மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 771 - 780. Show all posts
Showing posts with label Lessons 771 - 780. Show all posts

17.3.14

Astrology: Quiz 46 யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 46 யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் - பகுதி நாற்பத்தியாறு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஆஹா...அது இல்லாமலா?

1. இது ஒரு அம்மணியின் ஜாதகம்
2. ஒருகாலத்தில் அகில உலகையும்  கலக்கிய பிரபலம்.

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================

13.3.14

Astrology: எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது


Astrology: எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது


Quiz 45 உங்களின் பதில்கள்

நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்தை வைத்து இரண்டு கேள்விகள் கேட்டிருந்தேன்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

சரியான விடை:
1. ஜாதகர் திருமணமானவர்
2. குடும்பவாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்தது. (இதைக் குறிப்பிட்டிருந்தாலே போதும்)

சிலர் பாதிக்கிணறைத் தாண்டினார்கள். அதாவது இரண்டில் ஒன்றிற்கு சரியான பதிலை அளித்திருந்தார்கள்

18 பேர்கள் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். மேலும் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். கலந்து கொள்வது முக்கியம் இல்லையா? அதனால் பாராட்டுக்கள்!சரியான பதில்களை எழுதி வெற்றி பெற்றவர்களின் பின்னூட்டங்களை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
இரண்டாம் கல்யாணம்!

வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒருமுறைதான் நடக்கும். பிறப்பும் ஒருமுறைதான். இறப்பும் ஒருமுறைதான்.அதுபோல் இன்னும் சில நிகழ்வுகளும் ஒருமுறை நடப்பதுதான் சிறப்பாக இருக்கும். உதாரணம் திருமணம்.

ஆனால் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக முதல் திருமணம் அவலத்தில் முடிந்துவிடுவது உண்டு! விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முதல் மனைவி இறந்து போயிருக்கலாம். அவர்களிடம் இந்த ஒருமுறை விதி எடுபடாது. தக்க காரணத்துடன் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை

ஆனால் அதற்கு ஒரு வயது வரம்பு உண்டு. அதிக பட்சம் நாற்பது வயது வரை அது சாத்தியப்படும். அதற்கு மேற்பட்ட வயது என்றால் ஒரு சிக்கல் உள்ளது. மணந்து கொள்ள ஒரு மகராசி வேண்டுமே?

பெரிய செல்வந்தர் என்றாலும், அவருடைய செல்வத்திற்காக அவரை மணந்துகொள்ள ஒருத்தி முன் வர வேண்டுமே?

ஜாதகருக்கு அவருடைய 32ஆவது வயதில் மனைவி இறந்து போய் விட்டாள். அவர் தன்னுடைய 40ஆவது வயதில் மறுமணத்திற்கு முயற்சி செய்தார்.

என்ன ஆயிற்று? சாத்தியமாயிற்றா?

ஜாதகம் எப்படியோ அப்படித்தானே ஆகும்?

வாருங்கள், அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!
------------------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்:



சிம்ம லக்கின ஜாதகம். ரோஹிணி நட்சத்திரக்காரர்.

1.லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்) இருந்தாலும் 3 கிரகங்களுடன் கிரகயுத்தத்தில்.
2.இரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு
3.களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
4.யோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.
5.சந்திரன் தனித்து அவயோகத்தில் உள்ளார்
6.மாந்தி 12ல். அயன சயன போக பாக்கிய யோகத்திற்கு வேட்டு வைத்துவிட்டான்.
7.பன்னிரெண்டிற்கு உரிய சந்திரன் (விரைய ஸ்தான அதிபதி) உச்சம் பெற்றுள்ளார்.
8.லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்.
மேற்கூறிய அவலங்கள் எல்லாம் சேர்ந்து ராகு திசை முடிவதற்குள் சங்கை ஊதிவிட்டன. மனைவியை மேலே அனுப்பி, ஜாதகருடைய குடும்ப வாழ்க்கையை முடித்துவிட்டார்கள்

அவருக்கு அவருடைய மத்திய வயதில் குரு மகா திசை நடந்து கொண்டிருந்தது. குரு பகவானும் சூரியனால் அஸ்தமித்துவிட்டார். அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது.

