மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.3.11

Short Story - சிறுகதை: உப்பும் சர்க்கரையும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிறுகதை:
ஒரு மாத இதழுக்காக அடியவன் எழுதிய சிறுகதை இது. இந்த மாதம், அந்த இதழில் இது வெளிவந்துள்ளது. உங்களுக்காக அந்தச் சிறுகதையை இன்று வலையேற்றி யுள்ளேன். படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------
தலைப்பு: உப்பும் சர்க்கரையும்!

தேனப்ப அண்ணன் நொருங்கிப் போய் உட்கார்ந்திருந்தார். மருத்துவர் விவரிக்க விவரிக்க அவர் மனதிலுள்ள பசுமையான கிளைகள் எல்லாம் ஒவ்வொன்றாக ஒடிந்து விழுந்துகொண்டே இருந்தன. இப்படி
ஒவ்வொருகிளையாக ஒடித்து மொத்த மரத்தையும் மொட்டையாக்கு
வதற்குப் பதிலாக ஒரே போடாகப் போட்டு மரத்தை  ஒரேயடியாக
வெட்டிச் சாய்த்திருக்கலாம்.

விதி அப்படிச் செய்யாதே! அதுதானே கஷ்டம்!

மருத்துவர் மெல்லிய குரலில் சொன்னார்:

“நான் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்”

“சரி..!”

“அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை எல்லாம் இனி நீங்கள் தொடவே கூடாது”

“சரி.....!”

“சமையலில் பாதி அளவு உப்பு மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிப்பு அறவே கூடாது. காப்பி, டீ  கூடாது!”

“...............”

“பூமிக்குக் கீழே விளையும் கிழங்கு வகைகள் எதையுமே உண்ணக்கூடாது”

இதை அவர் சொல்லும்போது, உருளைக்கிழங்கு காரக்கறி, உருளைக்
கிழங்கு பொடிமாஸ், உருளைக் கிழங்கு  போண்டா, கருணைக்கிழங்கு
கெட்டிக் குழம்பு, கருணைக்கிழங்கு மசியல், சேனைக்கிழங்கு பெரட்டல்
என்று அத்தனையும்  மின்னலாக தேனப்பண்ணனின் மனக் கண்ணில்
தோன்றி மறைந்தன.

மருத்துவர் தொடர்ந்து சொன்னார்.

“தெரிந்தோ தெரியாமலோ லிக்கர், சிகரெட், பான்பராக் போன்ற
பழக்கங்கள் இருந்தால், அவற்றை விட்டுவிட  வேண்டும். அரிசி
உணவுகளை ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடலாம்.
மற்ற நேரங்களில், கோதுமை,ராகி போன்ற தானியங்களால் செய்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். பழங்களில் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் கண்டிப்பாகக்கூடாது. ஆரஞ்சு, சாத்துக்குடி,
தர்ப்பூசணி, பப்பாளி போன்ற பழங்களைத்  தாராளமாகச் சாப்பிடலாம்...... தேன்குழல், முறுக்கு, அதிரசம், மாவுருண்டை போன்ற பதார்த்தங்கள்  கூடாது...குறிப்பாக  ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ்  போன்றவைகள் கூடவே   கூடாது!”

இவ்வாறாக மருத்துவர் சொல்லிக்கொண்டே போக, தேனப்ப அண்ணனின் மனம் வேடனின் அம்பில் அடிபட்டுக் கீழே விழுந்த புறாவைப் போல துடிக்க ஆரம்பித்தது.

ஆறுமாதங்களுக்கு முன்பு, வங்கிக் குமாஸ்தா வேலையில் இருந்து
ஓய்வு பெற்று, தரை தட்டிய கப்பலாகச் செட்டிநாட்டிலுள்ள தன்
சொந்த  வீட்டில் கரை ஒதுங்கியவருக்கு, இதையெல்லாம் கேட்கக்
கேட்க  மலைப்பாக  இருந்தது.

“பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்ததுபோல” என்று
கிராமங்களில் சொல்வதைப் போல ஒரே நேரத்தில்  இரண்டு அடி விழுந்துள்ளது. அவருக்கு ரத்தக்கொதிப்பு நோயும் வந்துள்ளது.
சர்க்கரை நோயும் உடன் இணைப்பாக வந்துள்ளது.

இறுதியாக மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டுக்களை வாங்கிக்கொண்டு, வடக்குச் சித்திரை வீதியில் உள்ள நகர விடுதிக்குத் திரும்பியவர், ஒரு குவளை தண்ணீரை அருந்திவிட்டு, உள் அரங்கில், தட்டிகளுக்குப்  பின்பக்கம் பாயை விரித்து, நீட்டிப் படுத்துவிட்டார்.

+++++++++++++++++++++++++++++++++++++

என்ன வாழ்க்கை இது? உண்ண முடிந்த காலத்தில், தாராளமான பணப்
புழக்கம் இருப்பதில்லை. பணப் புழக்கம்  இருக்கும் காலத்தில்
விரும்பியதை உண்ண முடியாமல் பலவிதத் தடைகள்.

இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் “பாலிருக்கும், பழமிருக்கும், பசியிருக்காது; பஞ்சணையில் காற்றுவரும்  தூக்கம் வராது” என்று
கோடிட்டுக் காட்டினாரா?

