மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 431 - 440. Show all posts
Showing posts with label Lessons 431 - 440. Show all posts

10.5.11

Astrology அவனைக் கண்டால் வரச்சொல்லடி! அன்றைக்குத் தந்ததைத் தரச்சொல்லடி!

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology அவனைக் கண்டால் வரச்சொல்லடி! அன்றைக்குத் தந்ததைத் தரச்சொல்லடி!

தலைப்பைப் பார்த்து விட்டு, “வாத்தியார் நீங்களுமா?” என்று கேட்பவர்கள் பதிவை விட்டு விலகவும்.

இந்தப் பதிவை முழுமையாகப் படித்துவிட்டு, ஒரு முடிவிற்கு வரக்கூடிய மனப்பான்மை உள்ளவர்கள் மட்டும் தொடரவும்
நேசத்துடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------
காதல் அதீத சக்தி வாய்ந்தது. காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியது.  எடுத்துச் சொல்ல
முடியாத ஆனந்தத்தைக் கொடுக்கக்கூடியது.

காதல் வயப்பட்டிருக்காத மனிதனோ அல்லது மங்கையோ இருக்க முடியாது. நான் இருந்திருக்கிறேன் என்று யாராவது சொன்னால் அது பொய்!

என் ஜாதகத்தில் சுக்கிரன் இல்லை என்று சொன்னால் அது எப்படி உண்மையாகும்? ஜாதகத்தில் எங்காவது ஒரு இடத்தில் சுக்கிரன் இருப்பாரல்லவா? சுக்கிரன் இருக்கும்போது எப்படிக் காதல் இல்லாமல் இருக்கும்?

ஜாதகத்தில் சுக்கிரன் இல்லை என்றால், ஜாதகம் பொய்யானது.

காதல் இல்லை என்றால் வாழ்க்கையும் பொய்யானது. சொல்லும் ஆசாமியும் பொய்யானவன்.

காதல் பல வகைப்படும். விடலைக் காதல். கருத்தொன்றிய காதல், ஒரு தலைக் காதல், திருமணத்திற்கு முன் காதல், நிறைவேறிய காதல், பிரிவில் முடிந்த காதல். திருமணத்திற்குப் பின் காதல் - அதாவது கழுத்தை நீட்டியவளையே தீவிரமாகக் காதலிப்பது.

ஜாதகத்தில் முன்யோகம், பின்யோகம் என்று இரண்டு அமைப்புக்கள் இருப்பதைப்போல காதலிலும் இரண்டு அமைப்புக்கள் உள்ளன. பலருக்கும் திருமணத்திற்குப் பிறகு கட்டிக் கொண்டவளையே  அல்லது கட்டிக்கொண்டவரையே காதலிக்கும் யோகம் (?!) இருக்கும்

படைக்கப்பெற்ற ஜீவராசிகளுக்கெல்லாம் வேண்டிய உணவும் சேர்ந்தே படைக்கப்பெற்றிருக்கிறது. அதுபோல எல்லா உயிர்களுக்கும் காதல் உணர்வும் சேர்ந்தே கொடுக்கப் பெற்றிருக்கிறது..

சுக்கிரன் ஜாதகத்தில் உச்சமாக இருந்தாலும் காதல் உணர்வு இருக்கும். நீசமாக இருந்தாலும் காதல் உணர்வு இருக்கும். அந்த உணர்வுகள் எந்த அளவிற்கு மீட்டப் பெறுகின்றன என்பதுதான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும்.

ஒரு அம்சமான பெண்ணைப் பார்க்கும் போது, “அடடா, இவள் எனக்கு மனைவியாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்?” என்று ஒரு காலகட்டத்தில், ஒரு தடவையாவது நினைத்திருக்காத, விரும்பியிருக்காத மனிதனே இருக்க முடியாது. விரும்பியிருக்காத பெண்ணும் இருக்க முடியாது.

அவளை நினைத்துப் பலநாட்கள் தூக்கத்தைத் தொலைத்தவனும் இருப்பான். வீண் ஆசை என்று ஒதுக்கி விட்டு அடுத்த நாளே மறக்க முயற்சித்தவனும் இருப்பான். அதுதான் மனித இயல்பு. சுக்கிரனின் உள்ளடி வேலைகள்.

திருமணத்திற்கு முன்பு வாய்ப்புக் கிடைக்காமல் (அதுவும் ஜாதகப் பலன் தான்) திருமணத்திற்குப் பின் வந்தவளை மாய்ந்து மாய்ந்து காதலித்தவர்களும், காதலிப்பவர்களும் உண்டு. அது உன்னதமான காதல். உன்னதம் ஏன் என்றால், அதில் எந்தப் பிரச்சினைகளுக்கும் இடம் இல்லை அதனால் அது உன்னதமானது.

நாளும் பொழுதும் வளரக்கூடியது.

“உன் கண்ணில் நீர் வழிந்தால்
   என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
 என் கண்ணில் பாவை அன்றோ
   கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

 உன்னை கரம் பிடித்தேன்
   வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
   உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி

 கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி
   வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில்
   என் விம்மல் தனியுமடி

 ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன
   வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

 என்று பாடி மயங்கிப் போவார்கள். அல்லது மாய்ந்து போவார்கள் அந்தவகைத் தம்பதிகள்
-------------------------------------------------
சிலருக்கு, அவர்களுடைய இளம் வயதிலேயே ஒரு நல்ல பெண்ணின் சிநேகம் கிடைத்து, அது காதலாக மாறி அலைக்கழிக்கும். அவர்கள் இப்படிப் பாடி, தங்களை மரந்துவிட்டு அல்லது தங்களைக் காதலுக்குப் பறிகொடுத்துவிட்டு இருப்பார்கள்:

  ‘நீயில்லாத உலகத்திலே நிம்மதி இல்லை-உன்
     நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
  காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை.-உன்னைக்
     கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை.

  உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
    உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
  கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
    காவல் தாண்டி ஆவல் உன்னை தேடி ஓடுது.

  பொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னை
    புரிந்துக் கூட சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே.
  இன்று நாளை என்று வாழ்வை எண்ணுகின்றேனே - நான்
    என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே!!

---------------------------------------------------------------------
சில அசுரக் காதல்களும் உண்டு. காதலிக்காக உலகத்தையே புரட்டுவேன் என்பான். அவர்களின் மன ஓட்டத்தைக் கவிஞன் ஒருவன் இப்ப்டிப் பாட்டாக எழுதினான். Fantasy காதல் ரகத்தைச் சேர்ந்தது இது.

 “தொடு தொடு எனவே வானவில் என்னை
    தூரத்தில் அழைக்கின்ற நேரம்

 விடு விடு எனவே வாலிப மனது
    விண்வெளி விண்வெளி ஏறும்

 மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
   தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக

 வானில் ஒரு புயல் மழை வந்தால்
   அழகே எனை எங்கனம் காப்பாய்?

 கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
   இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்

 சத்தியமாகவா?

 நான் சத்தியம் செய்யவா..
  (தொடு தொடு..)

 இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
   என்னை எங்கு சேர்ப்பாய்?

 நட்சத்திரங்களை தூசு தட்டி
   நான் நல்ல வீடு செய்வேன்


(நட்சத்திரங்கள் ஒன்றில் இடம் பிடித்து, அவளுக்காக வீடு கட்டுவானாம். எப்படி இருக்கிறது கற்பனை? அவள் விட்டாளா? இல்லை. அவளும் பதிலுக்கு தன் கேள்விக் கணைகளைத் தொடர்கிறாள்)

 நட்சத்திரங்களின் சூட்டில் நான்
  உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?

 உருகிய துளிகளை ஒன்றாக்கி
   என் உயிர் தந்தே உயிர் தருவேன்

 ஏ ராஜா இது மெய்தானா?

 ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
   முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை

 நான் நம்புகிறேன் உன்னை
  (தொடு தொடு..)

 நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
   இதில் எங்கு நீச்சலடிக்க?

 அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
   இந்த அல்லி ராணி குளிக்க

 இந்த நீரிலே அன்பு செய்தால்
   என்னவாகுமோ என் பாடு?

 காற்று வந்து உன் குழல் கலைத்தால்
   கைது செய்வதென ஏற்பாடு

(காதலிக்காக, அவளுடைய கூந்தலைக் கலைக்கும் காற்றைக் கைது செய்வேன் என்கிறான். இதுதான் அசுரக் காதலின் உச்சக் கட்டம்)

 பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்

 ஏ ராணி அந்த இந்திரலோகத்தில்
    நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்

 உன் அன்பு அது போதும்
  (தொடு தொடு..)”

----------------------------------------------------------------
அது போல ஏக்கக் காதலும் உண்டு. அதையும் பாட்டில் சொன்னான் ஒரு கவிஞன்

 “நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
    இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
  தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
   தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

  வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
    எண்ணம் என்னும் மேடையில் பொன்மலை சூடினான்
  கன்னியழகை பாடவோ அவன் கவிஞனாகினான்
    பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
    கலஞனாகினான்........

-------------------------------------------------------------------
இப்படி ஆயிரம் பக்கங்களுக்கு சலிப்பில்லாமல் காதலைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.

இன்று காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு அல்லது காதல் வயப்பட துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அல்லது அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு, ஜோதிடம் மூலம் என்ன சொல்லலாம் என்பதே கட்டுரையின் நோக்கம்

காதல் கலகலப்பில் முடியுமா அல்லது கலக்கத்தில் முடியுமா?: இதுதான் கேள்வி

அதற்கான விடையை நாளை பார்க்கலாம்.

கட்டுரையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

(தொடரும்)
----------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

2.5.11

Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது

---------------------------------------------------------------
 Astrology ஸீனியாரிட்டி இங்கே செல்லாது

Seniority & Priority எல்லாம் இங்கே செல்லாது. முன்னுரிமை, முக்கியத்துவம் என்ற வாதம் எல்லாம் இங்கே எடுபடாது

Seniority (மூப்புரிமை)
1. The state of being older than another or others or higher in rank than another or others.
2. Precedence of position, especially precedence over others of the same rank by reason of a longer span of service.

Priority (முன்னுரிமை)
1. Precedence, especially established by order of importance or urgency.
2. a. An established right to precedence.b. An authoritative rating that establishes such precedence.
3. A preceding or coming earlier in time.
4. Something afforded or deserving prior attention.

மூத்தவன், இளையவன் என்ற பாகுபாடு எல்லாம் இங்கே கிடையாது. நான் பெரியவன், இவன் சின்னவன் என்ற வேறுபாடும் இங்கே கிடையாது. நான் ஸீனியர். நீண்ட நாட்கள் அனுபவம் மிக்கவன். இவன் எனக்குப் பிறகு வந்தவன். ஜீனியர்.ஆகவே எனக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இடமில்லை. சுருக்கமாகச் சொன்னால் உங்கள் நிலைப்பாடுகள், வாதங்கள் எதுவுமே இங்கே செல்லாது.

