மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Alasal Lesson. Show all posts
Showing posts with label Alasal Lesson. Show all posts

27.12.21

Astrology: ஜோதிடம்: புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 14




Astrology: ஜோதிடம்: புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 14

கீழே ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா அல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா? அல்லது இல்லையா?




சரியான விடை இரண்டு நாட்களில் தெரியும்

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து,
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.11.21

Astrology: Jothidam: 15-11-2021 புதிருக்கான விடை!!!!

Astrology: Jothidam: 15-11-2021 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, மனிதருக்கு அவருடைய 36வது வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை வந்தது. ஆசை அதிகமாகி அனுதினமும் வீட்டைப் பற்றிய கனவே அவரைச் சுற்றிவரத் துவங்கியது. தசா, புத்திகள் தானே பலனைத் தரும். சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் அதற்குரிய தசா, புத்தி (Major Dasa and Sub period) வந்த போது அவருடைய கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது. அவருடைய ஜாதகத்தை அலசி அவருடைய எந்த வயதில் கனவு நிறைவேறியது  அல்லது எந்த தசா, புத்தியில் நிறைவேறியது என்பதைச் சொல்லுங்கள்'' என்று கேட்டிருந்தேன்

சரியான பதில்: ஜாதகருக்கு அவருடைய 36 வது வயதில் குரு மகா திசை ஆரம்பம். குரு திசை சுய புத்தி வழக்கம்போல வேலை செய்யவில்லை. அடுத்து வந்த சனி புத்தியில் தசா நாதனும் புத்தி நாதனும் அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 Position) அதற்கு அடுத்த புதன் புத்தியில், புதன்  குரு பகவானின் பார்வையைப் பெற்றிருப்பதால் அந்த திசா புத்தியில் ஜாதகரின் கனவுன் நிறைவேறியது. அதாவது ஜாதகரின் 41வது வயதில் அவரது கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது!!!!

அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.21

Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள்!!!!


Astrology: ஜோதிடம்: நீங்களே அலசுங்கள்!!!!

ஒரு இளைஞரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். ஜாதகர் தனது 25வயதிற்குள்ளாகவே முழுக் குடிமகனாகிவிட்டார். அதாவது குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யார் சொல்லியும் கேட்கவில்லை. ஜாதகப்படி அன்பர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!!



29-9-2021 புதன்கிழமையன்று சரியான பதில் வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.9.21

Astrology ஜோதிடம்: அலசல் பாடம் பாரதியாரின் ஜாதகமும் எனது கேள்விகளும்!



Astrology ஜோதிடம்: அலசல் பாடம் பாரதியாரின் ஜாதகமும் எனது கேள்விகளும்!

நேற்று சுப்பிரமணிய பாரதியாரின் ஜாதகத்தைக் கொடுத்து உங்களிடம் 
2 கேள்விகள் கேட்டிருந்தேன்.

அதை அலசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தேன்

அந்த இரண்டு கேள்விகள் இவைதான்

1. பாரதியார் ஏன் இறுதிவரை வறுமையில் வாடினார்?
2. அதிக நாள் உயிர் வாழாமல் 39 வயதிலேயே ஏன் மரணமடைந்தார்?

இவைகளுக்கு ஜாதகப்படி என்ன காரணம் அதை மட்டும் சொல்லுங்கள் என்றிருந்தேன்.

பலரும் அவருடைய ஜாதகத்தில் தனகாரகன் குரு பகவான் 12ம் வீட்டில் இருப்பதுதான் காரணம் என்று சொல்லியுள்ளார்கள்

அது பாதிதான் சரி!

முதன்மையான காரணம்: 4ம் வீட்டில் ராகு, மேலும் அந்த வீட்டின் மேல் சனியின் பார்வை. இரண்டு கிரகங்களுமாகச் சேர்ந்து அவருடைய வாழ்க்கையை சுகமில்லாமல் செய்துவிட்டன. வறுமையில் வாடவைத்துவிட்டன.