தேனப்ப அண்ணன் அன்பு, பாசம் மிக்கவர். உறவுகளைப் போற்றுபவர்.
பிறந்தது மட்டும்தான் திருப்பத்தூர்  மருத்துவமனையில். மற்றபடி,
வளர்ந்தது, படித்தது, வங்கியில் சேர்ந்தது, தொடர்ந்து வங்கியில்
வேலை பார்த்தது, குப்பை கொட்டியது எல்லாம் மதுரையில்தான்.

அவருடன் பிறந்த மூன்று சகோதரிகள் மதுரையில் இருந்ததாலும்,
மதுரை பிடித்த ஊர் என்பதாலும்  மதுரையிலேயே காலத்தைக் கழித்து
விட்டார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் வேலை பார்த்த
அரசுடமை வங்கியில், கட்டாய ஓய்வு என்ற பெயரில், தோளில்
துண்டைப் போட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

ஊருக்கு ஊர் பெட்டி தூக்காமல், மதுரையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, தேடிவந்த பதவி உயர்வுகளை,  வேண்டாமென்று தட்டிக் கழித்ததோடு, ஒரு கிளையில் பத்து வருடங்களுக்குமேல் இருக்கக்
கூடாது என்ற  விதிமுறை தலைகாட்டியபோது, மதுரையில் இருந்த
தங்கள் வங்கியின் மற்ற கிளைக்குத் தாவி, மதுரை வாழ்க்கையைத்
தக்க வைத்துக் கொண்டார்.

இரண்டு பெண் குழந்தைகள். அவர்களை, வளர்த்து, படிக்க வைத்து,
திருமணம் செய்துவைத்து ஆளாக்கியதில்  சேமித்துவைத்த பணம்,
நகைகள் எல்லாம் கரைந்து போயிற்று. இரண்டாவது பெண்ணின் திருமணத்திற்காக,குடியிருந்த அரசரடி வீட்டையும் விற்கும்படியாகி
விட்டது.

விதி எல்லாவற்றையும் கூட்டித் துடைத்து, மெழுகி சுத்தமாக்கி வைத்துவிட்டது.

“இன்றைய சூழ்நிலையில் இரண்டு குழந்தைகளும் ஆண் குழந்தைகள்
என்றால், வயதான காலத்தில் வரும்படி இருக்கும். இரண்டுமே பெண் குழந்தைகள் என்றால், வயதான காலத்தைக் கடன் இன்றி ஓட்டுவதே
அசுர சாதனையாக இருக்கும்” என்று அவர் அடிக்கடி அங்கலாய்ப்புடன் சொல்வதைப் போலவே எல்லாம் நடந்து  கொண்டிருந்தன.

ஆறுதலாக மாதாமாதம் பன்னிரெண்டாயிரம் ரூபாய் ஓய்வூதியத்தொகை (பென்சன்) வருகிறது. அதை வைத்து  மிச்சக் காலத்தைக் கழித்துவிடலாம். வீட்டு வாடகை கொடுத்து மதுரையில் எதற்காக இருக்க வேண்டும் என்று
செட்டிநாட்டிலுள்ள தனது வளவு வீட்டிற்குக் குடி பெயர்ந்து விட்டார்.

அவருடைய ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இருந்து சுகக் கேட்டைக் கொடுத்துக்கொண்டிருந்த ராகு சும்மா  விடுமா? அதுவும் கூடவே சென்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஆச்சியின், அதாவது அவரது அன்பு மனைவியின் கர்ப்பப் பையில்  பிரச்சினை என்று வந்தபோது, சிகிச்சைக்காக அலைய நேர்ந்தது. செலவை விட்டுத் தள்ளுங்கள். பட்ட மன வேதனையை எங்கே போய்ச் சொல்வது?

இப்போது அவருக்கே சுகக் கேடாகிவிட்டது. தொடர் சளியால், நெஞ்சடைப்பு என்று வைத்தியம் பார்க்க  மதுரைக்கு வந்தவருக்கு, காலன் வேறுவிதமாக இரண்டு எச்சரிக்கைச் சீட்டுக்களைக் கொடுத்துவிட்டான்.

எதை வேண்டுமென்றாலும் பொறுத்துக்கொள்ளலாம். சாப்பாட்டில் கையை வைத்த காலனை என்ன செய்தால்  தகும்?

உப்பும் கூடாதாம், இனிப்பும் கூடாதாம். அவை இரண்டும் இல்லாமல்
ஏதாவது ருசிப்படுமா? ராகமும் கூடாது, தாளமும் கூடாது என்றால்
எப்படிப் பாடுவது? கோபத்தில் சங்கும், சேகண்டியும்தான் நினைவிற்கு
வந்தன!

ருசியான சாப்பாட்டைக் கைவிடவேண்டிய நிலைமையைத்தான்
அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

நகர விடுதிப் பாயில் புரண்டு புரண்டு படுத்தவருக்கு, தூக்கம் வரவில்லை.

எழுந்து உட்கார்ந்தவர், உள்ளூரிலேயே உள்ள தன்னுடைய மூத்த சகோதரி முத்தாள் ஆச்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வர முடிவு செய்தார். ஆறுதலாக இருக்கும்.

