மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

20.10.18

நாற்பது வயதிற்கு மேல் என்ன நடக்கும்?


நாற்பது வயதிற்கு மேல் என்ன நடக்கும்?

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள் !_ 🙏🙏🙏

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே  சிக்கனமாக இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
 
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை வாழவைக்கும்!!

அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை  நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!  🙏🙏
-----------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: ஜோதிடம்: 19-10-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 19-10-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் திருமதி ஐஷ்வர்யா ராய் பச்சன் அவர்களுடையது.
பிறப்பு விபரம்: 1-11-1973ம் தேதி மாலை 7:20 மணிக்கு மங்களூரில் பிறந்தவர்!!!!

இந்த வாரம் நிறைய அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள்.
17 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே
கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger S Desijayakumar said...
Answer quiz 19.10.2018
Aishwarya Ray. Dob 1.11.1973
Time 6.10 am
Friday, October 19, 2018 6:18:00 AM
--------------------------------------------------------
2
Blogger sfpl fab said...
Answer:- 19.10.2018
Mrs.Aishwarya Rai Bachchan
Born 1 November 1973 time6.30pm(age 44)
Mangalore, Karnataka, India
Residence Mumbai, Maharashtra, India
Nationality Indian
Alma mater University of Mumbai
Occupation Actress, model
Years active 1994–present
Title Miss World 1994
Spouse(s) Abhishek Bachchan (m. 2007)
Children 1
Awards Full list
Honours
Padma Shri (2009)Ordre des Arts et des Lettres (2012)
Friday, October 19, 2018 10:13:00 AM
-------------------------------------------------------
3
Blogger bg said...
Aishwarya Rai Bachchan born on Nov 1 1973.
Friday, October 19, 2018 10:30:00 AM
------------------------------------------------------
4
Blogger ponnusamy gowda said...
AISHWARYA RAI
Aishwarya Rai (also known as Aishwarya Rai Bachchan after her marriage; Tulu pronunciation [əjɕʋərjaː rəj]; born 1

November 1973) is an Indian film actress. She worked as a model before starting her acting career, and ultimately

won the Miss World pageant in 1994.
Date of Birth: 01-Nov-1973 @ 07-15 hrs
Place of Birth: Mangalore, Karnataka, India
Profession: Actor, Model
Regards
- ponnusamy
Friday, October 19, 2018 11:22:00 AM
---------------------------------------------------
5
Blogger Mahi said...
Dear sir,
It is Aiswarya Rai Bachchan's horoscope. Date of birth 01.11.1973.
Friday, October 19, 2018 1:51:00 PM
------------------------------------------------
6
Blogger Sanjai said...
Aishwarya Rai Bachchan
1st November 1973 / Mangalore / 7:20 AM
Friday, October 19, 2018 2:26:00 PM
----------------------------------------------
7
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் ஐஸ்வர்யா ராய் பச்சன்
DOB:1/11/1973
TIME:07:20A.M
PLACE: MANGALORE
நன்றி
Friday, October 19, 2018 3:09:00 PM
------------------------------------------------------------
8
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 6-4-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் உலக அழகியும் திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா

ராய் ஆவார். பிறந்த தேதி நவம்பர் 1, 1973. மங்களூரில் பிறந்தவர். ஏற்கனவே
6-4-2018 இந்த ஜாதகத்துக்குரியவரை கண்டுபிடித்து இருந்தோம்.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Friday, October 19, 2018 5:28:00 PM
------------------------------------------------------
9
Blogger suresh radhakrishnan said...
Ji... it is actress mrs. Aishwarya rai bachan. Dob 01-11-1973
Friday, October 19, 2018 6:46:00 PM
---------------------------------------------------------
10
Blogger ARAVINDHARAJ said...
Name:Aishwarya Rai
Date of Birth:01-Nov-1973
Place of Birth:Mangalore, Karnataka,
Profession: Actor, Model.
Friday, October 19, 2018 7:15:00 PM
---------------------------------------------------------
11
Blogger sundari said...
Dear sir,
Amitha Bachaan's daughter in law Aishwariya
Friday, October 19, 2018 8:40:00 PM
------------------------------------------------------------
12
Blogger Radha Sridhar said...
ஐஸ்வர்யா ராய்
Friday, October 19, 2018 8:50:00 PM
---------------------------------------------------------
13
Blogger bala said...
Vanakkam Iyya,
Intha jathagar Miss world 1994 - Aishwarya Rai avargal :) :)
https://en.wikipedia.org/wiki/Aishwarya_Rai
Date of Birth : 1 Nov 1993, 7.30 am Mangalore India.
Abhishek Bachan thaan Kuduthuveithavar :) :)
Nandrigal,
Bala
Friday, October 19, 2018 10:05:00 PM
--------------------------------------------------------
14
Blogger thozhar pandian said...
நவம்பர் 1 1973 பிறந்த நடிகை ஐஸ்வர்யா இராய் பச்சன் அவர்கள்
Friday, October 19, 2018 10:18:00 PM
-------------------------------------------------------
15
Blogger Unknown said...
Aishwarya Rai.. both date.1-11-1973
Friday, October 19, 2018 11:47:00 PM
-----------------------------------------------------
16
Blogger RAMVIDVISHAL said...
Aishwarya Rai
DOB : 01/11/1973
Saturday, October 20, 2018 12:27:00 AM
-------------------------------------------------------------
17
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is Mrs. Aishwarya Rai Bachchan who was born on 1st of November 1973 in Mangalore, India.
Kind Regards
Rajam Anand
Saturday, October 20, 2018 12:41:00 AM
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.10.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 19-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  19-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? திரையுலகத்தைச் சேர்ந்தவர். பெண்மணி. கர்நாடகத்தில் பிறந்தவர். மும்பைவாசி. அகில உலகப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.10.18

நீங்களும் உங்கள் மனமும்!


நீங்களும் உங்கள் மனமும்!

‘உனக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எதை முதலில் சொல் லட்டும்’ என்றான் மகன்.

‘நல்ல செய்தியை முதலில் சொல்லு’ –ன்றாள் அம்மா

‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லுவியே, எப்படியாவது தனிக் குடித்தனம் போயிடுன்னு’ அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டா ளாம்.

‘ரொம்ப மகிழ்ச்சி. இப்பதான் மனச்சுமை குறைஞ்சது. ஏதோ கெட்ட செய்தினு சொன்னியே, அது என்னா?’

‘நானும் என் மனைவியும் தனிக்குடித்தனம் போறதுன்னு முடிவு எடுத்திட்டோம்’ அம்மாவிற்கு அதிர்ச்சி. மனச்சுமை கூடியது. முகம் இறுகியது.

நடந்தது ஒரே வகை சம்பவம். ஆனால் மனம் ஒன்றை விரும்புகிறது. மற்றதை சுமையாக பார்க்கிறது.

1. மனிதனை ஆட்டுவிப்பது மற்றவர்களோ சம்பவங்களோ என்பதை விட அவரவர் மனமே என்பதுதான். தனக்கொரு நியதி; பிறருக்கு வேறு நியதி – என்ற மனநிலையே. மன அழுத்தத்தின் அடிப்படை நடுநிலை மனமே மகிழ்ச்சியைத் தரும்.

2. மனிதநேயம்: பிறரையும் தன்னைப்போல நேசிப்பதே மனிதநேயம். பிறர் துன்பத்தின் பங்கு கொண்டு பகிர்ந்து கொள்வது மனதை வளப் படுத்தும்.

3. கோப உணர்வு மன அழுத்தத்தை உண்டாக்கும். கோபத்தினால் மனக் குழப்பமும், தவறான முடிவுகளும், அதைத் தொடர்ந்து இழப்புகளும் ஏற்படும். கோபத்தின்போது உடல் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப் படுகின்றன. கோபத்தை வெல்வதே மன அழுத்தத்தை வெல்லும் வழி.

4. தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டால் மனிதனின் வாழ்க்கையும் தாழ்ந்துவிடும். ஒவ்வொரு மனிதனுக்கு தனித்தன்மை உண்டு. யாரும் யாருக்கும் தாழ்ந்தவரல்ல. ஒருவரின் உடந்தையில்லாமல் அவரை யாரும் தாழ்த்த முடியாது. தாழ்ந்தவன் என்று மனம் ஏற்கும் வகையில் தாழ்வு உண்டாகாது.

5. பிரச்சனைகள் வாழ்வின் அங்கம். பிரச்சனை இல்லா வாழ்க்கை வெறுமனான வாழ்க்கையாகி விடும். பிரச்சினைகளை எதிர்கொள்வதும் ஏற்றுக் கொள்வதும், சமாளிப்பதும் மன வலிமையைத் தரும்.

6. பொறுமை இல்லாதவர்கள் எளிதில் மன அழுத்தம் அடைவர். பொறுமையுடன் பேசுகின்ற, செயல்படுகின்ற , மனநிலை உண்டாகிவிட்டால் பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும்.

7. “நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் என்றோ எனக்கு சித்தபிரமை பிடித்திருக்கும்” என்றார் காந்தி. கலகலவென வாய்விட்டு சிரித்தால் மனம் மென்மையாகும்.

8. மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைபிரியாத்து. மனம் வளமானால் உடல் வளமாகும். உடல் வளமானால் மனம் வளமாகும்.

9. உழைப்பு, ஓய்வு, உறக்கம், உணவு போன்ற அனைத்தும் சரியான அளவில் இருந்தால் மன அழுத்தம் வராது.

10. வேலைகளை தாமதப்படுத்துதல், பிரச்சனைகளை அதிகமாக்கி மன அழுத்தத்தை உண்டாக்கும். அவ்வப்போது செயல்படுகின்ற மனநிலை மகிழ்ச்சியை பெருக்கும்.

11. பய உணர்வுகளை பலருடைய மன அழுத்தத்தின் காரணம். நாம் பயப்படுகின்ற பெரும்பாலான அம்சங்கள் நடப்பதில்லை. பயத்தை எதிர்கொள்வதே அதை வெல்ல உதவும்.

