மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

19.3.11

இயற்கைப் பேரழிவை இயன்றவரை சொல்லும் பஞ்சாங்கங்கள்!

---------------------------------------------------------------------------------
 இயற்கைப் பேரழிவை இயன்றவரை சொல்லும் பஞ்சாங்கங்கள்!

வகுப்பறையின் மூத்த மற்றும் நமது மதிப்பிற்குரிய மாணவர், அன்பர், திருவாளர் வி.கோபாலன் அவர்களிடம் இருந்து வந்த கடிதத்தை அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பயன்பெறுக!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------

அன்புடையீர்,

மிகவும் பிற்போக்கானவர்களைக் குறிப்பிட பொதுவாக "அவன் ஒரு பழைய பஞ்சாங்கம்" என்கிறார்கள் அல்லவா? அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக என் நண்பர் எனக்கு அனுப்பியுள்ள விக்ருதி வருட பஞ்சாங்கத்தில் வெளியாகியுள்ள இவ்வாண்டின் பலன்களில், மாசி மாதத்தில் இமய மலைப் பகுதியிலும், இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூகம்பம், வெள்ளப் பெருக்கு, போன்ற இயற்கை பேரழிவுகள் வரும் என்று கூறப்பட்டிருப்பதைப் பகுத்தறிவு வாதிகள் கவனிக்கட்டும். இனியாவது அறிவியல் பூர்வமான பஞ்சாங்கப் பலன்களை அவர்கள் இழிவு செய்யாமல் இருக்கட்டும். இதோ அந்தக் கடிதம், அதில் உள்ள பலன்களைப் பாருங்கள்.

அன்பன்,
வி.கோபாலன்
தஞ்சாவூர்
--------------------------------------------------------------
Go thorugh this who know tamil. Our Hindu panchangam has already predicted earth quake in japan one year back itself
++++++++++++++++++++++++++
படத்தின் மீது கர்சரைவைத்துக் கிளிக்கிப் பாருங்கள் படம் பெரிதாகத் தெரியும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வருந்த வைக்கும் செய்தி!

ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து அணு உலைகள் வெடித்தன.

அவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும் அணு உலைகளை குளிர்விக்கவும் கடுமையாக போராடி வருகிறது ஜப்பான்.

இந்நிலையில் மக்களை கொன்றும் குவிக்கும் அளவிக்கு மிக மோசமாக கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கண்கலங்கியவாறு டோக்கியோ மின் அணு உலை தலைமை அதிகாரியான Akio Korimi  பேட்டியொன்றில் தெரிவித்துள்ளதாக சில சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அழுதபடி பேட்டியளிக்கும் அவரது படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


அணு உலைகள் மீது விமானமூலமும் தரையிலிருந்தும் தண்ணீரை கொட்டும் நடவடிக்கைகளினால் அணு உலைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூற முடியாது எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

கதிர்வீச்சின் தாக்க அபாய எச்சரிக்கையை இன்று ஜப்பான் அதிகரித்திருந்தமையானது 1979 இல் பெனுசிலாவியாவில் Three Mile Island  அணு உலை விபத்தின் போது ஏற்பட்ட கதிர்வீச்சு தாக்கத்தின் அளவுக்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய அரசு தொடர்ந்து கதிர்வீச்சின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் இன்னமும் அதிகமான அபாய கட்டத்தை தாண்டவில்லை எனவும் தெரிவித்து வருகின்றது. எனினும் கதிர்வீச்சு தாக்கம் தொடர்பான உண்மையை ஜப்பான் மறுத்து வருவதாக ஜப்பானிய மக்கள் விசனம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

உலக நாடுகள் பலவும் ஜப்பானில் இருக்கும் தங்கள் பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- நன்றி: தமிழ் மீடியா செய்திகள் வலைத்தளம்
 

வாழ்க வளமுடன்!

11 comments:

Thanjavooraan said...

