களில் இவர் முக்கியமானவர்!

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.8.17

Astrology: ஜோதிடம்: பரிவர்த்தனை யோகம்

Astrology: ஜோதிடம்: பரிவர்த்தனை யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!

இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்!

"Parivartthanai means Planet A occupies the sign of Planet B while simultaneously Planet B occupies the sign of Planet A.
Example: Moon occupies Jupiter's (குரு) house and Jupiter (குரு) occupies moon's house
---------------------------------------------------------------------------
இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.

Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two grahas involved. Increasing the power of the two bhavas and the two grahas may be helpful for the success of the native.

அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும்

எப்படி?

வாருங்கள். அதையும் பார்ப்போம்.
------------------------------------
அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும், அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும்

ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம்.

If the bhava or the graha are inauspicious, the parivartthanai yoga may increase negative results.
-------------------------------------------------------------------------------------
பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும்.

பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும்.

If the graha involved are natural benefics; the benefits will be more for which those grahas are concerned.If the exchanged graha are natural malefics; results may be more difficult than the graha might separately produce.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள்.

1.தைன்ய பரிவர்த்தனை.

தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும்.

This parivarththanai leads to a wicked nature, persistent trouble from opponents and ill health. The dushthana lord will be strengthened by its
interaction with the other non-dushthana partner.
________________________________________
2. கஹல பரிவர்த்தனை!

மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது. பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும்.
மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும். தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல் ஜாதகனுக்குக் கிடைக்கும்.

Kahala yoga will energize the talking, scheming, competing mind to go out and get stuff done.
---------------------------------------------
3. மஹா பரிவர்த்தனை யோகம்.Maha Parivartamsha Yoga

1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும்.

When the lords of 1, 2, 4, 5, 7, 9, 10, or 11 get exchange of signs, then it is called as Maha Parivarththanai Yoga
Result: This yoga promises wealth, status, and physical enjoyments, plus beneficial influences from the houses involved.
++++++++++++++++++++++++++++++++++++++
பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு.

தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும்.

உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம்.

இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்) ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜாதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும்.

ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும், செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும்.
---------------------------------------------------------------------
2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும்.

2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக் கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான்

1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.

1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான நிலைக்கு வருவான்.

9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த
அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு!

This type of parivarththanai yoga will confer high position, reputation,
fame and power.

Shukra-Kuja exchange
If Venus and Mars exchange their divisions, the female will go after other males. If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. 
(எச்சரிக்கை: இது பொது விதி)

அக்கிரமம். பெண்களுக்கு மட்டும்தான் மேலே குறிப்பிட்டுள்ள விதியா? ஆண்களுக்கு இல்லையா?

எந்த விதிகளும் இல்லாமலேயே, ஆண்களில் பலர், காமுகர்கள்தான்:-)))))

பல கடுமையான நோய்கள் வந்துவிட்டால் (இருதய நோய்கள், மார்புப்புற்று நோய்கள்) இந்தப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அவர்களுக்கு வந்த வேகத்தில் அந்த நோய்கள் குணமாகிவிடும்.
________________________________________
இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஜாதகம் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் ஜாதகம். அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன. அதைப் பற்றி விரிவாக பதிவில் முன்பு எழுதியுள்ளேன்

ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளையும் பெற்றார். பல தீமைகளையும் பெற்றார்.

இளம் வயதில் விதவையானதும், இளம் வயது மகனை, விமான விபத்தில் பறி கொடுத்ததும் (1980) தீமைகளில் முக்கியமானவை

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.8.17

தங்கள் குரல் வளத்தால் அசத்தும் பெண்கள்!!


தங்கள் குரல் வளத்தால் அசத்தும் பெண்கள்!!

இறைவனின் படைப்பில் எத்தனை விதமான திறமை சாலிகள்!!!!

குரல் வளம் என்பது வரம். இறைவனின் அன்புப் பரிசு! எல்லோருக்கும் அது கிடைக்குமா என்ன? கிடைத்த சிலர் அதைப் பயன்படுத்தி தங்கள் திறமையை எப்படி வெளிப் படுத்துகிறார்கள் பாருங்கள்:

1. ஆண்களில் பலர் பெண் குரலில் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள். இங்கே ஒரு பெண் ஒரே சமயத்தில் ஆண் குரலிலும், பெண் குரலிலும் மாற்றி மாற்றிப் பாடுகிறார் பாருங்கள்!!!!

video

2. இங்கே ஒரு பெண் பல குரல்களில் அசத்துவதைப் பாருங்கள்:
3. பெண்கள் மட்டுமா? இல்லை! ஆடவர்களிலும் குரல்வளம் மிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள். நமது தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நாயகன் சிவகார்த்திகேயன் பல குரல்களில் பேசி அசத்துவதைப் பாருங்கள்:
பார்த்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.8.17

அனாவசிய செலவைத் தவிர்க்கும் வழி முறைகள்!!!!
அனாவசிய செலவைத் தவிர்க்கும் வழி முறைகள்!!!!

முக்கியமாக அனாவசியமாகப் போகும் ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள்!

பெரியதாக ஒன்னுமில்லைங்க நம்ம தாத்தா காலத்து வழிமுறைகள்தான்.

1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீரை பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்!!!.

2. பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால்   வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லுங்கள்!

3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூடை இல்லை என்றால் மஞ்சள் பையை எடுத்துக்கொண்டுபோய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை சாமான்களை  வாங்குங்கள்.

4. வார இறுதி நாட்களில் வீட்டிலயே குடும்பத்தோட ஏதாவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்கள்.

5. திரைப்படத்தை  multiplex  அல்லாத திரையரங்குகளில் பாருங்கள்

6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாமல் பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம்.

7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்கள்.

