மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label தனி இணைய தளம். Show all posts
Showing posts with label தனி இணைய தளம். Show all posts

1.12.10

e class: வலைப்பூவைப் (Blog) பூட்டிவைப்பது எப்படி?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
e class: வலைப்பூவைப் (Blog) பூட்டிவைப்பது எப்படி?
இன்றையப் பொருளாதார சூழ்நிலையில், பணத் தேடலில், மனிதன் பலவற்றை இழந்து விட்டான். படிக்கும் பழக்கத்தை நிறையப் பேர்கள்
இழந்து விட்டார்கள்.

தவறிப் படிப்பவர்கள் கூட நல்ல புத்தகங்களைப் படிப்பதில்லை. கேட்டால் நேரம் இல்லை என்பார்கள்.

எழுதுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்க ஆளில்லை. 'கல்கி’ போன்ற பெரிய எழுத்தாளர்கள் உருவாகாததற்குக்  காரணம் அதுவே!

வெகுஜனப் பத்திரிக்கைகள்கூட, திரைத்துறையைச் சார்ந்த செய்திகளையும், படங்களையும், கட்டுரைகளையும்  வைத்துத், தங்கள் பத்திரிக்கையை முன்னிறுத்துவதில் போராடுகின்றன. தங்களைத் தக்க வைத்துக்கொள்வதில்
சிரமப் பட்டுக்கொண்டிருக்கின்றன.

அதுபோல நல்ல செய்தித்தாள்களைப் படிப்பதற்கும் ஆளில்லை. தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த இடத்தைப்  பிடித்துக்கொண்டிருக்கின்றன!

Times of India  எனும் நாளிதழ் எவ்வளவு பெருமை வாய்ந்த நாளிதழ்! அவர்கள் கோவையில் அடுத்த மாதம் தங்கள் நாளிதழை இங்கேயே அச்சிட்டு வெளியிட உள்ளார்கள். அதற்காக கோவையில் உள்ள வாசகர்களைக்  கவரும் விதமாக சந்தாத் தொகையைக் குறைத்து, சந்தாதாரர்களைச்  சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள். ஏராளமான  வாசகர்களைத் தங்கள் பக்கம் இழுத்துள்ளார்கள். இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாள் இதழின் ஆண்டுச் சந்தா எவ்வளவு தெரியுமா? 299:00 ரூபாய்கள் மட்டுமே. சேருகிறவர்களுக்கு 150 ரூபாய் மதிப்புள்ள பயனப் பை (Traveling Bag) ஒன்றையும் அன்பளிப்பாகத் தருகிறார்கள்.

அதைப்பற்றிய விவரம் கீழே உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறைப் பதிவில் கடந்த 4 ஆண்டுகளாக எழுதிவருகிறேன். சராசரியாக ஒவ்வொரு பதிவும் 4,000  வாசகர்களால் படிக்கப்படுகிறது.

பின் தொடர்பவர்கள் பட்டியலில் இன்றையத் தேதியில் சுமார் 1,988 பேர்கள் இருக்கிறார்கள்

இது எப்படிச் சாத்தியப்பட்டது?

ஜோதிடப்பாடங்களால் மட்டுமா? அல்ல!

எதை எழுதினாலும் படிப்பவர்களுக்கு சுவாரசியம் தருவதாக அது இருக்க வேண்டும் என்ற முனைப்புடன்  எழுதிக்கொண்டிருக்கிறேன். அது தொடரும். அந்தப் பணி தொடரும்.