அவருடைய 39 வயது மரணத்திற்குக் காரணம். எட்டாம் இடத்துக்காரன் சனீஷ்வரன் அவனே ஆயுள்காரகனுமாவான் - அவன் நீசமடைந்திருப்பதால் நீண்ட் ஆயுளைக் கொடுக்கவில்லை. அவருடைய மரணத்திற்கு அதுதான் முக்கிய காரணம்

லக்கினாதிபதி 6ம் வீட்டில் அமர்ந்து அவருக்கு போராட்டமான வாழ்க்கையைக் கொடுத்துவிட்டான்

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.9.21

Astrology ஜோதிடம்: நீங்கள் அலசுவதற்கு ஒரு வாய்ப்பு!!!!


Astrology ஜோதிடம்: நீங்கள் அலசுவதற்கு ஒரு வாய்ப்பு!!!!

கீழே சுப்பிரமணிய பாரதியாரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்


அதை அலசுவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு

அதிகமான கேள்விகள் இல்லை. இரண்டே இரண்டு கேள்விகள்தான்

1. பாரதியார் ஏன் இறுதிவரை வறுமையில் வாடினார்?
2. அதிக நாள் உயிர் வாழாமல் 39 வயதிலேயே ஏன் மரணமடைந்தார்?

இவைகளுக்கு ஜாதகப்படி என்ன காரணம் அதை மட்டும் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.9.21

Astrology ஜோதிடம் அலசல் பாடம்: அதீத தாமதமான திருமணம்


Astrology ஜோதிடம் அலசல் பாடம்: அதீத தாமதமான திருமணம்

ஒரு அம்மணியின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அம்மணிக்கு வெகு காலம் ஆகியும் திருமணம் கூடி வரவில்லை. பொருத்தமான வரன் கிடைக்கவில்லை. பெற்றோர்களுக்கு மிகுந்த வருத்தம் 

இருக்காதா பின்னே?

திருமணம் ஆகுமா அல்லது ஆகாதா?
வாருங்கள் ஜாதகத்தை அலசிப் பார்ப்போம்



அம்மணி துலா லக்கின ஜாதகி/

2ம் வீடு மற்றும் 7ம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் இரண்டாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் வலுவாக உள்ளார். அவர்தான் திருமணத்தை நடத்திவைக்க வேண்டும் அவருடைய திசை 37 வயதிற்கு மேல்தான் துவங்குகிறது. அத்துடன் 11ம் வீட்டின் அதிபதியான சூரியனின் பார்வையும் 7ம் வீட்டின் மேல் விழுகிறது. ஆகவே திருமணம் நடைபெற வேண்டிய ஜாதகம்தான்!

களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் 9ம் அதிபதி புதனின் பார்வையும் 7ம் வீட்டின் மேல் விழுகிறது. 38வது வயதில் திருமணமாகி ஜாதகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.8.21

Astrology: அலசல் பாடம்: விவாகரத்தாகி மறுமணம் செய்துகொண்ட அன்பரின் ஜாதகம்


Astrology: அலசல் பாடம்: விவாகரத்தாகி மறுமணம் செய்துகொண்ட அன்பரின் ஜாதகம் 

கீழே அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். 

அன்பருக்கு முதல் திருமணம் பிர்ச்சினையாகி விவாகரத்தில் முடிந்துவிட்டது. ஆனாலும் இறையருளால் அனபருக்கு மறுமணம் நடந்து ம்கிழ்ச்சியாக இருக்கிறார். 

முதல் மணம் மூறிந்த்தற்கும், இரண்டாவது திருமணம் உடனே ஆனதற்கும் ஜாதகப்படி என்ன காரணம்? 

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம் 

அன்பர் துலா லக்கின ஜாதகர். ஏழில் ஆட்சி பலத்துடன் உள்ள செவ்வாயால் முதல் திருமணம் பிரச்சினையில் முடிந்து விவாகம் ரத்தும் ஆகிவிட்டது. 

ஆனால் களத்திரகாரகன் சுக்கிரன் 9ம் வீட்டில்திரிகோணத்தில் இருப்பதுடன், குரு பகவானின் பார்வையையும் பெற்றிருப்பதால் இரண்டாவது திருமணம் கூடி வந்தது! 

அதை மட்டும் கூறியுள்ளேன்.


அன்புடன்

வாத்தியார்

---------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.8.21

Astrology: ஜோதிடம்: தனது முப்பதாவது வயது வரை பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த அன்பரின் ஜாதகம்!!!!!

