சொத்துக்களை எப்படிப் பங்கு வைத்தார் அந்த தர்மவான்?
"பெரிய வீடு" எஸ்.கோவிந்தசாமி நாயுடுவிற்கு, வெங்கடசாமி,ரங்கசாமி,கங்கா,நாராயணசாமி என்று நான்கு மகன்கள்.கோவிந்தசாமி பிறந்தது மிகப் பெரிய குடும்பத்தில்.
அடிப்படையில் அவர்கள் அனைவருமே விவசாயிகள்,கடும் உழைப்பாளிகள்.
கோவிந்தசாமி தன் உழைப்பில் சேர்ந்த சொத்துக்களை ஐந்து பாகங்களாகப் பிரித்தார்.
"என் சொத்துக்களை ஐந்து சரிபகுதி பாகங்களாகப் பிரிந்துள்ளேன்.எனக்கு மகன்கள் நீங்கள் நான்கு பேர்கள் தான்.ஆனால் ஐந்தாவதாகவும் ஒரு சகோதரர் உங்களுக்கு இருக்கிறார்.அது தான் இந்த தமிழ்ச் சமூகம்.அதற்கு நம் காலம் உள்ளவரை,நம் தலைமுறைகளுக்கும் நாம் சேவை செய்ய வேண்டும்.அதற்காக ஒரு அறக்கட்டளையை உருவாக்கி இருக்கிறேன்.அது தான் அந்த ஐந்தாவது சகோதரர்.அவருக்கும் சம பங்கை எழுதி வைக்கிறேன்." என்று தன் மகன்களிடம் சொன்னார்.அதை அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
சொன்னபடியே கிட்டத்தட்ட 2,01100 ரூபாய்களை எழுதியும் வைத்தார்.இது நடந்து கிட்டத்தட்ட நூறாண்டுகளை நெருங்கப் போகின்றது.ஆனால் இன்றுவரையில் அந்த ஐந்தாவது சகோதரருக்கான பங்களிப்பும் தொடர்கிறது.
அப்படி அந்த ஐந்தாவது சகோதரன் அறக்கட்டளையால் வந்தவை தான் கோவை PSG கல்வி நிறுவனங்கள்.
இது தான் நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அந்த பங்கு பத்திரம்...இதற்கான படம் இதோ.
படித்து வியந்ததைப் பகிர்ந்துள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!