மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.6.09

நீயா? நானா?

நீயா? நானா?

பழைய திரைப்படம். நாயகி அழகாக இருப்பார். பிடரியை மறைக்கும்
நீண்ட முடி. அதற்குத் துணை நிற்கும் மல்லிகைச் சரம்.

எவரையும் ஈர்க்கும் புன்னகை சிந்தும் முகம்.

அங்கே வரும் பெரியவர் ஒருவர், அந்தப் பெண்ணின் அழகில் மகிழ்ந்து
அவள்தான் தன் மகனுக்கு ஏற்ற பெண் என்ற முடிவிற்கு வந்து,
அவளுடன் பேசத்துவங்குவார். அவர் அவளுடைய உறவினர்.ஆகவே
அந்த மங்கை நல்லாளும் தயக்கமின்றி அவர் கேள்விகளுக்குப் பதில்
சொல்வாள்.

தன் சட்டைப் பையில் இருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தைத் தன்
விரல்களால் சுண்டி விட்டுப் பிடித்து உள்ளங் கைகளிக்கிடையே
மறைத்து வைத்துக் கொண்டு கேட்பார்:

“பூவா? தலையா? சொல்லம்மா பார்க்கலாம்?”

பெண் முகம் மலர்ந்து சொல்வாள்:

“பூ!”

அவர் தனது கைகளைத் திறந்து காட்டுவார். என்ன ஆச்சரியம்?

வந்தது பூ தான்.

உடனே பெரியவர் சொல்வார்.” வந்தது பூ; நீ தான் என்னுடைய மருமகள்!”

அந்தப் பெண் அவரை மடக்கும் விதமாகக் கேள்வி கேட்பாள்

“தலை விழுந்திருந்தால் என்ன சொல்வீர்கள்?”

“நான்தான் உனக்கு மாமனார்!”

அவருடைய சாமர்த்தியத்தைப் பாருங்கள்.

பூ விழுந்ததால் அவள்தான் மருமகள் என்றவர், தலை விழுந்திருந்தால்
நான்தான் உன்னுடைய மாமனார் என்றிருப்பாராம். எது விழுந்தாலும்
தான் தான் ஜெயிக்க வேண்டும் என்னும் தன்முனைப்பின் வெளிப்பாடு அது!
====================================================
இப்படித்தான் எல்லா மனித மனமும் வெற்றி கொள்ள விழையும்

அதை இயற்கை என்று சொல்லிவிட முடியாது.

அது சுயநலம்!

மனிதனுடைய முதல் விரோதியே இந்தச் சுயநல மனப்பானைதான்

இரண்டாவது விரோதி சோம்பல்; மூன்றாவது விரோதி பய உணர்வு!

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, ஒவ்வொன்றாக வருவோம்!
++++++++++++++++++++++++++++
சுயநலத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. ஏதாவது வேலை என்றால், அதில் தன் பங்கு என்ன என்று தெரிந்து
கொண்டு, (what is stored in it for me?) அதைச் செய்ய ஒப்புக்
கொள்வது முதல் வகைச் சுயநலம்!

2. இரண்டாவது வகை சற்றுக் கிறுத்துருவமானது. கிறுக்குத்தனமானது!
நீ அவல் கொண்டு வா. நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும்
கலந்து வைத்துக் கொண்டு ஊதி ஊதித் தின்போம். என்னுடைய ஈடுபாடு
குறைவாக இருக்கும். உன்னுடைய ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும்
என்னும் அழிச்சாட்டியம்

3. மூன்றாவது வகை இருப்பதிலேயே மோசமானது. தலை விழுந்தால்
நான் ஜெயிப்பேன். பூ விழுந்தால் நீ தோற்பாய். அதாவது எப்படியும்
நான்தான் ஜெயிக்க வேண்டும்

இந்த மூன்று வகை ஆசாமிகளையும் நான் பார்த்திருக்கிறேன். நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செயல்படலாம்.
ஆனால் இந்தச் சுயநலம் அதிகம் உடையவர்களுடன் இணைந்து
சில காலத்திற்கு மேற் செயல்பட முடியாது.”சீ” என்றாகி விடும்.
அவர்களைக் கண்டாலே வெறுத்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டுவிடும்

ஜாதகத்தைவைத்து ஒருவன் சுயநலம் மிக்கவனா அல்லது சுயநலம்
இல்லாதவனா என்று சொல்ல முடியுமா?

முடியாது!