அவர் பல வழிகளில் முயற்சி செய்தும் உரிய பெண் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது திருமண ஆசை நிறைவேறவில்லை.இரண்டாவது திருமணத்திற்கு வேண்டிய அமைப்பு அவர் ஜாதகத்தில் இல்லை! அவருக்கு மீண்டும் ஒரு குடும்பம் அமையவில்லை!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------
1
Blogger thozhar pandian said...
    ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். 7ம் வீட்டு சனி அந்த வீட்டிற்கு 11ல். களத்திரகாரகர் சுக்கிரன் மூல திரிகோணத்தில். சிம்ம இலக்கினத்திற்கு யோக காரகர் செவ்வாயும் சொந்த வீட்டில் இருக்கிறார். 7ம் வீட்டை தனது விசேஷ பார்வையால் பார்க்கிறார்.
    ஆனால் ஜாதகருக்கு குழந்தை வரம் இல்லை. 5ல் சனி, 5ம் வீட்டுக்காரரும், புத்திர காரகருமான குரு பகவான் 5ம் வீட்டிற்கு 12ல் கிரக யுத்தத்தில் இருக்கிறார். மேலும் அயன சயன பாக்கியத்திற்கு உலை வைப்பது போல் 12ம் வீட்டில் மாந்தி. 2ம் வீட்டில் இராகு. இலக்கினம் மாந்திக்கும் இராகுவுக்கும் இடையில் சிக்கியுள்ளது. 2ம் வீட்டிற்கோ 5ம் வீட்டிற்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. இலக்கினாதிபதியும் கிரக யுத்தத்தில் சிக்கியிருக்கிறார். ஆக குடும்ப‌ வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சனை.
    Wednesday, March 12, 2014 5:44:00 AM
----------------------------------------------------------
2
////Blogger Srinivasa Rajulu.M said...
    1) அன்பர் 25 வயதளவிலேயே திருமணம் புரிந்தவர்.
    2) விவாக ரத்தானவர். மீண்டும் மணம் புரிந்திருப்பார்.
    களத்திர காரகன் சனி, த்ரிகோணத்தில் அமர்ந்துள்ளார். காரகன் சுக்கிரன் மூன்றாம் இடமானாலும் ஸ்வஸ்தான பலம் பெற்றதால் செவ்வாய் திசையில் உச்ச சந்திரன் புத்தியில் திருமணம் நடந்திருக்கும். களத்திரஸ்தானத்தைச் சனியும் செவ்வாயும் பார்ப்பதாலும், மறைவிடத்தில் பாபகர்த்தாரியில் சுக்கிரன் இருப்பதாலும், நவாம்சத்தில் ப்ருஹஸ்பதி நீச்சமானமானதாலும் பெற்றோரை மீறி, பிரச்சினைகளுடன் நடந்த திருமணமாக இருந்திருக்கும்.
    குடும்பஸ்தானத்தில் அமர்ந்த ராஹு திசை குரு புக்தியில் விவாகரத்து ஆகி மீண்டும் சனி புக்தியில் மறுமணம் புரிந்திருப்பார். குடும்பஸ்தானத்தை சனியானவர் பத்தாம் பார்வையில் பார்ப்பதாலும், ஸ்தானாதிபதி புதன் குடும்பஸ்தானத்திற்கு மூன்றில் பகைவன் செவ்வாயுடன் பகை வீட்டில் அமர்ந்ததாலும் குடும்ப வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்துதான் இருக்கும்.
    புத்திரஸ்தானத்தில் சனி; ஸ்தானாதிபதி குருவோ அவ்விடத்துக்குப் பன்னிரண்டில் (மேலும் நவாம்சத்தில் நீச்சனாகி செல்லாக்காசாகி விட்டார்). மேலும் பன்னிரண்டில் மாந்தி சயனபோகத்திற்கு வேட்டு வைத்துவிட்டார். எனவே குழந்தைகள் கிடையாது.
    Wednesday, March 12, 2014 7:25:00 AM/////
------------------------------------------
3
/////Blogger Sanjai said...
    1. திருமணம் நடைபெறும்.
    2. 7க்கு உடையவன் சனி, தன் வீட்டிற்கு 11ல் (லாப ஸ்தானத்தில்) உள்ளத்தால் திருமணம் உண்டு.
    3. குடும்ப வாழ்க்கையில் இடையூறு உண்டு.
    4. 2ம் வீட்டின் அதிபதி புதன், 4ம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாய் தொடர்பால் கெட்டுவிட்டார்.
    5. குடும்ப ஸ்தானம் (2ல்) ராகு இருந்து அந்த வீட்டை ஆஃப் (off) செய்து விட்டார்.
    Wednesday, March 12, 2014 8:39:00 AM/////
----------------------------------------------
4
////Blogger rm srithar said...
    Respected sir
    1. He got married :- 7th place Saturn is in Fifth house so he got married.
    2. Family life:- is not good they got separation due to Rahu is in Second house & Saturn is seeing second house.so family life spoiled.
    Regards
    rm.srithar
    Wednesday, March 12, 2014 9:07:00 AM/////
-------------------------------------------------
5
/////Blogger SIVA said...
    திருமணம் உண்டு , காதல் அல்லது கலப்பு திருமணம் .. கஷ்டங்கள் மிகுந்த குடும்ப வாழ்வு..கவர்ச்சி உடையவராதலாள் பெண்சுகம் ஆசைப்படுபவர்
    Wednesday, March 12, 2014 10:20:00 AM/////
---------------------------------------------------
6
////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 45 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
    1. களத்திரகாரகன் சுக்கிரன் 3ல் ஆட்சி பெற்றும், சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும் கண்டிப்பாகத் திருமணம் ஆகி இருக்கும். ஆனால் சனி 5ல் இருப்பதால் தாமதத் திருமணம். 7ம் அதிபதி 5ல் இருப்பது காதல் திருமணத்தைக் குறிக்கிறது.
    2. குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் ராகு நிம்மதியைக் கெடுப்பார், பண வசதி இருக்காது. 12ல் இருக்கும் மாந்தி இவரை எழ்மை நிலையில் வாடும்படி செய்திருப்பார். லக்கினத்துக்கு முன்னால் மாந்தியும், பின்னால் ராகுவும் இருப்பதால் பிரச்சினைகள் நிறைந்த குடும்ப வாழ்க்கை.
    Wednesday, March 12, 2014 10:33:00 AM/////
------------------------------------------------
7
////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Simma Lagnam Neengal solvadhu pole Herokalin Lagnam... Adhipathy Sooriyan 4-il and andha veetu adhipathy chevvai angey aatchi balam.
    Thirumanam Nadaipetra Jadhagam. 7-m adhipathy Sani lagnathirku 5-il and kumba veetirku 11-il and avaradhu veetai 3-m paarvayaga parkiraar. Yogadhipathy Chevvai 4-m paarvayaga 7-m veetai paarkiraar. karagan sukran 3-il aatchi balathudan amarvu adhanal thirumanam nadaipetru irukkum.
    Thirumana Valkai sandai sacharavugal niraindha valkayaga irukkum. 2-il raagu adhu kanni ragu adhanal nanmayai seidhalum, saniyin balatha 10-m paarvai 2-il kandippaga thirumana valkayil prechanaigal irukkum. 2-m adhipathy budhan 4-il avar veetirku 3-il.
    Thank You.
    Wednesday, March 12, 2014 11:12:00 AM/////
-------------------------------------------------
8
/////Blogger bg said...
    MA - aspect 7.
    SA - aspect 7.
    VE - in Papakarthari Yoga.
    All the above are against Marriage.
    This may lead to delay marriage.
    Marriage life
    Ra – in 2nd house.
    Ke – in 8 th house.
    JU aspect 8 th house.
    May lead to separation.
    Wednesday, March 12, 2014 11:20:00 AM/////
---------------------------------------------------
9
////Blogger Venkat Lakshmi said...
    உயர்திரு ஐயா: வணக்கம்.
    புதிர் 45க்கு விடை:களத்திரகாரன் சுக்கிரன் ஆட்சி ஏழாம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு பதினொன்றில் அதனால் திருமணம் முடிந்திருக்கும். இரண்டில் ராகு மற்றும் 2ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு மூன்றில் அதனால் குடும்ப வாழ்க்கை சொல்லும்படி இல்லை.
    Wednesday, March 12, 2014 12:59:00 PM/////
-----------------------------------------------------
10
/////Blogger jagvettri@gmail.com said...
    கல்யானம் நடக்கும் தாமதமாக சனியின் 3ஆம் பார்வையால். குடும்பம்தான் (ராவாக உள்ளது )கெட்டுள்ளது.2ண்டில் ராகு .
    Wednesday, March 12, 2014 1:55:00 PM/////
---------------------------------------------------------
11  
/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    1. The native got married late.
    7th lord saturn delays, since it has aspected by uccha chandran he got married.
    2.His family life is not happy. Divorced.
    2nd place ragu, and 2nd lord is hemmed between malefics.
    Wednesday, March 12, 2014 3:24:00 PM/////
-------------------------------------------------------------
12
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.45:
    1. He has married.
    2. Rich and having family problem.(Having no child)
    Reason for-1:
    i. Seventh lord is sitting 11th house from its own house and aspecting its own house as it's third aspect.
    ii. Seventh house or lord not associated and aspected by benefic planets.
    iii. Lagna lord,yoga karaka (Mars)and eleventh and second house lord are in good position. It's great.
    Hence, all the above reasons, he got married.
    Reason for -2:
    i)In second house Rahu is sitting and getting sixth lord saturn aspects as its tenth aspect. Its bad.
    ii) second house lord is sitting in good position.
    iii) Fifth house lord is sitting twelfth house from its own house and sixth house lord saturn is sitting in fifth house. it affects child birth.
    iv) Seventh lord and lagna lord are in 1/12th position and even second house lord also. Hence, it denotes not happy married life.
    v) lagna lord, eleventh house lord, yoga karaka and dhana karaga all are sitting in one house. It is good for wealth.
    In short, He married but there is problem in family life.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 12, 2014 7:13:00 PM////
-------------------------------------------------
13
/////Blogger Raja Murugan said...
    வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம், ஜாதகருக்கு திருமணம் ஆகியிருக்கும், ஆனால் குடும்பம் நிலைக்காது.ஜாதகருக்கு குழந்தைகளால் பிரச்சினை உண்டு. வருமானம் அதிகம் வந்தாலும், செலவாளி.
    Wednesday, March 12, 2014 7:37:00 PM////
-------------------------------------------------
14
////Blogger vanikumaran said...
    7ம் வீடு, 7ம் அதிபதி சனியின் 3ம் பார்வையில் உள்ளது. 6ம் அதிபதி சனியின் 3ம் பார்வையும் 7ம் வீட்டிற்கு உள்ளது.
    7ம் அதிபதி 5ம் வீட்டில் திரிகோணத்தில் உள்ளது.
    காரகன் சுக்கிரன் பாபகத்தாரி யோகத்தில். ஆனாலும் பாக்கியாதிபதி, சுகாதிபதி, யோகாதிபதியாகிய செவ்வாயின் வலுவான 4ம் பார்வையால், தீமை பயக்கும் சனி, செவ்வாயின் பார்வை 7ம் வீட்டிற்க்கு உள்ளதால் கால தாமதமாக திருமணம் நடந்திருக்கும்.
    2. குடும்ப வாழ்விற்க்கு 2ம் வீடு ராகுவால் பாதிக்கப்பட்டுள்ளது.
    2ம் அதிபதி புதன் அஸ்தங்கம் அடைந்த யோகாதிபதி செவ்வாய் மற்றும் அஸ்தங்கம் அடைந்த அஸ்டமாதிபதி குரு உடன் 4ம் இடத்தி நல்ல நிலையில் இருப்பது போல் இருப்பது போல் இருந்தாலும் விரையாதிபதி சந்திரனின் பார்வையில் கெட்டுள்ளது.
    காரகன் குருவும் விரையாதிபதி சந்திரனின் பார்வையில் கெட்டுள்ளது.
    மேலும் சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டில் உள்ளது. சுப கிரகங்களின் பார்வை 2ம் வீட்டிற்க்கு இல்லாததால் குடும்ப வாழ்விற்க்கு வழி இல்லை என்றே தோன்றுகிறது.
    கஜ கேசரி யோகம், சசிமங்கள, புத ஆதித்ய யோகம் உள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு உதவுமா என்பதை பற்றி விளக்கவும்
    Wednesday, March 12, 2014 8:04:00 PM/////
------------------------------------------------------
15
/////Blogger janani murugesan said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    ஜாதகருக்கு திருமணம் ஆகியிருக்கும். இரண்டு விவாகம்.7க்குடைய சனி 5ல். சுக்ரன் 3ல் ஆட்சி.இருப்பினும் சுக்ரன் பாபக்கர்த்தாரி யோகத்தில் சனி பகை வீட்டில் which leads to second marriage.2ல் ராகு,2ம் வீட்டிற்கு சனியின் பார்வை குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்காது.
    12க்குடையவன் 10ல். 12ல் மாந்தி திடீர் இழப்புகள் உண்டாகும்.Which also leads the native to suffer in financial crisis.
    Wednesday, March 12, 2014 8:44:00 PM//////
---------------------------------------------------
16
/////Blogger sundari said...
    வணக்கம் சார்,
    திருமணம் செய்துகொண்ர்டா சுக்கிரன் ஆட்சி 7ஆம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 11ல் மேலும் சந்திரன் உச்சம் ரிசப ராசிகாரர்கள எளிதில் திருமணம் செய்துகொள்வார்கள் காரண்ம் ஏதோ கிடைத்த்து பண்ணிகொள்வோம் மனநிறைவு
    பொறுவார்கள் மேலும் 2ஆம் அதிபதி புதன் 4ல் அதோடு குரு சூரியன் செவ்வயோடு சேர்ந்திருகிறார்
    2.குடும்பவாழ்கை பிரச்சனைநிறைந்திருக்கும் காரணம் 2ல் ராகு கன்னி றாகு அதோடு நாலில் செவவாய் அந்தபிரசசனைகளை சாமாளித்து குடும்பத்தை ஒட்டலாம் 8லிருக்கும் கேது ரொம்ப குணகேட்டைதருவார்.
    Wednesday, March 12, 2014 8:48:00 PM/////
----------------------------------------------------------
17
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ 45 வணக்கம்.
    1. தாமதமான காதல் திருமணம் எற்பட்டு பிறகு பிரிவில் முடிந்தது.
    2. குடும்ப வாழ்க்கை சில காலம் ம‌ட்டுமே.
    15.12.1959ஆம் தேதி காலை 12.00 மணிக்கு மிருகசீருஷத்தில் பிறந்த ஜாதகருக்கு சிம்ம லக்கினம்.
    யோக‌கார‌ன் செவ்வாய். கூட‌ புத‌னும் வ‌லிமையாய் இருப்ப‌து அவ‌சிய‌ம். ந‌வாம்ச‌த்தில் புத‌ன் உச்ச‌த்தில் வ‌லிமையாய் (40 ப‌ர‌ல்க‌ள்) இருப்ப‌து அதிர்ஷ்ட்ட‌ம்.
    இந்த சிம்ம லக்கின ஜாதகத்தில் லக்கினாதிபதி சூரியனுடன் செவ்வாய், புதன், குரு சேர்ந்து கேந்திரத்தில் இருப்பது அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கும் புதன் தசையில் புதன் புக்தியில் நிறைய செல்வங்கள் சேரும். இந்த‌ ஜாத‌க‌ர் கோடிஸ்வ‌ர‌ர்.
    ல‌க்கின‌ம் பாப‌க‌ர்தாரி தோஷ‌த்தில் உள்ள‌து. ஒரு ப‌க்க‌ம் மாந்தி ம‌ற்றோரு ப‌க்க‌ம் ராகு. ல‌க்கின‌ம் 37 ப‌ர‌ல்க‌ளுட‌ன் பலமாக உள்ள‌து.
    7ம் வீட்டு அதிப‌தி ச‌னி (1 ப‌ர‌ல்) திரிகோண‌த்தில் 5ம் வீட்டில் இருந்து கொண்டு 3ம் பார்வையாக‌ 7ம் வீட்டை பார்த‌தால் தாமதமாக காதல் திருமணம் எற்ப‌ட்ட‌து. சந்திரன் (6 பரல்கள்), சுக்கிரன் (5 பரல்கள்) சம பலத்தோடு இருப்பதால் காதல் திருமணம் எற்பட்டு நல்ல மனைவி அமைந்தார்..
    ஜாதகருக்கு குரு தசை சூரிய புக்தியில் 36 வயதில் காதல் திருமணம் நடந்தது.
    2ம் வீட்டின் அதிபதி புதன் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், ராசியில் 2ம் வீட்டு அதிபதி புதன் செவ்வாய், சூரியனுடன் கிரகயுத்ததில் இருப்பதாலும், குடும்ப வாழ்க்கை சில காலம் ம‌ட்டுமே. அதுவும் குரு தசை முடியும் வரை.
    அடுத்து வ‌ந்த‌ ச‌னி த‌சையில் ச‌னி புக்தியில் குடும்ப‌த்தில் பிரிவினை எற்ப‌ட்ட‌து. சனியின் 10ம் பார்வை 2ம் வீட்டின் மீதுள்ளது.மேலும் 2ம் வீட்டினில் உள்ள‌ ராகுவும், 8ம் வீட்டினில் உள்ள கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது இருப்பதாலும் குடும்ப வாழ்க்கையில் பிரிவு எற்ப‌ட்ட‌து. 2ம் வீட்டின் மீது எந்த சுப பார்வையும் இல்லை.சுக்கிரன் 3ம் வீட்டில் மறைவிடங்களில் இருப்பது திருமணத்திற்க்கு எதிரான அம்சங்கள்.
    6ம் வீட்டு அதிபதி வில்லான சனியும் அவரே. ஆகையினால், சனி தசை சனி புக்தியில் பிரிவு எற்பட்டது. 6ம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருந்தால்
    நோயுற்ற சேய்களை உடையவனாக இருப்பான்.
    குரு 5ம் வீட்டிற்க்கு 12ல் 4ம் வீட்டில் அம‌ர்ந்திருப்ப‌தால் குழ‌ந்தை பாக்கிய‌மும் இல்லை.
    சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது சூரியனை பார்பதால் ராஜ யோகம், சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது செவ்வாயை பார்பதால் சசிமங்கல‌ யோகம், சந்திரனின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது குருவை பார்பதால் கஜகேசரி ‌ யோகம் எற்பட்டது.
    4ம் வீட்டில் சூரியனும் புதனும் சேர்ந்து இருப்பதால் புத ஆதித்திய யோகம் எற்பட்டது.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, March 12, 2014 10:45:00 PM////
------------------------------------------------------
18
/////Blogger Dallas Kannan said...
    Respected sir
    Here is my quick analysis. I am not happy about it, but hope I will get at least pass mark (50%)
    1. 7th lord Sani is in 5th place (11th place), sukran in own house (but papakarthari yogam), 2nd lord is with laknathipathi and yogakaran.
    He is married but delayed. Strong 5th lord, Moon and sukra indicates Love as well.
    2. Rahu in 2nd house, Sani's look at 2nd house indicates quarrels and possible multiple marriages. Sani in 5th place and Guru/5th lord in 12th place from its house indicates Children related complications/issues.
    Wednesday, March 12, 2014 11:06:00 PM/////
----------------------------------------------------------   =========================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.3.14