Astrology: ஜோதிடம்: தனது முப்பதாவது வயது வரை பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த அன்பரின் ஜாதகம்!!!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். படிக்கிறகாலத்தில் ஒழுங்காகப் படிக்கவுமில்லை, வேலையில் சேர்ந்தால் ஒரு இடத்திலும் ஒழுங்காக வேலை பார்க்கவுமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார். அத்துடன் தன்னுடைய பெற்றோர்களுக்கு பாரமாக இருந்தார்.

அவரின் இந்த நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!

14 வயதில் ராகு திசை ஆரம்பித்தது. லக்கினமும் ஏழாம் வீடும் கேது மற்றும் ராகுவின் பிடியில் உள்ளது,

அந்த அமைப்பு சின்ன வயதில் நிலையில்லாத வாழ்க்கையைத்தான் கொடுக்கும். ராகு திசை முடியும்போது - அதாவது ஜாதகரின் 31வது வயது வரை நிலைமை அப்படித்தான் நீடித்தது.

அதற்குப் பிறகு குரு மகா திசை துவங்கியவுடன் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.3 & 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் குரு பகவானின் சேர்க்கை நல்ல மாற்றங்களை உண்டாக்கியது. அத்துடன் 2ல் இருக்கும் லக்கினாதிபதி சூரியனுடன் கூட்டாக உள்ள 2 & 11ம் அதிபதி புதன் ஜாதகனுக்கு நல்ல பணவரவையும் உண்டாக்கினார். ஜாதகன் மேன்மையுற்றான். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.8.21


Astrology:ஜோதிடம் : மோசடி வழக்கில் சிக்கி அவதிப்பட்ட அன்பரின் ஜாதகம்!!!

 ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. ரேவதி நட்சத்திரம். தான் வேலை பார்த்த அலுவலகத்தில் மோசடி வழக்கில் சிக்கி வேலையை இழந்ததோடு கெளரவம் மரியாதை என்று அனைத்தையும் இழந்து, வழக்கில் சிக்கி அவதிப்பட்டார் அன்பர். பிறகு ஜாமீனில் வெளியேவந்து வழக்கை கீழ் / மேல் நீதிமன்றங்களில் சந்தித்து இறுதியில்  பூரண விடுதலை பெற்று வெளியே வந்து விட்டார். 

இப்போது இரண்டு கேள்விகள்:

1. அன்பர் வழக்கில் சிக்கியதற்கான காரணம் என்ன?

2. அதேபோல் போராடி விடுதலை பெற்று வெளியே வந்ததற்காக காரணம் என்ன? 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!! 

1. லக்கினத்தில் எட்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனும் ராகுவும் டெண்ட் அடித்து அமர்ந்திருக்கிறார்கள். அது நன்மையான அமைப்பு அல்ல!

2. ஆறாம் வீடும் பன்னிரெண்டாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில் 6ற்கு ஒரு பக்கத்தில்செவ்வாய் மறுபக்கம் கேது. அதேபோல் 12ற்கு ஒரு பக்கம் சனி மறுபக்கம் ராகு

3. எட்டாம் வீட்டின் மேல் சனி மற்றும் செவ்வாயின் பார்வை.

4. 1 & 7ல் ராகு & கேது அமர்வு!

எல்லா தீய வீடுகளும் மேலும் கெட்டிருக்கின்றன

வழக்குகளுக்கு இதுதான் காரணம்!

-----------------------------------------

அதே போல் ஜாதகருக்கு கை கொடுக்கும் சூப்பரான அமைப்பும் ஜாதகத்தில் உள்ளது. அதனால்தான் அவர் போராடி வெற்றி பெற்று வழக்குகளை உதறிவிட்டு விடுதலையாகி வெளியே வந்தார்.

1. 8 மற்றும் 12ம் வீடுகளின் மேல் லக்கினாதிபதி மற்றும் நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவின் பார்வை!

2. ஆறாம் வீட்டுக்காரர் சூரியன் சுப கர்த்தாரி யோகத்தில் - வழக்குகளை உதறுவதற்கு இவர் பெரும்பங்காற்றினார்

3. எட்டாம் வீட்டுக்காரர் சுக்கிரன் உச்சம் பெற்று லக்கின கேந்திரத்தில் அமர்ந்துள்ளது நன்மையான அமைப்பு

4. பன்னிரெண்டாம் வீட்டுக்காரனான சனீஷ்வரன்சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் உள்ளார்

----------------------------------------------

இவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.8.21

Astrology: ஜோதிடம் திருமணமான ஆறு மாதங்களில் பிரிந்துபோன மனைவியின் ஜாதகம்!!!



