மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

30.3.11

Astrology ராகுவிற்கு நிகரான சுழல் பந்து வீச்சாளர் கிடையாது!

---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
 Astrology ராகுவிற்கு நிகரான சுழல் பந்து வீச்சாளர் கிடையாது!

நீங்கள் மட்டையாட்ட ரசிகரா? சந்திராவைத் தெரியுமா? தெரியாதென்றால் தெரிந்துகொள்ளுங்கள்.

1964ஆம் ஆண்டிலிருந்து 1978ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக சிறப்பாகப் பந்து வீசிய கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர். லெக் ஸ்பின் பெளலர். சுழல் பந்து வீச்சுக்காரர்.

குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், அவரது வலதுகை மணிக்கட்டு அவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட போலியோ நோயால் செயல் இழந்துவிட்டது. இடது கையால் பயிற்சிசெய்து, அணியில் இடம் பிடித்தவர் அவர். பிஷன் சிங் பேடி, ஈ.ஏ.எஸ் பிரசன்னா போன்ற சக சுழல் பந்துவீச்சுக்காரர்களுடன் சேர்ந்து பல வெளிநாட்டு அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அவர்.

விவியன் ரிச்சர்ட்ஸால் (புகழ் பெற்ற மேற்கு இந்திய ஆட்டக்காரர்) தான் சந்தித்த சிறந்த பந்துவீச்சுக்காரர் என்ற பெருமை மிகும் பாராட்டைப் பெற்றவர்.

அவரைப் பற்ரிய மேல் விவரங்களுக்கு இதைப் படியுங்கள்

+++++++++++++++++++++++++++++++++++++++++=
சரி, சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன். நேற்று அதிவேகப் பந்து வீச்சாளர்களைக் குறிப்பிட்டு, அவர்களுடன் இரண்டு கிரகங்களின் தசாபுத்தியை விளக்கியிருந்தேன்.

இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களைச் சொல்லி, அவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ள ராகுவைப் பற்றிச் சொல்ல விளைகிறேன்.

ராகு தீய கிரகம். அத்துடன் கொடிய பாப கிரகம். 90% ஜாதகர்களை ராகு, தன்னுடைய தசா மற்றும் புத்தி காலங்களில் புரட்டிப்போட்டுவிடும்.

சுழல் பந்து வீச்சில் வரும் பந்தைப் போல எங்கே பிட்ச் ஆகும், எங்கே திரும்பும், என்ன செய்யும், முடிவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாத நிலை இருக்கும்.

மற்ற பாப கிரகங்கள் நிற்க வைத்து அடிக்கும். ராகு தொங்கவிட்டு அடிப்பார். அதுதான் வித்தியாசம்.

ஆகவே ராகுவின் காலங்களில், இறை வழிபாடு செய்து, அக்காலத்தை ஓட்டினால் அதுவே பெரிய விஷயம்.

இன்று கேது மகாதிசையில் ராகுவின் புத்திக் காலத்தையும், ராகு மகாதிசையில் கேதுபுத்திக் காலத்திற்கும் உரிய பலன்களைக் கொடுத்துள்ளேன். பாடல்களைப் படித்துப் பயன் பெறுக.

எல்லாம் பொதுப்பலன்கள்தான். ஆகவே யாரும் கலக்கமடைய வேண்டாம். இறைவழிபட்டால் எதையும் எதிர் கொள்ள முடியும். அதை மனதில் வையுங்கள்.

உண்டான கேது திசை ராகுபுத்தி
   உண்மையில்லா நாளதுவும் வருடம் ஒன்று
நன்றாகும் நாளதுவும் மூவாறாகும்
   நலமில்லா அதன் பலனை நவிலக்கேளு
விண்டாகுஞ் சத்த்துருவால் சோரபயமாகும்
   வினையான மனைவிதன்னால் வீண் கலகமாகும்
ஒன்றாகும் உன் உடம்பில் பிணி உண்டாகும்
   உறுதியில்லா உன் தெய்வம் வோடுந்தானே!

பாரேநீ ராகுதிசை கேதுபுத்தி
   பகருகின்ற மாதமது பனிரெண்டாகும்
சேரே நீ நாளதுவும் பதினெட்டாகும்
   செலுத்துகின்ற அதன்பலனை செப்பக்கேளு
ஊரேநீ விரோதமுடன் சத்துருவுமுண்டாம்
   உடன்கேடு பண்ணிவைக்கும் உண்மைபாரு
தேரேநீ திரவியங்கள் யேவலுடன் சேதம்
   தீதான காரியங்கள் தேகத்தில் காணும்!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

11 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

மற்ற பாப கிரகங்கள் நிற்க வைத்து அடிக்கும். ராகு தொங்கவிட்டு அடிப்பார். அதுதான் வித்தியாசம்.

உண்மை உண்மை உண்மை ....
ஏன் என்றால் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ....