9. பழைய  பழக்கங்கள் போல , சுற்றுப் பயணம் சென்றால், நண்பர்கள் எவராவது ஒருவர் வீட்டில் தங்குங்கள்.

10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலைகளைச் செய்ய முயற்சி பண்ணலாம் .

இப்படிச் செய்தால் உடல் ஆரோக்கியமாகும்.
மிகப்பெரும் பணம் மிச்சமாகும்.
சொந்தம் பெருகும்
மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் .
நட்பு வட்டங்கள் உண்மையாகும்.
உண்மையான பழைய இந்தியா மீண்டும் பிறக்கும் .

அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.17

கால் வலியைப் போக்க என்ன செய்யலாம்?


கால் வலியைப் போக்க என்ன செய்யலாம்?

வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்...
.
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லித்தளை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம்  அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து(#கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது  குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.8.17

எதுவும் நிரந்தமில்லை!!!


எதுவும் நிரந்தமில்லை!!!

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. பணம், புகழ் என்று எதுவும் நிரந்தமில்லை. நடிகர் சிவகுமார் அவர்கள் அற்புதமாக ஆற்றிய உரை ஒன்றின் சிறிய காணொளியை உங்களுக்காக இன்று வலை ஏற்றியுள்ளேன். கேட்டுப் பாருங்கள். அதன்படி உணர்ந்து செயல்படுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------

video

====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.8.17

Astrology: ஜோதிடம்: சரஸ்வதி யோகம்


Astrology: ஜோதிடம்: சரஸ்வதி யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!

சரஸ்வதி யோகம் என்றவுடன், வெள்ளைத்தாமரைப் பூவில் இருக்கும், வீணை செய்யும் ஒலியில் இருக்கும் சரஸ்வதியைப் போல ஜாதகனும் இருப்பான் என்று நினைத்துவிடாதீர்கள். இது அதீதப் படிப்பிற்கான, படித்ததை மனதில் வைப்பதற்கான யோகத்தைக் குறிக்கும்.

ஜாதகன், வேதங்களையும், உபநிடதங்களையும், புராணங்களையும், இன்னும் பல நூல்களையும் கற்றுத் தேர்ந்தவனாக இருப்பான்.

இன்றைய நிலையில் அதை எல்லாம் கற்றுத் தேர்ந்தால், வேலை எங்கே கிடைக்கும்? பூவா’விற்கு என்ன செய்வது? ஆகவே இன்றைய நிலையில் வாழ்க்கையின் உயர்விற்குத் தேவையான பல நூல்களையும் ஜாதகன் கற்றுத் தேர்ந்திருப்பான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வங்கி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். கணினி மேலான்மை என்றால் அதற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருப்பான். திரைத்துறை என்றால், அதற்குத் தேவையான அத்தனை விஷயங்கள் அனைத்தையும் கற்று வைத்திருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் வடமொழிப் பெயர்: வைரின்ச்ச யோகா (Vairincha Yoga)
Vairinchi means Saraswathi and this is a yoga for learning.

யோகத்தின் அமைப்பு: குருவும், சனீஷ்வரனும் திரிகோணத்தில் இருக்க வேண்டும். லக்கினாதிபதியும் திரிகோணத்தில் இருக்கவேண்டும். அதோடு மூவரும் வலிமையோடு இருக்க வேண்டும்.

இந்த வலிமை (strength) பற்றிப் பலமுறைகள் சொல்லியிருக்கிறேன். ஆகவே அதை மீண்டும் சொல்லி பிளேடு போட விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த யோகத்தால் ஜாதகனுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள்

ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் மேதையாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மிக்கவனாக இருப்பான். அற வழியில் நடப்பவனாக இருப்பான். எண்ணற்ற சீடர்கள் இருப்பார்கள். தெய்வ அருள் இருக்கும். எல்லோரும் வணங்கும் நிலையில் இருப்பான். நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பான். செல்வத்துடன் இருப்பான்.
-------------------------------------------------------
இருப்பதே மூன்று திரிகோணம். அதில் அந்த மூவரும் இருக்க வேண்டுமாம். கொஞ்சம் கஷ்டம்தான். அதாவது நம்மைப் போன்று ப்ளாக்குகளில் எழுதும் அல்லது ப்ளாக்குகளைப் படிக்கும் சாமான்யர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும் வாய்ப்பு இல்லை.

அந்தக் காலத்தில் ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் இந்த அமைப்பு இருந்திருக்கலாம்.

உங்களில் யாருக்காவது இருந்தால் சொல்லுங்கள். நம் வகுப்பறை சார்பில் சென்னை மெரீனாவில் ஒரு பாராட்டுவிழா நடத்திவிடலாம்!

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.8.17

உங்களுடைய எல்லா துக்கங்களும் முடிவிற்கு வரவேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!


உங்களுடைய எல்லா துக்கங்களும் முடிவிற்கு வரவேண்டுமா? இதைப் படியுங்கள்!!!!

இந்த கதையை படியுங்கள்.... எல்லா துக்கங்களும் முடிவுக்கு வரும் .

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார்.

“இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

ஆகவே தன்னம்பிக்கையோடும், இறை நம்பிக்கையோடும் இருங்கள்!

வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!!

படித்ததில் பிடித்தது!

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.8.17

திட்டமிட்டே திசை தெரியாமல் போகிறோம்!


திட்டமிட்டே திசை தெரியாமல் போகிறோம்!

சொல்வது யார்? பேராசியரும், கவிஞருமான சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள்.

கவியரசர் கண்ணதாசன் இவரைப் பற்றி சிலாக்கியமாகப் பேசுவார். சொ.சொ.மீ என்பதை சொல்லுக்குச் சொல் மீறும் சுந்தரம் என்று பெருமைப் படுத்திப் பேசுவார்.

