மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

28.1.11

ஆடிவரும் ஆட்டமும் தேடிவரும் கூட்டமும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆடிவரும் ஆட்டமும் தேடிவரும் கூட்டமும்!

இன்றைய பக்தி மலரை முருகனின் பாடல் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++=====

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

சேவடியைக் காணவென்றே ஓடிவருவார் - அவர்
சிந்தையிலே உந்தனையே பாடிவருவார்
முருகா பாடிவருவார்

மச்சக் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

மாறாத மலையினிலே ஏறிவருவார்
ஏறுமயில் வாகனனை காணவருவார்

உள்ளவனும் இல்லார் என்ற பேதமில்லை - அருள்
வள்ளல் உந்தன் அன்புக்கோர் எல்லை இல்லை

பன்னீர் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

தேரோடும் வீதியெங்கும் கூடியிருப்பார் - வள்ளி
தெய்வயானை அம்மையுடன் கண்டு களிப்பார்
முருகா கண்டு களிப்பார்

பூங்காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே - முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே - முருகா கூட்டத்திலே

பாடியவர்கள். சூலமங்கலம் சகோதரிகள்
இசை: குன்றக்குடி வைத்தியநாதன்
பாடல் ஆக்கம்: கோவைக்கூத்தன்


வாழ்க வளமுடன்!

8 comments:

kmr.krishnan said...

"முருகா! முருகா! முருகா!

வருவாய் மயில்மீதினிலே!
வடிவேலுடனே வருவாய்!
தருவாய் நலமும் த‌கவும் புகழும்
தவமும் திற‌மும் தனமும் கனமும்!"
===(முருகா, முருகா, முருகா!)"

இது மஹாகவி. முருகனை அடிக்கடி நினைவுபடுத்தும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.

Alasiam G said...

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வள்ளி மணாளனுக்கு அரோகரா!
செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா!
சேவற் கொடியோனுக்கு அரோகரா!
பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா!
பஞ்சா அமிர்தப் பிரியனுக்கு அரோகரா!
பன்னீர்க் காவடிகள்... பறவைக் காவடிகள்...
மயில்க் காவடிகள்... மச்சக் காவடிகள்....
புஷ்பக் காவடிகள்... புனிதக் காவடிகள்....
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
சூரசம்காரனுக்கு..... பன்னிரு கையனுக்கு...
ஆறுமுகனுக்கு.....
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனுக்கு....
கந்தனுக்கு....
கடம்பனுக்கு
கதிர்வேலனுக்கு
அரோகரா... அரோகரா.....அரோகரா
வேல் வேல்... வெற்றிவேல்...
வேல் வேல்... வெற்றிவேல்....
பன்னீர்க் காவடிகள்.... புஷ்பக் காவடிகள்...

ஆஹா! அற்புதமான உணர்வு!!... அப்பன் முருகனை அப்படியேத் தொடர்ந்துப் பாடினால்.... மனம் லகிக்கும்.... ஆன்மா வலுபெறும்....
நன்றிகள் ஐயா!

vprasanakumar said...

"முருகா" என்றால் மனம் உருகும்.

நன்றி ஐயா.

vprasanakumar said...

கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா

வாழ்க உஙகள் தொண்டு.

Arulkumar Rajaraman said...

Dear Sir

Arumayana paadal...

அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு
(தர்மம் தலை)

Super line sir..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

my blog said...

தானம் வழங்கும் கைகள்,

பெயோரை கண்டால் குனியும் தலை,

துக்கத்திலும் சோராத முகம்,

உண்மை மட்டுமே பேசும் நாவு,

நல்ல ஒழுக்கத்தில் இருந்து வழுவாத மனம்,

கெட்டதை கேட்காத காதுகள் இவைகள் தான் உண்மையான அழகு.

குருஜி சொன்ன பொன்மொழிகள்

மதுரை சரவணன் said...

அருமையான பாடல் . வாழ்த்துக்கள்

தங்கம்பழனி said...

இடுகைகளுக்கு தலைப்பு வைப்பது எப்படி? என்று ஒரு வகுப்பை எடுக்கலாமே.. ஐயா..! ஒவ்வொரு இடுகையின் தலைப்பிலேயே எல்லோரையும் கவர்ந்து விடுகிறீர்கள்..!