Astrology: ஆசையினாலே மனம்.....அஞ்சுது கெஞ்சுது தினம்!

 
Astrology: ஆசையினாலே மனம்.....அஞ்சுது கெஞ்சுது தினம்!

Quiz No.45: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஐந்து

12.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்வி. அந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?

இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==========================================

11.3.14

Astrology: நீல வண்ணக் கண்ணா வாடா! நீயொரு முத்தம் தாடா!

 
Astrology:  நீல வண்ணக் கண்ணா வாடா! நீயொரு முத்தம் தாடா!

நவரத்தினக்கற்களுக்கு எப்போதுமே மக்களிடம் ஒரு மவுசு உண்டு. சிலர் என்ன என்று தெரியாமலேயே, அடுத்தவன், நண்பன் சொன்னான் என்பதற்காக பணத்தை செலவழித்து வாங்கி நவரத்தினங்களை அணிந்து கொள்வார்கள்.


சூரியனுக்கு மாணிக்கம் Ruby
சந்திரனுக்கு முத்து Pearl
செவ்வாய்க்கு பவளம் Coral
புதனுக்கு பச்சை - மரகதம் Emerald
குருவிற்கு புஷ்பராகம் Topaz
சுக்கிரனுக்கு வைரம் Diamond
சனீஷ்வரனுக்கு நீலம் Sapphire
ராகுவிற்கு கோமேதகம் Garnet
கேதுவிற்கு வைடூரியம் Cat's eye, Lapis lazuli

என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய கல்லைப் பண்டைய நூல்கள் குறிப்பிட்டுள்ளன. உலகம் முழுவதும் மக்கள் இக்கற்களை விருப்பத்துடன், விலையைப்பற்றிக் கவலைப் படாமல் வாங்கி அணிந்து கொள்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட கல்லை, அதுவும் நமக்கு உரிய கல்லை வாங்கி அணிந்து கொண்டால், நமது தலை எழுத்துமாறிவிடுமா?

அது எப்படி மாறும்?

வாங்கிவந்த வரம் என்ன ஆவது?

நமது பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே திருமணம் ஆகிவிடுமா? வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு உடனே நல்ல வேலை கிடைத்துவிடுமா? பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணம் கொட்ட ஆரம்பித்துவிடுமா? நோய் நொடிகளால் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நோய்கள் தீர்ந்துவிடுமா? குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்குபவர்களுக்கு உடனே குழந்தை பிறந்துவிடுமா? நூறுவயதுவரை வாழும் ஆசை உள்ளவர்களுக்கு, அவர்களின் ஆயுள் கூடிவிடுமா?

அதெல்லாம் ஒன்று கூட நடக்காது. அவரவர் ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும்!

சரி கற்களால் ஒரு பயனும் இல்லையா? இருக்கிறது. யார் யார் என்ன என்ன கல்லை அணிய வேண்டும். அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இன்னொரு நாள் கேலக்சி வகுப்பில் அலசுவோம். அதுபோல ஜாதகத்தில் உள்ள எட்டாம் இடத்து அதிபதி (அஷ்டமாதிபதி - eighth lord) ற்கு உரிய கல்லை ஜாதகன் அணியவே கூடாது. போட்டுத் தள்ளிவிடும். அதையும் அலசுவோம்

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். அதைச் சொல்ல வந்தவன்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்து எழுதியுள்ளேன்.


நன்றி தினமலர் (முன்பு வந்த செய்தி). படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படம் பெரிதாகத் தெரியும்

நீலக்கல் என்றால், அது சனியின் கல் என்று சொல்லி பலரும் ஓடி விடுவார்கள். ஆனால் ஒரு அன்பர், அரியவகை நீலக்கல் ஒன்றை 28 கோடி
(அம்மாடியோவ்) ரூபாய்களைக் கொடுத்து ஏலத்தில் (போட்டியில்) வாங்கியுள்ளார். முதலில் அதைப் படியுங்கள். மற்றவற்றை இன்னொரு நாள் பார்க்கலாம்

அன்புடன்
வாத்தியார்

=============================================================
 நமது வகுப்பறையின் மூத்த மாணவர் திருவாளர் கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் நேற்றைய பதிவிற்கு, அதாவது எண் 8 நடைப் பயிற்சிக்குக்
கூடுதல் தகவல்களைத் தன்னுடைய பின்னூட்டத்தில் கொடுத்திருந்தார். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக. அவர் சுட்டிக்காட்டியபடி நானும்
கூகுள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கி ஒரு காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் பாருங்கள்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================

6.3.14

Astrology: பறவைகளில் அவர் மணிப்புறா, பாடல்களில் அவர் தாலாட்டு!

 

Astrology: பறவைகளில் அவர் மணிப்புறா, பாடல்களில் அவர் தாலாட்டு!

Quiz 44 உங்களின் பதில்கள்!~

நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகம் கர்ம வீரர் திரு.காமராஜர் அவர்களின் ஜாதகம். வேண்டுமென்றேதான் கொடுத்திருந்தேன். முன்பே பதிவில் இட்ட, அலசிய ஜாதகம்தான். எத்தனை பேர்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? எத்தனை பேர்கள் கண்டு பிடிக்கின்றீர்கள் என்று தெரிந்து
கொள்ளும் ஆவலில்தான் மீண்டும் பதிவில் கொடுத்தேன்.