எங்கே?

அதாவது ஸீனியாரிட்டிக்கும், பீரியாரிட்டிக்கும் மதிப்பே இல்லாத இடம் எது?

காலதேவனின் மேற்பார்வையில் இருக்கும் மரண அமைச்சகம்தான் அது (Ministry of death)

நேரம் முடியும்போது சொல்லாமல் கொள்ளாமல் அள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், அவனுடைய தூதர்கள்

“காலா, வாடா! உன்னைக் காலால் மிதிக்கிறேன்” என்று ஒரு மாபெரும் கவிஞன் சொன்னான். அவனையும் காலதேவன் விட்டு வைக்கவில்லை. 39 வயது முடிவதற்குள்ளாகவே அவரைத் தூக்கிக்கொண்டு போய்விட்டான்

“காலன் ஒரு படிப்பறிவில்லாதவன். கண்ணதாசன் என்ற அரிய புத்தகத்தைக் கிழித்துப்போட்டுவிட்டான்” என்றார் கவிஞர் வாலி. ஆதங்கத்திலும், துக்கத்திலும் நாம் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம்.

Meeting is always a pleasure
Parting is always painful

மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிச் சொல்வார்கள்:

1. மரணம் அனைவருக்கும் பொதுவானது (Death is commom to all)
2. மரணம் தவிக்கமுடியாததது (inevitable, Impossible to avoid or prevent)
3. ஒவ்வொருநாளும் நாம் மரணத்தை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம் (walking towards death)

சாதாரண மனிதனுக்கு இதெல்லாம் தெரியாது. தான் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் வாழப்போவதாக நம்பிக்கொண்டிருப்பான்.

ஊரை அடித்து உலையில் போட்டுப் பணத்தைச் சேர்த்துக்கொண்டிருப்பான்.

கேட்டால் பணம், மரணத்திற்கான பாதுகாப்புத் தொகை என்பான். Money is the security against death என்பான். அதாவது பணம் இருந்தால் வயதான காலத்தில் அது தன்னைக் காப்பாற்றும் என்பான்.  நோய்வாய்ப் பட்டுப் படுத்தால், ஒரு நல்ல மருத்துவமனையில் சிகிச்சைபெற பணம் தேவைப்படும் என்பான்.

மரணம் எப்போது வரும், எப்படி வரும் என்ற சிந்தனை இல்லாததால் அல்லது அறியாமையால் அப்படிச் சொல்வான்.

மரணம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்போது வேண்டுமென்றாலும் வரும்.

பலரை இரவு தூக்கத்திலேயே மரணம் சுருட்டிக்கொண்டு போயிருக்கிறது. விபத்தில் ஒரு நொடியில் மரணத்தைச் சந்தித்தவனும் உண்டு. பல ஆண்டுகள் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்பட்டு, பலரை அவஸ்தைக்கு உள்ளாக்கி இறந்தவனும் உண்டு.

மரணம் நமக்குத் தெரியாமல் வர வேண்டும். உயிர் நாம் அறியாமல் போக வேண்டும். அதுதான் உன்னத மரணம்.

அதற்கு வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நம் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரியுமா?

தெரியும்.

அதைப் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று நாளை வெளிவரும். இங்கேயல்ல! வகுப்பறையின் தனி இணைய தளத்தில் அது வரும். இங்கே வந்தால், வகுப்பறையின் சுற்றுச் சுவர்களில் குந்திக் கொண்டிருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய் விடுவார்கள். திருட்டுப்போகக்கூடாது என்பதற்காக 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பெற்றது தனி இணைய தளம். பயனர் பெயர் (User Name), கடவுச் சொல்லுடன் (Password) கூடியது அந்த இணைய தளம் அதில் பல பாடங்கள் இது வரை வந்துள்ளன! இதுவும் அங்கே தான் வரும்

மேல் நிலைப் பாடங்கள், அலசல் பாடங்கள், அஷ்டகவர்க்கப் பாடங்கள், ஜாதக நுட்பங்கள் என்று கலக்கலாக எழுதும் பாடங்கள் அனைத்தும் அதில் மட்டுமே வரும்.

அதில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள், படிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள், பின்னால் அவைகள் அனைத்தும் புத்தக வடிவாக வரும்போது படித்துக்கொள்ளலாம்.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

21.4.11

Astrology முடிவெல்லாம் முடிவல்ல!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Astrology முடிவெல்லாம் முடிவல்ல!

நாம் முடிவு என்று நினைப்பதெல்லாம் முடிவல்ல. ஒவ்வொரு முடிவும் பிறிதொரு துவக்கத்தில் போய்த்தான் முடியும். அதாவது வேறு ஒரு புதிய அத்தியாயம் துவங்கும்.

Nothing will be an end.

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படி அழகாக வலியுறுத்திச் சொன்னார்:

"முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்தகதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே!"

அதை நான் என் மொழியில் சொல்கையில் சீட்டாடத்துடன் தொடர்பு படுத்திச் சொல்வேன். உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள் இருக்கும். ஒரு சிட்டை நீங்கள் இறக்கினால், கீழே இருந்து இன்னொரு சீட்டை நீங்கள் எடுத்துச் சொருகிக்கொள்ள வேண்டியதிருக்கும்.

கீழேயிருந்து வருகின்ற சீட்டு நமக்கு வேண்டியதாகவும் இருக்கலாம் அல்லது வேண்டாததாகவும் இருக்கலாம்.