மனித குணங்களான அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், விரக்தி
காதல், மென்மை, சீற்றம், நட்பு, துரோகம், சுறுசுறுப்பு, சோம்பல்,
வீரம், பய உணர்வு, சுய நலம், சேவை மனப்பான்மை, பெருந்தன்மை
கருமித்தனம், பொறுமை, பொறாமை என்னும் பல நிலைப் பாடுகளுக்கு,
பல விதமான கிரகங்களும், லக்கினமும் காரணமாகும். லக்கினம்,
லக்கினநாதன், ஐந்தாம் வீடு, மனகாரகன், மற்றும் உள்ள ஏழு
கிரகங்களின் கூட்டு அமைப்பு காரணமாகும் Permutation combination;
Four to the power of seven. கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆனால் லக்கினத்திற்கென்று சில பொதுவான குணங்கள் உண்டு
குறிப்பிட்ட லக்கினத்தின் அதிபதியை வைத்து அந்தக் குணம்
மேம்பட்டு நிற்கும்

1. மகரம் மற்றும் கும்ப லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள்
சனி அதிபதி அதனால் கடும் உழைப்பு அவர்களிடம் இருக்கும்.
அதில் மகர லக்கினக்காரர்கள் கிடைத்தை மட்டும் கடுமையாக
உழைத்து செயல் படுத்துவார்கள். ஆனால் கும்ப லக்கினக்காரர்கள்
ஒருபடி மேலே சென்று, தேடிப் பிடித்தும் செய்வார்கள்.

2.ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்துவிட முடியும்.
மென்மையானவர்கள். மெல்லிய உணர்வு படைத்தவர்கள். எதையும்
அனுபவிக்கத் தயாராக இருப்பவர்கள்.(சுக்கிரன் அதிபதி)
“டேய் மாப்ளே, வாடா ரெண்டு பெக் அடித்துவிட்டு வரலாம்” என்றால்
வந்து விடுவார்கள். அதிலும் சிலர்,”டேய் நீ கூப்பிட்டதற்காக
வந்தேன்.ஜஸ்ட் ஃபார் கிவிங் யூ கம்பெனி. நீ என்ன கருமத்தை
வேண்டுமென்றாலும் குடி. எனக்கு பெப்ஸி மட்டும் போதும்” என்று
சொன்னாலும் சொல்வர்களேயன்றி மறுக்காமல் வந்து விடுவார்கள்
அதிலும் ஒரு வித்தியாசம். துலா லக்கினத்திற்கும் அதே சுக்கிரன்
அதிபதி என்றாலும், அவர்கள் இடம், கெளரவம் என்று யோசித்து
விட்டுத்தான் வருவார்கள்.

3. கன்னி & மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையிலே புத்திசாலிகள்
எல்லோருடனும் நெருங்கிப் பழகக்கூடியவர்கள். எவருடனும் ஜோடி
சேரக்கூடியவர்கள். சீட்டாட்டத்தில் ஜோக்கரைப் போல! இந்த
இரண்டில் கன்னி தராதரம் பார்க்காது. மிதுனம் பார்க்கும்

4.மேஷ லக்கினம் & விருச்சிக லக்கினம்
பொதுவாக குடும்பத்தில் மூத்தவராக இருப்பார் அல்லது குடும்பத்தில்
தலைமை தங்கும் வல்லமை பெற்றிருப்பார். சுறுசுறுப்பானவர்.
தற்பெருமை உடையவர். நாயகனுக்குள்ள தன்மைகளைப் பெற்றிருப்பார்.
நியாயமான காரணங்களுக்குச் சண்டைபோடும் மனப்பான்மை உடையவர்.
ஒரு இடத்தில் இருக்கும் தன்மை இல்லாதவர். பெண்களின் மேல்
தனி விருப்பம் உடையவர். இந்த லக்கினக்காரகளின் வளர்ச்சி சீராக
இருக்காது. உணர்ச்சிகளுக்கு வயப்பட்டவர்கள். முன் கோபக்காரர்கள்.
அதேபோல எளிதில் சமாதானமாகிவிடக் கூடியவர்கள்.
வேலை பார்க்கும் இடங்களில் நல்ல பெயரை எடுக்ககூடியவர்கள்

5. கடகம்:
intelligent, fond of astrology ; has many family friends and
is attached to them; owns houses; his fortunes wax and wane
ike the Moon; he can be brought round by persuasion.
He is under the considerable influence of his wife or of women.

6. சிம்மம்:
The native has a sacrificing spirit, is of fixed determination,
but gets unjustifiably into a temper at the slightest provocation
and the anger is not quickly pacified; does not get on well
with women; is fond of forests and mountains; is a favourite
of his mother. The native is courageous, heroic and capable
of prevailing upon others. Suffers from mental and dental ailments.

