மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label herbals. Show all posts
Showing posts with label herbals. Show all posts

5.9.19

வள்ளியம்மாள் என்னும் புற்று நோய் வைத்தியர்!!!!


வள்ளியம்மாள் என்னும் புற்று நோய் வைத்தியர்!!!!

நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று  இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் 
சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம்.

பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது 
இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால். 

பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். 

அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு 
நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம்  செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று 
பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர்.

பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம்.

கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு 
லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார்.

இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க 

கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக.. தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு 
நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை   இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார்.

இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார். 

இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது.

யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும்.

83448 88786‬: 
Address 

VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center,Ph: 09946097562, address: 

CHINDAKKI,MUKKALI,ATTAPADY,PALAKKAD-678581

Source: our Rotary club WhatsApp group இந்த தகவல் பலருக்கும் பயனளிக்கும் என்பதனால் பகிர்கிறேன்.

 நன்றி.மணிவண்ணன்.

மேலதிகத் தகவல்களுக்கு:
https://www.maybemaynot.com/blog/Valliammal-Gurukulam-Chindakki-Agali
=======================================================================
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.4.19

கடுக்காயின் மகத்துவம்!!!!


கடுக்காயின் மகத்துவம்!!!!

கடுக்காய்

தாவர இயல் பெயர்: Terminalia chebula

இதன் மறு பெயர்கள்: கற்காடக சிங்கி, அமிர்தம்

வளரும் இடங்கள்: கடுக்காயின் தாயகம் இந்தியா தான்.

பயன் தரும் பகுதிகள்: கனி

பொதுவான தகவல்கள் : கடுக்காய் மரத்தை பற்றிய பல குறிப்புகள் புராணத்தில் உள்ளன. இதன் மூலம் இந்த மரம் மிகப் பழமையான மரம் என்பதை நாம் அறியலாம். இதனை நிரூபிக்கும் விதத்தில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது.

புராணங்களில் கடுக்காய் :-

தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் சமயத்தில் அதில் இருந்து ஒரு துளி பூமியில் சிந்தி கடுக்காய் மரமாக உருவெடுத்ததாம். இப்படியாகப் புராணங்கள் இந்த மரத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.

கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மை உடையதாகும். வட மொழியில் 'மருத்துவரின் காதலி' என்று இதனை அழைக்கிறார்கள். நமது சித்த மருத்துவத்தில் 'திரிபாலா' என்ற கூட்டு மருந்தாக இதனைப் பயன்படுத்தி வருகிறோம். கடுக்காயை நம்மூர் நாட்டு மருந்துக்கு கடைகளில் மிக எளிதாகப் பெற்று விடலாம். கடுக்காயின் தோலை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பை நாம் பயன்படுத்தக் கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

கடுக்காயை மட்டுமே உண்டு உயிரோடு வாழலாம் என்று பழைய சித்த மருத்துவப் பாடல் கடுக்காயின் புகழை எடுத்து உரைக்கிறது. இன்னொரு சித்த மருத்துவப் பாடலில் காலை இஞ்சி, பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் 'கோலை ஊன்றி குறுகி நடப்பவரும் கூட காலை வீசி குலுங்கி நடப்பாராம்' என்று கடுக்காயின் சிறப்பை எடுத்து உரைக்கிறது.

அது மட்டும் அல்ல, கடுக்காய்த் துவையல் மலத்தைக் கட்டும். கடுக்காய் லேகியம் உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும். அதுவே ஒரு காயகல்ப மூலிகை தான். மொத்தத்தில் என்றும் இளமையுடன் இருந்து மரணத்தை தள்ளிப் போட கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். இது உடலில் இருக்கும் செல்கள் சீக்கிரத்தில் இறக்காமல் பார்த்துக் கொள்வதால் முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை நெருங்குவது இல்லை. ஏன் மரணமும் கூடத் தான்!

கடுக்காயின் இதர மருத்துவப் பயன்கள்:

* அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

* இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒரு தேக்கரண்டி கடுக்காய்ப் பொடி எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மறுநாள் மலம் இளகி வெளியேறும்.

* சிறு பிள்ளைகள் வயிற்று வலியால் அழும் சமயத்தில் கடுக்காயை இழைத்து வயிற்றில் பற்றுப் போட்டால் வயிற்று வலி பறந்து போய்விடும்.

* பதினைந்து கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, பதினைந்து கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

* இடுப்பில் படை உள்ளவர்கள் கடுக்காயை சந்தனக் கல்லில் அரைத்து படை உள்ள இடங்களில் தடவினால் படை நாளடைவில் மறைந்து விடும். நல்ல குணம் கிடைக்கும்.

* கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

* கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவை தான் திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் பெருகும்.

* கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* கடுக்காய்ப் பொடியைக் கொண்டு பல் விளக்கினால், பல் உறுதியாகும். ஈறில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.

* 25 கிராம் அளவுக்குக் கடுக்காய்ப் பொடியை எடுத்து, ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, அரை டம்ளர் நீராகச் சுண்டிய பின்னர் குடித்துவந்தால், கண் நோய்கள் குணமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

* 20 கிராம் கடுக்காய்ப் பொடியுடன், 20 கிராம் நெய் சேர்த்து வறுத்து, இந்துப்புடன் சேர்த்து இரண்டு கிராம் வீதம் மூன்று வேளைக்குச் சாப்பிட்டுவர, வயிற்றுப்புண் குணமாகும்.

* கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

* ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் அனைத்தையும் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

* மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

* தரம் இல்லாத குங்குமத்தை பயன்படுத்துவதால் நெற்றியில் புண் வந்து விடும். இந்நிலையில் கடுக்காயை இழைத்துப் பற்றுப் போட்டால் அந்தப் புண் ஆறிவிடும்.

* மூக்கில் இருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, இரத்தம் வருவது நின்று விடும்.

கடுக்காயின் இதர பொருளாதாரப் பயன்பாடுகள்:-

* கடுக்காய் மரத்தழைகளை கால் நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கடுக்காய் மரத்தில் இருந்து பிசின் எடுக்கலாம். பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப் பொருளாக இருக்கும் டானின் கடுக்காயில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. அதனைக் கொண்டு தோல் பதனிடலாம்.

* முன்னொரு காலங்களில் அரண்மனைகள், கோயில்கள் மற்றும் மாளிகைகளை கட்டும் சமயத்தில் சுண்ணாம்பில் கடுக்காயை ஊர வைத்து அத்தண்ணீர் கலந்து கட்டப்பட்டது. அதனால் தான் அவைகளில் இன்றும் கூட சில காலத்தையும் கடந்து நிற்கிறது.

படித்ததில் பிடித்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!