அமைதியான மனதைப் பெற 8 வழி முறைகள்!!!!
1.கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள் :-
பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள்
சிந்தித்தவயே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.
2.மறக்கவும்... மன்னிக்கவும் :-
இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய
மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம்
ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு
கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல்,
மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.
3. பாராட்டுக்காக ஏங்காதீர்கள் :-
உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது. அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று
உங்களால் ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் அதிகாரத்தில் இல்லையென்றல் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம் குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள் வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத் தேடி வரும்.
4. பொறாமைப்படாதீர்கள் :-
நாம் எல்லோருக்குமே பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள் அலுவலகத்தில்
கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள் நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல்
பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில் அவர்க்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை
பொறாமைப் பட்டு வாழ்வில் எதுவும் ஆக போவதில்லை, உங்கள் மன நிம்மதியை இழப்பதை தவிர.
5. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள் :-
தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை மாற்ற நினைபீர்களிலானால் நீங்கள் தோற்ப்பதர்க்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால் சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாற தொடங்கும்.
6. தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் :-
இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான
சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்க்கொள்ள நேரிடலாம். இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு
அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை சில நேரங்களில் நம்மால் புரிந்து
கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன ஊறுதியையும் பெறலாம்.
7. செய்ய முடிவதையே செய்யுங்கள் :-
இது எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு
அதிகமான பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எது
நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன்
வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன அமைதியை பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலை பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை
பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற எண்ணவோட்டத்தை குறைக்கும்.
8.தினமும் தியானங்கள் :-
தியானம் மனதை சாந்தப்படுத்தி உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன
அமைதியின் உட்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி நேரம்
முழுமையாக தியானம் செய்தால், மீதி இருப்பத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம். தியானத்தை நேரத்தை
வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை
அதிகரித்து வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.
-------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம் ஐயா,அருமையான வழிமுறைகள்.மனம் அமைதி ஆனாலே உடல் ஆரோக்கியமாகும்.நன்றி.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Nice info...
Have a great day.
With regards,
Ravi-avn
//////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,அருமையான வழிமுறைகள்.மனம் அமைதி ஆனாலே உடல் ஆரோக்கியமாகும்.நன்றி./////
நல்லது நன்றி ஆதித்தன்!!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Nice info...
Have a great day.
With regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!