மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.3.11

வாழும் நாட்களுக்கான இன்பம் எது?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழும் நாட்களுக்கான இன்பம் எது?

தினமும் விழித்தோம், குளித்தோம், உண்டோம், சற்றே பணி செய்தோம், களித்தோம், உறங்கினோம் என்றில்லாமல், நாளும், பொழுதும் இன்பமாகக் கழிய வேண்டாமா? அதற்கு என்ன வழி? அதைத் தன்னுடைய பாடலில் சொல்கிறார் சீர்காழியார். பாடல் வரிகளைக் கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள். பயன் பெறுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++======

நீயல்லால் தெய்வமில்லை - எனது நெஞ்சே
நீவாழும் எல்லை முருகா

(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்

(நீயல்லால்)

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
வாழ்க வளமுடன்!

16 comments:

  1. பசித்தா லல்லா புசியா மழலை
    கசிந்துருகார் கடவுளை தேடார்.

    அமிழ்தினும் இனியப் பாடல்... நன்றி.

    ReplyDelete
  2. இன்றைய பக்தி மலர் பின்னூட்டத்தில் இதை இட்டால் அது பெரிதும் பொருந்தும்...

    "சத்யசாய் நிறுவனங்களின் அகில இந்திய தலைவர் சீனுவாசன் பேசியதாவது:வேதம், சாஸ்திரம், பூஜை, புனஸ்காரம் செய்வதன் மூலம் மோட்சம் கிடைக்காது. உலகில் உள்ள ஒவ்வொரு ஜந்துக்களிடமும், பகவானை பாருங்கள். அது தான் உண்மையான பரிவர்த்தனம், மோட்சம். பகவான் சொல்வார். "எனக்கு உண்மையான பக்தி தேவையில்லை; பரிவர்த்தனம் தான்' என்பார்.

    உலகில் எவரும் கெட்டவர்கள் கிடையாது. "அப்படி இல்லை' என நீ சொன்னால், உன் கண்ணில் குறைபாடு உள்ளது. சாய் பக்தர்களாகிய நீங்கள், எல்லோரிடமும் உள்ள நல்லதை பாருங்கள். நல்ல காரியங்கள் செய்ய, பொருள் தடையாக இருக்காது. அனைத்தையும் பகவான் பார்த்துக் கொள்வார். நாம் ஒரு இயந்திரம் மட்டுமே. பாரத்தை பகவான் மீது போட்டுவிடுங்கள். சேவை செய்வதன் மூலம் ஏற்படும் பரிவர்த்தனம் நம்மிடம் உள்ள கெட்ட குணங்களை போக்கிவிடும். அந்த சேவையையும் எந்தவித பிரதிபலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். இந்த சேவை மையத்திற்கு "சாய் பிரேமை நிலையம் ' என, பெயர் வைக்க வேண்டும்.இவ்வாறு சத்யசாய் நிறுவனங்களில், அகில இந்திய தலைவர் சீனுவாசன் பேசினார்." -------- நன்றி தினமலர்.

    ReplyDelete
  3. வாயாரப் பாடி மனமார நினைந்து
    வணங்கிடலே எந்தன் வாழ் நாளின் இன்பம் ...

    ஆம் வாத்தியார் ஐயா ,,

    இறைவனைப் பாடுதலே நமது வினைகளை குறைக்கும் வழி என்பது
    அருளாளர்களின் துணிபு ...

    பாடுவார் பசி தீர்ப்பாய் என்றும்,

    மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
    பிறையுடையாய் என்று உன்னைப் பேசின் அல்லால்
    குறையுடையார் குற்றம் ஓராய் - என்றும்

    வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை -

    என்றெல்லாம் அருள்மொழிகள் இருப்பதால்
    இறைவனைப் பாடிப் பரவுவோம் ,,,
    பயனடைவோம் ...

    ReplyDelete
  4. வாயாறப் பாடி மனதார நினைத்து வாழ்ந்திடலே நம் வாழ் நாளில் இன்பம். இது இன்று நேடற்றல்ல காலம் காலமாக இருந்து வரும் அருள் நெறி. மனிதனுக்கு பொன், பொருள், பதவி இவற்றில் என்று பற்று வந்து இறைவனின் கருணையை மறந்தானோ அன்றே அவனது உண்மையான இன்பம் மறைந்து விட்டது. " நீ அல்லால் தெய்வமில்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை" என்பதே அத்வைத சித்தாந்தம். இதை உணர்ந்தவர்களுக்குத் துன்பமில்லை. இதனை நினைவுபடுத்தியத் தங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  5. ///வாயாரப் பாடி மனமார நினைந்து
    வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்///


    இந்த வரிகளின் செய்தியே
    இன்றைய பதிவின் தலைப்பு


    வாழ்நாள் என்பது முக்காலம் குறித்தது
    'வாழ்கின்ற','வாழுந்த','வாழும்'என


    இந்த ஒரு வார்த்தை தான்
    இப்பாடலுக்கு சிறப்பென்பது கருத்து


    "'செய்நன்றி' கொன்ற மகற்கு" என செந்தமிழன் சொன்னதும் இதுவே


    ஷஷ்டி நாளானா இன்று எல்லோர்
    இஷ்டத்திற்கான இப்பாடலுக்கு நன்றி..

