மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

5.1.11

இலக்கியச் சோலை - பகுதி ஒன்று

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இலக்கியச் சோலை - பகுதி ஒன்று

நம் முன்னோர்கள், நாம் தெரிந்துகொள்ள வேண்டியதை எல்லாம் நச்’ சென்று நாலு வரிகளிலேயே சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். நமக்குத்தான் அவற்றைப் படிப்பதற்கு நேரமுமில்லை. படித்தால் கடைப்பிடிப்பதற்கு மனமுமில்லை.

கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காததும் உங்கள் விருப்பம். யாரும் உங்களைக்கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் தெரிந்தாவது வைத்துக்கொள்ளலாம் இல்லையா?

உங்களுக்காக வாரம் ஒரு பழைய பாடலை - அசத்தலான பாடலைத் தரலாம் என்றுள்ளேன். இன்று, முதல் பாட்டைக் கொடுத்துள்ளேன். தொடர்ந்து வாரம் ஒரு பாடல் இனி வரும். படித்து மகிழுங்கள். முடிந்தால் கடைப்பிடித்துப் பயன் அடையுங்கள்
-----------------------------------------------------------------------
நல்ல காரியங்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவழிக்காமல், ஒட்டு மொத்தமாகச் சேர்த்துவைக்கப்படும் செல்வத்தின் அதாவது பணத்தின் நிலைமை என்ன ஆகும்?

நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, அதாவது நீங்கள் சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் சென்ற பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும் என்பதை ஒளவை மூதாட்டி அழகாக நான்கே வரிகளில் நச்’சென்று சொல்லியுள்ளார்.

முதலில் பாடலைப் பாருங்கள்:

“நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்
பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம்
கொள்ளையர்க்காம் கள்ளுக்காம் கோவுக்காம் சாவுக்காம்
கள்ளர்க்காம் தீக்காகும் காண்!”

- ஒளவையார்

நம்பன் அடியவர்க்கு - சிவனின் அடியவர்களுக்கு
நல்காத் திரவியங்கள் - மனமுவந்து வழங்காத செல்வங்கள்
பம்புக்காம் - சூனிய வித்தைகளுக்கும்
பேய்க்காம் - பேய் வழிபாடுகளுக்கும்
பரத்தையர்க்காம் - தாசிகளுக்கும்
வம்புக்காம் - வீண் செலவுகளுக்கும்
கொள்ளையர்க்காம் - கொள்ளை கொடுப்பதற்கும்
கள்ளுக்காம் - மதுவிற்கும்
கோவுக்காம் - பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும்
சாவுக்காம் - அவனுடைய சாவிற்கும்
கள்ளர்க்காம் - கள்வர்களால் கவர்ந்து கொள்ளப்படுவதற்கும்
தீக்காகும் - நெருப்பால் வெந்து அழிக்கப்படுவதற்கும்
காண் - உரியனவாகும் என்று தெரிந்து கொள்வாயாக!

இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பொருள் கொள்ள வேண்டும். அடியார்கள் என்பவர்கள் உலகம் மேன்மையுறப் பாடுபடுபவர்கள் என்று பொருள் கொள்ளுங்கள்.

சூனிய வித்தைகள் என்பதை இன்றைய காலகட்டத்தில், குதிரை ரேஸ், லாட்டரி சீட்டுக்கள், சீட்டாட்டம், விளயாட்டுக்களை வைத்து நடைபெறும் சூதாட்டங்கள் (betting)  என்று பொருள் கொள்ளுங்கள்

பேய்வழிபாடுகள் என்பதற்கு கடலை போடும் பெண்களைக் கூட்டிக்கொண்டுபோய், அல்லது நமது தீய நட்புக்களைக் கூட்டிக்கொண்டுபோய் - அதாவது கஃபிற்கும், ப்ஃபிற்கும் அல்லது பார்களுக்கும் கூட்டிக் கொண்டுபோய்ச் செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

பகை அரசால் பறிமுதல் செய்யப்படுவதற்கும் என்பதற்கு, வம்பு, வழக்கு, நீதிமன்றத்தண்டனை போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு செய்யும் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

சாவிற்கும் என்பதற்கு, தீராத நோய் நொடிகள் வந்து லட்சக்கணக்கில் சாகும்வரை செய்யப்படும் மருத்துவச் செலவுகள் என்று பொருள் கொள்ளுங்கள்

மற்ற வீண் செலவுகளுக்குச் சொல்லப்பட்டிற்கும் வார்த்தைகள் எல்லாம் எளிய சொற்களே. அதில் பொதிந்துள்ள பொருள் அனைவருக்கும் விளங்கும்படியாகவே உள்ளது. ஆகவே அவற்றிற்கு விளக்கம் சொல்லவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி என்ன செய்ய வேண்டும்?

அளவு முக்கியமில்லை! உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை - அதாவது 5% முதல் 10% வரை - எடுத்துக்காட்டுக்காகச் சதவிகிதத்தில் சொல்லியிருக்கிறேன் - நல்ல காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.

தர்ம காரியங்களுக்குச் செலவு செய்யுங்கள்.

இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர் களுக்குக் கொடுங்கள். செய்யுங்கள். அதுதான் தானமாகும்.

அன்புடன்
வாத்தியார்வாழ்க வளமுடன்!

41 comments:

Alasiam G said...

ஆகா அற்புதம் ஆசிரியரே!
இதற்கு "இலக்கியச் சோலை" என்று தலைப்பை வைத்து தொடங்குங்களே!
மிக்க மகிழ்ச்சி,
நன்றி.

