மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.1.11

Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா? - பகுதி இரண்டு!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Astrology அறுவை சிகிச்சைக்கு இங்கே இடமுண்டா? - பகுதி இரண்டு!

இதன் முதற்பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு இங்கே வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். முதற்பகுதிக்கான சுட்டி இங்கே உள்ளது: URL link for the part one

"நமது துன்பங்களுக்கு மருந்து கொடுக்கும் ஜோதிடம் என்று ஒன்றும்
நமது துன்பங்களை அறுத்து எடுத்து அல்லது நீக்கி மாற்றாக இன்பம் கொடுக்கும் ஜோதிடம் என்று பிரிதொன்றும் இரண்டு வகையான
ஜோதிடம் இருக்கிறதா? இல்லை! ஆனால் வேறு ஒன்று இருக்கிறது."
என்று முன் பதிவில் எழுதியிருந்தேன். அதை இப்போது பார்ப்போம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அச்யுதா பிசாரதி என்ற மகான் கேரளாவில் தோன்றி, சுமார் எழுபதாண்டுகாலம் வாழ்ந்து, வடமொழிக்கும், வானவியலுக்கும், ஜோதிடத்திற்கும், கணிதவியலுக்கும் பல பாடங்களை உருவாக்கி அனைவருக்கும் பயன்படும்விதமாகக் கொடுத்துவிட்டு இறைவனடி சேர்ந்தார். அத்துடன் எண்ணற்ற சீடர்களையும் உருவாகினார் அவருடைய காலம் (1,550 முதல் 1,621 வரை) அவரைப் பற்றிய மேல் விவரங்களுக்கு இந்தத் தளத்திற்கு சென்று பாருங்கள். அவர் எழுதிய நூல்கள் அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

இங்கே சொல்லவந்த விஷயம், அவருடைய மாணவர்களில் ஒருவரும், நாராயணீயம்’ என்னும் குருவாயூரப்பன் மேல் எழுதப்பெற்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவருமான மகான் நாராயண பட்டத்ரியைப் பற்றியதாகும்.

என்ன செய்தார் நாராயண பட்டத்ரி?

வயதான காலத்தில் வாதநோயால் அவதியுற்ற தன் குருவின் அவதியைக் காணச் சகிக்காமல், அதைத் தான் வாங்கிக்கொண்டு, குருவிற்கு நிவாரணம் அளித்தாராம். Bhattathiri's Guru, Achyuta Pisharati, was struck with paralysis. Unable to see his pain, by yogic strength and by way of Gurdakshina, Bhattathri is said to have taken the disease upon himself and relieved his guru.

சாத்தியமா அது?

அவருக்குச் சாத்தியப் பட்டிருக்கிறது?

அது மட்டுமல்ல, மாற்றப் பட்டதால் தனக்கு வந்த வாத நோயையும் 100 நாட்களில் விரட்டி அடித்திருக்கிறார்.

உண்மையா?

கட்டுக்கதையல்ல! நடந்ததுதான் அது. வரலாறு அது. அதற்கான சுட்டியைக் கொடுத்திருக்கிறேன். முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள அதைப் படியுங்கள்

கேரளாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இந்த வரலாறு தெரியும்.

அதுபோல நமக்கும் ஒரு கதை தெரியும். தொழுநோயால் அவதிப்பட்டு,
கபால மோட்சம் பெற திருவண்ணாமலை கோபுரத்தின் மீதிருந்து தலை
கீழாகக் குதித்த அருணகிரியாரை முருகப்பெருமான் ஆட்கொண்டு, ஷண நொடியில் அருணகிரிநாதரின் நோயைப் போக்கியதுடன், தமிழுக்கும், இறைப்பணிக்கும் அவரை ஆட்படுத்திய கதை நமக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கான தளம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.


அதுபோல குமரகுருபரர், காசி சுல்தானை, சிங்கத்தின் மீது சென்று சந்தித்த கதையும், சுல்தானின் பாராசீக மொழியில் பேசிய கதையும், வாரணாசியில் இடம் கேட்டு வாங்கிய கதையும் நமக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கான தளம் ஒன்று உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதெல்லாம் மகான்களுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. நமக்கு சாத்தியப்படுமா? நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். ஆசாபாசங்களில் இறைவனையே மறந்து விடக்கூடியவர்கள். நமக்கு எப்படி சாத்தியப்படும்?
 
“இவனுக்கென்று எதைக் கொடுத்தான்
எலும்புடனே சதை கொடுத்தான்”
இதயத்தையும் கொடுத்துவிட்டு
இறக்கும் வரை துடிக்க விட்டான்
இறக்கும் வரை துடிக்க விட்டான்
(அவனுகென்ன தூங்கிவிட்டான் ...)"

