மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

22.3.11

அதிகமான போதை எதில் உள்ளது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிகமான போதை எதில் உள்ளது?

முதலில் போதை என்னும் சொல்லிற்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.

மது, கஞ்சா முதலியவற்றை அதிகமாக உட்கொண்டதும் ஏற்படும் நிலை. புலன் செயல்படுவதில் தெளிவற்ற நிலை. சுயக்கட்டுபாடு குறைந்த நிலை. அதுதான் போதை.

எவை எவை போதையைத் தரும்?

அன்னபூர்னா காப்பி - ஒரு கோப்பை பதினெட்டு ரூபாய் என்றாலும், இரண்டு மடக்குக் குடித்துவிட்டு வந்து,  வாசலில் உள்ள பெட்டிக்கடையில் ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை வாங்கி இழுப்பவனிடம் சென்று கேளுங்கள்.  அந்த ஷணத்தில் கோவைக்கே நான்தான் ராஜா என்பான். அந்த போதை ஒரு அரை மணி நேரம் நீடிக்கும்.

ஹேவர்ட்ஸ் 5000 ஸ்ட்ராங் பியர் - ஜில்லென்ற பியர் 2 பாட்டில்
அல்லது சீவாஸ் ரீகல் விஸ்கி 4 லார்ஜ்  குடித்துவிட்டு
அமர்ந்திருப்பவன், அந்த நிலைதான் சொர்க்கம் என்பான். அது
ஒரு நான்கு மணி நேரம் நீடிக்கும். அதையே ஒரு அளவின்றி
குடித்தவன், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற
நிலையில் துவண்டு  கிடப்பான்.

கஞ்சா, அபின், ப்ரவுன் சுகர் என்று தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களைத் தேடி அலையும் ஆசாமிகள்  உண்டு. அவை எல்லாமே நிரந்தமற்றவை. வந்த போதை சிலமணி நேரத்தில் நீங்கி விடும்.

சில பெண் போதை ஆசாமிகள் இருக்கிறார்கள். எந்த பெண்ணைப் பார்த்தாலும் தேவதைபோல இருக்கிறாள்  என்பான். தூணுக்கு சேலை கட்டி விட்டால் கூட, எதிரில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பான்.

பதவி போதை, புகழ் போதை, செல்வாக்கு போதை என்று போதையில் பல உட்பிரிவுகளும் உள்ளன!

இப்படிப் போதை பலவகைப்படும்.

உண்மையான போதை எதில் உள்ளது?

உண்மையான போதை உங்கள் வங்கி இருப்பில் உள்ளது. உங்கள் வங்கி இருப்பில் ஒரு பத்து லட்ச ரூபாய்  இருக்கிறது. அது என்றும் குறையாத அளவிற்கு உங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்று
வைத்துக்கொள்ளுங்கள். அது தரும் போதைக்கு நிகரானது எதுவுமே இல்லை. முயன்று பாருங்கள். முயன்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்

மேலே குறிப்பிட்டுள்ள போதைகள் எல்லாம் ஒரு காலகட்டம் வரைதான். அதாவது 50 வயதுவரை அல்லது 60  வயதுவரைதான். அதற்குப் பிறகு?

போதையற்ற நிலைதான் போதையானது. போதையை ஒதுக்கும் நிலைதான் போதையானது. நிலையாமைதான்  நிலையானது என்பதை உணரும் நிலை. அல்லது உணர்ந்த நிலை.

பொருள் தேடுவதற்காக நாம் செய்த முயற்சிகள், செய்த வேலைகள்
எல்லாம் வீண் என்று உணரும் நிலை.சேர்த்த  பொருட்கள், குவித்த செல்வங்கள், வாங்கிபோட்ட இடங்கள் எல்லாம் நமக்குப் பயன்
படாமற் போகும் அல்லதுபோகப் போகிறது என்பதை உணரும்
அல்லது உணர்ந்த நிலை.

அது எப்போது ஏற்படும்?

நமக்கு ஞானம் வரும்போது ஏற்படும்.

“நன்றிகெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லையொரு தொல்லையடா”


என்று கவியரசர் சொன்ன வரிகளின் அர்த்தத்தை உணரும்போது, ஒவ்வொரு மனிதனுக்கும், அது ஏற்படும். ஏற்படாவிட்டால், அதை, கேது ஏற்படுத்திக் கொடுப்பான். அவன் ஞானகாரகன் அல்லவா? அதை  ஏற்படுத்துவதுதான் அவனுடைய முக்கியமான வேலை. கேது மகா திசையின் முடிவில் அனைவருக்கும் அது  ஏற்பட்டிருக்கும். அல்லது கிடைத்திருக்கும்.

