மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label அறிவிப்புக்கள். Show all posts
Showing posts with label அறிவிப்புக்கள். Show all posts

29.12.22

இலவசம் !!!




இலவசம் !!!

அன்புடையீர்
புது வருடம் வருகிறது. புதுவருடத்தில் உங்களுக்கு இலவசமாக கீழ்கண்ட 3 விதமான ஜோதிட ரிப்போர்ட்களும் கிடைக்கும்

அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 
வாத்தியாருக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்
வாத்தியாரின் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அது என்ன உதவி என்பதை வாத்தியார் உங்களுக்கு தெரியப்படுத்துவார்.
அது மிகவும் சுலபமானதுதான்

கிடைக்கும் ரிப்போர்ட்டுகள்
1. 60 பக்கம் உள்ள உங்களின் ஜாதகம். அதில் அஷ்டகவர்க்கம், தசா பீரியடுகள் யோகங்கள் (Lucks) என்று எல்லாம் இருக்கும். அதுவும் தமிழில் இருக்கும்
2. உங்களுக்கு உங்கள் ஜாதகப்படி நீங்கள் அணிய வேண்டிய நவரத்தினங்களைப் பற்றிய 4 பக்கம் ரிப்போர்ட்
3. எண் கணிதப்படி உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை வைத்து 7 பக்கம் ரிப்போர்ட்

இது ஒரு குறிப்பிட்ட .எண்ணிக்கையில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே
உங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் உடனே வாத்தியாருக்கு எழுதுங்கள்
வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.22

வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!



வாத்தியாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!

இனிய தமிழ் புத்தாண்டு சுபகிருது வருட வாழ்த்துக்கள்.

சுபகிருது வருடம் 2022 முதல் 2023*

🍏இடைகாட்டு சித்தரின் சுபகிருது வருட வெண்பா:

🍒சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அவமரம் விலைகுறையு மான்சாம் - சுபமாகும்
நாடெங்கும் மாரிமிகு நல்விளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்

🥝விளக்கம்: 
🍉சுபகிருது ஆண்டில் சோழ நாட்டில் பல பொருட்கள் வீணாகும். மண் பண்டங்கள் விலை குறைந்திடும். நல்ல மழை பெய்து விளைச்சல் பெருகும். மழையால் பாதிப்பு இவ்வாண்டு இருக்காது.

🌈சுபகிருது வருட பிறக்கும் நாள் விபரம்:
நாள் : 14.04.2022 வியாழக்கிழமை
நேரம் : காலை 08:48 (+5.30)

🍇🍐 சித்திரை பிறப்பிற்கு முதல் நாளன்று வீட்டை சுத்தம் செய்து, வாயில்களில் அழகாகக் கோலமிட வேண்டும். வீட்டு வாசலின் கதவுகளில் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். 

🍏🍍சுவாமி அறையில் கண்ணாடி மற்றும் மங்கள பொருட்களும் பழங்கள் காய்கறிகளை வைத்து புத்தாண்டு பிறந்ததும் மங்கள பொருட்களில் கண் விழிக்க சிறந்த பலன்களை தரும். 

🍇🫒பின்னர், தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு ஆகிய பதினாறு வகையான சமித்துகளால் காய்ச்சப்படும் மருத்து நீரை ஆலயங்களில் பெற்று தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. 

🌲🍒நீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும்.

🥝🍉சித்திரை அன்று அறுவகையான சுவை கொண்ட உணவுகள் தயாரித்து பகிர்ந்து உண்பது இந்துக்களின் மரபாகின்றன.

🍐🍒 சுபகிருது_புதுவருட நவநாயகர்களை எவ்வாறு கணிப்பிடுவது என்று ஒரு விளக்கம்.

🥝🚩1.ராஜா - சனி
சுபகிருது சித்திரைக்கு முன்னர் வரும் பிலவ வருட பங்குனி மாதம் சுக்கில பட்ச பிரதமை வந்த வாராதிபதி ராஜா வாக கருதப்படுவார். பிலவ வருடத்தின் பங்குனி சுக்கில பிரதமை 2022.4.02 ம் திகதி சனிக்கிழமை வந்துள்ளது. இதனால் சனி பகவானே சுபகிருது வருடத்தின் ராஜாவாக கருதப்படுகிறார். சனி ஆட்சியாகி நிற்பதால் இவ்வாண்டு நீதி துறை, சட்டம் சிறக்கும். மக்களாட்சி உண்டாகும். அநீதிக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும். 