குளியலறைக்குச் சென்று கை, கால் முகங்களைக் கழுவியவர்,
பெயருக்காகத் தலையை வாரிக்கொண்டு, நெற்றி நிறைய திருநீறையும் பூசிக்கொண்டு, அதைச் செயல் படுத்தவும் துவங்கினார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முத்தாள் ஆச்சிக்குக் கோச்சடை அசோக் நகரில் வீடு. தனியார் பள்ளி
ஒன்றில் தலைமை ஆசிரியையாகப்  பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர். தேனப்பண்ணனைவிட பத்து வயது மூத்தவர். செட்டியார் இல்லை. சிவலோகம்  சென்றுவிட்டார். ஒரே மகன். மனைவி மக்களுடன் அவன் சிங்கப்பூரில் இருக்கிறான். வருடம் ஒருமுறை  வந்துபோவான். ஆச்சி
மட்டும் இங்கே தனியாகத்தான் இருக்கிறார்கள். உதவி மற்றும் பாதுகாப்பிற்கென ஊரில்  இருந்து ஒரு பணிப்பெண்னைக் கூட்டிக்
கொண்டு வந்து உடன் வைத்திருக்கிறார்கள்.

தம்பியைப் பார்த்தவுடன் ஆச்சிக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றவர்கள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த மாவை எடுத்துக்கொண்டிபோய், சுடச்சுட நான்கு பணியாரங்களை ஊற்றி
எடுத்துகொண்டுவந்தார்கள்.

கூடவே நடிகை தமன்னா கலரில் வரமிளகாய்ச் சட்னி.

எதிரில் வந்து அமர்ந்த தன் சகோதரியையும், பணியாரத் தட்டையும் மாறி மாறிப் பார்த்த தேனப்பண்ணன்  குழுங்கிக் குலுங்கி அழுக ஆரம்பித்து
விட்டார்.

ஆச்சிக்கு ஒன்றும் பிடிபடவில்லை. தன் தம்பியின் கையைப் பிடித்து சமாதானம் சொன்னவர், மெல்லக் கேட்டார்

“என்ன ஆச்சு அப்பச்சி?”

தன் மனக் கலக்கத்தைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு, மருத்துவரிடம்
சென்று வந்ததைத் தன் தம்பி விரிவாகச் சொல்லி முடித்தவுடன், ஆச்சி கேட்டார்கள்.

“கால வினை! இதற்குப் போய் யாராவது அழுவார்களா? அதுவும் பேரன்
பேத்தி எடுத்த நீ அழுகலாமா?  யாருக்குத்தான் நோய் நொடிகள் இல்லை.
புள்ளி விவரம் எடுத்தா மதுரையில பாதிப்பேருக்கு உப்பு அல்லது
சர்க்கரை இருக்கும். தெருவுக்குத் தெரு எத்தனை ஆஸ்பத்திரி இருக்கு - பார்த்தா தெரியலையா?”

“நான் நோய்க்காக அழுகவில்லை. நீயும் நானும் சின்ன வயதில் போட்டி போட்டுக் கொண்டு எப்படி  சாப்பிடுவோம். பணியாரம் இல்லாமல் ஒரு சாயங்காலப் பொழுதாவது கழிந்திருக்கிறதா? அதை நினைத்தால்தான்
வருத்தமாக இருக்கிறது. இப்ப அந்த சாப்பாட்டுக்கே கேடு வந்துவிட்டதே. அதை நினைத்தால்தான் துக்கமாக இருக்கிறது.”

“வயதானால் தலைமுடி தன் கருமையை இழக்கும். கண் தனது கூர்மையை இழக்கும். அதுபோல நாக்கிற்கும் நாம் கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். இல்லையென்றால் மொத்த உடம்பையும் நாம் இழக்க நேரிடும். எனக்கும்
கடந்த பத்து ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருக்கிறது. மாத்திரைகளால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறேன். யாருக்கும் தெரியாது. ஏன் உனக்கே கூடத் தெரியாது. வாரம் முழுக்க பத்தியச் சாப்பாடுதான்.
இடையில் ஒரு நாள் மட்டும் ஆசைப் பட்டதைப் பண்ணிச் சாப்பிட்டு
விடுவேன். கூடவே ஒன்றுக்கு இரண்டாக  மாத்திரைகளையும் போட்டுக்கொண்டு விடுவேன். ஆண்டவன் கூப்பிடும்வரை காலத்தைத் தள்ளுவோம் என்று தள்ளிக்கொண்டிருக்கிறேன். கவலைப்பட்டு என்ன
ஆகப் போகிறது?”

ஆச்சி சொன்னதை வியப்புடன் கேட்ட தம்பி, மெல்லச் சொன்னார். “ஆச்சி உனக்கு இனிப்பிற்கு மட்டும்தானே  கட்டுப்பாடு. உப்பிற்கு இல்லையே?
எனக்கு இரண்டையும் அல்லவா நீக்கச் சொல்கிறார்கள்?”

“நீக்கம் என்று வந்துவிட்ட பிறகு ஒன்றை நீக்கினால் என்ன? இரண்டை நீக்கினால் என்ன? எல்லாம் ஒன்றுதான். உனக்குப் புரியும்படியாகச் சொல்லட்டுமா? வயதான காலத்தில் ஒருவர் செய்யும் சேவைதான்
அவருக்கு உப்பு. செய்யும் தர்மம்தான் அவருக்கு சர்க்கரை!”

பொட்டில் அடித்த மாதிரி இருந்தது தேனப்ப அண்ணனுக்கு!

ஆச்சி தொடர்ந்து சொன்னார்கள்.

"தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?


என்று பாரதியார் பாடினார். முப்பது வயதிலேயே அவருக்கு அந்த 
ஞானம் வந்தது. அனைவருக்கும் அந்த ஞானம் வரவேண்டும். சின்ன
வயதில் வராவிட்டாலும் அறுபது வயதிலாவது வரவேண்டும். வரா
விட்டால் என்னஆகும்?  இப்படித்தான் பல சோதனைகளைக் கொடுத்து ஆண்டவன் நம்மைப் பதப்படுத்துவான். நாம்  பதப்படவேண்டும்.”

