மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

10.5.22

பல வெற்றிகளைக் கண்ட ஸ்டுடியோ!!!!


பல வெற்றிகளைக் கண்ட ஸ்டுடியோ!!!!

ஜெமினி_ஸ்டுடியோஸ் - 

தமிழ் சினிமாவில் தன் தடயத்தை ஆழப் பதித்த பெரிய நிறுவனம் ஜெமினி ஸ்டுடியோ. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களையும் எடுத்து சாதனைப் பட்டியலை அடுக்கிக்கொண்டே சென்றது. 1941ல் ‘மதன காமராஜன்’ என்ற படம் ஜெமினி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது, அக்கால பிரபல கர்நாடக சங்கீதக் கலைஞர் வி.வி.சடகோபன், அன்றைய பேரழகி கே.எல்.வி.வசந்தா ஆகியோர் இணைந்து இந்த படத்தில் நடித்தனர். பிரபல டைரக்டர் பி.என்.ராவ் இயக்கினார்.

‘மதன காமராஜன்’ படத்தைத் தொடர்ந்து ‘மிஸ் மாலினி’ வரையில் 7 ஆண்டுகளில் 11 திரைப்படங்களை எடுத்து வெற்றிக்கண்டது. வாசன் தன் 12-வது படமாக தனது ஜெமினி ஸ்டுடியோவின் நிரந்தர ஆஸ்தான ஹீரோ நடிகரான எம்.கே.ராதா, ரஞ்சன் மற்றும் அன்றைய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை வைத்து, ஆங்கிலப்படங்களுக்கு நிகரான ஒரு பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலும், லட்சியத்திலும் 1948ல் ‘சந்திரலேகா’வைத் தொடங்கினார்.

ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அற்புதக் காட்சிகள் நிறைந்த, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 30 லட்ச ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து, பதினெட்டாயிரம் அடிகள் நீளத்தில் தயாரிக்கப்பட்டு, தமிழ்ப் புத்தாண்டுக்கு 5 நாட்கள் முன்னதாக 9.4.1948ல் ரிலீசானது ‘சந்திரலேகா’ திரைப்படம். தமிழ் சினிமா ரசிகர்கள் பிரமித்து திகைத்துத் திரும்பத் திரும்ப அந்தப் படத்தைக் கண்டுகளித்தனர். ‘சந்திரலேகா’ போன்ற பல பிரமாண்டமான திரைப்படங்களையும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களையும் தயாரித்து சரித்திரச் சாதனை படைத்தது ஜெமினி ஸ்டுடியோ.

அன்றைய சினிமாவின் பிதாமகரும், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஸ்டுடியோ அதிபருமான கே.சுப்ரமணியம் அவர்கள், மவுன்ட் ரோட்டில் தனக்குச் சொந்தமான ஸ்டுடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அதை விற்றுவிடத் தீர்மானித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட எஸ்.எஸ்.வாசன், எண்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி ‘ஜெமினி ஸ்டுடியோஸ்’ என்று பெயரிட்டு அதன் கீழே ‘மூவிலேண்ட்’ என்றும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்தார்.

ஜெமினி - ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையில் ‘இரட்டை’ என்பதைக்  குறிப்பதன் பொருட்டு கோவணம் கட்டிக்கொண்டு குழலூதும் இரண்டு குழந்தைகளின் அழகிய உருவத்தையும் வரைந்து வைத்தார்... 78 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ‘சதிலீலாவதி’ திரைப்படம் அது சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்குமே அறிமுகப்படமாகவும், ஒரு லட்சியப் படமாகவும் அமைந்தது. அந்தப் படத்தின் ஒரு சாதாரண கதாசிரியராகத்தான் எஸ்.எஸ்.வாசன் தனது திரைப்படப் பயணத்தையும், திக் விஜயத்தையும் தொடங்கினார்!

1958ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி தென்னக திரை வரலாற்றில் முதன்முதலாக ஜெமினி கலர் லெபாரட்டரி திறக்கப்பட்டது அதன் தனிச்சிறப்பு. ஜெமினி ஸ்டுடியோவில் தமிழில் 28 படங்களும், தெலுங்கில் 19 படங்களும், இந்தியில் 24 படங்களும், குஜராத்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் 7 படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. சந்திரலேகாவைப்போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953ல் ‘அவ்வையார்’ படத்தை வாசன் தயாரித்து வெற்றி பெற்றார்.

சினிமாவிற்கான எந்தச் சிறப்பம்சமும் இல்லாத அவ்வையாரின் வரலாற்றை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்த்துப் பாராட்டும்படியான ஒரு வெற்றிப்படத்தை தந்தது. அவ்வையார் பாத்திரத்தில் தோன்றி நடிக்க அன்றைய பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியாகப் புகழ் பெற்ற ‘கொடுமுடிக்கோகிலம்’ என்று அழைக்கப்பெற்ற கே.பி.சுந்தராம்பாளை வாசன் தேர்ந்தெடுத்தார். அவ்வையார் வேடம் அணிந்து அற்புதமாகப் பாடி, அருமையாக நடிக்கவல்ல ஒரு நடிகை இன்றுவரையில் வேறு எந்தப் பெண்ணும் பிறக்கவில்லை என்று அனைவருமே கூறும் அளவிற்கு கே.பி.சுந்தராம்பாள் வயதிலும், தோற்றத்திலும் அப்படிப் பொருந்தி அமைந்திருந்தார்.

அந்த ஒரு சினிமா சிந்தனையே அவருடைய அறிவிற்கும், அனுபவத்திற்கும் மாபெரும் வெற்றியை தந்தது. தஞ்சாவூர் பகுதியில் அமைந்த திருத்துறைப்பூண்டியில் 1904ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ஒரே மகனாகப் பிறந்தார் ஸ்ரீநிவாசன் என்னும் வாசன். நான்கு வயது இளம் பருவத்திலேயே தன் தந்தையை இழந்து தாயாருடன் அவருடைய உடன் பிறந்த மூத்த சகோதரியின் வீட்டில் தங்கி ஆரம்பக் கல்வி கற்று வந்தார்.

ஏழ்மை நிலையின் காரணமாக சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த தாய் வாலாம்பாள், அந்தக் காலத்தில் கைம்பெண்களுக்குக்கென்றே ஏற்பட்ட இட்லி வியாபாரம் செய்து கொண்டு தன் மகனை வளர்த்து அருகிலிருந்த எலிமென்டரி ஸ்கூலில் படிக்க வைத்தார். உயர்நிலைப்பள்ளிக் கல்வி முடிந்து மேற்கொண்டு பட்டப்படிப்பிற்காக சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு நிறைவு பெற்று அரசாங்க உத்தியோகம் பார்ப்பதைவிட தொழில் செய்து முன்னேற்றம் அடையலாம் என்ற நோக்கத்துடன் பலவிதமான சிறு சிறு தொழில்களை மேற்கொண்டு அதில் கணிசமான லாபமும் பெற்ற வாசன் ஜெமினி ஸ்டுடியோவையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தார்.

ஜெமினி ஸ்டுடியோ குறித்து பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நிறுவனம் ஜெமினி ஸ்டுடியோ. 19வது வயதிருக்கும் போது ஜெமினி சார் என்னுடைய திறமையைக் கண்டு அழைத்தார். அவர் மூலமாகத்தான் எஸ்.எஸ்.வாசன் அவர்களை சந்தித்தேன். தெலுங்கில் ‘மூன்று பிள்ளை’ தொடங்கி தமிழில் ‘ஒளி விளக்கு’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘இருகோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’ ஆகிய படங்கள் எல்லாம் ஜெமினி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதுதான்.

வாசன் சார் பெண்களுக்கு கொடுத்த அந்த முக்கியத்துவம் இன்று வரை எந்த நிறுவனமும் அளிக்கவில்லை என்றுதான் சொல்லுவேன். என்னுடைய திறமைகளை கண்டறிந்து அதை சரியான முறையில் பயன்படுத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது ஜெமினி ஸ்டுடியோதான். ஒழுக்கமும், பாதுகாப்பும் நிறைந்தது. முக்கியமாக பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதை அங்கு கொடுக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்ததில் எல்லோருமே பெருமைப்படுவார்கள்.

ஒவ்வொரு துறையையும் வாசன் சார் அவர்கள் தனது நேரடி பார்வையில் வைத்திருப்பார். பணியாற்றக்கூடிய அனைத்து ஊழியர்களிடமும் அன்போடும் பழகக்கூடியவர். ஜெமினி ஸ்டுடியோவில் ஆண்-பெண் அனைவரும் சமம். இது ஒரு நிறுவனமாக இருந்தது என்பதை விட ஒரு குடும்பமாகத்தான் இருந்தது. கடைநிலை ஊழியரின் கருத்துக்களையும் கூட கேட்பவர் வாசன். ஒரு தந்தையை விட அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்ளும் மனிதாபிமானம் மிக்க மனிதர். ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது.

ஒரு நாள் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து விட்டேன். அப்போது நான் குழந்தை பெற்று மூன்று மாதங்கள் இருக்கும். உடல்நிலை கொஞ்சம் பலவீனமாக இருந்தது. உடனே அவருக்கு தெரிந்த மருத்துவரை அழைத்து வந்து மருத்துவம் பார்த்து, நான் எழுந்தவுடன்  என்னை அழைத்து என்னுடன் உரையாடி, கவலைப்படாமல் உன்னை நீ கவனித்துக்கொள்ள வேண்டும். உனக்கு இருக்கின்ற திறமை கண்டிப்பாக உன்னை உயர்த்தும் என்று தன்னம்பிக்கையை தந்தார். என்னுடைய வாழ்நாளில் அப்படி ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நிறுவனரையும் நான் இதுவரை பார்த்ததில்லை’’ என்றார்.

- ஜெ.சதீஷ்
------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.3.21

மொய்_பணம் #ஒற்றைப்படையில் வைப்பதற்கு என்ன காரணம்..?


மொய்_பணம் #ஒற்றைப்படையில் வைப்பதற்கு என்ன காரணம்..?

நாம் ஏதாவது ஒரு விசேஷங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது மொய் பணம் தான். திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி நம் வீட்டில் நிகழ்த்தப்படும் விசேஷங்கள் என்றாலே சிறப்பு. 

விசேஷத்திற்காக வரும் சொந்த பந்தங்களும், அவர்கள் வைக்கும் மொய்ப் பணத்தோடு சேர்த்து தாய்மாமன் சீரு, அத்தை சீரு, பங்காளிகள் சீரு இவைகள் எல்லாமும் மிகச்சிறப்பு.

 நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் என்றாலே அதற்கு தனி மரியாதை தான். ஒரு பண்டிகை, ஒரு விசேஷம் என்று வந்தால் தமிழ் கலாச்சாரத்திற்கு ஈடு இணை வேறு எதிலும் இல்லை என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதிலும் நம் முன்னோர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு முறையை நமக்காக வகுத்து வைத்துள்ளார்கள். 

இந்த மொய் பணத்தை ஒற்றை படையில் வைப்பதற்கு ஒரு காரணத்தை கூறியுள்ளார்கள் பாருங்களேன்! 101, 501, 1001 இந்த 1 ரூபாய்க்குள் அப்படி என்ன தான் அடங்கியுள்ளது.. ?

இரட்டைப்படை என்னை எளிதாக வகுத்து, இரண்டாக பிரித்து விடலாம். அதில் மீதம் எதுவுமே வராது. மீதம் என்றால், நமக்கு கிடைப்பது பூஜ்ஜியமாக அல்லது ஒரு முழு என்னதான் கிடைக்கும். 

ஆனால் ஒற்றைப்படை என்னை வகுத்தால் கண்டிப்பாக பூஜ்ஜியம் என்று முழுமை பெறாது. அதில் மீதம் கண்டிப்பாக .5 என்ற விடை வரும். எடுத்துக்காட்டாக 100/2=50 _ 101/2=50.5 மீதம் வருகிறதா..?

உங்களுக்கு புரிந்ததா..?

 நம் உறவினருக்கு இரட்டைப்படையில் மொய் வைத்தால், மொய்ப்பணம் வைப்பதற்கும், வாங்குபவருக்கும் (உனக்கும் எனக்கும்) இடையே இனி மிச்சம் மீதி எதுவும் இல்லை என்று அர்த்தமாகி விடுமாம். இதோடு நம் உறவு மீதி இல்லாமல் முடிந்து விட்டது. அதாவது பூஜ்ஜியம்.

அதுவே ஒற்றைப்படையில் மொய் வைத்தால் நம்முடைய உறவு முடிந்து போகவில்லை இன்னும் மீதி இருக்கின்றது. இந்த பந்தம் என்றுமே தொடரும் என்பதை குறிக்கின்றது. 

