Astrology: ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை!!!
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. பெரிய தொழிலதிபர். அவர் ஆரம்பித்த தொழில்கள் நன்றாக நடந்தன. செல்வம் மேலும் மேலும் பெருகியது. கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. சுற்றியுள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் நன்றாக இருந்தார்.
அவருடைய தொழில் மேன்மைக்கும், செல்வச் செழிப்பிற்கும் அவருடைய ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!
ஜாதகர் விருச்சிக லக்கினக்காரர். கேட்டை நட்சத்திரக்காரர். ராசியும் அதுவே. 9ம் அதிபதி - பாக்கியாதிபதி - சந்திரன் லக்கினத்திலேயே உள்ளார், 9th Lord in the Lagna will confer huge wealth. அதீதமான பண வரவிற்கு அதுவே காரணம். அத்துடன் லக்கினாதிபதி செவ்வாய் 10ம் வீட்டில் (தொழில் ஸ்தானத்தில்) உடன் குரு பகவான். தொழில் மேன்மைக்கு அதுவே காரணம். அவர் தொழில் செய்து பணம் ஈட்டுவதற்கு இந்த அமைப்பே உதவியது. அத்துடன் குரு பகவான் தன்னுடைய விசேட பார்வையால் இரண்டாம் வீட்டைப் பார்க்கிறார். அத் அவருடைய சொந்த வீடு மட்டுமல்ல, தன ஸ்தானமும் ஆகும். செல்வம் சேர்ந்தமைக்கு இந்த அமைப்பும் காரணமாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்
ஐயா ஒரு doubt,
ReplyDeleteபாக்கியதிபதி சந்திரன் நீசம் - இதனால் பாக்யம் குறைவாக கிடைக்காதா?
10இல் செவ்வாய், குருவுடன் கேது - கேது எதையும் குறைத்து கொடுக்காதா?
அதோடு 10ஆம் பாவதிபதி சூரியன் 12இல் விரய ஸ்தானத்தில் நீசம் - 12இல் நீசம் அடைவதால் விரயத்தை குறைத்து பொருள் சேர்க்கை அதிகமானதா? Please clarify.
ஐயா வணக்கம் என் பெயர் விக்னேஷ் , ஐயா மேலே உள்ள ஜாதகரின் பிறந்த நேரம் ,தேதி ,இடம் கிடைக்குமா .
ReplyDelete