மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.3.11

கலக்கலாக ஒரு பதிவு!

கலக்கலாக ஒரு பதிவு!

இளைஞர்கள் மட்டும்தான் கலக்கலாகப் பதிவு எழுத வேண்டுமா? வாத்தியாரும் எழுதுவார்! உங்களுக்காக இன்றையப் பதிவு கலக்கல் பதிவு. படித்துப் பாருங்கள் தெரியும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++

 --------------------------------------------------------------------------------
அரங்கத்தில் அசத்தலாக நடந்தது

ஒரு பட்டிமன்ற மேடை. நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு அணியின் தலைவர். எதிர் அணியில் அவருடைய சீடர் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன் அவர்கள். அவர் கவியரசரை விட வயதில் இளையவர்.

பட்டிமன்றத்தலைவர். திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். தலைப்பு: குடும்பக்கட்டுப்பாடு (தலைப்பை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்)

முதலில் பேசிய திரு.அரு.நாகப்பன் சபைத் தலைவருக்குக் கலக்கலாக இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தார்:

“கவியரசர் கண்ணதாசன் இந்த மேடைக்குச் சம்பந்தமில்லாதவர்.
அவருக்குப் பதினான்கு குழந்தைகள். ஆகவே  குடும்பக் கட்டுப்
பாட்டைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியில்லை. முதலில்
மேடையை விட்டு அவரைக் கீழே இறக்குங்கள்!”

சபை சிரிப்பொலியால் அதிர்ந்தது.

தன்முறை வந்தவுடன் பேச வந்த கவியரசர், “எனக்குப் பதினான்கு
குழந்தைகள் என்பது உண்மை. குடும்பக்கட்டுப்பாட்டின் அருமை
எனக்குத்தான் நன்றாகத் தெரியும். நாகப்பனுக்கு இரண்டே இரண்டு  குழந்தைகள்.அவனுக்கு என்ன தெரியும்? ஆகவே அவனுக்குத்தான் தகுதியில்லை. அவனை முதலில் கீழே இறக்குங்கள்” என்று ஒரு
போடு போட்டாரே பார்க்க வேண்டும்.

சபையில் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆயிற்று!

கவியரசரின் சமயோசித புத்திக்கு இது ஒரு உதாரணம்!
================================================================
கல்லூரி இட்லி!யும், கவியரசர் கண்ணதாசனும்!

கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை லயோலா கல்லூரியின் தமிழ் மன்றத்தில் உரையாற்றச் சென்றிருந்தார். விழா  துவங்குமுன்பாக, மாணவர்கள், கவியரசருக்கு தங்கள் கல்லூரி உணவு விடுதியில் சிறுண்டி வழங்கினார்கள்.

சூடாக இருந்த இட்லியைக் கவியரசர் விரும்பிச் சுவைத்தார்.

மாணவர்களில் ஒருவர்,”ஐயா நீங்கள் எதைப் பற்றியும் கவிதை எழுதுவீர்கள் இல்லையா?” என்று கேட்கவும், கவியரசர், “ஆமாம்’” என்று பதில் சொன்னார்.

உட்னே, அந்த மாணவர், ”எங்கள் விடுதி இட்லியைப் பற்றி இரண்டு வரிகளில் சொல்லுங்கள் ஐயா!” என்றார்.

சட்டென்று அடுத்த நொடியே கவியரசர் இப்படிச் சொன்னார்:

“இட்டிலியே ஏன் இளைத்துவிட்டாய்? - எவனை
இங்கே நீ காதலித்தாய்?”


அதுதான் கவியரசர்!
==========================================================
பெரிய திரைச் செய்தி (Cinema News)

சூப்பர் ஸ்டாரின் படங்கள்தான் அதிகப் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படுகின்றன. அதிக அளவில் விளம்பரப்படுத்தப் படுகின்றன.

இந்த வேலையை அந்தக் காலத்தில் The Great திரு.S.S. வாசன் அவர்கள் தான் தயாரித்த படங்களுக்குச் செய்தார். 'சந்திரலேகாவை’யும் 'ஒளவையாரை'யும் மறக்க முடியுமா? அவருக்குச் சொந்தமாக ஜெமினி  ஸ்டுடியோவும் ‘ஆனந்த விகடன்’ வார இதழும் இருந்ததால் அவரால் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது.