கிடைக்காவிட்டால்? ஜாதகன் இன்னும் கஷ்டப்பட வேண்டியது பாக்கி உள்ளது என்று பொருள்:-))))
+++++++++++++++++++++++++++++++++++++

கேது மகாதிசையில் கேதுவின் சுய புத்திக்குப் பிறகு வருவது கேதுவில் சுக்கிரபுத்தி, சுக்கிரனால் ஒரு சில  சந்தோஷங்கள் இருந்தாலும், புத்திக்காலம் பாங்கில்லாமல் இருக்கும். பாங்கில்லாமல் என்பதற்கு முறையில்லாமல்  என்று பொருள். பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்

2
பகையான கேதுதிசை சுக்கிர புத்தி
   பாங்கில்லா மாதமது பதினாலாகும்
தகையான அதன் பலனை சாற்றக்கேளு
   தாழ்வில்லா சத்துருவால் விலங்குண்டாகும்
நகையான பூஷணங்கள் சிலவதாகும்
   நாரிழையாள் தன்னுடனே அபமிருந்துகாணும்
வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி
   மனைவி மக்கள் தன்னுடனே வாழ்வான் காணே!


சரி, சுக்கிர திசையில் கேதுவின் புத்தி எப்படி இருக்கும்? கேதுவின் கை ஓங்கி இருக்கும். எல்லாம் கேடான  பலன்களாக இருக்கும். பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

ஆளலாம் சுக்கிரனில் கேது புத்தி
   ஆகாத மாதமது யீரேழாகும்
வாழலாம் அதன்பலனை வகுத்துச் சொல்வேன்
   வளர்கொடியாள் தான்சாவாள் வான்பொருளும் போகும்
தாழ்வான தன்னரசு ராச்சியங்கள் போகும்
   சம்பத்துதான் போகும் தாய்தந்தை மரணம்
கோளலாம் சத்துருவால் குடிகேடாகும்
   கோதையரும்தான் போவாள் குடிகேடாமே!


(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++வாழ்க வளமுடன்!

27 comments:

vprasanakumar said...

மிகவும் அருமையான விளக்கம்.

நன்றி ஐயா.

ananth said...

அதிகமான போதை எதில் உள்ளது? யாராவது முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

கேது ஒருவருக்கு எந்த வகையில் ஞானத்தை ஏற்படுத்துகிறார் என்பது அவருடைய கர்ம வினைகளைப் பொருத்தது.

Thanjavooraan said...

"எதில் போதை" என்பதற்கு அரியதொரு விளக்கம் அளித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வயதிலும் போதை மாறுபடுகிறது. சில பிறவிகள் பிறந்ததிலிருந்து ஒரே போதைதான். அது எதுவானாலும் சரி, மாற்றமே இருக்காது. எனக்குத் தெரிந்து ஒருவர் முப்பது வயதில் எப்படி இருந்தாரோ, அதே போலத்தான் 80+ வயதிலும் இருக்கிறார். அவருக்கு வாழ்க்கையில் தேவை இரண்டு, ஒன்று பணம், மற்றொன்று பெண். வெண்பஞ்சு போன்ற தலையில் எப்போதும் கருப்புச் சாயம், சுருக்கம் விழுந்த தோலுக்கு விதவிதமான பூச்சுக்கள். அருகில் வந்தாலே குமட்டலெடுக்கும் செண்ட். இந்தப் பிறவிகள் மாறவே மாறாது. சிலருக்கு பதவி சுகம் இருந்தாலே போதும் நூறு வயதானாலும் மாறாது. ஆனால் இவை போய்விட்டால், தாங்கிக்கொள்ளும் மனம் மட்டும் கிடையாது. நான் சொன்ன ஒருவருடைய மனைவி, மகன் இருவரும் இவருடன் கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்கள். இவருக்கு வெளி தொடர்பு விடவே இல்லை. காலையில் நடைப் பயிற்சி போன இடத்தில் சிறு பெண்ணிடம் வம்பு பண்ணி தர்ம அடி வாங்கி போலீசுக்குப் போய் இப்போது வீட்டோடு பூட்டப்பட்டுக் கிடக்கிறார். பிறருக்காக வாழ்ந்து, எதிலும் பற்றில்லாமல் இருப்பதில்தான் இன்பம். அதனை போதை என்றாலும் சரி, வேறு எப்படி அழைத்தாலும் சரி. தாயுமானவர் சொல்கிறார் இந்த பூமி முழுவதையும் ஆண்டாலும், அந்தக் கடலும் கிடைத்தால் நலமாக இருக்குமே என் நினைப்பராம், எல்லா செல்வங்களும் இருந்தாலும் தாமிரத்தைப் பொன்னாக மாற்றும் பச்சிலை கிடைக்காதா என நினைப்பராம். மனதைக் கட்டுப் படுத்தி, தன்னலமின்றி, பிறர் நலனுக்காக வாழ்வோர் நூறு என்ன அதற்கு மேலும் வாழ்ந்தாலும் பாராட்டலாம். அந்த போதை எல்லோருக்கும் வரவேண்டும். நீங்கள் ராசி குறித்து எழுதியிருக்கிறீர்கள். எனக்கு அது குறித்துத் தெரியாது அல்லவா அதனால் மனிதனின் மன ராசி குறித்து எழுதினேன். நன்றி ஆசிரியர் ஐயா! நீவிர் வாழ்க! தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.

