++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இன்று சரஸ்வதி பூஜை தினம். சரஸ்வதியை வணங்கிப் பூஜிக்கும் தினம்.
அறிவிற்கான, கலைகளுக்கான கடவுள் சரஸ்வதி. Sarasvatī is the goddess of knowledge, music and the arts வேதங்களின் தாய். பிரம்மாவின் துணைவி.
தேவியின் அருட்பார்வை கொஞ்சமேனும் இருப்பதால்தான் நான் ஜோதிடத்தைக் கற்றுணர்ந்தேன். உங்களுக்குப் பயிற்றுவிற்கிறேன். உங்களுக்கும் சரஸ்வதியின் அருட்பார்வை இருப்பதால்தான் ஆர்வமுடன் அரிய கலையான ஜோதிடத்தைக் கற்றுக்கொள்கிறீர்கள்.
சரஸ் என்றால் வடமொழியில் தங்குதடையின்றி சீரான ஓட்டத்துடன் இருக்கக்கூடியது என்றும் வதி என்றால் ‘பெண் என்பதையும் குறிக்கும். "saras" (meaning "flow") and "wati" (meaning "a woman").
அறிவு தங்குதடையின்றி வளர வேண்டும். வெளிப்பட வேண்டும். பயன்பட வேண்டும். தேவிக்கு சரியான பெயர்தான் உள்ளது.
இன்று தேவியை வணங்கும் முகமாக, தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியின் பாடலைப் பதிவிடுகிறேன். அனைவருக்கும் தெரிந்த பாடல்தான். இருந்தாலும், அதை நினைவுறுத்தி இன்று தருவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்.
எதெதில் தேவி இருப்பாளாம்?
பாரதி அழகாகச் சொல்லியுள்ளார்:
வெள்ளைத் தாமரைப் பூவில் அவள் இருப்பாளாம். வீணையின் இனிய நாதத்தில் இருப்பாளாம். மனதை மயக்கும் கவிதைகளைக்கூறும் கவிஞர்களின் உள்ளத்திலே இருப்பாளாம். இப்படி, தேவி இருக்கும் இடங்களை எல்லாம் பட்டியல் இட்டிருக்கிறார் பாரதியார். படித்து, பொருள் உணர்ந்து மகிழுங்கள்!!!!!!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
ராகம்-ஆனந்த பைரவி
தாளம்-சாப்பு
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.
(வெள்ளைத்)
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
(வெள்ளைத்)
வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.
(வெள்ளைத்)
தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்
(வெள்ளைத்)
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.
(வெள்ளைத்)
வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,
(வெள்ளைத்)
ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.
(வெள்ளைத்)
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!
(வெள்ளைத்)
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்
(வெள்ளைத்)
நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!
(வெள்ளைத்)
+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label பாரதியார் பாடல்கள். Show all posts
Showing posts with label பாரதியார் பாடல்கள். Show all posts
16.10.10
27.9.09
எங்கே இருப்பாள் சரஸ்வதி?


எங்கே இருப்பாள் சரஸ்வதி?
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாளாம். வீணையின் இனிய நாதத்தில்
இருப்பாளாம். மக்களுக்கு இன்பத்தை தருகின்ற கவிதைகளை வடிக்கின்ற
கவிஞர்களின் உள்ளத்தில் இருப்பளாம். வேதத்தின் பொருளை தேடி உணர்ந்து,
அதை மனதிலேற்றிச் சொல்லும் பக்தர்களின் முன் நின்று காட்சி கொடுப்பாளம்.
உண்மையான துறவிகள் மக்களுக்கு கூறுகின்ற வாசகங்களாகவும் அவள்
இருப்பாளாம். அறிவிற்கு, கல்விக்குத் தேவியான சரஸ்வதி.
சொன்னது யார்?
முண்டாசுக் கவிஞன் பாரதியைத் தவிர வேறு யாரால் இத்தனை
அழகாகச் சொல்லமுடியும்?
பாட்டாகச் சொன்னது பாரதியார்.
பாடலைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
--------------------------------------------------------------------
சரஸ்வதி தேவியார் அறிவிற்கு அதிபதி. கல்விக்கு, கற்றலுக்கு, நுண்ணறிவிற்கு,
எதையும் எதிர்கொள்ளூம் தன்மைக்கும் அவர்தான் அதிபதி. அஷ்டலக்ஷ்மிகள் எட்டு
வடிவங்களாக உங்களிடத்தில் இருந்தாலும், சரஸ்வதியின் அருள் இல்லையென்றால்,
உங்களால் அவற்றை அனுபவிக்க முடியாது. அறிவில்லாமல் எதையும் அனுபவிக்க
முடியுமா என்ன? ஆகவே சரஸ்வதியின் பங்களிப்பு அவசியமானது.
சரஸ்வதிதேவி பிரம்மாவின் மனைவி. அதை நம்புங்கள்.
இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது? பெற்றோர் செய்து வைத்த
திருமணமா? அல்லது கலப்புத் திருமணமா? சார்பதிவாளர் அலுவலத்தில்
அவர்களுடைய திருமணம் பதிவு செய்யப்பெற்றுள்ளதா? என்பது போன்ற
கேள்விகளைக் கேட்டுக் கொண்டிராமல், அவர்களைத் தம்பதி சமேதராக
ஏற்றுக் கொண்டு வணங்குங்கள்.
உங்கள் அறிவு விருத்தியாகும். அதாவது அறிவு அசுர வளர்ச்சி பெறும்.
ஜாதகத்தில் உள்ள அளவுதானே வரும் என்று கேட்கவேண்டாம். அதையும்
மீறி உங்கள் அறிவு வளர அன்னை உதவுவாள்
Goddess Saraswati (Sarasvati) is the wife (consort) of Lord Brahma and
possesses the powers of speech, wisdom and learning. She has four hands
representing four aspects of human personality in learning; mind, intellect,
alertness and ego.She has sacred scriptures in one hand and a lot us
(a symbol of true knowledge) in the second. With her other two hands
she plays the music of love and life on the violin (veena).
She is dressed in white (sign of purity) and rides on a white goose (swan).
அனைவருக்கும் சரஸ்வதி தின வாழ்த்துக்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
2. வெள்ளைத் தாமரை
(ராகம் ஆனந்த பைரவி, தாளம் சாப்பு)
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்,
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள்,
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்
(வெள்ளைத்) 1
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழழையில் உள்ளாள்,
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவுச் சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்
(வெள்ளைத்) 2
வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்,
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.
(வெள்ளைத்) 3
தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்,
உய்வ மென்ற கருத்திடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்,
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்,
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்
செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்,
வந்த னம் இவட் கேசெய்வ தென்றால்
வாழியஃதிங் கௌiதன்று கண்டீர்,
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தினத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம் இவள் பூசளை யன்றாம்.
(வெள்ளைத்) 5
வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்,
நகர்கெளுங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுத மென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.
(வெள்ளைத்) 6
ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறுநாடு,
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க.
(வெள்ளைத்) 7
ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் என்று பெரிதிழைக் கின்றீர்,
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்
(வெள்ளைத்) 8
இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்.
(வெள்ளைத்) 9
நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
அதுவு மற்றவர் வாய்ச்சொல் தாரீர்,
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்,
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்,
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.
(வெள்ளைத்) 10
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - --
வாழ்க வளமுடன்!
லேபிள்கள்:
classroom,
பாரதியார் பாடல்கள்
Subscribe to:
Posts (Atom)