மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 201 - 210. Show all posts
Showing posts with label Lessons 201 - 210. Show all posts

3.7.09

அது உங்கள் சாய்ஸ்!

அது உங்கள் சாய்ஸ்!

Choice என்னும் ஆங்கிலச் சொல் பொறுக்கி எடுத்தல் அல்லது
தேர்வு செய்தல் என்று பொருள்படும் Things choosen or things
selected

இன்னும் விளக்கமாக இப்படியும் சொல்லலாம்:
Act of choosing; the voluntary act of selecting or separating from
two or more things that which is preferred; the determination
of the mind in preferring one thing to another; election.
The power or opportunity of choosing; option.

இந்த option என்னும் சொல் இன்னும் நெருக்கமான பொருளைக்
கொடுக்கும்

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

உலகில் பல விஷயங்கள் அல்லது செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு
விடப்பட்டுள்ளன. சில விஷயங்களும், செயல்களும் உங்கள்
விருப்பத்திற்கு விடப்படவில்லை; விருப்பத்திற்கு அப்பாற்பட்டவை.

பிறப்பை எவனும் தேர்ந்தெடுக்க முடியாது.
தாய், தந்தையை எவனும் தேர்ந்தெடுக்க முடியாது
உடன்பிறப்புக்களையும் தேர்ந்தெடுக்க முடியாது
உறவுகளையும் தேர்ந்தெடுக்க முடியாது!

அதுபோல இறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது.
தற்கொலைக்கு முயன்றவனில் பலபேர் மனவருத்தங்களுடன்
இன்றும் இருக்கிறான்.

இதுபோன்று பல விஷயங்கள் உங்கள் Choiceற்கு
அப்பாற்பட்டவை

அவைகள் எல்லாம் விதிப்படி நடப்பவை
விதித்தபடி நடப்பவை
அவற்றில் உங்கள் விருப்பத்திற்கு இடமேயில்லை!

மணவாழ்க்கை மட்டும் உங்கள் கையில் இருப்பதுபோல் தோன்றும்
அது காதல் திருமணமானாலும் சரி அல்லது பெற்றோர்கள்
செய்து வைக்கும் திருமணமானாலும் சரி,அதுவும் விதித்தபடிதான் நடக்கும்!

மெல்லியலாள் தோளில் சாய்ந்தாலும் சாய்வாள்
அல்லது தன் காலில் சாயவைத்தாலும் வைப்பாள்
தேவதையாகவும் இருக்கலாம்
அல்லது பிசாசாகவும் வந்து சேரலாம்!.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல
ஒரு ஆணின் தோல்விக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்!

எல்லாம் வாங்கி வந்த வரம்
நம் மொழியில் சொன்னால் ஜாதகப் பலன்

நண்பனிடம் ஒருவன் கேட்டான்: “உங்கள் வீட்டில்
யார் முடிவெடுப்பீர்கள்? நீயா? அல்லது உன் மனைவியா?”

புன்னகையுடன் பதில் வந்தது!

“பெரிய விஷயங்களுக்கெல்லாம் நான் முடிவெடுப்பேன்.
சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவள் முடிவெடுப்பாள்!”

“விளக்கமாகச் சொல்லுடா!”

“ஃபிரிஜ்ஜை மாற்றுவது, புதுக் கார் வாங்குவது, ஏரியா பார்த்து வீடு
மாறுவது, பையனை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது போன்ற சின்ன
விஷயங்களுக்கெல்லாம் அவள் முடிவெடுப்பாள். எந்தக் கட்சிக்கு
ஓட்டுப் போடுவது, யார் வீட்டுக் கல்யாணத்திற்குப் போவது போன்ற
பெரிய விஷயங்களுக்கெல்லாம் நான் முடிவெடுப்பேன்!”

எப்படியிருக்கிறது பாருங்கள்?:-)))))

ஒரு சிந்தனையாளன் சொன்னான்:

“எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள்
அல்லது நாட்டிற்கு ஒரு தத்துவஞானி கிடைப்பான்.”

ஆகவே எதிர்பார்ப்பில்லாமல் வாழுங்கள்!
வருவது வரட்டும்
நடப்பது நடக்கட்டும்
இன்பம் துன்பம் எதுவந்தாலும் மகிழ்ச்சியுடன் இருப்போம்
நம் சந்தோஷத்தை எதற்காகவும் அடகு வைக்க வேண்டாம்
பறி கொடுக்க வேண்டாம்.
பரிவர்த்தனை செய்து கொள்ள வேண்டாம்

எந்தப் பறவையாவது கவலைப் படுகிறதா?
அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுகிறதா?
கிடைத்த பழத்தின் மிச்சத்தைக் கொண்டுபோய் கூண்டில் வைத்துக் கொள்கிறதா?
கிடைக்கும் தானியத்தை லவட்டிக் கொண்டு போய்க் கூண்டில் ஒளித்து வைக்கிறதா?
கூடு கட்டும் கடனுக்காக வங்கியில் போய்க் கைகட்டி நிற்கிறதா?

அதைத்தான் கவியரசர் இப்படிப் பாட்டில் வைத்தார்:
“சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கேது சொந்த வீடு?”
+++++++++++++++++++++++++++++++++++
சரி, கவலைப் படாமல் இருக்க முடியுமா?
கவலைகள் தேடி வருகின்றனவே?
ஐந்தாம் வீடு கெட்டிருந்தால் கவலைகள் அலைபோல
நம்மைத் தேடி வரத்தான் செய்யும்!
Fifth house is the house of mind!
ஆகவே கவலைப் படாமல் இருக்க முடியாது!

ஆனால் அதில் நமக்குச் சாய்ஸ் உண்டு!

சாய்ஸ் உள்ள விஷயங்களுக்கு மட்டும் கவலைப் படுங்கள்
சாய்ஸ் இல்லாத விஷயங்களுக்குக் கவலைப் படாதீர்கள்!
முடிந்த விஷயங்களுக்கு மட்டும் கவலைப் படுங்கள்
நம்மால் முடியாத விஷயங்களுக்குக் கவலைப் படாதீர்கள்!

கவலைப் படுவது உங்கள் Choice
கவலையின்றி இருப்பதும் உங்கள் சாய்சே!

அன்புடன்
வகுப்பறை
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

30.6.09

ஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு!


ஓம்கார் ஸ்வாமிஜி அவர்களுக்காக ஒரு பதிவு!