ஒளவையார் படத்திற்கு, திருமதி.கே.பி.சுந்தராம்பாள் அவர்களை,
யாரும் நினைத்துப் பார்க்காத தொகையைக் கொடுத்து, சம்மதிக்க
வைத்துப் படத்தில் நடிக்க வைத்ததோடு, புதுமையான முறையில் விளம்பரங்களைச் செய்து, அந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப்
படமாக ஆக்கிய பெருமை அவரையே சேரும்!.

இப்போது தொழில் நுட்பம் தெருவிற்கு வந்து விட்டது. அது இல்லாத காலத்திலேயே அவர் ’Multicolor’  நோட்டீஸ் அடித்து வீடு
வீடாகக் கொடுத்து, அத்தனை மக்களையும் பார்க்க வைத்தார்
என்றால் அது இமாலய சாதனை அல்லவா?

திருநெல்வேலி பேலஸ்-டி-வேல்ஸ் திரையரங்கில் அந்தப் படம் வெளிவந்து ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் அவர்  வினியோகித்த நோட்டீஸ் ஒன்றை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த நோட்டீஸ் சாமிகளா! அதை மனதில் வையுங்கள்.

அப்போது என் தந்தையார் திருநெல்வேலியில் இருந்தார். அவருடைய பொக்கிஷங்களை குடைந்தபோது, சுவாரசியமாக இருந்தவற்றை
யெல்லாம் எடுத்து வைத்துள்ளேன். அதிலிருந்துதான் இதை உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.

படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கிப் பாருஙக்ள். படம் பெரிதாகத் தெரியும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கலக்கல் படம் ஒன்று, அடிக்குறிப்புடன்!

 வேறு ஒன்றுமில்லை, அண்ணாச்சி உடற்பயிற்சி செய்கிறார்!
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

15 comments:

  1. aththanaiyum inaippu ....rasikka vaiththana... vaalthhukkal

    ReplyDelete
  2. ஜோதிட ஆசானே !

    கண்ணனுக்கு தாசன் என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா ?

    கண்ணதாசன் என்று பெயர் வைத்தமைக்கு " கண்ணனாக",
    " காதல் விளையாட்டில்", விளையாடினால் தானே
    " கண்ணதாசன்", என்று பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  3. திருவாளர் " முத்தையா செட்டியார் "
    அவர்கள் கண்ணதாசன் என்ற பெயருக்கு ஏற்றார்போல " காதல் பெண்களின் பெரும் தலைவன்", என்று பாடி வாழ்த்து காட்டியர் அல்லவா .

    ReplyDelete
  4. ஐயா!

    சம சப்தம பொருத்தம் என்றால் என்ன

    ReplyDelete
  5. இது போன்ற உடல் பயிற்சியென்றால் தினமும் தவறாமல் செய்யலாம் அல்லது செய்யும் ஆர்வம் இருக்கும்.

    ReplyDelete
  6. பட்டி மன்றம்
    பழனி ஆண்டவர்
    பாபிலோனியத் (தொ) தோட்டம்.

    ReplyDelete
  7. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    கவியரசர் கண்ணதாசனின் உள்ளார்ந்த புத்திக்கூர்மையை அந்த பட்டிமன்றத்தில் அருமையாக வெளிப்படுதியுள்ளார். அந்த நிகழ்ச்சியை வலையேற்றியதற்கு நன்றி.

    இட்லிக்கும் கவியரசர், கவிதை எழுதியிருக்கார். அருமையாக உள்ளது.

    தகப்பனின் பொக்கிசங்களை குடைவதில் எனக்கு உள்ள ஈடுபாடு போல ஆசிரியருக்கும் உள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.

    கடைசியாக அண்ணாச்சியின் படம், இப்படியும் கூட உடற்பயிற்சி செய்யலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.

    அருமையான தொகுப்பு.

    வணக்கத்துடன்,
    இராமச்சந்திரன்.

    ReplyDelete
  8. /////மதுரை சரவணன் said...
    aththanaiyum inippu ....rasikka vaiththana... vaalthhukkal////

    நன்றி சரவணன்!