என் ஆர்வம் வீண்போகவில்லை! பத்துப் பேர்கள் அதைக் கண்டு பிடித்து, தங்களின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள்
அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அவர்களின் பின்னூட்டங்களை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அத்துடன் அலசலில் ஒரே ஒரு விடை
சரியாக வந்துள்ளது. அதையும் தொடர்ந்து கொடுத்துள்ளேன். அந்த அன்பருக்கும் எனது பாராட்டுக்கள்.கலந்துகொண்ட மற்ரவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
//////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    AS this chart looked very familiar, out of curiosity checked the owner of the chart and it is Mr. K. Kamaraj.
    Since I know who it is I am not participating in the test as it is cheating.
    Honestly, I would have failed even if I have participated in the test.
    Waiting for your analysis.
    Wednesday, March 05, 2014 5:41:00 AM/////

-----------------------------------------------
2
//////Blogger bala subramani said...
    அய்யா,தாங்கள் அளித்துள்ள ஜாதகம் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.அதை தாங்கள் அலசியதை நான் படித்துள்ளேன் அய்யா.பிறந்த
தேதி 15/07/1903.
    Wednesday, March 05, 2014 8:41:00 AM/////
-----------------------------------------------
3
/////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    புதிர் 44 க்குரிய விடை: (ஐயா இது முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களுடயது.) 1.ஜாதகர் படிக்கவில்லை.
    2.திருமணம் ஆகவில்லை.(இரண்டும் மறுக்கப்பட்டஜாதகம்)
    *கடகலக்னம்,கும்பராசி.லக்னம் சுபகர்தாரி யோகத்தில்.லக்னாதிபதி பாபகர்த்தாரி யோகத்தில்.லக்னாதிபதி சுபரான சுக்கிரன்
பார்வையில்.லக்கினம்
    சனியின் பார்வையில்.
    *8ல் லக்னாதிபதி மறைவு இளமையில் போராட்டமான,கடினமான‌
    வாழ்க்கையை தந்தது.
    *புதன்(கல்விக்காரகன்)உடன் சூரியன் 12ல் மறைவு.இளவ‌யதில் தந்தையையும் கல்வியையும் இழந்தார்.
    *களத்திர ஸ்தானாதிபதி சனி களத்திரஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று
    இருப்பினும் களத்திரதோசத்தை ஏபடுத்தி திருமணத்திற்க்கு தடை விதித்தார்.kalathira kaarakan sthaanathirku 8 il maraivu.
    *யோககாரகன் செவ்வாயுடன்(5மற்றும் 10க்குரியவன்)6,9க்குரியவனும்
    முழு சுபருமான குருவின் பார்வையையும் பெற்று(தர்மகர்மாதிபதி யோகமாக அமைந்து) வாழ்க்கையின் பின்பாதியில் தமிழக முதல்வராகவும்
ஆனார்.பல
    நல்ல திட்டங்களை நிறைவேற்றிய மாமனிதர்.
    *பிற்காலத்தில் கிங் மேக்கராகவும் திகழ்ந்தவர்.இறுதியில் அரசியல் துறவரம்
    பூண்டவர்.
    நன்றி. ல ரகுபதி
    Wednesday, March 05, 2014 10:01:00 AM/////
-----------------------------------------------
4
////Blogger janani murugesan said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகம் கர்மவீரர் காமராஜர் அவர்களின் ஜாதகம்.
    கல்வி, திருமணம் இரண்டும் மறுக்க பெற்ற ஜாதகம்.
    2க்குடைய சூரியன் 12ல். ஆரம்ப கல்வி, குடும்பம் அமையாமல் போயிற்று.
    7ல் 7,8க்குடைய சனி, சுக்ரன் 2ல் பகை வீட்டில் அதனால் திருமணம் ஆகவில்லை.
    Wednesday, March 05, 2014 11:27:00 AM////
----------------------------------------------
5
//////Blogger bg said...
    பிறந்த நாள் : ஜூலை 15 1903
    கர்ம வீரர் காமராசர் ஜாதகம்.
    புதிர் எண் 1 இல் கொடுக்கப்பட்டு உள்ளது.
    Strength
    Jupiter at 9 is a blessed horoscope.
    3 planets at own house.
    Saturn(7), Jupiter (9) and Mercury (12) at own house.
    8 th house @ papakarthari. It is good.
    12 th house@ Vipareetha raja yoga. It is also good.
    12 – putha aadhitya yoga also there.
    5 th lord and 9 th lord aspecting each other.
    Weakness
    Yogathipathi MA @ 3 with RA and MDI
    Education
    But as per horoscope
    4 th house – aspected by SA.
    Karaka ME at ninth house from 4th.
    4 th house owner also in 2 nd house.(11 nth place).
    So the person expected to get good education.
    Marriage
    SA – at 7nth place delays marriage.
    As karaka VE aspected by lagnathipathi MO , there is chance for marriage.
    Wednesday, March 05, 2014 12:59:00 PM/////
-----------------------------------------------
6
/////Blogger ravichandran said...   
Respected Sir,
    My answer for our today's Quiz No.44:
    1. He had dropped out of school ( in sixth std.)
    2. Marriage was never his cup of tea. ( He had never married) - Marriage was denied.
    Reason 1:
    i) Second house lord Sun is sitting twelfth house from lagna. Its bad.
    ii) Vidyakaraga also is sitting in twelfth house from lagna along with second house lord (Sun). Its worst.
    Because of above mentioned two reasons,his education was not blessed at primary level itself.
    Reason 2:
    i)In seventh house, Saturn is sitting. It's Kalathra dhosa.
    ii) Second house (family)lord is sitting twelfth house from lagna. Hence family life was not blessed. He had not married.
    In short, This is the horoscope of late Shri Kamarajar (Karma veerar)
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, March 05, 2014 1:25:00 PM//////
-----------------------------------------------
7
//////Blogger இளைய பல்லவன் said...
    ஐயா வணக்கம்!
    15.07.1903ல் பிறந்த கல்விக்கண் திறந்த பெருந்தலைவர், கர்ம வீரர் காமராஜரின் ஜாதகம்.
    இந்த ஜாதகம் ஏற்கனவே 19.8.2013 அன்று முதல் புதிராகக் கேட்கப்பட்டுள்ளது.
    பதில்கள்:-
    1. 11 வயதிற்கு மேல் பள்ளிக்குச் செல்லாதவர்.
    2. திருமணமாகாதவர்.
    அலசல்கள்:-
    1. கல்விக்குக் காரகன் புதன் 12ல் மறைவு. ஆட்சி வீடாயினும், சனியின் பார்வையால் பள்ளி செல்ல இயலாத நிலை. மேலும் 4ம் இடத்து அதிபதி
சுக்கிரன் பகை வீட்டில்.
    2. 7ம் வீட்டில் ஆட்சி பெற்ற சனி. 2ல் கடக லக்கினத்திற்கு பாதகாதிபதியான, களத்திரகாரகன் சுக்கிரன். இவர்கள் இருவரும் திருமண
யோகத்தைத் தடுத்து நிறுத்தினர்.
    ஆனால் மேற்கூறிய காரணங்களே, அவர் பெருந்தலைவராவதற்கும் பேச்சாற்றலில் சிறந்து விளங்கியதற்கும் காரணங்களாயின. 9ல் சேர்க்கை
பெற்ற குருவும் கேதுவும், அவருக்கு 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்தது.
    நன்றி அய்யா!!
    இளைய பல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்.
    Wednesday, March 05, 2014 4:16:00 PM//////
-------------------------------------------------
8
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ NO. 44
    வணக்கம்.
    1. திண்னை பள்ளிக்கூடத்தில் படித்தவர். 11 வது வயதில் படிப்பை நிருத்தியவர் (1914) கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்
    2. திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்
    15.07.1903 ஆம் தேதி காலை 7.00 மணிக்கு கடக லக்கினத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். திரு. காமராஜர் அவர்களுடைய ஜாதகம்.
    லக்கினாதிபதி சந்திரன்(4 பரல்) 8ல் பாபகர்தாரி யோகத்தில் (9ல் கேது, 7ல் சனி)
    கடக லக்கினகாரர்களுக்கு குரு எந்த வித யோகத்தையும் தரகூடியவர் அல்ல. நன்மை செய்ய கூடிய சுக்கிரனும் பகை வீட்டில் சென்று
அமர்ந்துவிட்டான்.
    யோககாரன் செவ்வாய் மட்டுமே. செவ்வாய் அவரை முதல் அமைச்சராக்கினான்.
    அந்த காலகட்டத்தில் 7 வயதில்தான் பள்ளிகூடம் செல்ல அனுமதிப்பார்கள்.இந்த ஜாதகருக்கு 7 வயது முதல் 25 வயது வரை சனி தசை. இந்த
ஜாதகருக்கு சனி வக்கிரம்.
    4ம் வீட்டு அதிபதி சுக்கிரன் பகை வீடான சிம்ம ராசியில் 2ம் வீட்டில். கர்மகாரகன் சனிக்கு 8ல் சுக்கிரன் இருக்கலாகாது (8/6) .கல்விக்கு
தடங்கள். சனியின் 10ம் பார்வை 4ம் வீட்டின் மீது இருப்பதால் கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.
    5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 3ம் வீட்டில் ராகு, மாந்தியுடன் கூட்டு. 9ம் வீட்டினில் உள்ள வக்கிரமான் குருவின் 7ம் பார்வையால் கல்விக்கு மேலும்
தடங்கள். வில்லனான 6ம் வீட்டு அதிபதி குருவின் பார்வை 5ம் வீட்டு அதிபதி மீது.
    2ம் வீட்டு அதிபதி சூரியன் லக்கினத்திற்க்கு 12ல் மேலும் காரகன் புதனுடன் கூட்டு 12ல். கல்விக்கான நஷ்ட்டம்.
    ஆகவே கல்வி மறுக்கப்பட்ட ஜாதகம்.
    திருமண யோகத்திற்க்கு எதிரான அமைப்புகள்.
    லக்கினாதிபதி 8ல் பாபகர்தாரி தோஷம், 7ம் வீட்டு அதிபதி சனி 7ல், 2ம் வீட்டு அதிபதி சூரியன் 12ல் பலம் குறைந்து 3 பரல்களுடன்,
களத்திரகாரகன் சுக்கிரன் பகை வீட்டில்.
    சனி, சுக்கிரன் 8 / 6 பார்வை 2ம் வீட்டின்மீது இருப்பதால் குடும்பம் இருக்காது.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Wednesday, March 05, 2014 5:01:00 PM/////
------------------------------------------------
9
/////Blogger dhana lakshmi said...
    Quiz-44