Alasiam G said...

/////நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, அதாவது நீங்கள் சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் சென்ற பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும்/////
உண்மை தான், ஏதோ கொஞ்சமாது புண்ணியம் செய்தவர்களுக்கே மேலே தாங்கள் கூறிய நிலை... ஆனால் பலருக்கும் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே.. அவர்களின் கண் பார்க்கவே அப்படி பாடுபட்டு ஈயாது சேர்த்த பணத்தை ஏதோ ஓன்று சிம்மாசனம் போட்டுக் கொண்டு அழிப்பதை காண்கிறோம் ஐயா!.
நன்றி! நன்றி!!

kmr.krishnan said...

///"இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர் களுக்குக் கொடுங்கள். செய்யுங்கள். அதுதான் தானமாகும்."///

என்னுடைய வாரமலர் கட்டுரைக்கு இசைவாக இந்தப் பதிவினை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா!சிறுவயதில் இருந்தே இதுபோன்ற சூழலில் வளர்ந்து வரும் பாக்கியம் எனக்கு இறையருளால் வாய்த்தது.என் தந்தையாருக்கு வருமானம் மிகக்குறைவு. ஆனால் தினமும் காலை வேளையில் நாளிதழ் வாசிக்கத் திண்ணையில் அமரும்போது, ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி எடுத்துச் சென்று வைத்துக் கொள்வார். அக்காலத்தில் வீடு விடாகப் பிச்சை எடுப்பவர் எண்ணிக்கை அதிகம் இருந்தது. இப்போதும் உள்ளார்கள் என்றாலும்,அரிசிவாங்க‌ மறுக்கிறார்கள்."காசாகக் கொடு.எங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்கிறார்கள்.அதில் உள்ள ஒரு சிக்கல் என்ன என்றால்'டாஸ்மாக்' கடையில் நம் காசு சென்று சேர்கிறது என்பதுதான்.கண்ணால் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன்.எடுத்துக்கூட்டிச் சொல்லவில்லை. என்னை நம்புங்கள்.

தஞ்சையில் வள்ளலார் மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நாள்தோறும் பெரிய கோவில் அருகில் சுமார் 150 பொட்டலங்க‌ள் தானமாக அளிக்கிறார்கள்.
அதே இடத்தில் காலை வேளையில் தவறாமல் இட்லி தானம் ஒருவர் செய்கிறார்.திரு.சிவகுரு நாதன் என்று பெயர்.ஸ்ரீராமகிருஷ்ன மடத்துடன் தொடர்பில் இருப்பவர்.தன் இல்லத்தில் 15 ஏழை, அனாதைப் பையன்களை வைத்து உணவு அளித்துப் பராமரித்துப் பள்ளிக்கு அனுப்புகிறார்.இன்னும் திருமணம் செய்யாதவர். மடத்திலும் சேரவில்லை.முறையான அமைப்பு இன்னும் செய்யவில்லை.தனிநபரின் ஆர்வமே ஆதாரம்.

அடியேன் மன நோயுடன் தஞ்சைத் தெருக்களில் அலைவோருக்கு மதிய உணவு அளித்து வருகிறேன்.சுமார் 20 பேர் இருக்கும். தேடி அலைந்து தர வேண்டும்.
ஓரிடத்தில் கூட மாட்டார்கள்.தொகை கிடைக்கும் போது தான் செய்ய முடிகிறது.என்னுடைய உடல் நிலை, மழை காற்று போன்ற சமயங்கள் இன்னும் பல காரணங்களால் தொடர் சேவையாக நாள்தோறும் செய்ய முடியவில்லை.ஆனாலும் பல வருடங்களாக‌ இது நடந்து வருகிறது. இதில் எனக்கு உதவி என் அலுவலக இளவல் திரு மகேஸ்வரன் ஆவார்.இந்தச் சேவையை முறைப் படுத்தலாம் என்றால், பதிவு செய்யவும்
தானம் அளிப்போருக்குப் ப்தில் சொல்லவும் தயாராக இருக்கிறேன்.

பூஜ்ய தயானந்த சரஸ்வதி சுவாமிகள் முழு ஆதரவில் தஞ்சைப் பெரிய கோவிலில் நாள்தோறும் 10கிலோ நைவேத்யம் செய்து, வினியோகம் நடந்து வருகிறது.அதன் காரியக்காரர் திரு சாம்பமூர்த்தி, சுவாமிகளின் தஞ்சைப் பிரதிநிதி.அடியேன் அந்தச் சேவையில் பின் பாட்டுக்காரன்.

அமாவாசை அன்று பலரும் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு தெருவில் வாங்க ஆள்தேடி அலைவதைப் பார்க்கலாம். பலரும் ஆள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள்.ஓர் இருவரிடம் வாங்கி உண்ட பின்னர்
எங்காவது போய் பதுங்கி விடுகிறார்கள்.

தஞ்சையில் வழிப்போக்கருக்கான தங்கும் இடம் அமைத்து,தினசரி கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார் ஒப்பந்தக்காரர் திரு சுப்பையா. ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டிய நடவடிக்கை எடுத்துவருகிறார்.பதிவு செய்ய ஆவன நடவ‌டிக்கை எடுத்து உள்ளார். எல்லாம் கூடி வந்தால் நான் துணைக்கு வருகிறேன் என்று கூறியுள்ளேன்.ஆண்டவன் துணை செய்ய வேண்டும்.