12. மனதில் ஒருநாளைக்கு 50 ஆயிரம் வரை சிந்தனைகள் உண்டாகும். அவற்றை எந்த அளவிற்கு குறைத்து கொள்கிறோமோ அதற்கேற்ப மன அமைதி கிடைக்கும். ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்துதல் மனதை ஒருமுகப்படுத்தும் வழி.

13. பிறரைப் பற்றிய வெறுப்பான மனநிலையே பலரை மன அழுத்தத் திற்கு ஆளாக்குகின்றன. ஒரே கருவில் உருவாகிய இரட்டை குழந்தை களுக்கு கூட ஒருமித்த கருத்துதான் இருக்கும் என்பது சாத்தியமில்லை. ஆகையால், மனிதனுக்கு மனிதன் விருப்பு வெறுப்புகள் இருப்பது நியதி. அதை ஏற்றுக் கொண்டு அவரவரை அவரவர் மனவீட்டில் வாழ விடு வதே சிறந்த அணுகுமுறை.

14. கடமையை சரியாக செய்பவருக்கு மன அழுத்தம் குறைவு.

15. சரியான நேர நிர்வாகம் இல்லாதவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள். எது முக்கியம், எது அவசரம் என்பதை அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால் சிறந்த முறையில் நிர்வாகம் செய்ய முடியும்.
மன உளைச்சல் அடைந்தவர்கள் அதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகளை ஆய்ந்து செய்தல் அவசியம்.

16. நோய்கள் வரக்கூடாது என்பது நம் விருப்பம். ஆனால் நோய்களுக்கு நம்மீது விருப்பமுண்டு. ஆகவே நோய் வராமல் தடுக்கும் வழிகளை கடைபிடித்து, அப்படியே நோய் வந்துவிட்டால், கலங்கி விடாமல் அதை குணப்படுத்தும் வழிகளில் இறங்கி விட வேண்டும்.

17. நல்ல புத்தகம் நல்ல நண்பனை விடவும் உயர்ந்தது. நல்ல நூல்களை படிப்பதன் மூலம் அறிந்திராத பல விசயங்களை அறிந்து மகிழ்வுடன் வாழ முடியும். வாழ்வியல் நூல்கள் மன அழுத்தத்தை வெல்ல உதவும்.

18. உடற்பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்று. நாள் தோறும் தவறாது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால் எண்டார்பின் என்ற ஹோர்மோன் சுரந்து இரத்தத்தில் கலந்து உடலின் ஆற்றலைப் பெருக்கும்.

19. யோகாசனம்: தினமும் சுமார் 30 நிமிடங்கள் செய்கின்ற பிராணயாமம் உள்ளிட்ட யோக பயிற்சிகள் சுவாசத்தை சீராக்குவது மட்டுமல்லாமல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் உடலின் எல்லா உறுப்புகளையும் சீராக செயல்பட உதவும்.

20. மனதின் தீயசிந்தனைகள், பல தீய சூழ்நிலைகள், பிற மனிதர்களின் தவறான தாக்கங்கள் மன அமைதியை குறைக்கும். சுமார் 15 நிமிடங்களுக்கு செய்கின்ற தியானம் மனதை சுத்தப்படுத்த உதவும்.

மனத்தினை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வோம்.. இன்பம் துன்பம் ஆகியவற்றை சரிசமமாக உணர்ந்து செயல்படுவோம்.

மன அமைதியுடன் வாழப் பழகிக்கொள்வோம்.

Thanks : Udhai Kumar
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.10.18

வறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு!!!!


வறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு!!!!

*வறுமையிலும் நேர்மை!!*👍👍🌹🌹

🙏🙏 *உண்மை சம்பவம்*🙏🙏

சவுதிஅரேபியாவின் பாலைவனப் பகுதியில் சூடான் நாட்டைச் சேர்ந்த யூசுஃப் என்ற நபர்  ஒரு அரபியின் ஆட்டுப் பண்ணையில்   புறவெளிப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்

அப்போது அந்த வழியாக காரில் வந்த  சிலர் யூசுஃப்பை பார்த்து எங்களுக்கு  ஒரு ஆடு வேண்டும்

நான் உனக்கு 200 ரியால் பணம் தருகிறேன் உன் முதலாளிக்கு தெரியாமல் எனக்கு ஒரு ஆட்டை எடுத்து தருகிறாயா என்று கேட்டனர்? (ஆட்டின் விலை 800 ரியால் இருக்கும்,யூசுப்பின் சம்பளம் 100 ரியால்)

அதற்கு அந்த யூசுஃப் இல்லை என்னால் முடியாது நான் என் முதலாளிக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறுகிறார்.

அதற்கு அந்த அரபி ஏன் முடியாது என்கிறாய்? இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒரு ஆட்டை எடுத்துக் கொடுப்பதினால் உன் முதலாளிக்கு என்ன தெரியப் போகிறது? உன் சம்பளம் என்ன? இந்த வெயிலில் இவ்வளவு பாடுபட்டு உன் முதலாளிக்கு நீ உழைத்துக் கொடுப்பதினால் உனக்கு அவர் பெரிதாக என்ன கொடுத்து விட போகிறார்? அதனால் இந்த பணத்தை வாங்கிக் கொண்டு எனக்கு ஒரு ஆட்டை எடுத்துக் கொடு என்று கூறுகிறார்.

அதற்கு மறுபடியும் யூசுஃப் சொன்ன பதில் !

இதிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடுகளில் ஒன்றை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தால் என் முதலாளி பார்க்க மாட்டார் தான் :
ஆனால் என்னைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாளை மறுமை நாளில் நான் அவனிடம் போய் பதில் சொல்ல முடியாது. ஆகவே நான் இவ்வுலகில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. நாளை மறுவுலகில் சொர்க்கத்தில் நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எனவே என்னுடைய இந்த நேர்மையான  சம்பாத்தியம் மட்டுமே எனக்கு போதும். உங்களுடைய பணம் எனக்கு வேண்டாம். நீங்கள் கிளம்புங்கள் என்று கூறுகிறார்

அதைக்கேட்ட அந்த அரபி அசந்துவிட்டார்! பரவாயில்லையேப்பா உன்னிடமிருந்து இப்படியொரு பதிலை நான் எதிர்  பார்க்கவில்லை? இறைவன்  உனக்கு அருள்புரிவானாக என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுகிறார்.

அதேசமயம் அந்த காரில் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த அரபியின் நண்பர் கையில் வைத்திருந்த போனில் ஏதேர்ச்சையாக அங்கு நிற்கும் ஆட்டுக்குட்டிகளை வீடியோ எடுக்கும் போது கேமராவை இந்த சூடானி முகத்திற்கு முன் திருப்பி அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காட்சியையும் சேர்த்து பதிவு செய்து விடுகிறார்.

பிறகு அவர்கள் வீட்டிற்கு சென்றடைந்ததும் அந்த நபர் தன்னுடைய நண்பர்களிடம் நடந்த விசயத்தை சொல்லிக் காட்டி அந்த வீடியோவையும் காட்ட அவர்கள் எனக்கும் இதை அனுப்பி வை என்று கேட்க அந்த சூடானி தன்னுடைய நேர்மையை பறைசாற்றும் விதமாக கையை உயர்த்திக் காட்டி கத்திப் பேசிய அந்த  வசன வீடியோ வாட்ஸ்அப், இன்ஸ்டாக்ராம் மூலமாக சவுதி முழுவதும் காட்டுத் தீ போல பரவுகிறது

இது ஒன்றன்பின் ஒன்றாக கடைசியில் சவுதியின் உள்துறை அமைச்சகம் வரை சென்றடைந்து!

 அவர்கள் இதைப்பார்த்ததும் ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு இந்த வறுமையிலும் இறைவன்  மீது இவ்வளவு பயமா  என்று ஆச்சரியப்பட்டு இவரைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று காவல்துறையை ஏவிவிட்டு ஆளைத் தேடி கண்டுபிடிக்க உத்தரவிடுகின்றனர்

அதன்படியே காவல்துறையும் யூசுஃபை தேடிப்பிடித்து அரசு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது

பின்பு அந்நாட்டு அரசு யூசுஃபை கண்ணியப்படுத்தும் விதமாக இரண்டு லட்சம் ரியால் பரிசுத்தொகையை அறிவித்தது மட்டுமில்லாமல்

இந்நாட்டில் பணிபுரியும் ஒவ்வொரு வேளையாட்களும் நேர்மைக்கு உதாரணமாக யூசுஃபை முன்மாதிரியாக கொண்டு திகழ வேண்டும் என்ற அறிவுரையையும் முன்மொழிந்ததோடு யூசுஃப்பை போன்றதொரு நல்ல மனிதரை எங்களுக்கு பணிக்கு அனுப்பி வைத்த சூடான் அரசுக்கும் எங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்தது.

இதைப் பார்த்து தன் நாட்டு அரசுக்கும் இதை எத்திவைக்க வேண்டும் என்று எத்தனித்த சவுதிக்கான சூடான் நாட்டு தூதர் (Ambassador) அப்துல் ஹாஃபிஸ் என்பவர் சூடானின் மத்திய அரசின் கவனத்துக்கு இந்தச் செய்தியை கொண்டு செல்ல
அவர்களோ யூசுஃப் அங்கே வேலை செய்தது போதும் உடனே அவரை நம்நாட்டுக்கு திரும்பப் பெறுங்கள் என்று . உத்தரவிட்டது

அதன்படியே யூசுஃப் தன் தாய்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் அங்கே அவருக்கு பலத்த மரியாதையுடன் கூடிய வரவேற்போடு மட்டுமில்லாமல் தன்னுடைய பங்குக்கு சூடான் அரசும் சவுதிக்கு சற்றும் குறைவில்லாமல் ஒரு பரிசுத் தொகையும் அறிவித்து பாராட்டியது.

அன்று யூசுஃப் நான் என்னுடைய இறைவனுக்கு  அஞ்சுகிறேன் என்று அடித்துக் கூறியதால் இன்று  அவர் சில கோடிகளுக்கு அதிபதி....