இறையருளால் தலைப்பாகையோடு போய்க்கொண்டிருக்கிறது ....

iyer said...

கிட்டாத தொலைவில்
கிரிகெட்டும் நானும்..


இன்னல்கள் 90% ஜாதகருக்கு..
இறையருளால் எதிர்கொள்ளலாமென


சொல்லவந்த ராகுவை
மெல்ல கடந்து பல வருடமானதால்


வகுப்பறையில் குறிக்கிறேன்
வருகை பதிவை மட்டும்

kmr.krishnan said...

கேது தசா ராகு புக்தியில் தந்தை மர‌ணம் ஏற்பட்டது.9ல் ராகு ஜாதகத்தில் இருப்பதால் ராகு புக்தியில் தந்தை மரணம் ஏற்பட்டிருக்கலாம்.

ராகு தசா கேது புக்தி 92 வயதில் வரும்.இருப்பேனா என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

kannan said...

ஐயா வணக்கம்
வாத்தியார் ஐயா சொல்லுவது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை

இதோ. பிறக்கும் பொழுது புதன் திசையின் இருப்பு 4 வருடம் 11 மாதம் 27 நாட்கள்
பின்னர் வந்த கேதுவும் ஒன்றும் செய்ய வில்லை. பெற்றோரின் ஜாதக புண்ணியத்தால் . பின்னர் வந்த
குட்டி சுக்கிரன் 20 வருடம் . அதில் ராகு புத்தி ஆரம்பத்தில் தான் சரியாக வந்து கொண்டு இருந்த படிப்பு அப்படியே நின்று போச்சு மறு வாருடம் தகப்பனார் மரணம்,
சொத்து அனைத்தும் அறவே நாசம், காக்கை கூட்டம் போல இருந்த உறவுகள் அனைத்தும் பிரிந்ததும் இந்த ராகு புத்தி காலத்தில் தான் அதுவும் 3 வாருடத்தில் குலநாசம் செய்து விட்டது.

பங்காளி சுக்கிரனுடன் சேர்ந்து .

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அன்புள்ள வகுப்பறை தோழர்களே...

இன்றைய
இந்தியா Vs பாகிஸ்தான்
கிரிக்கெட் மேட்ச்சில்

நமது இந்தியா வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவனை
மனதார பிரார்த்தனை செய்வோம்..

ஒரு நிமிடமாவது கண்களை மூடி மனதார வேண்டுவோம்..

பாரத் மாத கி ஜே

R.Puratchimani said...

ஐயா வணக்கம்,
நீங்கள் மீண்டும் இலவச பாடங்கள் ஆரம்பித்ததிற்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி.
முன்பே தெரிந்திருந்தால் முன்பே வந்திருப்பேன்.

குருவை பற்றி கொஞ்சம் கிறுக்கியுள்ளேன்.
அது தங்கள் பார்வைக்கு
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/
(உங்கள் கையால் கொட்டு வாங்குவதே நோக்கம்)
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி

dubai saravanan said...

அவரவர்களுடைய ஜாதகத்தில் ராகு இருக்கும் நிலையை பொறுத்து பலன்கள் மாறுபடுமா ?
உதாரணமாக ராகு 7ம இடத்தில் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்குமா?

vprasanakumar said...

ஐயா வணக்கம்

ராகு தசா கேது புக்தி, 2 வருடம் முன்பு கடந்து வந்து விட்டேன்.

இறை அருள் முலம், எல்லாம் அவன் செயல்.

நன்றி ஐயா.

kmr.krishnan said...

///ஏன் எனில் குருவே லக்ன காரகன். லக்ன காரகனான குரு லக்னத்தில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் அடுத்தது லக்னமே இல்லாமல் செய்ய வேண்டும். அதாவது அடுத்த பிறவியே இல்லாமல் செய்யவேண்டும்.
(இது உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்கே வெளிச்சம்....)
எனவே குரு லக்னத்தில் இருப்பது நல்லது என்பதற்கு இதுவே மறைமுகமான முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உங்களுடைய கருத்து?///

புரட்சி மணியின் 'கேள்வியும் நானே பதிலும் நானே' வலைப் பூவிலிருந்து எடுத்துக் கொடுத்துள்ளேன்.ஆனந்த் போன்ற‌வர்கள் அபிப்ராயம் சொல்லலாமே!

R.Puratchimani said...

என்னுடைய வலைப்பூவிற்கு வந்தமைக்கும் அதை இங்கே கோடிட்டு காட்டியமைக்கும் நன்றி kmr.krishnan அவர்களே.
என்றும் அன்புடன்
இராச.புரட்சிமணி

Uma said...

எனக்கு இன்னும் பத்து வருடம் கழித்துதான் ராகு தசை வரும். ஆனா சந்திர தசை / ராகு புத்தி, சுக்கிர தசை / ராகு புத்தி நன்மையாகவே இருந்தது. அதனால ராகு தசையும் நன்மையாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.