7, தனுசு & மீனம்:
active and engaged in work; eloquent in speech; religious and
prepared to sacrifice for others; inimical to relations; overpowers
enemies; cannot be brought round by force, but can be prevailed
upon by persuasion only.

நீயா? நானா? என்னும் மனிதனின் குணம் ஆளுக்கு ஆள், இடத்துக்கு
இடம் மாறுபடும். ஜாதகத்தை வைத்து ஒரளவிற்கே அது தெரியும்.
உதாரணம். கருமியா என்று! முழுமையாக எந்தப் புத்தகத்திலும்,
யாரும் எழுதி வைத்து விட்டுப் போகவில்லை. நெருங்கிப் பழகினால்
மட்டுமே நன்கு தெரியும் அல்லது தெரிந்து கொள்ள முடியும்!

(அலசல் தொடரும்)

வாழ்க வளமுடன்!

31 comments:

  1. ஐயா,

    நீண்ட நாட்களுக்குபின் பதிவு...உண்மையில் அவன் கருமியா -செலவாலியா என தெரியாது.பழகிய பின்னேதான தெரியும். உண்மைதான் ஐயா...
    இன்று முதல்மாணவணாக ஆஜர்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. நீண்ட நாட்களுக்கு பிறகு பாடத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி. தங்களுக்கு அவகாசம் போதவில்லை என்பது இறுதி சில வரிகள் மொழி பெயர்காததிலிருந்தே தெரிகிறது.

    எனக்கு கன்னி லக்னம் மிதுன ராசி. இரண்டிலும் ஒருவரே அதிபதி. தப்பிக்க வழியில்லை (பலன் ஏற்படுவதிலிருந்து). இருப்பினும் இதைப் பொது பலனாகத் தானே தாங்கள் சொல்லியிருக்கிறீகள்.

    சிலர் குரு கெட்டிருந்தால் அவர் கருமியாக இருப்பார் என்கிறார்கள். இது விதி என்றாலும் விதி விலக்குகள் இருக்கலாமல்லவா.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா...

    நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
    இனி அடிச்சி தூள் கிளப்புங்கள்....

    பதிவிர்க்கு நன்றி.

    ReplyDelete
  4. Generally the selfishness increases with age as the insecurities of the existence increase. Thanks for giving a lesson inspite of your taxing schdules.

    ReplyDelete
  5. Does anyone have lord hanuman's horoscope.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,நீண்ட நாட்களுக்குப்பின் தந்தாலும் பதிவு அருமை.தங்கள் நேரமின்மை மூளைக்கு புரிந்தாலும் மனம் தங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறது.அதிக நேரம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  7. sir is it true if ur star happens to be the 26 , 25 th from the star saturn is placed in ur horoscope then the 71/2 period will be very bad ?

    ReplyDelete
  8. Dear Sir,

    You are back with bang here....howz your health coping with you....

    Remix is super...

    -Shankar

    ReplyDelete
  9. nice to see u back after long time

    ReplyDelete
  10. Thanks for Lesson after the long gap.. I pray for you always good health and wealth.

    ReplyDelete
  11. It's more of a recap of your old lessons sir. Nice nevertheless.

    ReplyDelete
  12. Dear Sir

    After a long period - very nice lesson.

    Virchiga Lagnam - lotof + point.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  13. Dear Sir

    After a long period - very nice lesson.

    Virchiga Lagnam - lotof + point.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  14. அய்யா அடியேனுக்கு ஒரு சிறிய உதவி. எங்களது யோகா கேந்த்ரம் தொடர்பான பதிவு தளம் சில நாட்களாக பார்க்க முடியவில்லை. மீண்டும். அதை எப்படி செயல்பட செய்வது. இதில் தங்களது உதவி தேவை. எனது பதிவின் முகவரி
    www.pathanjaliyogakendhram.blogspot.com

    ReplyDelete
  15. Dr. B.V.Raman's Astrological Magazine is now online. Please visit www.astrologicalmagazine.com

