நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!
1. ஒருவரின் வாழ்க்கை மேம்பட நீங்கள் உதவ விரும்பினால் அவருக்கு மீனைக் கொடுத்து உதவாதீர்கள். பயன்படும் வகையில் மீன் பிடிக்கக்கற்றுக் கொடுங்கள் என்பார்கள், இங்கே இளைஞன் ஒருவன் செய்யும் காரியத்தைப் பாருங்கள்.
2. அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்று எளிய மக்கள் சிலாகித்துச் சொல்லும் விதமாக சுவாமிமலையில் உறையும் முருகப்பெருமானுக்கு ஒரு சிறப்பு உண்டு. அவர் தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என்பார்கள். அதை மட்டும்தான் அனைவரும் சொல்வார்கள். ஆனால் அந்தப் பிரணவ மந்திரம் என்ன என்றால் சொல்லத்தெரியாது. சரி யாருக்குத்தான் அந்த மந்திரம் தெரியும்? அருணகிரிநாதருக்குத் தெரியும். அவருக்கு எப்படித் தெரியும்? அதையும் அவரே சொல்லியிருக்கிறார். அதை விளக்கும் விதமாக அன்பர் ஒருவரின் சொற்பொழிவு கீழே உள்ள காணொளியில் உள்ளது. அவசியம் பார்த்து மகிழுங்கள்
3. ஒரு இளம் பெண் கலக்கலாக இசைத்திருக்கிறார். அவர் பாடுவதைக் கேட்டு மகிழுங்கள்!
===============================================================
அன்புடன்
வாத்தியார்
========================================================