iyer said...

போதை எதுவென சரியான
பாதை காட்டிய புதுமைக்கு நன்றிகள்


இலட்சங்களை இழந்தாலும்
இலட்சியங்களை இழக்காமல் என


கோடியில் இருப்பர் சிலர்;ஆயினுமிங்கு
கோடிகள் அல்லவா புரளுகிறது


எதிரெதிர் திசை புத்திகளை பாடலுடன்
எளிமையாக தந்திட்டமைக்கு நன்றிகள்

Govindasamy said...

அருமை அய்யா..

Arul said...

எளிமையான பாடம் ஐயா...போதை பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது.

kmr.krishnan said...

கேதுவில் சுக்ரன், சுக்ரனில் கேதுவும் தசா புக்திகளாக வந்து வேண்டிய செய்து விலகிட்ட்ர்கள் ஐயா!

kannan said...

ஜோதிட ஆசானே!

ஒரு சந்தேகம் கழிந்த நாட்களில் நடந்த வகுப்பில் நடைபெற்ற பாடம்களான
" புதன் திசையிலையும் சரி ", தற்பொழுது நடக்கும்
" கேது திசை ",
பாடதினையும் சரி ஒப்பிட்டு பார்க்கும் போது தாங்கள் வகுப்பில் கூறி உள்ளது போல எந்த விதமான கஷ்ட நஷ்டமும் வர வில்லை ஜாதகனுக்கு.

இனி ஒரு ஜென்மம் எடுத்தாலும் முதல் 12 ( ௪ வருடம் , ௧௧ மாதம், ௨௭ நாட்கள் புதன் திசை + ௭ வருடம் கேது திசை ) வயது வரை கிடைக்க பெற்ற சகல சௌகரிகமும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

முன்னர் தாங்கள் கூறி உள்ளது போல அதாவது ஒரு குழந்தைக்கு
12 வயது வரை சொந்த ஜாதகம் பலிக்காது தாய் தந்தையாரின் ஜாதக படிதான் எல்லாமே நடக்கும் என்றீர்களே அதன் படிதான் கேதுவால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்ததோ ஐயா

மேலும் 12 வயது வரை தாய் தந்தையாரின் என்ற கூற்று தான் மெய்யாக இருக்கும் இல்லையா ஐயா ?

kmr.krishnan said...

தஞ்சைப் பெரியவர் ஒரு கதையையே சொல்லிவிட்டார்,பாருங்கள்.அவர் ஒரு கதாசிரியர்;நாடக ஆசிரியர். ஆம்! அவருடைய நாடகங்களை வானொலியில் ஒலி பரப்பியுள்ளார்கள்.கதாசிரியர்களுக்கே கூர் நோக்கு அதிகம்.நம் வாத்தியாருக்கும் மனிதர்களைப் படிக்கும் மனோ நிலை இருப்பதால் தான் கதை எழுதுகிறார். அல்லது கதை போன்ற உண்மைச் சம்பவங்களை கற்பனை கலந்து நல்ல முடிவாக மாற்றி எழுதுகிறார்.