உதாரணங்கள், வர்ணனைகள், குட்டிக்கதைகள் என்று சுவாரசியமானவற்றைக் கலக்கலாகச் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வெறும் ஜோதிடம் என்றால் கசக்கும். ஜோதிடத்தை எளிமைப்
படுத்தி சுவாரசியமான நடையில் எழுதிக்  கொண்டிருப்பதால்,
அனைவராலும் படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. அறிந்து
கொள்ள முடிகிறது. நாட்டு மருந்துடன் தேனைக்கலந்து
கொடுப்பார்கள். அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சுவரசியம் தூக்கலாக இருக்கும்

  “ வாழ நினைத்தால் வாழலாம்
      வழியா இல்லை பூமியில்
   ஆழககடலும் சோலையாகும்
     ஆசையிருந்தால் நீந்தி வா”

என்று துவங்கியவர், நடுவில் இப்படி எழுதியிருப்பார்:

   “கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
      கையில் கிடைத்தால் வாழலாம்
    கருத்தில் வளரும் காதல் எண்ணம்
       கனிந்து வந்தால் வாழலாம்
    கன்னி இளமை என்னை அணைத்தால்
       தன்னை மறந்தே வாழலாம்.........

வண்ணப்பறவை நம்மை அணைத்தால் தன்னை மறப்போம் என்பதை எப்படிச் சுவாரசியாமச் சொல்லியிருக்கிறார்  பாருங்கள்..

இன்னொரு உதாரணம்:

     “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
        கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
     சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
        சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா

இதழ் சிந்தும் சுவையை எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார் பாருங்கள். இதழ் சிந்தும் சுவை என்றால்  என்னவென்று தெரியுமல்லவா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனிமேல் எழுத உள்ள அரிய மற்றும் முக்கியமான ஆக்கங்கள் திருட்டுப்போகாமல் இருக்க நமக்கென்று, நமது  வகுப்பறை வாசகர்களுக்கென்று இணைய தளம் ஒன்று உருவாகிக்
கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் வலை ஏறும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

வலைப்பூவிலும் எனது ஆக்கங்கள் தொடரும். புதியவர்கள்
இதைப் படித்தால் போதும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நமது நண்பரும், வகுப்பறைக்கு வந்து போகும் பார்வையாளர்களில் ஒருவருமான திருவாளர் சித்தூர் முருகேசன்  அவர்கள், நமக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
அவர் ஒரு பெரிய  பத்திரிக்கையில் நிருபராகப் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அத்துடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தேர்ந்தவர். அந்த இரண்டு மொழிகளிலுமே அவருக்கு வலைப்பூக்கள் உள்ளன. ஜோதிடத்தையும் நன்கு
அறிந்தவர். அவர் பின்னூட்டத்தில் சொன்ன செய்தியை, நீங்கள் அறிந்து கொள்வதற்காக அப்படியே  கொடுத்துள்ளேன்:

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவர் சொன்னபடி லாயத்தைப் பூட்டிவைக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு நான் அனுமதிப்பவர்கள் மட்டுமே  லாயத்தில் நுழைய முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 100 பேர்களுக்கு மட்டுமே லாயத்தின்  சாவியைக் கொடுக்க முடியும். கூகுள் அதற்கு 100 என்ற எண்ணிக்கை வரைமுறையை வைத்துள்ளது. அதையும் பாருங்கள்.

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்


1988 கண்மணிகள் இருக்கும் இடத்தில் 100 பேர்களுக்கு மட்டும் அனுமதி என்பது அதர்மமாகப் படுகிறது. ஆகவே திருட்டைத் தடுப்பதற்கு வேறு வழிகள் உள்ளன. அதை செயல் படுத்துவோம். இனிமேல் திருடர்கள்

நுழையாமல் தடுப்பதற்கு, எழுதுபவற்றில் முக்கியமான
பாடங்களுக்காக தனி இணைய தளம் தயாராகிக்
கொண்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தில் ஆர்வம்
உள்ளவர்களை மட்டும் அதில் சேர்த்துக் கொள்வோம்.
மற்றறவர்கள் இதில் எழுதும் ஆக்கங்களைப் படித்தால் போதும்.

மற்றவை நாளை

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

24.11.10

ஆடிய கால்களும், பாடிய வாயும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆடிய கால்களும், பாடிய வாயும்!