இது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் நம் முன்னோர்கள் கூறியதை இல்லை என்று மறுக்க முடியுமா..? 
இந்த ஒற்றைப்படை மொய் பணத்திற்கு இவ்வளவு அருமையான விளக்கத்தைக் கூறிய நம் முன்னோர்களை நினைக்கும்போது புல்லரிக்க தான் செய்கின்றது.

ஒரு பழக்கமானது நல்லதையும், ஒற்றுமையையும் உறவுக்கு இடையே பலப்படுத்துகிறது என்றால் அதை நாம் எதற்காக மறுக்க வேண்டும். நல்லதை பின்பற்றினால் என்னதான் தவறு. 

இனி உங்களுடைய உறவினருக்கு மொய் வைப்பதாக இருந்தால், கட்டாயம் ஒற்றைப்படையில் மொய் வையுங்கள். இப்படி மொய் வைப்பதற்கு இதுதான் அர்த்தம் என்பதை உங்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள். 

நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்க வழக்கத்தை தயவு செய்து மாற்றிக் கொள்ள வேண்டாம். இதில் அடங்கியிருக்கும் கருத்துக்களும் நன்மைகளும் ஏராளம். வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் உறவுகளுக்கும் உறவினர்களுக்கும் எவ்வளவு முன்னுரிமை உள்ளது என்பதை நாம் மறந்து வந்துக் கொண்டிருக்கின்றோம். 

உறவுகளை எல்லாம் வலுப்படுத்த வேண்டும் என்றால் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் அவசியம் நமக்கு தேவை. 

உறவு பிரியக் கூடாது என்று ஒற்றைப்படையில் மொய் வைத்து கொடுக்கும் நல்ல மனப்பான்மை இருந்தாலே மனிதர்கள் மகா அந்தஸ்தை அடைந்து விடுவார்கள்..!

Our sincere thanks to
https://chinnuadhithya.wordpress.com/2020/04/08/
---------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.12.19

பாக்கியசாலி பக்தர் டாக்டர் பத்ரிநாத்!!!!


பாக்கியசாலி பக்தர் டாக்டர் பத்ரிநாத்!!!!

அது 1974-ஆம் ஆண்டு... காஞ்சி மகா பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வை பழுதுபட்டது. கிட்டத்தட்ட ஒரு கண்ணின் பார்வை இன்றியே தன் நித்ய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து வந்தார். தேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மகான்களுக்கு ஒரு பொருட்டல்ல. அதற்கேற்றாற்போல் அவரது செயல்பாடுகளில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. இருந்தாலும் சில அன்பர்களது வற்புறுத்தலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட கண்ணுக்கு ஒரு கட்டத்தில் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது போதிய பலன் தரவில்லை. அத்தோடு, பாதிக்கப்பட்ட அந்த கண்ணில் மேற்கொண்டு எந்த சிகிச்சையும் செய்ய இயலாது... அது பலன் தராது என்கிற நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்னொரு கண்ணின் உதவியுடனேயே இருந்து வந்தார் மஹா பெரியவா.

நாளடைவில் நன்றாகச் செயல்பட்ட அந்த இன்னொரு கண்ணிலும் கேட்ராக்ட் (புரை) ஏற்பட்டது. இதை அறிந்த பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களும் ஸ்ரீமடத்து விசுவாசிகள் பலரும் பெரியவாளை அணுகி, 'கேட்ராக்ட்டுக்குப் பெரியவா ஏதாவது சிகிச்சை எடுத்துக்கணும்' என்று விக்ஞாபித்துக் கொண்டனர்.

புன்னகையுடன் அந்தக் கோரிக்கையை மறுத்து விட்டார் பெரியவா. 'போதும்டா...இந்த ஒரு கண்ணை வெச்சுண்டே நான் சந்திரமௌலீஸ்வரர் பூஜையை நடத்திக்கிறேன். இந்தப் பார்வையே எனக்குப் போதும்' என்று அன்புடன் மறுத்துவிட்டார். ஆனால் மஹா பெரியவாளின் இந்த சமாதானமான பதிலை ஸ்ரீஜயேந்திர  சரஸ்வதி ஸ்வாமிகள்ஏற்கவில்லை.

கேட்ராக்ட்டுக்கு அவசியம் ஆப்ரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்று பெரியவாளிடம் வற்புறுத்துக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் பெரியவாளும் இதற்கு சம்மதித்தார்.

அப்போது மயிலாப்பூரில் பிரபல வக்கீலாக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் டாக்டர் பத்ரிநாத் மஹாபெரியவாளுக்கு அறிமுகம் ஆனது இந்த நேரத்தில் தான். சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்தார் பத்ரிநாத். இவரது சேவை மனப்பான்மை பற்றியும், தொழில் நேர்த்தி குறித்தும் ஸ்ரீமடத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஸ்ரீமடத்து அதிகாரிகள் கலந்தாலோசித்த பிறகு பத்ரிநாத்தைக் கொண்டே மஹாபெரியவாளுக்கு கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

முதலில் ஸ்ரீஜயேந்திரரைச் சந்தித்த பத்ரிநாத் பெரியவாளுக்கு எப்படி ஆப்ரேஷன் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை விளக்கினார். 'ஒரு சந்நியாசிக்கு மருத்துவமனையில் வைத்தெல்லாம் சிகிச்சை செய்யக் கூடாது. அது போல் நர்ஸ், மருத்துவ உதவியாளர்கள் போன்றோரின் ஸ்பரிசம் பெரியவாளின் மேல் படவே கூடாது' என்றெல்லாம் சில விஷயங்கள் ஸ்ரீமடத்தின் சார்பில் பத்ரிநாத் முன் வைக்கப்பட்டது. அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அவர், 'நானும் மகா ஸ்வாமிகளின்
பக்தன் தான். அவரது துறவற வாழ்க்கைக்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படாதவாறு இதைப் பார்த்துக் கொள்கிறேன்.' என்றார் மென்மையாக.

ஆப்ரேஷன் சமயத்தில் பத்ரிநாத் மட்டுமே மருத்துவர் என்ற முறையில் இருந்தார். இவரைத் தவிர, மருத்துவமனை சிப்பந்திகள் எவரும் இந்த சிகிச்சையின் போது உடன் இல்லை. அப்படி என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு ஆப்ரேஷன் நேரத்தில் உதவியவர்கள் யார்?

மஹா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்கள் சிலருக்கே தேவையான மருத்துவப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தன் உதவியாளர்களாக ஆக்கிக் கொண்டார் பத்ரிநாத். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபம், ஆப்ரேஷன் தியேட்டராக மாற்றப்பட்டது. ஆப்ரேஷனுக்கு தேவையான அனைத்து விதமான உபகரணங்களும் சென்னையில் இருந்தே கொண்டு வரப்பட்டன. எல்லாம் தயார் ஆன பின், மிகக் கச்சிதமாக மஹாபெரியவாளுக்கு ஆப்ரேஷன் முடிந்தது.

ஆப்ரேஷன் முடிந்து விட்டாலும் மஹாபெரியவாளின் (ஆப்ரேஷன் செய்த) அந்தக் கண்ணைத் தினமும் கண்காணிக்க வேண்டுமே! இதற்காக தினமும் அதிகாலை வேளையில் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் வந்து மஹாபெரியவளின் கண்ணைப் பரிசோதித்துவிட்டு வேண்டிய மருந்துகளை அப்ளை செய்து டிரஸ்ஸிங் செய்து விட்டு சென்னைக்குத் திரும்புவார் டாக்டர் பத்ரிநாத். இது தினசரி நடந்து கொண்டிருந்தது.

அன்றைய தினம் கிரஹணம். யதேச்சையாக இது தெரிய வந்ததும், டாக்டர் பத்ர்நாத் பதறிவிட்டார். பொதுவாக கிரகண காலம் முடிந்ததும், ஸ்நானம் செய்வது இந்துக்களின் வழக்கம். அதுவும் சந்நியாசிகள் இன்னும் அனுஷ்டானமாக இருப்பார்கள். 'ஒரு வேளை பெரியவா கிரஹண காலம் முடிந்ததும், கண் ஆப்ரேஷன் செய்ததைக் கருத்தில் கொள்ளாமல் குளிக்கப் போய்விட்டால்....? என்று சுளீரென உறைத்தது பத்ரிநாத்துக்கு. அவ்வளவு தான்... இயல்பாகத் தான் காஞ்சிபுரம் புறப்படும் வேளைக்கு முன்பாகவே ஒரு காரில் காஞ்சியை நோக்கி அரக்கப் பரக்கப் பயணித்தார்.

ஸ்ரீமடத்தின் வாசலில் போய்த்தான் கார் நின்றது. 'சாதாரணமாக வரும் நேரத்தை விட இன்று இவர் ஏன் இத்தனை சீக்கிரமாக ஸ்ரீமடத்துக்கு வந்திருக்கிறார்? அதுவும் பொழுது இன்னும் புலராத வேளையில் இவ்வளவு அவசரமாக வரவேண்டியதன் அவசியம் என்ன? என்று ஸ்ரீமடத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் குழம்பினார்கள்.

ஸ்ரீமடத்து அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மகாபெரியவா முன் படபடப்புடன் போய் நின்றார் பத்ரிநாத். சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார். பிறகு பெரியவாளையே பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றார்.தான் எதற்காக இப்படி பதைபதைத்து வந்தேன் என்பதற்கான காரணத்தை இன்னும் அவர் சொல்லக் கூட இல்லை.

அதற்கு முன்னதாக பெரியவா அவரை ஆசிர்வதித்து விட்டுப் புன்னகையுடன் திருவாய் மலர்ந்தார். 'என்ன குளிச்சிடுவேன்னு பயந்தியா?"
பத்ரிநாத்துக்குத் தூக்கி வாரிப் போட்டது. எதை நினைத்துக் கொண்டு சென்னையில் இருந்து ஓடி வந்தாரோ அதைப் பட்டென்று உடைத்து விட்டார் பெரியவா. 'ஆமா பெரியவா. இப்பதான் கண் ஆபரேஷன் ஆகி இருக்கு. இந்த நிலைல கிரஹண காலத்தை உத்தேசிக்க ஸ்நானம் பண்ணினா, ஆபரேஷன் ஆன கண்ணுக்கு ஏதேனும் ப்ராப்ளம் வந்துடுமோன்னு கவலையா இருந்தது. அதான், ஸ்நானம் பண்ண வேண்டாம்னு பெரியவாகிட்ட பிரார்த்திக்கிறதுக்க்காக அவசர அவசரமா ஓடோடி வந்தேன்' என்றார்
படபடப்பு இன்னும் அடங்காமல். பத்ரிநாத்தை அர்த்த புஷ்டியுடன் கூர்ந்து பார்த்த மஹாபெரியவா 'கிரஹணம் கழிந்தவுடனே ஸ்நானம் பண்ணனும்னு தான் சாஸ்திரம் சொல்றது. ஆனா நான் ஸ்நானம் செய்யலை. அப்படின்னா அந்த கிரஹணத் தீட்டு எப்படிப் போச்சுன்னு யோசிக்கிறயா?

சாஸ்திரத்துல மந்திர ஸ்நானம்னு ஒண்ணு இருக்கு. அந்த முறைப்படி நான் ஸ்நானம் பண்ணிக்கிறேன். என் கண் பார்வை போயிடுமோங்கிற பயத்துல நான் ஸ்நானம் பண்ணாம இல்லை. யூ ஆர் எ பட்டிங் டாக்டர் (வளர்ந்து வருகிற மருத்துவர்). உன்னோட வளர்ச்சி எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது. அதுக்காகத்தான் நான் மந்திர ஸ்நானத்தை ஏத்துண்டேன்'... என்று சொல்ல.....கண்கள் கலங்கி, அந்த மகானின் திருப்பாதங்களுக்கு இன்னொரு முறை சாஷ்டங்க நமஸ்காரம் செய்தார் டாக்டர் பத்ரிநாத்.

மஹாபெரியவாளின் தரிசனம் பெற்றாலே பெரும் பாக்கியம். அதுவும் அவருடைய திருமேனியைத் தீண்டி, கண் ஆப்ரேஷன் செய்தார் என்றால், டாக்டர் பத்ரிநாத்துக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம் அமைந்திருக்க வேண்டும்?!

பின்னாளில் காஞ்சி ஸ்ரீசங்கரமடத்தின் மூலம் 'மெடிக்கல் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' (சங்கர நேத்ராலயா) என்கிற அமைப்பு துவங்கும் போது டாக்டர் பத்ரிநாத் இதன் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைப்பின் தலைவராகவும் நிறுவனராகவும் தற்போது இருந்து வருபவர் இவர்.

படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.12.19

நாம் செய்யக்கூடாதவை !!!!


நாம் செய்யக்கூடாதவை !!!!

1. அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர்கள் ..(பண்ணவும் நினைக்காதீர்கள்)

2. முடிந்தவரை  அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர்கள் ...

3. கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ...

4. பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுங்கள் ..செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேட்காதீர்கள் ...

5. பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் ....குறிப்பாக பொது இடம்,சிக்னல்

6. நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ...அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ...

7. கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ...

8. ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ...அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ...

9. டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ...அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ...

10. நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ...உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ...

11. ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ...

12. நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ...அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ...

13. முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ...

14.  நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

15.  வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ...

16. உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ...(no one likes advice.)

17. வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ...அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

18. புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ...எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ...'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ...

19. ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் .
'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

20. பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ...உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ...

21. ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ...9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ...
(unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ...
10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ...

22. ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ,
கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ...

23. பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள். சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ...

24.  ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ...
( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல )

25.  டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ...

26. மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ...
( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!)

27. ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

28.  குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ...ஏன் என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்

29. நமது வீட்டில் அல்லது கடையில் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிப்பளியுங்கள்.

30. நமக்கு கீழ் உள்ள ஊழியர்களை மேன்மேலும் அதிக வேலைப்பளு கொடுக்காதீர்கள். அப்படி வேலைகள் அதிகரிக்கும் போது அதற்கான ஊதியத்தை மனம் நிறைவாக வழங்குங்கள்.

குறை/ நிறை அனைவரிடமும் உண்டு. நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம்.
-----------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.11.19

கருப்பு எள்ளின் மகத்துவம்!!!!


கருப்பு எள்ளின் மகத்துவம்!!!!

*புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா...*

எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே
இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக
அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு

தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம்.

ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு அற்புதங்கள் இருக்குனு தெரிந்தால் நீங்க இனி இத விட்டு வைக்க மாட்டீங்க..!

முக்கியமாக, எள்ளு சாப்பிடறதால புற்றநோய் வராமல்இருக்குமாம்.
அது மட்டுமில்லாம, புற்றுநோய் வந்தவருக்கும் இது
அருமருந்தாக இருக்கும்னு இப்போதைய ஆராய்ச்சியில் கண்டு பிடிச்சிருக்காங்க..!

*முன்னோர்களின் பாதை..!*
எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே
எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். உதாரணத்துக்கு முறுக்கு, சீடை, ஓட்டவடை, எள்ளுருண்டை... இப்படி வித விதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம் அன்று முதல் இன்று வரை  கடைபிடித்து வருகின்றோம்.

*எள்ளு- உயிர் காக்கும் நண்பன்..!*
இப்படி பலவித உணவு பொருட்களில் எள்ளின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது
புற்றுநோயை எதிர்த்து நிற்பதே.

நோய்கள் இல்லாமல் நம்மை வாழ வைக்க ஒரு பிடி எள்ளே போதுமாம்.

*எதிர்ப்பு சக்தி கொண்ட எள்..!*
எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம்.

இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

*காரணம் என்ன..?*
இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம்,
வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

*தாய்லாந்தின் ஆராய்ச்சி..!*
தாய்லாந்தின் Chiang Mai University, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில் பல திடுக்கிடும் தகவல்கள்  வெளியிட்டது. அதில் கருப்பு
எள் புற்றநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் எனவும்,
மூளை செல்களை மறு  உற்பத்தி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம்

'Sesamin' தான்.

*Sesamin அப்படினா என்ன..?*
Sesamin என்பது எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த Sesamin வேதி மூல பொருள் எதிர்ப்பு சக்தியை தூண்டி நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை ஆண்கள் பெண்கள் என இரு விதமாக அதன் பயனை பிரித்து தருகின்றது.

*பெண்களுக்கு எப்படி..?*
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில்
கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்றுநோயிற்கும்..!
மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது.

குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

*கருப்பா..?வெள்ளையா..?*
எந்த எள் அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில்,
கருப்பு எள் தான். எள் பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான்
மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை
விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

அட, இதுக்கூடவா..?
நீங்கள் எள் சாப்பிடுவதால் இந்த பயனும் உங்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது. இதில் இரும்பு சத்து, வைட்டமின் - A & Bஆகியவை நிறைந்துள்ளதால் இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல்,
ஞாபக மறதி போன்ற பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்..

*அழுக்குகளை வெளியேற்ற*
எள் சாப்பிடுவதால் உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடுமாம். குறிப்பாக கல்லீரலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து ஆரோக்கியமாக இருக்க வைக்கும். முக்கியமாக செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இதை நன்கு உதவும். எவ்வளவு சாப்பிடலாம்..?
தினமும் அரை ஸ்பூன் எள்ளு சாப்பிடுவது சிறந்தது. இதை உணவுடன்
சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக அரிசி அல்லது ஓட்ஸ்சுடன்
சேர்த்து சாப்பிட்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.

*உடலில் ஏதேனும் நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின்
ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது*.

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மைகள்.

🍀*1. *ஆரோக்கிய இதயம்*
 நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது.
எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது,
அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

*🍀2.* *நீரிழிவு*
 நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின்
சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு
வருவதைத் தடுக்கும்.

*🍀3.* *வலுவான எலும்புகள்*
 நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும்
இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

🍀*4. *செரிமான பிரச்சனை*
 மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில்
சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு,
செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.

*🍀5.* *சுவாசக் கோளாறு*
 நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால்,
இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

*🍀6.* *இரத்த அழுத்தம்*
 நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது
நல்ல பலனைத் தரும்.

🍀*7. *பளிச் பற்கள்*
 தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

*🍀8.* *புற்றுநோய்*
 நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை
அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

🍀9. *அழகான சருமம்*
 நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின்
நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின்
வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

🍀10. *புரோட்டீன்*
 எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான்.
🍀நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு
ஒரு சிறந்த உணவுப் பொருள்.

இதனை பயன்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ்வோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே
---------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.11.19

எனக்கு எத்தனை நண்பர்கள் !! - சுஜாதா


எனக்கு எத்தனை நண்பர்கள் !! - சுஜாதா

(கற்றதும் பெற்றதும்) Thanks to...Ram Sridhar.,.who typed this text

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். 'யவனிகா' 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த சமயம், நாகேஸ்வரராவ் பார்க்கில் வாக் போகும்போது நெஞ்சு வலித்தாற்போல் இருந்தது.

'அன்ஜைனா' வகை நெஞ்சுவலி என் சிநேகிதன்.எனக்கு 'பைபாஸ்' ஆபரேஷன் ஆகி எட்டு வருஷமாச்சு. எட்டிலிருந்து பத்து வருஷம்தான் அதற்கு உத்தரவாதம் என்பது தெரியும். [பைபாஸ் என்பது இதயத்துக்கு ரத்த சப்ளை செய்யும் கரானரி  ஆர்ட்டரிகளில் (Coronary Artery) நேரும் அடைப்பை, உடலின் மற்ற பாகங்களிலிருந்து குழாய் எடுத்து மாற்றுப் பாதை அமைத்து தைப்பது). டாக்டர் விஜயஷங்கருக்கு போன் செய்தபோது 'வாங்களேன், ஒரு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்துவிடலாம்' என்றார்.

எட்டு வருஷமாகியும் தோற்றம் மாறாமல் இருந்தார் விஜயஷங்கர் (தினம் ஒரு பைபாஸ் செய்கிறார்). டாக்டர் ராபர்ட் மோ என்கிற கார்டியாலஜிஸ்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் மணிப்பூர் மாநிலத்தவர். சீனர்.

ஆன்ஜியோ  சமாச்சாரங்களில் திறமை மிக்கவர். அவர் எனக்கு ஆன்ஜியோ எடுத்துப் பார்த்து, இந்த நற்செய்தியை சொன்னார். “

உங்கள் இதயத்தில் முன்பு சரி செய்த நான்கு க்ராஃப்டுகளில் மூன்று அடைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு க்ராஃப்டில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஆன்ஜியோபிளாஸ்ட்டி
செய்வது நல்லது” என்றார்.

டாக்டர் மோ ஒரு மாநாட்டுக்காக ஆஸ்திரேலியா போய் வந்த கையோடு எனக்கு அந்த சிகிச்சை செய்தார். உடன் டாக்டர் நஜீபும் இருந்தார்.
ஆப்பரேஷன் நல்ல வெற்றி என்று எனக்கு சிடி போட்டு காண்பித்தார்.

எல்லாம் நலம் வீட்டுக்குப் போகலாம் என்று படுக்கையடிப் புத்தகங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று  என் சிறுநீரகம்
(acute renal failure) பழுதடைந்து நின்று போய் விட்டது. விளைவு ராத்திரி
ஒரே மூச்சுத் திணறல். மேல் மூச்சு வாங்கும் போது ஏறக்குறைய சொர்க்கத்தில் கின்னர கிம்புருடர்கள் “திருக்கண்டேன்; பொன்மேனி
கண்டேன் திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்“ என்று பாடும் ஆழ்வார்கள் சகிதம் தெரிந்தார்கள்.

இதில் இரண்டு வகை உண்டாம் - அக்யூட், க்ரானிக் என்று. எனக்கு கிடைத்தது அக்யூட். டயாலிசிஸ் செய்தால் சரியாகிவிடும். க்ரானிக் என்றால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரை டயாலிசிஸ் பண்ணிக்கொண்டே இருக்க
வேண்டுமாம். ( நல்ல வேளை, எனக்கு இதில் ஒரு சின்ன அதிர்ஷ்டம்). சூழ்ந்திருந்த டாக்டர்கள் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்தன.
அடிக்கடி மானிட்டரையும் கை கடிகாரத்தையும் பார்த்தனர்.

நெஃப்ராலஜிஸ்ட் டாக்டர் கே சி பிரகாஷ் அழைக்கப்பட்டார். அவர் உடனே எனக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றார். அப்போலோ காரர்கள் என் மனைவியிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ராத்திரியே அதற்கு
ஏற்பாடு  செய்தார்கள். (டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தை வெளியே கொண்டு வந்தது கழுவி பிறகு மறுபடி
சிறுநீரகத்திற்கு அனுப்புவது).

இதற்காக, என் கழுத்தருகில் வெட்டு போட்ட டெக்னீஷியன் என் அருகே
வந்து ” உங்க ஸ்டோரிஸ் எல்லாமே  படிப்பேங்க. உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்...”
"காலையில் பார்த்துக்கலாமே..."
"காலைல எனக்கு டூட்டி முடிஞ்சு போயிருவேனே"
"டயாலிஸிஸ் ஓடிட்டு இருக்கு இல்லையா....இப்பவேவா?"
"இது என்னங்க ஜுஜுபி. பத்து நாளைக்கு ஒரு முறை ட்ரெயின் பிடித்து வந்து பண்ணிக்கிறவங்க இருக்காங்க. அங்க  பாருங்க.."
ஹால் முழுவதும் டயாலிசிஸ் மெஷின்கள் அமைத்து பலர் மாத நாவல் படித்துக்கொண்டு டயாலிசிஸ் பண்ணி கொண்டு இருந்தார்கள். அப்படி ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பது தெரிந்தது.

மறுதினம் சந்தேகத்துக்கு இன்னொரு முறை டயாலிஸிஸ் பண்ணிக்கொண்டதும் சிறுநீரகம் பழைய நிலைக்கு திரும்பி
பொன் வண்ணத்தில் சிறுநீர் கழிக்கத் துவங்கினேன். எனக்கு ஆன்ஜியோவுக்காக கொடுக்கப்பட்ட கறுப்பு  திரவத்தினாலோ அல்லது கொலஸ்ட்ரால் எம்பாலிசத்தாலோ வந்திருக்கலாம் என்று என் சங்கடத்துக்குக் காரணம்  சொன்னார்கள்.

ஒரு வாரம் ஐசியு-வில் இருந்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
அதன்பின் வீட்டுக்கு வந்ததும் மற்றொரு சிக்கல் ஏற்பட்டது. அதை
விவரித்து அதை ஏற்படுத்தியவர் பெயரைக் கெடுக்க விரும்பவில்லை.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக விரும்புபவர்களுக்கு என் பரிந்துரைகள்
இவை - முடிந்தால் அட்மிட் ஆவதைத் தவிர்க்க வேண்டும். என் கேஸில் போல தவிர்க்க இயலவில்லை என்றால், எத்தனை சீக்கிரம் வெளிவர முடியுமோ வந்துவிடவும். ஓர் உபாதைக்காக அட்மிட் ஆகி உள்ளே
போனதும், அப்படியே மற்ற உபாதைகள் உள்ளனவா என்று பார்த்து
விடலாம் என்று யாராவது அல்லக்கை யோசனை சொன்னால் பெரிய எழுத்தில் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். முடிந்தால்
அலறவும். இல்லையேல் மாட்டினீர்கள்.