அதுபோலத்தான் தசாபுத்திகளும். நமக்கு நன்மைகளைத் தரும் தசாபுத்திகளும் அல்லாதவைகளைத் தரும் தசாபுத்திகளும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

நேற்று சுக்கிரதிசையில் சுக்கிரனின் சுயபுத்திப் பலனைப் பார்த்தோம். இன்று சுக்கிரதிசையில் சூரியனின் புத்திப் பலனையும், சூரிய திசையில் சுக்கிரனின் பலனையும் பார்ப்போம்

”வாழலாம் சுக்கிரதிசை சூரியபுத்தி
   வகையில்லாதமாதமது பனிரெண்டாகும்
நாளலாம் அதன்பலனை நவிலக்கேளு
   நன்மையில்லாத சுரபீடை நாய்கடிகளுண்டாம்
கேளலாம் சத்துருவும் குடிகேடு செய்வான்
   குணமான தாய்தந்தை மரணமதுவாகும்
வாழலாம் சித்தமதில் வெகு கலக்கமுண்டாம்
   மனைவிதன்னை விட்டேகி மலையாண்டியாவான்”

“கேளப்பா ரவிதிசையில் சுக்கிரபுத்தி
   கெணிதமுள்ள மாதமது பனிரெண்டாகும்
ஆளப்பா அதன்பலனை அறையக்கேளு
   ஆகாத சூரியனுடன் சூஸ்திரவாய்வு
பாளப்பா ஆகுமடா திரேகந்தன்னை
   பகையதுவுமுண்டாகும் பலனோயில்லை
வாளப்பா மனையாட்டி சிலுக்குண்டாகும்
   வகையுடனே வான்பொடுளும் கேடாம்சொல்லே!”

ஆக இரண்டு காலகட்டமுமே நன்மை உடையதாக இருக்காது. மொத்தத்தில் ஒரு உதயம் அஸ்தமனத்தில் முடியும். அஸ்தமனம் மீண்டும் ஒரு உதயத்தைக் கொடுக்கும்!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

18.4.11

Astrology இன்பம் எங்கே கிடைக்கும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology இன்பம் எங்கே கிடைக்கும்?

முதலில் இன்பம் என்றால் என்ன என்று பார்ப்போம்:

ஐம்புலன்களுக்கும், மனதிற்கும் இனிமை அளிக்கும் உணர்வுதான் இன்பம் எனப்படும். மகிழ்ச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள். joy, pleasure

பூத்துக்குலுங்கும் மலர்கள் கண்ணுக்கு இன்பம்
குழந்தைகளின் மழலைப் பேச்சு பெற்றோர்க்கு இன்பம்.
32-24-32 அளவில் அழகாக இருக்கும் ஒரு சிட்டுவைத் தொடரும் வாய்ப்பு ஒரு இளைஞனுக்கு இன்பம்.
நிற்கும் தொகுதியில், அதிக அளவு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது வேட்பாளருக்கு இன்பம்.
ஒரு குவாட்டர், ஒரு சிக்கன் பிரியாணி பொட்டலம் ப்ளஸ் கையில் ஐநூறு ரூபாய் பணம் கிடைத்தால் கட்சித் தொண்டனுக்கு இன்பம்.
சாப்பிடும் மருந்துகளை நிறுத்தி விடுங்கள். இப்போது நீங்கள் நலமாக உள்ளீர்கள் என்ற மருத்துவர் சொன்னால், அதைக் கேட்கும் பெரியவருக்கு இன்பம்.
உடலுறவில் கிடைப்பது சிற்றின்பம்.
இறையுணர்வில் கிடைப்பது பேரின்பம்
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

ஆனால் உண்மையான இன்பம் எது? அதில் ஒருமித்த கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை!

ஒரு கவிஞன் எது இன்பமானது, எது இன்பமில்லாதது என்பதைப் பொட்டில் அடித்த மாதிரி நான்கே வரிகளில் எழுதினான். பாடலைக் கொடுத்துள்ளேன். பாருங்கள்

   “கனிரசமாம் மதுவருந்தி களிப்பதல்ல இன்பம்
      கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
   இணை இல்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்
      அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்”


அதோடு விடவில்லை, அதற்கு மேலும் ஒரு போடு போட்டுத்தான் கவிஞன் பாடலை நிறைவு செய்தான். அந்த வரிகளையும் கொடுத்துள்ளேன். பாருங்கள்

   “மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
      வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்
   மழலை மொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்
     உன் மார்மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்”


(அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் இது. பாடலின் துவக்க வரியையும் (முதல் வரியையும்) பாடலை எழுதியவரின் பெயரையும், பாடலைப் பாடியவரின் பெயரையும் தெரிந்தவர்கள் கூறலாம்.)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

இன்பத்தைத் தேடாத அல்லது நாடாத அல்லது விரும்பாத மனிதனே இருக்க முடியாது. ஆனால் அந்த இன்பம் முறையாக எல்லா வழிகளிலும், எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லோருக்கும் கிடைக்குமா? என்றால், நோ சான்ஸ்.

ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் ஓரளவு கிடைக்கும்.

நன்றாக இருப்பது என்றால் என்ன? தளபதி படத்தில் வரும் அரவிந்தசாமிபோல இருப்பதா? காதல்கோட்டை படத்தில் வரும் அஜீத்குமாரைப் போல சுக்கிரன் இருப்பதா? அல்ல. அது பற்றிப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ அல்லது கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருப்பதோ அல்லது அஷ்டகவர்க்கத்தில் 6 அல்லது அதற்கு மேலான பரல்களுடன் இருப்பதோ மட்டுமே நன்றாக உள்ளதைக் குறிக்கும் அதை மனதில் கொள்க.

