மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.9.19

சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!


சட்டமும், நீதியும், மனிதாபிமானமும்!!!!

இந்தோனிஷியாவில் நீதிமன்றமொன்று சற்று வித்தியாசமான வழக்கொன்றை சந்தித்தது.........!!!

வயதான பெண்மணியொருவர், தோட்டமொன்றில் மரவள்ளிக்கிழங்கு திருடியதாக அத்தோட்ட பொறுப்பாளரினால் வழக்கு தொடரப்பட்டார்.

வழக்கை மிகக்கவனமாக செவியுற்ற நீதிபதி, அம்மூதாட்டியிடம் விசாரித்தபொழுது, அவர் இப்படி கூறினார்........:

"நான் களவாடியது உண்மைதான். எனது சிறிய பேரன் பசிக்கொடுமையால் வாடுகிறான். வேறுவழியின்றி இச்செயலை செய்தேன்." என்று தனது தவறை ஏற்றுக்கொண்டார்.

இதை கேட்டதும் நீதிபதி.........:

"என்னை மன்னிக்கவேண்டும். சட்டத்தின் முன்னால் நான் உங்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. எனவே உங்களுக்கு பத்து இலட்சம் ருபாய் (100 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கின்றேன். இதை கட்டத் தவறினால் இரண்டரை வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும்."

இவ்வாறு தீர்ப்பளித்துவிட்டு, தன்னுடைய நீதிபதி தொப்பியை கழற்றி அங்கு குழுமியிருந்த மக்களை பார்த்து......

"இங்குள்ள ஒவ்வொருவர்மீதும் நான் ஐம்பதுனாயிரம் ருபாய் (5 டாலர் ஐம்பது காசு) தண்டணையாக இடுகின்றேன். காரணம் !!!! இந்த நகரத்தில் ஒரு சிறு குழந்தை உணவின்றி பட்டினியால் வாடுவதற்கும், அதன் காரணமாக குழந்தையின் பாட்டி தவறான செயலை செய்யும் சூழலை உருவாக்கியதற்காகவும், உங்களுக்கு இத்தண்டணையை அளிக்கின்றேன்."
என்று உத்தரவிட்டு நீதிமன்ற உதவியாளர் மூலமாக, அங்குள்ள அனைவரிடமும் தண்டணைப் பணத்தை வசூலித்தார். இதில் தோட்டத்தின் பொறுப்பாளரும் அடங்குவார்.

இவ்வாறு சேர்ந்த 35 இலட்சம் ருபாயாவிலிருந்து (350 அமெரிக்க டாலர் ) 10 இலட்சம் ருபாயை நீதிமன்றத்திற்கு அளித்துவிட்டு, அம்மூதாட்டியை தண்டணையிலிருந்து விடுவித்து, மிகுதிப் பணத்தை அவரிடம் கொடுத்து, அவரது கஷ்டத்திற்கு பயன்படுத்தும்படி கூறி, அங்கிருந்து எழுந்து சென்றார்.!!!!!!!

சட்டம், மனிதாபிமானம், நீதி ஒன்றுக்கொன்று கைகோர்த்து தர்மத்தை நிலைக்கவைத்துவிட்டன !

நீதிபதி என்றால் இவர்போல சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒருங்கே கையாள வேண்டும்.முன்னுதாரணமான இந்த நீதிபதிக்கு வாழ்த்துக்கள்......
--------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

 1. The dollar calculation does not match Sir. 100 USD is nearly comes to7 k only.

  ReplyDelete
 2. நடைமுறை வாழ்க்கையில் உள்ள இன்னல்களையும் குற்றங்களையும் தீர்க்கும் அருமையான தீர்ப்பு.

  அருமை

  முருகன் ஜெயராமன்
  புதுச்சேரி

  ReplyDelete
 3. அற்புத மனிதர்கள்...................

  அருமை அருமை...........


  நன்றி ஐயா..............நன்றி.

  அன்புடன்
  விக்னசாயி.
  =======================

  ReplyDelete
 4. /////Blogger kmr.krishnan said...
  The dollar calculation does not match Sir. 100 USD is nearly comes to7 k only./////

  எனக்கும் வித்தியாசமாகத் தோன்றுகிறது. படித்ததை அப்படியே பதிவிட்டுள்ளேன். தீர்ப்பின் தன்மையை மட்டும் எடுத்துக்கொள்வ்வொம் கிருஷ்ணன் சார்!!!!!

  ReplyDelete
 5. /////Blogger வகுப்பறை said...
  நடைமுறை வாழ்க்கையில் உள்ள இன்னல்களையும் குற்றங்களையும் தீர்க்கும் அருமையான தீர்ப்பு.
  அருமை
  முருகன் ஜெயராமன்
  புதுச்சேரி////

  நல்லது. நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 6. ////Blogger vicknasai said...
  அற்புத மனிதர்கள்...................
  அருமை அருமை...........
  நன்றி ஐயா..............நன்றி.
  அன்புடன்
  விக்னசாயி.///////

  நல்லது. நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 7. /////Blogger Unknown said...
  This is true Sir/////

  நல்லது. நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com