“.........................”

“நான் தினமும் நூறு ரூபாய்க்குப் பூக்கள் வாங்கிகொண்டு வந்து
மாலைகள் கட்டி பக்கத்தில் உள்ள கோவில்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும்  திருப்பரங்
குன்றம் முருகன் கோவில் வாசலில் இருக்கும் ஏழை ஜனங்களுக்கு - குறைந்தது  இருபத்தைந்து பேர்களுக்காவது அன்னதானம் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு
இலவசமாக காலையிலும் மாலையிலும் பாடம்  சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இது போன்று என்னால் முடிந்த சேவைகளையும், சிறு சிறு தர்ம காரியங்களையும் செய்து கொண்டி ருக்கிறேன். அவைதான் இன்றையத் தேதிக்கு எனக்கு உப்பும் சர்க்கரை
யுமாக இருக்கிறது. வாழ்க்கையும் சுவை குறையாமல் இருக்கிறது.
நீயும் உன்னால் முடிந்ததை அப்படிச்செய். நிஜ உப்பு, சர்க்கரையின்
நினைவே வராது!”

உண்மைதான். ஆச்சி அவர்களின் அனுபவப் பேச்சு, தேனப்ப அண்ணனுக்கு ஆறுதலைக் கொடுத்தது மட்டுமல்ல,  அவரது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தையும் துவங்கி வைத்தது.

அடுத்த நாள் தெம்புடன் ஊருக்குத் திரும்பிய தேனப்ப அண்ணன், நகரத்தார் இலவச திருமண சேவை, ஒரு ஓதுவார் உதவியுடன், நகரச் சிவன் கோவிலில் சிறுவர்களுக்கு தேவாரப்பாடல் வகுப்பு, என்று ஒவ்வொன்றாகத்
துவங்கியவர், பிறகு பலவிதமான சேவைகளிலும், உடம்பால் பாடுபடும் பல தர்ம காரியங்களிலும் தன்னை  முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

உப்பும் சர்க்கரையும் மொத்தமாக அவரைவிட்டு விடைபெற்றுக்கொண்டு போய்விட்டன. அந்த இடத்தில்  சேவையும், தர்மமும் வந்து அமர்ந்து கொண்டுவிட்டன.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

                   
வாழ்க வளமுடன்!

47 comments:

Rathnavel said...

நல்ல கதை ஐயா.
ஐம்பதைக் கடந்தாலே வியாதி தான். மனசையும் வாயையும் கட்டுப்படுத்த வேண்டும்.
நன்றி.

leadcom said...

உப்பும் சர்க்கரையும் கரையும் தன்மையன..
அரைப்படி தண்ணியில் அரைப்படி உப்பையோ சர்க்கரையையோ போட்டால் 1 படியா இருக்கும் அரைப்படி தானே..

அது போல வாழ்க்கை சூழலில்..
இறை அனுபவத்தில் என சில..

இந்தியாவில் தான் இவைகளை சேர்த்து ருசிக்க முடிகிறது..

சொல்ல வருவது புரிந்தால் மகிழ்ச்சி

Balasubramanian Pulicat said...

It is good experience, nicely presented. Sometimes it is difficult to accept the facts about ourselves. We feel God is giving troubles to us only. The real fact will be known if we visit hospitals finding various types of patients of various ages. We may feel that we are far better than many others. Atleast for Diabetes and BP there is a treatment, and many suffer with these even from ages like 25 or less. I am also getting pleasure from the techniques mentioned in the article.

dorairaj said...

கனிவும் அன்பும் கொண்ட வாத்தியார்
அவர்களுக்கு,
தங்களின் சொல்லோவியம்
நல்ல கருத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளும் படி சிறப்பாக இருந்தது

kannan said...

ஆசானே வணக்கம்.

நெத்தியடியான மஹாகவி சுப்பிரமணியின் பாடலை இன்றைய பாடத்தில் தந்தமைக்கு ஒரு கோடி நன்றிகள் .

kannan said...

ஐயா!

வகுப்பறையில் இணைய வலையில் பாடம் ஏற்றும் நேரம் மாற்றி அமைத்தமைக்கு நன்றிகள் .

எம்மால் முடிந்த வரைக்கும் முதலில் வர ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்து உள்ளது .

kannan said...

ஐயா!

தேனப்பண்ணன் போல
நடப்பது, பறப்பது, நீந்துவது என எல்லாத்தையும் வெந்தும் வேகாமலும் தொந்தி முன்தள்ளும் அளவீர்க்கு தின்னு விட்டு கடைசி காலத்தில் கூட முடிந்த வரைக்கும் உதற மனம் இல்லாமல் வாழ கூடாது என்பதனை மிகவும் அருமையாக உணர்த்திய வாத்தியாரின் வகுப்புக்கு ஒரு வோ போடுவோம்.

மதுரை சரவணன் said...

ARUMAIYAANA KATHAI... MATHURAI MANAM KALAKUKIRATHU.. VAALTHTHUKKAL

SP.VR. SUBBAIYA said...

/////Rathnavel said...
நல்ல கதை ஐயா.
ஐம்பதைக் கடந்தாலே வியாதி தான். மனசையும் வாயையும் கட்டுப்படுத்த வேண்டும்.
நன்றி.////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ரத்தினவேல்!