🥝🍇2.மந்திரி - குரு
மேஷத்தில் சூரியன் புகும் போது அதாவது சித்திரை மாதம் உதயமாகும் நாளின் அதிபதி மந்திரி ஆவார். 2022.04.14ம் திகதி வியாழக்கிழமை காலை 8:48 மணியளவில் மேஷத்தில் சூரியன் புகுக உள்ளார். 

🍏🍋3.சேனாதிபதி - புதன்
சூரியன் என்று சிம்மத்திற்கு அதாவது ஆவணி மாதம் எந்த வாரத்தில் வருகிறதோ அதன் அதிபதி சேனாதிபதியாகும். ஆவணி மாதம் 17.8.2022 அன்று புதன்கிழமை சிம்மத்திற்கு பிரயாணிக்கிறார்.

🍒🥝4.அர்க்காதிபதி - புதன்
சூரியன் மிதுனத்தில் புகும் நாள் அதாவது ஆனி மாதம் பிறக்கும் வாரத்தின் அதிபதி அர்க்காதிபதி ஆகும். விலைவாசிகளை அறிய உதவும். 15.06.2022 புதன்கிழமை மிதுனத்தில் நுழைகிறார். 

🍍🍐5.ஸஸ்யாதிபதி - சனி
கடகத்திற்கு சூரியன் பிரவேசிக்கும் நாளின் அதிபதி அதாவது ஆடி மாதத்தின் ஆரம்ப நாளின் அதிபதி ஸஸ்யாதிபதி ஆவார். பயிர் விளைச்சலை சொல்லுவார். 16.07.2022 சனிக்கிழமை நள்ளிரவு 11:10க்கு சூரியன் கடகத்தை அடைகிறார். 

🍐🍒6.இராஸாதிபதி - சந்திரன்
சூரியன் துலாமை அடையும் நாள் அதாவது. ஐப்பசி மாதம் பிறக்கும் வாராதிபதி இராஸாதிபதி ஆவார். அறுவகை சுவை கொண்ட பொருட்களின் விளைச்சல் மற்றும் விலைவாசி பற்றி சொல்லும். 17.10.2022 திங்கட்கிழமை அன்று இரவு 7.30 க்கு மேல் சூரியன் துலாமை அடைகிறார். 

🥝🍒7.தான்யாதிபதி - சுக்கிரன்
சூரியன் தனுசில் பிரவேசிக்கும் மார்கழி பிறக்கும் நாளின் அதிபதி தான்யாதிபதி ஆகும். 16.12.2022 வெள்ளிக்கிழமை தனுசிற்கு பிரவேசிக்கிறார். 

🍒🥝8.மேகாதிபதி - புதன்
சூரியன் திருவாதிரை நட்சத்திரத்தில் பிரயாணிக்கும் நாளின் அதிபதி மேகாதிபதியாகும். திருவாதிரை மிதுன ராசியில் உள்ள நட்சத்திரம். அதாவது ஆனி மாதம் தான் சூரியன் திருவாதிரை நட்சத்திரத்திற்கு வருவார். 22.06.2022 புதன்கிழமை அதிகாலை 11:50க்கு மேல்  திருவாதிரை நட்சத்திரத்தை அடைகிறார். 

🍐🍒9.நீரஸாதிபதி - சனி 
சூரியன் மகரத்தில் நுழையும் நாளின் அதிபதி. தை மாதம் பிறக்கும் நாளின் அதிபதி நீரஸாதிபதி ஆகும். நவரத்தின பயன்பாட்டை சொல்லும். 14.01.2023 சனிக்கிழமை அன்று இரவு 8:50 மணிக்கு மேல் சூரியன் மகரத்தில் நுழைகிறார்.

🍉🫒10. பசுநாயக்கர் - கோபாலன்

இவ்வாண்டின் ராஜாவான சனி ஸாஸ்யதிபதி, நீராஸாதிபதி என மூன்று பதவிகளை வகின்றார்.

🍍மந்திரியாக குருவும்,

🍍சேனாதிபதி புதனே அர்க்காதிபதி மேகாதிபதியாகவும் உள்ளார்.

🍍இராஸாதிபதியாக சந்திரனும், 

🍍தான்யாதிபதியாக சுக்கிரனும் உள்ளார். 