எல்லோரும் நல்லவர்கள், திறமைசாலிகள். சிக்கல் என்னவென்றால்
அவர்கள் திறமைசாலிகளாக இருக்கும் அவயங்கள் வேறுபடும். கிட்னி ஸ்பெஷலிஸ்ட் கிட்னியையே கவனிப்பார், ஹார்ட், ஹார்ட்டையே...
சுவாச நிபுணர் சுவாசத்தையே. யாரவது ஒருவர் பொதுவாகப் பொறுப்
பேற்றுச் செய்யாவிடில் அகப்படுவீர்கள். ஒவ்வொரு டாக்டரும் சிற்றசர்கள்போல

குட்டி டாக்டர் புடைசூழ வருவார்கள். மொத்தம் ஒரு நிமிஷம் நம் படுக்கையருகே நிற்பார்கள். அன்று அதிர்ஷ்ட தினம் என்றால் ஏறிட்டுப் பார்ப்பார்கள்.இல்லையேல், தலைமாட்டு சார்ட்தான். "ஹவ் ஆர் யு ரங்கராஜன்?" என்று மார்பில் தட்டுவார் சீனியர்.

குட்டி டாக்டர் தாழ்ந்த குரலில் கிசுகிசுப்பார்."ஸ்டாப் லாசிக்ஸ் ...இன்க்ரீஸ் ட்ரெண்டால்..." என்று கட்டளையிட்டுவிட்டு கவுன் பறக்க கடவுள் புறப்பட்டு விடுவார். அடுத்து, அடுத்த ஸ்பெஷலிஸ்ட் வந்து குய்யோ முறையோ -
"யார் லாசிக்ஸை நிறுத்தியது?" இவர்கள் இருவருக்கும் பொதுவாக வார்டு சிஸ்டர் என்னும் பெரும்பாலும் மலையாளம் பேசும் அப்பிராணி.

இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம் - ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு விளைவும், பக்க விளைவும் உண்டு.

ஒரு மாத்திரை கல்குடலாக்கி பாத்ரூம் எங்கிருக்கிறது என்பதே மறந்து போகும். மற்றொரு மாத்திரை இளக்கி குழாய் போலத் திறந்துவிடும். ஒரு மாத்திரை தூக்கத்தைக் கொடுக்கும். ஒன்று கெடுக்கும். ஒன்று, ஈறுகளை, பல்லை மறைக்க வைக்கும் அளவுக்குக் கொழுக்க வைக்கும், ஒன்று
பல்லை உதிர்க்கும்.

ஒரு காலத்தில் ஒரு வேளைக்குப் பதினான்கு மாத்திரைகள் சாப்பிட்ட எனக்கு என்ன ஆகியிருக்கும்? ரகளை !

ஆஸ்பத்திரி என்பது மிகுந்த மனச்சோர்வு அளிக்கும் இடம். சுற்றிலும் ஆரோக்கியர்கள் காபி, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நாம்
மட்டும் கண்காட்சிப் பொருள் போல படுத்திருக்க, கண்ட நேரத்தில்,
கண்டவர் வந்து கண்டஇடத்தில் குத்தி ரத்தம் எடுத்து க்ளூகோஸ்
கொடுத்து, பாத்திரம் வைத்து மூத்திரம் எடுத்து, ஷகிலா ரேஞ்சுக்கு
உடம்பெல்லாம் தெரியும்படி நீல கவுன் அணிவித்து, ஆஸ்பத்திரியில் நிகழ்வது போல மரியாதை இழப்பு மந்திரியின் முன்னிலையில் கூட நிகழாது.

அப்பல்லோ போன்ற ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கான அத்தனை கருவிகளும் உள்ளன. எனக்கே எடுத்த டெஸ்டுகள்
ஆன்ஜியோகிராம், பல்மனரி ஃபங்க்ஷன் டெஸ்ட்,ஒருநாள் விட்டு
ஒரு நாள் எக்ஸ்ரே, ரீனல் ப்ரொஃபைல் டெஸ்ட், 1 அண்ட்
2 பிளட் டெஸ்ட், எட்டு மணி நேரம் மெல்லக் கொடுக்கப்படும் ஏதோ இன்ஜெக்ஷன், கால் வலிக்கு டாப்ளர் ஸ்கேன் ...ஒவ்வொன்றுக்கும்
மிகுந்த பொருள் செலவாகும். ஏழைகள் அணுக முடியாது.
நானே உள்ளாடை வரை உருவப்பட்டு பெஞ்சு, நாற்காலிகளை விற்கும் நிலைக்கு வந்துவிட்டேன்.

டிஸ்சார்ஜ் ஆகும்போது டாக்டர் கே சி பிரகாஷ் ஒரு சிற்றிடி கொடுத்தார். "எல்லாம் சரியாயிடுச்சு. ஆனா, ஒரு நாளைக்கு ஒரு கிராம்தான் உப்பு,
ஐந்நூறு மில்லிதான் தண்ணி."

உப்பில்லாமல், தண்ணீரில்லாமல் உயிர்வாழ்வதற்கு இன்னொரு பெயர் உண்டு...நரகம்....

தாகம் என்றால் இப்படி, அப்படித் தாகம் இல்லை....டாண்டலஸ்ஸின் (Tantalaus) தாகம். (புரியாதவர்கள் ஹாய் மதனைக்  கேட்கவும்)

*********************************************
என் குறிப்பு: - இந்த டாண்டலஸ் பற்றி நான் படித்ததை (அதில் நினைவிருப்பதை) உங்களோடு பகிர்ந்து கொள்ள  விழைகிறேன்.

டாண்டலஸ் ஒரு கிரேக்க இதிகாச ஹீரோ. அவன் ஓர் சமயம் தன் வீட்டிற்கு விருந்துண்ண வரும் கடவுள்களுக்கு அவனுடைய மகனைச் சமைத்து பரிமாற விழையும்போது, உண்மை தெரிய வர, கோபத்தில் டாண்டலஸை சபிக்கின்றனர்.

அந்த சாபத்தின் விளைவாக டாண்டலஸ் முழங்காலளவு தண்ணீரில் எப்போதும் நிற்பான். அவன் தலைக்கு மேல் உள்ள மரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் உள்ள கிளையில் பழங்கள் இருக்கும். அவனால் அதைப் பறித்து சாப்பிட முடியாது.

சாப்பிட நினைக்கும்போது பழங்கள் உயரே போய்விடும். சரி தண்ணீராவது குடிக்கலாம் என்று குனிந்தால், காலுக்குக்  கீழே இருக்கும் தண்ணீர் வற்றிவிடும். இதனால், டாண்டலஸ் எப்போது கடுமையான தாகத்துடனும், நிரந்தர பசியுடனும் இருப்பான். இவன் பெயரிலிருந்தே ஆங்கில வார்த்தையான tantalize / tantalise வந்தது. டிக்ஷனரியில் பொருள் பாருங்கள்,
விளங்கும்.)
******************************
மறுபடியும் சுஜாதா......

ஆஸ்பத்திரியிலிருந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு நான் வெளிவந்தபோது நான் இழந்தது பன்னிரண்டு கேஜி. பெற்றது,

"எனக்கு இத்தனை நண்பர்களா? இத்தனை நலம் விரும்பிகளா?" என்ற பிரமிப்பு. என் மனைவியும், மகன்களும், என்  மச்சினரும் மாற்றி, மாற்றி ட்யூட்டி பார்க்க, சினிமா நண்பர்கள் அனைவரும் வந்து ஆறுதலும், பொருளுதவியும் தந்தார்கள். பக்கத்துக்கு வார்டுகளில் படித்திருந்தவர்கள் தங்கள் வியாதிகளை மறந்து என்னை விசாரிக்க வந்தார்கள்.

டாக்டர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், லாப் டெக்னீஷியன்கள், பெரும்பாலும் செல்வி என்ற பெயர் கொண்ட அரிதான தமிழ் நர்ஸுகள், அஃறிணையில், இனிமையாக பேசும் மலையாள நர்ஸுகள்,...
எத்தனைப் பேர் !!

'நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்' (திருவாய்மொழி) ஆன நான் இவர்களுக்கு என்ன செய்தேன் என யோசித்துப் பார்க்கிறேன். இவர்களுக்காக இந்தண்டை ஒரு துரும்பை எடுத்து அந்தண்டை போட்டதில்லை. ஒரு ஸ்டூலைக் கூட நகர்த்தியதில்லை. ஏதோ தமிழில் கிறுக்கினத்துக்கு
இத்தனை மதிப்பா? இத்தனை சக்தியா?

உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்;
உற்றார்கள் எனக்கிங்கெல்லாரும் என்னும்

என்ற திருவாய்மொழி வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
-------------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.10.19

அன்றும் இன்றும்: படித்ததில் மனம் விட்டு சிரித்தது


அன்றும் இன்றும்: படித்ததில் மனம் விட்டு சிரித்தது

அடுப்புச் சாப்பாடு

“விறகு மண்டிக்குப் போய் விறகு வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா.

அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார். பின்னாலேயே நானும் அண்ணன்களும் போக வேண்டும். நாங்கள் தான் டெலிவரி செய்யும் மகன்கள். அமேசன்கள்.

விறகு மண்டியில் பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு ஆள் எப்போது பார்த்தாலும் கோடாலி வைத்து விறகுகளை பிளந்து கொண்டே இருப்பார். ஏன் என்ற கேள்வி ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை.

“ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா.

குண்டு என்பது ஒரு எடை அளவு. கடைக்காரரும் விறகை எடுத்து தராசில் வைப்பார்.

நான் அந்த goondas act ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.

தராசு என்பது பெரிதாக இருக்கும். குருவாயூர் கோவிலில் துலாபாரம் போடும் தராசை விட பெரிதாக இருக்கும். Large scale தராசு. வலது பக்கம் விறகு கட்டைகளை வைக்க வைக்க அந்த தட்டு இந்திய ரூபாயின் மதிப்பு மாதிரி கீழே இறங்கும்.

“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க...போன தடவையே எதுவும் சரியா எரியல்லே” என்பார் அப்பா. இது அவரின் சுய சிந்தனை இல்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து கொண்டிருக்கிறார்.

“எடுத்துகிட்டு போய் கொஞ்சம் காய வைச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர்.

‘காயமே இது பொய்யடா’ என்று தெரிந்தும் அந்த விறகை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. ஊரில் ஒரே ஒரு விறகு கடை தான் இருந்தது. வீரப்பன் வேறு அவரின் கம்பெனியை அப்போது incorporate செய்திருக்கவில்லை.

இப்போது ஈரம் விளைந்த விறகை வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும்.

கருடாழ்வார் மாதிரி நம்முடைய இரண்டு கைகளையும்  நீட்ட வேண்டும். அதன் மேல் விறகுகளை அடுக்கி வைப்பார்கள். விறகுக்கு கீழே கையில் ஒரு சாக்கு போட்டு விடுவார்கள். கையில் விறகு குத்தாமல் இருக்க அது ஒரு சாக்கு அப்ஸார்பர்.

நானும் அண்ணனும் தெருவில் பிரதர் வலம் வருவோம்.

கால் மணி நேரத்தில் விறகுகுண பாண்டியர்கள் வீடு போய் சேர்ந்து விடுவோம். இப்போது இன்ஸ்பெக்ஷன் நடக்கும். அம்மா ஒரு சரியான water diviner.

“இன்னும் விறகுல தண்ணி இருக்கே. ஒரே ஈரம்” என்பார்.

அம்மாவும் பாவம் தான். அந்த விறகை வைத்து எப்படி சமைப்பார்கள்?

விறகு காய வைக்கும் படலம் ஆரம்பிக்கும். மொட்டை மாடியில் விறகு காயப் போட வேண்டும். அதற்கும் நாங்கள் தான் packers and movers. நல்ல வேளை. காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது.

அப்போதெல்லாம் விறகு அடுப்பு விநோதமாக இருக்கும்.  சாணி பூசி மொழுகி சாணி ராணியாக இருக்கும். மேலே வீபூதி பட்டை வேறு இருக்கும். மண் அல்லது சிமெண்டினால் செய்திருப்பார்கள். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும்.

இந்த மெயின் அடுப்புக்கு பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு இருக்கும். வட்டமாக ஒரு துவாரம் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து சூடு இந்த அடுப்புக்கு இலவசமாக வரும். இந்த அடுப்பிற்கு கொடி அடுப்பு என்று பெயர்.