த‌ஞ்சை மருத்துவக்கல்லூரி மூன்றாவது வாயில் அருகில் யாரோ ஒரு புண்ணியவான் நாள் தோறும் அன்னதானம் செய்கிறார்.சிறிய க‌ட்டிடம் கூட அமைத்துள்ளார். மருத்துவக்க‌ல்லூரிக்கு வரும் ஏழைகளுக்கு உதவியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.நடத்துபவருடன் இன்னும் அறிமுகம் கிடைக்கவில்லை.நன்றி.

kmr.krishnan said...
This comment has been removed by the author.
G.Nandagopal said...

சார்,
அவ்வை சொன்ன கருத்தை தற்காலத்திற்கேற்ப பொருளுரைத்த தங்களின் விளக்கம் மிகவும் அற்புதம்.நம் முன்னோர் அந்த காலத்தில் சொல்லியவை எல்லாம் எந்த காலத்திற்கும் பொருந்தும் என்பது இதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது. மேலும் மேலும் இது போன்ற நம் முன்னோர் வாக்கை தற்காலத்திற்கேற்ப பொருளுரைத்து எல்லோரையும் நல்வழிப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு ஆண்டவன் அருள் எப்போதும் உண்டு.
நன்றிகளுடன்
நந்தகோபால்

bhuvanar said...

அய்யா பாடலுக்கு நன்றி

பாண்டியன்

sundari said...

Good morning sir,

Thanks for ur lesson nice lesson sir.

sundari said...

சார்,
நான் ரொம்ப தானம் செய்வேன் ச்ர்ர் லக்கனத்தில் குரு சார் அப்புறம் அது(தான்ம செய்யும் மனசு) நம்ப வங்கி கொண்டு வ்ந்த வரம் அப்புறம் நீங்க என்க்கு ஜாதக புத்தகம் அனுப்பி வையுங்க சிக்கிரம்மா வெளியிடுங்க அதிலே அஷ்டவர்கத்தை சேருங்க சார். தொந்தவுக்கு மன்னித்துவிடுங்கள்.

Uma said...

ம்ம் அருமையான பாடல். புரிந்து கொள்ள எளிதாகவே உள்ளது. நானும் என்னால் இயன்றவரை செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

vprasanakumar said...

தானம் சால சிறந்தது.

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆகா அற்புதம் ஆசிரியரே!
இதற்கு "இலக்கியச் சோலை" என்று தலைப்பை வைத்து தொடங்குங்களே!
மிக்க மகிழ்ச்சி,
நன்றி.////

உங்களின் விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பெற்றது. மீண்டும் ஒருமுறை தலைப்பைப் பாருங்கள் ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//////Alasiam G said...
/////நீங்கள் யாருக்காக அத்தனை கஷ்டப்பட்டு சேர்த்துவைக்கின்றீர்களோ, அந்த செல்வங்கள், உங்களுக்குப் பிறகு, அதாவது நீங்கள் சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு மேல் உலகம் சென்ற பிறகு, நீங்கள் சேர்த்து வைத்துவிட்டுப்போன செல்வங்கள், உங்கள் வாரிசுகளால் அல்லது அவர்களின் வாரிசுகளால் என்ன நிலமைக்கு உள்ளாகும்/////
உண்மை தான், ஏதோ கொஞ்சமாது புண்ணியம் செய்தவர்களுக்கே மேலே தாங்கள் கூறிய நிலை... ஆனால் பலருக்கும் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே.. அவர்களின் கண் பார்க்கவே அப்படி பாடுபட்டு ஈயாது சேர்த்த பணத்தை ஏதோ ஓன்று சிம்மாசனம் போட்டுக் கொண்டு அழிப்பதை காண்கிறோம் ஐயா!.
நன்றி! நன்றி!!/////