    1. கல்விகாரகன் புதன் 12-ல், அது கல்விக்கு உகந்த இடமல்ல. லக்கினாதிபதி மறைவு, சூரியன் 2மிடம் குடும்பம்,வாக்கு இடத்திற்கு உரியவரும்
மறைவு. எனவே பள்ளிபடிப்பு தடைபட்டிருக்கும்.
    2.திருமணம் இல்லை. 7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் குடும்ப வாழ்க்கை இல்லை.
    இந்த ஜாதகத்திற்குரியவர் கர்மவீரர் காமராஜர் - 15-07-1903
    காமராஜரைப் பற்றி அறியாதவர் யார் இருக்க முடியும்?
    சுயநலமில்லாமல், மக்களுக்காகப் பாடுபட்டவர்.
    Regards
    J.Dhanalakshmi
    Wednesday, March 05, 2014 11:15:00 PM/////
------------------------------------------------
10
Blogger thozhar pandian said...
    கர்ம வீரரின் ஜாதகம். வாத்தியார் அய்யா மன்னிக்கவும். இந்த ஜாதகத்தை ஏற்கனவே பார்த்ததினாலும் இவர் எனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி என்பதாலும், எனக்கு தெரிந்துவிட்டது. அதனால் எனக்கு இந்த புதிருக்கு மதிப்பெண்கள் வேண்டாம். இருந்தாலும் அலச
விரும்புகிறேன்.
    இலக்கினாதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் போராட்டமான வாழ்க்கை. 7 வயதில் இருந்து 26 வயது வரை ஜாதகருக்கு சனி தசை. அதன் பிறகு
வரும் புதன் தசையில் இருந்துதான் ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு ஒளி பிறந்திருக்கும்.
    4ம் வீட்டுக்கார சுக்கிரன் அந்த வீட்டிற்கு 11ல் இருந்தாலும் கல்விகாரகர் புதன் ஆட்சி வீட்டில் இருந்தாலும் இலக்கினத்திற்கு 12ல் மறைவு. 4ம்
வீட்டிற்கோ, 4ம் வீட்டு அதிபதிக்கோ சுப கிரக பார்வை இல்லை. அதனால் கல்வி இல்லை.
    7ல் சனி. சொந்த வீட்டில் இருந்தாலும் களத்திரகாரகர் சுக்கிரன் 7ம் வீட்டிற்கு 8ல் மறைவு. 7ம் வீட்டிற்கு சுப கிரக பார்வை இல்லை. 2ல்
சுக்கிரன் இருந்தாலும் 2ம் வீட்டுக்கார சூரியன் இலக்கினத்திற்கு 12ல் மறைவு. அதனால் திருமணம் நடைபெறவில்லை.
    கடக இலக்கினம். அரசியலில் ஈடுபட்டார். 9ல் குரு இலக்கினத்தை தனது விசேஷ பார்வையில் வைத்திருக்கிறார். அழியா புகழ் பெற்றார்.
    கல்வி, திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம். என்ன இருந்தால் என்ன, இல்லை என்றால் என்ன‌, கர்ம வீரரை போல வருமா? வாழ்க கர்ம வீரரின்
புகழ்.
    Thursday, March 06, 2014 1:42:00 AM
--------------------------------------------------
==============================================================
அலசலில் வந்த சரியான விடை:
1
/////Blogger Srinivasa Rajulu.M said...
    ஆம். அய்யன் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டவர்; லக்னாதிபதி எட்டில் பாபகர்த்தாரியில் மாட்டியிருக்கிறார். சுக்கிரன் பார்வையினால் ஓரளவு
நிம்மதி.
    1) படிக்கும் காலத்தில் வந்த வக்ர சனியும், பன்னிரண்டில் மறைந்த கல்வி காரகனும் ஆரம்பக் கல்வியைக்கூட கொடுக்கவில்லை. ஆனால்
இனிமையாக உலக விஷயங்களைப் பேசும் ஆற்றலை இரண்டில் நின்ற சுக்கிரன் கொடுத்தார்.
    2) ஏழில் நின்ற சனியும், பகை வீட்டில் நின்ற களத்திர காரகனும், அடுத்தடுத்து வந்த (களத்திரத்திற்குச்) சாதகமில்லா தசைகளும் திருமணத்தைத் தரவில்லை.
    மூன்றாம் இடத்தில் நின்ற க்ரூர கிரகங்கள் அசாத்திய தைரியத்தைக் கொடுத்திருக்கும்.
    Wednesday, March 05, 2014 8:23:00 AM/////
-------------------------------------------------------
வாத்தியாரின் அலசல்:


 அவர் கடக லக்கினக்காரர். அரசியலுக்கு என்று உள்ள லக்கினம் அது!

லக்கினாதிபதி சந்திரன் எட்டில். இளம் பருவத்தில் வறுமையில் வாடினார். அல்லல் உற்றார். போராட்டமான  வாழ்க்கை அமைந்தது.

சூரியன் 12 அமர்ந்ததால் இளம் வயதில் தந்தையைப் பறிகொடுக்க நேர்ந்தது.
'அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம்”
என்னும் பழமொழி அவர் விஷயத்தில் உண்மையானது.

அத்துடன் கல்விகாரகன் புதனும் 12ல் இருப்பதைக் கவனியுங்கள். அது கல்விகாரகனுக்கு உகந்த இடமல்ல!

7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி,  மக்கள் என்று குடும்ப வாழ்க்கை இல்லாமல் போயிற்று.

ஜாதகத்தின் பெரும் பலம். ஆட்சி பலம் பெற்ற குருவின் பார்வையில் லக்கினம்  இருந்தது. அது அவருக்குப் பல  வழிகளில் கை கொடுத்தது.

ஜாதகத்தில் புத ஆதித்ய யோகமும், குரு சண்டாள யோகமும் (குரு + கேது கூட்டணி) இருப்பதைக்  கவனியுங்கள். அவை இரண்டும் அவருக்கு புத்தி சாதுர்யத்தையும்,சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும்  பெற்றுத்தந்ததுடன், எடுத்த காரியங்களில் வெற்றிகளையும் பெற்றுத்தந்தன!

இரண்டு அதி முக்கிய கிரகங்கள் (குரு மற்றும் சனி) ஆட்சி பலத்துடன் இருப்பதைப் பாருங்கள்.இரண்டும்  திரிகோண, கேந்திர பலத்துடன் இருப்பதையும் பாருங்கள் அவைகள் அவருக்குத் தலமைப் பதவியைப் பெற்றுத்  தந்தன.

கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய் வெற்றி ஸ்தானமான 3 ஆம்
இடத்தில் அமர்ந்து, 9ஆம் இடமான  பாக்கியஸ்தானத்தைப் பார்த்ததால் பல
யோகங்களயும் வெற்றிகளையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.

பாக்கியஸ்தானத்தில் குருவுடன் அமர்ந்த கேது தன் திசையில் அவரை மேன்மைப் படுத்தி தசை முடியும் சமயத்தில் அவருக்கு முதல் அமைச்சர் பதவியைத் தந்துவிட்டுப்போனது!

இதில் நாம் கவனிக்க வேண்டிய செய்தி யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் -அதுவும் குறிப்பாக ராகு  கேதுக்கள் ஜாதகனுக்கு பலத்த யோகங்களைப் பெற்றுத்தரும்

அன்புடன்
வாத்தியார்

______________________________________________

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.3.14

Astrology: Quiz: காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம்!

 
Astrology: Quiz: காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம்! 

Quiz No.44: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி நான்கு

5.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்வி. அந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அய்யனின் ஜாதகம். இளமைக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்ட ஜாதகம். இளமைக் காலத்தில் கண் கலங்காத நிலைதான் முக்கியம். வயதான காலத்தில் மனம் பக்குவப்பட்டுவிடும். எதற்கும் கலங்காத நிலை வந்துவிடும்.

கேள்விகள்:
1. ஜாதகரின் கல்வி நிலைப்பாட்டை அலசி எழுதுங்கள். அதாவது அவர் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டுவரை படித்தவரா அல்லது பட்டதாரியா? அல்லது உயர்நிலை பட்டதாரியா? என்று எழுதுங்கள்
2.ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா? அல்லது திருமணம் கூடி வந்து, ஜாதகர் தன் வாழ்க்கைத் துணையை, காலங்களில் அவள் வசந்தம்.கலைகளிலே அவள் ஓவியம்! என்று வர்ணித்துப்பாடிய ஜாதகமா?

இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

 அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.3.14

Astrology: இன்றைய திருமணச் சந்தையில் இளம் பெண்களின் நிலை!

 
Astrology: இன்றைய திருமணச் சந்தையில் இளம் பெண்களின் நிலை!

கவியரசர் கண்ணதாசன் 1963ஆம் ஆண்டில் வெளிவந்த புரட்சித்தலைவரின் ஆனந்த ஜோதி திரைப்படத்தில் ‘பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?’ என்ற அசத்தலான பாடலை எழுதியிருப்பார். கருத்தும் கானமும் கைகோர்த்த பாடல் அது!

அந்தப் பாடலின் சரணத்தில் வரும் வரியைக் கீழே கொடுத்துள்ளேன்:

”அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?”


பெண்களுக்கு மட்டும்தான் ஆசைகளா? ஆண்களுக்கு இல்லையா?

ஆசை பொதுவானதுதான். அதற்கு ஆண், பெண் என்ற பேதம் இல்லை!

ஆனால் ஆண்களைவிட பெண்களுக்கு ஆசை சற்று அதிகமாக இருக்கும். அதைத்தான் கவியரசர் தன் பாடலில் வலியுறுத்திச் சொல்லியுள்ளார்.

ஆசைப்படலாம். ஆனால் அதிகமான ஆசைகள் இருக்கக்கூடாது.

இன்றையத் தேதியில் உள்ள இளம் பெண்களின் ஆசை என்ன?

அதிகம் சம்பாதிக்கும் ஆண்களை விரும்புகிறார்களாம் அவர்கள்.

சரி, இன்றையத் தேதியில் உள்ள இளைஞர்கள் எதை விரும்புகிறார்களாம்?

அழகான பெண்களை விரும்புகிறார்களாம்.

இதை நான் தனித்துச் சொல்லவில்லை. பத்திரிக்கை ஒன்றின் ஆய்வு சொல்கிறது. நீங்கள் அறிந்துகொள்வதற்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்!

-------------------------------------------------------------------------
சரி, சொல்லவந்த செய்திக்கு வருகிறேன்.

அழகு மட்டும் போதுமா? குணம் முக்கியமில்லையா? நல்ல குடும்பப் பின்னணி முக்கியமில்லையா? அழகு எத்தனை நாட்களுக்கு இருக்கும்? எப்போது காலாவதியாகும்?