இதற்கு முந்தைய பதிவில் மதிப்பிற்குரிய நமது ஸ்வாமிஜி அவர்கள்
இட்ட பின்னூட்டத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
அந்த பின்னூட்டத்திற்குப் பதில் சொல்லும் முகமாக இந்தப் பதிவு

////////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
திரு சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,
ஓரை - ஹோரா எனும் இந்த தகவல் பயனுள்ளது என்றாலும்,
அட்டவணையை கொடுத்து அதை பயன்படுத்து என சொல்லுவது
சரியான வழிகாட்டுதலா?
கேள்விகள்
---------
1)ஏன் ஞாயிறு 6 முதல் 7 வரை சூரியன் ஹோரையாக இருக்கிறது?
7 முதல் 8 வரை ஏன் சுக்கிரன் ஹோரையாக வருகிறது? சுக்கிரனுக்கு
பதில் வேறு கிரகம் வரக்கூடாதா?
2)ஏன் 7 கிரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது?
ராகு கேது ஏன் இல்லை? நவக்கிரங்கள் தானே?
சப்த கிரகங்கள் பயன்படுத்தியதன் நோக்கம் என்ன?
3)நேரங்கள் சூரிய உதயத்திற்கு தக்க மாறுமா?
போன்ற கேள்விகளுக்கு விளக்கத்துடன் இத்தகவல்களை
வெளியிட்டால் நல்லது. இல்லை என்றால் இதை விட மூட நம்பிக்கை
வேறு எதுவும் இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் வரும்.
உங்கள் பாணியில் விளக்குவீர்கள் என காத்திருக்கிறோம்...///////
===================================================

நன்றி ஸ்வாமிஜி; இந்த எளியவனின் பதில்:
(விளக்கங்கள் சரிதானா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்)
++++++++++++++++++++++++++++++++
நல்ல காரியங்கள் வெற்றிபெற வேண்டும்.
அதுதான் அதைச் செய்பவர்களுக்கு நல்லது
ஆகவே அவற்றைக் காலமறிந்து செய்யுங்கள் என்றார்கள்
நம் முன்னோர்கள்
சொன்னதோடு நிற்காமல் அதற்கான வழியையும்
சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
அதுதான் ஓரை அல்லது ஓரை நேரம்.

சுப ஓரைகளில் செய்யப்படும் செயல்கள் வெற்றிபெறும்
என்பது அவர்களின் வாக்கு!
ஆகவே செய்யும் நல்ல செயல்களை ஓரை பார்த்துச் செய்யுங்கள்.
வெற்றி நிச்சயம்!

ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது.
ஒரு நாளின் கிழமை அதன் அதிபதியின் முதல் ஓரையாக
கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி
நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை,
8-9 மணி வரை புதன் ஓரை,
9-10 வரை சந்திரன் ஓரை,
10-11 வரை சனி ஓரை,
11-12 மணி வரை குரு ஓரை,
12-1 மணி வரை செவ்வாய் ஓரை.
இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால்
அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை,
புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை,
அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள
வரிசைப்படி ஓரை கணக்கிடப்படுகிறது.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய
நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

சரியான சூரிய உதயத்தை வைத்துக் கணக்கிட்டால் பலன்கள்
இன்னும் சூப்பராக இருக்கும்.

அதற்கு சூரிய உதயம் பற்றிய விவரம் தேவை; உங்களுக்காக
சூரிய உதய அட்டவணையையும் கீழே கொடுத்துள்ளேன்.

+++++++++++++++++++++++++++++++++++++


+++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு.
ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும்,
அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும்
அவற்றிற்கு ஓரை கிடையாது

ஓரைகளை யார் உருவாக்கினார்கள் என்று கேள்வி கேட்காதீர்கள்.
அவைகள் ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை
அதோடு கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை.
பிடித்திருந்தால், ஒப்புதல் இருந்தால் கடைப்பிடியுங்கள்
இல்லாவிட்டால் கடாசி விட்டு நடையைக் கட்டுங்கள்.
அதனால் வேறு யாருக்கும் நஷ்டமில்லை!

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள்
எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும்
உருவாக்கப்பட்டன.

சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள்,
தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி,
அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான
கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள்
ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின்
அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர்.
இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு
அளித்தனர்.

சூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன.
இவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும்,
அது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்)
அதற்கு 2வது இடம் வழங்கினர்.

இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு,
4வது இடம் சந்திரனுக்கும்,
5வது இடம் சனிக்கும்,
6வது இடம் குருவுக்கும்,
7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.

இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும்
நல்ல ஓரைகள் எனப்படுகிறது.

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே
கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம்,
குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது,
பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல்
ஆகியற்றைச் செய்யலாம்.

இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும்.
கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால்,
அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது
என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது,
ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது,
நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல்,
விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும்
பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள்,
வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.

நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது,
சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல்,
உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம்,
மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம்
செவ்வாய் ஓரை மேற்கொள்ளலாம்.
இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால்
சக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war)

வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது.
செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும்,
அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள்
கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும்,
வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது.
இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.

மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது.
நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும்.
அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.
அதோடு அடியேன் மாய்ந்து மாய்ந்து பாடம் நடத்துவதின் நோக்கமும்
நிறைவேறும்:-)))

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

29.6.09

உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா ?



உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா ?

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அடுத்த பிரபு தேவாவிற்காக அல்லது
அடுத்த உதித் நாராயணனுக்காக மண்டையைப் பிய்த்துக்
கொண்டிருக்கிறார்கள்

நமக்கு, பின்னூட்டங்களில் நமது மண்டையைப் பிய்ப்பவர்கள் இங்கேயே
இருப்பதால், தொலைக்காட்சியை மறந்து விட்டு வலைப் பதிவுகளிலேயே
கவனத்தைச் செலுத்துவோம். இருக்கிற முடியாவது மிஞ்சட்டும்

உங்களில் யார் அடுத்த மன்மோகன்சிங் ? என்று கேட்டுப் பதிவு போட
ஆசை. அதெல்லாம் கொஞ்சம் ஓவராகப் பட்டதால், நமது லெவலுக்கே
சிந்திப்போம் என்று முடிவு செய்து இந்தப் பதிவைப் பதிந்துள்ளேன்!

உங்களில் யார் அடுத்த யுவகிருஷ்ணா?

யுவகிருஷ்ணா யார் என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்!

அய்யா, சாமி, நான் நேற்றுத்தான் பிறந்தேன் என்று சொல்பவர்கள்
இந்த வலைப்பூவைப் படித்துவிட்டுப் பின் இங்கே வரவும்

அந்த வலைப்பூவின் சைடு பார் மேட்டர்களும் முக்கியமானது
அவற்றையும் படித்துவிட்டு வரவும். அப்போதுதான் இந்தப் பதிவின்
தலைப்பு உங்களுக்குப் பிடிபடும்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

யுவகிருஷ்ணாவின் வெற்றி ஃபார்முலா என்ன?

எதை எழுதினாலும் நன்றாக ரசிக்கும்படி எழுதுகிறார்.

நமீதாவைப் பற்றி எழுதினாலும் சரி, நயந்தாராவைப் பற்றி
எழுதினாலும் சரி, ஓல்ட் மாங்கைப் பற்றி எழுதினாலும் சரி
அல்லது ஓமந்தூர் ரெட்டியாரைப் பற்றி எழுதினாலும் சரி
சுண்டக்கஞ்சி அல்லது சுண்டல் வகையறாவைப் பற்றி
எழுதினாலும் சரி நன்றாக விலாவரியாக எழுதுகிறார்.

எல்லோராலும் அப்படி எழுத முடியுமா? முடியாது!
அதற்குக் கொடுப்பினை வேண்டும். பண்ருட்டியில் இருந்து கொண்டு
பரங்கிமலை ஜோதியைப் பற்றி எப்படி எழுத முடியும்?

