மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.3.11

Astrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?

------------------------------------------------------------------
Astrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?

சென்ற வாரம் கேது திசையில், சூரிய புத்தி எப்படியிருக்கும் என்று பார்த்தோம். அடுத்து இப்போது கேது திசையில் சந்திர புத்தி எப்படி இருக்கும் என்று பார்ப்போம். தொடர்ந்து சந்திர திசையில் கேது புத்தி எப்படி இருக்கும் என்றும் பார்ப்போம்.

சுபக்கிரகங்களின் தசா மற்றும் புத்திகள் பொதுவாக நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் கேது மகா திசையில் மனகாரகன் சந்திரனுடைய புத்தி நன்றாக இல்லை. அதேபோல சந்திர திசையில் வரும் கேது புத்தியும் நன்றாக இல்லை. இரண்டிலுமே கேதுவின் ஆதிக்கம்தான் ஓங்கியிருக்கிறது. அவற்றிற்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்

பூணுவான் கேது திசை சந்திர புத்தி
   புகழான மாதமது நாலு மூணும்
ஆணுவான் அதன் பலனை அறையக்கேளு
   ஆயிழையாள் விலகி நிற்பாள் அற்பமாகும்
தோணுவான் தோகையரும் புத்திரரும் பாழாம்
   தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும்
நாணுவான் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து
   நன்றாக மடிந்திடுவாள் நலமில்லைதானே

தெரிந்துநின்ற சந்திரதிசை கேதுபுத்தி
   தென்மையில்லாத நாளதுவும் மாதம் ஏழு
புரிந்துகொண்ட அதன் பலனைப் புகழக்கேளு
   புகழ்பெத்த மார்பில் சில பிணியுமுண்டாம்
பரிந்துகொண்டபாவையரும் பகை நாசமுண்டாம்
   பாங்கான தாய்தந்தை சுதன் மரணமாகும்
விரிந்துகொண்ட வியாதியது விழலாய்ப் பண்ணும்
   வீணாக தேசமெங்கும் அலைவான் பாரே!


(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14 comments:

  1. ///// பாங்கான தாய்தந்தை சுதன் மரணமாகும்////

    ஒரே குழப்பமாக இருந்த விசயத்திற்கு எனக்கு இன்று பதில் கிடைத்தது...

    வாக்கியப் பஞ்சாங்கப் படி கணித்த என்னுடைய ஜாதகத்தில், சரியாக
    சந்திர திசை கேது புத்தியில்.... எனது மகனின் (சுதன்) வலது பாதத்தில் சிறிய முறிவு ஏற்பட்டது...
    என் தாதையார் மிகவும் நோய் வாய்ப் பட்டு இருந்தார்.... எங்கே அவர் மறைந்து விடுவாரோ என்ற
    எண்ணம் எல்லோரிடமும் வந்த நேரத்தில் அவர் குணநலம் பெற்று எழுந்தார்.... அதை முன்பே தெரிந்து (யாரோ ஒருவர் மறையப் போவது உறுதி என்று) கொண்ட எனது தாயார், அவர்களின் விருப்பப் படியே சுமங்கலியாகவே போகவேண்டும் என்று வீட்டில் பல ஏற்பாடுகளை செய்தார்கள்... அதே போல் சந்திர திசை கேது புத்தி முடியப் போகும் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் என்று இருதயக் கோளாறு ஏற்பட்டு தீவிர சிகிச்சையிலும் பயனின்றி மறைந்துவிட்டார்கள்..

    அதே வேளை, திருக்கணித முறைப் படி கணித்த ஜாதகப்படி பார்த்தால் சந்திர திசையில், சனிபுத்தி.... அதன்படி இளைய சகோதிரிக்கு தான் மரணம் என்றும் கூறுகிறார் புலிப்பாணி.

    இன்றையப் பாடம் வாக்கியப் பஞ்சாங்கத்தை பின்பற்றுவது நல்லது என்ற தீர்க்கமான எண்ணத்தை தந்துள்ளது. நன்றி.

    ReplyDelete
  2. கேது தசா சந்திர புக்தியில், ஆன்மீக நாட்டம் அதிகமானது. பாழடைந்த ஒரு கோவிலை எடுத்து நானே பூஜையைத் துவங்கி, இப்போது கும்பாபிஷேகம் நடந்து
    நன் முறையில் இயங்கி வருகிறது.

    சந்திரதிசை கேது புக்தி 2022 ல்தான் வரும்.அப்போது 73 வயது நடக்கும். எதுவரினும் தாங்கும் சக்தியை ஆண்டவன் இன்னும் அதிப்படுத்தி விடுவார் கவ்லை இல்லை அய்யா!

    ReplyDelete
  3. //அதே வேளை, திருக்கணித முறைப் படி கணித்த ஜாதகப்படி பார்த்தால் சந்திர திசையில், சனிபுத்தி.... அதன்படி இளைய சகோதிரிக்கு தான் மரணம் என்றும் கூறுகிறார் புலிப்பாணி. //

    ஆலோசியம் சகோதரா எனக்கு கூட சந்திர திசை கேது புத்தி நடக்குது எதும் நம்ப கையில் இல்லை எனக்கு யாரும் ஆதரவு இல்லை அம்மா மட்டும்தான் ஆதரவு என்ன பண்ணறது ஒன்றும் புரியவில்லை அப்புறம் சந்திர தசை சனி புத்தில்ல என்னுடைய சுயநலவாதி அப்பா செத்துவிட்டார் எங்கம்மாவை முருகர் நல்லா வச்சிப்பாரு எங்கிட்டயிருந்து பிரிக்க மாட்டாரு.
    sundari.p

    ReplyDelete
  4. தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?