’கோடி ஒரு வெள்ளை, குமரி ஒரு பிள்ளை’ என்று கிராமங்களில் சொவார்கள். கோடித் துணிகள் - அதாவது புதுத் துணிகள் ஒரு வெள்ளாவி வரைக்கும்தான் - அதாவது ஒருமுறை சலவைக்குப் போய்விட்டுவரும் வரைக்கும்தான் புதிதாக இருக்கும். அதுபோல ஒரு பெண்ணின் அழகு அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகும்வரைதான் இருக்கும். ஆகவே குணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அது போல ஒரு இளைஞன் அதிகம் சம்பாதிப்பவனாக இருந்தால் மட்டும் போதுமா? நல்ல குணம், பண்பு, பழக்க வழக்கக்கங்கள் உடையவனாக இருக்க வேண்டமா? மாதம் ஆறு லட்ச ரூபாய்கள் சம்பளம் பெறுவதெல்லாம் இப்போது சாதாரணமாகிவிட்டது. அந்த அளவு சம்பாதிப்பவன் ஒழுக்க முடையவனாகவும் இருக்க வேண்டாமா? தண்ணிப் பார்ட்டியாக, தொடுப்பு உடையவனாக இருந்தால் என்ன ஆகும்? ஆகவே இளம்பெண்கள் சம்பாத்தியத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் மற்றவற்ரையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

சரி, ஜாதகத்தில் அது தெரியுமா?

ஏன் தெரியாது? லக்கினாதிபதி,மனகாரகன் மற்றும் ஐந்தாம் வீட்டுக்காரன் ஆகியோரை வைத்து எல்லாம் தெரியவரும். அதை இன்னொரு நாள் கேலக்சி2007 வகுப்பறையில் அலசுவோம். கட் அண்ட் பேஸ்ட் ஆசாமிகள் சுற்றிக்கொண்டிருக்கும் இடம் இது. ஆகவே இங்கே வேண்டாம்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
====================================================

27.2.14

Astrology: எது முக்கியம்?

 
ஸ்ரீ காசி விஸ்வநாதர்
Astrology: எது முக்கியம்?

எது நமக்கு முக்கியம்?

இறைநம்பிக்கை முக்கியம். இறைவன் நம்மைப் பார்த்துகொள்வான். நம்மை வழி நடத்துவான் என்ற நம்பிக்கை முக்கியம். முதலில் நம்பிக்கை முக்கியம். அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சி மற்றும் நிம்மதியுடையதாக இருக்கும்.

துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் விதிப்படி, அதாவது விதித்தபடி நமக்கு வந்து சேருகின்றன.

அவற்றை நீக்க முடியாது. தவிர்க்க முடியாது. யாரிடமும் அவற்றைத் தள்ளிவிட முடியாது. நாம்தான் அவற்றை அனுபவித்தாக வேண்டும். வேலைக்கு ஆள்வைத்து அவற்றை அனுபவிக்கச் சொல்ல முடியாது. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அல்லது எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அவனவன் விதியை அவனவன்தான் அனுபவிக்க வேண்டும்

அதைத்தான் வள்ளுவப் பெருந்தகை 10 குறள்களின் மூலம் தனது மறை நூலில் தெள்ளத் தெளிவாக எழுதியுள்ளார். அறத்துப் பாலில் உள்ள (38ஆவது அதிகாரம்) 10 குறள்களையும் படித்துப் பாருங்கள். ஊழ்வினை என்னும் அதிகாரம் அது. (ஊழ்வினை =  Fate, Destiny)

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் ஊழ்வினை அதிகாரத்துடன் தனது அறத்துப்பால் பகுதியை முடித்துள்ளார். ஊழ்வினை அதிகாரத்தைக் கடைசியில் வைத்ததற்குக் காரணமே அதை நமக்கு வலியுறுத்திச் சொல்வதற்குத்தான்.

என்னதான் கடவுளை வணங்கினாலும், நடப்பது விதிப்படிதான் நடக்கும் என்ற செய்தியை நீங்கள் அறிந்து கொள்ளவே அவ்வாறு அது வகைப்படுத்தப் பெற்றிருக்கிறது.

அதுவும் அந்த அதிகாரத்தில் உள்ள கடைசி குறள் மண்டையில் அடித்துச் சொல்வதுபோல அடித்துச் சொல்லப்பட்டிருக்கும்.

17.2.2009 அன்று விதியை மதியால் வெல்ல முடியுமா? என்ற எனது ஆக்கத்தைப் பதிவில் வெளியிட்டுள்ளேன். அதன் சுட்டி:

http://classroom2007.blogspot.in/2009/02/blog-post_17.html  

அதைப் படித்துப் பாருங்கள் தெளிவு பிறக்கும்

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்றால், எதற்காக இறைவனைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

விதியைத் தாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் நமக்குக் கொடுப்பார்.
-----------------------------------------------------------
இறை நம்பிக்கைக்கு அடுத்தபடி பிரார்த்தனையின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

பிரார்த்தனை செய்யும்போது நமக்கு விதியைத் தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும். எந்தச் சூழலையும், சூழ்நிலையையும் தாக்குப் பிடிக்கும் சக்தி முக்கியமல்லவா?

சிவ வழிபாடுதான் முதன்மையானது.

உலகமெல்லாம் சிவமயம் என்பதை வலியுறுத்தித்தான், ‘உ, சிவமயம்’ என்று எதையும் துவங்குகிறோம்.

Everything is Eshwara; Everywhere is Eshwara. You can not separate Eshwara from Space, earth and time!" என்று சுவாமி தயானந்த சரஸ்வதி அற்புதமாகச் சொல்வார்.  


The creator and the creations are one and the same என்றும் சொல்வார்.

அதைத்தான் கிராமத்து மக்கள்,’ இறைவன் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான்’ என்று எளிமையாக, அறிந்ததைச் சொல்வார்கள்!

ஜோதிடம் என்ன சொல்கிறது? இறைவணக்கத்தை வலியுறுத்திச் சொல்கிறது. உங்கள் துன்பங்கள் நீங்க ஒவ்வொரு மாதமும் உங்கள் ஜன்ம நட்சத்திரத் தன்று சிவபெருமானை பிரார்த்தனை செய்யச் சொல்கிறது. சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வணங்கச் சொல்கிறது.

சந்தர்ப்பம், சூழ்நிலை, வசிக்கும் நாடுகள், நகரங்களைப் பொறுத்து சிலருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காமல் இருக்கலாம். அவர்கள் வீட்டில் விளக்கேற்றி அல்லது இருக்கும் இடத்தில் இருந்தே பிரார்த்தனை செய்யலாம். ஒரு மூன்று நிமிடம் பிரார்த்தனை செய்தாலும் போதும். ’ஓம் நமச்சிவாயா’ என்ற சிவமந்திரத்தைப் 16 முறைகள் சொன்னால் போதும்.

அறிவுபூர்வமாக ஆதாரத்தைக் கேட்டுக்கொண்டிருக்காமல், பிரார்த்தனையை மட்டும் செய்யுங்கள்.

என்ன நடக்கிறது என்று பிறகு பாருங்கள்!
-------------------------------------------
எதற்காக இந்தக் கட்டுரை?

இன்று மகாசிவராத்திரி. இன்று சிவனை வழிபடுவது மிகவும் விசேடமானது. அதை வலியுறுத்திச் சொல்லவே - இன்று இதைப் பதிவிட்டுள்ளேன்.
மகா சிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். ஒவ்வொரு

மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி நாள் ஆகும் அதனை நினைவில் வையுங்கள்.

அன்புடன்,
வாத்தியார்

------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.2.14

Astrology: பிள்ளையாடி வர செல்வம் கோடி பெரும் நல்ல காலம் வருக!

 
Astrology: பிள்ளையாடி வர செல்வம் கோடி பெரும் நல்ல காலம் வருக!

    கையோடு கை சேர்க்கும் காலங்களே
    கல்யாண சங்கீதம் பாடுங்களேன்   
    மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம் வருக
    மன்னனோடு ஒரு ராணிபோல வரும் இன்ப நாளும் வருக

    கையோடு கை சேர்க்கும் காலங்களே
    கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

    பெண் வாழ்வில் செல்வாக்கு தன்மானமே
    தன்மானம்தான் காக்கும் கல்யாணமே
    நான் கண்ணீரை வெல்லும் ஒரு பெண்ணாக வேண்டும்
    நான் பொன்னோடும் பொட்டோடும் தாயாக வேண்டும்
    வேண்டும்...வேண்டும்...ஹும்ம்ம்ம் ஹு ஹும்ம்ம்
    பிள்ளையாடி வர செல்வம் கோடி பெரும் நல்ல காலம் வருக
    உள்ளம் போல இணை ஒன்று சேர்ந்துவிட தெய்வம் காவல் தருக

    கையோடு கை சேர்க்கும் காலங்களே
    கல்யாண சங்கீதம் பாடுங்களேன்

      --------- கவியரசர் கண்ணதாசன்
----------------------------------------------------------------
நேற்றைய புதிரில் ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கொடுத்து,ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் மறுக்கப்பெற்ற
ஜாதகமா? அல்லது திருமணம் கூடி வந்து, ஜாதகி எதிர்பார்த்த ‘மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம்’ கிடைக்கப்பெற்ற ஜாதகமா?  என்று
கேட்டு, உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று சொல்லியிருந்தேன். பலரும் - மொத்தம் 33 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள்

சரியான விடை:
1. ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது.
2. ஆனால் தாமதமாக நடைபெற்றது
அந்தப் பெண்ணிற்கு 30 வயதுவரை திருமணம் கூடி வரவில்லை. அதனால் அவளுடைய திருமணம் தாமதக் கணக்கில் வருகிறது!

ஜாதகம் என்ன சொல்கிறது?

ஏழாம் வீட்டின் மேல் 3 & 12ஆம் அதிபதியான குருவின் பார்வை.
ஏழாம் வீட்டுக்காரன் (அதிபதி) சந்திரன் 3ல். ஆறில் அமர்ந்திருக்கும் சனியின் பார்வையில் (10ஆம் பார்வையாக)
ஏழாம் வீட்டின் மேல் 12ஆம் அதிபதியின் பார்வை
ஏழாம் அதிபதியைச் சனி பார்த்ததால், திருமணம் தாமதமாகும்.