வேறு வழியில்லையா?

இருக்கிறது!

சுப ஒரைகளில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் வெற்றி உண்டு என்று
பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

ஆகவே சுப ஓரைகளில் பதிவை எழுதுங்கள். சுப ஒரைகளிலேயே
பதிவை உள்ளடுங்கள். வெற்றி நிச்சயம். நீங்கள்தான் அடுத்த
யுவகிருஷ்ணா!
------------------------------------------------------------------
ஒரை என்பது என்ன?
Hora is a 24-hour period cycle ruled by the 7 planets
sun, moon, mars, mercury, jupiter, venus and sun all ruling planet.

அட்டவணை கீழே உள்ளது!
படத்தின் மீது கர்சரை வைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!

வாழ்க வளமுடன்!

27.6.09

கீழே நீ தோண்டு; மேலே நான் தோண்டுகிறேன்!

கீழே நீ தோண்டு; மேலே நான் தோண்டுகிறேன்!


மனிதன் ஆசைகள் மிக்கவன். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை
என்று ஏதாவது ஒரு ஆசையில் முழுகிக் கிடக்கின்றான். அவ்வாறில்லாத
மனிதனைப் பார்ப்பது அபூர்வம்.

ஆசைப்படாதே; ஆசைதான் உன்னுடைய துன்பத்திற்கு எல்லாம் காரணம்
என்கிறது மெய்ஞானம்,

ஆசைப்படுவதை நிறுத்தாதே!; ஆசைப்படுவதை நிறுத்தினால் நீ முடங்கிப்
போய்விடுவாய். உன் வளர்ச்சி நின்று போய்விடும் (your prosperiy ends there!)
என்கிறது விஞ்ஞானம்.

எது உண்மை? எதைக் கடைப்பிடிப்பது என்பது தெரியாமல் பாமர மனிதன் அல்லாடுகிறான்!

விஞ்ஞானம் எல்லாவற்றையும் தோண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சக
மனிதனையும் தோண்டிப்பார்க்கச் சொல்கிறது. மெய்ஞானத்தை எல்லாம்
குப்பையில் போட்டு விட்டு என்னுடன் வா என்கிறது.

மந்திரமாவது, மண்ணாங்கட்டியாவது என்கிறது?

அச்சேறிய குப்பைகள் எல்லாம் உண்மையானவை போன்று தோற்றமளிக்கும்,
நம்பாதே என்கிறது!

திருஞானசம்பந்தரும், அருணகிரியாரும் உணர்ந்து எழுதியவற்றை எல்லாம்
குப்பை என்கிறது

வராஹிமிஹிரரும், பராசுரரும் எழுதி வைத்த ஜோதிடக்கலைக்கு நிருபணம்
கேட்கிறது.

இறைவனை அடையாளம் காட்டு என்கிறது?

அணுகுண்டைத் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை பல நாடுகளுக்குக் கொடுத்திருக்கிறது.

ஆர்.டி.எக்ஸ் வெண்டிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இளைஞர்களுக்குக்
கற்றுக் கொடுத்திருக்கிறது

லட்சக்கணக்கான பாட்டில்கள் மது தயாரிக்கும் தொழில் நுட்பத்தைச் சில தொழில் அதிபர்களுக்குக் சொல்லிக்கொடுத்திருக்கிறது

இன்றையத் தேதியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சரக்கடித்துவிட்டு சந்தோஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் மாயை (illusion) என்பதை மனிதன் எப்போது உணர்வான்?

உணர்வான் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை!

சிலர் உணரலாம். சிலர் உணராமல் போகலாம்.

அதனால் யாருக்கு நஷ்டம்?

யாருக்கும் நஷ்டமில்லை!

மனிதன் கடவுளின் துகழ்களைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

ஆனால் காலதேவனோ மனிதனின் சாம்பலை வேண்டிய மட்டும் பார்த்து விட்டான். இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

மனிதன் கீழே தோண்டிக்கொண்டிருக்கிறான். காலதேவன் மேலே தோண்டிக் கொண்டிருக்கிறான்.

காலதேவன் சமீபத்தில் போட்டபோடுதான். உலகப் பொருளாதாரச் சீரழிவு.
(Global economical & financial crisis.) அது சரியாக இன்னும் சில ஆண்டுகள்
ஆகும்.

அடுத்ததாக காலதேவன் எதைத் தோண்டப்போகிறான் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

வாழ்க வளமுடன்!

20.6.09

என்னடா ஆயிற்று பாகற்காய்க்கு?


என்னடா ஆயிற்று பாகற்காய்க்கு?

ஆசிரமம் ஒன்றில் முற்றும் துறந்த சந்நியாசி ஒருவர் இருந்தார்.
அவருக்கு நான்கு இளம் சீடர்கள் இருந்தார்கள்.

முற்றும் துறந்தவருக்கு எதற்கு ஆசிரமம்? எதற்கு சீடர்கள்?
என்கிறீர்களா. அதுவும் சரிதான். அதை எல்லாம் நானும் கேட்டுக்
கொண்டிருந்தால் கதையை எப்படி நகர்த்துவது?

சில விஷயங்களைக் கேட்காமல் கருத்தை மட்டும் பார்ப்பதுதான்
நமக்கு நல்லது. ஆகவே கதைக்கு வருகிறேன்.

அசிரமத்தின் அன்றாடத் தேவைகளை, அந்த ஆசிரமத்தின் மேல்
மதிப்பு வைத்திருந்த - உங்கள் மொழியில் சொன்னால் அந்த
ஆசிரமத்தின்மேல் பிடிப்பு அல்லது காதல் கொண்டிருந்த உள்ளூர்
மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.

ஆசிரமம் செழிப்பாக இருந்தது. காலையிலும், மாலையிலும் சாமியார்,
மக்களை நல்வழிப்படுத்தும் முகமாக உரை நிகழ்த்துவார். கூட்டு
வழிபாடு செய்வார்.

ஒரு நாள், அந்த நான்கு சீடர்களில் மூன்று பேர்கள் சாமியாரிடம்
வந்து,” ஐயா நாங்கள் அருகிலிருக்கும் புண்ணிய நதிகளிலும், நீர்
நிலைகளிலும் தீர்த்தமாடிவிட்டுவர ஆசைப் படுகிறோம். அனுமதி
கொடுங்கள்” என்றார்கள்

”ஏன் நம்மூர் ஆற்றிற்கு என்னாயிற்று?” என்று கேட்டார்.

”அதில்தான் தினமும் நீராடிக்கொண்டிருக்கிறோமே! ஒரு மாறுதலுக்காக
மற்ற புண்ணிய நதிகளிலும் நீராடிவிட்டுவர விரும்புகிறோம்” என்றார்கள்.

“சென்று வாருங்கள்” என்றார்.

அவர்களில் ஒருவன்,”ஐயா நீங்களும் வர வேண்டும்!” என்றான்.

“இல்லை, நீங்கள் மட்டும் சென்று வாருங்கள்!” என்றார்

மற்ற இருவரும் இப்போது அவனுடன் சேர்ந்து வலியுறுத்தவே, சாமியார்
சுற்று முற்றும் பார்த்தார்.