இந்த auxiliary அடுப்பு பொதுவாக ரசம் செய்யத் தான் உபயோகப்படுத்தப் படும்.

சமைக்கும் போது சதா சர்வகாலமும் அடுப்பு பக்கத்திலேயே ஜெகன் மோகினி பேய் மாதிரி இருக்க வேண்டும். விறகை உள்ளே தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அவ்வப்போது விறகு அனைந்து புகை மூட்டம் வரும்.

சச்சீன் படத்தில் ஜெனிலியா வரும் போதெல்லாம் திரை முழுக்க புகை வருமே அந்த மாதிரி கிச்சன் முழுக்க புகை வியாபிக்கும். இப்போது விறகை ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும்.

“டேய். வந்து கொஞ்சம் அடுப்பை ஊதுடா?’ என்பாள் அம்மா.

அண்ணன் போய் ஊதுவான்.

“இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல விறகா வாங்கியிருக்கக் கூடாதா? சரியான கஞ்சம்” என்று அம்மா புலம்புவாள்.

குழல் ஊதும்  அண்ணனுக்கு பஞ்சப் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.

குழல் ஊதுவதும் ஒரு டெக்னிக். கொஞ்சம் வேகமாக ஊதி விட்டால் ஆஷ் துரை கிச்சன் முழுக்க பறக்க ஆரம்பித்து விடுவார். வீடு முழுக்க சாம்பல் பள்ளத்தாக்கு ஆகிவிடும்.

விறகிலிருந்து வரும் புகையெல்லாம் சுவற்றில் fixed deposit ஆகும். கிச்சன் சுவர் முழுக்க கறுப்பாக இருக்கும். அந்த கருப்பை எல்லாம் எடுத்தால் Go back daddy என்று நூறு தடவை கறுப்பு கொடி காட்டலாம்.

அப்போதெல்லாம் குண்டு பல்பு தான். நாற்பது வாட்ஸ் பல்பு எரியும். அந்த வெளிச்சம் கரப்பான் பூச்சிகளுக்கே சரியாகப் போய் விடும்.

விறகு அடுப்பில் இன்னொரு பிரச்சினை. வெங்கலப் பானை அடியெல்லாம் கருப்பாகி விடும். அம்மா ராத்திரி உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருப்பாள். அது ஒரு பெரிய night mare. அந்த காலத்தில் பிக் பாஸ் vessel cleaning team எல்லாம் கிடையாது. மும்தாஜும் சென்றாயனும் வந்து பாத்திரம் தேய்த்து கொடுக்க மாட்டார்கள்.

பாத்திரத்தில் கரி பிடிப்பதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வெங்கலப் பானையின் அடியில் அரிசி மாவைக் கரைத்து பூசி விடுவாள் அம்மா. அந்தக்காலத்திலேயே Firewall கண்டு பிடித்திருந்தாள் அம்மா.

சாதம் பொங்கி வரும் போது கஞ்சி overflow ஆகும். அதை அப்படியே விட்டால் அடுப்பு அணைந்து விடும். கஞ்சிக்கு ஏது கண்ட்ரோல்  வால்வ்? ஒரே வழி. விறகை பிடித்து வெளியே இழுக்க வேண்டியது தான்.

சமையல் முடிந்து விட்டால் அடுப்பை அணைக்க வேண்டும்.

அதுவும் ஒரு டெக்னிக் தான்.

விறகை வெளியே இழுக்க வேண்டும். அதன் மீது லேசாக தண்ணீரை தெளிக்க வேண்டும்.

‘தண்ணீர் தெளித்து விட்டாச்சு’ என்றால் இனிமேல் பயன் இல்லை என்று அர்த்தம். ஆனால் இந்த விறகில் தண்ணீர் தெளிப்பதே மறுபடியும் உபயோகப்படுத்தத்தான். 

சூடு ஆறிய பிறகு சாம்பலை சேகரிப்பாள் அம்மா. பாத்திரம் தேய்க்க அது தான். அம்மாவின் அம் பார்.

கிச்சனை விட்டு அம்மா வெளியே வரும் போது தலையெல்லாம் சாம்பல் துகள்கள் இருக்கும். கண்கள் சிவப்பாக கன்றிப் போயிருக்கும்.

ஆனால் தட்டில் வெள்ளை வேளேர் என சாதமும் சாம்பாரும் வந்து விழும்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று என் வீட்டில் இருக்கும் கிச்சனைப் பார்க்கிறேன்.

மேடையில் இருக்கும் kitchen accessories ஐ நோட்டம் விடுகிறேன்.

கேஸ் ஸ்டவ் – piped gas உடன், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர், இண்டக்ஷன் ஸ்டவ், காபி மேக்கர், சப்பாத்தி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், சாண்ட்விச் மேக்கர், எலெக்ட்ரிக் கெட்டில்.

இவ்வளவு சாதனங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு ப்ளக் பாயிண்ட் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ப்ளக் பாயிண்டிலும் செல்போன் சார்ஜர் நிரந்தரமாக குடியேறியேறியிருக்கிறது.

ஏனோ எனக்கு அம்மாவின் நினைவு வருகிறது. விறகு அடுப்பு வைத்து புகைகளுக்கு மத்தியில் பத்து பேருக்கு தவல வடை செய்து போட்டது ஞாபகம் வருகிறது.

இதோ இப்போதும்  கிச்சனிலிருந்து குரல் கேட்கிறது.

“நைட் டிபனுக்கு என்ன செய்யட்டும்?”

ஒரே ஒரு வித்தியாசம்.

கேட்டது சமையல்காரம்மா.
------------------------------------------------------------------
படித்ததில் ரசித்தது: பகிர்வு.
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.19

சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!


சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!

இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது.........!!!

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........:

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........:

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாய் (100 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்டத் தவறினால் இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம் ருபாய் (5 டாலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன். காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."
என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோர்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்......
--------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.4.19

அந்தக் காலத்து புகைவண்டிப் பயணம்!!!!


அந்தக் காலத்து புகைவண்டிப் பயணம்!!!!

ரொம்ப நாளாவே தலைக்குள் ஒரு ஊரல் புகைவண்டி பற்றிய நினைவுகள் எழுதச்சொல்லி பிராண்டியபடி இருந்தன,இன்றைக்கு எழுதியே ஆக வேண்டும் என்று முடிவாக என்னுடைய எழுதுகோலான செல்பேசியை எடுத்துக்கொண்டு எழுதத் துவங்கினேன்

இடையிடையே கண் மேலேறி கடிகார முள்ளின் ஓட்டத்தை அவதானித்தபடி காலை நேரமாயிற்றே இனிமெல் தான் குளித்து முடித்து கடைதிறக்க எட்டரை மணிக்குள் செல்ல வேண்டும், ஆச்சு இப்போ மணி ஏழரை நல்ல நேரத்தில் தான் எழுத உட்கார்ந்திருக்கிறோம் என்று மனதில் முனகியபடி எழுத துவங்கினேன்.

கூ....கூ......சிக்புக்.. சிக்புக் என்ற ரயிலின் சப்தங்கள் காதுகளில் ரீங்காரமாய்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் காலை வெயிலின் சுள்ளென்ற உணர்வில் பிளாட்பாரத்தில் அரை டிராயர் அரைக்கை சட்டையில் நானும் வெள்ளைக்கு மாற்று குறைந்த நிறத்தில் வேட்டியும் பழுப்பு வண்ண சட்டையும் கையில் வெற்றிலையை நீவியபடி அப்பா அருகே ஜாம்பர்செட் என்ற புது மோஸ்தரில் பொட்டு பொட்டு புள்ளிகள் இட்ட கரு நீல சேலையும் முழங்கையையும் தாண்டி நீண்டிருந்த நீல வண்ண ஜாக்கெட்டும் வாணிஸ்ரீ கொண்டையும் போட்டுகொண்டு அம்மா வலது கையில் தண்ணீர் கூஜா ஒன்றும் இடது கையை மடித்து இடுப்பில் வைத்தபடி நிற்க எங்களுக்கு பக்கத்தில் டிரங் பெட்டி ஒன்றும் வக்கூடை என்று சொல்லும் ஓலைக் கூடையும் ஒரு பெரிய துணிபை என்று இருக்க சற்று தள்ளி தலைப்பா கட்டு சகிதம் ஒரு பெரியவரும் பக்கத்தில் அவரின் மனைவி தோற்றத்தில் ஒரு அம்மாவும் சுற்றிலும் தட்டுமுட்டு சாமான்களோடு இருக்க காரைக்குடி மாயவரம் ரயிலுக்கு இன்னும் சற்று நேரம் இருக்க நீல சட்டையம் அதே வண்ண அரைக்கால் சட்டையும் அணிந்த ரயில் நிலைய ஊழியர் நடைபாதை ஓரம் தொங்கி கொண்டிருந்த இரும்பு தண்டவாள துண்டில் கண கண என்று முதல் மணியை அடித்தார்.

பயணிகளிடம் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது.எல்லோரும் அவரவர் சாமான்களை சரிபார்ப்பதும் கூட வந்த நண்டு சிண்டு குழந்தைகளை டேய் ஓடாதீங்க ரயில் வருது என்று சத்தமிட்டு கூப்பிடுவதுமாக சல சலவென்று ஒரே சத்தம் இதற்கிடையில் இரண்டாவது மணியும் அடிச்சாச்சு எல்லோரும் ரயில் வரப்போகும் திசையை நோக்கி ஆவலும் பரவசமும் பொங்க பார்க்க தூரத்தில் சிக் புக் சிக்புக் சிக்புக் என்ற சப்தமும் வானில் புகையின் மெல்லிய கோடிட்ட தோற்றமும் ரயில் வருவதை உறுதி செய்தது .
இறுதிக்கட்ட பரபரப்பில் காரைக்குடி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பயணிகள் கைகளில் தங்கள் பொதிகளை சுமந்தபடி நிற்க இப்போது நீண்ட சிக்... புக் சிக்..புக் என்ற இழுவை சப்தமிட்டபடி கரிய உருண்டையான வடிவ அரக்கன் இரு கைகளை அசைப்பது போல் பக்கவாட்டில் உள்ள பிஸ்டண்கள் சிலிண்டர் வடிவ உருளைக்குள் போவதும் பின்வாங்குவதுமாக நீராவியை உமிழ்ந்தபடி கூ ....கூ...என்று என்று சப்தமிட்டபடி நுழைந்தது,இன்ஜினுக்குள் முகம் உட்பட உடல் முழுவதும் கரி பிசுக்கு தோற்றத்துடன் டிரைவரும் அருகில் நீண்ட கைப்பிடி கொண்ட கரி அள்ளி போடும் சாதனத்தோடு உதவியாளரும், இன்ஜினுக்குள் ஒருபுறம் கரியின் உதவியால் எழுந்த மஞ்சள் நிற நெருப்பு ஜூவாளை வட்டவடிவ கரி போடும் வாயிலில் அழகிய தோற்றம் தர, டிரைவர் வாயிலில்  நின்றபடி வெளியே ஒரு கையை நீட்டியடி இருக்க, ரயில் நிலைய ஊழியரின் கையில் இருந்து நீண்ட பிரம்பில் முன்புறம் வளைந்து பெரிய பேட்மிண்டன் பேட்டில் நரம்புகள் இல்லாதிருப்பது போல அதை நீட்டிய டிரைவரின் கையில் மாட்டிக்கொண்டு இன்ஜினுக்குள் இழுத்துக்கொண்டார் ,அதே போல் ஒரு பிரம்பு பிளாட்பாரத்தில் வீசப்பட்டது.இறுதி பெருமூச்சு விட்டபடி கூ....என்ற நீண்ட விசிலடித்தபடி .நின்றது ரயில்.

நானும் எங்கள் குடும்பமும் பக்கத்திலிருந்த தலைப்பாகட்டுப் பெரியவரின் குடும்பமும் ஒரே பெட்டியில் ஏறி உள்ளே சென்றோம்.அது மீட்டர்கேஜ் என்று இருந்த காலம் பெட்டிகள் அகலம் குறைவாக இருக்கும். மூன்று மூன்று பேர் எதிரெதிரே அமரும்படிக்கு மரத்தில் செய்யப்பட்ட  உட்காரும் பலகையும் சாய்மானமும் இருக்க மேலே பொதிகள் வைக்க பலகையும் இருக்கும் பெட்டியின் வெளித்தோற்றம் ரயில்வேக்குரிய மஞ்சளும் அரக்கும் கலந்த நிறமும் உட்புறம் அழுக்கு மஞ்சளும் நிறம் மாறாமல் இருக்கும் கூரைக்கு சற்று கீழே அபாய சங்கிலி இதை அனாவசியமாக இழுத்தால் அபராதம் ரூபாய் 500 கட்ட வேண்டும் என்ற எச்சரிக்கை பலகையோடு இருக்கும்.இரண்டு புற உட்காரும் பலகைக்கும் அருகில் ஜன்னல் குறுக்கு கம்பிகள் செருகப்பட்டும் ,கண்ணாடி போட்ட இறக்கு கதவும் கொண்டிருக்கும்.