நமது முன்னோர்கள் அறிவாளிகள். அவர்கள் உலகத்தின் மற்ற பகுதியினர் நாகரிகம் அடைவதற்கு முன்பாகவே பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, அவற்றைய அன்றைய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்திருக்கின்றனர். நமது முன்னோர்களை நாம் அடிமுட்டாள்களாக நினைத்து இன்றைய அறிவாளிகள்தான் முற்போக்காளர்கள், முன்னோர்கள் பிற்போக்காளர்கள் என்று வாதிடும் வழக்கத்தை நிறுத்திக் கொள்வதுதான் சரி. கணிதம், வேதியல், புவியியல் இவற்றில் நம் முன்னோர்கள் சொன்ன கருத்துக்களைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்ததாகப் பறைசாற்றுகின்றனர். இந்த புண்ணிய பூமியில் அத்தகைய சான்றோர்களின் வாரிசாகப் பிறந்தமைக்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோமாக. பஞ்சாங்கங்களை துச்சமாக நினைக்க வேண்டாம். அவை அறிவியல் பூர்வமானவை என்பதற்கு இதனைவிட ஓர் எடுத்துக்காட்டு தேவையா என்ன? நன்றி ஆசிரியர் அவர்களே, என்னுடைய கடிதத்தை வெளியிட்டமைக்காக. மீண்டும் நன்றி.

iyer said...

//பகுத்தறிவு வாதிகள் கவனிக்கட்டும். இனியாவது அறிவியல் பூர்வமான பஞ்சாங்கப் பலன்களை அவர்கள் இழிவு செய்யாமல் இருக்கட்டும்//
...

தொட்டிலிலே தொடங்கி
தொடரும் வாழ்வெல்லாம்
பட்டியலிட்டு பலன் பல சொல்லும்
பஞ்சாங்கத்தை - கருஞ்
சட்டைக்காரர்கள் காழ்ப்புடனே
கருத்து பல சொன்ன போதும்
சாட்டையடிகொடுப்பது போல்; இன்றும்
சாதித்து காட்டுவதால்..


கிழமை ஏழினினும்
கிடைப்பது எதுவென
இளமையாய் என்றும்
இனிய நல்லுறை சொல்வதாலே
பழமையான பஞ்சாங்கத்தை
(பழைய பஞ்சாங்கமென ஒதுக்காமல்)
பார்தனிலே சொல்லி வைத்து
வளமைகள் பல சேர்த்து
வளமுடனே வாழ்வோமே..

kmr.krishnan said...

ஆற்காடு சீதாராம ஐயர் பஞ்சாங்கத்தில் பல பயனுள்ள தகவல்கள் உண்டு.ஜப்பான் நில நடுக்கம், ஆழிப்பேரலையை ஏற்கனவே கணித்து வெளியிட்டது ஆச்சரியமே. அதனை நம்முடன் பகிர்ந்துகோண்ட தஞ்சாவூர் பெரியவருக்கு நன்றி!

Anonymous said...

கோபாலன் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் ..

வேதனையான செய்திகள் ..

இந்த நிமிடம் வரை
( காலை 11 : 55 ) பின்னூட்டமே இல்லாத ஒன்றே கட்டுரையின் வேதனையை காட்டுகிறது ..

படித்த வகுப்பறை தோழர்களின் நெஞ்சம் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது என்பது புலனாகிறது ..

இறந்துபோன ஜப்பானிய சகோதர சகோதரிகள் ஆன்மா சாந்தியடையட்டும் ..

இனி இதுபோல ஒரு பேரழிவு உலகின் எந்த மூலையிலும் நிகழாதிருக்க அன்பே வடிவான இறைவனை வழிபடுவோம் ..

இதுபோன்ற பேரழிவுகளையும் கணிக்கும் இந்த வான சாஸ்திரத்தை வணங்குகிறேன்

Anonymous said...

தஞ்சாவூரரும் - கோபலான் ஐயாவும் ஒருவரே என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன் ,,, வணக்கங்கள் ஐயா ...