SP.VR. SUBBAIYA said...

leadcom said...
உப்பும் சர்க்கரையும் கரையும் தன்மையன..
அரைப்படி தண்ணியில் அரைப்படி உப்பையோ சர்க்கரையையோ போட்டால் 1 படியா இருக்கும் அரைப்படி தானே.. அது போல வாழ்க்கை சூழலில்.. இறை அனுபவத்தில் என சில..
இந்தியாவில் தான் இவைகளை சேர்த்து ருசிக்க முடிகிறது..
சொல்ல வருவது புரிந்தால் மகிழ்ச்சி//////

ஆமாம். இந்தியர்கள் மட்டும்தான் ருசிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்! நன்றி!

SP.VR. SUBBAIYA said...

Balasubramanian Pulicat said...
It is good experience, nicely presented. Sometimes it is difficult to accept the facts about ourselves. We feel God is giving troubles to us only. The real fact will be known if we visit hospitals finding various types of patients of various ages. We may feel that we are far better than many others. Atleast for Diabetes and BP there is a treatment, and many suffer with these even from ages like 25 or less. I am also getting pleasure from the techniques mentioned in the article.//////

உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி பாலா!

SP.VR. SUBBAIYA said...

dorairaj said...
கனிவும் அன்பும் கொண்ட வாத்தியார்
அவர்களுக்கு, தங்களின் சொல்லோவியம்
நல்ல கருத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி சிறப்பாக இருந்தது/////

நல்லது நன்றி துரைராஜ்!

SP.VR. SUBBAIYA said...

//////kannan said...
ஆசானே வணக்கம்.
நெத்தியடியான மஹாகவி சுப்பிரமணியின் பாடலை இன்றைய பாடத்தில் தந்தமைக்கு ஒரு கோடி நன்றிகள்//////

அந்த அம்மணி பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்னும்போது, அவருக்குத் தகுந்த - அவர் மேற்கோள் காட்டுவதற்குதற்குத் தகுந்த பாட்டாக இருக்க வேண்டாமா? நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////kannan said...
ஐயா!
வகுப்பறையில் இணைய வலையில் பாடம் ஏற்றும் நேரம் மாற்றி அமைத்தமைக்கு நன்றிகள் .
எம்மால் முடிந்த வரைக்கும் முதலில் வர ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்து உள்ளது .///////

முதல், கடைசி என்றெல்லாம் கிடையாது. நீங்கள் வந்து படித்துப் பின்னூட்டம் இட்டால் போதாதா?

SP.VR. SUBBAIYA said...

///////kannan said...
ஐயா!
தேனப்பண்ணன் போல
நடப்பது, பறப்பது, நீந்துவது என எல்லாத்தையும் வெந்தும் வேகாமலும் தொந்தி முன்தள்ளும் அளவிற்கு தின்னு விட்டு கடைசி காலத்தில் கூட முடிந்த வரைக்கும் உதற மனம் இல்லாமல் வாழ கூடாது என்பதனை மிகவும் அருமையாக உணர்த்திய வாத்தியாரின் வகுப்புக்கு ஒரு ஓ போடுவோம்.//////

உங்கள் ஓ’விற்கு நன்றி கண்ணன்!

SP.VR. SUBBAIYA said...

//////மதுரை சரவணன் said...
ARUMAIYAANA KATHAI... MATHURAI MANAM KALAKUKIRATHU.. VAALTHTHUKKAL//////

நல்லது. நன்றி சரவணன்!

arthanari said...

சாப்பிட்டு மகிழ்தகாலம் போய் சாப்பிட சொல்லி மகிழும் காலம்.

Alasiam G said...

/////என்று பாரதியார் பாடினார். முப்பது வயதிலேயே அவருக்கு அந்த
ஞானம் வந்தது. அனைவருக்கும் அந்த ஞானம் வரவேண்டும். சின்ன
வயதில் வராவிட்டாலும் அறுபது வயதிலாவது வரவேண்டும். வரா
விட்டால் என்னஆகும்? இப்படித்தான் பல சோதனைகளைக் கொடுத்து ஆண்டவன் நம்மைப் பதப்படுத்துவான். நாம் பதப்படவேண்டும்.”

“.........................”///// "
அருமையாகச் சொன்னீர்கள்" ஐயா....

''வடகோடிங் குயர்ந்தென்னே,சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு''பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!

வானத்தில் தோன்றும் பிறையில்
வடக்கு முனை உயர்ந்தால் வரப்பெல்லாம் நெல்லு....
தெற்கு முனை உயர்ந்தால் தெருவெல்லாம்
கூடை (பஞ்சம்) என்ற நம்பிக்கை இருக்கிறது...

பஞ்சம் மட்டும் அல்ல... பிணியும் கூட நம்மைக் கொல்லவந்தாலும்...
தேம்பாமல் பிறர்க்கென வாழ்ந்து உப்பு, இனிப்பு; இல்லைஎன்றால் என்ன,
பிறரின் வாழ்வில் சிரிப்பு வரச்செய்து பூரிப்புடன் வாழ வழி சொன்னது
அருமை.... நன்றி...

Alasiam G said...

////உப்பும் கூடாதாம், இனிப்பும் கூடாதாம். அவை இரண்டும் இல்லாமல்
ஏதாவது ருசிப்படுமா? ராகமும் கூடாது, தாளமும் கூடாது என்றால்
எப்படிப் பாடுவது? கோபத்தில் சங்கும், சேகண்டியும்தான் நினைவிற்கு
வந்தன!
ருசியான சாப்பாட்டைக் கைவிடவேண்டிய நிலைமையைத்தான்
அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை./////

உண்மை தான் அந்த வயதில் ஒரு சராசரி மனிதன் இந்த விசயத்தில் தானே அதிகம் நாட்டம் கொள்வான்..