அனுபவத்தை உணர்ந்து சொன்னமைக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

kmr.krishnan said...
///"இறைப்பணிக்கு, கல்விப்பணிக்கு, ஏழைப் பெண்களின் திருமணங்கள் போன்றவற்றிற்கு, வறியவர்களுக்கு, முதியவர்களுக்குத் தானமாகக் கொடுங்கள். அன்னதானம் செய்யுங்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவர் களுக்குக் கொடுங்கள். செய்யுங்கள். அதுதான் தானமாகும்."///
என்னுடைய வாரமலர் கட்டுரைக்கு இசைவாக இந்தப் பதிவினை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா!சிறுவயதில் இருந்தே இதுபோன்ற சூழலில் வளர்ந்து வரும் பாக்கியம் எனக்கு இறையருளால் வாய்த்தது.என் தந்தையாருக்கு வருமானம் மிகக்குறைவு. ஆனால் தினமும் காலை வேளையில் நாளிதழ் வாசிக்கத் திண்ணையில் அமரும்போது, ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி எடுத்துச் சென்று வைத்துக் கொள்வார். அக்காலத்தில் வீடு விடாகப் பிச்சை எடுப்பவர் எண்ணிக்கை அதிகம் இருந்தது. இப்போதும் உள்ளார்கள் என்றாலும்,அரிசிவாங்க‌ மறுக்கிறார்கள்."காசாகக் கொடு.எங்களுக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்கிறோம்" என்கிறார்கள்.அதில் உள்ள ஒரு சிக்கல் என்ன என்றால்'டாஸ்மாக்' கடையில் நம் காசு சென்று சேர்கிறது என்பதுதான்.கண்ணால் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன்.எடுத்துக்கூட்டிச் சொல்லவில்லை. என்னை நம்புங்கள்.
தஞ்சையில் வள்ளலார் மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நாள்தோறும் பெரிய கோவில் அருகில் சுமார் 150 பொட்டலங்க‌ள் தானமாக அளிக்கிறார்கள்.
அதே இடத்தில் காலை வேளையில் தவறாமல் இட்லி தானம் ஒருவர் செய்கிறார்.திரு.சிவகுரு நாதன் என்று பெயர்.ஸ்ரீராமகிருஷ்ன மடத்துடன் தொடர்பில் இருப்பவர்.தன் இல்லத்தில் 15 ஏழை, அனாதைப் பையன்களை வைத்து உணவு அளித்துப் பராமரித்துப் பள்ளிக்கு அனுப்புகிறார்.இன்னும் திருமணம் செய்யாதவர். மடத்திலும் சேரவில்லை.முறையான அமைப்பு இன்னும் செய்யவில்லை.தனிநபரின் ஆர்வமே ஆதாரம்.
அடியேன் மன நோயுடன் தஞ்சைத் தெருக்களில் அலைவோருக்கு மதிய உணவு அளித்து வருகிறேன்.சுமார் 20 பேர் இருக்கும். தேடி அலைந்து தர வேண்டும்.
ஓரிடத்தில் கூட மாட்டார்கள்.தொகை கிடைக்கும் போது தான் செய்ய முடிகிறது.என்னுடைய உடல் நிலை, மழை காற்று போன்ற சமயங்கள் இன்னும் பல காரணங்களால் தொடர் சேவையாக நாள்தோறும் செய்ய முடியவில்லை.ஆனாலும் பல வருடங்களாக‌ இது நடந்து வருகிறது. இதில் எனக்கு உதவி என் அலுவலக இளவல் திரு மகேஸ்வரன் ஆவார்.இந்தச் சேவையை முறைப் படுத்தலாம் என்றால், பதிவு செய்யவும்
தானம் அளிப்போருக்குப் ப்தில் சொல்லவும் தயாராக இருக்கிறேன்.
பூஜ்ய தயானந்த சரஸ்வதி சுவாமிகள் முழு ஆதரவில் தஞ்சைப் பெரிய கோவிலில் நாள்தோறும் 10கிலோ நைவேத்யம் செய்து, வினியோகம் நடந்து வருகிறது.அதன் காரியக்காரர் திரு சாம்பமூர்த்தி, சுவாமிகளின் தஞ்சைப் பிரதிநிதி.அடியேன் அந்தச் சேவையில் பின் பாட்டுக்காரன்.
அமாவாசை அன்று பலரும் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு தெருவில் வாங்க ஆள்தேடி அலைவதைப் பார்க்கலாம். பலரும் ஆள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள்.ஓர் இருவரிடம் வாங்கி உண்ட பின்னர்
எங்காவது போய் பதுங்கி விடுகிறார்கள்.
தஞ்சையில் வழிப்போக்கருக்கான தங்கும் இடம் அமைத்து,தினசரி கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார் ஒப்பந்தக்காரர் திரு சுப்பையா. ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டிய நடவடிக்கை எடுத்துவருகிறார்.பதிவு செய்ய ஆவன நடவ‌டிக்கை எடுத்து உள்ளார். எல்லாம் கூடி வந்தால் நான் துணைக்கு வருகிறேன் என்று கூறியுள்ளேன்.ஆண்டவன் துணை செய்ய வேண்டும்.
த‌ஞ்சை மருத்துவக்கல்லூரி மூன்றாவது வாயில் அருகில் யாரோ ஒரு புண்ணியவான் நாள் தோறும் அன்னதானம் செய்கிறார்.சிறிய க‌ட்டிடம் கூட அமைத்துள்ளார். மருத்துவக்க‌ல்லூரிக்கு வரும் ஏழைகளுக்கு உதவியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.நடத்துபவருடன் இன்னும் அறிமுகம் கிடைக்கவில்லை.நன்றி.///////

அடுத்த முறை பழநிக்குச் சென்றால், ரோப்கார் வளாகத்தின் எதிரில் பாருங்கள். சாதுக்கள் மடம் என்று ஒன்று உள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கொடைகளின் மூலம் தினமும் மதியம் 200 பேர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள். நானும் சில முறைகள் கொடை அளித்திருக்கிறேன். சாப்பிட்டும் இருக்கிறேன். சாப்பாடு சூப்பராக இருக்கும் அதுதன் சிறப்பு!

SP.VR. SUBBAIYA said...

kmr.krishnan said...
continued--
அடியேன் மன நோயுடன் தஞ்சைத் தெருக்களில் அலைவோருக்கு மதிய உணவு அளித்து வருகிறேன்.சுமார் 20 பேர் இருக்கும். தேடி அலைந்து தர வேண்டும்.
ஓரிடத்தில் கூட மாட்டார்கள்.தொகை கிடைக்கும் போது தான் செய்ய முடிகிறது.என்னுடைய உடல் நிலை, மழை காற்று போன்ற சமயங்கள் இன்னும் பல காரணங்களால் தொடர் சேவையாக நாள்தோறும் செய்ய முடியவில்லை.ஆனாலும் பல வருடங்களாக‌ இது நடந்து வருகிறது. இதில் எனக்கு உதவி என் அலுவலக இளவல் திரு மகேஸ்வரன் ஆவார்.இந்தச் சேவையை முறைப் படுத்தலாம் என்றால், பதிவு செய்யவும்
தானம் அளிப்போருக்குப் ப்தில் சொல்லவும் தயாராக இருக்கிறேன்.

பூஜ்ய தயானந்த சரஸ்வதி சுவாமிகள் முழு ஆதரவில் தஞ்சைப் பெரிய கோவிலில் நாள்தோறும் 10கிலோ நைவேத்யம் செய்து, வினியோகம் நடந்து வருகிறது.அதன் காரியக்காரர் திரு சாம்பமூர்த்தி, சுவாமிகளின் தஞ்சைப் பிரதிநிதி.அடியேன் அந்தச் சேவையில் பின் பாட்டுக்காரன்.