அன்பிற்குரிய விசு ஐயர் அவர்கள் இன்றும் கவிதை மழை பொழிந்திருக்கிறார் ,,

ஐயர் ஐயா அவர்களுடைய முழு பெயர், வயது மற்றும்
அவரது திருவுருவப் படத்தையும் காண ஆவலாக உள்ளேன் ,,

( வகுப்பறையில் அனைவருக்கும் இந்த எண்ணம் இருக்கும் என நினைக்கிறேன் )


ஐயா வெளியிடுவாரா ?

அன்பே சிவம்

kannan said...

From: ganapathi nataraaja

அன்புடன் கண்ணன் வணக்கம்
ரெம்ப கலகிட்டேங்க !!!!
ச்காதேவேரின் நாடி ஜோதிடம் !: வகுப்பறையல் முன்பு ஒரு முறை எதோ ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இடும்போது :::நான் இட்டது 1979 ..தென்னிந்தியாவில் மாலை சார்ந்த பகுதியல் பிறந்த ஆண் தனது 40 ..வது வயதில் நமது நாட்டை ஒரு குடை கீழ் ஆளுவார் ..இவர் நடத்தும் அரசாட்சி பார்த்து மற்ற நாடுகள் பின்பற்றும் ..ஒரு சமயம் அழிந்து போகும்.. ஒரு நாடும் முற்றிலுமாக அழியும் என கூறபடுகிறது தாங்கள் கருத்து என்ன என வாத்தியாரிடம் கேட்டேன் அவர்கள் நாச்ட்டர் தோமஸ் [naster domas].. பற்றிய விபரங்கள் கூறினார்கள் .. நீங்கள் இங்கே கூறியது எனது நண்பர்[ஜோதிடர் ] கூறியதும் இதுவும் ஒன்றாக இருக்கிறது.பார்க்கலாம் ..

kannan said...

ஆசானே நமஸ்காரம்

தன்னையே தன்னால் திருத்த முடியாது முழிக்கும் பொழுது இந்த பேரழிவை எப்படி தடுக்க அல்லது திருத்த முடியும்.

நமது பாரத மண் நீர்க்கு ஏற்ற செய்தி ஒன்று அண்மையில் எமக்கு கிடைத்தது

நமது கதாநாயகன் என்று வந்து நமது தர்ம பூமியை சுற்றம் செய்வார் என்று எவராவது கூற முடியுமா ?

நெஞ்சு பொறுக்குதில்லையே " எமது நிலைமையையும் " மற்றும்
" எனது தாய் நாட்டின் நிலைமையையும் ", காணும் பொழுது வாத்தியார் ஐயா களே

Alasiam G said...

////பகுத்தறிவு வாதிகள் கவனிக்கட்டும். இனியாவது அறிவியல் பூர்வமான பஞ்சாங்கப் பலன்களை அவர்கள் இழிவு செய்யாமல் இருக்கட்டும்////
இல்லை சார்... அப்படி யாரும் உண்மையாக மறுப்பதாக தெரியவில்லை... இப்போதெல்லாம் தனக்குத் தகுந்த மாதிரி உச்ச கிரகத்தை அனுசரித்து தனது உடலிலே ஆடையை அணிந்து கொண்டு தான் உலா வருகிறார்கள்... எல்லாவற்றிற்கும் எண்ணிகையும் நாளும் நட்சத்திரமும் பார்த்து தான் செய்கிறார்கள் என்றால் அது மிகையாகாது...

சரி, அவர்கள் பயப்படுவது போல் நாமும் அவர்களை ஏளனம் செய்யாமல் அவர்கள் அதை நம்புவதை அமைதியாக அமோதிப்போம்...
இன்றைய பெளர்ணமியன்று வேட்பு மனுவும் துவங்கியாச்சு....