அருகில் இருந்த பாகற்காய் கொடியில் நிறையக் காய்கள் காய்த்துத்
தொங்கிக் கொண்டிருந்தன.

அவற்றில் ஒன்றைப் பறித்து அவர்களிடம் கொடுத்தவர், இப்படிச் சொன்னார்:

“இந்தக்காயை நான் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நீராடும்
இடங்களில் எல்லாம் இதையும் மூன்று முறைகள் நமச்சிவாயா என்று
சொல்லி நீரில் முக்கி எடுத்துக் கொண்டு வாருங்கள்”

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உள்ளூர் ஆசாமி ஒருவன் அவர்களுக்கு
வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். இரண்டு நாட்கள்
பயணம் மேற்கொண்டு நான்கு நதிகளில் நீராடிவிட்டுத் திரும்பினார்கள்.

திரும்பி வந்தவுடன், சாமியாரை நெடுஞ்சான் கிடையாக விழுந்து
வணங்கினார்கள்.

சாமியார் கேட்டார்,”பாகற்காய் என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னபடியே பாகற்காயையும் நீராட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்”

“இன்று அதைச் சமையலில் சேர்த்து விடுங்கள்” என்றார் அவர்.

அப்படியே செய்தார்கள்.

மதியம் சாப்பிடும்போது, சாமியார் கேட்டார்,” பாகற்காயில் ஏதாவது
மாறுதல் தெரிகிறதா?”

சீடர்கள் மூவரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்,” இல்லை ஐயா,
எப்போதும் போல அது கசப்பாகத்தான் இருக்கிறது!”

இப்போது சாமியார், அவர்களுக்குப் புரியும்படியாக அழுத்தமான குரலில்
சொன்னார்.

“எத்தனை புண்ணிய நிதிகளில் முக்கி எடுத்தாலும் பாகற்காயின் குணம்
போகவில்லை அல்லவா? அதுபோலத்தான் எத்தனை புண்ணிய நதிகளில்
நீராடினாலும் அல்லது எத்தனை ஆலயங்களில் வழிபட்டாலும் மனிதனின்
இயற்கைக் குணம் மாறாது!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆமாம் மனிதனின் இயற்கைக் குணம் என்றுமே மாறாது.

அதைப் பிறவிக் குணம் என்பார்கள்

அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தக் கதை.

மிளகாய் என்றுமே மிளகாய்தான்
மாங்காய் என்றுமே மாங்காய்தான்
புளியங்காய் என்றுமே புளியங்காய்தான்

எத்தனை இனிப்புப் போட்டுச் சமைத்தாலும் அவற்றின் இயற்கைத் தன்மை மாறாது!

அதுபோல கஞ்சன் என்றுமே கஞ்சன்தான். எத்தனை செல்வம் வந்தாலும்,
அந்தக் கஞ்சத்தன்மை மாறாது. அதுபோல காமுகன் என்றும் காமுகன்தான்.
எத்தனை பெண்களை அவனுக்குக் கட்டிவைத்தாலும் அவன் திருந்த
மாட்டான். உலகில் உள்ள அத்தனை அழகான பெண்களையும்
அவனுக்குக் கட்டி வைப்பதாகச் சொன்னாலும், தேவமங்கைகள் என்று
சொல்கிறார்களே, அவர்கள் கிடைப்பார்களா? என்றுதான் கேட்பான்.

அதுபோல கோபம், சோம்பேறித்தனம், பொறாமை, படபடப்பு, பிடிவாதம்
என்றுள்ள பல மனித குணங்கள் பிறவியிலேயே வருவது. அது என்றுமே
மாறாதது. மனிதன் செத்துச் சாம்பலாகும் வரை அவனுடனேயே இருப்பது.

எந்தக் கொம்பனாலும் அவற்றை மாற்ற முடியாது. அல்லது மாற்றிக் கொள்ள
முடியாது.

ஏன் அப்படி?

அதுதான் வாங்கி வந்த வரம்!

உங்கள் மொழியில் சொன்னால், பிறந்த லக்கினத்தாலும், மற்றும் பிறந்த
நேரத்தில் உள்ள கிரக அமைப்புக்களாலும் ஏற்படுவது அது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Benefic planets such as Jupiter, Venus, Mercury and the luminous
Moon do very well in first house. However, the presence of the
malefics such as Rahu, Ketu, Saturn and Mars can create very
difficult situations in life. Strongly afflicted, it produces difficult
birth or even infant mortality. It can also cause psychological,
emotional and physical disorders.

லக்கினத்துடன் சந்திரன், குரு, சுக்கிரன், புதன் போன்ற நன்மையளிக்கும்
கிரகங்கள் சம்பந்தப் படும்போது மனிதன் பல நல்ல குணங்களைப்
பெற்றவனாக இருப்பான். சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற தீய
கிரகங்கள் சேரும்போது மன வக்கிரங்கள், உணர்வுச் சீரழிவுகள்
கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.

(லக்கினத்தைப் பற்றிய அலசல் தொடரும்)






வாழ்க வளமுடன்!

18.6.09

கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்?


கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்?

தலைப்பு - விடுபட்டவை
கோள்சாரத்தைப் (Transit of planets) பற்றிய புலிப்பாணி முனிவரின் பாடல்:

"கேளப்பா குருமூன்றில் கலை தானெட்டு
.......கேடு செய்யும் சனி ஜென்மம் புந்தி நாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
......சீறிவரும் பாம்பு நிதியில் தோன்ற
ஆரப்பா அசுரகுரு ஆறிலேற
......அப்பனே திசையுயினுடைய வலுவைப்பாரு
மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
......குழவிக்கு நிரியாணங் கூர்ந்து சொல்லே!"
-------------------------------------
குரு = 3ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
கலை = சந்திரன் = 8ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சனி = ஜென்மம் = 1ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
புந்தி = புதன் = 4ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சேய் = செவ்வாய் = 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
செங்கதிரோன் = சூரியன் = 5ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
சீறிவரும் பாம்பு = ராகு & கேது = 2ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்
அசுரகுரு = சுக்கிரன் = 6ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போதும்

ஜாதகனுக்குத் துன்பம் மிகுந்திருக்கும். அல்லது காரிய சித்தி,
காரிய ஜெயம் இருக்காது.அந்தக் காலகட்டத்தில் நல்ல திசை
அல்லது நல்ல திசையின் புத்தி (Sub period of a benefic planet)
நடந்து கொண்டிருந்தால் இந்தக் கோச்சாரப்பலன் செல்லுபடியாகாமல்
போய்விடும். இல்லையென்றால் படுத்தி எடுக்கும்.

கோச்சாரத்தைவிட தசா புத்திதான் முக்கியமானது!
தசாபுத்தியும் சரியில்லை என்றால் அதுவும் சேர்ந்து கொண்டு சாத்தும்
சாத்தும் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?

சரி, இந்தப் பாடலின் முக்கியத்துவம் என்ன?
ஒவ்வொரு கிரகத்திற்கும் கோச்சாரத்தில் 12 ராசிகளிலும் வலம் வரும்
அமைப்பு இருந்தாலும், இந்தக் குறிப்பிட்டுள்ள இடங்கள் மட்டுமே
ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிகக் கேடானது. கிரகத்திற்கல்ல -
அதை அமைப்பாகக் கொண்டுள்ள ஜாதகனுக்குக் கேடானது என்று
வைத்துக் கொள்ளுங்கள். அதைச் சொல்லவே இந்தப் பாடல்

அர்த்தம் ஆகியதா கண்மணிகளா?