ஜன்னல் அருகே உட்கார்ந்து வெளியில் ஓடும் மரங்கள்,வயல்வெளிகள்,மனிதர்கள் என்று பார்க்க ஆசையோ ஆசையா இருக்கும். அம்மா தான் டேய் கண்ணுல கரி விழுந்துரும் வெளிய எட்டி பார்க்க கூடாது தலைய உள்ள திருப்புன்னு அதட்டிக்கிட்டே இருப்பாங்க.அப்பா என்னை புன் சிரிப்புடன் பார்த்தபடி டேய் தம்பி என்று செல்ல கோபம் தொனிக்கும் குரலில் அதட்டுவார்கள்.

ஆனாலும் எனக்கென்னவோ பார்வை வெளியில் தான் மரங்கள் விர் விர் என பின்னோக்கி ஓடும் அழகும் ரயிலின் ஆட்டமும் ரயிலை விட்டு வீட்டுக்கு சென்றாலும் அன்று முழுவதும் ஆட்டியபடி இருக்கும் நினைவு , ஆஹா........

காரைக்குடியில் கூ.......என்று விசிலடித்தபடி கிளம்பும் ரயிலுக்கு கடைசியில் இருக்கும்  கார்டு வேனிலிருந்து வெள்ளை பேண்ட்,வெள்ளை கோட்,வெள்ளை தொப்பி சகிதம் கார்டு பச்சை கொடியை அசைத்தபடி பிளாட்பாரத்தை ரயில் தாண்டும்வரை வெளியில் எட்டி பார்த்தபடி நிற்பார்.இரவு நேரங்களில் கையில் எண்ணெய் விளக்கு இருக்கும் ஒருபுறம் பச்சை,ஒருபுறம் சிகப்பு என்று கண்ணாடி பொருத்திய விளக்கு தேவைக்கேற்ப விளக்கின் கண்ணாடியை வெளியே காண்பிப்பார்.

கைகாட்டி என்று சொல்லும் ரயிலுக்கு சமிங்கை செய்ய ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் முன்பாக உயர கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கை போன்ற தோற்றமும்  சிகப்பு ,பச்சை கண்ணாடி வில்லைகள் மேலும் கீழும் பொருத்தப்பட்டு பின்புறம் எண்ணெய்  விளக்கு மாட்டும் கம்பியோடு இருக்கும் .அதிலிருந்து கம்பி வடம் ஒன்று சமிங்ஞை அறையில் ஒரு லிவரோடு பொருத்தப்பட்டிருக்கும்.

அங்கிருக்கும் பாயின்ட்ஸ்மேன் என்றழைக்கப்படும் ஊழியர் ரயில் தங்கள் நிலையத்துக்கு முதல் நிலையத்திலிருந்து கிளம்பிய தகவல் தொலைபேசி வாயிலாக அறிந்த உடன் லிவரை இழுத்து ரயில் உள்ளே வர சமிங்கை செய்வார்.இரவில் எண்ணெய் விளக்கு ஏற்றி கைகாட்டி மரத்தில் ஏறி விளக்கை மாட்டி வைப்பார்,லிவர் இழுத்ததும் கைகாட்டி மேலே ஏறி பச்சை விளக்கு எரியும் தோற்றம் தரும்.

டிக்கெட் கவுண்டரில் மஞ்சள் நிறத்தில் சிறு அட்டையில் போகும் ஊர் புறப்படும் ஊர் தேதி ரயில் சார்ஜ் என்று பதிவுகள் கை அடி மிஷின் மூலம் அடித்து தருவார்கள்.

காரைகுடியிலிருந்து மாயவரம் செல்லும் ரயில் கோட்டையூர்,புதுவயல் என்று எல்லா நிலையங்களிலும் நின்று செல்லும்.

எங்காவது ஒரு நிலயத்தில் ஒரு மணி நேரம் கூட நிறுத்தி விடுவார்கள்,அப்பா போட் மெயில் கிராசிங் என்று சொல்வார்கள் திடீரென்று வேக வேகமாக எதிர் திசையில் ஒரு ரயில் எங்களை கடந்து செல்லும் அப்பொதெளல்லாம் ஒற்றை ரயில் பாதைகள் தான் போக வர இரண்டுக்கும்.

ரயிலுக்கு சரியான  நேரம் என்பதெல்லாம் கிடையாது ,சராசரி ஐந்து மணி நேரம் 8 மணி நேரம் தாமதமாக சேரும் இடத்துக்கு சென்று சேரும்.மாயவரம் வண்டி திருவாரூருக்கு எப்படியும் இரண்டு மணி நேரம் தாமதமாக சேரும்.நாங்கள் திருவாரூரை அடைந்ததும் எல்லோரும் கரி பூசிய உருவத்தோடு வீடு சேர்ந்து முதலில் குளித்து விட்டுத்தான் மறுவேலை.

அப்போதும் ரயிலில் இயற்கை உபாதைகள் கழிக்கும் அறைகள் ரயிலில் உண்டு .

இன்றைய புல்லட் ரயில்,ஜன்தன்,ஹெரிட்டேஜ் என்று பல்வேறு வசதிகள் AC பெட்டிகள்,தூங்கும் வசதிகள் என்று அன்று பர்ஸ்ட் கிளாஸ் என்றும் கூபே என்றும் தனி கேபின்கள் பணம் படைத்தவர்களுக்கு,2ND கிளாஸ் என்று நடுத்தர வர்க்கத்துக்கு தூங்கும் வசதி பெட்டி, பொது மக்களுக்கு மூன்றாம் வகுப்பு என்ற பெட்டி இதில் தான் மகாத்மா எப்போதும் பயணம் செய்வார்கள், என் மக்கள் பயணம் செய்யும் வசதியே எனக்கும் வேண்டும் என்பார்கள்.
1966-68ன் இனிய நினைவுகள்.

இப்போதும் சோபாவில் ஆட்டியபடி நான் ஆச்சியின் 'என்னங்க காலையில் குளிச்சு கடைக்கு போகாம செல்ல நோண்டிக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க'என்ற அதட்டல் நினைவுலகுக்கு கொண்டு வர எழுந்து குளிக்க சென்றேன்.

ஆக்கம்: நாச்சியாபுரம், சேதுராமன் லெட்சுமணன்.
----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.4.19

டூரிங்க் டாக்கீஸ்களில் படம் பார்த்த காலம்!!!!!


டூரிங்க் டாக்கீஸ்களில் படம் பார்த்த காலம்!!!!!

டூரிங்க் டாக்கீஸ்

இன்றிலிருந்து 50 வருடங்களுக்கு முந்தைய காலம். பஸ்களுக்கும் லாரிகளுக்கும் மூக்கு இருந்த காலம்.

அது ஒரு சிறிய ஊர். ஊருக்கு வெளியே ஒரு டூரிங்க் டாக்கீஸ். ஓலை வேய்ந்த கொட்டகை. விவசாய நிலத்தில் இருக்கும் மோட்டார் ரூம் மாதிரி முன்னால் ஒரு தகர ஷெட். அதுதான் ப்ரொஜொக்டர் ரூம். மூனாங் க்ளாஸ் படித்த முனுசாமி தான் ஆப்பரேட்டர்.

காலையில் தெருவில் டம் டம் என்று அடித்துக் கொண்டு ஒரு மாட்டு வண்டி போகும். மாடு மகாதேவியை இழுத்துக் கொண்டு போகும். இரண்டு பக்கமும் படத்தின் பெயர் போட்டு தட்டி கட்டியிருக்கும்.

பஞ்சு மிட்டாய் கலரில் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டே போவார்கள். நோட்டீஸ் வாங்க பிஞ்சுகள் பின்னாலேயே ஓடும்.

நாராயணன் செட்டியார் கடையில் விளம்பர தட்டி வைத்திருப்பார்கள். அதற்காக தட்டி பாஸ் கொடுப்பார்கள். இரண்டு டிக்கெட். கடைசி நாள் போகலாம். இதற்காகவே செட்டியாரின் பையன் ஸ்ரீராமுலுவுடன் நிறைய பேர் சிநேகம் வைத்திருப்பார்கள்.

ஆனால் கடைசி வரை செட்டியார் அந்த தட்டி பாஸ்களை மற்றவர்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்ததே இல்லை.

என் அப்பா கடை வைக்காமல் ஏன் கவர்ன்மெண்ட் உத்தியோகத்துக்கு போகிறார் என்று எனக்கு கோபம் கோபமாக வரும்.

திடீரென்று ஒரு நாள் போஸ்டரின் மேல் 'இன்றே இப்படம் கடைசி' என்று ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்.

இன்றைய கால கட்ட படங்களுக்கு ரிலீஸ் ஆன தேதியிலேயே இந்த ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள்.

மாலை ஆறு மணிக்கு தியேட்டரில் கூம்பு ஒலி பெருக்கியில் பாட்டு போடுவார்கள். அது ஊர் முழுக்க கேட்கும்.

சினிமா போக வேண்டியவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். பெண்கள் ரெமி பவுடர் எடுத்து அப்பிக் கொள்வார்கள். வீபூதிக் காப்பு செய்த முருகர் மாதிரி முகம் மாறிப் போயிருந்திருக்கும்.

தியேட்டரில் மொத்தம் பதினைந்து ரிகார்ட் தான் இருக்கும். அதே பாட்டை தான் தினமும் போடுவார்கள். வரிசை கூட மாறாது. ஆப்பரேட்டரின் play list ல் shuffle option கூட இருக்காது.

அரை மணி நேரத்தில் பாட்டு தியேட்டருக்கு உள்ளே ஒலிக்க ஆரம்பிக்கும். விரைவில் படம் போடப் போகின்றார்கள் என்பதற்கான சிக்னல் அது.

"பாட்டு உள்ளே போடறாங்க..." என்று தியேட்டருக்கு ஓடுவார்கள். குழந்தையை தர தரவென இழுத்துக் கொண்டு ஓடுவார்கள்.

தியேட்டர் வரை குழந்தை சைரன் ஒலித்துக் கொண்டே வரும்.

தியேட்டர் வரைக்கும் தான் கணவன் மனைவி ஜோடி செல்லும். தியேட்டருக்குள் அவர்கள் ஆண் - பெண் என்று redefine செய்யப் படுவார்கள். ஆண்களுக்கு தனி இடம். பெண்களுக்கு தனி இடம். மூன்று மணி நேர legal separation.

தரை டிக்கெட் நாலணா. கீழே மணல் பரப்பியிருக்கும். அந்த மணலைக் குவித்து அதை  high chair ஆக்குவார்கள்.

ஸ்க்ரீன் என்பது ஒரு பெரிய வெள்ளைத் துணி. அதற்கு திரை எல்லாம் கிடையாது.கவர் போடாத செல்போன் மாதிரி. நிறைய அடி வாங்கியிருக்கும். மட்டை உரிக்காத தேங்காய் சைஸுக்கு மஞ்சளாக ஒரு கறை இருக்கும்.

ஸ்க்ரீனில் அவ்வப்போது ஒரு பெரிய பல்லி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கும்.

ஏகப்பட்ட வேட்டிகளை பக்கம் பக்கமாக நிற்க வைத்து மேலிருந்து கீழாக தைத்திருப்பார்கள். அது தான் ஸ்க்ரீன்.

ஊரிலிருக்கும் எல்லா வேட்டியும் ஸ்க்ரீனுக்கே போய் விட்டதால் ஆடியன்ஸில் நிறைய பேர் வேட்டி இல்லாமல் இருப்பார்கள்.

'ட்ட்ட்ட்ட்ரிங்' என்று மணி அடிக்கும்.

நள்வரவு என்று ஸ்லைட் போடுவார்கள். மூனாங் க்ளாஸ் முனுசாமி இவ்வளவு எழுதியதே பெரிய விஷயம்.

அடுத்து நியூஸ் ரீல் ஓடும். நேரு எகிப்துக்கு நல்லெண்ண விஜயம் போய் நாசருடன் கை குலுக்குவார். பீகாரில் வெள்ளம் வரும். ஏதோ ஒரு விவசாயி நாலு நிமிடம் ஹிந்தியில் பேசுவார். கேமரா தப்பித் தவறிக் கூட விந்திய மலைக்கு கீழே வந்து விடாது.

படம் போட ஆரம்பிப்பார்கள்.