அமாவாசை அன்று பலரும் வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு தெருவில் வாங்க ஆள்தேடி அலைவதைப் பார்க்கலாம். பலரும் ஆள் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள்.ஓர் இருவரிடம் வாங்கி உண்ட பின்னர்
எங்காவது போய் பதுங்கி விடுகிறார்கள்.
தஞ்சையில் வழிப்போக்கருக்கான தங்கும் இடம் அமைத்து,தினசரி கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார் ஒப்பந்தக்காரர் திரு சுப்பையா. ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டிய நடவடிக்கை எடுத்துவருகிறார்.பதிவு செய்ய ஆவன நடவ‌டிக்கை எடுத்து உள்ளார். எல்லாம் கூடி வந்தால் நான் துணைக்கு வருகிறேன் என்று கூறியுள்ளேன்.ஆண்டவன் துணை செய்ய வேண்டும்.
த‌ஞ்சை மருத்துவக்கல்லூரி மூன்றாவது வாயில் அருகில் யாரோ ஒரு புண்ணியவான் நாள் தோறும் அன்னதானம் செய்கிறார்.சிறிய க‌ட்டிடம் கூட அமைத்துள்ளார். மருத்துவக்க‌ல்லூரிக்கு வரும் ஏழைகளுக்கு உதவியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.நடத்துபவருடன் இன்னும் அறிமுகம் கிடைக்கவில்லை.நன்றி.//////

எங்கள் பகுதி மக்கள் பரவலாக இதைக் காலம்காலமாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்

SP.VR. SUBBAIYA said...

////G.Nandagopal said...
சார்,
அவ்வை சொன்ன கருத்தை தற்காலத்திற்கேற்ப பொருளுரைத்த தங்களின் விளக்கம் மிகவும் அற்புதம்.நம் முன்னோர் அந்த காலத்தில் சொல்லியவை எல்லாம் எந்த காலத்திற்கும் பொருந்தும் என்பது இதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது. மேலும் மேலும் இது போன்ற நம் முன்னோர் வாக்கை தற்காலத்திற்கேற்ப பொருளுரைத்து எல்லோரையும் நல்வழிப்படுத்தும் தங்களின் முயற்சிக்கு ஆண்டவன் அருள் எப்போதும் உண்டு.
நன்றிகளுடன்
நந்தகோபால்/////

பழநி அப்பன் அருளினால்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் சுவாமி. இதற்கு வேண்டிய நேரத்தை ஒதுக்கித் தருபவன் அவன்தான்!

SP.VR. SUBBAIYA said...

/////bhuvanar said...
அய்யா பாடலுக்கு நன்றி
பாண்டியன்/////

நல்லது. தொடர்ந்து படியுங்கள் பாண்டியன்!

SP.VR. SUBBAIYA said...

///sundari said...
Good morning sir,
Thanks for ur lesson nice lesson sir./////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////sundari said...
சார்,
நான் ரொம்ப தானம் செய்வேன் சார் லக்கனத்தில் குரு சார் அப்புறம் அது(தானம் செய்யும் மனசு) நம்ப வாங்கிக் கொண்டு வந்த வரம். அப்புறம் நீங்க எனக்கு ஜாதக புத்தகம் அனுப்பி வையுங்க சிக்கிரம்மா வெளியிடுங்க அதிலே அஷ்டவர்கத்தை சேருங்க சார். தொந்தவுக்கு மன்னித்துவிடுங்கள்./////

தயாராகிக்கொண்டிருக்கிறது. வந்துவிடும்.பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Uma said...
ம்ம் அருமையான பாடல். புரிந்து கொள்ள எளிதாகவே உள்ளது. நானும் என்னால் இயன்றவரை செய்துகொண்டுதான் இருக்கிறேன்./////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////vprasanakumar said...
தானம் சாலச் சிறந்தது.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பிரசன்னகுமார்!

Arulkumar Rajaraman said...

Dear Sir

munpin theriyadhavargalukku seiyum (Udhavum) Udhaviye Miga Sirandhadhu..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Alasiam G said...

நன்றிகள் ஐயா!

kannan said...

வாத்தி ஐயா வணக்கம்.

எல்லோருக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு

அது என்னவென்றால்

"கண்ணன்!"

மேல் தீராத காதல் ( மோகம்), ஏக்கம், பித்தம், சித்தம் உள்ளவர்கள் என நிறைய நபர்கள் வருடா வருடம் சென்னை யில் இருந்து கண்ணனின் இருப்பிடம் நோக்கி நடந்தே சென்று மாயக்கண்ணனை காண்பது வழக்கம். அடியவனும் இரண்டு வருடம் சென்றுள்ளேன். அதன் பின்னர் கடந்த இருவருடமாக செல்ல இயலாமல் போகிவிட்டது

இந்த வருடம் வரும் ஜூலை
( ஆடி) மாதம் செல்ல உள்ளவர்களுடன் யாமும் செல்ல உள்ளேன் கண்ணனின் கருணை இருப்பின்.

நமது வகுப்பறை மாணவர்களுக்கு எவருக்கு மேனும் கண்ணனின் மேல் காதல் இருப்பின் தாங்களும் தாராளமாக வரலாம்.