மகர லக்கினத்திற்கு யோககாரகன் சுக்கிரன் (அவன் மகர லக்கினத்திற்கு 5 மற்றும் 10ஆம் இடங்களுக்கு உரியவன். ஒரு கோணத்திற்கும், ஒரு
கேந்திரந்தித்திற்கும் உரியவன் யோககாரகன் என்பதை நினைவில் வையுங்கள்)

யோககாரகன் நல்ல நிலைமையில் லக்கினத்தில் இருப்பதுடன், ஏழாம் வீட்டையும் பார்ப்பதால், ஜாதகிக்கு  எப்படியும் திருமணத்தை நல்லபடியாக
நடத்திவைக்கக் கடமைப்பட்டவன். அத்துடன் அவன் களத்திரகாரகன் வேறு  (Authority for marriage)

அவனும், அவனுடன் இருக்கும் குருவும் சேர்ந்து, கோச்சாரத்தில் கடகத்திற்கு வந்தபோது ஜாம்ஜாமென்று அம்மணியின் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். அம்மணியின் 32ஆவது வயதில் அவளுடைய திருமணம் நடைபெற்றது.
-------------------------------------------------------------------------------
1. காசைச் சுண்டிப்போட்டுச் சொல்வதைப் போல,  ஒற்றைவரியில் திருமணம் நடைபெற்றிருக்கும் என்று சொன்னவர்களுக்கு 25 மதிப்பெண்கள்
2. திருமணம் நடைபெற்றிருக்கும் என்று காரணங்களுடன் சொன்னவர்களுக்கு 50 மதிப்பெண்கள்
3. திருமணம் தாமதமாக நடைபெற்றிருக்கும் என்று சொன்னவர்களுக்கு 75 மதிப்பெண்கள்
4. தாமத்திற்கு உரிய விளக்கத்தையும் சொன்னவர்களுக்கு 100 மதிப்பெண்கள்.
மதிப்பெண்களை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள். மேல் படிப்புப் படிக்கவும், வேலையில் சேரவும் இந்த மதிப்பண்கள் நிச்சயம் உதவாது. ஆகவே
அதை நான் போடவில்லை:-))))


கலந்து கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அத்துடன் மதிப்பெண்களைப் பெற்று இந்தப் பதிவில் இடம் பிடித்த மற்ற கண்மணிகளுக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------
1
///////Blogger Sanjai said...
    1. சுகாதிபதி செவ்வாய் ஆட்சி - 4ம் பார்வை 7ம் வீட்டில்
    2. லக்கினதில் neesa குரு / சுக்ரன் - 7ம் பார்வை 7ம் வீட்டில்
    3. திருமணம் உண்டு
    4. ஆனால் தாமத திருமணம்

    5. இளமை திருமணம் நல்லதல்ல
    6. Not a happy married life.
    Tuesday, February 25, 2014 8:08:00 AM/////
---------------------------------------------------------------------
2
  ////////Blogger KJ said...
    She s beautiful. She could got love failure when she was young. Bcz sukran with neesa guru(pagai graha).
    After that she got good family life means arranged marriage. chandran 7th house owner aspects 9th house.
    Tuesday, February 25, 2014 10:15:00 AM
---------------------------------------------------------- 

//////Blogger Hari Krishna said...
    லக்னாதிபதியும் குடும்ப ஸ்தான அதிபதியுமான சனி 6 இல் மறைவு. களத்திர ஸ்தானாதிபதி (சந்திரன்) 3 - இல் மறைவு. ஆனாலும்
களத்திரகாரகன் ஆன சுக்கிரன் லக்னத்தில் இருப்பதாலும் லக்னத்தில் உள்ள குருவும் சுக்கிரனும் தங்களுடைய 7 ஆம் பார்வையால் களத்திர
ஸ்தானத்தை பார்ப்பதாலும் திருமணத்தை கண்டிப்பாக நடத்திவிடுவார்கள் ஆனால் சற்று தாமதமாக. மனோகாரகனே களத்திர காரகனாகி 3 இல்
மறைந்ததால், மனத்திற்கு திருப்தி இல்லாமலும் சுய விருப்பமில்லாமலும்தான் இந்த திருமணம் நடக்கும் / நடந்திருக்கும்.
    Tuesday, February 25, 2014 10:32:00 AM//////
---------------------------------------------------------------
4
//////Blogger Saravanan J said...
    Dear Sir,
    For quiz no.43 here I present my answer,
    Ascendent lord is present in 6th house. Which is not so good position, along with sani kethu accompanied.
    (3rd and 12th )lord is neecham , neecha guru is accompanied with sukran lord.
    Sani bhagavan seeing chandran that it shows late marriage.
    Mars is in 4th house, That it shows mangaldosha. Mars moves towards kethu and kethu moves towards mars that also showed it as late marriage.
    Thanks and regards
    Saravanan
    Tuesday, February 25, 2014 10:42:00 AM/////
-----------------------------------------------------------
5
 //////Blogger S.Namasu said...
    Dear Sir:
    My answer for Quiz no 43:-
    Jathakikku thirumanam nadanthirukkum (due to sukiran & guru). But his husband either divorce(due to kudumba shtham weak) or dead (due to mangalya shatam weak)
    Reasons:-
    1ST HOUSE (LAGNA) ANALYSIS:(Self)
    a.Makara langnam, Meena rasi, Lagna athipathi Sani in 6th house (Mithunam natpu) with Kethu. And his 3rd Parvai on 8th house (Mangalya shthanam), 10th Parvai on 3rd house Chanthiran (Samam) (Kalathira shthana athipathi).
    7TH HOUSE ANALYSIS:(Kalathiram)
    b.Kalathira karakan Sukiran (Natpu) in Lagnam with Kuru (Neesam), and both parvai on 7th house (Kalathira shthanam).
    c.Chevvai (Atchi) 4th parvai on 7th house.
    8TH HOUSE ANALYSIS:(Mangalyam)
    d.Mangalya shthana (8) athipathi Suriyan (Natpu) in 11th house with Puthan (samam) 6th & 9th lord. Also Chevvai (Atchi) 8th Parvai from 4th house.
    2ND HOUSE ANALYSIS:(Kudumbam)
    e.Kudumba shthana (2) athipathi Sani in 6th house with kethu. And no planet parvai on 2nd house.
    Tuesday, February 25, 2014 10:46:00 AM/////
------------------------------------------------------------
6
/////Blogger Muthukrishnan Prakash said...
    ayya,Kandippaaga thirumanam nadanthirukkum. Kaaranam, guru matrum sukkiranin 7m paarvai 7m veettil.Idhu nalla amaippu. Sevvayin 4m paarvai 7m veettil irundhalum, guru matrum kalathirakaaragan sukkiranin 7m paarvai 7m veettil ulladhaal sevvaayin 4m paarvayaal prachinai illai.

Ivar revathy nakshathiramaaga irundhaal, ivarukku sukkira thisaiyil sukkira buthiyilaye thirumanam aagiyirukkum. Aanal, thirumanam pala prachinaigalukkidayil thaan nadanthirukkum. Kaaranam, Lagnathipathy 6il kethuvudan. Athumattumallaamal, lagnathipathy sanibhagavan,

chandranai than 10m paarvaiyil paarkindraar. Adhu, thirumanam matrum thirumana vaazhkkaikku nalladhalla. Idharkku valu serkkum padiyaaga, 7m athipathy chandranin mel endha suba graha paarvaiyum illai.
    anbudan,
    mu.prakaash.
    Tuesday, February 25, 2014 11:12:00 AM/////
--------------------------------------------------------------