நடனம் ஆடிப் பழகிய கால்களும், சங்கீதத்தைப் பாடிப் பழகிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்.

அதுபோல எழுதிப் பழகிய கையும் சும்மா இருக்காது.

கடந்த 10 நாட்களாக பாடங்கள் எதையும் எழுதவில்லை. அதற்கான சூழ்நிலை என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா”


என்று மனிதனின் மனநிலையை கவிதை வரிகளில் அழகுறச் சொன்னவர் கவியரசர் கண்ணதாசன்.

இன்று பாதி என்ற அளவில்லாமல் முழு மனதிலும் மிருக உணர்வுகளுடன் அலைபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். என்ன செய்வது கலி முற்றிக்கொண்டிருக்கிறது. பகவான் தன்னுடைய பத்தாவது அவதாரத்தை மேற்கொண்டால் மட்டுமே இந்த நிலை மாறும். அதுவரை நல்லவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதே அவர்களுக்கு நல்லது.

வழியில் குறுக்கிடும் நான்கு கால் பிராணிகளால் நம் பயணம் தடைப்படக் கூடாது.

பயனர் பெயர், கடவுச்சொல் வசதி, எழுத்துக்களைப் பிரதி எடுப்பதைத் தடுக்கும் வசதி, மற்றும் முழுக் காப்புரிமையுடன் நம் வகுப்பறைக் கென்று இணையதளம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பணி நல்ல முறையில் முடிவடைய வேண்டும். ஆண்டவனைப் பிரார்த்திப்போம். பிரார்த்தியுங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதுவதால் வலைப்பதிவு எனக்கு வசப்பட்டுள்ளது. இணைய தள செயல்பாடுகளும் எனக்கு வசப்பட வேண்டும். அது ஒரே நாளில் ஆகின்ற செயல் அல்ல!. பத்து அல்லது பதினைந்து தினங்கள் பயிற்சி மேற்கொள்ள நேரலாம்.

அகவே தை மாதம் ஒரு நன்னாளில் இணையதளம் உங்கள் பயன்பாட்டிற்கு வரும்.

இங்கே வலைப் பதிவில் எழுதுவதும் தொடரும். இதில் என்ன எழுதுவது, அதில் என்ன எழுதுவது என்பதை நான் முடிவு செய்து வைத்திருக்கிறேன். இரண்டுமே வழக்கம்போல படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாகவும் சுவாரசி யமாகவும் இருக்கும். அதற்கு 100% கியாரண்டியை நான் தருகிறேன்.

உண்மையிலேயே ஜோதிடத்தின் மீது மதிப்பும், ஆர்வமும், கற்றுக் கொள்ள முனைப்பும் உள்ளவர்கள் மட்டும் இணையத்தில் சேரலாம். மற்றவர்கள். இதில் - அதாவது இந்த வலைப் பதிவில் எழுதுவதை மட்டும் படித்தால் போதும். இதுவரை எழுதியுள்ள பாடங்களைப் படித்தால் மட்டும் போதும்.

இணையதளம் பயன்பாட்டிற்கு வரும்வரை பாடங்கள் மின்னஞ்சல் மூலமாக நடத்தப்படும். மின்னஞ்சலில் எழுதப்படுபவைகள் அனைத்தும், இணையதளம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் அதில் சேர்க்கப்படும்.

மின்னஞ்சல் வகுப்பில் குறைந்த அளவு எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பழைய (சீனியர்)  மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். குறுகிய காலம் மட்டுமே நடக்க இருப்பது என்றாலும், அதற்குச் சில விதிமுறைகள் உண்டு.

சேரவிருப்பமுள்ளவர்களும், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன் என்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

மற்ற அனைவரும் பொறுத்திருங்கள். தை மாதம் இணையதளம் துவங்கியவுடன் அனைவருக்கும் அதில் சேரும் வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!