பெரியவர் எழுதியுள்ளதில் ஒரு செய்தி சொல்கிறேன்.ஓர் ஆணுக்கு ஒரு கவளம் சோறு தொண்டைக் குழியைத் தாண்டும் வண்ணம் உடல் நிலை இருக்கும் வரை பால் உணர்வு போவதில்லை.பல முதியவர்களும் சமுதாயத்திற்குப் பயந்து கட்டுப்பாடு காண்பித்தாலும், உள் மனதில் சபலம் உள்ளவர்களே.பெண் குழந்தைகளை பக்கத்துவீட்டு தாத்தாவின் பாதுகாப்பில் வைத்துவிட்டு வெளியூரோ,வேலைக்கோ போகவே கூடாது. Peodophilia என்பது
வயது முதிர்ந்த‌ ஆண் சிறுமிகளிடம் காட்டும் பாலியல் ஆசை.இது ஒரு மன நோய். பலருக்கும் இருக்கிறது.மாட்டிக் கொண்டவர்களை இழிவு செய்தால் அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ய‌க்கூடும்.இதை மன நோய் என்று அறிந்து கவனத்துடன் கையாள வேண்டும்.

ஒருமுறை திருமண விளம்பரத்தில் தங்க‌ளது 80 வயது தந்தைக்குத் திருமணம் செய்ய விரும்புவதாக அவருடைய 3 பெண்கள் இணைந்து கேட்டிருந்தார்கள்.
அவர்கள் சொல்லும் காரணம் அவர்கள் அனைவரும் வெளி நாட்டில் இருப்பதால், தாரத்தை இழந்த தந்தையை பராமரிக்கப் பொறுப்பானவர் தேவை என்று நினைத்து அவ்வாறு விளம்பரம் தந்தனர்.சொத்தில் சம பங்கு தருவதாகவும் கூறினர்.

ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர், வாழ் நாள் முழுவதும் கட்டை பிரம‌ச்சாரியாக இருந்தவர் 75 வயதில் திருமணம் முதல் முறையாகச் செய்தார்.எல்லோரும் வெளியில் தெரியாமல் சிரித்தனர். நான் மட்டும் அவரைப் பரிவுடன் அணுகி மெதுவாக விசாரித்தேன்.'ஏழையான‌ இந்தப் பெண்ணுக்கு என் ஆயுளுக்குப்பின்
குடும்ப ஓய்வூதியம் வர வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்தேன்' என்று ரகசியமாகக் கூறினார்.

Alasiam G said...

பட்ட பின்பு ஞானி என்றார் கண்ணதாசனார்,
கேது படுத்திக் கொடுப்பார் ஞானம்...என்கிறீர்,
எப்படியோ! பட்டுப் போகாமல் ஞானம் பெற
ஆண்டவன் அருள வேண்டுகிறேன்...

ரம்மி said...

வாத்தியார் அய்யா! வணக்கம்!

சிறு சந்தேகம்! சுக்கிர தசை/கேது புத்தி வரும்போது, ஜாதகருக்கு, கேது உச்சம் பெற்றிடின், பலன் மாற்றம் ஏற்படுமா?

SP.VR. SUBBAIYA said...

/////vprasanakumar said...
மிகவும் அருமையான விளக்கம்.
நன்றி ஐயா./////

நல்லது. நன்றி பிரசன்னகுமார்!

SP.VR. SUBBAIYA said...

//////ananth said...
அதிகமான போதை எதில் உள்ளது? யாராவது முயற்சி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
கேது ஒருவருக்கு எந்த வகையில் ஞானத்தை ஏற்படுத்துகிறார் என்பது அவருடைய கர்ம வினைகளைப் பொருத்தது./////

ஆமாம். அதைத்தான் நாம் பூர்வஜென்மப்பலன் என்கிறோம்!

SP.VR. SUBBAIYA said...