🕉️சுபகிருது_வருடத்தின்_பலன்கள். 

✡️சித்திரை வருட லக்னமாக ரிஷபம் அமைந்து லக்னாதிபதி பத்தில் செவ்வாயுடன் நிற்பதால் சுய தொழில் விருத்தியாகும். விளைச்சல் நன்றாக இருக்கும். ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தங்க சுரங்கம் மற்றும் புதையல்கள் வெளியே வரும். மக்களுக்கு வருமானம் உயர்வும் உண்டாகும். கலைஞர்கள் முன்னேற்றம் உண்டாகும். உஷ்ண நோய் உண்டாகும். குருதி சோகை சார்ந்த நோய் ஒருவகை வைரஸ் மூலம் பரவ வாய்ப்புள்ளது. 

✡️ராஜாவாக சனி இருப்பதால் அந்நிய நாட்டினரின் தலையீடுகள் உள்நாட்டில் உண்டாகும். கூலி உழைப்பாளர்கள், கீழ் நிலையில் உள்ள மக்கள், பணியாட்கள் சக்தி கூடும். அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் பலம் கூடும். மதமாற்றம் அடைவோருக்கு பாதிப்பு உண்டாகும். 
 
✡️மந்திரி குரு ஆவதால், தங்க புதையல் கிடைக்கும். ஆன்மீகம் விருத்தியாகும். நாடெங்கும் நீதியும் சட்டமும் விருத்தியாகும். போதை பொருட்கள் வியாபாரம் பண்ணுபவர்களுக்கு பெரும் பாதிப்பு உண்டாகும். உலக அமைதி உண்டாகும். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். யாத்திரைகள் பெருகும்
---------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------.
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.1.22

வாத்தியாரின் பொங்கல் வாழ்த்துக்கள்!!!!


அன்புடன்
வாத்தியார்
========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.9.21

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வாத்தியாரின்  வாழ்த்துக்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.21

மீண்டும் வாத்தியாரின் பதிவுகள்!!!!


மீண்டும் வாத்தியாரின் பதிவுகள்!!!!

       அன்புள்ள மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் வணக்கம்
இரண்டு மாதகங்களாக வகுபறைப் பக்கம் அடியவன் வரவில்லை 
உடல் நலமின்மைதான் அத்றகுக் காரணம். Blood Pressure and Diabetic பிணிகள் தான் அதற்குக் காரணம்
இரண்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இப்போது நலம்.
நடுவில் எனக்கு என்ன ஆயிற்றோ என்று கவலைப் பட்ட பலர் தொலைபேசி மூலம் பேசினார்கள்
அவர்கள் அனைவருக்கும் எனது மனமாரந்த நன்றி!
ஆனால் நடுவில் நான் சும்மா இருக்கவில்லை. 
இரண்டு புத்தகங்களுக்கான பாடங்களைத் தொகுத்து எனது புத்தக வடிவமைப்பாளர் மூலமும், அச்சகத்தார்
உதவியுடனும் 2 புத்தகங்களைத் தயார் செய்து விட்டேன். புத்தகங்கள் அச்சாகி வ்நதுவிட்டன.
குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகங்களை அச்சிட்டுள்ளேன். அந்தப் புததகங்களைப் பற்றிய அறிவிப்பு தொடர்ந்து வரும்
அது போல எனது பதிவுகளும் வாரத்திற்கு 4 அல்லது 5 என்ற எண்ணிக்கையில் தொடந்து வரும்
அனைவரும் அவற்றைப் படித்து மகிழ்வதுடன், இந்த வாத்தியாருக்கு உங்களுடைய மேலான ஆதரவைத் எப்போதும் போல தொடர்ந்து தர வேண்டுகிறேன்

என்றும் அன்புள்ள
உங்கள்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.4.21

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகள் அனைவருக்கும், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்களுக்கும், மற்றும் சக பதிவாளர்களுக்கும் வாத்தியாரின் மனம் உவநத தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.4.21

வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!


வாய்ப்பைத் தவற விடாதீர்கள்!

இன்று வாக்காளர்கள் தினம். தவறாமல் வோட்டுச் சாவடிக்குச் சென்று உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்.

யாருக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்

இன்று வாக்காளர்கள் தினம். அதற்கு மதிப்பளித்து இன்று வகுப்பறைக்கு விடுமுறை!

