மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது?
சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு நாம் மேல் நோக்கிப் பயனப்பட்ட பிறகு என்ன நடந்தால் என்ன?
மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை யோசித்து அல்லது தெரிந்து கொண்டு இப்போது ஏன் மண்டைக்குக் குடைச்சலைத் தர வேண்டும்?
மரணத்தை அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அல்லது பார்க்காமல் அதைப் புறந்தள்ளிவிட்டுப் போய் விடலாம். இன்றைக்குப் பல பிரச்சனைகள் உள்ளன. முதல் பிரச்சனை அநியாய விலைவாசிகள். அவற்றைச் சமாளிக்க ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். இது போன்ற மொக்கைப் பதிவுகள் எல்லாம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் இப்போதே பதிவை விட்டு விலகிக் கொள்ளலாம்.
மற்றவர்கள் தொடரலாம்!
-------------------------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது என்பது பற்றியும் விவரிக்கின்ற பண்டைய திபேத்திய நூல் ஒன்றைத் தேடிப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன். புக் மார்க் செய்து வைத்து, நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.
http://www.holybooks.com/wp-content/uploads/The-Tibetan-Book-of-Living-and-Dying.pdf
அந்தப் புத்தகம் பற்றி ஆய்வு செய்து உரை நிகழ்த்தியவர்களின் காணொளிக் காட்சியும் உள்ளது. பார்த்துவிட்டு உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!
------------------------------------------------------------
மரணத்தைப் பற்றியும், மறு பிறவியைப் பற்றியும் பல மதங்கள் பலவிதமாக வலியுறுத்திச் சொல்லியிருக்கின்றன.
உடம்பிற்குத்தான் மரணம். ஆத்மாவிற்கு மரணம் இல்லை. ஆத்மா வேறு ஒரு பிறவியை எடுத்து விடும் என்பதை இந்து மதத்தில் பல மகான்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
"ஏற்றப் பழந்துணியை நீக்கி எறிந்தொருவன்
மாற்றும் புதிய உடை வாய்ப்பது போல்
தோற்றுமுயிர் பண்டை உடம்பை விட்டு
பாரில் புதிய உடல் கொண்டு பிறக்குமென்று கொள்"
என்கிறது பழம் பாடல் ஒன்று. இதை முன்பு ஒரு முறை இணையத்தில் படித்தேன். பகவத்கீதையில் இந்த வரிகள் வருவதாக அந்த அன்பர் கூறியுருந்தார்.
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.
If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
குறள் - 362
பட்டினத்தடிகளும் தனது பாடல் ஒன்றில்
பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும் என்று பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது நீ இறந்து சாம்பலாகிப்
போகும்போது, உன் ஆத்மா மேற்கொள்ளும் அடுத்த பயணத்திற்கு இந்தப் பாவ புண்ணியக் கணக்கை கொண்ட கோப்பும் (file) உன் ஆத்மாவுடன் கூடவே வரும் என்று சொல்லியிருக்கிறார்.
அதுதான் நம்முடைய அடுத்த பிறவியை நிர்மானிக்கும் வலிமை கொண்டதாகும் என்கிறார்கள்.
ஜோதிடத்தில் அதைத்தான் பூர்வ புண்ணியம் என்கிறோம். வாங்கி வந்த வரம் என்கிறோம்.
இரண்டிலும் எனக்கு உடன்பாடு உண்டு. இன்றையத் தேவைகளை சமாளிப்பதற்கு என் அரிய நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்துடன் தர்ம சிந்தனையோடு சில அறச்செயல்களையும், பொதுத் தொண்டுகளையும் செய்து கொண்டிருக்கிறேன். வரம் வாங்கு வதற்காக அல்ல! ஒரு நற்சிந்தனையால் அதைச் செய்துகொண்டிருக்கிறேன்
நடப்பது நடக்கட்டும். எல்லாம் எனை ஆளும் ஈசன் செயல்!
என்னைப் பழநிஅப்பன் பார்த்துக்கொள்வான். அவன் வழி நடத்துகிறான். நடத்துவான்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------
அடுத்ததாக, சுவாரசியமான ஜோதிடப் புதிர் ஒன்று உங்களின் அலசலுக்காகக் காத்திருக்கிறது. ஒரு நாள் பொறுத்திருங்கள். அது நாளை வெளியாகும்!
Our sincere thanks to the person who uploaded this video in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++