
விபரீத ராஜயோகம்
(Reversal of Fortune)
அதென்ன ஸ்வாமி விபரீதம்?
விபரீதம் என்பது சாதாரணமாக இல்லாததும், தவறானதும் ஆகும். விசித்திரமானதாகும்
நடக்கக்கூடாதது நடந்துவிட்டால், அதுவும் இயற்கைக்கு மாறாக நடந்துவிட்டால்
அதை விபரீதம் என்போம்.
அதைப்போல கிடைக்கக்கூடாத ராஜயோகம் விபரீதமாகக் கிடைத்து விட்டால்
அது விபரீத ராஜயோகம்!
அது ஜாதகத்தில் எப்படி ஏற்படும்? அதன் பலன் என்ன?
இன்று, அதை விவரித்து எழுதியுள்ளேன். மின்னஞ்சல் வகுப்பில் பாடமாக அனைவருக்கும் அனுப்பியுள்ளேன். படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.
இங்கே ஏன் பதிவிடவில்லை?
பதிவிட்டால், என் நிலைமை விபரீதமாகிவிடும்:-))))
பின்னூட்டம் 100க்குமேல் வரும். பலரும் தங்கள் ஜாதகத்தைவைத்து,
அதைப் பற்றிக் கேட்டு என்னைப் பிறாண்டி எடுத்துவிடுவார்கள்.
அது மேல் நிலைப் பாடம். ஆகவே சற்று விவரம் அறிந்தவர்கள் மட்டுமே
அதைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.
ஆகவே அதை மின்னஞ்சல் பாடமாக அனுப்பியுள்ளேன்.
புதியவர்கள், பழைய பாடங்களைப் படித்துவிட்டு, மேல் நிலைப் பாடங்களைப் படிப்பது, அவர்களுக்கு நல்லது! எனக்கும் நல்லது!:-))))
அடுத்த பாடம் நாளை!
அன்புடன்
வாத்தியார்!
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!