என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் வர்ணனை செய்தபடி உள்ள ஜென்மங்கள்தான் நாம்!

ஆனால் இறைவன் பேதம் இல்லாதவர். மகான், மனிதன் என்ற பேதம் இல்லாதவர் அவர். இருந்தால் அவர் எப்படி இறைவன் ஆக முடியும்?

ஆகவே பேதம் இல்லாதவர் அவர். தன்னைச் சரணடையும் எவருக்கும் முன் நின்று உதவுபவர் அவர்.

ஆகவே ஜாதகக் கோளாறால் எற்படும் எல்லாத் துன்பங்களுக்கும், இறைவனைச் சரணடையுங்கள். அவர் உங்கள் துன்பங்களைப் போக்குவார். துன்பங்களைத் தாங்கும் வலிமையைத் தருவார் 

மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்


கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட வேறு வழி அதுதான்!

எனக்கு அந்த அனுபவம் உண்டு. பழநி அப்பனால் ஏற்பட்ட அனுபவம் அது. பின்னொரு நாளில் அது பற்றி விவரமாக எழுதுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

14 comments:

  1. முகலாய மன்னன் பாபர் கூட இப்படி தனது மகன் சிறுவயதில் இறக்கும் தருவாயில் இருக்கும் போது.... அவன் படுத்திருந்த படுக்கையை சுற்றிவந்து தனது மகனின் உயிரைத் தந்து தனது உயிரை எடுத்துக் கொள்ளச் சொல்லி வேண்டி அப்படியே நடந்ததாக வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கின்றேன்...

    தாங்கள் கூறுவது போல் மகன் களுக்கு மாத்திரம் அல்ல... சாமானியனுக்கும் இறைவன் தன்னை காட்டுவார்... அறிவு, சிரத்தை, தவம் (இங்கு கடுமையான பக்தி) இவைகளோடு மனமுருகி அழைக்கும் போது ஆண்டவன் தோன்றுவான்... நன்றாக கணைகளைத் திறந்துப் பார்த்தால் தானே காட்சி தெரியும்.. சந்தேகக் கண்ணோடு (சரியாகத் திறக்காமல்) பார்ப்பவர்களுக்கு அது அங்கு இருந்தும் தெரிவதில்லை... எங்கிருந்தோ வந்தால் அல்லவா.. தெரிவதற்கு.. எங்கும் நிறைதவற்றை நாம் அதை உணரத் தயாராகும் போது உணரமுடியும்...

    சாமானியனும் ஏதாவது ஒரு நிலையில் ஒரு மகானைப் போல தூய பக்தியில் திளைக்க முடியும் அது ஒரு காண நேரம் என்றாலும் கூட அந்நேரம் பார்க்க உணர முடியும்.....
    பெரும்பாலும் அப்பா, அம்மா சொன்னார்கள் அதனால் சாமி கும்பிடுகிறேன்.. என்று கூறுகிறேன் என்பவனைவிட.... இல்லை என்று வாதிட்டு.. எதோ ஒரு சூழ்நிலையில் அவனை தீர்க்கமாக உணர்ந்து... வணங்குபவன் தான் முழு நம்பிக்கை கொள்வான்...

    கவியரசரைப் போல எனது நம்பிக்கையும் அதே வழியில் தான் பெறப் பட்டது... அப்படி தெய்வ தெளிவு பெற்றவர்கள்.. பல நேரங்களில் அந்த பரபிரமத்தை அவரவர் விரும்பும் விதமாக விரும்பும் விதத்தில் காண முடியும்... என்ன பலபேர் அவைகளை வெளியில் கூறுவதில்லை.... கூறினால் யார் நம்புவது.... ஏன் காண்பவரே கிருஷ்ணன் சார் சொன்னது போல் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் நிலையில் (வருமா, வராதா என்ற ஒரு அணு பிசகாவது இருப்பது இயற்கை) இருக்கிறோம்.... மனிதன் மகான் ஆவதும்.. மகான் மனிதனாவதும்.... எந்நேரமும் நிகழும்.... மனம் என்னும் செம்புப் பாத்திரம் விளக்கி கழுவிக்கொண்டே இருக்கப் பட வேண்டும் என்பார் காஞ்சிப் பெரியவர்.... இறைவனை பார்த்தவர்களும் தங்களது கடமைகளை இந்த உடம்பில் ஜீவன் இருக்கும் வரை தொடர்ந்து செய்யவேண்டும் என்பது மறை கூறும் கருத்து....