Alasiam G said...

///“கால வினை! இதற்குப் போய் யாராவது அழுவார்களா?///
////“வயதானால் தலைமுடி தன் கருமையை இழக்கும். கண் தனது கூர்மையை இழக்கும். அதுபோல நாக்கிற்கும்...////
//// “நீக்கம் என்று வந்துவிட்ட பிறகு ஒன்றை நீக்கினால் என்ன? இரண்டை நீக்கினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.////
////வயதான காலத்தில் ஒருவர் செய்யும் சேவைதான்
////அவருக்கு உப்பு. செய்யும் தர்மம்தான் அவருக்கு சர்க்கரை!”////
////உண்மைதான். ஆச்சி அவர்களின் அனுபவப் பேச்சு......////,
இந்த தத்துவார்த்தமான உரைகள் ஆறுதல்கள் தரும்...
இது போன்ற வயதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு பெரும்
ஆறுதலாக இருக்கும் என்பதில் அணு அளவும் ஐயம் இல்லை...
அத்தனையும் உண்மை...
எதார்த்தத்தின் ஏற்றமான தெளிவான ஆறுதல்...
நமக்கெல்லாம் வராது என்று வகை வகையாக
சாப்பிட வேண்டும் ஆசைக் கொண்டவர்களுக்கு
இப்படி ஒரு நிலை வந்தால்... இனி உலகமே நமக்கு இல்லை
என்ற உணர்வுதான் வரும்....
போச்சு எல்லாம் போச்சு; மரணம் வாசலில் வந்து நிற்கிறது
என்ற பெரும் பயம் தான் கணம் தோறும் கொல்லும்...
ஆக வியாதி வந்ததோ இல்லையோ..
நாற்பதிலே நாசூக்காக இல்லை என்றால்
அறுபதில் அவதி தான் அது உறுதி...
மிகவும் அற்புதமானக் கதை....
மனோதத்துவம் நிறைந்த (கதை) உரை... நன்றி..

Govindasamy said...

வாய்ச்சுவைக்கு உப்பு சேர்த்தலை விட வாழ்க்கைச் சுவைக்கு உப்பும் சர்க்கரையும் சேர்த்தால் இன்பம் நிரந்தரம்...

அருமை..

நன்றி அய்யா..

SP.VR. SUBBAIYA said...

////arthanari said...
சாப்பிட்டு மகிழ்தகாலம் போய் சாப்பிட சொல்லி மகிழும் காலம்./////

ஆமாம். காலம் ஒரே மாதிரியாக இருக்காதல்லவா? நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
/////என்று பாரதியார் பாடினார். முப்பது வயதிலேயே அவருக்கு அந்த
ஞானம் வந்தது. அனைவருக்கும் அந்த ஞானம் வரவேண்டும். சின்ன
வயதில் வராவிட்டாலும் அறுபது வயதிலாவது வரவேண்டும். வரா
விட்டால் என்னஆகும்? இப்படித்தான் பல சோதனைகளைக் கொடுத்து ஆண்டவன் நம்மைப் பதப்படுத்துவான். நாம் பதப்படவேண்டும்.”
“.........................”///// "
அருமையாகச் சொன்னீர்கள்" ஐயா....
''வடகோடிங் குயர்ந்தென்னே,சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு''பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!
வானத்தில் தோன்றும் பிறையில்
வடக்கு முனை உயர்ந்தால் வரப்பெல்லாம் நெல்லு....
தெற்கு முனை உயர்ந்தால் தெருவெல்லாம்
கூடை (பஞ்சம்) என்ற நம்பிக்கை இருக்கிறது...
பஞ்சம் மட்டும் அல்ல... பிணியும் கூட நம்மைக் கொல்லவந்தாலும்...
தேம்பாமல் பிறர்க்கென வாழ்ந்து உப்பு, இனிப்பு; இல்லைஎன்றால் என்ன,
பிறரின் வாழ்வில் சிரிப்பு வரச்செய்து பூரிப்புடன் வாழ வழி சொன்னது
அருமை.... நன்றி...//////

கதையின் கரு அதுதான். அதைச் சிக்கெனப் பிடித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//////Alasiam G said...
////உப்பும் கூடாதாம், இனிப்பும் கூடாதாம். அவை இரண்டும் இல்லாமல்
ஏதாவது ருசிப்படுமா? ராகமும் கூடாது, தாளமும் கூடாது என்றால்
எப்படிப் பாடுவது? கோபத்தில் சங்கும், சேகண்டியும்தான் நினைவிற்கு
வந்தன!
ருசியான சாப்பாட்டைக் கைவிடவேண்டிய நிலைமையைத்தான்
அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை./////
உண்மை தான் அந்த வயதில் ஒரு சராசரி மனிதன் இந்த விசயத்தில் தானே அதிகம் நாட்டம் கொள்வான்..//////