*அல்லாவோ, சிவனோ ஏசுவோ நீங்கள் யாரை  நம்பினாலும் இந்த ஆடு மேய்பவனைப்போல் நேர்மையாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும்!!*

🌹🌹👍👍 *வறுமையிலும் நேர்மை!!* *வறுமையிலும் நேர்மை!!*👍👍🌹🌹
🙏🙏 *உண்மை சம்பவம்*🙏🙏
-----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.10.18

நீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?


நீண்ட காலம் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

✳ இது இறவா நிலை ✳

👴🏾அலெக்ஸாண்டர் ஒரு சமயம் தான் நீண்ட வருடம் வாழ வேண்டும் என்றும், இறக்காமல் இருக்க வழி என்ன என்றும் தேடினார்.

🔱 அப்படி தேடிச் சென்ற போது ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் காட்டில் தவமிருந்த ஒரு முனிவரை சந்தித்தார்.

🐷 முனிவரிடம் விபரத்தை கூறி  மார்க்கம் கேட்டார். முனிவரும், ஒரு குறிப்பிட்ட காட்டிற்கு சென்றால் அங்குள்ள சுனையின் நீரை அருந்தினால் இறவா நிலை அடையலாம் என்றார்.

🏇🏾 அதன் பொருட்டு காத்திருக்காமல் உடனே குதிரையில் வேகமாக முனிவர் சொன்ன காட்டிற்கு சென்றார்.

🏈 அந்த காட்டில் முனிவர் சொன்ன சுனையினை பெரும் கஷ்டத்திற்கு பின்னர் கண்டார்.

🐻 நேரம் இருட்ட தொடங்கியது. சுனையும் தெளிவாக தனது சிறப்பை வெளிகாட்டும் நிலையில் பிரகாசமாக இருந்தது.

🦅 காலம் தாழ்த்தாமல் சுனைநீரை பருக இறங்கினார். சுனையில் ஒரு காகம் இருந்தது. அது அலெக்ஸாண்டரிடம் அவசரப்பட்டு நீரை பருகிவிடாதே என்றது.

🦔 அலெக்ஸாண்டர் கோபமாக ஏன்? என்றார்.

🦅 உடனே காகம்,  நானும் இறவா நிலைக்காக கஷ்டப்பட்டு வந்து இந்த சுனைநீரை பருகினேன்.

🦁 தற்போது நானும் எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டேன். எனக்கு எந்த ஆசையும் கிடையாது. என்னுடன் பழகிய சகாக்கள் எல்லாம் இறந்து விட்டனர்.

🍪 நான் தனி ஆளாகதான் இருக்கிறேன். எனக்கு இந்த வாழ்க்கை போரடித்து விட்டது. அதனால் தற்கொலை செய்து கொள்ள பலமுறை முயன்று தோற்றுபோனதுதான் மிச்சம்.

🦀 நீண்டநாள் உயிர்வாழ்வதே பெரிய நரகமாக உள்ளது. நான் செய்த பேராசைக்கான தண்டனையை அனுபவித்து வருகிறேன். என்நிலை யாருக்கும் வர வேண்டாம் என்பதாலே இங்கு இருந்து உன்னிடம் இதை கூறுகிறேன். இனி உன் விருப்பம் போல் செய் என்றது.

❤ கடவுள் ஜனனம் தந்து, மரணமும் தந்துள்ளான். அவன் வகுத்த பாதை அனைவருக்கும் பொதுவானது. உயிர்  உள்ள வரை உழைத்து ஒழுக்கமான பாதையில் செல்.

🦊 உன் உழைப்பு உனக்கு உயர்வையும் உன்னதத்தையும் தரும். இதை கேட்ட அலெக்ஸாண்டருக்கு நீண்டநாள் உயிர்வாழ வேண்டும் என்ற ஆசை  இல்லாமல் போனது.

☸ ஜனனமும்,  மரணமும் அனைவருக்கும் பொதுவானது.மரணத்தை கண்டு பயம் கொள்ளாமல் எதிர் கொள்வதே
சம நிலை. ✳ அது இறவா நிலை ✳
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.10.18

என்ன சொன்னார் சாக்ரடீஸ்?


என்ன சொன்னார் சாக்ரடீஸ்?

சாக்ரடீஸ் ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.

நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார்.
எதுவும் வாங்கவில்லை.

பின்னர்,

மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார்.

இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் பல கடைகளை சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விடுவார்.

ஏழாம் நாள்...

சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்,

"அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள், கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை! உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ்,

அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே... இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை! 'இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!' என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்...", எனக் கூறினாராம்.

கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!

ஆம், நமது வாழ்க்கைக்கு தேவைப்படாத பொருட்கள் நம்மிடம் இருப்பதை விட இல்லாத போது தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும்...

ஆகவே, ஆடம்பர மோகத்தில் அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது...

நமது நாட்டின், வீட்டின் வளர்ச்சியும் அப்படி தான் இருக்க வேண்டும்...

சிந்திப்போம்...வாழ்க்கையை சீரமைப்போம்...

*வாழ்க நலமுடன்...*
----------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.18

Astrology: ஜோதிடம்: 12-10-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 12-10-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்களுடையது.

பிறப்பு விபரம்: 1-10-1928ம் தேதி மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்தில் பிறந்தவர்!!!!

இந்த வாரம் குறைந்த அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள். 7 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sfpl fab said...
Answar for quiz 12.10.2018
Chinnaiahpillai Ganesan, known by his stage name Sivaji Ganesan, was an Indian actor,
producer and composer. Considered to be one of the greatest actors in Indian cinema, he
was active in Tamil cinema during the latter half of the 20th century. Born: 1 October 1928,

Soorakkottai
Friday, October 12, 2018 10:45:00 AM
--------------------------------------------------------
2
Blogger Mahi said...
Dear sir,
It is Sivaji Ganesan's horoscope. Date of birth 01.10.1928
Friday, October 12, 2018 11:19:00 AM
---------------------------------------------------------
3
Blogger bg said...
Mr. Sivaji Ganeshan born on October 1 1928.
Friday, October 12, 2018 11:33:00 AM
------------------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் நடிகர் திலகம் செவாலியே உயர்திரு சிவாஜி கணேசன் அவர்களுடைய்து.பிறந்ததேதி 1

அக்டோபர் 1928 பிறந்த நேரம் மாலை 4 மணி 33 நிமிடங்கள்.பிறந்த ஊர் விழுப்புரம்.
சுக்கிரன் ஆட்சி பெற்று சுய ச்தானத்தில் அமர்ந்து, குரு சந்திரன் பார்வை பெற்ற்து கலைஉலகில் பிரகாசிக்க வைத்தது.
Friday, October 12, 2018 1:21:00 PM
--------------------------------------------------------
5
Blogger ARAVINDHARAJ said...
Name:Sivaji Ganesan
Date of Birth:01-Oct-1928
Place of Birth:Viluppuram, Tamil Nadu
Profession: Actor.
Friday, October 12, 2018 2:04:00 PM
---------------------------------------------------
6
Blogger thozhar pandian said...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்
Friday, October 12, 2018 11:18:00 PM
-------------------------------------------------
7
Blogger Rajam Anand said...
Dear sir
The answer to the quiz is Sivji Ganesan who was born on October 1st 1928 in Thanjavur
india.
Kind regards
Rajam Anand
Saturday, October 13, 2018 1:45:00 AM
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.10.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 12-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  12-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? திரையுலகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.10.18

முதுமையும் தனிமையும் எல்லோருக்கும் உண்டு!!!


முதுமையும் தனிமையும் எல்லோருக்கும் உண்டு!!!

*முதுமை + தனிமை =*   *கொடுமை*

*பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!*
*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...*

*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*

*இங்குதான் என் மகள் படிப்பாள்...*

*இங்குதான் விளையாடுவாள்...*

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*

*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*

*என்ன சமைப்பது?...*

*என்ன சாப்பிடுவது?...*

*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*

*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*

*தனிமை... வெறுமை...*

*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*

*பயணம் ஒரு கொடுமை...*

*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...*

*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*

*ஓலாவும், ஊபரும்...*நமக்கு தேவைப்படும் நேரத்தில், *பீக் hour சார்ஜ்*போட்டு களைப்படைய செய்கின்றனர்...

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*

*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*

*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

இவை வேண்டாமென ஒதுங்கி...

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*

*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...* என்றால்...

அந்த நேரம் அவர்கள்...

*ஏதோ ஒரு மாலில்...*

*ஏதோ ஒரு ஓட்டலில்...*

*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*

*பிசியாக இருப்பார்கள்...*

*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...*

*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*

*நாலு நாள் கழித்து...*

*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...*

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

*அவர்கள் டைமிற்கு...*

*நம் தூக்க நேரம்...*

*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*

*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.*

*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*

*அவன் வெளியே விளையாடறான்...*

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*

*அவன் டியூஷன் போயிருக்கான்...*

*யோகா போயிருக்கான்...*

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*

*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*

*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*

*ஓடி விடும்...*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...*

*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*

*இந்த அரசியல்களும்...*

*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...*

*என் சொந்த வீடே... எனக்கு அனாதை  இல்லமாகிப் போனது...*

*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!*

*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*

*"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*

( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

*"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."*
( மனதுக்குள் *ஏதோ...*) *வாழ்கிறேன்!*

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*
----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.10.18

எதற்காக ஒரு குழந்தையை மட்டும் பறிகொடுக்கத் துணிந்தாள் அவள்?


எதற்காக ஒரு குழந்தையை மட்டும் பறிகொடுக்கத் துணிந்தாள் அவள்?

'டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.
கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன் பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார்.

அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.

அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள்.

ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று.

அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்... 'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள்.

நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!''
---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.10.18

உறவுகள் இல்லா உலகம்!!!!


உறவுகள் இல்லா உலகம்!!!!