//////Thanjavooraan said...
"எதில் போதை" என்பதற்கு அரியதொரு விளக்கம் அளித்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வயதிலும் போதை மாறுபடுகிறது. சில பிறவிகள் பிறந்ததிலிருந்து ஒரே போதைதான். அது எதுவானாலும் சரி, மாற்றமே இருக்காது. எனக்குத் தெரிந்து ஒருவர் முப்பது வயதில் எப்படி இருந்தாரோ, அதே போலத்தான் 80+ வயதிலும் இருக்கிறார். அவருக்கு வாழ்க்கையில் தேவை இரண்டு, ஒன்று பணம், மற்றொன்று பெண். வெண்பஞ்சு போன்ற தலையில் எப்போதும் கருப்புச் சாயம், சுருக்கம் விழுந்த தோலுக்கு விதவிதமான பூச்சுக்கள். அருகில் வந்தாலே குமட்டலெடுக்கும் செண்ட். இந்தப் பிறவிகள் மாறவே மாறாது. சிலருக்கு பதவி சுகம் இருந்தாலே போதும் நூறு வயதானாலும் மாறாது. ஆனால் இவை போய்விட்டால், தாங்கிக்கொள்ளும் மனம் மட்டும் கிடையாது. நான் சொன்ன ஒருவருடைய மனைவி, மகன் இருவரும் இவருடன் கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார்கள். இவருக்கு வெளி தொடர்பு விடவே இல்லை. காலையில் நடைப் பயிற்சி போன இடத்தில் சிறு பெண்ணிடம் வம்பு பண்ணி தர்ம அடி வாங்கி போலீசுக்குப் போய் இப்போது வீட்டோடு பூட்டப்பட்டுக் கிடக்கிறார். பிறருக்காக வாழ்ந்து, எதிலும் பற்றில்லாமல் இருப்பதில்தான் இன்பம். அதனை போதை என்றாலும் சரி, வேறு எப்படி அழைத்தாலும் சரி. தாயுமானவர் சொல்கிறார் இந்த பூமி முழுவதையும் ஆண்டாலும், அந்தக் கடலும் கிடைத்தால் நலமாக இருக்குமே என் நினைப்பராம், எல்லா செல்வங்களும் இருந்தாலும் தாமிரத்தைப் பொன்னாக மாற்றும் பச்சிலை கிடைக்காதா என நினைப்பராம். மனதைக் கட்டுப் படுத்தி, தன்னலமின்றி, பிறர் நலனுக்காக வாழ்வோர் நூறு என்ன அதற்கு மேலும் வாழ்ந்தாலும் பாராட்டலாம். அந்த போதை எல்லோருக்கும் வரவேண்டும். நீங்கள் ராசி குறித்து எழுதியிருக்கிறீர்கள். எனக்கு அது குறித்துத் தெரியாது அல்லவா அதனால் மனிதனின் மன ராசி குறித்து எழுதினேன். நன்றி ஆசிரியர் ஐயா! நீவிர் வாழ்க! தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.///////

உங்களின் அன்பிற்கும், வாழ்த்திற்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
போதை எதுவென சரியான பாதை காட்டிய புதுமைக்கு நன்றிகள்
இலட்சங்களை இழந்தாலும் இலட்சியங்களை இழக்காமல் என
கோடியில் இருப்பர் சிலர்;ஆயினுமிங்கு கோடிகள் அல்லவா புரளுகிறது
எதிரெதிர் திசை புத்திகளை பாடலுடன் எளிமையாக தந்திட்டமைக்கு நன்றிகள்////

நல்லது நன்றி விஸ்வநாதன்!

SP.VR. SUBBAIYA said...

/////Govindasamy said...
அருமை அய்யா../////

நல்லது.உங்களின் பாராட்டிற்கு நன்றி கோவிந்தசாமி!

SP.VR. SUBBAIYA said...

////Arul said...
எளிமையான பாடம் ஐயா...போதை பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
கேதுவில் சுக்ரன், சுக்ரனில் கேதுவும் தசா புக்திகளாக வந்து வேண்டிய செய்து விலகிட்டார்கள் ஐயா!/////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
ஜோதிட ஆசானே!
ஒரு சந்தேகம் கழிந்த நாட்களில் நடந்த வகுப்பில் நடைபெற்ற பாடம்களான
" புதன் திசையிலையும் சரி ", தற்பொழுது நடக்கும்
" கேது திசை ",
பாடதினையும் சரி ஒப்பிட்டு பார்க்கும் போது தாங்கள் வகுப்பில் கூறி உள்ளது போல எந்த விதமான கஷ்ட நஷ்டமும் வர வில்லை ஜாதகனுக்கு.
இனி ஒரு ஜென்மம் எடுத்தாலும் முதல் 12 ( ௪ வருடம் , ௧௧ மாதம், ௨௭ நாட்கள் புதன் திசை + ௭ வருடம் கேது திசை ) வயது வரை கிடைக்க பெற்ற சகல சௌகரிகமும் கிடைக்குமா என்பது சந்தேகமே.
முன்னர் தாங்கள் கூறி உள்ளது போல அதாவது ஒரு குழந்தைக்கு
12 வயது வரை சொந்த ஜாதகம் பலிக்காது தாய் தந்தையாரின் ஜாதக படிதான் எல்லாமே நடக்கும் என்றீர்களே அதன் படிதான் கேதுவால் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்ததோ ஐயா
மேலும் 12 வயது வரை தாய் தந்தையாரின் என்ற கூற்று தான் மெய்யாக இருக்கும் இல்லையா ஐயா ?/////

உண்மைதான்!