வாழ்க வளமுடன்!

13.6.09

நீயா? நானா?

நீயா? நானா?

பழைய திரைப்படம். நாயகி அழகாக இருப்பார். பிடரியை மறைக்கும்
நீண்ட முடி. அதற்குத் துணை நிற்கும் மல்லிகைச் சரம்.

எவரையும் ஈர்க்கும் புன்னகை சிந்தும் முகம்.

அங்கே வரும் பெரியவர் ஒருவர், அந்தப் பெண்ணின் அழகில் மகிழ்ந்து
அவள்தான் தன் மகனுக்கு ஏற்ற பெண் என்ற முடிவிற்கு வந்து,
அவளுடன் பேசத்துவங்குவார். அவர் அவளுடைய உறவினர்.ஆகவே
அந்த மங்கை நல்லாளும் தயக்கமின்றி அவர் கேள்விகளுக்குப் பதில்
சொல்வாள்.

தன் சட்டைப் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தைத் தன்
விரல்களால் சுண்டி விட்டுப் பிடித்து உள்ளங் கைகளிக்கிடையே
மறைத்து வைத்துக் கொண்டு கேட்பார்:

“பூவா? தலையா? சொல்லம்மா பார்க்கலாம்?”

பெண் முகம் மலர்ந்து சொல்வாள்:

“பூ!”

அவர் தனது கைகளைத் திறந்து காட்டுவார். என்ன ஆச்சரியம்?

வந்தது பூ தான்.

உடனே பெரியவர் சொல்வார்.” வந்தது பூ; நீ தான் என்னுடைய மருமகள்!”

அந்தப் பெண் அவரை மடக்கும் விதமாகக் கேள்வி கேட்பாள்

“தலை விழுந்திருந்தால் என்ன சொல்வீர்கள்?”

“நான்தான் உனக்கு மாமனார்!”

அவருடைய சாமர்த்தியத்தைப் பாருங்கள்.

பூ விழுந்ததால் அவள்தான் மருமகள் என்றவர், தலை விழுந்திருந்தால்
நான்தான் உன்னுடைய மாமனார் என்றிருப்பாராம். எது விழுந்தாலும்
தான் தான் ஜெயிக்க வேண்டும் என்னும் தன்முனைப்பின் வெளிப்பாடு அது!
====================================================
இப்படித்தான் எல்லா மனித மனமும் வெற்றி கொள்ள விழையும்

அதை இயற்கை என்று சொல்லிவிட முடியாது.

அது சுயநலம்!

மனிதனுடைய முதல் விரோதியே இந்தச் சுயநல மனப்பானைதான்

இரண்டாவது விரோதி சோம்பல்; மூன்றாவது விரோதி பய உணர்வு!

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, ஒவ்வொன்றாக வருவோம்!
++++++++++++++++++++++++++++
சுயநலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. ஏதாவது வேலை என்றால், அதில் தன் பங்கு என்ன என்று தெரிந்து
கொண்டு, (what is stored in it for me?) அதைச் செய்ய ஒப்புக்
கொள்வது முதல் வகைச் சுயநலம்!

2. இரண்டாவது வகை சற்றுக் கிறுத்துருவமானது. கிறுக்குத்தனமானது!
நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும்
கலந்து வைத்துக் கொண்டு ஊதி ஊதித் தின்போம். என்னுடைய ஈடுபாடு
குறைவாக இருக்கும். உன்னுடைய ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும்
என்னும் அழிச்சாட்டியம்

3. மூன்றாவது வகை இருப்பதிலேயே மோசமானது. தலை விழுந்தால்
நான் ஜெயிப்பேன். பூ விழுந்தால் நீ தோற்பாய். அதாவது எப்படியும்
நான்தான் ஜெயிக்க வேண்டும்

இந்த மூன்று வகை ஆசாமிகளையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செயல்படலாம்.
ஆனால் இந்தச் சுயநலம் அதிகம் உடையவர்களுடன் இணைந்து
சில காலத்திற்கு மேற் செயல்பட முடியாது.”சீ” என்றாகி விடும்.
அவர்களைக் கண்டாலே வெறுத்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடும்

ஜாதகத்தைவைத்து ஒருவன் சுயநலம் மிக்கவனா அல்லது சுயநலம்
இல்லாதவனா என்று சொல்ல முடியுமா?

முடியாது!

மனித குணங்களான அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், விரக்தி
காதல், மென்மை, சீற்றம், நட்பு, துரோகம், சுறுசுறுப்பு, சோம்பல்,
வீரம், பய உணர்வு, சுய நலம், சேவை மனப்பான்மை, பெருந்தன்மை
கருமித்தனம், பொறுமை, பொறாமை என்னும் பல நிலைப் பாடுகளுக்கு,
பல விதமான கிரகங்களும், லக்கினமும் காரணமாகும். லக்கினம்,
லக்கினநாதன், ஐந்தாம் வீடு, மனகாரகன், மற்றும் உள்ள ஏழு
கிரகங்களின் கூட்டு அமைப்பு காரணமாகும் Permutation combination;
Four to the power of seven. கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆனால் லக்கினத்திற்கென்று சில பொதுவான குணங்கள் உண்டு
குறிப்பிட்ட லக்கினத்தின் அதிபதியை வைத்து அந்தக் குணம்
மேம்பட்டு நிற்கும்

1. மகரம் மற்றும் கும்ப லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள்
சனி அதிபதி அதனால் கடும் உழைப்பு அவர்களிடம் இருக்கும்.
அதில் மகர லக்கினக்காரர்கள் கிடைத்தை மட்டும் கடுமையாக
உழைத்து செயல் படுத்துவார்கள். ஆனால் கும்ப லக்கினக்காரர்கள்
ஒருபடி மேலே சென்று, தேடிப் பிடித்தும் செய்வார்கள்.

2.ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்துவிட முடியும்.
மென்மையானவர்கள். மெல்லிய உணர்வு படைத்தவர்கள். எதையும்
அனுபவிக்கத் தயாராக இருப்பவர்கள்.(சுக்கிரன் அதிபதி)
“டேய் மாப்ளே, வாடா ரெண்டு பெக் அடித்துவிட்டு வரலாம்” என்றால்
வந்து விடுவார்கள். அதிலும் சிலர்,”டேய் நீ கூப்பிட்டதற்காக
வந்தேன்.ஜஸ்ட் ஃபார் கிவிங் யூ கம்பெனி. நீ என்ன கருமத்தை
வேண்டுமென்றாலும் குடி. எனக்கு பெப்ஸி மட்டும் போதும்” என்று
சொன்னாலும் சொல்வர்களேயன்றி மறுக்காமல் வந்து விடுவார்கள்
அதிலும் ஒரு வித்தியாசம். துலா லக்கினத்திற்கும் அதே சுக்கிரன்
அதிபதி என்றாலும், அவர்கள் இடம், கெளரவம் என்று யோசித்து
விட்டுத்தான் வருவார்கள்.

