+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology அமிர்தயோகம் என்றால் என்ன?
அமிர்தம் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். புராண காலங்களில், சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவை அமிர்தம் என்பார்கள். Food of the celestral beings (Devas).
நமக்கு அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. என்னைப்போன்ற, தஞ்சாவூர்ப் பெரிசுகளைப் போன்றவர்களுக்கு, புளிக்காத நல்ல மோர்தான் அமிர்தம். வெய்யில் காலங்களில், வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தவுடன் ஒரு செம்பு அளவு கொடுத்தாலும் குடித்துவிட்டு, அமிர்தமாக இருக்கிறது என்போம். எங்கள் எல்கை அவ்வளவுதான்.
உங்களைப் போன்ற இளசுகளுக்குச் சொன்னால், ஜில்லென்ற Haywards 5000 Beer அல்லது Kingfisher Beerஐச் சொல்லலாம். அடித்துவிட்டு, ‘மச்சி, அமிர்தமா இருக்குடா’ என்பீர்கள்.
அமிர்தம் என்றால் இனிமை என்றும் பொருள்படும். deliciousness, sweetness
யோகம் என்றால் அதிர்ஷ்டம் good luck என்று பொருள்படும்.
இரண்டு சொற்களையும் சேர்த்து அமிர்தயோகம் என்றால் என்னவென்று சொல்லவும் வேண்டுமா? இனிமையான நாள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
நாட்காட்டிகளில் பாருங்கள். இன்று அமிர்தயோகம் என்று போட்டிருப்பார்கள்.
எப்படிப் போடுகிறார்கள்? அதற்கு அடிப்படை என்ன?
பங்சாங்கத்தில் உள்ள ஐந்து அங்கங்களில் யோகமும் ஒன்று.
சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.
எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?
கீழே கொடுத்துள்ளேன்.
ஞாயிற்றுக்கிழமை: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கட்கிழமை: சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்க் கிழமை: உத்திரம், மூலம்
புதன் கிழமை: உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழக்கிழமை: சுவாதி, மூலம்
வெள்ளிக்கிழமை: அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனிக்கிழமை: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி
மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று அமிர்தயோகம்.
அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம்.
சுருக்கமாகச் சொன்னால், நேற்றையப் பாடத்தில் எது எதைச் செய்யக்கூடாது என்று சொன்னேனோ, அதையெல்லாம் இந்த நாட்களில் செய்யலாம்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!