முதலில் சென்சார் போர்ட் சர்டிபிகேட். 22 ரீல் என்று போட்டிருக்கும். அனைவருக்கும் சந்தோஷம். கொடுத்த நாலணாவுக்கு நான்கு மணி நேரம் படம் பார்க்கலாம்.

அப்போதெல்லாம் பெரும்பாலும் சரித்திரக் கதைகள் தான்.

முதல் சீனிலேயே மகாராணிக்கு ஆண் குழந்தை பிறக்கும். பிறக்கும் போதே பப்பாளி சைஸில் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டு பிறக்கும்.

டெலிவரிக்காக எம்.என்.நம்பியார் தயாராகக் காத்திருப்பார். நம்பியாரும், பி.எஸ். வீரப்பாவும் மாறி மாறி வில்லன்களாக வருவார்கள்.

நம்பியார் ஒரு படத்தில் நாகேந்திரனாக வந்தால் அடுத்த படத்தில் பி.எஸ். வீரப்பா பிலேந்திரனாக வருவார்.

இப்படியாக இருவரும் பிற்போக்கு கூட்டணி அமைத்து  கெட்ட செயல்கள் செய்து வருவார்கள்.

பிறந்த குழந்தையை கொல்லச் சொல்லுவார் நம்பியார். மகாராணி மசக்கையாக இருக்கும் போது மகாராணியை போட்டுத் தள்ளி விடலாம் என்று அந்த வீணாய்ப் போன வில்லனுக்கு தோன்றாது. ஒரு சுப தினத்தில் சுகப் பிரசவம் ஆகும் வரை காத்திருப்பார்.

குழந்தையை காட்டுக்கு எடுத்துப் போவார்கள்.

'Please drop your babies here' என்று ஒரு இடத்தில் போர்டு போட்டிருக்கும். அந்த இடத்தில் குழந்தையை போட்டு விட்டு வந்து விடுவார்கள்.

குழந்தை பெரியவனாகி காதலிக்க ஆரம்பிக்கும்.

கதாநாயகியைப் பார்த்து "கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே" என்று பாடுவார் ஹீரோ.

அந்த நேரம் பார்த்து பல்லி ஸ்க்ரீனில் ஓடும். கதாநாயகன் உடலெங்கும் படர்ந்து நுழையக் கூடாத இடத்தில் எல்லாம் நுழையும். கதாநாயகன் பாட்டுக்கு பாடிக் கொண்டிருப்பான்.

பாட்டு முடிந்தவுடன் பல்லி வட கிழக்கு திசையில் ஓடி மறைந்து விடும்.

அடுத்த நாள் மறுபடியும் "கனவின் மாயா லோகத்திலே" என்று ஆரம்பிக்கும் போது பல்லி மறுபடியும் "நாம் கலந்தே உல்லாசம் காண்போமே" என்று டூயட்டில் இணைந்து கொள்ளும்.

சமூகப் படங்களிலும் Template கதைகள் தான். ஹீரோவின் தங்கச்சி  பாலாஜியிடம் ஏமாந்து போவார்.

ஏமாந்து போன தங்கச்சி  வீட்டில் உட்கார்ந்து கூரையை பார்த்துக் கொண்டிருப்பார். அரளிச் செடி பக்கத்தில் போய் அழுவார். பாடுவார்.

பாலாஜியை குட் பாய் ஆக்கியே தீருவேன் என்று ஹீரோ உழைப்பார்.

இதற்காக சைக்கிளில் போய் சரோஜா தேவியை காதலிப்பார்.

படத்தில் மொத்தம் நான்கு  இண்டர்வெல்.

டைரக்டர் தயவில் இரண்டு. ரீல் மாற்றுவதற்காக இரண்டு இண்டர்வெல்.

இண்டர்வெல் விட்டதும் " சோடாலேர்...வேகலே..." என்று பையன்கள் கத்திக் கொண்டு போவார்கள்.

சோடா கலர், வேர்க்கடலை என்பதின் திரிபுகள் அவை.

கோலி சோடாவை குடிப்பது தனி டெக்னிக். எல்லோராலும் குடித்து விட முடியாது. கவிழ்த்தால் கோலி வந்து மூடிக் கொள்ளும். அப்படியே குடித்தாலும் மீத்தேன் கேஸ் மூக்கு வழியாக ரெகுலேட்டர் இல்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

இண்டர்வெல் முடிந்ததும் ஸ்லைட் போடுவார்கள்.

சாந்தி சில்க் ஹவுஸ்
முத்து ஹேர் கட்டிங் சலூன்
ராஜா டெய்லரிங்
காமதேனு காபி ஒர்க்ஸ்

என்று வரிசையாக வரும்.

காமதேனு காபி பொடி விளம்பரத்தில் கவுன் போட்டுக் கொண்டு ஒரு லேடி வருவார்.

படம் ஆரம்பிக்கும்.

சரித்திரக் கதையில் பி.எஸ். வீரப்பாவை கதாநாயகி மயக்கி ஏமாற்றுவார்.

வீரப்பா முன்னால் ஸ்பஷ்டமாக ஒரு பரத நாட்டியம் ஆடுவார் கதாநாயகி. அந்த செக்ஸி டான்ஸில் வீரப்பா கிறங்கிப் போவார்.

இந்த சமயத்தில் வீரப்பா கையிலிருக்கும் குடுவையில் மது பானத்தை ஊற்றுவார் கதாநாயகி. கொஞ்சூண்டு Cough syrup அளவுக்கு குடிப்பார் வீரப்பா. அதிலேயே மட்டையாகி விடுவார்.

பி.எஸ்.வீரப்பா இடுப்பு பெல்டில் பாதாளச் சிறை சாவியை வைத்துக் கொண்டு கீ.எஸ்.வீரப்பாவாக இருப்பார். வீரப்பா மட்டையானதும் கதாநாயகி சாவியை எடுத்து ஹீரோவை காப்பாற்றி விடுவார்.

கடைசியில் கத்திச் சண்டை நடந்து வீரப்பா கொதிக்கும் வெந்நீரில் விழுவதுடன் படம் முடியும்.

ஸ்டீம் பாத் எடுத்த வீரப்பா அடுத்த படத்தில் இன்னும் அதிக எனர்ஜியுடன் வருவது வேறு விஷயம்.

சமூகப் படமாக இருந்தால் வேறு மாதிரி போகும்.

அம்மா  செந்தமிழில் அழுவார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து வாங்கிக் கொடுத்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.

திடீரென அம்மா செத்துப் போவார்.வாழை மரம் கீழே சாயும்.

அம்மாவுக்கு சிதை மூட்டி விட்டு ஹீரோ அங்கேயே ஒரு தத்துவப் பாட்டு பாடுவார்.

'பெத்த வயிறு பத்தி எரியுது' என அம்மா இன்னும் சீக்கிரமாக எரிவார்.

ஹீரோ ஹீரோயின் இலக்கணத் தமிழில் காதல் வசனம் பேசுவார்கள்.

"களங்கமில்லா உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது" என்பார் ஹீரோ.

இந்த சமயத்தில் தான் ஹீரோயின் முகத்துக்கு நேராக  தேங்காய் சைஸுக்கு இருக்கும் ஸ்க்ரீன் கறை வரும்.

"உங்கள் கரங்களைத் தான் நான் முதன் முதலில் பற்றுகிறேன். என்னை கை விட்டு விடாதீர்கள்" என்பார் ஹீரோயின்.

திடீரென ஃபிலிம் கட் ஆகும்.

வெள்ளைத் திரை தெரியும். விசில் சத்தம் கேட்கும். ஸ்க்ரீன் மீது டார்ச் அடித்து ஹீரோயினை தேடுவார்கள்.

ஃபிலிம் ஒட்டியதும் படம் ஓடும்.

"உங்கள் கரங்களைத் தான் முதன் முதலில் பற்றுகிறேன்" என்று இரண்டாவது தடவை சொல்வாள் ஹீரோயின்.

அதன் பிறகு பல காட்சிகளில் ஹீரோவும் ஹீரோயினும் distance maintain செய்து லவ் செய்வார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும் போது அவர்களுக்கு பதிலாக இரண்டு பூக்கள் தொட்டுக் கொள்ளும்.

கடைசி சீனில் பாலாஜி மனம் திருந்தி பேமெண்ட் வாங்கிக் கொண்டு போய் விடுவார்.

தங்கச்சி தலை நிறைய பூவுடன் சுபம் சொல்லுவார்.

படம் முடியும் போது பதினோரு மணி ஆகியிருக்கும்.

பெண்கள் முகம் எல்லாம் அழுது அழுது உப்பி போயிருக்கும்.  அழுமூஞ்சி மனைவியை அரை இருட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள் கணவர்கள்.

படம் முடிந்து போகும் போது கும்பலாக போக வேண்டும். சாலையில் விளக்கு இருக்காது. கும்மிருட்டு.

இரு பக்கமும் புளிய மரங்கள். பாராசூட்டில் பேய்கள் எந்த நேரமும் வந்து இறங்கலாம். கண்களைத் திருப்பாமல் வேகமாக நடப்பார்கள்.

பெண்கள் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். பி.எஸ்.வீரப்பா பின்னால் வருவது போலவே ஒரு உள்ளுணர்வு இருக்கும்.

வீடு பக்கத்தில் வந்து விளக்கு வெளிச்சம் பார்த்தவுடன் தான் உயிர் வரும்.

அடுத்த நாள். பத்து பெண்களை சுற்றிலும் வைத்துக் கொண்டு படத்தின் கதையை சொல்லிக் கொண்டிருப்பாள் மனைவி.

இனி அடுத்த படம் இரண்டு மாதம் கழித்தோ மூன்று மாதம் கழித்தோ தான்.

இதோ..இப்போது என் முன்னால் டி.வி ஓடிக் கொண்டிருக்கிறது. ரிமோட் ஒவ்வொரு சேனலாக நீந்துகிறது.

பதின்மூன்று படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எதையும் பார்க்காமல் அணைக்கிறேன்.

வாட்ஸ் அப் போகிறேன். அந்த மகானுபாவன் தன்  தலைவரின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார். பார்க்கிறேன்.

என் சேனலில் சினிமா பாருங்கள் என்று டி.வியில் கூவுகிறார்கள். கெஞ்சுகிறார்கள்.  பிடிக்கவில்லை.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் கெஞ்சும்.
-------------------------------------------------------
படித்ததில் ரசித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்! 

7.3.19

வாருங்கள்! பொதிகைமலைக்கு போய் வருவோம்!!!!!!!


வாருங்கள்! பொதிகைமலைக்கு போய் வருவோம்!!!!!!!

பொதிகை மலை , அங்கே போறதுக்கு  அகத்திய பெருமானோட அருள் வேணும் அடுத்து அங்க போறதுக்கு சரியாய் வழிகாட்டி வேணும் , அது ஒரு அடர்ந்த காடு அப்பறம் தமிழ்நாடு வழி புலி சரணாலயமா இருக்கிறதால் கவனமாகப் போகணும். அங்க போறதுக்கு சிறந்த வழி கேரளா வழி தான் , தமிழ் நாடு வழி வனவிலங்குகள் அதிகம் , போற ஆட்கள் நிறைய பாதிக்கப்பட்டு இருக்காங்க , விஷயம் வெளியே வரவில்லை. காரணம் வன இலாகாவில் இருந்து யார் கிட்டயும் முறைப்படியான அனுமதிவாங்காமல் போனததினால் தான் .. கேரளா வழியும் சும்மா இல்லை. ஜன நடமாட்டம் இவ்ளோ இருக்குற நாட்கள்லயே யானைகள் சாதரணமா வந்துட்டு போகுது , அதுவும் சரிதான் அது இடத்துக்கு தான நாம போறோம் .

 பொதிகை மலை அகத்தியர் மலை ஒரு பயணம்...

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர். தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.

அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை. இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.

கயிற்றின் துணையுடன்  தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன்  மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது. முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.

அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம். குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

 சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம். 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம். இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை’ என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

 இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது.

 இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது,  காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம். அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.பனிபடர்ந்த அகத்தியர் மலை
 கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம் அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்து. இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகாது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர்.

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.ஆனால் மலைப்பகுதிகளில் மெதுவாக வழிந்தோடும் சிற்றோடையில் குளிப்பது அற்புதமான அனுபவம். உடல் அதிகபட்சமாக தாங்கும் அளவிற்கான குளிர்ச்சி, சில்லிப்பு நீரில் உறைந்து ஊறி இருக்க..முழங்கால் அளவு நீரில் உடலை மூழ்கச் செய்ததும்.. சின்னச்சிறு லட்சக்கணக்கான ஊசிகள் உடலில் இருந்து வெளியேறுவது போன்ற உணர்வு தொடர்ந்து பல நிமிடங்களுக்கும் இருக்கும்!!!!!
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.3.19

மருந்தை பாலில் கலந்து ஏன் சாப்பிடக்கூடாது!!!!