    அற்புத பதிவு.... அருமையான உதாரணகள்.... எங்கள் ஊரில் உள்ள நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல இறையனார் வந்தார் என்பது நான் கேள்வியுற்றது..... நம்பினார் கெடுவதில்லை, இது நான்குமறைத் தீர்ப்பு......
    நேற்றைய கிருஷ்ணன் சார் பதிவும் அருமை.. நன்றி..

    ReplyDelete
  2. உண்மையான பக்திக்கு நிச்சயம் பலன் உண்டு.

    ReplyDelete
  3. இதைப் பாருங்கள்: அந்தோ பரிதாபம்.......

    ////கோவை: குடும்பப் பிரச்னைக்கு தீர்வு காண, ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயற்சித்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.கோவை, செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைவேலின் மனைவி சந்திரிகா(45). குடும்பப் பிரச்னையில் சிக்கித் தவித்த இவர், குழப்பத்தை தீர்க்க வழி தேடினார். பக்கத்து வீட்டு பாக்கியலட்சுமி(49) என்பவரின் அறிவுரைப்படி, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ஜோதிட சித்த மாந்திரீக மையத்துக்கு நேற்று காலை சென்றார். மையத்தில் ஜோதிடம் மற்றும் மாந்திரீக விஷயங்களில் ஈடுபட்டிருந்த ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை(49) சந்தித்தார். குடும்பப் பிரச்னைகளை அவரிடம் தெரிவித்து வேதனை அடைந்தார். மேலும், தீர்வுக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் வழி காட்டுமாறு கேட்டுக் கொண்டார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரன், "தான் ஜோதிடம், மாந்திரீகத்தில் பெரிய ஆள், குடும்பப் பிரச்னைகளை விரைவாக தீர்த்து வைப்பேன். அதற்கு தன்னிடம் மந்திரித்து வைத்துள்ள நவரத்தினக்கல்லை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால் அனைத்து இன்னல்களும் நீங்கும், தாம்பத்ய வாழ்விலும் திருப்தி பெறலாம். வசீகரம் உண்டாகும், அதற்கு நானும் உதவி செய்கிறேன்' என்று கூறினார். மேலும், ஆபாச வார்த்தைகளை தெரிவித்ததோடு, நடந்து கொள்ளவும் முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சந்திரிகா, சத்தம் போட்டுக் கொண்டு வெளியில் வந்ததோடு, செல்வபுரம் போலீசிலும் புகார் கொடுத்தார். கோவை தெற்கு உதவி கமிஷனர் பாலாஜிசரவணன், ஜோதிடரை அழைத்து ரகசிய விசாரணை மேற்கொண்டார். தீவிர விசாரணைக்குப் பின், ஜோதிடர் மீது தன்னை பெரிய ஆளாக காட்டி, மற்றவர்களை ஏமாற்றுதல், பாலுணர்வை தூண்டும்படி நடந்து கொண்டது, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஜே.எம்.எண்: 5 கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், 15 நாள் நீதிமன்ற காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். "ஜோதிடரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் உள்ளனரா' என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், வால்பாறை அருகேயுள்ள சோலையூரைச் சேர்ந்தவர்

    , 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.//// நன்றி: தினமலர்..

    இன்றைய மனதைத் தொட்ட பாடலும் - 3 ...

    இன்றைய பதிவும்... மேலே காணும் குருட்டுத் தனமான குறுக்கு வழியாளர்களுக்கு பெரிதும் பொருந்தும்... பாடல் ஏமாற்றுபவர்களுக்கு... பாடம் ஏமாறுபவர்களுக்கு...

    ஆண்டவனுக்கு எது தரகு எல்லாம்.. அவனிடம் இருந்து தனியாக வந்தோம் அதுபோல அவனிடம் தனியாகத் தானே போக வேண்டும்.... அவனுக்கு நெருக்க மானவர்கள் என்று யாரும் இல்லை... வேண்டாதவர்கள் என்று யாரும் இல்லை... பாவம் இந்த புரியாத பாமர ஜனங்களுக்கு அவன் தான் கருணை புரிய வேண்டும்..

    இன்றைய பதிவு மிகவும் இயல்பாகவே பொருந்தியிருக்கிறது அந்த நிகழ்வுக்கு...

    நன்றிகள் வாத்தியாரே!

    ReplyDelete
  4. idho indha tuesday dhan naan guruvayur selgindrein...for worshipping guruvayurappa....greattt...

    ReplyDelete
  5. சார் பதிவு நன்றாக இருந்தது.