    ReplyDelete
  6. ////Alasiam G said...
    பசித்தா லல்லா புசியா மழலை
    கசிந்துருகார் கடவுளை தேடார்.
    அமிழ்தினும் இனியபாடல்... நன்றி.////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  7. Alasiam G said...
    இன்றைய பக்தி மலர் பின்னூட்டத்தில் இதை இட்டால் அது பெரிதும் பொருந்தும்...
    "சத்யசாய் நிறுவனங்களின் அகில இந்திய தலைவர் சீனுவாசன் பேசியதாவது:வேதம், சாஸ்திரம், பூஜை, புனஸ்காரம் செய்வதன் மூலம் மோட்சம் கிடைக்காது. உலகில் உள்ள ஒவ்வொரு ஜந்துக்களிடமும், பகவானை பாருங்கள். அது தான் உண்மையான பரிவர்த்தனம், மோட்சம். பகவான் சொல்வார். "எனக்கு உண்மையான பக்தி தேவையில்லை; பரிவர்த்தனம் தான்' என்பார்.
    உலகில் எவரும் கெட்டவர்கள் கிடையாது. "அப்படி இல்லை' என நீ சொன்னால், உன் கண்ணில் குறைபாடு உள்ளது. சாய் பக்தர்களாகிய நீங்கள், எல்லோரிடமும் உள்ள நல்லதை பாருங்கள். நல்ல காரியங்கள் செய்ய, பொருள் தடையாக இருக்காது. அனைத்தையும் பகவான் பார்த்துக் கொள்வார். நாம் ஒரு இயந்திரம் மட்டுமே. பாரத்தை பகவான் மீது போட்டுவிடுங்கள். சேவை செய்வதன் மூலம் ஏற்படும் பரிவர்த்தனம் நம்மிடம் உள்ள கெட்ட குணங்களை போக்கிவிடும். அந்த சேவையையும் எந்தவித பிரதிபலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். இந்த சேவை மையத்திற்கு "சாய் பிரேமை நிலையம் ' என, பெயர் வைக்க வேண்டும்.இவ்வாறு சத்யசாய் நிறுவனங்களில், அகில இந்திய தலைவர் சீனுவாசன் பேசினார்." -------- நன்றி தினமலர்.////

    நானும் படித்தே. தகவலுக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. ////எடப்பாடி சிவம் said...
    வாயாரப் பாடி மனமார நினைந்து
    வணங்கிடலே எந்தன் வாழ் நாளின் இன்பம் ...
    ஆம் வாத்தியார் ஐயா ,,
    இறைவனைப் பாடுதலே நமது வினைகளை குறைக்கும் வழி என்பது
    அருளாளர்களின் துணிபு ...
    பாடுவார் பசி தீர்ப்பாய் என்றும்,
    மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
    பிறையுடையாய் என்று உன்னைப் பேசின் அல்லால்
    குறையுடையார் குற்றம் ஓராய் - என்றும்
    வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை -
    என்றெல்லாம் அருள்மொழிகள் இருப்பதால்
    இறைவனைப் பாடிப் பரவுவோம் ,,,
    பயனடைவோம் ...//////

    நன்றி இடைப்பாடியாரே!

    ReplyDelete
  9. ///Thanjavooraan said...
    வாயாறப் பாடி மனதார நினைத்து வாழ்ந்திடலே நம் வாழ் நாளில் இன்பம். இது இன்று நேடற்றல்ல காலம் காலமாக இருந்து வரும் அருள் நெறி. மனிதனுக்கு பொன், பொருள், பதவி இவற்றில் என்று பற்று வந்து இறைவனின் கருணையை மறந்தானோ அன்றே அவனது உண்மையான இன்பம் மறைந்து விட்டது. " நீ அல்லால் தெய்வமில்லை, எனது நெஞ்சே நீ வாழும் எல்லை" என்பதே அத்வைத சித்தாந்தம். இதை உணர்ந்தவர்களுக்குத் துன்பமில்லை. இதனை நினைவுபடுத்தியத் தங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா.////

    உங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  10. ///iyer said...
    ///வாயாரப் பாடி மனமார நினைந்து
    வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்///
    இந்த வரிகளின் செய்தியே
    இன்றைய பதிவின் தலைப்பு
    வாழ்நாள் என்பது முக்காலம் குறித்தது
    'வாழ்கின்ற','வாழுந்த','வாழும்'என
    இந்த ஒரு வார்த்தை தான்
    இப்பாடலுக்கு சிறப்பென்பது கருத்து
    "'செய்நன்றி' கொன்ற மகற்கு" என செந்தமிழன் சொன்னதும் இதுவே
    ஷஷ்டி நாளானா இன்று எல்லோர்
    இஷ்டத்திற்கான இப்பாடலுக்கு நன்றி..////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  11. வகுப்பறை வாத்தியாரே வணக்கம்.