Astrology: ஜோதிடம் திருமணமான ஆறு மாதங்களில் பிரிந்துபோன மனைவியின் ஜாதகம்!!! 

ஒரு அம்மணியின் ஜாதகம் கீழே உள்ளது. மூல நட்சத்திரம். திருமணமான ஆறு மாதங்களில் எந்தக் காரணமுமின்றி கணவனை விட்டுப் பிரிந்து போய் விட்டார், எத்தனையோ சிபாரிசுகள் வைத்தும் தன் பெற்றோர்களை விட்டு வந்து தன் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். கணவனின் மனநிலைமையை எண்ணிப் பாருங்கள்! 

அந்தப் பெண்ணின் நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!! 

திருமண வாழ்விற்கு அமைப்பில்லாத ஜாதகம். ஏழாம் வீடு மொத்தமாகக் கெட்டுள்ளது, 7ம் அதிபதி புதன் லக்கினத்திற்கு 12ல் - விரைய ஸ்தானத்தில் (House of Loss). அத்துடன் செவ்வாயின் பார்வையுடன்,

லக்கினமும் சந்திர லக்கினமும் தனுசுதான். அந்த வீட்டிற்கு 7ல் சனீஷ்வரனும் கேதுவும் இருக்கிறார்கள். அந்த அமைப்பும் கெட்டுள்ளது. களத்திரகாரகன் சுக்கிரன் லக்கினத்தில். ஆனால் ராகுவுடன் கூட்டணி. மேலும் சனியின் பார்வையுடன். அந்த அமைப்பும் கெட்டுள்ளது. ஜாதகிக்கு திருமண வாழ்வு மறுக்கப்பெற்ற ஜாதகம். ஆகவே கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தவில்லை. 

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.8.21

Astrology: ஞோதிடம் மனைவி மக்களைப் பிரிந்து வாடும் அன்பரின் ஜாதகம்!!!!




Astrology: ஞோதிடம் மனைவி மக்களைப் பிரிந்து வாடும் அன்பரின் ஜாதகம்!!!!

ஒரு அன்பரின் ஜாதகம். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர். அவருடைய 42வது வயதில் அவருடைய மனைவி குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிவிட்டார். அதிலிருந்து இவர் தனியாக அவதிப்படுகின்றார். குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் நிலைமையில் இல்லை. ஜாதகப்படி இந்தப் பிரிவினைக்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!! 

அன்பர் தனுசு லக்கினக்காரர். 10ம் வீட்டில் உள்ள சனீஷ்வரன் 7ம் வீட்டைப் பார்ப்பதோடு (10ம் பார்வை), ஏழாம் வீட்டுக்காரனனா புதனையும் பார்க்கிறார் (7ம் பார்வை). அத்துடன் சந்திரனுக்கு 7ம் வீட்டையும் பார்க்கிறார் (3ம் பார்வை), அவருடைய மகா திசை துவங்கி நடக்க ஆரம்பித்தவுடன் தனது வேலையைக் காட்டி பாதகங்களைச் செய்துவிட்டார், குடும்பம் பிரிந்தமைக்கு அதுவே காரணம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.21

Astrology: ஜோதிடம் அலசல் பாடம்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!!


Astrology: ஜோதிடம் அலசல் பாடம்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அன்பரின் தாய் மொழி தமிழ்தான், ஆனால் அவர் தெலுங்கு மொழியை நன்றாக படித்து கற்றுத் தேர்ந்து. தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? 

ஜாதகத்தை அலசிப் பார்ப்போம் வாருங்கள்!!! 