வரிக்கு வரி படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
///“கால வினை! இதற்குப் போய் யாராவது அழுவார்களா?///
////“வயதானால் தலைமுடி தன் கருமையை இழக்கும். கண் தனது கூர்மையை இழக்கும். அதுபோல நாக்கிற்கும்...////
//// “நீக்கம் என்று வந்துவிட்ட பிறகு ஒன்றை நீக்கினால் என்ன? இரண்டை நீக்கினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.////
////வயதான காலத்தில் ஒருவர் செய்யும் சேவைதான்
////அவருக்கு உப்பு. செய்யும் தர்மம்தான் அவருக்கு சர்க்கரை!”////
////உண்மைதான். ஆச்சி அவர்களின் அனுபவப் பேச்சு......////,
இந்த தத்துவார்த்தமான உரைகள் ஆறுதல்கள் தரும்...
இது போன்ற வயதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு பெரும்
ஆறுதலாக இருக்கும் என்பதில் அணு அளவும் ஐயம் இல்லை...
அத்தனையும் உண்மை...
எதார்த்தத்தின் ஏற்றமான தெளிவான ஆறுதல்...
நமக்கெல்லாம் வராது என்று வகை வகையாக
சாப்பிட வேண்டும் ஆசைக் கொண்டவர்களுக்கு
இப்படி ஒரு நிலை வந்தால்... இனி உலகமே நமக்கு இல்லை
என்ற உணர்வுதான் வரும்....
போச்சு எல்லாம் போச்சு; மரணம் வாசலில் வந்து நிற்கிறது
என்ற பெரும் பயம் தான் கணம் தோறும் கொல்லும்...
ஆக வியாதி வந்ததோ இல்லையோ..
நாற்பதிலே நாசூக்காக இல்லை என்றால்
அறுபதில் அவதி தான் அது உறுதி...
மிகவும் அற்புதமானக் கதை....
மனோதத்துவம் நிறைந்த (கதை) உரை... நன்றி../////////

வரிக்கு வரி படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

///////Govindasamy said...
வாய்ச்சுவைக்கு உப்பு சேர்த்தலை விட வாழ்க்கைச் சுவைக்கு உப்பும் சர்க்கரையும் சேர்த்தால் இன்பம் நிரந்தரம்...
அருமை..
நன்றி அய்யா..///////

உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
பாரதியார் பாடல்களில் ஒவ்வொன்றிலும் உப்பும் சர்க்கரையும் கலந்தே உள்ளன. உணவில் உப்பு நீக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் பாரதியார்
பாடலில் உள்ள உப்பையும், உணவில் சர்க்கரையை நீக்க வேண்டிய நிலையில்
உள்ளவர்கள் பாரதியார் பாடல்களில் உள்ள சர்க்கரை சத்துக்களையும் பயன்
படுத்தத்தெரிந்து கொண்டால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகவே வாழலாம்,
உண‌வின் குறைக‌ள் பெரிதாக‌த்தெரியாது.இந்த உண்மையை விளக்கும்
இச்சிறு கதை தங்களின் எளிமையான எழுத்துக்களால் பாரதியாரின் பாடலுக்கு
பெருமை சேர்க்கிறது, ஆசிரியருக்கு நன்றி.
அன்புடன், அரசு.

thamurali said...

arumai!!

thamurali said...
This comment has been removed by a blog administrator.
thamurali said...
This comment has been removed by a blog administrator.
Arulkumar Rajaraman said...

Dear Sir

Arumai Sir

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Sakthi Ganesh said...

Iyya, kathai migavum nandru!!!, ithu Unmaileye ellarrum plagikolla vendiya ondru!!!
Nandri iyya, Thodarnthu ithu mathiri niraya eluthungal.

Ungal puthiya siru kathai book ondru enakkum anuppungal vilayai MO seidu vidugiren.
Sakthi Ganesh.

sundari said...

வாத்தியாரே சுக்கிரன் உச்சம் பெற்றுவிட்டான் என்பதை இந்த கதையின் வழியாக உணர்த்திவிட்டிர்கள் அப்பா கடவுளே இந்த பெரிய மனிதன் சாப்பட்டுக்கு அழுகிறர்
எனக்கு ரொம்ப சிரிப்புத்தான் வ்ந்தது நங்களும் உண்வு கட்டுபாட்டில்தான் இருக்கிறோம் வரும்முன் காக்க வேண்டாம்மா நகர வாழ்க்கை மேலும் உரல் அம்மி துணி துவைக்கும் கல்லு வாளி கிணறு கயிறு எல்லாத்துக்கும் விடை கொடுத்தச்சி மாடிபடிக்கும் விடைகொடுத்தச்சி நடை பயணத்துக்கும் விடை கொடுத்தச்சி அப்புற்ம் ஆட்டோ, கார் இவைகளில்தான் பயண்ம் என்ன பண்ணற்து அறிவுக்கு மட்டுதான் வகுப்பில் இடமென்று நினைத்தேன் இப்போ நாக்கையடக்கி வைக்கவும் பாடமா ரொம்ப் நல்ல சேவை நான் இந்த வாரம் ரெண்டு கதை எழுதி அனுப்புவேன் அதை நீங்க சனிகிழமை போடனும்,

"ஆசிரியருக்கும் சக சகோதர ச்கோதரிகளும மகா சிவ ராததரி வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் சிவனருள் கிடைக்க பெறவேண்டும்.

Ramachandran S said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

இதயம் கணக்க வைக்கும் கதை.

படித்து முடித்த பின்பு மூளையில்/மனதில் ஏதோ ஒரு தெளிவு பிற‌க்கிரது என்பதை மறுக்க முடியாது.

சிறுகதையை வலையேற்றியதற்கு நன்றிகள் பல.

அன்புடன்,
இராமச்சந்திரன்.