    உங்கள் பயிற்சிப்பாடத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இங்கேயே கேட்கலாமா? அல்லது மெயிலில் கேட்க வேண்டுமா?

    ReplyDelete
  6. entha paadalum entha karuththum eppozhuthiya en manathirkkagave ullathai en maname ariyum . kadavulum eppadithaan eathenum oru vagaiyil vanthu nammai meetppaar thelivuppaduthuvaar .
    anthavagaiyil entha paadam enakku "paadam"! kadavulukkum -subbaiya vaththiyarukkum mikka nandrigal.

    anbudan s.perumal

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. //சார் பதிவு நன்றாக இருந்தது.

    உங்கள் பயிற்சிப்பாடத்தில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. இங்கேயே கேட்கலாமா? அல்லது மெயிலில் கேட்க வேண்டுமா?

    //
    சார் எனக்கும் தான்.என்றாலும் தங்களின் கருத்துரைகளை தனித்தனியாகவே சொல்லுங்கள். உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன் அப்படியே அதையும் பார்க்க வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  9. ஆசானே வணக்கம்

    தாய் பசுவே ஆனது!

    ஒரு நிலைமைக்கு மேல் வளர்ந்து விட்ட கன்று குட்டி ஆனாலும்
    தாய் பசுவை நோக்கி செல்லும் பொழுது தாய் பசுவானது பத்து மாதம் சுமந்து பெற்ற கன்றுவை முட்டி விரட்டினாலும்

    கன்றுக்கு வேறு வழி தெரியாமல் தாய் பசுவை நோக்கி தானே போகி ஆகவேண்டியது இருக்கு .

    இதனை போலதான் இறைவன்

    முக்கியமான முடிச்சு கயிறை தன்னுள் வைத்து கொண்டு

    சொல்லில் அடங்காத விளையாட்டு ஆடினாலும் அவனை நாடிதானே போகியாக வேண்டி உள்ளது

    என்ன செய்ய வேறு வழி இல்லையே ஐயா ?

    ReplyDelete
  10. ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.

    ReplyDelete
  11. அவரவர் வினைப் பயனை அவரவர்தான் அனுபவிக்க வேண்டும் என்ற விதி இருக்கும் போது இது போன்ற கதைகள் சற்று நெருடத்தான் செய்கின்றன.

    எனக்கு அலுவலகத்தில் வேலை பளு அதிகமாகி விட்டது. இது போதாதென்று பகுதி நேர வேலை ஒன்றும் வந்து சேர்ந்துக் கொண்டு விட்டது. முழு நேர வேலையோடு பகுதி நேர வேலையும் செய்தால்தான் நான் பிழைக்க முடியும் என்ற நிலை இல்லை. இருப்பினும் இதைத் தவிர்க்கவும் முடியவில்லை. இவற்றால் போதிய நேரம் கிடைப்பதில்லை. ஆகையால் நான் வகுப்பறைக்கு வரும் நேரமும் குறைந்து விட்டது.

    ReplyDelete
  12. ayya,ithu thangal pathivu patriya kelvi illai,sameeba kaalamaga ennaku neram kidaipathaal ungal blogspot moolam jothidam konjam padithu varugiraen,ungal pathivugal moolam neengal puthagam veliyida povathu therihirathu.antha puthagathai vaanga ennakau viruppam,naan enna seiya vaendum.thangal bathilai ethirparkiraen.

    ReplyDelete
  13. ///"இறைவன் பேதம் இல்லாதவர்..மகான் மனிதன் என்ற‌ பேதம் இல்லாதவர்.."///

    முக்காலும் உண்மை ஐயா!வள்ளுவப் பெருந்தகை கடவுள் வாழ்த்தில்
    "வேண்டுதல் வேண்டமை இலாதவன்" என்றும் "இருள் சேர் இருவினை சேரா இறைவன்"என்றும் சொல்கிறார்.


    உங்க‌ள் தத்துவக் கட்டுரைகளில் சுய அனுபவமும் இணைந்து வருவதால், படிக்கச் சலிப்பு இல்லாமல் இருக்கிறது.மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  14. //அதுபோல குமரகுருபரர், காசி சுல்தானை, சிங்கத்தின் மீது சென்று சந்தித்த கதையும், சுல்தானின் பாராசீக மொழியில் பேசிய கதையும், வாரணாசியில் இடம் கேட்டு வாங்கிய கதையும் நமக்குத் தெரியும். //

    idhu enna puthusa irukku, enakku theriyalaye. ellaa peyargalum ore maathiri iruppathaal kulappangal innum athigarikkindrathu.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com