சரி எப்போது கிடைக்கும்?

சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடக்கும் காலங்களில் வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும்.

இன்பங்கள் எல்லாம் அறுபது வயதில் அல்லது அதற்கு மேலான வயதில் கிடைத்துப் பிரயோஜனம் இல்லை. உரிய காலத்தில் கிடைக்க வேண்டும். இருபதில் இருந்து நாற்பது வயதிற்குள் கிடைக்க வேண்டும். அனுஷ்கா சர்மாவைப் போல பெண் இருந்தாலும் உரிய காலத்தில் திருமணம் செய்தால் அல்லவா அவள் இன்பமாக இருக்க முடியும். ஐம்பது வயதில் திருமணம் செய்வதால் யாருக்கு என்ன பயன்?

ஆகவே கவலைப் படாதீர்கள். உங்களுக்கு சுக்கிர திசை இந்த வயதிற்குள் வராவிட்டாலும், வேறு கிரகங்களின் திசைகளில் உள்ள தனது புத்திகளில் (Sub-periods) சுக்கிரன் தனது பணியைச் செவ்வனே செய்துவிடுவார். ஆகவே அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்புக்கள் உண்டு. கிடைக்கும் ஏரியாக்களும், அளவுகளும் மட்டும் மாறுபடும். சிலருக்கு சொத்து சுகங்க்ளால் கிடைக்கும். சிலருக்கு மனைவி மக்களால் கிடைக்கும். சிலருக்கு வேறு வழிகளில் கிடைக்கும். எல்லாம் வாங்கி வந்த வரம்!

இன்று சுக்கிர திசையில், சுக்கிர புத்தியை அதாவது சுக்கிரனின் சுய புத்தியைப் பார்ப்போம்.

அதன் கால அளவு= 20 x 20 = 40 மாதங்கள்

அதற்கான பாடல்: (பாடல் எளிமையாக உள்ளதால் விளக்கம் எழுதவில்லை)

காணவே சுக்கிரதிசை வருஷம் நாலைந்து
   கனமான சுக்கிரனில் சுக்கிரன்புத்தி
பூணவே மாதமது நாற்பதாகும்
   பூலோக மன்னரைப்போல் பூவிலரசாள்வான்
பேணவே சவுக்கியங்களுண்டாகும் பாரு
   பெரிதான லெட்சுமியும் பொற்கொடிபோல் வருவாள்
தோணவே சோபணமும் சுபயோகமுண்டாம்
   தோகையர்கள் வந்தவுடன் தொகுதியுடன் வாழ்வான்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

6.4.11

Astrology எப்போது புத்தி தெளிவுறும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology எப்போது புத்தி தெளிவுறும்?

14.2.2011 அன்று தசா புத்திப் பலன்களை விரிவாக உதாரண பாடல்களுடன் எழுதத் துவங்கினேன். முதலில்  புதன் திசையில் சுக்கிர புத்தியை விளக்கியவன் தொடர்ந்து, புதன் திசைக்கு அடுத்து வரும் கேது
திசையில் சனி  புத்திவரை எழுதினேன். இன்று கேதுதிசையின்
கடைசி புத்தியான புதன் புத்திக்கு விளக்கம் அளித்துள்ளேன்.

இத்துடன் கேது திசை நிறைவுறுகிறது. அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சுக்கிரதிசையைக் கையில்  எடுக்க உள்ளேன்.

இன்று கேதுதிசையில் புதன்புத்திக்கும், அதேபோல புதன்திசையில் கேதுபுத்திக்கும் உரிய பலன்களுக்கான  பாடல்களைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக!

வழக்கம்போல புதன் நன்மையைச் செய்கிறது. பதிலுக்கு புதன்திசையில் வரும் கேதுபுத்தி நன்மையைச் செய்யாமல்  தீமையையே செய்கிறது. அதை மனதில் கொள்ளவும்.

தீயவன் எங்கிருந்தாலும் தீமையையே செய்வான். அவன் எதைச்
செய்தாலும் தீமையே விளையும். ஆனால் கேது  ஞானகாரகன்
என்பதால், அவனுடைய தீமைகளால், நமது புத்தி தெளிவுறும்.
நல்லது கெட்டது உறைக்கும். நமது எதிரிகளையும், நமக்குத் துரோகம் செய்பவர்களையும் அடையாளம் காணமுடியும். மொத்தத்தில்
கேது திசை  முடிவில் நமக்கு ஞானம் உண்டாகும்.

பாரப்பா கேதுதிசை புதனார் புத்தி
   பாங்குள்ள மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் இருபத்தேழு
   சேதமில்லா அதன்பலனை செப்பக்கேளு
வீரப்பா கொண்டு நின்ற மயக்கம்போய்நீ
   மேதினியில் நீயுமொரு மனுஷனாவாய்
சீரப்பா லட்சுமியும் சேர்ந்துகொள்வாள்
   தீங்கில்லா மனக்கவலை யில்லைகாணே!

வாழலாம் புதன் திசையில் கேதுபுத்தி
   வகையில்லா மாதமது பதினொன்றாகும்
குள்ளலாம் நாளதுவும் இருபத்தியேழு
   கொடுமையுள்ள அதன் பலனைக் கூறக்கேளு
மாளலாம் பகைவரும் உற்றார் நாசம்
   மணமில்லா வியாதியது மடித்துக் கொல்லும்
தேடலாம் திரவியங்கள் சேதமாகும்
   தினந்தோறும் சத்துருவும் நீதான் பாரே!