அவருடைய உரை ஒன்றை காணொளி வடிவில் இன்று பதிவிட்டுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
-------------------------
video

====================================================
மேலதிகத் தகவல்கள்:

சொர்ணலிங்கம் செட்டியார், மீனாட்சி ஆச்சி இருவருக்கும் தேவகோட்டையில் 3.8.1942 -இல் மகனாக பிறந்தார் பேராசிரியர் 
சொ. சொ . மீ. சுந்தரம். 

தன் இளமைக் கல்வியை அழகப்பா கல்லூரி காரைக்குடியில் முடித்தார். அதன் பிறகு லயோலாக் கல்லூரி, பழனியாண்டவர் கல்லூரிகளில் வணிகவியல் பயிற்றுநராகப் பணியற்றிய இவர் பின்னாளில் சௌராஷ்டிரக் கல்லூரியில் வணிகவியல் பேராசிரியராக 41 ஆண்டுகள் பணியாற்றினார். தற்பொழுது மதுரையில் இல்லம் தோறும் பெரிய புராணம் என்ற அமைப்பின் கீழ் மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் பெரிய புராண விரிவுரை செய்து வருகிறார். 

இந்து சமயத்திற்கு பல தொண்டுகளைச் செய்து வரும் இவர் தன்னுடைய அறுபதாண்டு நிறைவு மணிவிழாவைத் திருவாசக விழாவாக நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொண்டு பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இவரின் சேவையைப் பாராட்டி இவருக்கு பல பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பாவலர் மன்றம் இவருக்கு சொல்லோவியர் பட்டம், மதுரை பன்னிருத் திருமுறை மன்றம் இவருக்கு திருமந்திரச் சொல்மனி, காஞ்சி மகாசுவாமி டிரஸ்ட் இவருக்கு செந்தமிழ் பேரொளி, திருவாடுதுறை ஆதீனம் இவருக்கு தமிழாகமச் சிந்தைச்செல்வர் என்ற பட்டங்கள் கொடுத்து கௌரவித்துள்ளது.

இது தவிர பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார் விருப்பத்திற்கேற்ப இவர் எழுதிய பண்டிதமணி, பிள்ளைத் தமிழ் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையினரால் 1991-இல் வெளிடப்பெற்றது. காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது இவர் எழுதிய திருநீறு விடுதூது 1977 - இல் வெளிவந்தது. இவர் அடியெடுத்துக் கொடுக்க கவியரசர் கண்ணதாசன் எழுதிய 'காமனை ஏன் எரித்தாய்' என்ற கவிதை 16.7.1981 குமுதம் இதழில் வெளிவந்தது.

இவரின் தமித்தொண்டைப் பாராட்டி மதுரை தமிழிசைச் சங்கம் பொற்கிழி ( ரூ. 25000) வழங்கியது. அதையொட்டி ஏழு நாட்கள் இவரின் சொற்பொழிவு தமிழ் இசைச் சங்கத்தில் நிகழ்ந்தது. மேலும் இவர் பதிப்பித்த கண்ணுடையம்மன் பள்ளு, நாட்டரசன் கோட்டையில் வெளிடப்பட்டது.

1998-இல் இறைவனடி சேர்ந்த இவரின் மனைவியின் நினைவாக இவர் எழுதிய இல்லக விளக்கு என்ற சிறு நூல் 1999-இல் வெளிவந்தது. இவருடைய ஆன்மீக இலக்கியப் பணியைப் பாராட்டி மதுரை இராமகிருஷ்ண மடம் 2012-இல் விவேகானந்தர் விருது வழங்கியது.
2012-இல் கோலாலம்பூரில் நடந்த அனைத்துலக முருகபக்தி மாநாட்டில் கலந்துக் கொண்டு உறையாற்றினார். வரும் தைப்பூசத்தை முன்னிட்டு ஆஸ்ட்ரோ விண்மீன் HD- இல் ஒளிபரப்பாகவுள்ள தைப்பூச நேரலையில், முருகன் சிறப்புகளைப் பற்றி இவர் பேசவுள்ளார். பல அறிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளப் போகும் இவரைக் காணத்தவறாதீர்கள்.

சமயத்திற்கு இவர் ஆற்றிய பணி மேலும் தொடரட்டும்.

அவர் சிங்கையில் ஆற்றிய பல உரைகளில் ஒரு உரையின் கணொளியை உங்கள் பார்வைக்காக இன்று பதிவிட்டுள்ளேன். நேரம் இருக்கும்போது கேட்டு மகிழுங்கள்!

காணொளி:=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.8.17

உலகத் தரத்தில் ஒரு அற்புதமான சாலை!


உலகத் தரத்தில் ஒரு அற்புதமான சாலை!

முன்னதாக புனாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூனா என்றறியப்படும் புனே மராட்டி இந்தியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தக்காண பீடபூமியில் கடல் மட்டத்திற்கும் மேல் 560 மீட்டர்களில் புனே அமைந்திருக்கிறது. புனே நகரம் புனே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரகமாகும்.

கிபி 937 ஆம் ஆண்டிலிருந்து புனே என்ற நகரம் இருந்து வருவதாக தெரிகிறது. மராட்டியப் பேரரசை நிறுவிய சிவாஜி புனேயில் ஒரு சிறுவனாக வளர்ந்தார், பின்னாளில் தனது ஆட்சிக்காலத்தில் இந்த நகரத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மேற்பார்வையிட்டார். 1730 ஆம் ஆண்டு, சத்ரபதி சாதராவின் பிரதம அமைச்சரான பேஷ்வாவின் தலைமையில் புனே ஒரு மிகமுக்கியமான அரசியல் மையமாக விளங்கியது. 1817 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவோடு இந்தத் தலைநகரம் இணைக்கப்பட்ட பிறகு, இந்தியா விடுதலை பெறும் வரை பம்பாய் பிரசிடென்ஸியின் "பருவகால தலைநகரமாகவும்", பாசறை நகரமாகவும்(ஆங்கிலத்தில் Cantonment) செயல்பட்டது.