👉 *உறவு முறைகள்* *பற்றி* 👈 *மிகவும் சிந்திக்கவேண்டிய* *one of the BEST பதிவு*
~~~~~~~~~~~~~~~~~~~

*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,* *பெரியப்பா பையன்,* *பெரியப்பா பொண்ணு,* *அத்தை பையன்,* *அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,* *மாமன் பையன்,*

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் *2050* மேல் யாருடைய காதிலும் விழாது,

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள்,

அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.

👉 *காரணம், . . .*

 *ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு* என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை,

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.

👉 *இனி யார் போவார்?*

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி  ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும் தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.

அப்பா, அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .

வயதான காலத்தில் அப்பா, அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

*ஆனால், உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்துவிடக்கூடது!*

கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன் ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், *வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . . .* 😳👇😟 *ஓடி ஓடி  சம்பாதிக்கிறீர்கள்?  *உறவுகளை போற்றுங்கள்! உறவுகளை சம்பாதியுங்கள்!!! விட்டுக் கொடுப்போர் கெட்டுப்போவதில்லை!!
----------------------------------------------------------
படித்து அதிர்ந்தது, பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.10.18

இனிப்பான செய்தி!!!!


இனிப்பான செய்தி!!!!

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி.

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க  படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல்  சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளைs சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

This is true .. Can we  avoid

நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம் பணத்திற்காக நம் பாமர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.......!

(முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள்..
------------------------------------------------
படித்து அதிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.10.18

நீங்களும் நானும் குரு பெயர்ச்சியும்!!!


நீங்களும் நானும் குரு பெயர்ச்சியும்!!!

குரு பெயர்ச்சியைக் கண்டு ஆனந்தமா அல்லது அயர்ச்சியா ?

இரண்டுமே வேண்டாம்.

குரு பகவான் நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் அனைவருக்குமே ஆனந்தம் தரக்கூடியவர்.

ஆனால் பெயர்ச்சிக்குப் பலன் எழுதுகிறவர்கள், அவரால் அதிகம் பயன் பெறப்போகிற ஐந்து நாசிக்காரகள் என்று ஐந்து ராசிகளை
மட்டும் குறிப்பிட்டு ஓஹோ என்று எழுதிவிட்டு மற்ற ராசிக்காரர்களுக்கு வயிற்றில் புளியைக் கறைக்கிறார்கள்.

குரு பகவான் வந்தமரும் ராசிக்கு நன்மைகளைச் செய்வதைப்போலவே, இருக்கும் ராசியில் இருந்து பார்க்கும் ராசிகளுக்கும் நன்மைகளைச் செய்வார். தன்னுடைய
5, 7 மற்றும் 9 பார்வையால் பல நன்மைகளைச் செய்வார்.

அதனால் ராசியில் 6, 8, 12ம் இடங்களில் அவர் அமர நேர்ந்தாலும், தன்னுடைய பார்வையால் அந்த ராசிக்காரர்களுக்கும் அனேக நன்மைகளைச் செய்வார்.

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும்.

திருமணத்தை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். வேலை கிடைக்காதவர்களுக்கு
வேலை கிடைக்கும். பதவி உயர்வை எதிர் பார்த்து இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணம் தேவைப்படுபவர்களுக்கு பணம் கிடைக்கும்.

ஆகவே யாருமே அயர்ச்சி அடைய வேண்டாம்.

நான் பெயர்ச்சிகளுக்கெல்லாம் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நடக்கின்ற மகா திசைகளும் உப திசைகளும்தான் (அவற்றின் நாயகர்களும்தான்)
ஜாதகர்களுக்கு பலனை வழங்குவர்கள் என்பதுதான் கண்ட உண்மை!

ஆகவே ஆனந்தமாக இருங்கள்!

குரு பகவான், வாக்கியப்பஞ்சாங்கப்படி,  இன்று இரவு துலாம் ராசியில் இருந்து பெயர்ச்சியாகி விருச்சிக ராசிக்கு வருகின்றார்.

இன்னும் ஒரு ஆண்டிற்கு இங்கேதான் இருப்பார். அவர் வரவு நல் வரவாகட்டும்.

சில வகுப்பறைக் கண்மணிகள் “அதை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் பெயர்ச்சியால் ஏற்படும்
நன்மை தீமைக்ளை மட்டும் சொல்லுங்கள்” என்பது என் காதில் விழுகிறது. அவர்களுக்காக அதை விரிவாக எழுதி வைத்திருக்கிறேன்.

தேவைப் படுபவர்கள் எழுதுங்கள் உங்களுக்கு PDF  கோப்பாக அதை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் எனக்கு எழுத வேண்டிய

முகவரி classroom2007@gmail.com ........Subject Boxல் மறைக்காமல் குரு பெயர்ச்சி 2018 என்று குறிப்பிடுங்கள்.
எத்தனை பேர்கள் அதில் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் இந்த ஏற்பாடு!!!!

அன்புடன்
வாத்தியார்
4-10-2018
8:00 PM
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.10.18

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை வழங்கியவர் கவியரசர் கண்ணதாசன்!!!!


நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை  வழங்கியவர் கவியரசர் கண்ணதாசன்!!!!

நமது தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு பாடல்கள் புனைந்தவர் கவியரசர், 
கண்ணதாசன் ஆவார்

அரசியல் சூழ்நிலையால் மத்திய அமைச்சர் பதவியை இழந்து சென்னை வந்துசேர்ந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியைத் தேற்றிய பாடல் கண்ணதாசனின், "போனால் போகட்டும் போடா".

மனம் வெறுத்துப்போய் ஊருக்குத் திரும்ப முடிவுசெய்த கவிஞர் வாலியை மீண்டும் கோடம்பாக்கம் வரச்செய்த கவியரசரின் பாடல்,
"மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா? உனக்கும் கீழே உள்ளவர் கோடி நனைத்துப் பார்த்து நிம்மதி நாடு".

கம்பரின் வரிகளை எடுத்தாண்ட பாடல், "தோள் கண்டேன் தோளே கண்டேன்".

பட்டினத்தாரின் பாடலான, "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்ற வரிகளின் சாரத்தை எளிதாக்கி, "வீடுவரை உறவு வீதிவரை
மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ" என்று பட்டிக்காட்டுப் பாமரனுக்கும் உலகியல் நடைமுறைத் தத்துவத்தைப் பிழிந்து வழங்கினார் கண்ணதாசன்.

"அண்ணன் என்னடா தம்பியென்னடா அவசரமான உலகத்திலே", தமது அண்ணன் பொருளுதவி  செய்ய மறுத்தபோது வந்த
பாடல்.

இசையமைப்பாளர் விஸ்வநாதனும் கண்ணதாசனும் விழியும் இமையும்போல, கண்ணும் கருத்தும்போல, உடலும் உயிரும்போல
பரஸ்பரம் வாழ்ந்தனர் என்றால் மிகையாகாது. அந்த விஸ்வநாதன் பிறந்தநாளும் கவியரசரின் பிறந்தநாளும் ஒன்றே! 24-06-1928.

என்னே இயற்கையின் விந்தை!

விஸ்வநாதன் கவிஞரைச் சாடியது வேறொருவர் மூலம் கேள்விப்பட்டு ஆவேசத்தில் உதித்த பாடல், "சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே".

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை", என்று தான் இறப்பதற்கு ஏறத்தாழ இருபது
ஆண்டுகளுக்கு முன்பே எழுதிப் பாடி நடித்த சுயஆசிகவி கண்ணதாசன் என்றும் அமரத்துவம் பெற்று தமிழ் உள்ளவரை வாழுவார் என்பதில் ஐயம் சிறிதுமில்லை!

காமராசருக்குத் தூது: அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி". பாடலைக்கேட்ட
பெருந்தலைவர் கண்ணதாசனை நேரில் வந்து சந்திக்குமாறு சொன்னது வரலாறு.

பாரதப் பிரதமர் நேரு மறைந்தபோது, "சாவே உனக்கொருநாள் சாவுவந்து சேராதா", என்று உலகையே அழவைத்தார் மனிதநேயக்
கவிஞர்.

பகுத்தறிவு இயக்கம் என்று  சொல்லிக்கொண்டு  இருந்த கூடாரத்தில் இருந்து வெளியேறிக் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர
சரஸ்வதி மகாசந்நிதானம் அவர்களை வணங்கியபோது பெரியவர், "இப்படியே சினிமாவுக்கே எழுதாதே கண்ணதாசா. உன்
மதப்பெருமையை உலகறிய உனது ஆற்றுப்பிரவாக் கவிதைநடை உதவட்டும்", என்று பணித்தார். அந்த விதையே "அர்த்தமுள்ள
இந்து மதம்" என்ற பத்து விழுதுகள் கொண்ட ஆலமரமாக விளைந்தது.

தனது மதத்தையும் தாண்டி இயேசு காவியம் இயற்றிய உண்மையான மதச் சார்பற்ற பெரியமனிதன் மகாகவிஞர் கண்ணதாசன் 

பாவமன்னிப்பு படத்தில் வரும் ரஹீம் என்ற இஸ்லாமியர் வேடத்தில் சிவாஜி பாடிய பாடல், "எல்லோரும் கொண்டாடுவோம்.
அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வையெண்ணி" என்ற பாடலில் வரிக்கு வரி பிரணவ மந்திரமான "ஓம்.....ஓம்",
என்ற சொல்லில் முடியுமாறு எழுதிய மதஒற்றுமையுணர்வு இன்று நினைத்தாலும் புல்லரிக்கின்றது.

இப்படி காலம், மதம், போன்ற இன்னும் என்னென்ன பரிமாணங்கள் உண்டோ அத்தனை இடங்களிலும் நிறைந்து அழியாது
நிலைத்து நிற்கும் கவியரசர் புகழ் என்றும் மாறா இளமையுடனும் புதுமையுடனும் என்றும் விளங்கும். இன்று கவியரசரின் அத்தனை இயல்களும் ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக் களமாக உள்ளது.

வாழ்க வளர்க கவியரசர் புகழ்.

வாழ்க வளர்க மெல்லிசை மன்னர் புகழ்.