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

5.4.11

Astrology நியமன உத்தரவா அல்லது நிறுத்த உத்தரவா எது வேண்டும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology  நியமன உத்தரவா அல்லது நிறுத்த உத்தரவா எது வேண்டும்?

இரண்டு நிலைப்பாடுகள் எதிலும் உண்டு. எப்போதும் உண்டு. அந்த இரண்டில் ஒன்று நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். மற்றொன்று துன்பத்தைத் தருவதாக இருக்கும்.

மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வை மனம் ஏற்றுக்கொள்ளும். துன்பத்தை ஏற்றுக் கொள்ளாது. மனம் துவண்டு போகும்.

“நானே நொந்துபோயிருக்கிறேன். நீ வேறு என் உயிரை வாங்காதே” என்று நம் மீது அன்பு  வைத்திருப்பவர்களைக்கூட நம்மைக் கடிந்து கொள்ள வைக்கும்.

வேலை நியமன உத்தரவு, வேலை நிறுத்த உத்தரவு என்ற இரண்டு நிலைப்பாடுகளை அதற்குப் பொது உதாரணமாகச் சொல்லலாம். அதுபோல விவாகம். விவாகரத்து. லாபம். நஷ்டம்.

இதுபோன்ற அதீதமான, நம்மால் தாங்க முடியாத நிலைப்பாடுகளைத் தவிர்க்க முடியுமா? முடியாது!

இரண்டு தீய கிரகங்கள் ஒன்று சேரும்போது, அவ்வாறான நிலைப்பாடுகளை - அதாவது நிலைமைகளை  அவைகள் சர்வசாதாரணமாக உண்டாக்கிவிடும். கேதுவும், சனியும் ஒன்று சேர்ந்து ஒரு திசை/புத்தியை நகர்த்தும்  காலம் அப்படித்தான் இருக்கும். கேது திசையில் சனிபுத்தி கேடுகள் நிறைந்ததாக இருக்கும். அதே போல  சனிதிசையில் கேதுபுத்தியும் கேடுகள் நிறைந்ததாக இருக்கும்

அவற்றின் கால அளவு 13 மாதங்கள் + ஒன்பது நாட்கள். அந்த நாட்களைப் பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டி  முடிப்பதே நாம் செய்ய வேண்டிய வேலையாகும்.

அடுத்த திசைபுத்தி நன்மையைத் தரும். அதுவரை பொறுமையாக, நம்பிக்கையோடு இருப்போம் என்று இருப்பது  புத்திசாலித்தனமாகும். இறைவாழிபாட்டுடன் அக்காலத்தைத் தள்ளுவது அதிபுத்திசாலித்தனமாகும்!

அவற்றிற்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்து மனதில் வையுங்கள்

தானென்ற கேதுதிசை சனியின்புத்தி
   தாழ்வான மாதமது பதிமூன்றாகும்
நாளென்ற நாளதுவும் ஒன்பதாகும்
   நலமில்லா அதன் பலனை நவிலக் கேளு
வானென்ற வான்பொருளும் கேடுவாகும்
   வகையான மனைவியுடன் மக்களதுவும்போம்
மானென்றபதி மூன்றில் மரணமாவான்
   மனக்கவலை ரெம்ப உண்டு மாள்வான்பாரே!

ஆமென்ற காரிதிசை கேதுபுத்தி
   அருளில்லா மாதமது பதிமூன்றாகும்
போமென்ற நாளதுவும் ஒன்பதாகும்
   புகழில்லா அதன்பலனை புகலக்கேளு
தாமென்ற தலைவலியும் கண் ரோகமாகும்
   தப்பாது பாண்டுவுடன் தனப்பொருளுஞ் சேதம்
நாமென்ற சத்துருவால் முத்தண்ட முண்டாம்
   நன்மையுள்ள மாதரால் கெர்ப்பமது பாழாம்!


அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

4.4.11

Astrology கிடைக்க இருப்பது கிடைக்காமல் போகாது!

==========================================================
Astrology  கிடைக்க இருப்பது கிடைக்காமல் போகாது!

2.4.2011 சனிக்கிழமை மும்பையில் நடைபெற்ற இந்திய இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியின் இறுதி ஆட்டத்தை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

இந்திய அணி ஆட்டத்தைத் துவக்கியவுடன், இரண்டாவது பந்திலேயே ‘ட்க்’ அவுட்டாகி விரேந்திர சேவக் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தார். தொடர்ந்து 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் சச்சினும் அவுட்டாகி அடுத்த அதிர்ச்சியைத் தந்தார்.

ஆனால் மைதானத்தில் இருந்த மக்கள் அனைவரும் பொறுமை காத்தார்கள். துவக்கத்தில் ஏற்பட்ட சறுக்கல்தான் இது. எப்படியும் நாம் வெற்றி பெறுவோம் என்னும் நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. 121 கோடி மக்களின் பிரார்த்தனை வீண் போகாது என்ற நம்பிக்கை இருந்தது.

அடுத்து ஆடிய கெளதம் கம்பீர் சிறப்பாக ஆடி 97 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். ஸ்கிப்பர் தோனியும் சிறப்பாக விளையாடி 91 ரன்கள் எடுத்து வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்தார். நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்.