மொத்தம் 5 நாட்கள் நடை பயணம், தங்கும் இடம், சாப்பாடு என அனைத்து வகை சாப்பாடும் ஐந்து தினங்களுக்கும் இலவசம் ஒருவருக்கு பூஜை பொருட்கள் வகைக்கு தலைக்கு RS:300 கொடுக்க வேண்டும் மனதார அவ்வளவிதான் சங்கதி.

பெண்கள், குழந்தைகள், , சிறியவர்கள், வயதானவர்கள், வறுமை நிலைமையில் உள்ளவர்கள் மிகவும் வயதானவர்கள் , நல்ல பதவி, செல்வாக்கு உள்ளவர்கள் என

நிறைய நபர்கள் கால் மிதியடி அணிந்து கொண்டும், கால் மிதியடி அணியாமலும் வருடா வருடம் வருவது வழக்கம்.

சரி! எங்கு இருந்து என்று தானே கேட்கீண்றீர்கள் வேறு எங்கும் இல்லை மாய கண்ணனை காண , கண்ணனின் நாமத்தை கூறி கொண்டே

சென்னை நங்கநல்லூர் முதல் கண்ணனின் இருப்பிடம் ஆன

"திருமலா திருப்பதி!" வரைக்கும் .

ஆம்! "திருமலா திருப்பதி பாத யாத்திரை!".

41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் கண்ணனை காண செல்லும் முன்னர் அதற்குரிய அனைத்து ஏற்பாடும் செய்த பின்னர் வாத்தியார் அவர்கள் அனுமதியுடன் வாத்தியாரின் வகுப்பறையில் முறையாக அறிவிக்கப்படும்

இதை இப்பமே கூற காரணம் . ஒன்று இன்றைய பாடம்.

மற்றது இப்பொழுதே கூறியால் தான் அயல் மாநிலத்தில் மற்றும் நாட்டில் உள்ளவர்கள் தங்களுடைய விடுமுறை என நிறைய ஆயத்த வேலைகளை செய்ய முடியும்.

{ மாயக்கண்ணனை காண வரும் அடியார்களுக்கு கடந்த இரு வருடமாக கண்ணனின் கருணை கொண்டு எமது சக்திக்கு ஏற்றவாறு கைங்காரியம் செய்து வருகின்றேன் குருநாதரின் துணைகொண்டு.}

venkatesan.P said...

அய்யா,
இன்றைய தலைப்பு மிகப் பொருத்தம். நாம் சம்பாதிப்பதில் குறைந்த பட்சம் 10 சதவீதமாவது பிறர்க்கு உதவுவதற்கு என்று பயன்படுத்த வேண்டும் என்று இந்த புத்தாண்டில் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என நமது வகுப்பறை கண்மணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
கோயம்புத்தூர்

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
இலக்கியச்சோலை பூத்து மலர்ந்து பூவாகி காயாகி கனியாகி பலன் கொடுக்க‌
இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்.
அன்புடன், அரசு.

sundari said...

venkatesan.P said...

அய்யா,
இன்றைய தலைப்பு மிகப் பொருத்தம். நாம் சம்பாதிப்பதில் குறைந்த பட்சம் 10 சதவீதமாவது பிறர்க்கு உதவுவதற்கு என்று பயன்படுத்த வேண்டும் என்று இந்த புத்தாண்டில் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என நமது வகுப்பறை கண்மணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
கோயம்புத்தூர்//

ok ok i am ready i agree hi we will give eye after our death Dear
do u agree for this tell me

minorwall said...

இன்றைய பதிவில் ஆசிரியர் அறிவுறுத்திய விஷயங்களை முயன்றால் நல்ல சேவை மனப்பாங்கை வளர்க்க, வாழ்வை நெறிப்படுத்த உதவியாக இருக்கும்..

KMRK அவர்கள் சேவை தொடர்பாக தஞ்சையில் நடந்து வரும் விஷயங்களை பட்டியலிட்டு இருப்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது..தெரியப்படுத்தியதற்கு நன்றி..

வெங்கடேசன்.P ., மற்றும் சுந்தரி அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போலே பலருக்கும் தோன்றினால் நல்லதுதான்..

iyer said...

அய்யா . . .
சும்மா அசத்திட்டீங்க . .

பாட்டில..பொருளில என்பதை விட
இன்றைய இளைஞர்களை
நல்ல பக்கம் திருப்பவைச்சுருக்கீங்களே
அதுக்குத்தான்
"அசத்திட்டீங்கன்னு"
சொல்றேன். . .

இந்த ஒரு செயலுக்காகவே
நீங்க 121 ஆண்டு ஆரோக்கியமாக
ஆனந்தமாக வாழ அந்த பழனியப்பன்
அருளாசி வழங்க வேண்டும்..

வாழ்க..
நலமுடன்..
பலமுடன்..
வளமுடன்..

iyer said...

நீங்க ஒரு டிரஸ்டு தொடங்கி வையுங்கள்..
(ஒரு வேளை இதுவரை தொடங்கவில்லைஎனில்)

முதல் தொகை என்னுடையதாக இருக்கட்டும்..

தொடங்கும் எண்ணம் இருந்தால் எழுதுங்கள்..

பிள்ளையார் சுழி போடறேன் . .
visuiyer@yahoo.com

venkatesan.P said...

venkatesan.P said...

அய்யா,
இன்றைய தலைப்பு மிகப் பொருத்தம். நாம் சம்பாதிப்பதில் குறைந்த பட்சம் 10 சதவீதமாவது பிறர்க்கு உதவுவதற்கு என்று பயன்படுத்த வேண்டும் என்று இந்த புத்தாண்டில் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என நமது வகுப்பறை கண்மணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மிக்க அன்புடன்
வெங்கடேசன்
கோயம்புத்தூர்//

ok ok i am ready i agree hi we will give eye after our death Dear
do u agree for this tell me//

I agree with 200% commitment.
By doing that
Somebody can see this world after
our days in this world.

our days in this world.//
no dear our eyes are seeing so many things without our body,brain
by another person.

kmr.krishnan said...

