இறங்கி அடிக்கும் இந்தியா
டாலருக்கு எதிராக களமிறங்கிய இந்தியா கூட களம் இறங்கிய ரஷ்யா, இந்தியாவுடன் அணி சேர்ந்த இங்கிலாந்து .. அமெரிக்கா அதிர்ச்சி!
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தியா எடுத்த நிலைப்பாடுக்கு ஆதரவாக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிட்டிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
அமெரிக்காவிற்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக உலக நாடுகள் அணி சேர்ந்து வருவது உலக அரசியலில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் நிறுவன அதிபருடன் பிரதமர் மோடி வருடாந்திர சந்திப்பை நடத்தினார். எல்லா வருடமும் நடக்கும் இந்த சந்திப்பில் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியமான விவாதம் ஒன்று செய்யப்பட்டது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்கும் போது, டாலருக்கு பதிலாக இந்தியா ரூபாய் வழியாகத்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகில் எண்ணெய் வள நாடுகளுக்கு மிக முக்கியமான கஸ்டமராக இந்தியா இருப்பதால் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதை தொடர்ந்து தற்போது பிரிட்டிஷ் நாடும், , அமெரிக்க டாலரை உலக வர்த்தகத்தில் பயன்படுத்த மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக பவுண்டுகளை பயன்படுத்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யாவும் களமிறங்கி உள்ளது. தங்களது நாட்டு பணமான ரூபலை, டாலருக்கு பதிலாக சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாடுகளின் ( இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து ) முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
இதுவரை பெரும்பாலான உலக நாடுகள் எல்லாம் அமெரிக்க டாலரில்தான் பொருட்களை வாங்கி வந்தது. தற்போது அதற்கு எதிராக மூன்று பெரிய நாடுகள் களம் குதித்து உள்ளது.
இந்நிலையில் மோடி சீன அதிபரை சந்திக்கிறார் இதுவும் கவனிக்க வேண்டிய ஒன்று. இதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை
இது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்க வாய்ப்புள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் துனிச்சளான முடிவுக்கு மக்களாகிய நாம் துணை நிற்போம்
பல சீர்திருத்தங்களை செய்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் பாரதப் பிரதமருக்கு பாராட்டு!!!!
---------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir good to hear good news thanks sir vazhga valamudan
ReplyDeleteட்ரம்ப் என்ன செய்வாரோ....
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Important and notable post...
Have a great day.
With regards,
Ravi-avn
பொதுவாக ஒரு கருத்து உள்ளது. அமெரிக்கா பெரியண்ணன் மனப்பாண்மையுடன் நடந்து கொள்வது போலவும், மற்ற நாடுகளை அச்சுறுத்துவது போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இவற்றில் பல பொறாமையின் வெளிப்பாடு தான். உலகில் அதிக அளவில் புதிய கண்டுபிடிப்புகள் செய்வதிலும், புதிய யுத்திகளை கையாள்வதிலும், தொழில் முனைவோருக்கு வசதிகள் செய்து தருவதிலும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இரண்டு பெரிய சமுத்திரங்களுக்கு நடுவில், வடக்கே அமைதியை விரும்பும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆனால் பெரிய நாடான கனடா, தெற்கே அமெரிக்கா வர விரும்பும் உழைக்கும் ஏழை மக்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோ, மிகப் பெரிய நிலப்பரப்பு என பூகோளமும் ஒத்துழைக்க, வாழ்க்கை முறையும் இங்கு சிறப்பாக உள்ளதால், உலகின் பல திறமைசாலிகள் மற்றும் அறிவாளிகள் இங்கு அதிகம் குடி புகின்றனர். இராணுவம், கடற்படை, விமானப்படை இவை அனைத்தும் வலுவாக உள்ள நாடு. நவீன ஆயுதங்கள் அதிகம் கொண்ட நாடு. நிலப்பரப்பில் நான்காவதாக இருந்தாலும், மனிதர்கள் வாழ ஏற்ற நிலப்பரப்பை கணக்கில் கொண்டால், அமெரிக்காவே முதலில் வரும். மக்கள் தொகையில் மூன்றாவது இடம். இதனால் அமெரிக்கா வளமாக உள்ளது. இந்த நிலை மாற ஒரு நூற்றாண்டு கூட ஆகலாம். ஆனால் இப்போதைக்கு இது தான் நிலை.
ReplyDeleteஇதை ஏற்று அமெரிக்காவுடன் நல்ல உறவு கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். அதே சமயம் நமது உரிமைகளை விடவும் கூடாது. இந்த விஷயத்தில் பிரதமரின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. கம்யூனிஸ்டுகளும் காங்கிரசுமே பெரிதாக அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளாகும்.
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir good to hear good news thanks sir vazhga valamudan/////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
/////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteட்ரம்ப் என்ன செய்வாரோ..../////
அதானே! பொறுத்திருந்து பார்ப்போம் ஸ்ரீராம்!!!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... Important and notable post...
Have a great day.
With regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!!
////Blogger thozhar pandian said...
ReplyDeleteபொதுவாக ஒரு கருத்து உள்ளது. அமெரிக்கா பெரியண்ணன் மனப்பாண்மையுடன் நடந்து கொள்வது போலவும், மற்ற நாடுகளை அச்சுறுத்துவது போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இவற்றில் பல பொறாமையின் வெளிப்பாடு தான். உலகில் அதிக அளவில் புதிய கண்டுபிடிப்புகள் செய்வதிலும், புதிய யுத்திகளை கையாள்வதிலும், தொழில் முனைவோருக்கு வசதிகள் செய்து தருவதிலும் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. இரண்டு பெரிய சமுத்திரங்களுக்கு நடுவில், வடக்கே அமைதியை விரும்பும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஆனால் பெரிய நாடான கனடா, தெற்கே அமெரிக்கா வர விரும்பும் உழைக்கும் ஏழை மக்கள் அதிகம் வாழும் மெக்ஸிகோ, மிகப் பெரிய நிலப்பரப்பு என பூகோளமும் ஒத்துழைக்க, வாழ்க்கை முறையும் இங்கு சிறப்பாக உள்ளதால், உலகின் பல திறமைசாலிகள் மற்றும் அறிவாளிகள் இங்கு அதிகம் குடி புகின்றனர். இராணுவம், கடற்படை, விமானப்படை இவை அனைத்தும் வலுவாக உள்ள நாடு. நவீன ஆயுதங்கள் அதிகம் கொண்ட நாடு. நிலப்பரப்பில் நான்காவதாக இருந்தாலும், மனிதர்கள் வாழ ஏற்ற நிலப்பரப்பை கணக்கில் கொண்டால், அமெரிக்காவே முதலில் வரும். மக்கள் தொகையில் மூன்றாவது இடம். இதனால் அமெரிக்கா வளமாக உள்ளது. இந்த நிலை மாற ஒரு நூற்றாண்டு கூட ஆகலாம். ஆனால் இப்போதைக்கு இது தான் நிலை.
இதை ஏற்று அமெரிக்காவுடன் நல்ல உறவு கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். அதே சமயம் நமது உரிமைகளை விடவும் கூடாது. இந்த விஷயத்தில் பிரதமரின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. கம்யூனிஸ்டுகளும் காங்கிரசுமே பெரிதாக அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளாகும்./////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி தோழரே!!!!!