-------------------------------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.10.18

எது மாயை? எது நிஜம்?


எது மாயை? எது நிஜம்?

ஹலோ நீங்க என்னிக்கு வந்தீங்க ? ஜெட்லேக் எல்லாம் போயிடுத்தா?
போன வாரம்  வந்தேம்ப்பா. எனக்கெல்லாம் ஜெட்டும் கிடையாது லேக்கும் கிடையாது, மறுநாளே வாக்கிங் 
ஆரம்பிச்சிட்டேன். உங்க பக்கத்து வீட்டு சீனு வந்தாச்சா?.

அடடே சீனு, உன்னை தாம்ப்பா  விசாரிச்சுண்டு இருந்தேன், நீ எப்ப வந்தே?

நான் நேத்திக்கு விடிய காலம்பற வந்தேன். பிரிட்டிஷ்  ஏர்வேஸ், லண்டன்ல நாலுமணி நேரம் ஸ்டாப் ஓவர்..

நான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல வந்தேன்..

என்ன  அங்கிள் எப்படி இருந்துச்சு உங்க முதல்  யு எஸ் ட்ரிப்?

ஊருக்கு என்னப்பா குறைச்சல். ரோடெல்லாம்  இழைச்சுருக்கான். எல்லா இடத்துக்கும் பொண்ணோ, மாப்பிள்ளையோ கூட்டிண்டு  போயிடறா..  கௌசல்யா, எவ்வளவு ஜோரா கார் ஓட்டறா தெரியுமோ? அவ ஒரு டொயோட்டா வேன் வச்சுருக்கா, 
மாப்பிள்ளை பி எம் டபுள்யூ எடுத்துண்டு போயிடுவார்.. சைல்ட் கேர்லெந்து பேரன் நாலு மணிக்கு  வந்துருவான், அப்புறம் அவனை பாத்துக்கறது தான் வேலை. ஷாப்பிங் காஸ்ட்கோ போவோம் வால்நட்,  திராட்சை, முந்திரி எல்லாம் கடையில சாம்பிள் காசே கொடுக்காம எடுத்து சாப்பிடலாம், யாரும்  ஒண்ணும் சொல்லமாட்டான். ஒரு சட்டை வாங்கினேன்னு வச்சுக்கோ ஒரு மாசம் போட்டுண்டு திருப்பி கொடுத்தாக் கூட கடைக்காரன் வாங்கிப்பான்.. நம்மூர் மாதிரி பொல்லாத்தனமும் போக்கிரித்தனமும்  கிடையாது, பீப்பிள் ட்ரஸ்ட் பீப்பிள்.. இங்க பண்ணுவானா, பென்ஷன் வாங்கறதுக்கு வருஷா வருஷம்  நான் உயிரோடுதான் இருக்கேன்னு நேர்ல  போய் சொல்லிட்டு வரணும்.. என்ன சிஸ்டமோ.. நம்மூர்  மாதிரி ஒவ்வொண்ணுலயும் கரப்ஷன் இல்லை, அதான் பொங்கி பொழிஞ்சிண்டு ஓஹோன்னு  இருக்கான்.         

சீனு நியூ ஜெர்சி எப்படி இருந்தது ? ஜெர்சி கவுஸ் நிறையா பாத்தேளா?

நான் கிளம்பும்போதே நல்ல குளிர் வந்துடுத்து..  நிறைய குஜராத்திஸ் தான். மெட்றாஸ்ல என்ன  கிடைக்கறதோ, அத்தனையும் 'படேல்ஸ்'ல வாங்கிடலாம். இந்த வருஷம் கொலுப்படியே வந்துடுத்தே..  நியூ யார்க் டைம்ஸ் ஸ்குயர் பார்த்துண்டே இருக்கலாம்.. அந்த நியூ யார்க் சென்ட்ரல் இருக்கு பார் ,  எவ்வளவு பெரிசுப்பா, பிரமிப்பு தான். நான் எல்லாத்துக்கும் என் பொண்ணு மாப்பிள்ளையை எதிர்பார்க்க  மாட்டேன், பஸ்ஸ பிடிப்பேன் மெட்ரோபார்க் வந்து ட்ரைன் பிடிச்சு எல்லா இடத்துக்கும் போயிட்டு  வந்துருவேன்..சனி, ஞாயிறு பொண்ணும், மாப்பிள்ளையும் எங்க கூட்டிண்டு போறாளோ போவோம். கனடா போயி நயாகரா பாத்தோம், அப்பப்பா.. பிரிட்ஜ் வாட்டர் கோயில் பார்க்கணுமே, பிட்ஸ்பர்க்ல  பெருமாள் கோவில் அப்படியே திருப்பதிதான், எல்லாருக்கும் ஃபர்ஸ்ட்  க்ளாஸ் சாப்பாடு ஃப்ரீ. கல்ச்சர்னா  அங்க தான். இங்கயும் இருக்காளே!!   என் பேத்தி எப்படி பாடறா தெரியுமோ. பியானோ வேற  வாசிக்கறா.தியாகராஜ  உத்சவம் பிரமாதமா நடத்தறா.. உன் பொண்ணும் கத்துண்டு இருந்தாளே,  வர்ணம் வந்துட்டாளா?

இல்லை அங்கிள் , கீதம் தான் வந்திருக்கா..
 
இன்னும் அவன்ட்ட தான் போறாளா ? அந்த மனுஷன் படு ஓ.பி ஆச்சே... அமெரிக்காவுல ரொம்ப சின்ஸியர்ப்பா இருபது டாலரை 
வாங்கிண்டாலும், சிரத்தையா சொல்லி கொடுக்கறா. சாஸ்திரிகள் கூட கிரஹப்பிரவேசம் எவ்வளவு  ஸ்ரத்தையா பண்ணி வைக்கிறாங்கற.. இங்க மாதிரியா, மஹாளய பக்ஷத்துக்கு ஐநூறு வாங்கிண்டு பாதி  நேரம் போன் பேசிண்டே இருக்கா?..

சீனு, உங்க பொண்ணு வாங்கியிருக்கிறது சிங்கிள் ஃபேமிலியா?

இல்ல சார், ரோ ஹவுஸ் தான்..

கௌசல்யாவுது சிங்கிள் ஃபேமிலி.. என் மாப்பிள்ளை ஐ ஐ டி தெரியுமோல்யோ ?. அங்க போய் வேற யேல் யூனிவர்சிட்டில மேல படிச்சார்..

ஆமாம், முன்னமே  சொல்லியிருக்கேள்.     

உங்க போன் தான் அடிக்கறதுன்னு நினைக்கிறேன்..

அட ஆமாம்..  கொஞ்சம்  இருங்கோ வந்துடறேன்..

(அவர் வீட்டு மாப்பிள்ளை வெறும் பி காம் தான், கம்ப்யூட்டர் டிப்ளமா அது  இதுன்னு படிச்சு அங்கே போய் செட்டில் ஆயிட்டார்..எங்காத்து மாப்பிள்ளைக்கு ஒரு கோடிக்கும் மேலே 
சம்பளம்..நம்மூர் ரூபாயில் சொன்னேன். மெரிட்டுக்கு அந்த ஊர்ல மதிப்பு கொடுக்கறாம்ப்பா,) 

ஐந்து  வருடம் கழித்து
----------------------------------
என்ன அங்கிள் திருச்சிக்கு போற மாதிரி பொசுக்கு  பொசுக்குன்னு அமேரிக்கா போயிட்டு வந்திட்டு இருக்கீங்களே, எப்படி இருந்தது ட்ரிப்பு ?

ஊர்  நல்லாத்தான் இருக்கு. இருபது மணி நேரம் பிளேன் பிரயாணம் உட்கார முடியலப்பா. கால் முழுக்க வீங்கிடுத்து.. அவா இரண்டு பேரும் ஆபீசுக்கு போயிடறாளா. வீட்டுக்குள்ள ஜெயில் தான்.. என்  மூஞ்சியை இவ பாத்துண்டு அவ மூஞ்சிய நான் பார்த்துண்டு எவ்வளவு நேரம் தான் சன் டி வியை பாத்துண்டு இருக்கறது?  திருப்பி திருப்பி அதே மால், திருப்பி அதே குப்பைகளை வாங்கிண்டு பேஸ்மெண்ட் கராஜுல எல்லா குப்பையையும் பிரிச்சு. போட்டுண்டு .ஆச்சுடியம்மா  நான்  சொல்லிடப்போறேன்..  உன்  குழந்தையை ஓரளவு பார்த்துண்டாச்சு .

எட்டு வருடம் கழித்து
--------------------------------
மறுபடியும் மறுபடியும் வான்னா பக்கத்துலயா இருக்கு.. அவங்களை வேணா  இந்தியாவுக்கு வர சொல்லுங்கோ. திருப்பி திருப்பி அதே வால்மார்ட்டும், காஸ்ட்கோவும், காருக்குள்ளயும், வீட்டுக்குள்ளயும்  அடைஞ்சு கிடந்தது, குளிரோடையும் ஐஸோடையும் ஷூவை  போட்டுண்டு போராடி போறும்ப்பா..என்னால வர முடியாது. கஷ்டமோ கிஷ்டமோ ஒரு வத்த குழம்போ, மிளகுரஸமோ நம்மால  முடிஞ்சதை சமைச்சு அக்கம் பக்கம் நாலு பேரிடம் பேசிண்டு , கோயிலுக்கு  காலாற நடந்து போயிட்டு வந்தா தான் எனக்கு நிம்மதி. அரசியலோ, கரப்ஷனோ, கரெண்ட் கட்டோ  என்னவேணா இருந்துட்டு போகட்டும். எங்க இருந்தாலும் நல்லா இருங்க சாமிகளா!!

நன்றி: ஆர்  ஸ்வாமிநாதன்
---------------------------------------
படித்ததில் உணர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.10.18

தாமிரபரணி புஷ்கர் விழா!


தாமிரபரணி புஷ்கர் விழா!

சிருங்கேரி ஆச்சார்யர்கள் மஹா தாமிரபரணி புஷ்கர் விழாவிற்காக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும்  அனைத்து படித்துறைகளையும் பல கோடி ரூபாய் செலவு செய்து மிக பிரமாண்டமாக ஏற்பாட்டை இரவு  பகலாக ஆச்சார்யாள் தலைமையில் ஒரு குழு அசுர வேகத்தில் வேளைகளில் செய்து கொண்டு  இருக்கிறார்கள்.

அனைத்து படித்துறைகளையும் சுத்தம் செய்து பக்தர்கள்
ஸ்நானம் செய்து விட்டு போக  மிக சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் பல இடங்களில் அன்னதானம், வஸ்திர விநியோகம்,
சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு என களைகட்ட ஆரம்பித்து விட்டது
என்றே சொல்ல  வேண்டும்.

அவ்வளவு சிறப்பாக கடந்த ஐந்து, ஆறுமாதமாக சிறப்பாக
தங்களது பணிகளை  செய்கிறார்கள். எங்கு பார்த்தாலும் அலங்காரம், இரண்டு பெரியவர்களின் புகைப்பட பேனர்கள்
என்று  பட்டையை கிளப்பறார்கள் சிருங்கேரி பெராயவர்களின் பக்தர்கள் மிகவும் அருமையான ஏற்பாட்டை  செய்து வருகிறார்கள்.

இப்போது பார்பதற்கே கண் கொள்ளா காட்சியாக இருக்கிறதென்றால் விழா நெருங்க நெருங்க இன்னும்
பிரமிப்பாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இவை  அனைத்தும் சிருங்கேரி பெராயவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம்  இப்படி இருக்க
மறுபுறம் நாம் யோசிக்க வேண்டி உள்ளது. இந்த புஷ்கரத்தில்
நாம் இதுவரை என்ன செய்தோம்? இனி என்ன செய்ய
போகிறோம்?  என்று தெரியவில்லை.

கர்நாடகாவில் இருந்து சிருங்கேரி  பெரியவர்கள் மற்றும் அவாளோட பக்தர்கள் நம் தமிழ் நாட்டில் நடக்கும் இந்த தாமிரபரணி புஷ்கரில்  இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு
செய்கிறார்கள் நாம் கைகட்டி கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு  இருக்கிறோம்.

வெட்கமும், வேதனையையும் பட வேண்டும்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்  மஹா தாமிரபரணி
புஷ்கர் அழைப்பிதழ். அனைவரும் இந்த ஆண்டு அக்டோபர்
பதினொன்றாம் தேதி  முதல் இருபத்தி மூன்றாம் வேதி வரை திருநெல்வேலி மாவட்டத்தில் மஹா புஷ்கர விழாவில் கலந்து 
கொள்வோம்.

இந்த தாமிரபரணி புஷ்கரில் ஏராளமான சாதுக்கள்,
ஆச்சார்யர்கள், மஹான்கள், துறவிகள், ஆதீன மடாதிபதிகள் போன்ற ஏராளமானவர்கள் ஸ்நானம் செய்ய உள்ளனர். இதில் நாமும் கலந்து  கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு புனித
நீராடி நம் பாபங்களை போக்கி புண்ணியத்தை அடைய  தாமிரபரணியில் ஸ்நானம் செய்ய வாரீர்! வாரீர்!! வாரீர்!!!
-----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.10.18

ஆலயம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்!!!


ஆலயம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்!!!

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.
-------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.9.18

Astrology: ஜோதிடம்: 28-9-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 28-9-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவரான  G.K. வாசன் அவர்களுடைய ஜாதகம்.  2002 - 2014ம் ஆண்டுகளில்
மத்திய அரசில் அமைச்சராகப் பணி புரிந்தவர். பிறப்பு விபரம்:
28-12-1964ம் தேதி பகல் 12:10 மணிக்கு கும்பகோணத்திற்கு
அருகில் உள்ள சுந்தரபெருமாள் கோவில் என்ற சிற்றூரில் பிறந்தவர்!!!!

இந்த வாரம் குறைந்த அன்பர்களே கலந்து கொண்டுள்ளார்கள். 12 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே
கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was President of Tamil Maanila Congress Thiru GK Vasan born on 28/12/1964time

12.10pm at Sundaraperumalkovil Meena lagnam thulam rasi 10th house sun with the aspect of lagna lord Jupiter

makes him political
Friday, September 28, 2018 4:54:00 AM
-------------------------------------------------------------
2
Blogger angr said...
முன்னாள் காங்கிரஸ் தலைவர் Gk.மூப்பனார் அவர்களின் மகனும்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவருமாகிய திரு.G.K.வாசன் அவர்கள் ஜாதகம்.
Friday, September 28, 2018 5:38:00 AM
-------------------------------------------------------
3
Blogger sfpl fab said...
Answer for quiz 28.09.2018
G. K. Vasan, (born December 28, 1964) is a member of the Indian National Congress based in Tamil Nadu, India. He

was educated at the Madras Christian College Higher Secondary School and was later graduated from the New

College. He is the son of a veteran Congress leader,
G. K. Moopanar, who later formed his own political party, the Tamil Maanila Congress. The TMC elected Vasan as

its leader
Date of Birth: 28-Dec-1964
Place of Birth: Tamil Nadu, India
Profession: Politician
Nationality: India
Friday, September 28, 2018 11:12:00 AM
-----------------------------------------------
4
Blogger Mahi said...
Dear sir,
It is G.K.Vasan's horoscope. Date of birth 28.12.1964.
Friday, September 28, 2018 11:16:00 AM
-----------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் திரு ஜி கே வாசன் அவர்களுடையது. பிறந்த தேதி 28 டிசம்பர் 1964. பிற்ந்த நேரம் நண்பகல் கடந்து 7 நிமிடம் 30

வினாடி. பிற்ந்த இடம் கும்பகோண‌ம் என்று எடுத்துக் கொண்டேன்,
குருவின் பார்வை சந்திரன் ,செவ்வாய் மற்றும் சூரியனுக்குக் கிடைத்ததால் அரசாங்க அதிகாரம் கிடைத்தது. லக்கினாதிபதி, 10ம்

அதிபதியான குரு 2ம் இடத்தில் நின்றது வாக்கு, தனம் ஆகிய அனைத்தும் சிறப்புறச் செய்தது.
Friday, September 28, 2018 11:36:00 AM
---------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் ஜி கே வாசன் அவர்கள்
DOB: 28-12-1964
TIME: 12 A.M
PLACE :SUNDHARAPERUMAL KOIL,TANJORE DISTRICT
நன்றி
Friday, September 28, 2018 12:11:00 PM
--------------------------------------------------
7
Blogger glowingguys said...
Good Morning Sir,
Date of Birth : 28th Dec 1964
Person: G K Vasan
Friday, September 28, 2018 12:49:00 PM
--------------------------------------------------------
8
Blogger bg said...
Mr. G K Vasan son of G K Mooppanar born on Dec 28 1964 at Sundaraperumal koil Thanjavur district.
Friday, September 28, 2018 12:59:00 PM
-------------------------------------------------------
9
Blogger ARAVINDHARAJ said...
Name:G. K. Vasan
Date of Birth:28-Dec-1964
Place of Birth:Tamil Nadu, India
Profession: Politician
Friday, September 28, 2018 1:03:00 PM
----------------------------------------------------
10
Blogger thozhar pandian said...
கருப்பையா மூப்பனார் அவர்களின் மகனான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள். பிறந்தது டிசம்பர் 28 1964
Friday, September 28, 2018 9:38:00 PM
--------------------------------------------------------
11
Blogger RAMVIDVISHAL said...
G.K. VASAN
28/12/1964
Friday, September 28, 2018 11:47:00 PM
-----------------------------------------------------------
12
Blogger RAMVIDVISHAL said...
December 28 1964
G K VASAN
Friday, September 28, 2018 11:48:00 PM
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.9.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 28-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  28-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா? பெரிய தலைவரின் மகன். இவரும் தலைவர்தான்’ அரசியல்வாதி. அகில இந்தியப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.18

உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!

வாரியார் விளக்கமாகக் கூறியது!

*வாரியார் சுவாமிகள் கூறிய அறிவுரையில் இருந்து*
👉 *உன் வாழ்க்கையை நீ வாழ்*🙏

*எறும்பு* - பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ *ஆசைப்படவில்லை.*

*நாய்* - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட *பொறாமைப் படவில்லை.*

*யானை* - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு *ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.*

*காகம்* - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட *ஏங்கவில்லை.*

🔴 *அதனதன் வாழ்க்கையை  அது வாழ்கின்றது!!!*

*நீ மட்டும் ஏன்* பொறாமைப் படுகிறாய்.....???

*நீ ஏன்* அடுத்தவரைப் பார்க்கிறாய்.....???

*நீ மட்டும் ஏன்* புலம்புகிறாய்......???

*நீ ஏன்* வருந்துகிறாய்......???

*நீ ஏன்* ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......???

*உன் வாழ்க்கை விசேஷமானது......!!!*

நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க *முடியாது.....!!!*

நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட *முடியாது......!!!*

நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ *முடியாது....!!!*

ஆகாயம் போல் பூமி *இல்லை.....!!!*

பூமி போல் காற்று *இல்லை .....!!!*

காற்று போல் தீ *இல்லை...!!!*

தீயைப் போல் தண்ணீர் *இல்லை.......!!!*

ஆலமரம் போல் பப்பாளி மரம் *இல்லை.....!!!*

பல்லி போல் புலி *இல்லை......!!!*

தங்கம் போல் தகரம் *இல்லை......!!!*

பலாப் பழம் போல் வாழைப் பழம் *இல்லை......!!!*

கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் *இல்லை......!!!*

துணி போல் கருங்கல் *இல்லை.....!!!*

சிற்பம் போல் சாதாரண கருங்கல் *இல்லை.....!!!*

நாற்காலி போல் கட்டில் *இல்லை.....!!!*

ஒரு மரத்தின் பழங்களிலேயே ஒன்று போல் மற்றொன்று *இல்லை.....!!!*

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே ஒருவர் போல் மற்றொருவர் *இல்லை......!!!*

ஆண் உடல் போல் பெண்ணுடல் *இல்லை.....!!!*

நேற்று போல் இன்று *இல்லை.....!!!*

இன்று போல் நாளை *இல்லை......!!!*

போன நிமிடம் போல் இந்த நிமிடம் *இல்லை.....!!!*

இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் *இல்லை.....!!!*

ஒன்றுபோல் மற்றொன்று *இல்லை.......!!!*

*இத்தனை ஏன் ....*❓

உன் தலைவலி போல் பல்வலி *இல்லை......!!!*

உன்னுடைய கண் போல் காது *இல்லை.....!!!*

*இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!*

அதனால் நீ *தனி* தான்.....!!!

உன் கைரேகை *தனி* தான்......!!!

உன் பசி *தனி* தான்......!!!

உன் தேவை *தனி* தான்.....!!!

உன் பலம் *தனி* தான்.....!!!

உன் பலவீனம் *தனி* தான்......!!!

உன் பிரச்சனை *தனி* தான்......!!!

உனக்குரிய தீர்வும் *தனி* தான்.....!!!

உன் சிந்தனை *தனி* தான்.....!!!

உன் மனது *தனி* தான்.....!!!

உன் எதிர்பார்ப்பு *தனி* தான்......!!!

உன் அனுபவம் *தனி* தான்.....!!!

உன் பயம் *தனி* தான்.....!!!

உன் நம்பிக்கை *தனி* தான்.....!!!

உன் தூக்கம் *தனி* தான்......!!!

உன் மூச்சுக்காற்று *தனி* தான்......!!!

உன் ப்ராரப்தம் *தனி* தான்.....!!!

உன் வலி *தனி* தான்.....!!!

உன் தேடல் *தனி* தான்.....!!!

உன் கேள்வி *தனி* தான்.....!!!

உன் பதில் *தனி* தான்.....!!!

உன் வாழ்க்கைப் பாடம் *தனி* தான்......!!!

உன் வாழ்க்கை *தனி* தான்......!!!
              👌👇👌

உன் வாழ்க்கை *அதிசயமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *ஆச்சரியமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *அபூர்வமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *அர்த்தமுள்ளது தான்.....!!!*

உன் வாழ்க்கை *உத்தமமானது தான்.....!!!*

              👌👍👌

*அதனால்.....*

*இன்றிலிருந்து......*

*இப்பொழுதிலிருந்து.....*

*உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!*

*வாழ்வின் ரசனை தெரியும்.......!!!*

*வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!*

*இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!*

*உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!*

*உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!*

*உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!* 🙏
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.9.18

காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்?


காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்?

நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி
பார்த்துக்கொள்வாள் என்பார்கள்.
நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை.
அதற்காகத்தான் இந்தப் பதிவு.
காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.
சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...

வாழைக்காய்..
...........................
முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.
வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.
வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும்
பழுக்காமலும் இருக்கும்.

உருளைக்கிழங்கு..
.................................
செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும்
இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.
பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை
கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.

முள்ளங்கி..
.....................
முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து
வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும்.
சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது.
சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.

முருங்கைக்காய்..
..............................
முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்லை) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது.
இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும்.
கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள்.
அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம்.
காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.


தக்காளி...
....................
தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று
அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.
உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும்.
பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில்
சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.

பீன்ஸ்...
............
பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான்
நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும்.
நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள்
புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும்.
இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும்.
இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.

அவரைக்காய்...
............................
அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான்.
மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.

கத்தரிக்காய்...
..........................
கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும்.
காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி
குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது.
பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும்.
காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.

வெண்டைக்காய்...
.................................
வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம்.
ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும்.
அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல்.
காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.

வெங்காயம்...
.........................
வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது.
பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது.
வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத்
தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

முட்டைக்கோஸ்...
..................................
இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய்
உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து
பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.


பீர்க்கங்காய்...
...........................
பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து
வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும்.
சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.
பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு...
.............................
சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே
நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும்.
உள்ளே வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.
ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.

புடலங்காய்...
........................
புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய்...
..................................
பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது.

எலுமிச்சம் பழம்..
...............................
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது.
காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.

கொத்துமல்லி, கருவேப்பிலை..
..........................................................
கடைசியாக இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி. கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும்
பார்த்துவாங்க வேண்டும். கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம்
இருப்பதில்லை.

--------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.18

பூலோக கைலாயம் எது தெரியுமா?


பூலோக கைலாயம் எது தெரியுமா?

கண்டேன், கண்டறியாதன கண்டேன்!

திருக்கைலாயத்தை தேடிச்சென்ற  திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு  தலத்தை
அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுகிறார்:

இதோ, வீதியில் செல்லும் அவர்கள் அழகான பிறைமதியை தன் தலையணியாக அணிந்த சிவபெருமான் மற்றும் உமாதேவியை
பாடிச் செல்கிறார்கள். அவர்கள் புதியதாக பறிக்கப்பட்ட பூவோடு நீரையும் எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும்
போகிறார்கள்.

அவர்கள் பின்னாலேயே போனால் நானும் கோயிலைச் சென்றடைவேனே.

கால்கள் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு தலத்தை அடைந்தேனே. (திருக்கயிலாயம் செல்ல எடுத்துக்கொண்ட
முயற்சியினால் என் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சுவடே இல்லாமல் மறைந்து போனதுவே, திருவையாற்றினை
அடைந்ததுமே!)

அங்கே ஆண்யானையும், பெண்யானையும் ஜோடியாக காதல் களிப்புடன் வரக் கண்டு, அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு தரிசித்தேன். (அன்பே சிவம்!)

இதுவரை கண்டு அறியாத காட்சிகளை (திருப்பாதம், சிவானந்தம்) எல்லாம் கண்டேன் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.
(இந்தப் பாடலில் யானைகள் ஜோடியாக வருவதைக் குறிக்கும் அவர், இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விலங்கு
அல்லது பறவை தன் துணையுடம் வருவதாக குறிக்கிறார்.)

பதிகத்தின் முதல் பாடல்: (நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம் பதிகம் 3)

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

மாதர்பிறை = அழகியபிறை
கண்ணி =  நெற்றி/தலையில் சூடும் அணிகலன்
போதொடு நீர் = வழிபாட்டிற்குரிய நீர்
பிடி = பெண் யானை;
களிறு = ஆண் யானை
----------------------------------------------------------
இந்தப் பாடலை பொன்னியின் செல்வனில், சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் பாடிக்காட்டுவதாக வரும். சேந்தன்
அமுதன் பாடி முடித்தபின், அருகிலிருந்த குந்தவை, செம்பியன் மாதேவியிடம், இந்தப் பதிகம் பிறந்த வரலாற்றைக் கேட்பார். அந்த
முதிய பிராட்டி சொன்ன வரலாற்றை, கல்கியின் வரிகளில் இங்கே அப்படியே தருகிறேன். நீங்கள் மெய்மறந்து கேட்டிட:
அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க
விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு
பெரியவர் அங்கே தோன்றி, “அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச்
செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்” என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர்
திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல
அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும்
சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன;

பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து
நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார்.

இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை” என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “கண்டறியாதன கண்டேன்!” என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.

பாடல் : மாதர்பிறை கண்ணியானை
இயற்றிவர் : திருநாவுக்கரசு நாயன்மார்
தலம் : திருவையாறு
இராகம்: செஞ்சுருட்டி .
-----------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.9.18