    ReplyDelete
  9. /////kannan said...
    ஜோதிட ஆசானே !
    கண்ணனுக்கு தாசன் என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா ?
    கண்ணதாசன் என்று பெயர் வைத்தமைக்கு " கண்ணனாக",
    " காதல் விளையாட்டில்", விளையாடினால் தானே
    " கண்ணதாசன்", என்று பொருத்தமாக இருக்கும்.////

    அவர் வாழ்ந்த துறையும் அதற்குப் பொருத்தமாக அமைந்தது!

    ReplyDelete
  10. ///kannan said...
    திருவாளர் " முத்தையா செட்டியார் "
    அவர்கள் கண்ணதாசன் என்ற பெயருக்கு ஏற்றார்போல " காதல் பெண்களின் பெரும் தலைவன்", என்று பாடி வாழ்த்து காட்டியர் அல்லவா .//////

    அவர் ஜாதக ராசியும், அவர் வாழ்ந்த துறையும் அப்படி!

    ReplyDelete
  11. ////kannan said...
    ஐயா!
    சம சப்தம பொருத்தம் என்றால் என்ன////

    அஷ்டம சஷ்டமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதைக் கேள்விப்பட்டதில்லையே ஸ்வாமி!

    ReplyDelete
  12. /////ananth said...
    இது போன்ற உடல் பயிற்சியென்றால் தினமும் தவறாமல் செய்யலாம் அல்லது செய்யும் ஆர்வம் இருக்கும்.///

    ஆகா, செய்யலாம். வேடிக்கை பார்க்கக்கூட்டம் சேர்ந்துவிடும் இடமாக இல்லாமலும் இருக்க வேண்டும்!:-))))

    ReplyDelete
  13. /////Alasiam G said...
    பட்டி மன்றம்
    பழனி ஆண்டவர்
    பாபிலோனியத் (தொ) தோட்டம்./////

    அத்துடன் ஆலாசியத்தின் பின்னூட்டம்!

    ReplyDelete
  14. /////Ramachandran S said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    கவியரசர் கண்ணதாசனின் உள்ளார்ந்த புத்திக்கூர்மையை அந்த பட்டிமன்றத்தில் அருமையாக வெளிப்படுதியுள்ளார். அந்த நிகழ்ச்சியை வலையேற்றியதற்கு நன்றி.
    இட்லிக்கும் கவியரசர், கவிதை எழுதியிருக்கார். அருமையாக உள்ளது.
    தகப்பனின் பொக்கிசங்களை குடைவதில் எனக்கு உள்ள ஈடுபாடு போல ஆசிரியருக்கும் உள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.
    கடைசியாக அண்ணாச்சியின் படம், இப்படியும் கூட உடற்பயிற்சி செய்யலாம் என்று சுட்டிக்காட்டுகிறது.
    அருமையான தொகுப்பு.
    வணக்கத்துடன்,
    இராமச்சந்திரன்.////

    எல்லாம் உங்களுக்காகத்தான். நன்றி ராமச்சந்திரன்!

    ReplyDelete
  15. from browsing centre
    ---------------------
    ஆம்!கவியரசர் என்னதான் மதுவின் பிடியில் இருந்தாலும் சமயோசிதத்தை இழந்ததில்லை. எங்கள் பள்ளியில் உரையாற்றிய போது,நன்றியுரை ஆற்றிய எங்கள் ப‌ள்ளித் தமிழ் அய்யா, "போனால் போகட்டும் போடா" பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கெல்லாம் வருகிறது என்று பட்டியல் இட்டார்.ஒரு இடத்தில் அவர் தடுமாறிய போது, கண்ணதாசன் அவ்வரியை அவருக்கு நினைவூட்டி
    அசத்தினார்.

    சந்திரன் 7க்கு 7 ஆக நிற்பது சம சப்தமம். சில சம சப்தமங்க‌ள் ஏற்கப்படுவதில்லை. உதாரணமாக சிம்மத்தில் சந்திரன் கும்பத்தில் சந்திரன்
    ஆகாது.சமசப்தமப்பொருத்தம் இருந்தால் மற்ற பொருத்தங்கள் பார்க்க வேண்டாம் என்று கூறுவார்கள். அது சரி அல்ல.தோஷ சாம்யம் கட்டாயம் பார்க்க வேண்டும்.சம சப்தமத்தில் என்ன விசேஷம் எனில் ஏழரை நாட்டான் போன்றவை இருவருக்கும் நல்ல இடைவெளியில் வரும்.ஒரேசமயத்தில் வந்து படுத்தாது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com