இன்று, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏழு பல்கலைக்கழகங்களுடன் புனே கல்வி வசதிவாய்ப்புகள் கொண்ட நகரமாக அறியப்படுகிறது[5].1950-60 ஆம் ஆண்டுகளில் இருந்து உற்பத்தி, கண்ணாடி, சர்க்கரை மற்றும் உலோக வார்ப்பு ஆகிய தொழிற்துறைகளை நன்றாக வளர்ச்சியடடைந்துள்ளது. புனே மாவட்டத்தில் பல தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆட்டோமேட்டிவ் என்னும் தானியங்கி துறை சார்ந்த நிறுவனங்கள் அமைத்துள்ள தொழிற்சாலைகளோடு புனேவும் வளர்ந்துவரும் தொழிற்துறை நகரமாக உள்ளது. அத்துடன் புனே நகரம் பாரம்பரிய இசை, விளையாட்டுக்கள், இலக்கியம், அயல்நாட்டு மொழியைக் கற்பித்தல், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் ஆய்வு போன்ற பல்வேறு கலாச்சார செயல்பாடுகளுக்காகவும் நன்கறியப்படும் நகரமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் இந்தியா முழுவதிலுமிருந்து புலம்பெயர்பவர்களையும் மாணவர்களையும் கவர்கிறது, அத்துடன் மத்திய கிழக்கு, ஈரான், கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்காசியா ஆகிவற்றிலிருந்து வரும் மாணவர்களையும் கவர்வதால் இது பல சமூகங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் உள்ள நகரமாக விளங்குகிறது.

புனே நகரமும் மும்பை நகரமும் அதி நவீனமான பாதையால் இணைக்கப்பெற்றுள்ளன.  அதை இன்று உங்கள் பார்வைக்காக வலை ஏற்றியுள்ளேன். காணொளியிலேயே இத்தனை அற்புதமாக உள்ளதே, நேரில் பயணித்தால் எப்படி இருக்கும்? அற்புதமாக இருக்கும். வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை பயணம் செய்து பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
மேலதிகத் தகவல்:

The Mumbai-Pune Expressway is India's first six-lane concrete, high-speed, access controlled tolled expressway. It spans a distance of 94.5 km connecting Mumbai, the administrative capital of Maharashtra state and the financial capital of India, with Pune, an industrial and educational hub. The expressway, which was fully operationalized in 2002, introduced new levels of speed and safety in automobile transportation to Indian roads.It is one of India's busiest roads.

The expressway has reduced the travel time from Mankhurd where Mumbai city ends to Pune to about two hours. It has supplemented the older Mumbai-Pune National Highway (old NH 4) which had become extremely congested and accident-prone. (NH 4 has been renumbered NH 48 after renumbering of all national highways by National Highway Authority of India in 2010 year.) The expressway starts at Kalamboli (just before Panvel) and ends at Dehu Road (just before Pune). It cleaves through the scenic Sahyadri mountain ranges through passes and tunnels. It has six interchanges: Shedung, Chowk, Khalapur, Lonavala, Kusgaon and Talegaon.

The expressway has two carriageways, each with three concrete lanes, separated by a central divider and a tarmac or concrete shoulder on either side. Vehicles with fewer than four wheels and agricultural tractors are not permitted, although tractor-trailers (semi-trailer rigs) are permitted. The expressway handles about 43,000 PCUs daily, and is designed to handle up to 1,000,000 PCUs. This road has improved transport between these two metro cities.
===========================================================
காணொளிகள்
12
இரயில் பாதை: ===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.7.17

நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா? இதைப் பாருங்கள்!!!


நீங்கள் பார்க்கும் வேலை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா? இதைப் பாருங்கள்!!!

பலருக்கும் அவர்கள் பார்க்கும் வேலை திருப்தியையும் தராது. மகிழ்ச்சியையும் தராது. அதற்கு ஜாதகம் காரணம் என்றாலும், மனநிலைமையும் ஒரு காரணம்.

மற்றவர்கள் செய்யும் கடினமான வேலைகளைப் பார்க்கும்போது தான் நமது வேலை பரவாயில்லை என்ற எண்ணம் வரும்

உங்களுக்காக இன்று ஒரு காணொளியைக் கீழே பதிவிட்டுள்ளேன். அதைப் பார்த்துவிட்டு உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------

video

==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.7.17

Astrology: ஜோதிடம்: வர்கோத்தம யோகம்!!!


Astrology: ஜோதிடம்: வர்கோத்தம யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்!

ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்!

சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்

உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்! An ordinary bus will become a double Decker bus!

பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!

++++++++++++++++++++++++++++++++++++++
லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்!

மற்ற பலன்கள்:

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்

கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
---------------------------------------------
இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி  வழங்கும்

இவை எல்லாமே பொதுப்பலன்கள்.

தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம்.

அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.
------------------------------------------------------------
ஏழாம் வீட்டு அதிபதி, ராசி மற்றும் நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி  கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான்.

இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும், பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!

இதைப்போலவே மற்ற கிரகங்களுக்கும் பலனை ஊகித்துக் கொள்ளுங்கள். வாத்தியாரை ஊகித்துச் சொல்லும்படி உங்கள் ஜாதகத்தை எடுத்து நீட்டாதீர்கள். பாவம் வாத்தியார். அவருக்கு நேரம் இல்லை!

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.7.17

தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!


தெரிந்து கொள்வோம்: வட்டார வழக்குச் சொற்கள்!!!

செட்டிநாட்டுப் பகுதிகளில் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சில கலை சொற்கள்

சத்த :~
சற்று என்பது மருவி சத்த என்றானது .

பைய :~
 பொறுமை, மெதுவாக.

எங்குட்டு :~
எந்தப் பக்கம்.

எம்புட்டு :~
எவ்வளவு.