நாளை சந்திப்போம்
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.2.21

வாத்தியாரின் அடுத்த புத்தகம்!



வாத்தியாரின் அடுத்த புத்தகம்!

வாத்தியாரின் அடுத்த புத்தகம் அச்சாகி வந்துவிட்டது
குறைந்த பிரதிகளே அச்சிடப்பெற்றுள்ளது
தேவைப் படுவோர் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
மின்னஞ்சல் முகவரி
umayalpathippagam@gmail.com

அன்புடன்
வாத்தியார்
============================================== 

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.1.21

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!



வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறை மாணவக் கண்மணிகள், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்கள், சக பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கலை முன்னிட்டு வகுப்பறைக்கு 3 நாட்கள் விடுமுறை. அடுத்த வகுப்பு18-1-2021 திங்கட்கிழமையன்று.. 
அனைவருக்கும் வணக்கம்

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.12.20

வகுப்பறையின் இடமாற்ற அறிவிப்பு!


வகுப்பறையின் இடமாற்ற அறிவிப்பு!

நமது வகுப்பறை சென்ற 14 ஆண்டுகளாக ப்ளாக்ஸ்பாட் என்னும் கூகுள் தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது.

கூகுள் ஆண்டவரின் கொள்கை மாற்றங்களால் இடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை!

டெலிகிராம் காலனிக்கு இடம் மாறுகிறோம்

இனிமேல் பாடங்கள் அங்கே - அந்த புதிய கட்டடத்தில்தான் நடைபெறும்.
அதில் ஏறாளமான வசதிகள் உள்ளன. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த ஜோதிட செய்திகளைப் பதிவிடலாம். சக மாணவ நண்பர்களுடன் கலந்துரையாடலாம்.

என்ன சரிதானே?

புதிய வகுப்பிற்கு வருவதற்கு டெலிகிராம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து (உங்கள் ஸ்மார்ட்போனில்தான் சாமி - கூகுள் ப்ளே ஸ்டோர்ஸ் மூலம்) அதில் உங்கள் போன் நம்பருடன் பெயரையும் சேர்த்து உள்ளிடுங்கள் போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்

உங்கள் சந்தேகங்களுக்கும் மற்ற தொடர்புகளுக்கும் வாத்தியாரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்  email: 
classroom2007@gmail.com


Please download Telegram app in your phone and create an account with your phone number and name

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.11.20

அச்சாகி வந்து விட்ட வாத்தியாரின் அடுத்த புத்தகம்!


அச்சாகி வந்து விட்ட வாத்தியாரின் அடுத்த புத்தகம்!

அன்புள்ள மாணவக் கண்மணிகளுக்கு

வாத்தியாரின் ஜோதிடத் தொகுப்பு புத்தக வரிசையில் அடுத்த புத்தகம் அச்சாகி வந்து விட்டது.

தனி இணைய தளத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்த பாடங்கள் நீங்கள் படிப்பதற்கு ஏதுவாகத் தொகுக்கப்பெற்றுள்ளது.

அதன் விபரம்

புத்தகத்தின் தலைப்பு: வகுப்பறை ஜோதிடம் தொகுதி 3 -  அஷ்டகவர்க்கப் பாடங்கள்

Lessons on Ashtakavarga

அஷ்டகவர்க்கம் தெரிந்தால் போதும் உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசலாம்

வாத்தியார் அடிக்கடி சொல்லும் அம்பானிக்கும் 337 பரல்கள் உங்களுக்கும் 337 பரல்கள் – நினைவிருக்கிறதா?

பக்கங்கள்: 224
அளவு : 1/8 டெமி
விலை: ரூ.250:00 (Digital Printing) கூரியர் தமிழ் நாட்டிற்கு ரூ.60:00 பெங்களூருக்கு ரூ.70:00 மும்பை மற்றும் டில்லி போன்ற தூரப் பிரதேசங்களுக்கு ரூ.100:00

குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் அச்சிடப்பெற்றுள்ளது. டிஜிட்டல் பிரிண்டிங்கில் அந்த வசதி உண்டு. முன்பு போல 1,000 பிரதிகள் அடித்து சுமக்க வேண்டாம். 50 பிரதிகள் வேண்டுமென்றாலும் அடித்துத் தருவார்கள். என்ன அச்சுக்கூலி இரண்டு மடங்காகும். 