ஆகவே எப்போதும் நம்பிக்கையுடன் இருங்கள். கிடைக்க இருப்பது கிடைக்காமல் போகாது

ஒரு திசைபுத்தி சரியாக இல்லையென்றால், பொறுத்துக்கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். அடுத்துவரும் திசை புத்தியில் கஷ்டங்கள் சரியாகி விடும் என்கின்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.

இன்று கேது திசையில் வியாழபுத்திக் காண பலனைக் கொடுத்துள்ளேன். வியாழ கிரகம் சுபக்கிரகம். ஆகவே அதன் கை ஓங்கி திசைபுத்தி நன்மைகளைத் தருவதாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் வியாழதிசையில் கேது புத்தியைப் பார்த்தால், அங்கே கேதுவின் கை ஓங்கி திசைபுத்தி முழுமையும் தீமையானதாக உள்ளது. அப்படித்தான் பலன்கள் மாறி மாறி வரும், இரவு பகலைப் போல!

அவற்றிற்கான பாடல்களைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன்பெறுக!

காணவே கேது திசை வியாழபுத்தி
   கனமான மாதமது பதினொன்றாகும்
தோணவே நாளதுவும் ஆறதாகும்
   தொகையான தனங்களும் புத்திரனாலுண்டாம்
பூணவே பூவுடையாள் நர்த்தனம் செய்வாள்
   பூமிதனில் வெகு லாபம் பொருந்திகாணும்
நாணவே ராசாங்க யோகம் பெற்று
   நன்றாக சகடமது யோகந்தானே!

பாரப்பா வியாழதிசை கேதுபுத்தி
   பாழாகும் மாதமது பதினொன்றாகும்
சேரப்பா நாளதுவும் ஆறதாகும்
   செம்மையில்லா அதன்பலனை செப்பக்கேளு
வீரப்பா வியாதியது கூடிக்கொல்லும்
   விதமில்லா மனைவிதன்னால் நிலைவிட்டுப்போவான்
சாரப்பா சத்துருவும் சதஞ்செய்ய வருவான்
   சகலசன பாக்கியமும் ஷணத்தில்போமே!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

29.3.11

Astrology ‘மிடில் ஸ்டம்ப்’ எப்போது பறக்கும்?

 மைக்கேல் ஹோல்டிங்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 ஆண்ட்டி ராபர்ட்ஸ்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology ‘மிடில் ஸ்டம்ப்’ எப்போது பறக்கும்?

அந்தக்காலத்தில் மேற்கிந்தியரின் பந்துவீச்சு மிகவும் பிரபலம். எதிரிகளும் நேசிக்கும் பந்துவீச்சு. மைக்கேல் ஹோல்டிங் & ஆண்டி ராபர்ட் ஆகிய இருவரும் வேகப் பந்துவீச்சாளர்கள். ஆளுக்கு ஒரு முனையில் இருந்து மாறி மாறிப் பந்துவீசுவார்கள். மட்டை பிடிப்பவர்கள் எவருமே அடித்து ஆடவெல்லாம் முடியாது. அப்படியொரு வேகம் இருக்கும். தங்கள் விக்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டால் போதுமென்ற நிலையில்  அவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் ஏமாந்தால் போதும் ‘மிடில் ஸ்டம்ப்’ பறந்து விடும்.

ஆட்டத்தில் அவர்கள் இருவரும் அசத்திய காலம்:
மைக்கேல் ஆண்ட்டனி ஹோல்டிங் (ஜமைக்கா) 1973 - 1989
ஆண்ட்டி ராபர்ட்ஸ் (ஆண்டிக்குவா) 1970 - 1984

அப்படியொரு நிலைமை தசா புத்திகளிலும் உண்டு. கேது திசையில் செவ்வாய்புத்தியும், செவ்வாய் திசையில் கேதுபுத்தியும் அப்படித்தான் இருக்கும். நாட்களைத் தள்ளினால் போதும் என்று ஜாதகன் சும்மா இருக்க வேண்டும். சுமார் ஐந்து மாத காலம். இறைவனைப் பிரார்த்தித்துவிட்டு அப்படித்தான் இருக்க வேண்டும்.

அவற்றிற்கான பலாபலன்களைப் பதிவிட்டுள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள். பாடல்கள் எளிமையாக இருப்பதால் அப்படியே கொடுத்துள்ளேன். விளக்கம் எழுதவில்லை.

தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி
   தாழ்வான நாளதுவும் நூற்றி நாற்பத்தியேழு
வானென்ற அதன்பலனை வழுத்தக் கேளு
   வண்மையுடன் யினசத்துரு தானே உண்டாம்
கோனென்ற கோளுநால் குடிகேடாகும்
   கோதையரால் குலமதுவும் நாசமாகும்
தேனென்ற திரவியமும் சேதமாகும்
   தெவிட்டாததுணைதம்பி தீதுண்டாமே

ஆகுமே செவ்வாயில் கேதுபுத்தி
   ஆகாத நாளதுவும் நூற்றி நாற்பத்தியேழு
போதவே பலன்தனை பூட்டக்கேளு
   பூவையரும் புத்திரரும் வியாதியாகும்
ஏகுமே வியாதியது கூடிக்கொல்லும்
   இன்பமுள்ளயின விரோதம் தானுமுண்டாம்
சாகுமோ சத்துருவும் பிசாசுதானும்
   சஞ்சலங்களதினாலே கோடிதானே!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

28.3.11

Astrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?

------------------------------------------------------------------
Astrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?