SP.VR. SUBBAIYA said...

//////kmr.krishnan said...
தஞ்சைப் பெரியவர் ஒரு கதையையே சொல்லிவிட்டார்,பாருங்கள்.அவர் ஒரு கதாசிரியர்;நாடக ஆசிரியர். ஆம்! அவருடைய நாடகங்களை வானொலியில் ஒலி பரப்பியுள்ளார்கள்.கதாசிரியர்களுக்கே கூர் நோக்கு அதிகம்.நம் வாத்தியாருக்கும் மனிதர்களைப் படிக்கும் மனோ நிலை இருப்பதால் தான் கதை எழுதுகிறார். அல்லது கதை போன்ற உண்மைச் சம்பவங்களை கற்பனை கலந்து நல்ல முடிவாக மாற்றி எழுதுகிறார்.
பெரியவர் எழுதியுள்ளதில் ஒரு செய்தி சொல்கிறேன்.ஓர் ஆணுக்கு ஒரு கவளம் சோறு தொண்டைக் குழியைத் தாண்டும் வண்ணம் உடல் நிலை இருக்கும் வரை பால் உணர்வு போவதில்லை.பல முதியவர்களும் சமுதாயத்திற்குப் பயந்து கட்டுப்பாடு காண்பித்தாலும், உள் மனதில் சபலம் உள்ளவர்களே.பெண் குழந்தைகளை பக்கத்துவீட்டு தாத்தாவின் பாதுகாப்பில் வைத்துவிட்டு வெளியூரோ,வேலைக்கோ போகவே கூடாது. Peodophilia என்பது
வயது முதிர்ந்த‌ ஆண் சிறுமிகளிடம் காட்டும் பாலியல் ஆசை.இது ஒரு மன நோய். பலருக்கும் இருக்கிறது.மாட்டிக் கொண்டவர்களை இழிவு செய்தால் அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்ய‌க்கூடும்.இதை மன நோய் என்று அறிந்து கவனத்துடன் கையாள வேண்டும்.
ஒருமுறை திருமண விளம்பரத்தில் தங்க‌ளது 80 வயது தந்தைக்குத் திருமணம் செய்ய விரும்புவதாக அவருடைய 3 பெண்கள் இணைந்து கேட்டிருந்தார்கள்.
அவர்கள் சொல்லும் காரணம் அவர்கள் அனைவரும் வெளி நாட்டில் இருப்பதால், தாரத்தை இழந்த தந்தையை பராமரிக்கப் பொறுப்பானவர் தேவை என்று நினைத்து அவ்வாறு விளம்பரம் தந்தனர்.சொத்தில் சம பங்கு தருவதாகவும் கூறினர்.
ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர், வாழ் நாள் முழுவதும் கட்டை பிரம‌ச்சாரியாக இருந்தவர் 75 வயதில் திருமணம் முதல் முறையாகச் செய்தார்.எல்லோரும் வெளியில் தெரியாமல் சிரித்தனர். நான் மட்டும் அவரைப் பரிவுடன் அணுகி மெதுவாக விசாரித்தேன்.'ஏழையான‌ இந்தப் பெண்ணுக்கு என் ஆயுளுக்குப்பின்
குடும்ப ஓய்வூதியம் வர வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்தேன்' என்று ரகசியமாகக் கூறினார்.///////

குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி செய்தவரின் திருமணம் ஒரு நல்ல கதைக்கான கரு. நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

//////Alasiam G said...
பட்ட பின்பு ஞானி என்றார் கண்ணதாசனார், கேது படுத்திக் கொடுப்பார் ஞானம்...என்கிறீர்,
எப்படியோ! பட்டுப் போகாமல் ஞானம் பெற ஆண்டவன் அருள வேண்டுகிறேன்...//////

நல்லது. நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////ரம்மி said...
வாத்தியார் அய்யா! வணக்கம்!
சிறு சந்தேகம்! சுக்கிர தசை/கேது புத்தி வரும்போது, ஜாதகருக்கு, கேது உச்சம் பெற்றிடின், பலன் மாற்றம் ஏற்படுமா?/////

ஏற்படும். ஏற்படும். ஏற்படும்!

kmr.krishnan said...

குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி செய்தவரின் திருமணம் ஒரு நல்ல கதைக்கான கரு. நன்றி கிருஷ்ணன் சார்!///

நன்றி அய்யா! இதை வைத்து ஒரு கதை எழுதுங்கள்.இது தஞ்சை
மகர்நோம்புச்சாவடியில் நடந்த உண்மைக்கதை.

தமிழ்நாட்டின் புகழ் வாய்ந்த ஒரு முது பெரும் தலைவர் தன் வயதுக்கு மிகவும் குறைந்த பெண்ணை சீர்திருத்தத் திருமணம்,பதிவுத்திருமணம் செய்து கொண்டார்.அதனால் அரசியலில் ஒரு புதிய மாற்றம் வந்தது. அந்தத் தலைவர் கூறிய காரணமும்,அவர் சேர்த்த சொத்தினை பலரும் வீணடித்து விடாமல் அவர் சார்ந்த இயக்கத்திற்குப் பயன் பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே திருமணம் செய்வதாகக் கூறினார்.

Anonymous said...

வாத்தியாருக்கு வணக்கம்,
வகுப்பறை வழியாக ஒரு வேண்டுகோள்

வகுப்பறை தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் ,,,

இண்டர்நெட்டில் அதிக தொடர்புள்ள அன்பர்கள் எனது GMAIL ல் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு வழி சொல்லுங்கள் ,,,

எனது GMAIL account open ஆகிறது ஆனால் வந்துள்ள மெயில்களை படிக்க முடியவில்லை மேலும் சாட் ஓபன் ஆகமாட்டேன் என்கிறது ,,,

basic html ல் ஓபன் ஆகிறது
ஆனால் அதில் சாட் வேலை
செய்வதில்லை,

மற்ற வெப்சைட்டுகளை பார்வையிடுவதில் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை,

ஏர்டெல் நெட்வொர்க் - முழுமையாக இருக்கிறது

GMAIL Help Option ல் போய் என்னென்னமோ செய்தும் தீர்வில்லை

நானும் ஒருவாரமாக மண்டையை உடைதது குழம்பிப் போயும் சரியாகவில்லை ,,,

தயவு செய்து இத்தொழில் நுட்பம் அறிந்த அன்பர்கள் அடியவனுக்கு
உதவி செய்யவும்,

நன்றி ,,,

email : edappadisivam@gmail.com
mobile : 98425 - 10562

Anonymous said...

இன்றைய பாடல் : போதை ஏரி போச்சு, புத்திமாறி போச்சு

// நன்றி ஆசிரியர் ஐயா! நீவிர் வாழ்க! தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.
//I do accept sir.


இதே போன்றொரு நிகழ்வு, எங்கள் Appartmentil வசித்து வந்தவன், சற்று விபரம் அறியாத சிறுவன். எல்லோர் வீட்டிர்க்கும் சகஜமாக பேசும், போகும் குணம். எதேசியாக எங்கள் ப்லாக் எதிரில் உள்ள ஒரு விட்டீர்க்கு நன்கு பழகியவர் என்று எண்ணி உள்ளே செல்லும் நேரம், அந்த வீட்டின் சுமார் 75 வயது பெண்மணி அடை மாத்திக்கொள்ள முயற்சி செய்து கொண்டுடிறுந்தால், சூழல் புரிந்த கணம் உடனே வெளியேறாமல், சற்று திரும்பி அங்கேயே நின்று விட்டான். அவ்வளவுதான் அந்த பெண்மணி அதே நிளயில் வெளியில் வந்து ஊரயே கூட்டிவிட்டால். ஊர் ஞாயம் என்றாள் எல்லாத்தயும் தூக்கினு நம்ம மக்கள் வந்துடுவன்களே. அதிர்ச்சியில் அங்கேயே நின்றவன் பற்றி இல்லாததும் பொல்லாததும் கட்டிவிட்டால். பயன் மனமுடைந்து விட்டான், அவமானத்தில் தற்கொலைக்கு வேறு முயன்று விட்டான். நல்ல வேலை அவனது குடும்பம் படாது பாடுபட்டு காப்பாற்றி விட்டது. Enga Appartmentil உள்ள எல்லா Blocklayum இது தான் சூடான சமாசாரம். அம்மா அல்லது பாட்டி வயது இருக்கும் அவளுக்கு.
எல்லாம் மறந்து வந்தவனிடம், தனது மகள்களை காட்டி அவர்களை மணக்க வேண்டும் இண்ரேல் அவளையே மணக்க வேண்டும் என்கின்றாள். என்ன கொடுமை. ஆசனே இதுவும் கெதுவின் வேலாயா :))))

Anonymous said...