நாத்திகம் எல்லாம் வெளி வேஷம் நாத்திகர் ஒவ்வொருவரினுள்ளும் ஆத்திகம் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறது... அந்த ஆத்மாக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருக்கிறது.... அதே நேரம் ஆத்திகர் என்று சொல்லிக்கொள்ளும் நம்மில் பலரிலும் நாத்திகமும் அப்பபோது வந்து ஒரு பனி மூட்டத்தை உண்டுபண்ணி மறைகிறது என்பதும் உண்மையே மறுப்பதிற்கில்லை... அது துன்பத்தின் எல்லையைத் தாங்காது வெளிப்படுவதாக கூட இருக்கலாம்...

பாரதிகூட அப்படிப் பூச்சாண்டிக் காண்பித்து அன்னை பராசக்தியைப் பாடியுள்ளான் என்பதையும் காண்கிறோம்....
".... பணத்திற்கு எத்தனை நாள் பொய் சொல்கிறது?
பொய் வாய்தா, பொய் வாய்தா, பொய் வாய்தா? தினம் இந்தக் கொடுமை தானா? சீச்சீ!
"பராசக்தி, உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு, நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன், நீ அற்பத்தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டே இருந்தால்!....
"மகாசக்தி, நீ இருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டு என்பதை எவன் கண்டான்? இந்த உலகில்-சரி! சரி சரி!!
இப்போது உன்னை வையமாட்டேன். என்னைக் காப்பாற்று உன்னைப் போற்றுகின்றேன் என்கிறான்.... வறுமையின் கொடுமையால் பாரதி பராசக்தியிடம் நாத்திகனாகிவிடுவேன் என்று பூச்சாண்டிக் காண்பிக்கிறான்.....
நன்றி......

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம்.
அய்யா,
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற்படுத்திய சுனாமியின்
போதும் இதே பஞ்சாங்கத்தில் சுனாமி நிகழ்ந்த அதே மாதத்தில் அதே தேதியிலேயே இந்தோனேஷிய தீவுகளில் ஆழிப்பேரலைகள் உண்டாகும்
பேரழிவுகள் ஏற்படும் என்றும் முன்னதாகவே குறிப்புகள் இருந்ததை நானும்
படித்து ஆச்சரியப்பட்டு இருக்கிறேன், பலரும் படித்து இருப்பார்கள் என்றும்
நம்புகிறேன்.
அன்புடன், அரசு.

Anonymous said...

//இந்த புண்ணிய பூமியில் அத்தகைய சான்றோர்களின் வாரிசாகப் பிறந்தமைக்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோமாக. ? Super Appu. :)))
Appuram neenga enna Pattu Kottai pakkamgala?

//தஞ்சாவூரரும் - கோபலான் ஐயாவும் ஒருவரே என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன்// sameeba kalamaaga thangalai Vagupparayil athigamaaga paarkindren sir. palaya pathivugalai(Pinnotthodu) padithaal idhu munbe therinthirukka koodum. Gajendiran sir sarithaane.

Ayya thavarangalukku uiar undu endru sonna Sir Jagadeesha chandra bosh, Robert bosh, Subachandra bosh pondrorin valivagaiya?

Kannan Sir: Nallatchi endurm alinthuvidum, varalaaru mattume minjum.

Hey Eluthiyachi Santhoosam.. :)))))))

Thanjavooraan said...

'கடைக்குட்டி' நன்றாக இருக்கிறது பெயர். அது சரி! பட்டுக்கோட்டை பக்கமா என்று எதை வைத்துக் கேட்டீர்கள்? நான் பல ஆண்டுகள் பட்டுக்கோட்டையில் இருந்திருக்கிறேன். என் மூத்த சகோதரி வீடு அங்குதான் பெரிய தெருவில் (இப்போது அது கடைத்தெரு). மாநில என்.ஜி.ஓ.சங்கத் தலைவராக இருந்த சிவ.இளங்கோ என்னுடைய அருமை நண்பர். என்னை பட்டுக்கோட்டை பக்கமா என்று கேட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா அன்பு கடைக்குட்டி.