கண்தானம், உடல் தானம் பற்றிய விழிப்புணர்வையும்,அந்த நடைமுறைகளையும்,வகுப்பறையில் பிரபலப்படுத்தலாம்.உண்மையில் இன்று
உலக அளவில் கண் தானத்தில் இலங்கையும், பெள‌த்த மதமும் முன்னணியில்
நிற்கின்றன.அந்த இடத்தில் இந்தியா முன்னணிக்கு வர வேண்டும் என்றும், உலகிற்கே கண்ணாக இந்தியா விளாண்க்கா வேண்டும் என்று பேராசைப்படுகிறேன்.

arthanari said...

வரவுக்கு ஒரு(அ)இரண்டு வழிகள், செலவுக்கு இத்தனைவழிகளா, ஓரு சமயம் இதை தாண்டி வாரிசு நலலவனாக இருந்தால் அதுவும் கர்மவினையா?

Alasiam G said...

///// iyer said...

நீங்க ஒரு டிரஸ்டு தொடங்கி வையுங்கள்..
(ஒரு வேளை இதுவரை தொடங்கவில்லைஎனில்)

முதல் தொகை என்னுடையதாக இருக்கட்டும்..

தொடங்கும் எண்ணம் இருந்தால் எழுதுங்கள்..

பிள்ளையார் சுழி போடறேன் . //////

உண்மைதான் அற்புதமான விசயம்....

அதற்காகத் தான் முன்பே வாத்தியார் மின்-அஞ்சல் பாடம் என்று தொடங்கி அதில் ஒரு சிறியத் தொகையை வாசிப்போரிடம் பெற்று; அதை இது போன்ற தொரு நல்லக் காரியத்திற்கு உதவ எண்ணினார். அது நடைமுறையில் இருக்கிறது (அதில் நானும் ஒரு உறுப்பினரே கருணையோடு வாருங்கள் இயன்றதைத் தாருங்கள்).... ஆகவே இது போன்று எண்ணம் கொண்டவர்கள் ஆசிரியர்களை மீண்டும் தொடர்பு கொள்ளலாம் என வேண்டுகிறேன் (ஆசிரியர் அனுமதிப் பெறும் முன் ). எவ்வளவோ செலவழிக்கிறோம்... இது போன்றதொரு உதவி வேண்டுவோருக்கு கொஞ்சம் செலவளிக்கலாமே.. நாம் தனியாக செய்தால் நிறையக் கொடுக்க முடியாது... ஆகவே கூட்டாகச் சேர்ந்து செய்தால் அது கொஞ்சம் பெரிதாக இருக்கும்.. ஒரு நல்ல வகையில் பிறருக்குப் பயன்படும்...

நன்றி.... நன்றி....

Alasiam G said...
This comment has been removed by the author.
kmr.krishnan said...

///"ஏற்பது இகழ்ச்சி" கூறிய மூதாட்டி அடுத்தே "ஐயமிட்டு உண்" என்றுக் கூறியுள்ளாள்... யாசிப்பது தவறு என்று யாரும் ஏற்காமல் (யாசிக்காமல்)
இருந்துவிட்டால்... யாருக்கு கொடுப்பது.."///

'ஏற்பது இகழ்ச்சி' இல்லாதவர்களுக்குக் கூறப்பட்டது.இலவசமாகக் கிடைக்கிறது
என்பதற்காக தன் முயற்சி இல்லமல் சோம்பலை வளர்த்துக் கொள்ளும் போக்கிலிருந்து விடுபட்டு உழைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தவே ஏற்பதை இகழ்ச்சியக்கினார்.

'ஐயமிட்டு உண்' இருப்பவர்களுக்காகக் கூறப்பட்டது.சமூகத்தைப் பற்றி அக்கறையின்றி தன் சுகத்தையே பெரிதாகக் கொண்டு பொருள் சேர்க்கும் பணக்காரர்களின் கவனத்தைத் திருப்பக் கூறப்பட்டதே ஐயமிட்டு உண்.

ஏற்காதவர்களாக எல்லோரும் இருப்பதும்,கொடுக்கத் தயங்காதவர்களும் இருக்கக் கூடியது இராம ராஜ்ஜியத்தில்தான்.கலியுகத்தில் சாத்தியமில்ல. இர‌ண்டு வகையான சாத்தியக்கூறுகளும் இப்போது இருக்கவே செய்யும்.நன்றி ஹாலாஸ்யம்.

Alasiam G said...
This comment has been removed by the author.
kmr.krishnan said...

///"இராம பட்டாபிஷேகச் செய்தியைச் சொன்னவர்களுக்கெல்லாம் நிதியை வாரி வாரி வழங்கினராம்.