கடக லக்கின ஜாதகம். 10ம் வீட்டில் வர்கோத்தம ராகு. 10ம் வீட்டுக்காரன் செவ்வாய் உச்சம் பெற்று 7ல் அமர்ந்ததோடு 10ம் வீடான மேஷத்தையும் தன்னுடைய விஷேச பார்வையில் வைத்திருக்கிறான். மேலும் 10ம் வீட்டுக்காரன் செவ்வாய் லக்கினகாரகன் சந்திரனுடன் சேர்ந்திருப்பது பிற மொழி ஆளுமையை வழங்கியுள்ளான். அத்துடன் குரு பகவானின் பார்வையும் 10ம் வீட்டின் மேல். இந்த அமைப்புக்கள் எல்லாம் சேர்ந்து ஜாதகனுக்கு பிற மொழி ஆளுமையைக் கொடுத்தன. வாத்தியார் வேலையையும் கொடுத்தன!!!! 

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


=========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.5.21

Astrology: ஏன் திருமணம் கூடி வரவில்லை?


Astrology: ஏன் திருமணம் கூடி வரவில்லை? 

ஒரு சகோதரியின் ஜாதகம் கீழே உள்ளது. உத்திர நட்சத்திரக்காரர். 40 வயதாகியும் திருமணம் கூடிவரவில்லை. ஜாதகத்தைப் பார்த்த பெரிய ஜோதிடர் ஒருவர், இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். ஆகவே திருமணமாகக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று கூறிவிட்டார். அது போலவே அவருக்கு கடைசிவரை திருமணமாகவில்லை

திருமணம் ஆகாத நிலைமைக்கு ஜாதகப்படி என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!! 

ஜாதகி ரிஷப லக்கினக்காரர். உத்திர நட்சத்திரம். திருமண பாக்கியத்திற்கு உரிய எல்லா வீடுகளுமே கெட்டுப்போய் உள்ளன, லக்கினத்திற்கு 7ம் வீட்டில் சனி வக்கிர நிலைமையில் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரனுக்கும் சனீஷ்வரனால் அதே நிலைப்பாடுதான், பூர்வ புண்ணியாதிபதி (5th Lord) புதன் 12ம் வீட்டில் போய் அமர்ந்துள்ளார், 2ம் வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) விரையாதிபதி செவ்வாயின் ஆதிக்கம். மேலும் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்கிறார், ஒரு பக்கம் கேது மறுபக்கம் செவ்வாய். இக்காரணங்களால் அந்த சகோதரிக்கு திருமணம் கூடிவரவில்லை.  

அன்புடன்

வாத்தியார்

http://classroom2007.blogspot.com/

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.5.21

Astrology: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!!


Astrology: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. பெரிய தொழிலதிபர். அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார்

அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!! 

ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கேட்டை நட்சத்திரக்காரர். ராசியும் அதுவே. 9ம் அதிபதி - பாக்கியாதிபதி - சந்திரன் லக்கினத்திலேயே உள்ளார், 9th Lord in the Lagna will confer huge wealth. அதீதமான பண வரவிற்கு அதுவே காரணம். அத்துடன் லக்கினாதிபதி செவ்வாய் 10ம் வீட்டில் (தொழில் ஸ்தானத்தில்) உடன் குரு பகவான். தொழில் மேன்மைக்கு அதுவே காரணம். அவர் தொழில் செய்து பணம் ஈட்டுவதற்கு இந்த அமைப்பே உதவியது. அத்துடன் குரு பகவான் தன்னுடைய விசேட பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். அத் அவருடைய சொந்த வீடு மட்டுமல்ல, தன ஸ்தானமும் ஆகும். செல்வம் சேர்ந்தமைக்கு இந்த அமைப்பும் காரணமாகும் 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
==============================================

22.4.21

Astrology: ஆசைப் பட்டது நடக்கவில்லை ஏனடா கண்ணா!!!


Astrology: ஆசைப் பட்டது நடக்கவில்லை ஏனடா கண்ணா!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. மூல நட்சத்திரக்காரர். வீட்டாரின் கட்டாயப்படி ஜாதகர் கனரக வாகனங்களை வைத்து தொழில் செய்து பெரும்பொருள் ஈட்டினார். பத்தாம் வீட்டுக்காரன் சந்திரனின் பார்வை 9ம் வீட்டிலுள்ள சுக்கிரன் மேல் விழுவதைப் பாருங்கள். அது பாக்கிய ஸ்தானம். அத்துடன் சுக்கிரன் லக்கினத்திற்கு அதிபதி. மேலும் சுக்கிரன் வாகனங்களுக்குக் காரகன். லக்கின அதிபதியும் தொழில்காரகனும் கூட்டணி சேர்ந்தால் பலனுக்குக் கேட்கவா வேண்டும். அதுதான் வீட்டார்கள் அவருடைய ஜாதகத்தை வைத்து குடும்பத் தொழிலான வாகனத் தொழிலுக்கு அவரை இழுத்துக்கொண்டு போனது. ஆரம்பத்தில் பாதி மனதுடன் அவர் ஈடுபட்டாலும், போகப் போக சூழ்நிலை காரணமாக அவர் அதில் முழு ஈடுபாடு கொள்ளும்படி ஆகிவிட்டது