3. கன்னி & மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையிலே புத்திசாலிகள்
எல்லோருடனும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள். எவருடனும் ஜோடி
சேரக்கூடியவர்கள். சீட்டாட்டத்தில் ஜோக்கரைப் போல! இந்த
இரண்டில் கன்னி தராதரம் பார்க்காது. மிதுனம் பார்க்கும்

4.மேஷ லக்கினம் & விருச்சிக லக்கினம்
பொதுவாக குடும்பத்தில் மூத்தவராக இருப்பார் அல்லது குடும்பத்தில்
தலைமை தங்கும் வல்லமை பெற்றிருப்பார். சுறுசுறுப்பானவர்.
தற்பெருமை உடையவர். நாயகனுக்குள்ள தன்மைகளைப் பெற்றிருப்பார்.
நியாயமான காரணங்களுக்குச் சண்டைபோடும் மனப்பான்மை உடையவர்.
ஒரு இடத்தில் இருக்கும் தன்மை இல்லாதவர். பெண்களின் மேல்
தனி விருப்பம் உடையவர். இந்த லக்கினக்காரகளின் வளர்ச்சி சீராக
இருக்காது. உணர்ச்சிகளுக்கு வயப்பட்டவர்கள். முன் கோபக்காரர்கள்.
அதேபோல எளிதில் சமாதானமாகிவிடக் கூடியவர்கள்.
வேலை பார்க்கும் இடங்களில் நல்ல பெயரை எடுக்ககூடியவர்கள்

5. கடகம்:
intelligent, fond of astrology ; has many family friends and
is attached to them; owns houses; his fortunes wax and wane
ike the Moon; he can be brought round by persuasion.
He is under the considerable influence of his wife or of women.

6. சிம்மம்:
The native has a sacrificing spirit, is of fixed determination,
but gets unjustifiably into a temper at the slightest provocation
and the anger is not quickly pacified; does not get on well
with women; is fond of forests and mountains; is a favourite
of his mother. The native is courageous, heroic and capable
of prevailing upon others. Suffers from mental and dental ailments.

7, தனுசு & மீனம்:
active and engaged in work; eloquent in speech; religious and
prepared to sacrifice for others; inimical to relations; overpowers
enemies; cannot be brought round by force, but can be prevailed
upon by persuasion only.

நீயா? நானா? என்னும் மனிதனின் குணம் ஆளுக்கு ஆள், இடத்துக்கு
இடம் மாறுபடும். ஜாதகத்தை வைத்து ஒரளவிற்கே அது தெரியும்.
உதாரணம். கருமியா என்று! முழுமையாக எந்தப் புத்தகத்திலும்,
யாரும் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை. நெருங்கிப் பழகினால்
மட்டுமே நன்கு தெரியும் அல்லது தெரிந்து கொள்ள முடியும்!

(அலசல் தொடரும்)

வாழ்க வளமுடன்!

27.5.09

பஞ்சபூதங்களும் ஜோதிடமும்!

பஞ்சபூதங்களும் ஜோதிடமும்!

பஞ்சபூதங்களுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு உண்டா?

உண்டு!

அதைப் பற்றியதுதான் இன்றையப் பாடம். பொறுமையாகப் படியுங்கள்
==================================================================
பூதம் என்றால் நமது மொழியில் அதற்கு வேறு பொருள்

பேய், பிசாசு, பூதம் என்று இல்லாதவற்றைச் சொல்வோம்.

”எங்க ஆத்தா, எனக்கொரு பேயைக் கட்டிவைத்து விட்டார்கள்” என்று
ஆண்களும் “எங்கப்பாரு எனக்கொரு பூதத்தைக் கட்டி வைத்துவிட்டார்; அதோடு
தினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்” என்று பெண்களும் சொல்வதைக்
கேட்டிருக்கிறோம்.

ஆனால் நமக்குப் பயன்படக்கூடியவற்றை எதற்காகப் பூதமாக்கினார்கள்
என்று தெரியவில்லை.

நமது மனக்குமுறல்களுக்குக் காரணமாகும் பூதங்களை அப்படியே வைத்துவிட்டு,
நமக்கு உதவும் பூதங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்

காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் ஆகிய ஐந்தும் தான் அந்தப் பூதங்கள்

நம் முன்னோர்கள் அவற்றைப் பஞ்சபூதங்கள் என்றார்கள்

இவ்வுலகம் காற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம் எனும் அந்த பஞ்சபூதங்களால்
ஆனது. அவைகள் இல்லையென்றால் எதுவும் இல்லை.

அந்த ஐந்தில் முதல் நான்கை உங்களால் காணவும், உணரவும் முடியும்
அவற்றால்தான் உங்கள் வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
அவைகள் இல்லையேல் யாரும் இல்லை!

"Pancha Bhoota's" or the five elements viz Air, Fire, Water,
Earth and Space.
The first four factors are known to all, as they can be felt, seen,
tasted and used.

What is meant by space or 'Akasa"? It can be taken, as all the subtle
forms of energy like Electricity, magnetism, Gravity, and other forces
known and unknown, which bring about stability in creation and its
activation.

The zodiacal signs and planets represent these elements and qualities.
The Vedic seers understood this fact and classified the signs and planets
according to their innate nature.
===================================================================
ராசிகள் நெருப்பு, பூமி, காற்று, நீர் என்று நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன
அந்தந்த ராசிகளுக்கு அதனதன் தன்மைகள் நிறைந்திருக்கும்.

அவற்றைப் பற்றிய விவரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்
=====================================================================
1
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Fiery Signs)
சூரியனும், குருவும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்

2
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் பூமி ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Earthly Signs)
செவ்வாய் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்

3.
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Airy Signs)
புதன் இந்தத் தன்மை மிகுந்த கிரகமாகும்

4
கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகள்/லக்கினங்கள் ஆகும்
(Watery Signs)
சந்திரனும், சுக்கிரனும் இந்தத் தன்மை மிகுந்த கிரகங்களாகும்.

The sign Aries, Leo and Sagittarius are fiery in nature
so also are the Sun and Jupiter.

Taurus, Virgo and Capricorn are earthly signs
so also is the planet Mars.

Gemini, Libra and Aquarius are airy signs and
Mercury is also airy planet.

Cancer, Scorpio and Pisces are watery signs and
so are the planets Venus and Moon.
------------------------------------------------------------------------
சனி, ராகு & கேது ஆகியவைகள் ஆகயத்தைக் குறிக்கும்.
அதோடு ஜாதகதனுக்கு உதவும் சக்தியாகவும் விளங்கும்
Saturn, Rahu and Ketu represent the akasa or subtle forces
and Rahu and Ketu are referred as shadowy planets.

1
Persons who are born in fiery signs exhibit Vitality, Command,
and leadership qualities.
They are assertive and independent.
2Those born in Earthly signs indicate stability, Care for material welfare,
learn the art of making wealth, seek power and position.
They are prudent, practical and cautious, reserved, secretive and methodical.
Hence when majority of the planets occupy earthly signs
business is the best option.
Building, Mining, and all slow and laborious jobs requiring time labor
and perseverance go people born in earthly signs.