ஒரே ஒரு விஷயத்தை இங்கே கூற விரும்புகிறேன்... நான் ஊருக்கு வந்து திரும்பும் போது எங்கள் பக்கத்துவீட்டில் வசிக்கும் ஆசிரியத் தம்பதிகளிடம் சென்று அவர்களை வணங்கிவிட்டு வருவது எனது வழக்கம்.... அப்போது அவர்கள் எனக்கு அவர்கள் கையில் இருக்கும் ஏதாவது சிறிய தொகையைத் தருவார்கள்.... அதை நான் மறுக்காமல் வாங்கிக் கொள்வேன்.... அது இன்றும் நடக்கிறது... எனது நிலையை அவர்கள் நன்கு அறிவார்கள்.... இருந்தும் அந்த நிலையில் அவர்களின் அந்த கொடுக்கும் உயர்ந்த மனத்திற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்.... மறுக்காமல் வாங்கிக் கொள்வேன்... அதுவே நான் அவர்களுக்குச் செய்யும்... மரியாதையும் கூட... பெரியவர்கள் தருவது... எவ்வளவு வசதி இருப்பினும் சிறியவர்கள் மறுக்காமல் பெறுவது... ஒரு ஆனந்தம் தான்..."///

எங்கள் இல்லத் திருமணங்க‌ளில் "பல தாம்பூலம்" என்பதாக மிகச் சிறிய தொகை ரூ1,2,5 பெருமானமே உள்ள காசுகள் உறவினர்களைத் தேடி தேடி அளிப்பார்கள்.அது வந்திருந்தவர்களை திருமணம் முடிந்தபின் மறக்காமல் சந்தித்து முகமன்,ந‌ன்றி கூறவும், மகிழ்ச்சியைப் ப‌கிர்ந்து கொள்ளவும் செய்யப்பட்ட ஓர் ஏற்பாடு. மேலும் விடை கொடுக்கவும் அது பயன்படும்.அப்போது அளிக்கும் தொகை பிச்சை என்று கொள்வதில்லை.

தாங்க‌ள் கூறியுள்ள இராமயண சம்பவத்திலும் பட்டாபிஷேக நிகழ்ச்சியிலும்
அளிக்கப்பட்டது பரிசே ஆகும். பிச்சை கிடையாது. ந‌ற்செய்தியைக் கொண்டு வருவோருக்கு அளிக்கும் பரிசு, பிச்சை ஆகாது. பரிசாக அளிப்பதைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் கொடுப்பவரை நாம் மதிக்காமல் போனதாகப் பொருள் கொள்ளப்படும்.மகிழ்ச்சியில் நம் பங்கு இல்லை என்பதாகப் பொருள்படும்.

"கொள்வார் இலாமையால் கொடுப்பாரும் இல்லை மாதோ.."என்பதே கம்பன் காட்டும் காட்சி.

தாங்கள் சொல்லும் ஆசிரியர் அளிக்கும் தொகையும் 'ஆசீர்வாதப்பணம்' என்று
பெயர். அது எங்கள் இல்லத்திலும் உண்டு.பயணத்தின் போது அந்தப் பணத்தின் வழியே மூத்தோர் தங்கள் நல் எண்ணங்களை நம்முடன் வழித்துணையாக‌ அனுப்புகிறார்கள். அதுவும் பிச்சை கிடையாது.

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப்புகினும் கற்கை நன்றே..."என்பதையும் உற்று நோக்குக
.
"இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்"

"இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு"

ஆகிய குற்ட்பாக்களை ஆராய்க.நல்குரவு, இரவு, இரவச்சம் ஆகிய அதிகாரங்களை ஆராய்க.

Alasiam G said...
This comment has been removed by the author.
kmr.krishnan said...

///"எது வானாலும் சரி எனக்குத் தோன்றுவது.... நாமிருவரும் வெவ்வேறு பாசையில் பேசுகிறோம் அப்படியே நம்புகிறேன்.... ஆக இது சங்கடத்தில் சென்று
முடியும்..."///
என் பின்னூட்டங்கள் எல்லாம் பகிர்தலுக்காகவும், மேல் அதிகத் தகவலுக்காகவும்
எழுதப்படுபவையே!யாருடைய அறிவுத் திறன‌னையும் கேள்விக்கு இலக்காக்கும்
நோக்கம் ஏதும் இல்லை.மிகச் சிலரே இந்தப் பின்னூட்டங்கள் இடுவது,வாசிப்பது
செய்கிறோம்.நமக்குள் எந்த மன வேற்றுமையும் வேண்டாம்.மனம் புண்படும் படி எந்த பின்னூட்டமும் இடவில்லை என்று இதுநாள் வரை நம்பியிருந்தேன்.உங்களின் இந்தப் பின்னூட்டம் என்னை விழிப்படையச் செய்கிறது.இனி இன்னும் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.எந்த உள் நோக்கமுமில்லாமல் எழுதப்பட்ட பின்னூட்டங்கள் உங்களை எவ்வகையிலேனும் புண்படுத்தும் வகையில் அமைந்து இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். மனம் வருந்த வேண்டாம். என்னால் எந்த சங்கடங்களும் வராது.
பாடியவன் பாட்டைக்கெடுத்தான்.எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான் என்பது என் வரையில் சரிதான் என்று தோன்றுகிறது.

Alasiam G said...

////எந்த உள் நோக்கமுமில்லாமல் எழுதப்பட்ட பின்னூட்டங்கள் உங்களை எவ்வகையிலேனும் புண்படுத்தும் வகையில் அமைந்து இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.///

சார் ரொம்ப பெரிய வார்த்தை... இப்படி எழுதுவது உங்களின் உயர்ந்தக் குணத்தை காண்பித்தாலும்.... நீங்க என்னமோ ' நிபந்தனையற்ற மன்னிப்புக் ' என்ற பெரிய வார்த்தையை கூறி இருக்க வேண்டாம்... தயவு செய்து பின்னூட்டத்திலிருந்து அகற்றுங்கள் சார்...
//// மனம் வருந்த வேண்டாம். என்னால் எந்த சங்கடங்களும் வராது ////
தங்களின் கணிவந்த அன்பிற்கு நன்றிகள் சார்...