    ReplyDelete
  16. /////Blogger வேலன். said...
    ஐயா,
    நீண்ட நாட்களுக்குபின் பதிவு...உண்மையில் அவன் கருமியா -செலவாலியா என தெரியாது.பழகிய பின்னேதான தெரியும். உண்மைதான் ஐயா...
    இன்று முதல்மாணவனாக ஆஜர்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  17. ///////Blogger ananth said...
    நீண்ட நாட்களுக்கு பிறகு பாடத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி. தங்களுக்கு அவகாசம் போதவில்லை என்பது இறுதி சில வரிகள் மொழி பெயர்காததிலிருந்தே தெரிகிறது.
    எனக்கு கன்னி லக்னம் மிதுன ராசி. இரண்டிலும் ஒருவரே அதிபதி. தப்பிக்க வழியில்லை (பலன் ஏற்படுவதிலிருந்து). இருப்பினும் இதைப் பொது பலனாகத் தானே தாங்கள் சொல்லியிருக்கிறீகள்.
    சிலர் குரு கெட்டிருந்தால் அவர் கருமியாக இருப்பார் என்கிறார்கள். இது விதி என்றாலும் விதி விலக்குகள் இருக்கலாமல்லவா.////////

    ஆமாம். விதிவிலக்கு உண்டு!

    ReplyDelete
  18. ////////Blogger மதி said...
    வணக்கம் ஐயா...
    நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி...
    இனி அடிச்சி தூள் கிளப்புங்கள்....
    பதிவிற்கு நன்றி./////

    நன்றி மதி!

    ReplyDelete
  19. ///////////Blogger krish said...
    Generally the selfishness increases with age as the insecurities of the existence increase. Thanks for giving a lesson inspite of your taxing schdules./////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  20. /////////Blogger krish said...
    Does anyone have lord hanuman's horoscope.//////

    இணையத்தில் தேடிப் பார்த்தீர்களா? முயன்று பாருங்கள்!

    ReplyDelete
  21. /////////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,நீண்ட நாட்களுக்குப்பின் தந்தாலும் பதிவு அருமை.தங்கள் நேரமின்மை மூளைக்கு புரிந்தாலும் மனம் தங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறது.அதிக நேரம் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    அன்புடன்,
    மதுரை தனா.////////

    இடையில் ஒரு மாதம். அவ்வளவுதான். இனிச் சரியாகிவிடும்

    ReplyDelete
  22. ////////Blogger mike said...
    sir is it true if ur star happens to be the 26 , 25 th from the star saturn is placed in ur horoscope then the 71/2 period will be very bad ?////////

    அதாவது சனியும், சந்திரனும் அடுத்தடுத்த நட்சத்திரத்தில் இருக்கும் ஜாதகத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள் - இல்லையா?
    எப்படி இருந்தாலும் ஏழரைச் சனியில் முதல் இரண்டரை வருடங்கள் பல சிரமங்கள் நிறைந்ததாகத்தான் இருக்கும்!

    ReplyDelete
  23. ///////Blogger hotcat said...
    Dear Sir,
    You are back with bang here....howz your health coping with you....
    Remix is super...
    -Shankar////////

    அதையெல்லாம் பழநி அப்பனிடம் விட்டுவிட்டேன். அவன் பார்த்துக் கொள்வான்.

    ReplyDelete
  24. ////////Blogger VA P RAJAGOPAL said...
    Thanks for Lesson after the long gap.. I pray for you always good health and wealth.////////

    நன்றி ராஜகோபால்!

    ReplyDelete
  25. /////////Blogger chaks said...
    It's more of a recap of your old lessons sir. Nice nevertheless.///////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    After a long period - very nice lesson.
    Virchiga Lagnam - lotof + point.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  27. /////////Blogger pathanjali yoga kendhram said...
    அய்யா அடியேனுக்கு ஒரு சிறிய உதவி. எங்களது யோகா கேந்த்ரம் தொடர்பான பதிவு தளம் சில நாட்களாக பார்க்க முடியவில்லை. மீண்டும். அதை எப்படி செயல்பட செய்வது. இதில் தங்களது உதவி தேவை. எனது பதிவின் முகவரி
    www.pathanjaliyogakendhram.blogspot.com///////////

    தேடிப் பார்த்தேன். தொடர்பு கிடைக்கவில்லையே? உங்கள் ப்ளாக்கரில் இருந்து ஒரு புதிய பதிவை வலை ஏற்றிப் பாருங்கள்

    ReplyDelete
  28. ////////Blogger krish said...
    Dr. B.V.Raman's Astrological Magazine is now online. Please visit www.astrologicalmagazine.com///////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. Sir,

    thula lagnam is missing :-(
    can you include it? please

    ReplyDelete
  30. ////Blogger Meena said...
    Sir,
    thula lagnam is missing :-(
    can you include it? please////

    எண் 2ல் இருக்கிறதே சகோதரி. மீண்டும் ஒருமுறை பாருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com