Rathinavel.C said...

கூடவே நடிகை தமன்னா கலரில் வரமிளகாய்ச் சட்னி.
அருமை அருமை

நன்றி
ரத்தினவேல்

Uma said...

இன்றுதான் இதைப்படித்தேன், நேற்று விடுமுறையாதலால். கதை அருமை.

இதைப்படிக்கும்போது எனக்கு என் மாமனார் நினைவு வந்தது.

SP.VR. SUBBAIYA said...

/////ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
பாரதியார் பாடல்களில் ஒவ்வொன்றிலும் உப்பும் சர்க்கரையும் கலந்தே உள்ளன. உணவில் உப்பு நீக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் பாரதியார்
பாடலில் உள்ள உப்பையும், உணவில் சர்க்கரையை நீக்க வேண்டிய நிலையில்
உள்ளவர்கள் பாரதியார் பாடல்களில் உள்ள சர்க்கரை சத்துக்களையும் பயன்
படுத்தத்தெரிந்து கொண்டால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாகவே வாழலாம்,
உண‌வின் குறைக‌ள் பெரிதாக‌த்தெரியாது.இந்த உண்மையை விளக்கும்
இச்சிறுகதை தங்களின் எளிமையான எழுத்துக்களால் பாரதியாரின் பாடலுக்கு
பெருமை சேர்க்கிறது, ஆசிரியருக்கு நன்றி.
அன்புடன், அரசு./////

பாரதியாரின் பாடல் ஏற்கனவே தேவையான அளவு பெருமையுடன்தான் இருக்கிறது. நல்லது. நன்றி அரசு!

SP.VR. SUBBAIYA said...

/////thamurali said...
arumai!!////

நல்லது. நன்றி முரளி!

SP.VR. SUBBAIYA said...

////Arulkumar Rajaraman said...
Dear Sir
Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

/////Sakthi Ganesh said...
Iyya, kathai migavum nandru!!!, ithu Unmaileye ellarrum plagikolla vendiya ondru!!!
Nandri iyya, Thodarnthu ithu mathiri niraya eluthungal.
Ungal puthiya siru kathai book ondru enakkum anuppungal vilayai MO seidu vidugiren.
Sakthi Ganesh.////

உங்களின் இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன் நண்பரே! நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////sundari said...
வாத்தியாரே சுக்கிரன் உச்சம் பெற்றுவிட்டான் என்பதை இந்த கதையின் வழியாக உணர்த்திவிட்டிர்கள் அப்பா கடவுளே இந்த பெரிய மனிதன் சாப்பாட்டுக்கு அழுகிறர்
எனக்கு ரொம்ப சிரிப்புத்தான் வ்ந்தது நங்களும் உண்வு கட்டுபாட்டில்தான் இருக்கிறோம் வரும்முன் காக்க வேண்டாம்மா நகர வாழ்க்கை மேலும் உரல் அம்மி துணி துவைக்கும் கல்லு வாளி கிணறு கயிறு எல்லாத்துக்கும் விடை கொடுத்தாச்சு. மாடிபடிக்கும் விடைகொடுத்தாச்சு. நடை பயணத்துக்கும் விடை கொடுத்தாச்சு. அப்புற்ம் ஆட்டோ, கார் இவைகளில்தான் பயணம் என்ன பண்ணறது? அறிவுக்கு மட்டுதான் வகுப்பில் இடமென்று நினைத்தேன் இப்போ நாக்கையடக்கி வைக்கவும் பாடமா ரொம்ப நல்ல சேவை நான் இந்த வாரம் ரெண்டு கதை எழுதி அனுப்புவேன் அதை நீங்க சனிகிழமை போடனும்,
"ஆசிரியருக்கும் சக சகோதர ச்கோதரிகளும மகா சிவராத்ரி வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் சிவனருள் கிடைக்க பெறவேண்டும்./////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//////Ramachandran S said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
இதயம் கணக்க வைக்கும் கதை.
படித்து முடித்த பின்பு மூளையில்/மனதில் ஏதோ ஒரு தெளிவு பிற‌க்கிறது என்பதை மறுக்க முடியாது.
சிறுகதையை வலையேற்றியதற்கு நன்றிகள் பல.
அன்புடன்,
இராமச்சந்திரன்.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி இராமச்சந்திரன்!

SP.VR. SUBBAIYA said...

////Rathinavel.C said...
கூடவே நடிகை தமன்னா கலரில் வரமிளகாய்ச் சட்னி.
அருமை அருமை
நன்றி
ரத்தினவேல்////

கரெக்டாக உங்கள் கண்ணில் பட்டிருக்கிறது பாருங்கள். நீங்கள் ரத்தினம்தான்!

SP.VR. SUBBAIYA said...

////Uma said...
இன்றுதான் இதைப்படித்தேன், நேற்று விடுமுறையாதலால். கதை அருமை.
இதைப்படிக்கும்போது எனக்கு என் மாமனார் நினைவு வந்தது.////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

உணர்ந்தவை! said...

சும்மா சொல்லக்கூடாது, ரொம்ப நல்லாயிருந்தது! பின்னுட்டமெல்லாம் போடறதில்லை, இருந்தாலும் போடனுனு தோணுச்சி

இராஜராஜேஸ்வரி said...

இப்படித்தான் பல சோதனைகளைக் கொடுத்து ஆண்டவன் நம்மைப் பதப்படுத்துவான். நாம் பதப்படவேண்டும்.”

Arul said...

Nice Story Sir...

Thank you.