சென்ற வாரம் கேது திசையில், சூரிய புத்தி எப்படியிருக்கும் என்று பார்த்தோம். அடுத்து இப்போது கேது திசையில் சந்திர புத்தி எப்படி இருக்கும் என்று பார்ப்போம். தொடர்ந்து சந்திர திசையில் கேது புத்தி எப்படி இருக்கும் என்றும் பார்ப்போம்.

சுபக்கிரகங்களின் தசா மற்றும் புத்திகள் பொதுவாக நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் கேது மகா திசையில் மனகாரகன் சந்திரனுடைய புத்தி நன்றாக இல்லை. அதேபோல சந்திர திசையில் வரும் கேது புத்தியும் நன்றாக இல்லை. இரண்டிலுமே கேதுவின் ஆதிக்கம்தான் ஓங்கியிருக்கிறது. அவற்றிற்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்

பூணுவான் கேது திசை சந்திர புத்தி
   புகழான மாதமது நாலு மூணும்
ஆணுவான் அதன் பலனை அறையக்கேளு
   ஆயிழையாள் விலகி நிற்பாள் அற்பமாகும்
தோணுவான் தோகையரும் புத்திரரும் பாழாம்
   தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும்
நாணுவான் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து
   நன்றாக மடிந்திடுவாள் நலமில்லைதானே

தெரிந்துநின்ற சந்திரதிசை கேதுபுத்தி
   தென்மையில்லாத நாளதுவும் மாதம் ஏழு
புரிந்துகொண்ட அதன் பலனைப் புகழக்கேளு
   புகழ்பெத்த மார்பில் சில பிணியுமுண்டாம்
பரிந்துகொண்டபாவையரும் பகை நாசமுண்டாம்
   பாங்கான தாய்தந்தை சுதன் மரணமாகும்
விரிந்துகொண்ட வியாதியது விழலாய்ப் பண்ணும்
   வீணாக தேசமெங்கும் அலைவான் பாரே!


(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

23.3.11

வாசல் தோறும் என்ன இருக்கும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாசல் தோறும் என்ன இருக்கும்?

    "ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை  உண்டு" என்று நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி சுட்டிக்காட்டுகின்றது.

    பொருட்களுக்கு மட்டுமல்ல, மனித செயல்பாடுகளுக்கும் அந்த விதி பொருந்தும். அதைத்தான்  பெரியவர்கள் நல்லதையே நினை. நல்லதையே செய் என்று சொல்லுவார்கள். முற்பகல் செயின், பிற்பகல்  விளையும் என்பார்கள்.

    நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. இரவு, பகல். உறவு, பகை. இன்பம் துன்பம். வறுமை  செழுமை. பெருமை, சிறுமை. என்று இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.

    ஆகவே இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை நமக்கு வந்துவிட்டால்  எந்தப் பிரச்சினையும் இருக்காது.

    “இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம்
    இறைவன் வகுத்த நியதி”

    என்றார் கவியரசர் கண்ணதாசன்

    எதற்காக இத்தனை பில்ட் அப்’ என்றால் தசா புத்திகளில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். தீமையான தசா புத்தி கடந்து செல்லும் காலத்தில் பொறுமையாக இருத்தல் அவசியம். கலங்காமல் திடமாக
இருத்தல் அவசியம். சொல்வதற்கு எளிதாக இருக்கும். ஆனால் கடைபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும். இருந்தாலும் என்ன செய்வது தாக்குப் பிடிக்கத்தான் வேண்டும். இறைவழிபாடு அதற்கு உறுதுணையாக இருக்கும்

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
       வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வந்தாலும்
       வாடி நின்றால் ஓடுவதில்லை
       வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
       இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

    என்றார் கண்ணதாசன். நாம் வாடி நிற்பதால், எதுவும் நம்மை விட்டுப்போகாது. நாம்தான் அனுபவித்தாக வேண்டும்.

    கேது திசையில் அடுத்து வரும் சூரிய புத்தி சிலாக்கியமாக இருக்காது. அதுபோல சூரிய திசையில்,  கேதுவின் புத்தியும் நன்மையளிக்காது. அது சொற்பகாலமே என்பதால் தாக்குப் பிடிக்க வேண்டும். தாக்குப் பிடித்து அதைத் தள்ளிவிட வேண்டும். அவற்றிற்கான பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பயன்  பெறுக!

பாரப்பா கேதுதிசை சூரிய புத்தி
   பாங்கான நாளதுவும் நூத்தி இருபத்தி ஆறு
பாரப்பா அதன் பலனைச் சொல்லக்கேளு
   ஆகாத சத்துருவால் அக்கினியும் பேயும்
சேரப்பா சேர்ந்ததுமே கூடிக் கொல்லும்
   சேர்ந்து நின்ற தந்தை குரு மரணமாகும்
வீரப்பா வீண் சிலவு மிகவேயாகும்
   வீடுவிட்டு காஷாயம் பூணுவானே!

ஆமென்ற ரவிதிசையில் கேதுபுத்தி
   ஆகாத நாளதுவும் நூற்றியிருபத்தாறு
போமென்ற அதன் பலனைப் புகழக் கேளு
   பொருந்துகின்ற காரியங்கள் சேதமாகும்
நாமென்ற மனைவிதன்னை நாசம் பண்ணும்
   நலமில்லா சத்துருவும் நல்குவான் பார்
தாமென்ற இருந்தவிடம் விட்டே கலைக்கும்
   தரணிதனில் தண்டம்வரும் சார்ந்துகேளே


அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!