ஆனால் அவர் உள் மனதில் இருந்த ஜோதிட ஆசை - அதாவது ஜோதிடம் கற்றுக் கொண்டு ஜோதிடராகும் ஆசை  கடைசிவரை நிறைவேறவில்லைகேள்வி இதுதான் - அவருடைய ஜோதிட ஆசை நிறைவேறாமல் போனதற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அதை மட்டும் அலசி பதில் சொல்லுங்கள்!!!!! 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

பதில்: ஜாதகர் துலா லக்கினக்காரர். புதன் தான் ஜோதிடக் கலைக்குக் காரகன். அன்பரின் ஜாதகத்தில் புதன் 8ம் வீட்டில் அமர்ந்து வலுவிழந்துவிட்டார். (Mercury is the karaka for Astrology and in his horoscope Mercury is placed in the adverse 8th. Success in Astrology is not indicated ) ஜாதகரின் ஜோதிடர் கனவு நிறைவேறாமல் போனதற்கு அதுதான் முக்கியமான காரணம், அதை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


===========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.4.21

Astrology: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!!



Astrology: இடம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!!! 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. சதய நட்சத்திரக்காரர். ஜாதகத்தில் ராஜ யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல யோகங்கள் உள்ளன. அத்துடன் பத்தாம் வீட்டதிபதி லக்கினத்தில் வந்து அமர்ந்திருந்தால் ஜாககருக்கு அவர் செய்யும் வேலையில் தொடர்ந்து பல ஏற்றங்களைக் கொடுப்பார் என்பது ஜோதிட விதி. (If the lord of the 10th is powerful and is in lagna, the native will be successful in profession or business) ஆனால் ஜாதகருக்கு அவர் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகள் வேலை பார்த்தாரே தவிர எந்தவித முன்னேற்றமும் கிடைக்கவில்லை

அடுத்து வந்த புதன் திசையில் சொந்தத் தொழிலைச் செய்யத்துவங்கி பெரும் பொருள் குவித்தார் என்பது தனிக்கதைஅந்தக்கதை நமக்கு வேண்டாம். துவக்கத்தில், அதாவது அவருடைய 46வது வயது வரை ஏன் அவர் வாழ்க்கை அவர் அப்போது பார்த்த வேலையால் செழுமை (ஏற்றம்) அடையவில்லை

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!

ஜாதகர் கடக லக்கினக்காரர். அந்த கால கட்டத்தில் ஜாதகருக்கு 19 ஆண்டுகள் சனி மகா திசை காலமாகும். அதாவது அவர் வேலை பார்த்த நாட்களில் நடந்தது. சனி மகா திசை காலமாகும். சனீஷ்வரன் இந்த ஜாதகத்திற்கு 7 மற்றும் 8ம் வீடுகளுக்கு உரியவன். லக்கினாதிபதி சந்திரன் எட்டாம் வீட்டில். அதுவும் சனீஷ்வரனுடன் பரிவர்த்தனை யோகத்தில். சனீஷ்வரன் எட்டாம் வீட்டிற்கு உரிய கஷ்டங்களையே பலனாகக் கொடுத்தார். அதற்கு முன் நடந்த குரு திசையின் கடைசி ஆண்டுகளும் அவருக்கு சாதமாக இருக்கவில்லை. குரு ஆறாம் இடத்திற்கு உரியவர். மேலும் கேதுவின் சேர்க்கையால் பாதிக்கப்பட்டுள்ளார்

ஜாதகரின் மத்திம வயதுக்காலம் ஏற்றங்கள் இன்றி கழிந்ததற்கு மேலே குறிப்பிட்டுள்ளதுதான் முக்கியமான காரணம், அதை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:

========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!