இம்புட்டோண்டு :~
சிறிதாக.

எம்புட்டு :~
என்னுடையது.

மகிர உள்ளது :~
நிரம்ப உள்ளது .

வெள்ளந :~
இருட்டு அகன்று 'வெள்ளி்' முளைக்கையிலே   அதாவது வானில் வெள்ளி காலையில் குறிப்பிட்ட நேரமே தோன்றும் அது தோன்றும் பொழுது என்பது பொருள்

குறிச்சி :~
சாய்வு நாற்காலி.

கொட்டகை :~
மங்கல நிகழ்வுகளில் கொட்டகை என்றும்  அதையே துயர துக்க நிகழ்வுகளில் பந்தல் என்றும் சொல்லும் வழக்கம்

மாடு கட்டுமிடத்தை
தொழுவம்
கட்டுத்தரை

வட்டி :~
உணவு உண்ணும்  கும்பா
(வட்டில் என்பது பண்டையத் தமிழ் வழக்கு,)
அதாவது அசலில் கை வைக்காமல் அதன் வருமானத்தில் சாப்பிடுதல்

சிலாத்தி :~
சல்லடை.

சிட்டை
குறிப்பு

சுளகு  சொளகு
முறம்.

மரவை
மரத்தால் ஆன தாம்பாளம்

போகினி / லோட்டா /
குவளை  தோட்டா என்பது பர்மிய சொல்

குந்தாணி
 உரல்.

திருகை
அரிசி உடைக்கப் பயன்படுத்தப் படும் ஒருவகை கல் உரல்

ஏவம் கேட்டல் :~
பரிந்து பேசுதல்.

கொண்டி :~
போக்கிரி.
(கொண்டி மகளிர் என்னும் சொல்லாட்சி பட்டினப்பாலையில் இடம் பெறுகிறது)

தாக்கல் :~
தகவல்  தாக்கீது

ஒள்ளத்தி  உள்ளத்தி
மிகச்சிறிய அளவு.
(எள் அத்தனை. எள்ளத்தி என்பதன் மரூஉவாக இருக்கலாம்)

தொக்கடி  தொக்கு + அடி
மிகக் குறைந்த விலை.

மருக்கோளி :~
பைத்தியம்.

வறளி :~
பிடிவாதக்காரர்.

மூதலித்தல் :~
மெய்ப்பித்தல்.

பட்டியல்
விலைச்சீட்டு

பெட்டகம் :~
இரும்பால் ஆன அலமாரி.

பெட்டக சாலை
பெட்டிக்குள் வைக்கும் இடம்

கேணி :~
கிணறு.

கிண்ணி :~
சிறு தட்டு.

பலகாரம்:~
பலாரம் ( காலைப் பலகாரம் , இராத்திரிப் பலகாரம் ) - டிபன்.

துடுப்பு :~
மரத்தால் ஆன ஒருவகைக் கரண்டி.

கொட்டான் :~
பனை ஓலையில் பின்னப்பட்ட ஒருவகைக் கூடை.

சத்தகம் :~
தேங்காய் கீறுவதற்கு பயன்படுத்தப்படும்
ஒரு வகை கத்தி போன்ற கரண்டி

வக்கூடை.
மூங்கிலால் பின்னிய கூடை

சுவத்தலமாரி :~
வீடுகளில் சுவற்றோடு பதிக்க பட்டிருக்கும் அலமாரி.

சீசா :~
கண்ணாடிக் குடுவை.

ரொட்டிக்கட்டு :~
பிஸ்கட் பாக்கெட்.

தாளிக்கிற பெட்டி :~
அஞ்சரை பெட்டி / அஞ்சு அறைப் பெட்டி.

இரவைக்கு :~
இரவு

கடிசு - கடிது :~
கடினம்.

சவுக்காரம் :~
சோப்பு.

கடைக்கால் :~
அஸ்திவாரம்.

தொலைவு :~
தூரம்.

பட்டியக்கல் :~
கருங்கல்லால் ஆன  தரை

தொரட்டி :~
உயர்த்தில் உள்ள மரக்கிளைகளை வளைத்து ஒடிக்கப் பயன்படும் கருவி / துரட்டி.

அம்புட்டு :~
அவ்வளவு.

பூராத்தையும் :~
அனைத்தையும்.

சீவிக்கிரபொட்டி :~
கண்ணாடி சீப்பு வைத்து கொள்ளும் பெட்டி.

ஊரணி :~
குளம்.

புரவி :~
குதிரை.

அங்கிட்டு :~
அந்தப் பக்கம்.

இங்கிட்டு :~
இந்தப் பக்கம்.

பொட்டல் :~
மைதானம்.

விளக்கு வைக்கணும் :~
விளக்கு ஏற்றனும்.

ஏத்தனும்
ஏற்றனும்

ராக்கை :~
அடுக்கம் / Rack.

படைக்கிற அறை :~
சாமி அறை.

உக்குராண அறை :~
சேமிப்பு அறை - சமையல் சாமான்கள் அறை

முகப்பு (மோப்பு ) :~
வீட்டின் முன்பகுதி.

வளவு - வளைவு :~
செவ்வகமான மத்தியப் பகுதி.

 திறந்த வெளியாகவும் இரு பக்கங்களிலும் அறைகள் கொண்டதாக அமைத்திருக்கும்.

வாரம் :~
தாழ்வாரம்.

பேழை :~
 ஓலையால் செய்த பெட்டி.

தடுக்கு :~
ஓலையில் செய்த சிறு பாய்.

அவுக :~
அவர்கள்.

இவுக :~
 இவர்கள்.

வந்தாக :~
வந்தார்கள்.

போனாக :~
போனார்கள்.

வருவாக :~
வருவார்கள்.

மேலைக்கு
பிற்பாடு
அதாவது யாராவது உதவி கேட்டு வந்தால் தரமாட்டேன் என்று சொல்லாமல் மேலைக்கு பார்போம் என்பர்
===========================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.17

பாற்கடல் அருவியைத் தெரியுமா உங்களுக்கு?