காரணம் முன்பு போல் புத்தகம் படிக்கும் பழக்கம் இப்போது இல்லை! குறைந்துவிட்டது. வாட்ஸப் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கம்

முன் பதிவு செய்திருந்தவர்களுக்கெல்லாம் புத்தகம் அனுப்பப்பட்டுவிட்டது

ஆகவே உங்கள் பிரதிக்கு நீங்கள் உங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை எழுதி பதிப்பகத்தாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்
 பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com

பதிப்பகத்தாரின் விலாசம்: 
Umayal Pathippagam
572- B Cross Cut Road
Near North Coimbatore Fly Over 
Coimbatore - 641 012
Phone No: 97877 71225
umayalpathippagam@gmail.com

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
வகுப்பறைக் கண்மணிகள் அனைவருக்கும், வகுப்பறைக்கு வந்து செல்பவர்களுக்கும், சக பதிவாளர்களுக்கும், நண்பர்களுக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி நல்வாழத்துக்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------------------------------
2. அறிவிப்பு

இன்று முதல் வகுப்பறையின் வாட்ஸாப் க்ரூப் செயல் படத்துவங்கியுள்ளது. முதல் நாளில் சுமார் 60 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். 250 பேர்களுக்கு மட்டும்தான் இடம் . உங்களுக்கான இடத்தை உடனே பிடியுங்கள். வாட்ஸாப் எண் 94430 56624 classroom2007 Group  என்பது அதன் பெயர்
வருக! வருக!

அதில் தினமும் ஒரு ஜோதிடக் குறிப்பு பதிவாகும்!


-------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.10.20

ஆவலுடன் எதிபார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்!!!


நீங்கள் மிகுந்த ஆவலுடன் எதிபார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்!

அன்புள்ள மாணவக் கண்மணிகளுக்கு

வாத்தியாரின் ஜோதிடத் தொகுப்பு புத்தக வரிசையில் அடுத்த புத்தகம் அச்சாகப் போகின்றது. பக்கங்களை வடிவமைக்கும் வேலைகள் முடிந்து விட்டது. 1.11.2020 தேதிக்குள் வெளிவந்துவிடும். அதாவது அச்சாகி வந்துவிடும்

தனி இணைய தளத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்த பாடங்கள் நீங்கள் படிப்பதற்கு ஏதுவாகத் தொகுக்கப்பெற்றுள்ளது.

அதன் விபரம்
புத்தகத்தின் தலைப்பு: வகுப்பறை ஜோதிடம் தொகுதி 3
உள்ளடக்கம்:  அஷ்டகவர்க்கப் பாடங்கள்

Lessons on Ashtakavarga

அஷ்டகவர்க்கம் தெரிந்தால் போதும் உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசலாம்

வாத்தியார் அடிக்கடி சொல்லும் அம்பானிக்கும் 337 பரல்கள் உங்களுக்கும் 337 பரல்கள் – நினைவிருக்கிறதா?

பக்கங்கள்: 224
அளவு : 1/8 டெமி
விலை: அச்சாகி வந்தவுடன் தெரியவரும்  (Digital Printing)

குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் அச்சாகப் போகிறது. டிஜிட்டல் பிரிண்டிங்கில் அந்த வசதி உண்டு. முன்பு போல 1,000 பிரதிகள் அடித்து சுமக்க வேண்டாம். 50 பிரதிகள் வேண்டுமென்றாலும் அடித்துத் தருவார்கள். என்ன அச்சுக்கூலி இரண்டு மடங்காகும்

காரணம் முன்பு போல் புத்தகம் படிக்கும் பழக்கம் இப்போது இல்லை! குறைந்துவிட்டது. வாட்ஸப் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கம்

ஆகவே உங்கள் பிரதிக்கு நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com

பதிப்பகத்தாரின் விலாசம்: 
Umayal Pathippagam
572- B Cross Cut Road
Ner North Coimbatore Fly Over
Coimbatore - 641 012
Phone No: 97877 71225
umayalpathippagam@gmail.com

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
=================================================================


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.20

சோதனைமேல் சோதனை!


சோதனைமேல் சோதனை!