இன்றைய சூழ்நிலையில் பிழைக்கும் ரகசியம்!


இன்றைய சூழ்நிலையில் பிழைக்கும் ரகசியம்!

2014-ம் வருடம். அமெரிக்காவில் புளோரிடா  மாகாணத்தை ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி நான்கு புயல்கள் தாக்கின. நாம் தான் ஏதோ ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்பது போல் சூறாவளிக்கு பெயர் வைப்பவர்களாயிற்றே. நான்கு சூறாவளிகளுக்கு முறையே சார்லி, பிரான்செஸ், ஐவன், ஜீன் என்று நாமகரணம் சூட்டப்பட அவையும் பெயர் வைத்த குஷியில் புளோரிடாவை துவைத்து  காயப்போட்டு இஸ்திரி செய்து பீரோவில் மடித்து வைத்துவிட்டு  சென்றன!

முதல் சூறாவளி வந்து சென்ற ஒரு சில வாரங்களில் இரண்டாவது சூறாவளியான பிரான்செஸ் புளோரிடாவை நோக்கி நகர்ந்து வரும் செய்தி தெரிந்ததுதான் தாமதம். மக்கள் தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு கதவை இழுத்து மூடி வீட்டிற்குள் முடங்கினர். வரும் சூறாவளி மூடிய கதவைப் பார்த்து வீட்டில் யாரும் இல்லை போலிருக்கிறது என்று அடுத்த வீட்டுக்கு போய்விடுவது போல!

அதே சமயம் 1,222 மைல்கள் தள்ளி ஆர்கன்ஸா மாநிலத்தில் பெண்டன்வில் என்ற சிறிய ஊரிலுள்ள ஒரு பெரிய கம்பெனியின் மார்க்கெட்டிங் டீம் சுறுசுறுப்படைந்தது. தங்களுடைய புதிய மார்க்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்த சரியான சமயம் இது என்று முடிவு செய்தது. விற்பனை டேட்டாவை அலசி ஆராயும் அவர்கள் டெக்னிக்கின் பெயர் `முன்னறிவிக்கும் தொழில்நுட்பம்’ (Predictive Technology). அந்த கம்பெனியின் பெயர் `வால்மார்ட்’!

முதலில் தாக்கிய சார்லி சூறாவளியின் போது புளோரிடாவில் உள்ள வால்மார்ட் கடைகளில் எவை அதிகம் விற்றன என்ற டேட்டா பெறப்பட்டது. உங்களை கேட்டால்  என்ன சொல்வீர்கள்? என்ன பெரியதாக விற்றிருக்கும், குடை, ஹீட்டர், ரெயின்கோட், டார்ச்லைட் போன்ற சாமான்கள் அதிகம் விற்றிருக்கும் என்று தானே நினைப்பீர்கள். விற்பனை டேட்டாவை ஆய்வு செய்த போது ’ஸ்ட்ராபரி பாப்-டார்ட்ஸ்’ என்கிற ஒரு வித தின்பண்டம் வழக்கத்தை விட ஏழு மடங்கு அதிகம் விற்றது தெரிய வந்தது. அடுத்து அதிகமாக என்ன விற்றிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பீர்! இந்த இரண்டையும் உங்களால் யூகித்திருக்க முடியுமா?

நம் யூகங்கள் தவறாகலாம். ஆனால் டேட்டா பொய் சொல்லாது. சூறாவளி கடக்கும் வரை வீட்டில் தேமே என்று டீவி பார்த்துக்கொண்டு தான் உட்காரவேண்டும் என்று அம்மாக்கள் ஸ்ட்ராப்ரி பாப்-டார்ட்ஸ் வாங்கி அடுக்க, அப்பாக்கள் ஃப்ரிட்ஜ் முழுவதும் பீர் பாட்டிலை வாங்கி அடுக்கியிருந்தார்கள். டேட்டா மூலம் பெற்ற நுண்ணறிவின்படி புளோரிடாவிலுள்ள அனைத்து வால்மார்ட் கடைகளுக்கும் லாரி லாரியாக அந்த பொருட்கள் அதிகமாக அனுப்பி வைக்கப்பட சூறாவளியை மிஞ்சும் ஸ்பீடில் மக்கள் மீண்டும் அவைகளை வாங்கி தீர்த்தனர்!

பல கடைகள் தங்கள் விற்பனையை அலசி வாடிக்கையாளர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்துதான் மார்க்கெட்டிங் உத்திகளை வடிவமைக்கின்றனர். ஆனால் தகவல் சேகரிப்பில், டேட்டா பெறுவதில் வால்மார்ட்டை மிஞ்ச பூலோகத்தில் ஒரு கம்பெனி இல்லை. தங்கள் கடையில் விற்பனையாகும் பொருட்களின் விற்பனை அளவு முதல் வாடிக்கையாளர்களின் பழக்க வழக்கம் வரை வால்மார்ட் அறிந்துகொள்வது போல் வேறெந்த கம்பெனியும் அறிய முயல்வதில்லை. அப்படி அறிந்துகொள்ள தேவையான உள்கட்டமைப்பை அமைத்துக்கொள்வதும் இல்லை.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 3,600 வால்மார்ட் கடைகள். அங்கு வாரம் வந்து பொருள் வாங்குவோர் எண்ணிக்கை 100 மில்லியன். வருடத்திற்கு இல்லை சார், வாரம்தோறும் வருவோர் எண்ணிக்கையை சொல்கிறேன்! ஒரு மாதத்தில் ஏறக்குறைய மொத்த அமெரிக்காவும் வால்மார்ட்டிற்கு ஒரு முறை வந்து வாங்கிச் செல்கிறது. வருவோர் எண்ணிக்கை முதல் அவர்கள் வாங்கும் பொருட்கள், வாங்கும் அளவு முதலியன கலர் வாரியாக, சைஸ் வாரியாக டேட்டா பெறப்பட்டு கடை வாரியாக, ஊர் வாரியாக, மாநிலம் வாரியாக டேபுளேட் செய்யப்பட்டு ஆழமாக ஆய்வு செய்யப்படுகிறது. அமெரிக்க வாசிகளைப் பற்றி வால்மார்ட் அறிந்திருப்பது போல் அதன் அரசாங்கம், மீடியா கூட அறிந்து வைத்திருக்க மாட்டார்கள்!

வாடிக்கையாளர் டேட்டாதான் வால்மார்ட்டின் வேதவாக்கு. இன்று நேற்றல்ல, அவர்கள் ஆரம்பித்த நாள் முதல் டேட்டாவைத் தான் குலதெய்வமாக கும்பிட்டு வருகின்றனர். மற்ற கடைகள் எல்லாம் நினைத்துப் பார்பதற்கு முன்பே பார் கோட், இன்டர்நெட்டின் முன்னோடியான மின்னணு தகவல் பரிமாற்றம், டிரான்ஸ்மிட்டர்கள் என்று அதிநவீன தொழில்நுட்பம் வாங்குவதில் வால்மார்ட் ஒரு டிரென்ட்செட்டர். அந்தக் காலத்திலேயே அதற்கெல்லாம் அவர்கள் செலழித்த தொகை சுமார் நான்கு பில்லியன் டாலர்கள். இத்தனை ஏன், வால்மார்ட் பெண்டன்வில் தலைமையகத்தில் இருக்கும் டெரா டேட்டா மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களில் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாவின் அளவு 460 டெராபைட்ஸாம். இது எத்தனை இருக்கும் என்று தானே கேட்கிறீர்கள். இண்டர்னெட்டில் இருக்கும் டேட்டாவை விட இரண்டு மடங்கு!

மற்ற கடைகள் எல்லாம் ‘என்ன நடக்கப் போகிறது என்று காத்திருந்து செயல்படுவோம்’ என்று தொழில் செய்ய வால்மார்ட் மட்டுமே ‘என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே அனுமானித்து அதற்கு ரெடியாய் இருப்போம்’ என்று தன்னை தயார்படுத்திக்கொண்டு அதற்கேற்ப தொழில் செய்கிறது. செக் அவுட் ஏரியா ஸ்கேனர் மூலம் பெறப்படும் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல் முதல் கையில் வைத்து இயக்கப்படும் வயர்லெஸ் கருவிகள் மூலம் பெறப்படும் இன்வென்ட்ரி டேட்டா வரை அனைத்து தகவல்களும் போர்க்கால அடிப்படையில் சேகரிக்கப்பட்டு போரடிக்காத வகையில் அலசப்பட்டு அவை அனைத்தும் காலகாலத்திற்கு பாதுகாக்கப்படுகிறது. கடையில் எந்த நேரத்தில் எத்தனை கேஷியர்கள் தேவைப்படும் என்பதைக் கூட துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறது வால்மார்ட்!

இத்தனை கட்டமைப்பை, கம்ப்யூட்டர்களை, சாஃப்ட்வேரை எங்கிருந்து எப்படி வாங்கினார்கள் வால்மார்ட்? அவர்கள் எங்கிருந்து வாங்கினார்கள், கட்டமைப்பின் பெரும்பகுதியை தங்கள் ஊழியர்களைக் கொண்டே வடிவமைத்து தாங்களே தயாரித்து நிர்மானித்தார்கள். ஏன்? அப்பொழுது தானே தனக்கு அசுர பலம் தரும் தகவல் கட்டமைப்பின் ரகசியத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாக்க முடியும்! வால்மார்ட்டிற்கு கம்ப்யூட்டர் பகுதிகளை சப்ளை செய்த தயாரிப்பாளர்கள் முதல் கட்டமைப்பை நிர்மாணித்து நிர்வகிக்கும் ஊழியர்கள் வரை அது செயல்படும் விதங்களையும் ரகசியங்களையும் வெளியில் கூறமுடியாதபடி `வெளிப்படுத்தாமை ஒப்பந்தம்’ மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். தெரியாத்தனமாக தண்ணியடித்து எதையாவது யாராவது உளறிவிட்டால் மனிதர் தொலைந்தார். புளோரிடா புயலே தேவலை என்பது போல் சாத்து சாத்து என்று சாத்தப்படுவார்!

ஒவ்வொரு சிறிய தகவலும் வால்மார்ட்டிற்கு பொக்கிஷம் போல. பெறப்படும் தகவலின் அடிப்படையிலேயே ஒவ்வொரு சனிக்கிழமையும் சேல்ஸ் மீட்டிங்கில் நடத்தப்படுகிறது. அலசி ஆராயப்படும் தகவல் உலகெங்கும் உள்ள ஒவ்வொரு வால்மார்ட் கிளைக்கும் அனுப்பப்படுகிறது.

நவீன உலகமே டேட்டாவின் உதவியோடு இயங்குகிறது. டேட்டாவின் உதவியோடு முக்கிய முடிவெடுத்தால் மட்டுமே சரியான திசையில் பயணிக்க முடியும். கடைகள் முதல் கம்பெனிகள் வரை வாடிக்கையாளர்களை முழுவதுமாக புரிந்துகொண்டு அவர்கள் தேவைகளை, ஆசைகளை, பயங்களை அவர்கள் அறிந்துகொண்டதைவிட புரிந்துகொண்டால் மட்டுமே பிழைக்கவே முடியும். இதை முழுவதும் உணர்ந்து செழுமையாக செயல்படுத்துகிறது வால்மார்ட்.

`வால்மார்ட்டால் முடியும். நான் ஆஃப்டர் ஆல் வால் சைஸில் கடை வைத்திருப்பவன். வால்மார்ட் செய்வது போல் என்னை செய்ய சொல்கிறாயே. என் கடைக்கு தேவையா இதெல்லாம்’ என்று கேட்க தோன்றினால் உங்களுக்கு வால்மார்ட் பிறந்த கதையை சொல்வது அவசியமாகிறது. வால்மார்ட் ஆரம்பிக்கப்பட்டது பெண்டன்வில் அருகில் உள்ள ராஜர்ஸ் என்ற சின்ன ஊரில். அதன் ஜனத்தொகை 66,000 மட்டுமே. பிறந்த வருடம் 1962. அப்பொழுது என்ன ஜனத்தொகை இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

ஆம்பூர், கோவில்பட்டி, நாகப்பட்டினம் போன்ற இடங்களை விட சிறிய ஊரில் கடை திறந்து, தகவல் சேகரிப்பில் புரட்சி செய்து, வாடிக்கையாளர்களை தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பொருள் விற்று, படிப்படியாக முன்னேறி, கடல் கடந்து அசுர வளர்ச்சியடைந்து இன்று உலகின் நம்பர் ஒன் கம்பெனியாக திகழ்கிறது வால்மார்ட். நான் சிறிய ஊர், என்னுடையது சின்ன கடை, எனக்கெதற்கு டேட்டா ஆய்வு, என்னால் இதையெல்லாம் செய்யமுடியுமா, இப்படியெல்லாம் வளரமுடியுமா என்று இன்னமும் அசால்ட்டாய் இருந்தால் உங்களை அடித்துக்கொண்டு செல்ல அடுத்த சூறாவளி ஆறு கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்க மார்க்கெட் துறைமுகத்தில் எச்சரிக்கை எண் ஏழு ஏற்றப்பட்டுவிட்டது என்பதை உணர்க!

தொழில் ரகசியம்: சூறாவளியில் தகவல் திரட்டிய வால்மார்ட்*
ஆக்கம்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!
-----------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!