பாற்கடல் அருவியைத் தெரியுமா உங்களுக்கு?

அதன் பெயரை உள்ளபடி சொன்னால் தெரியலாம். அதன் பெயர்  Dudhsagar Falls

கோவா - கர்நாடகா எல்லையில் மண்டோவி நதியில் அமைந்துள்ளது இந்த அருவி. பார்ப்பதற்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை சென்று பார்த்து, ரசித்து வாருங்கள்.

4 அடுக்கு அருவி.
உயரம் சுமார் 1,000 அடிகள்
அகலம்  100 அடிகள்

கோவாவில் உள்ள பனாஜி நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. (Madgoan - Belgaum Road)
45 K.M east from Madgoan and 80 KM south from Belgaum 

Area Name: பகவான் மஹாவீர் சரணாலயம்.

அருவியைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள், ரம்மியமாக இருக்கும்  பருவ மழை காலங்களில் போய் வருவது நல்லது. அற்புதமாக இருக்கும்.

இரயில் பாதையும் உள்ளது. கோவா - ஹைதராபாத் இரயில் பாதை தடம் இதன் வழியாகத்தான் செல்கிறது.

அருவி தொடர்பான 3 காணொளிகளை உங்கள் பார்வைக்காக வலை ஏற்றியுள்ளேன்

போய்ப் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள். என்ன சரிதானா?

முதலில் காணொளிகளைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
====================================


Video Clipping One


Video Clipping Two


Video Clipping Three


=========================================================

 வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

25.7.17

Humour: நகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?


Humour: நகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று?

*படிச்சுட்டு சிரிப்பீங்களா?*

Lady : உள்ளே வரலாமா டாக்டர்?

Dr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.

Lady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

Dr: பேர் என்னம்மா?

Lady : மஞ்சுளா!

Dr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

Lady : டாக்டர் அது என் பேரு!

Dr : பையன் பேர சொல்லுங்கம்மா!

Lady : குஞ்சு!

Dr: மொத்தமே அதுதான் பேரா?

Lady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

Dr : படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

Lady : லூஸ் மோஷன்!

Dr : எப்படிப் போறான்?

lady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்!

Dr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

Lady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

Dr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா?

Dr : சரி... சாப்ட்டானா?

Lady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்!

Dr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா. இப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

Lady : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.

Dr: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது?

lady : ச்சீசீ...அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.

Dr : ஓஓஓஓ அப்படியா.! சரி,சொல்லுங்க ...

Lady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.

Dr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க? நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.!

Lady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.

Dr : ஓ சாரி...

Lady : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

Dr : ஐயோ ஆண்டவா.! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்.

Lady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்.

Dr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

Lady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

Dr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னுமா கொடுக்கறீங்க?

Lady : ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி.

Dr : என்னம்மா இவ்வளவு பச்சையா....

Lady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

Dr: அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

Lady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.

Dr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை.பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

Lady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

Dr : முருகா! ஏம்மா இப்படி சோதிக்கிறே.! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

Lady : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்!

Dr : ம் ...கொடுத்து வெச்சவர்! சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?

Lady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

Dr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க,பிரியாணி சாப்பிடலாமா?

Lady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

Dr : அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது.சரி,உங்க பையன் எத்தனை தடவை போனான்?

Lady : எங்க டாக்டர்?

Dr : ம்! என் தலை மேல...லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

Lady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ.நாலுதடவை போனான்.

Dr : தண்ணி மாதிரி போனானா?

Lady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா.

Dr : அம்மா இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்.இந்த மாத்திரைய மூனு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க.அப்புறம் இந்த பவுடர.....

Lady : பூசிவிடவா டாக்டர்?

Dr : ம். ஆமாம்,.அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க.சாவடிக்கறீங்களே.! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா

நடத்துறேன்? சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா.
ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா,திரும்ப வந்து எங்கிட்ட காட்டுங்க.

Lady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்?

Dr : அம்மா அங்காள பரமேஸ்வரி

Lady : என் பேர் மஞ்சுளா டாக்டர்.

Dr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்கனு சொன்னேன்.புரிஞ்சதா?

Lady : மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்சக் காட்டணும்..?

Dr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

Lady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது.வெளியில ஹ்ரிதிக் ரோஷன்னு கூப்பிடுவோம்.

Dr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க. எனக்கென்ன வந்துச்சு.!

Lady : டாக்டர், சாப்பாடு டயட் பத்தி சொல்லலியே?

Dr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ?

Dr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி.

Lady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்.

Dr : தாயே, இது உங்களுக்கு சொன்னேன். ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும் நீங்க டயட்ல இருக்கணும்.

Lady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் பிரியாணிய என்ன செய்ய?

Dr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

Lady : ஏன், அவங்க உங்க செட்டப்பா?

Dr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்.

Lady : டாக்டர் பீஸ்?

Dr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா.

Lady : அப்போ செட்டப்புதான்.நான் வரேன் டாக்டர்.

Dr : வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!

(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு.  )

கண்ணீர் வருகிறமாதிரி சிரிச்சு ரெம்ப நாளாச்சு !!

அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.17

இரத்த விருத்தியைப் பெறுவது எப்படி?


இரத்த விருத்தியைப் பெறுவது எப்படி?

Health Tips

*துவர்ப்பு சுவை* 🌸
     
நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச்  சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

தமிழ் மருந்துக் கடைகளில் கடுக்காய் பொடியாகவே கிடைக்கும்!! அரைக்கும் வேலையே உங்களுக்கு இல்லை!!!!

🌿 *கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்*

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை, சுவையின்மை,
பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை, தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், பாத எரிச்சல்,
மூல எரிச்சல், இரத்தபேதி,
பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன்,
ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

🌿 *இளமை பெற*

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்று கூறுவர்.