    மெய் சிலிர்க்கும் - Such a Amazing Predications, such a intelligence colculations, every thing is true.
    i have gone thru some in my real experience.

    Sundarkmy

    ReplyDelete
  5. ///எங்கம்மாவை முருகர் நல்லா வச்சிப்பாரு எங்கிட்டயிருந்து பிரிக்க மாட்டாரு.
    sundari.ப/////

    கவலைப் படாதீங்க சகோதிரி உங்கள் ஜாதகம் அம்மாவிற்கு பேசாது......
    உங்கள் அம்மா நீண்ட நாள் ஆரோக்கியமாக உங்களோடு
    இருப்பாங்க நானும் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
    சந்தோசமாக இருங்கள்..

    ReplyDelete
  6. அண்ணன் ஆலாசியம் அவர்களின் ஜாதக அலசும் திறமை குறித்து ஆச்சரியமாக உள்ளது..

    தொடர் ஆர்வம் குறையாமல் தக்கவைத்துக் கொள்வதே ரொம்ப பெரும் பாடாக இருக்கிறதே..

    ReplyDelete
  7. அண்ணன் ஆலாசியம் அவர்களின் ஜாதக அலசும் திறமை குறித்து ஆச்சரியமாக உள்ளது..//

    அதுக்கெல்லாம் என்னை மாதிரி மூளை இருக்கணுமில்ல. சரி சரி ரொம்ப பீல் ஆகாதீங்க. பீல் பண்ணா மட்டும் மூளை என்ன கிளை விட்டு வளரவா போகுது?

    ReplyDelete
  8. ///சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    அன்புள்ள வாத்தியார் ஐயா, வணக்கங்கள் பல.. அடியேன் பல மெயில்கள் அனுப்பியும் தங்களிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.. ஏன் ? எனது மெயில்கள் கிடைக்கவில்லையா ? தயவு செய்து பதில் தருக/////

    பணிச்சுமைதான் காரணம். பதில் கிடைத்ததா?

    ReplyDelete
  9. /////iyer said...
    Attendance marked/////

    வருகைப்பதிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Alasiam G said...
    ///// பாங்கான தாய்தந்தை சுதன் மரணமாகும்////
    ஒரே குழப்பமாக இருந்த விசயத்திற்கு எனக்கு இன்று பதில் கிடைத்தது...
    வாக்கியப் பஞ்சாங்கப் படி கணித்த என்னுடைய ஜாதகத்தில், சரியாக
    சந்திர திசை கேது புத்தியில்.... எனது மகனின் (சுதன்) வலது பாதத்தில் சிறிய முறிவு ஏற்பட்டது...
    என் தாதையார் மிகவும் நோய் வாய்ப் பட்டு இருந்தார்.... எங்கே அவர் மறைந்து விடுவாரோ என்ற
    எண்ணம் எல்லோரிடமும் வந்த நேரத்தில் அவர் குணநலம் பெற்று எழுந்தார்.... அதை முன்பே தெரிந்து (யாரோ ஒருவர் மறையப் போவது உறுதி என்று) கொண்ட எனது தாயார், அவர்களின் விருப்பப் படியே சுமங்கலியாகவே போகவேண்டும் என்று வீட்டில் பல ஏற்பாடுகளை செய்தார்கள்... அதே போல் சந்திர திசை கேது புத்தி முடியப் போகும் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் என்று இருதயக் கோளாறு ஏற்பட்டு தீவிர சிகிச்சையிலும் பயனின்றி மறைந்துவிட்டார்கள்..
    அதே வேளை, திருக்கணித முறைப் படி கணித்த ஜாதகப்படி பார்த்தால் சந்திர திசையில், சனிபுத்தி.... அதன்படி இளைய சகோதிரிக்கு தான் மரணம் என்றும் கூறுகிறார் புலிப்பாணி.
    இன்றையப் பாடம் வாக்கியப் பஞ்சாங்கத்தை பின்பற்றுவது நல்லது என்ற தீர்க்கமான எண்ணத்தை தந்துள்ளது. நன்றி.///////

    என்னுடைய வாக்கு (Vote) வாக்கியப் பஞ்சாங்கத்திற்கே!

    ReplyDelete
  11. //////kmr.krishnan said...
    கேது தசா சந்திர புக்தியில், ஆன்மீக நாட்டம் அதிகமானது. பாழடைந்த ஒரு கோவிலை எடுத்து நானே பூஜையைத் துவங்கி, இப்போது கும்பாபிஷேகம் நடந்து. நன் முறையில் இயங்கி வருகிறது.
    சந்திரதிசை கேது புக்தி 2022 ல்தான் வரும்.அப்போது 73 வயது நடக்கும். எதுவரினும் தாங்கும் சக்தியை ஆண்டவன் இன்னும் அதிப்படுத்தி விடுவார் கவலை இல்லை அய்யா!/////

    கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆகவே கவலைகளைத் தள்ளி வைப்பதே மேலானது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. ///sundarkmy said...
    தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?
    மெய் சிலிர்க்கும் - Such a Amazing Predications, such a intelligence colculations, every thing is true.
    i have gone thru some in my real experience.
    Sundarkmy/////

    உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////minorwall said...
    அண்ணன் ஆலாசியம் அவர்களின் ஜாதக அலசும் திறமை குறித்து ஆச்சரியமாக உள்ளது..
    தொடர் ஆர்வம் குறையாமல் தக்கவைத்துக் கொள்வதே ரொம்ப பெரும் பாடாக இருக்கிறதே..////

    முழு முனைப்பும், முயற்சியும் இருந்தால் எல்லோருக்கும் வசப்படும் மைனர்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com