மருந்தை பாலில் கலந்து ஏன் சாப்பிடக்கூடாது!!!!

எச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார்.

குழந்தைகள் இருமல்  மருந்து குடிக்க மறுத்தனர். அதனால் ஸிரப் மருந்தை பாலில் கலந்து குழந்தைகளுக்கு குடிக்கக் கொடுத்தார்.  குழந்தைகள்  தூங்கச் சென்றனர்.

கணவர் வந்து மீதமுள்ள பாலைக் குடித்துவிட்டு வயிற்று வலியால் அவதியுற்றார்.

பின்னர் அவர்களது அனைத்து 4குழந்தைகளும் படுக்கையில் இறந்துவிட்டனர் என்பதைக் கண்டு மருத்துவ சோதனைக்குட்படுத்தியதில், இருமலுக்கான மருந்தைப் பாலில்  கலவை செய்ததால் அது விசமாக மாறி மரணத்தை ஏற்படுத்தியது என்று  நிரூபித்தது.

குழந்தைகளைத் தன் கையால் கொன்றுவிட்டேன் என அந்தத் தாய்  உளவியல் ரீதியானஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, பாலில் மருந்தைக் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்.

*இருமல் மருந்து மட்டுமல்ல* , *எந்த ஒரு இரசாயன மருந்தையையும் பாலில் கலந்து குடிக்க வேண்டாம்*
*அது கண்டிப்பாக விஷமாக மாறும்* , *ஆகவே , அவ்வாறு செய்ய வேண்டாம்*
===================================================
2

*👀மருத்துவமனைகளின் மறுபக்கம்👀*

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,  இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம்.  *மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள்* பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு மருத்துவர்கள்_ மூலம். மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே*,  “ _*Dissenting Diagonisis*_" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். _மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்_.

*நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்*:

' *மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, _குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது_'  என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில்*, இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே* முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ _*இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட,  அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன*_” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. _பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள்_. 

நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது *_தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று_*. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ *பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை*. பரிசோதனை சாலைகள், *நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை*. _மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்_” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. *அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை*... _*லாபம்*_.. _*லாபம்*_... _*லாபம்*_... _*மேலும் லாபம்*_ மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

*நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்*:

_ஒரு பிரபலமான மருத்துவமனை_,  தன் மருத்துவமனையில் வேலை பார்த்த *சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது*. அதற்கான காரணம், _*ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது*_.  " *இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான  சான்று*" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. *அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல*. லாபத்திற்காக _*தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன*_” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

_சுக்லே_, “ *எனக்கு தெரிந்த ஒருவர்,  தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை*...” என்கிறார்.

இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. _*சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்*_

கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன்  என்னும் மருத்துவர், “ *எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம்.  x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்*...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

" _தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன_. அதாவது *தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும்*. அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, _*அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்*_" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

*இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது*...?

 என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ *பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்*. ஆனால், *_இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது_*. *உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்*” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.

இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு *100 பில்லியன்* அமெரிக்க டாலர்கள். *இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது* என்கிற விபரங்களே, _இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது_.

*இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை*...?

"  _முடிந்த அளவு ஷேர் பண்ணுங்க_ "
----------------------------------------------------------------------
படித்து அதிர்ந்தது: பகிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.2.19

கடவுள் இல்லை என்று யார் சொன்னது?


கடவுள் இல்லை என்று யார் சொன்னது?

ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...

ஒரு சின்ன குழந்தை (கையில் தூக்கு வாளியுடன்): அண்ணா...! அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க...! காசு நாளைக்கு தருவாங்களாம்...

ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....

(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).

குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே.... (குழந்தை கிளம்பிவிட்டாள்)

அந்த கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டே விட்டேன்...

நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க....

ஹோட்டல் நடத்துபவர்: அட சாப்பாடுதானே சார்....நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்...அதெல்லாம் குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட் ஆகும்....எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.... நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...வந்துடும் சார்....ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்

கடவுள் இல்லைன்னு யார் சார் சொன்னது?

படித்ததில் பிடித்தது...
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.2.19

நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!


நோய் தீர்க்கும் ராகங்கள்!!!!

இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம்.

சத்தத்தில் சங்கீதம் இருக்கு -  அதை கேட்கத்தான் நெஞ்சத்தில் இருக்கு.

என்ற கவிஞர் முகிலன் எழுதிய இவ்வரியில் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு சத்தம் ஒளி வடிவாகவும், இசை வடிவாகவும் இருக்கிறது. அதைக் கேட்காத நெஞ்சம் கிறுக்கு (மயக்கநிலை) ஆகிவிடும் எனக் கூறுகிறார்.

இயந்திர வாழ்வில் ஓய்வில்லாமல்,உறக்கமில்லாமல், நல்ல உணவுகளைக் கூட நேரத்திற்கு சாப்பிட முடியாமல் பலர் இருப்பதால் பல நோய்கள் மனிதர்களைத் தாக்கும் போது பெரும்பாலானவர்கள்  மருந்தை எடுத்துக் கொள்கின்றனர்.

இச்சூழலில் நோய்களை இசையின் மூலம் குணப்படுத்துவது பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. அதெப்படி இசை மூலம்
குணமாக்க முடியும்? இசைக்கு அப்படி ஒரு திறன் உண்டா? எனப் பல கேள்விகள் எழுவது இயற்கையே. ஆனால் அந்த இசையால்

பற்பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதே உண்மையான ஒன்றாகும்.

!!நோய் தீர்க்கும்  ராகங்கள்!!

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.

அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன்
என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

சுகமான, இதமான இசையைக் கேட்டதன் மூலம் நரம்பு சம்பந்தமான கோளாறுகள், நரம்பு தளர்ச்சி, சோகமான நிகழ்வில் ஏற்படும் அதிர்ச்சிகள் என இவைகளை இசை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகின்றன. ஒரு நபர் இசைக்கும் வயலின் இசையைக் கேட்டாலே கொடிய தலைவலியும் போய்விடும் என்கின்றனர். ஹிஸ்டீரியா  என்ற நோயை நரம்புக் கருவிகளின் இசை குணமாக்கி விடுகிறதாம்.

நல்ல இசை நம் மனதையும் எண்ணங்களையும் அமைதிப் படுத்துவதோடு, ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம்,
தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசையைக் கேட்பதமன் மூலம் குணப்படுத்தமுடியும் என்கின்றனர்

நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக்
கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்

* பாடல்  :      சலங்கயிட்டால் ஒரு மாது

   படம்     :      மைதிலி என்னைக் காதலி

* பாடல்  :      செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    படம்      :      முள்ளும் மலரும்

 அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்

* பாடல்  :     கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்

    படம்    :     தென்றலே என்னைத் தொடு

* பாடல்  :     நீ பாதி நான் பாதி கண்ணே - சக்கரவாகம்

   படம்    :     கேளடி கண்மணி

* பாடல்  :     பூப்பூக்கும் மாசம் தை மாசம் - மலையமாருதம்

    படம்    :     வருசம் 16

 * பாடல்  :     உள்ளத்தில் நல்ல உள்ளம் - சக்கரவாகம்

    படம்    :     கர்ணன்

* பாடல்  :     ஓராறு முகமும் ஈராறு கரமும்

   படம்    :     டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்

* பாடல்  :     நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

    படம்    :     தியாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

*பாடல்:  தூங்காத விழிகள் ரெண்டு.

படம் :   அக்னி நட்சத்திரம்

 கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி

*பாடல்:   கண்ணுக்கு மை அழகு

  படம் :    புதிய முகம்

*பாடல்:   உன்னை ஒன்று கேட்பேன்

  படம்  :   புதிய பறவை

*பாடல்:   ஒரே பாடல் உன்னை அழைக்கும்

  படம்  :   எங்கிருந்தோ வந்தாள்.

*பாடல்:   பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்

  படம்  :   வருசம் பதினாறு.

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா,

நீலாம்பரி

*பாடல்:     நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி

படம்  :     கோபுர வாசலிலே

*பாடல்:     வசந்த காலங்கள் இசைந்து -  ஸ்ரீ ரஞ்சனி

 படம் :     ரயில் பயணங்களில்

*பாடல்:    மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி

  படம்  :    டூயட்

*பாடல்:    கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் - ஆனந்த பைரவி

  படம்  :    டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.

*பாடல்:    வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி - நீலாம்பரி

  படம்  :    சிப்பிக்குள் முத்து.

*பாடல்:  பூவே இளைய பூவே - நீலாம்பரி

  படம்  :  கோழி கூவுது

*பாடல்:  சித்திரம் பேசுதடி என் சிந்தை - கமாஸ்

  படம்  :  சபாஷ் மீனா

மனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்

*பாடல் :  காலம் மாறலாம் நம் காதல்  - அம்சத்வனி

  படம்  :   வாழ்க்கை

*பாடல்:   சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் - பீம்பிளாஸ்

  படம்  :   நல்லதொரு குடும்பம்

*பாடல்:   தோகை இளமயில் ஆடி வருகுது - அம்சத்வனி

  படம்  :   பயணங்கள் முடிவதில்லை

*பாடல்:   வா…வா…வா… கண்ணா வா -அம்சத்வனி

   படம்  :   வேலைக்காரன்

*பாடல்:    இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை - பீம்பிளாஸ்

  படம்  :    திருவிளையாடல்

*பாடல்:    பன்னிரு விழிகளிலே பணிவுடன்

  படம்  :    சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்

*பாடல்:   அழகென்ற சொல்லுக்கு முருகா

  படம்  :   டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்

*பாடல்:   வாராய் நீ வாராய்

  படம்  :  மந்திரி குமாரி

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் -  பகாடி,  ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம் - அடான

*பாடல்:  யார் தருவார் இந்த அரியாசனம் - அடான

படம்  :  சரஸ்வதி சபதம்

*பாடல்:  வருகிறார் உனைத் தேடி - அடான

படம் :  அம்பிகாபதி

மனதை வசீகரிக்க, மயக்க -  ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

*பாடல் :  தானா வந்த சந்தனமே - கரகரப்பிரியா

படம்   : ஊருவிட்டு ஊரு வந்து

*பாடல் : கம்பன் எங்கே போனான் - கரகரப்பிரியா

படம்  :  ஜாதிமல்லி

*பாடல்:  மெட்டுப்போடு மெட்டுப்போடு - ஆனந்த பைரவி

படம்  :  டூயட்

*பாடல்:  சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா - கரகரப்பிரியா

படம்  :  அழகன்

*பாடல்:  மாதவிப் பொன் மயிலாள் - கரகரப்பிரியா

படம் :  இருமலர்கள்

சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா

*பாடல்:  கனவு கண்டேன் நான் - முகாரி

படம்  :  பூம்புகார்

*பாடல்:  சொல்லடி அபிராமி

படம்  :  ஆதிபராசக்தி

பாடல்:  எந்தன் பொன் வண்ணமே அன்பு

படம்  :  நான் வாழவைப்பேன்

பாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர -ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர - நாஜீவதாரா

 எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?

திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு
வரையறை கூறுகிறார்.

நேரம் - ராகம்

5-6 மணி (காலை நேரம்)
பூபாளம்

6-7  மணிக்கு
பிலஹரி

7-8 மணிக்கு
தன்யாசி

8-10 மணிக்கு
ஆரபி, சாவேரி

10-11 மணிக்கு
மத்யமாவதி

11-12 மணிக்கு
மனிரங்கு

12-1 மணி (மதிய நேரம்)
ஸ்ரீராகம்

1-2 மணிக்கு
மாண்டு

2-3 மணிக்கு
பைரவி, கரகரப்பிரியா

3-4 மணிக்கு
கல்யாணி, யமுனா கல்யாணி

4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்

இப்படியான பல ராகங்கள், மனிதனுக்குள் இருக்கும் பல்வித நோய்களைக் குணப்படுத்துகிறது. . பாட்டைக் கேட்டல் நோய் தீரும்
என்பது கரும்பு தின்னக் கூலியா என்பது போல, நம் உடல் நலமும், மன நலமும் நம்மிடம் உள்ளது. நம் நோய்க்கான மருந்து இந்த
ராகங்களில் உள்ளது.

 இனிமை கூட்டும் பாடல்களையும், இசைகளையும்  ரசிப்போம்  அமைதி பெறுவோம்.

நன்றி....

ஆக்கம்:  *NTN சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!