காலையில் இஞ்சி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து தெளிவித்து கீழ்தங்கும் வண்டலை தவிர்த்து 15மிலி எடுத்து சமளவு தேன் சேர்த்துசாப்பிடலாம்.

மதியம் சிறிது சுக்கு தூளை சுடுநீரில் கலந்து   சாப்பாடிற்கு முன் அருந்தலாம் .

இரவு உணவிற்க்கு பின் கடுக்காய் தூளை சுடு நீரில் கலந்து அருந்தலாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.7.17

Astrology: ஜோதிடம்: துஷ்கிரிதி யோகம்Astrology: ஜோதிடம்:  துஷ்கிரிதி யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்

களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் அதிபதி, லக்கினத்தில் இருந்து 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர். அதாவது 7ஆம் வீட்டுக்காரன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் நிலைமை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

இந்த யோகம் மோசமான யோகம். அவ யோகம். இந்த யோகம் இல்லாமல் இருப்பது நல்லது.

பலன்:

ஜாதகனின் நடத்தையால், ஜாதகனின் மனைவிக்கு, ஜாதகனிடம் சுமூகமான, அன்பான உறவு இருக்காது!. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜாதகன், பிறன் மனைகளின் மேல் கண்ணாக இருப்பான். அதாவது சட்டத்திற்குப் புறம்பான பெண் உறவுகளூக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பான்.

ஊர் சுற்றியாக இருப்பான். அவனுக்குப் பால்வினை நோய்கள் இருக்கும். உறவினர்களால் வெறுக்கப்பட்டவனாக இருப்பான். எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருப்பான்.

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களோடு இந்த அமைப்பால், சிலர் அரச தண்டனைக்கும் ஆளாக நேரிடும்

ஜாதகத்தின் வேறு சுப கிரகங்களின் அமைப்பால் இந்த அவ யோகம் இல்லாமலும் போய்விடும். ஆகவே பயப்பட வேண்டாம்!!

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.17

நீங்களும் உங்கள் கல்லீரலும்!!


நீங்களும் உங்கள் கல்லீரலும்!!

Health Tips

*நெல்லி முதல் மஞ்சள் வரை... கல்லீரல் காக்கும் இயற்கை உணவுகள்!*

கல்லீரல் பிரச்னைகள் வருகிற வரைக்கும் அதன் நலன் பற்றிப் பெரும்பாலும் யாரும் சிந்திப்பதே இல்லை. நாம் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலைச் சென்றடையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடைசியாகச் சாப்பிட்ட சாப்பாடு, வேலை முடிந்த பிறகு குடித்த குளிர்பானம் அல்லது உட்கொண்ட மருந்தும்கூட கல்லீரலை அடைந்திருக்கும். எனவேதான், `கல்லீரலுக்கு நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்’ என அழுத்தமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

திராட்சை, விஷ்ணு கிரந்தி, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மதுசாரா  கல்லீரல் நோயிலிருந்தும் (Non-alcoholic fatty liver disease) இந்த உணவுகள் நம்மைக் காப்பாற்றுகின்றன. மணமுள்ள காய்கறிகளான வெங்காயம், பூண்டு போன்றவை நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலைச் சுத்திகரிக்கக்கூடியவை. கல்லீரலைச் சுத்திகரிக்கவும் பாதுகாக்கவும் உதவும் உணவுப் பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆனாலும், ஏற்கெனவே கல்லீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகுதான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

*இஞ்சி*

இஞ்சி, உணவின் சுவையைக் கூட்டுகிறது. அதோடு, கல்லீரல் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சி உடலின் செரிமான மண்டலத்தைச் சீராக்கும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். மதுசாரா  கல்லீரல்  நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளவர்கள், கண்டிப்பாக இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*நெல்லி*

நெல்லிக்காய் கல்லீரலுக்குப் புத்துயிரூட்டக்கூடியது. வீங்கிய நிலையில் இருக்கும் கல்லீரல்களைச் சரிசெய்யும் ஆயுர்வேத சிகிச்சையில், நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும் இது உதவும். இதில் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை (Hypolipidemic) உள்ளது. எனவே கல்லீரலின் சுமையை இது  குறைக்கும்.

ஒமேகா-3 நிறைந்த உணவுகள்
கல்லீரலைப் பாதுகாக்க தினசரி உணவில் ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  வஞ்சிர மீன், முட்டை, வால்நட் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேரும் நிகழ்வை (Triglyceride synthesis) ஒமேகா-3 உணவுகள் தடுக்கின்றன. இது தொடர்பாக ஓர் ஆய்வே நடந்திருக்கிறது. ரத்தத்தில் கொழுப்பு அதிகம் சேரும் நோயான ஹைபர்லிபிடிமியாவால் (Hyperlipidemia) பாதிக்கப்பட்ட சிலருக்கு 5 மி.லி ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தினமும் இரண்டு வேளைகளாக, 24 வாரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தச் சிகிச்சையின் முடிவில் அல்ட்ரோஸோனோகிராபி (Ultrasonography) முறையில் அவர்களைப் பரிசோதித்ததில், கல்லீரல் பாதிப்புகள் நீங்கி அவர்கள் நலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மணமுள்ள உணவுகள்

*பூண்டு*

பூண்டு, வெங்காயம் போன்ற மணமுள்ள உணவுகளும் கல்லீரலைப் பாதுகாக்க உதவுகின்றன. அவற்றில் உள்ள சல்ஃபர்தான் மணம் உருவாகக் காரணமாவது. சல்ஃபர், கல்லீரலில் என்ஸைம் உற்பத்திக்கு உதவுவது. நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு கல்லீரலுக்குத் தேவையானது இந்த என்ஸைம்கள்தான்.