3
Airy signs are connected with the mind or mental experiences.
They are cheerful, gentle amicable, courteous and refined human beings.
They have good intellect and fertile imagination.
They are idealistic, artistic, good musicians, dancers, inquisitive
and well informed.
These people exert much and suffer nervous troubles.
All professions where mental exertion is more,
then the physical suit them best.
Musicians, accountants, artistes, poets, lawyers, reporters,
newsreaders, lecturers, scientists, aviators and astronaughts
are some of the professions falling in airy signs.

4
The mind of persons born in watery sign is receptive, contemplative,
sensitive, and assimilative.
When majority of the planets are posited in watery signs the native
becomes very sensitive, timid, psychic and often lack energy.
Watery signs favor all employment's connected with Liquids,
Shipping, Breweries, Textile, fisheries, Milk dairies, soft drink
manufacturer's, Medicines, water sellers,
Oil merchants etc come under these signs.
==========================================================================

பிறந்த ஜாதகனுக்கு உள்ள விஷேசத் தன்மைகளைத் தெரிந்து கொள்ள
ராசிகளை மேலும் மூன்று விதமாகப் பிரித்துள்ளார்கள்.
யார் பிரித்துள்ளார்கள்?
ஜோதிடத்தை வடிவமைத்த மேதைகள்!
அதற்கு ஆதாரம் உண்டா?
பழைய சுவடிகளில் உள்ளது. அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
எல்லாம் நம்பிக்கை மற்றும் அனுபவ அடிப்படையில் இதுவரை எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது. நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதுதான்

சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs)
என்று ராசிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
The Vedic seers grouped the signs in three categories as Movable, Fixed and Dual.
------------------------------------------------------------------
1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
----------------------------------------------------------------
1
சர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்களுக்கு
சில விஷேசத் தன்மைகள் உண்டு.
சர ராசியில் பிறந்தவர்கள் கலகலப்பானாவர்கள். உற்சாகம், ஆர்வம் மிக்கவர்கள்
செயல்களில் வேகம் உடையவர்கள். தனித்து இயங்கக்கூடியவர்கள்.
சுதந்திர மனப்பான்மை மிக்கவர்கள்
பொறுப்பான பதவிகளுக்குத் தகுதியானவர்கள்.
துணிவு மிக்கவர்கள். பெயர், புகழ் என்று அவர்களை அனைத்தும் தேடிவரும்.
ஒரு செயலைத் திறமையாகவும், குறுகிய காலத்திலும் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

2
ஸ்திர ராசி ஒன்றை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் மனவுறுதி மிக்கவர்கள்.
விடாமுயற்சி உடையவர்கள். கடுமையாக உழைப்பவர்கள்.
தனிமையை விரும்புபவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். பொதுவாக இவர்களுக்கு
அரசாங்க வேலைகளும், தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைகளும் ஒத்து வரும்.
ஓடிச் சென்று அதிர்ஷ்டத்தைப் பிடித்து இழுத்துவரும் தன்மை எல்லாம்
இவர்களுக்குக் கிடையாது. வாழ்க்கையில் படிப்படியாகச் சென்று வெற்றியை
அடைவார்கள்.

3
உபய ராசிக்காரர்கள் (Persons born in dual signs)
இவர்களுடைய தன்மைக்குக் கடிகாரத்தின் பெண்டூலத்தை உதாரணமாகச்
சொல்லலாம்.
ஊசலாடும் தன்மையை உடையவர்கள்.
வளைந்து கொடுத்துச் செல்லக்கூடியவர்கள்.
புத்திசாலிகள். இரக்கமுடையவர்கள். உணர்ச்சிமிக்கவர்கள்.
எதிலும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். நிலையான செயல்பாடுகள் இல்லாதவர்கள்.
வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ விரும்புபவர்கள்.
எந்தவிதமான குறிக்கோள்களும் இல்லாதவர்கள்.
போராடும் மனப்பான்மை இல்லாதவர்கள்.
எதிலுமே நிலையானதொரு ஈர்ப்பு இல்லாதவர்கள்.
They tend to wander aimlessly and seldom work towards a fixed objective.

Thus the sign ascending in the eastern horizon at the time of the birth
of an individual tells the qualities with which he is born.
He can be trained suitably and given suitable job when
he grows up according to his natural inclination
==============================================================
ராசி/லக்கினத்தைப் பற்றிய உபரித் தகவல்கள்

ராசிகளில் ஆண் ராசிகள், மற்றும் பெண் ராசிகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.

1
மேஷம், மிதுனம், சிம்மம்,துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் ஆண் ராசிகள்
இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் ஆண் லக்கினத்தில் பிறந்தவர்கள்
2
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம், மீனம் ஆகிய ராசிகள் பெண் ராசிகள்
இந்த ராசியை லக்கினமாகக் கொண்டு பிறந்தவர்கள் பெண் லக்கினத்தில் பிறந்தவர்கள்

இதை எப்படி ஞாபகம் வைத்துக் கொள்வது?
ஒற்றைப்படையில் வரும் ராசிகள் எல்லாம் ஆண் ராசிகள்.
(அதாவது 1, 3, 5, 7, 9,11 )
இரட்டைப்படையில் வரும் ராசிகள் எல்லாம் பெண் ராசிகள்.
(அதாவது 2,4,6,8,10,12 )

ஆண் ராசியில்/லக்கினத்தில் ஆண்தான் பிறக்கவேண்டும்:
பெண் ராசியில்/லக்கினத்தில் பெண்தான் பிறக்கவேண்டுமா?

அப்படியெல்லாம் இல்லை. ஆண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு,
அது பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மிகுந்து இருக்கும்.

உதாரணம் ஒரு பெரிய அரசியல் தலைவி. மிதுன லக்கினத்தில்
பிறந்தவர். பெயரை எல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஆண்களுக்கு
நிகராகச் செயல்படுபவர். யாரென்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்

பெண் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பெண் தன்மைகள்
மிகுந்திருக்கும். பயந்த சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள்.

உங்கள் மொழியில் சொன்னால் எதிர்மறையான குணங்களை
உடையவர்களாக இருப்பார்கள்.

சில ஆண்களுக்குப் பெண்களின் குணம் இருக்கும்.
சில பெண்களுக்கு ஆண்களின் குணம் இருக்கும்

சில குடும்பங்களின் மனைவி வைத்ததுதான் சட்டமாக இருக்கும்.
சில வீடுகளின் ஆணாதிக்கம் மிகுந்திருக்கும்

இதை விரிவு படுத்தி எழுத நேரமில்லை. சுறுக்கமாகச் சொல்லி
இருக்கிறேன். மீதியை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்
================================================================
(தொடரும்)


வாழ்க வளமுடன்!

20.5.09

நீ எங்கே, நான் அங்கே! - பகுதி இரண்டு


நீ எங்கே, நான் அங்கே! - பகுதி இரண்டு

லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

ஒன்று முதல் ஆறு வீடுகளில் லக்கினாதிபதி அமர்ந்திருக்கும் வீட்டிற்கான
பலனை, இதன் முதற்பகுதியில் எழுதியுள்ளேன்.

இப்போது அதற்கு அடுத்து வரும் வீடுகளுக்கான பலன்களைப் பார்ப்போம்

லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும்.
சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள்.
மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக
இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான்.
ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான்.
மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும்.
சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள்
எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள்.

இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு
சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.
===========================================
லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான்.
சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும்.
ஒழுக்கக் குறைவு ஏற்படும்.
சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும்,
ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை
உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும்.
ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும்
சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை
எடுத்து வளர்க்க நேரிடும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம
ஆயுளை உடையவன்.
வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்
சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர் உண்டாகும்.
=============================================
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும்.
ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான்.
நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது.
இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க!
ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை
கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக்
கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும்
ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான்
சிறந்த பக்திமானாக விளங்குவான்.
தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான்,
நேர்மையாளனாக இருப்பான்.
வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள்
எதுவும் இருக்காது.
=================================================
லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான
அமைப்பு இது.
பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட
தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான்.
இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில்
அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான்.
நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான்.
தொழிலில் மேன்மை அடைவான்.
அதிகாரமும், பதவிகளும் தேடிவரும்.
அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும்.
சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள்.
நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான
வாழ்க்கை ஏற்படும்.
==================================================
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான
தொழிலைச் செய்வான்.
நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும்.
மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும்.
இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த
பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று
இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள்.

ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன்
இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும்
Gains; Gains: Gains - அவ்வளவுதான்.
ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும்.

இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு
மேற்கூறிய நன்மைகள் இருக்காது.
ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
==================================================
லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:

எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து
கொண்டே இருக்கும்.

எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின்
கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.

வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும்.
வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.

இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய
கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம்
செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி
இல்லாதவனாகவும் இருப்பான்.

அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம்
அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும்.
திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும்
வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்

சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன
நிறைவு, மன அமைதி பெறுவார்கள்
====================================================
(அலசல் தொடரும்)

ஒரு வார காலமாக பல சொந்த வேலைகள் காரணமாக வகுப்பறையில்
கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும்.
அதே போல இன்னும் ஒரு வார காலத்திற்கும் அதே சூழ்நிலைதான்
பொறுத்துக் கொள்ளுங்கள்.
ஜூன் ஒன்று முதல் நிலைமை சீராகிவிடும். வகுப்பறையும் சுறுசுறுப்பாக
இயங்கும்

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14.5.09

நீ எங்கே, நான் அங்கே!

நீ எங்கே, நான் அங்கே!

நீ எங்கே, நான் அங்கே! என்பது ஒரு அற்புதமான நிலைமை.
பொதுவாகக் காதலன் காதலிக்கு இந்த வரிகளைச் சொல்வார்கள்.

நமது வகுப்பறையில் காதலைப்பற்றி பேசினால் நன்றாக இருக்காது

ஆகவே இந்த வரிகளை, நான் நமது லக்கினாதிபதிக்கும் நமக்கும்
உள்ள தொடர்பிற்காக எழுதியதாக வைத்துக் கொள்ளுங்கள்

ஆமாம்! அவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே நாமும் இருப்போம்!
-----------------------------------------------------------------------------------------------
லக்கின அதிபதி சென்று அமரும் இடங்களுக்கான பலன்கள்.

லக்கின அதிபதி லக்கினத்திலேயே இருந்தால் நன்று. உதாரணத்திற்கு
நீங்கள் மேஷ லக்கினக்காரராக இருந்து அதன் அதிபதி செவ்வாய்
மேஷத்திலேயே இருந்தால், அது அவருக்குச் சொந்த வீடு. ஆட்சி
வீடு. அது நன்மை பயக்கும்.

இல்லை அந்த வீட்டை விட்டு வேறு இடங்களில் அமர்ந்திருந்தால்
அதன் பலன் மாறுபடும். அவர் சென்று அமரும் வீடு, அவருக்குப்
பகை வீடு என்றால் பலன்கள் பாதியாகக் குறைந்துவிடும்.

அதேபோல அவர் சென்று அமரும் வீடு, லக்கினத்தில் இருந்து 6ஆம்
வீடாகவோ அல்லது 8அம் வீடாகவோ அல்லது 12ஆம் வீடாகவோ
இருந்தால் எதிர்மறையான பலன்களே கிடைக்கும். வாழ்க்கை போராட்டம்
மிகுந்ததாக இருக்கும். எதிர் நீச்சல் போட வேண்டியதிருக்கும்.

அப்படியிருந்தால், பார்த்துவிட்டுக் கவலைப் படாதீர்கள். கன்னத்தில்
கையை முட்டுக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். அதற்கான
நஷ்ட ஈடு வேறு இடங்களில் வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் யாராக
இருந்தாலும் ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.அதை நினைவில்
வையுங்கள்.

லக்கின நாதன் வேறு இடங்களில் அமர்ந்தாலும், அது லக்கினத்திற்கு
கேந்திரம் அல்லது திரிகோண இடங்களாக இருந்து, அங்கே அமர்பவர்
அங்கிருந்து லக்கினத்தைப் பார்த்தாலும் நன்மையாக இருக்கும்.

லக்கினத்தைப் பகைக் கிரகங்களோ அல்லது நீசக் கிரகங்களோ பார்க்காமலும்
லக்கினத்தில் இல்லாமலும், லக்கினாதிபதியுடன் சேராமல் இருந்தாலும் நன்மை
உடையதாக இருக்கும்

அதேபோல லக்கினாதிபதி உச்சம் பெற்றிருந்தாலும் அதிக நன்மையான
பலன்கள் கிடைக்கும். அதேபோல லக்கினம் சுபக் கிரகங்களின் பார்வையில்
இருந்தாலும் நன்மைகள் உடையதாக இருக்கும்.

ஆகவே அனைத்தையும் அலசிப் பாருங்கள்
-------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்:

ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக
இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான்
தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான்.
ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான்.
சொத்துக்களை உடையவனாக இருப்பான்.
பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான்.
வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும்.
மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான்.
உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான்.
தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில்
அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான்.

மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும்
நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர்
மாறான பலன்களே நடைபெறும்
------------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக
இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள்
எல்லா இடங்களிலும் எடுபடும்.
தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான்
தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக
இருப்பான்.
செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான்.
மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான்.
அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான்.
எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும்.
மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான்
சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள்
ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக
இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான்.
நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்.
செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான்
அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும்.
அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும்
ஜாதகன் இருப்பான்
ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான்.
நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான்.
ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள்,
இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத
வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான்.
தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான்.
தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான்.
கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான்
சுகவாசியாக இருப்பான்.
வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான்.
இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை
பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான்.
அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு
தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக
இருப்பான்.
ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை
உடையவனாகவும் இருப்பான்.
மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்
சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும்
இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------
லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்:

******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான்.
எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான்.
பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும்
பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்.
மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும்
லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும்
நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து
சிறப்பைப் பெறுவார்கள்
சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
-------------------------------------------------------------------------------------------------
(அலசல் தொடரும்)



வாழ்க வளமுடன்!