கடந்த 20 ஆண்டுகளாக நன்றாகப் போய்க் கொண்டிருந்த வலைப்பதிவுகளூக்கு உதவுகிறேன் - தொழில்நுட்பத்தை அதிகப் படுத்துகிறேன் என்று சொல்லிக் கூகுள் ஆண்டவர் நமக்குப் பழக்கமான செல்லும் வழியை மாற்றிவிட்டார்.

அதாவது புதிய இண்ட்டர்ஃபேசை அறிமுகப்படுத்தியுள்ளார். அதை முழுமையாக புரிந்து கொண்டு உபயோகிக்க 4 அல்லது 5 தினங்கள் ஆகும்.

நீங்கள் அனுப்பும் பின்னூட்டங்கள் முறைப்படி வரவில்லை. அதனால் பிரச்சினையாக உள்ளது.

நமது வகுப்பறை மாணவர் சந்திரசேகர ஆஸாத்’ ஏன் பின்னூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று கேட்டு உள்ளார். நான் எதையும் தடை செய்யவில்லை.

ஆகவே 11-9-2020ம் தேதி புதிருக்கு உரிய விடையை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறேன்

இந்த ஒரு தடவை மட்டும் அந்த புதிருக்கான உங்கள் கணிப்பை வாத்தியாரின் மின்னஞ்சலுக்கும் அனுப்புங்கள் அத்துடன் மீண்டும் ஒருமுறை பின்னூட்டப்பெட்டிக்கும் அனுப்புங்கள்

உங்களின் பதிலுக்காக நான் காத்திருக்கிறேன்.

வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நீங்கள் அனுப்பலாம் அன்று 7 AM மணிக்கு சரியான விடை உங்களுடைய கணிப்புக்களூடன் வெளியாகும்

என்ன Okay yaa?

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.8.20

தொழில் நுட்பம் ( Technology) வாழ்க!


தொழில் நுட்பம் ( Technology) வாழ்க!

அந்தக் காலத்தில் தபால் தந்தி அலுவலகத்திற்குச் சென்று கால் புக் செய்து காத்திருந்துதான் வெளியூரில் உள்ள உறவினர்களுடன் பேச முடியும். பேசுவதற்கு இணைப்பு கிடைக்கும் வரை காத்துக் கிடக்க வேண்டும்!

இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. பையில் போனை வைத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. புது இணைப்பை ஒரு மணி நேரத்தில் வாங்கி விடலாம். கடிதம் எழுதும் பழக்கம் எல்லாம் ஒழிந்து விட்டது. தந்தி எல்லாம் காலாவதியாகிவிட்டது.

ஆஃப்செட் பிரிண்டிங் முறையிலும், பிளேட் பிரிண்டிங் முறையிலும் 1000 புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தால்தான் அச்சிட்டுத் தருவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. டிஜிட்டல் டெக்னாலஜி முறையில் 50 புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்தாலும் அச்சடித்துக் கொடுப்பார்கள்.

அதனால் என்னைப் போன்ற Writer cum Publisher களுக்கெல்லாம் கடவுள் கொடுத்த வரம் போல் ஆகிவிட்டது,

ஒரு நல்லதில் ஒரு கெட்டதும் இருப்பதைப் போல டிஜிட்டல் டெக்னாலஜியில் அச்சடிக்கும் செலவு இரு மடங்காகிவிட்டது. 60 ரூபாய்க்கு அடிக்க வேண்டிய புத்தகத்தை 120 ரூபாய் கொடுத்து அடிக்க வேண்டும். அதனால் என்ன? ஆயிரக் கணக்கில் புத்தகத்தை அச்சடித்து வீட்டில் வைத்துக் கொண்டு முன்பு அவதிப் பட்டதைப் போன்ற அவதி இப்போது இல்லை!

வரத்தைப் பெற்றவுடன் முதல் வேலையாக 2 புத்தகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். நான்கு ஆண்டுகளாக எழுதி, ஒரு மாசு இதழில் வெளியாகி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கதைகளை எல்லாம் (மொத்தம் 40 சிறுகதைகள்) புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளேன். ஒவ்வொரு புத்தகத்திலும் 20 கதைகள்.

புத்தகங்களின் பெயர்கள்: செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் - தொகுதி 5 (192 பக்கங்கள்) மற்றும் தொகுதி 6 (144 பக்கங்கள்)

உங்களின் பார்வைக்காக புத்தகங்களின் அட்டைப் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்

அன்புடன்
SP VR சுப்பையா
--------------------------------------------------------------------------

===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.8.20

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்!


நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தியாரின் அடுத்த புத்தகம்!

அன்புள்ள மாணவக் கண்மணிகளுக்கு

வாத்தியாரின் ஜோதிடத் தொகுப்பு புத்தக வரிசையில் அடுத்த புத்தகம் அச்சாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடும்.

இதுவரை எழுதியுள்ள பாடங்களில் மிகவும் முக்கியமான பாடங்களை நீங்கள் படிப்பதற்கு ஏதுவாகத் தொகுக்கப்பெற்றுள்ளது.
கோவையின் முதன்மை அச்சகமான கலைக்கதிர் அச்சகத்தில் ப்ளேட் பிரிண்டிங் முறையில் அச்சாகிக் கொடிருக்கிறது.

அதன் விபரம்
புத்தகத்தின் தலைப்பு: வகுப்பறை ஜோதிடம் தொகுதி 2
உள்ளடக்கம்: கிரகங்களும் கிரகங்களின் வீடுகளும்
Planets And Houses of Planets
பக்கங்கள்: 416
அளவு : 1/8 டெமி
விலை: ரூ.420:00
கூரியர் செலவு ரூ.80:00
ஆக மொத்தம் ரூ. 500:00

குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் அச்சாகின்றன. காரணம் முன்பு போல் புத்தகம் படிக்கும் பழக்கம் இப்போது இல்லை!
குறைந்துவிட்டது. வாட்ஸப் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கம்

அதனால் முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து புத்தகம் அனுப்பப்படும், இப்போது பணம் அனுப்ப வேண்டாம்
பதிப்பகத்தார் சொல்லும்போது அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு நீங்கள் பணத்தை அனுப்பலாம்.

ஆகவே உங்கள் பிரதிக்கு நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்
பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com

பதிப்பகத்தாரின் விலாசம்:
Umayal Pathippagam
37, S.N.D Layout 4th Street
Tatabad
Coimbatore - 641 012
Phone No: 9787771225

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.4.20

வாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down


வாத்தியாரின் உடல் நிலை : வகுப்பறைக்கு Lock Down

வகுப்பறைக் கண்மணிகளுக்கு

வாத்தியாரின் அன்பு வணக்கம்!

ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நேற்றுத்தான் வீட்டிற்குத் திரும்பியுள்ளேன்

Severe Cold - Fever - Breathing Problem -urine infection என்று எல்லாவற்றிற்கும் ICUவில் வைத்து சிகிச்சை - கடைசியில் அறுவை சிகிச்சை - என்று முழு நலம் பெற வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

அடுத்த 10 நாட்களுக்கு IV மூலம் செலுத்தக்கூடிய anti biotic  மருந்தையும் கொடுத்தனுப்பியுள்ளார்கள். (அதன் விலை 32 ஆயிரம் ரூபாய்கள் - விலையைக் கேட்டாலே தலையைச் சுற்றும்)

மேலும் 20 நாட்களுக்கு ஓய்வாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்
.
ஆகவே 20 நாட்களுக்கு வகுப்பறைக்கு விடுமுறை! பழைய பாடங்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

மீண்டும் சந்திபோம்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
சிகிச்சைக்குப் போய் வந்ததற்கான ஆதாரம் கீழே உள்ளது!!!!!


=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.2.20

அடடே, இன்று வாத்தியாரின் பிறந்தநாளா?



அடடே, இன்று வாத்தியாரின் பிறந்தநாளா?

ஆமாம் சாமி ஆமாம்!!!

பிப்ரவரி 9ம் தேதி சரி, ஆண்டு என்ன?

9-2-1948

72 வயது முடிந்து 73 ஆரம்பம்!!!!

உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி!

நான் தொடர்ந்து வலைப்பதிவில் எழுதுவதற்கு அதுவே காரணம்!!!!

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.1.20

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!

வகுப்பறையின் மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்களுக்கும், சக வலைப் பதிவர்களுக்கும் வாத்தியாரின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.1.20

வாத்தியாரின் வாழ்த்துக்கள்111

வாத்தியாரின் வாழ்த்துக்கள்111

வகுப்பறை மாணவக் கண்மணிகள், வந்து போகும் வாசகர்கள், சக பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். அனைவருக்கும் பழநி அப்பன் அருளால் இந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகட்டும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவட்டும்!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!