//அவர் ஒரு கதாசிரியர்;நாடக ஆசிரியர்.// ஆம்! தெரிஞ்ச தமிழில் வழிமொழிகின்றேன்

//ஒரு கவளம் சோறு தொண்டைக் குழியைத் தாண்டும் வண்ணம் உடல் நிலை இருக்கும் வரை பால் உணர்வு போவதில்லை//

It isn't like that sir. wht ever we are constructing are satrts from the top of the throat.

But we are blaming the heart.
கண் காது, மூக்கு, வாய், மூளை endru எல்லாம் ரகு / கேது வேலை. எல்லாம் நாள் பட (காலம் கழிய/ திசை முடிய) எல்லாம் மாறி இது தொண்டை வரை தான் மனக்கண் திறந்து பட்தற்ற கடவுளை பற்றுவார் என்பதாகும்.
அய்யா நாம் வகுப்பறயில் உடல் முழுக்க கண்கள் உள்ள தேவ கூட்ட தலைவர் பெயரிலும் மாணவர்கள் இருக்காங்கள் போல. அதான் நாடா அவுத் கதை எல்லாம் வறுது .

//குடும்ப ஓய்வூதியம் வர வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்தேன்' என்று ரகசியமாகக் கூறினார்// what a great soul. Admired

நாம் நாட்டில் செயும் வேலைக்கு தான் கையூட்‌டு பெரும் ஆட்கள் உள்ளனர். அவர்கள் பெரும் போது இருக்கும் தைரியமும், மகிழ்ச்சியும் அதர்க்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளும் போது மட்டும் பார்க்க வேண்டுமே.

Anonymous said...

//Thanjavooraan said...
....
பச்சிலை கிடைக்காதா என நினைப்பராம். :)))
//kmr.krishnan said...

உங்க கதை நம்பர் 1 சார். அருமை :))))
// ரகசியமாகக் கூறினார்//அம்பலமேரி அம்பலப்டுத்திவிட்டீர்கள் சார் :))))

நீங்களும் ரொம்ப Open type.(enn கத்யில் வந்த பெண்மணியை போல)

//வெளியில் தெரியாமல் சிரித்தனர்// பாவம் அந்த பெண் எந்த மனோ நிலை எப்படி அதர்க்கு ஒப்புக்கொண்டதோ!!!

//பட்டுப் போகாமல் ஞானம் பெற// ஞானம் கிடைக்கின்றதோ இல்லாயோ இங்கே வந்தால் நிச்சயம் கொஞ்சம் அறிவு கிடைக்கும் sir. :))
வாய்ச்சொல்லில் வல்லவர்கள் பலர் நமது வகுப்பறயின் கண்மனிகழன்றோ!!

//மகர்நோம்புச்சாவடியில் // அடுத்த புது ஊர் பெயர், இங்கே நிறய கற்று கொள்ள முடிகின்றது அய்யா.

//விஸ்வநாதன் sir. தெருக்கோடியோ ஒரு கோடியோ. கோடித் துணி போடாமலிருந்தா போதுமே.

//அவர் சார்ந்த இயக்கத்திற்குப் பயன் பட வேண்டும் // :)))) Nalla Publicity sir.

பாருங்கள் பணம் படைத்தவர் செய்தாள் எப்படிஉம் பேசுவார்கள். தஞ்சாவூர் அய்யா சொன்னது போல எடது கை, வலது கை தெரியாம செய்பவர் கூட உண்டா என்ன?!! நமகெதுக்கு ஊர் வம்பு. நான் ப்ரெஸெஂட் ஸார்.

//பூர்வஜென்மப்பலன் என்கிறோம்!// sir எனக்கு 5 இல் 18, 12 இல் 21. பத்து லட்சணம் எதற்கு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 18, 21என பார்க்கும் பொழுது பூர்வஜென்மப்பலன் எனக்கு நிறய சேர்த்து வைத்திருப்பேன் போல தோன்றுகின்றது :)))))
வயகட்டி, வயுத்தகட்டி பழகிட்ன சரிதான். காப்பாத்து கடவுளே!!!