காய்கறிகள்

பூண்டு மற்றும் வெங்காயத்தின் மணத்தை சிலரால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள், சல்ஃபர் அதிகமுள்ள வேறு சில காய்கறிகளைச் சாப்பிடலாம். முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் சல்ஃபர் நிறைய உண்டு. இவற்றில் உள்ள குளுக்கோசினோலேட் (Glucosinolate) என்ற சல்ஃபர் கலந்த கலவை, என்ஸைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சு நீக்கத்துக்கு உதவும்.

*ஸ்ட்ராபெர்ரி*

ஸ்ட்ராபெர்ரியில் பாலிபினால் (Polyphenols) மற்றும் அந்தோசயனின் (Anthocyanins) அதிகம் உள்ளன. இவை வீக்கம், கட்டி முதலியவற்றுக்கு எதிராகச் செயல்படுபவை. இவை சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கூட. ஸ்ட்ராபெர்ரி கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

*பீட்ரூட்*

பீட்ரூட்டில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் (Flavonoids) என்ற நிறமி, கல்லீரலைப் பாதுகாக்க உதவக்கூடியது. பீட்ரூட் ஜூஸ் அருந்துவது, கார்சினோஜென் (Carcinogen)   எனும் புற்றுநோய் காரணியை உடலில் சேராமல் தடுக்கும். தொடர்ந்து பீட்ரூட்டை நீண்ட நாட்களுக்குச் சாப்பிடுவது கல்லீரல் பாதிப்புகளிலிருந்து  நம்மைப் பாதுகாக்கும்.

திராட்சைப்பழம்

புளிப்பான திராட்சைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது, குடல் நன்றாகச் செயல்பட உதவுவதோடு, கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் உதவும்.  திராட்சையில் உள்ள `நாரின்ஜெனின்’ (Naringenin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், கல்லீரல் கொழுப்பை நீக்க உதவும்.
 
விஷ்ணு கிரந்தி

விஷ்ணு கிரந்தியில் டீ போட்டுக் குடிப்பது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. சிலர் இதை சாலட்களிலும் பயன்படுத்துவார்கள். `சிலிமரின்’ (Silymarin)  என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் நிறமி இதன் விதைகளில் உள்ளது. இவை கல்லீரல் நச்சை வெளியேற்ற உதவுவதோடு மட்டுமில்லாமல் கல்லீரலை சேதப்படுத்தும் டைல்னோல் (Tylenol) மருந்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகளிலிருந்தும் காப்பாற்றும். புதிய செல்கள் வளர உதவிசெய்து, கல்லீரலைப் புத்துயுயிரூட்டவும் விஷ்ணு கிரந்தி உதவும்.

*மஞ்சள்*

இயற்கையான வழிமுறை மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் மஞ்சள் இல்லாத பட்டியல் நிச்சயம் இருக்க முடியாது. ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவ முறைகளில் நூறாண்டுகளுக்கும் மேலாக கல்லீரல் சிகிச்சைக்கு மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது தவிர கல்லீரலை சுத்திகரிக்கவும், பாதுகாக்கவும் சில ஜூஸ்களும் டீக்களும் உதவுகின்றன.

கலர்ஃபுல் ஜூஸ்

தேவையானவை:
கேரட் - 3, வெள்ளரிக்காய் (சிறியது) - 1, எலுமிச்சைப்பழம் - 1/2, ஆப்பிள்  - 1.
செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஜூஸாக்கிக் கொள்ளவும். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிதைவதற்குள் ஜூஸைக் குடித்துவிட வேண்டும். தினமும் இரண்டு வேளை இந்த ஜூஸைக் குடித்துவர கல்லீரல் சுத்தமாகும்.

*எலுமிச்சை - கிரீன் டீ*

அரை கப் கிரீன் டீயை ஆறவைத்துக்கொள்ளவும்.  அதனுடன் பாதி எலுமிச்சைப் பழத்தின் சாற்றை சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு வாழைப்பழத்தையும் கலந்துகொள்ளவும். இதை தினமும் குடித்துவர, கல்லீரல் சுத்தமாகும். கிரீன் டீயில், ஈ.ஜி.சி.ஜி (EGCG) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது கல்லீரலைப் பாதுகாக்க உதவும்.

இஞ்சி - மஞ்சள் சாறு

அரை டீஸ்பூன் மஞ்சள், சிறிய துண்டு இஞ்சி, பாதி எலுமிச்சையின் சாறு இவற்றுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இது குடலைச் சுத்தம் செய்யும். பித்தக்கற்கள் வருவதைத் தடுக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.

கல்லீரல் நம் கண்ணுக்குத் தெரியாத ஓர் இடத்தில் இருப்பதால், நாம் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் ஒரு பகுதி ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலில்தான் போய்ச் சேரும். கல்லீரலில் சேரும் கொழுப்பை, நச்சுப்பொருட்களை வெளியேற்றவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அவை பெரிய நோய்களாக மாறி நம்மைப் பாதிப்பதற்கு முன்னர் இயற்கை வழிமுறைகள் மூலம் கல்லீரலைக் காப்போம்!

படித்தேன்; பகிர்ந்தேன்!!

அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.17

கலக்கல் காணொளிகள்!

கலக்கல் காணொளிகள்!

இன்று உங்களுக்காக 3 வீடியோ கிளிப்புக்களைப் பதிவிட்டுள்ளேன். எல்லாம் சிறிய காணொளிகள்தான். அவசியம் பாருங்கள்.

அன்புடன்
வாத்தியார்
==========================
1
உடல் நலத்திற்காக 9 நிமிட உடற்பயிற்சிகள்!

video

கிட்டத்தட்ட சரியான பதிலைப் பற்றி தென்கச்சி சுவாமிநாதன்  கூறியது!!!

video

3
இந்தக்  காலத்து சமையலை விளாசுகிறார் இந்த அன்பர். அவருடைய குரலும் மொழி வளமும் கலக்கலாக உள்ளது!!!

video

=====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!