    என்ன ஒரு அருமையான பாடல்!

    அதுவும் எமது குல தெய்வம் ஆன
    " திரு செந்தூர் முருகனை " நினைத்து உருக வைத்த பாடலை படித்து இன்புற்றதீர்க்கு அளவே இல்லை ஐயா.


    கந்தனுக்கு அரோகரா!
    கடம்பனுக்கு அரோகரா!
    வேலனுக்கு அரோகரா!

    மயில் வேலனுக்கு அரோகரா!
    வீரபாகுவின் தலைவனுக்கு அரோகரா
    ஒவ்வைகு நெல்லி கனி கொடுத்த குழந்தைவேலுக்கு அரோகரா

    அரோகரா! அரகரோகரா!
    அரோகரா! அரகரோகரா

    ReplyDelete
  12. Vanakathukuriya Vaathiar avarkalukku

    Vaguparai jothidam puthagam veli

    ReplyDelete
  13. vanakathukuriya vaathiar avarkalukku

    vaguparai jothidam puthagam veliittu viteera,tamil type eppadi panrathu theriyala.

    samy

    ReplyDelete
  14. வாத்தியார் ஐயா!

    தாங்கள் இங்கு கூறி உள்ளீர்கள்.
    பரல்களின் கணக்கு அல்லது 33 வயது வரைதான் என்று,

    சென்னையில் உள்ள "பிரலங்கா தேவி", கோவிலில் மிகப்பெரிய அளவில் சுவரில் எழுதியும் போட்டு உள்ளார்கள் .

    கால சர்ப்ப தோஷத்தில் பிறந்தவர்கள் முப்பத்தி மூன்று வயது வரை கஷ்ட நஷ்டத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று.

    தங்களுடைய வகுப்பிற்கு வருவதற்கு முன்னர் நிறைய ஜோதிட வித்வான்கள்
    நேரில் கூறியதை கேட்டும் மற்றும் புஸ்தகத்தில் படித்தும் உள்ளேன்.

    எது எப்படியோ முட்டி மோதி , கண்ணிற் விட்டு கதறி , போகாத இடர்திர்க்கு எல்லாம் போகி, வணங்காத தெய்வத்தை எல்லாம் வணங்கி கால சர்ப்பம் என்னும்
    " நீச பங்க ராஜ யோக காலத்தை ", எம்பெருமான் திரு செந்தூர் முருகனின் அருளால் ", வரும் சித்திரையுடன் கடக்கவும் உள்ளேன்.

    பின்னர் வரும் வாழ்க்கை எப்படி என்பதனை பார்க்கவும் உள்ளேன் ஐயா.

    ReplyDelete
  15. அன்புடன் வணக்கம் மிக பொருத்தமான வரிகள் >>>>>""""
    பக்தர்களாகிய நீங்கள், எல்லோரிடமும் உள்ள நல்லதை பாருங்கள். நல்ல காரியங்கள் செய்ய, பொருள் தடையாக இருக்காது. அனைத்தையும் பகவான் பார்த்துக் கொள்வார். நாம் ஒரு இயந்திரம் மட்டுமே. பாரத்தை பகவான் மீது போட்டுவிடுங்கள். சேவை செய்வதன் மூலம் ஏற்படும் பரிவர்த்தனம் நம்மிடம் உள்ள கெட்ட குணங்களை போக்கிவிடும். அந்த சேவையையும் எந்தவித பிரதிபலனை எதிர்பாராமல் செய்யவேண்டும்>>>>>""" அடியேனது இல்லத்திற்கு திருவாளர் kmrk..தனது துணைவ்யருடன் மற்றும் அவரது சகோதரர் ,வந்தார்கள்
    பண்பாளர் !!!.பூர்வ ஜென்ம தொடர்பு !!!.இறைவன் இன்று அவர்களை சந்திக்க வைத்திருக்கிறான் .!!!.இங்கே வந்த பின்புதான் .. தெரிகிறது !!!!..எனது மூத்தமகனுடன் பணி செயும் அவரது அண்ணன் மகன். அவருடன் வந்தது என்னவென்று சொல்ல!!!! . ஆக வகுப்பறை சக மாணவர்கள் மற்றும் வாத்தியார்.க்கும் எதோ ஒரு முன் ஜென்ம தொடர்பு !!

    ReplyDelete
  16. What Happened to prabhala and siddha yoga?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com