/////Blogger Chandrasekharan said...
    Respected sir.
    sani 6-il amarvadhu sirappu endralum avar lagnadhipathy adhanal avar 6-il amarndadhu sari illai.
    12-m adhipathy & 3-m adhipathy guru lagnam eyriyadhu oru periya drawback. 12-m adhipathy lagnam endrabodhu avar avar veetirku 2-il amargirar.
    7-m adhipathy chandran Sani-in paarvayil ullar.
    pengalukku kalathira. karagan sevvai endru padithadaga nyabagam...adhanal sevvai patri parthalum... chevvai 4-il aatchi petru 7-i balatha parvai seigirar .. sukranum 7-i parkirar... Thirumanam marukkapetra jadhagam Illai.    pengal ilamayil kan kalanguvadarku 3 mukkiya karanam..1. Thirumanam nadaiperamai...2. Kulandhai piravamai 3. Vidavai kolam. 3karanamumey indha jadhagathil (en kangalukku) thenpadavillai. Piragu yaen ivar kankalanginaar endru theriyavillai...
    Thank You.
    Tuesday, February 25, 2014 11:32:00 AM/////
----------------------------------------------------------------
8
//////Blogger Balakrishna Sampath said...
    The 12th and 3rd house planet guru stays in lagna is not good for the 7th house, even though yogakaran's vision falls on the 7th house is good sign and also lagnathipathy's vision fallas on the 7th lord is also good sign to promote is marriage life. this jathaka scored 66 marks out of 100.
    so this is not a marriage denied jathakam.
    Tuesday, February 25, 2014 12:24:00 PM/////
-----------------------------------------------------------
9
/////Blogger jagvettri@gmail.com said...
    திருமணம் குரு, சுக்கிரனால்,2ஆம் வீடு சுப கர்தாரி யோகம் ஆகையால் நடைபெற்றிருக்கும் .ஆனால் குடும்ப விரிசல் உறுதி 7அம் அதிபதி 3இல்
லக்னாதிபதி 6இல்.4இல் செவ்வாய் அனாதையாக இருப்பார் கையில் பணத்துடன்.
    Tuesday, February 25, 2014 12:25:00 PM/////
--------------------------------------------------------------   
10
//////Blogger Sakthivel K said...
    dear sir.....
    intha lady thirumanam aanaval
    bye.....
    Tuesday, February 25, 2014 1:36:00 PM//////
--------------------------------------------------------------
11
/////Blogger Ravi said...
    This girl born in Ekadasi and The guru is in neecha banga.
    and liekly to get married in the coming months. as the guru transit from lagna, surya and chandra are conducive in next few months. And 7th lord from lagna and chandra are good and not affected.
    Tuesday, February 25, 2014 3:40:00 PM////
--------------------------------------------------------------
12  
//////Blogger bg said...
    மகர லக்கினம் யோககாரன் சுக்கிரன் லக்கினத்தில் இருந்து ஏழாம் இடத்தை பார்க்கிறார்.
    சுப கிரகம் குரு நீசம் ஆனாலும் பார்க்கிறார்.
    ஏழாம் இடம் குரு + சுக்கிரன் பார்வை பெறுகிறது.
    லக்கினத்தில் இருக்கும் சுக்கிரன் நல்ல வாழ்க்கை துணை கிடைக்க செய்வார்.
    ஏழாம்அதிபதி சந்திரன் குரு வீட்டில் ( 7 இல் இருந்து திரிகோணத்தில் இருக்கிறார்.)
    அகவே திருமணம் நடைபெறும்.
    Tuesday, February 25, 2014 4:22:00 PM/////
---------------------------------------------------------------
13  
/////Blogger vijayarangaraju venkidasamy said...
    தாமதத் திருமணம் .களத்திரஸ்தானாதிபதி சந்திரன் 3 ல் அந்த இடத்திற்கு 9 ல். லக்கினத்தில் உள்ள நீசமான குரு மற்றும் சுக்கிரனின் பார்வை
களத்திரஸ்தானத்தின் மீது. vvr raju
    Tuesday, February 25, 2014 4:40:00 PM//////
-------------------------------------------------------------
14
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.43:
    The native of the given horoscope has MARRIED.
    Reason 1: (Pros)
    i) Seventh house getting aspects of Jupiter and Yogakaraga Venus.
    ii) None of the bad planets aspect and placement to this house(7th).
    iii) Seventh house lord is sitting ninth house from its own house.
    iv) Lagna lord and seventh house lord are in 1/10th position.
    v) Second house is in subha kathiri yoga. This house lord is sitting fifth place from its own house.
    She has married because of all the above reasons.
    In short, (cons)
    i)Babakathiri yoga is there in this horoscope and Kedhu is the flag bearer as well as lagna lord is in sixth place along with kedhu. Hence the native has suffered in her early age by disease, frustration and lost things due to these planets aspect twelfth house.
    ii) Fifth house is affected by babakathiri yoga as well as sixth and eigth house lord's aspect as well as authority for child (Jupiter) is debilitated. It shows bad sign for childern matter.
    With kind regards,
    Ravichandran M.
    Tuesday, February 25, 2014 6:59:00 PM/////
-------------------------------------------------------------
15
/////Blogger venkatesh r said...
    ஐயா, வணக்கம்.
    ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும். ஆனால் கணவனால் கிடைக்கும் சுகம் மறுக்கப்பட்டு இருக்கும்.குழந்தை பிறக்காமல் கண் கலங்கியிருப்பார்.
    மீன ராசி, மகர லக்ன ஜாதகி. களத்திர பாவம் இரண்டு சுபர்கள் பார்வை பெற்று உள்ளது. குடும்ப ஸ்தானமான கும்பம் சுபகர்த்தாரி யோகத்தில்
உள்ளது. ஜாதகிக்கு சுக்ர தசை, சந்திர புத்தி அல்லது குரு புத்தியில் திருமணம் நடந்து இருக்கும். ஆனால் களத்திராதிபதி 3லும், லக்னாதிபதி 6ல்
கேதுவுடன் மறைவு மற்றும் 12ல் ராகு இருப்பதால் கட்டில் சுகம் கிடைத்து இருக்காது. தவிர 5ம் வீடு பாப கர்த்தாரியின் பிடியிலும், 6க்கு அதிபதி
புதன் அஷ்டமாதிபதி சூரிய்னின் நேர் பார்வையில் உள்ளது.அதனால் ஜாதகி குழந்தை பிறக்காமல் கண் கலங்கியிருப்பார். வயதாக ஆக அந்த
குறையை பெரிது படித்தியிருக்காமாட்டார்.
    Tuesday, February 25, 2014 8:01:00 PM/////
--------------------------------------------------------
16 
/////Blogger Bagavathi S said...
    7th house: Native will get married since Authority of Marriage & Yogakara of Magara rasi, Venus is in lagna
    Marriage life will have difficulties and get seperated from husband since
    Punarpoo dhosa is there
    Mars seeing 7th house.
    12th place owner Jupiter[in debiliated position] sees 7th house
    Tuesday, February 25, 2014 8:03:00 PM/////
---------------------------------------------------------------
17  
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    QUIZ NO.43
    வணக்கம்
    32 வ‌ய‌தில் தாமதமாக திரும‌ண‌ம் ந‌டைபெற்று, பிற‌கு திரும‌ண‌ பிரிவு எற்ப‌ட்ட‌து.
    5.12.1973 ஆம் தேதி காலை 10.18.09 மணிக்கு மகர லக்கினத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த‌ ஜாதகி.
    களத்திரகாரகன் சுக்கிரனின்(5 பரல்) 7ம் பார்வை 7ம் வீட்டில், நீசமான குருவின் (5 பரல்) 7ம் பார்வையும் 7ம் வீட்டில். 7ம் வீட்டு அதிபதி சந்திரன்

3ம் வீட்டில். இது 7ம் வீட்டிற்க்கு 9ம் வீடு. ஆகையினால், அழகான கணவன் அமைவான்.
    மகர லக்கினத்திற்கு யோககாரனான சுக்கிரன் (5 பரல்) தன்னுடைய சுக்கிர தசை சந்திர புக்தியில் 32 வயதில் திருமணம் நடைபெற்று, அதே

சுக்கிர தசை சனி புக்தியில் திருமண பிரிவு எற்பட்டது.
    திருமண பிரிவுக்கான காரணங்கள்
    1. லக்கினாதிபதி சனி 6ல் கேதுவுடன் கூட்டு
    2. சனியின் 7ம் பார்வை சுக்கிர‌ன் மீது 8/6 நில‌மை
    3. சனியின் 10ம் பார்வை 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 3ம் வீட்டில்
    4. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீசம்
    5. 7ம் வீட்டின் மீது தீய கிரக செவ்வாயின் 4ம் பார்வை
    6. அஷ்ட்ட‌வ‌ர்க‌த்தில் 7ம் வீடு 22 ப‌ர‌ல்க‌ள்
    குடும்ப வாழ்க்கை அமையவில்லை. - காரணங்கள்
    2ம் வீட்டில் மாந்தி
    2ம் வீட்டு அதிபதி 6ல்
    2ம் வீட்டின் மீது எந்த‌ சுப‌ கிர‌க‌ங்க‌ளின் பார்வையும் இல்லை
    2ம் வீட்டில் அஷ்டவர்க பர‌ல்கள் 25
    குழந்தை அமைய வாய்ப்பில்லை
    5ம் வீட்டின் மீது உள்ள பாப‌க‌ர்தாரி தோஷ‌த்தை, சுக்கிர‌னின் 5ம் சுப பார்வை யால் நீக்குகிற‌து. மேலும்,காரகன் குரு நீசம்
    5ம் வீட்டின் மீது சூரியனின் 7ம் பார்வை
    5ம் வீட்டின் மீது 6ம் வீட்டு அதிப‌தி புத‌னின் பார்வையால் சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் எற்படும்.
    லக்கினாதிபதி சனி(6 பரல்), 2ம் வீட்டு அதிபதியும் சனி, 6ல் கேதுவுடன் கூட்டு சேர்ந்து,லக்கினத்தை 6/8 நிலைபார்ததால்,ஜாதகியின் 18 -26
வயது வரை கேது தசையில் சம்மந்தமாக கடுமையான நோய் எற்பட்டு சுக்கிர தசை வந்தவுடன் மீண்டு வந்தார்.இந்த அமைப்பு 12ம் வீட்டை
பார்த்ததால் பல விதமான் விரயங்கள் எற்பட்டது.மேலும், 12ல் ராகுவினால் மண போராட்டம், அமைதி இழந்து துன்பபட நேரிட்டது.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Tuesday, February 25, 2014 9:58:00 PM//////
------------------------------------------------------------------
18 
/////Blogger A. Anitha said...
    லக்னத்தில் அமைந்த குரு 7-ம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் நிச்சயம் திருமணம் உண்டு. ஏனெனில் வேறு எந்த தீய பலன்
இருந்தாலும் குரு பலம் என்பது நல்லதையே செய்யும்.
    மேலும் 5,9-ம் இடங்களுக்கும் குரு பார்வை உள்ளது நல்ல நிலையே. (கேந்திர பார்வை). குடும்ப ஸ்தானத்திற்கு (2 ம் வீடு) முன்னும் பின்னும்
நல்ல கிரகங்கள் இருப்பதும் நல்லதே. 2-ம் வீட்டில் 24 பரல்கள். 7-ம் வீட்டில் 23 பரல்கள். சராசரி 28-க்கு குறைவு என்றாலும் லக்னத்தில் இருக்கும்
34 பரல்கள் குறையை நிவர்த்தி செய்யும். எது எப்படி இருப்பினும் குரு பார்வை அதுவும் தனித்தில்லாது சுக்கிரன் லக்னத்தோடு இணைந்த குரு
கண்டிப்பாய் மங்கல்யம் கொடுக்கும்.
    // எனக்கு ஜோதிட அறிவு அதிகம் கிடையாது. இப்போது தான் தங்கள் தளம் வாயிலாக பாலப் பாடம் பயில்கிறேன். ஜாதகத்தை ஆராய்ச்சி
பண்ணி பதில் எழுதவில்லை. பாலப்பாட அறிவில் மட்டுமே எழுதுகிறேன். பிழைகளை மன்னிக்கவும்.//
    Tuesday, February 25, 2014 10:06:00 PM/////
---------------------------------------------------
19  
/////Blogger Ariyaputhiran Natarajan said...
    . ஐயா,
    தரப்பட்டுள்ள ஜாதகம் மகர லக்ன ஜாதகம். செவ்வாய்
    தோஷம் இல்லை. ஏனெனில் செவ்வாய் ஆட்சி. ஏழாம் அதிபதி சந்திரன் மூன்றில்.ஆனால், சனியின் பார்வை. புனர்பூ தோஷம் என்றும்
    சொல்லலாம். ஆனால், சனி லக்னாதிபதி. லக்னாதிபதி ஏழாம் அதிபதி பார்வை, மற்றும் லக்னத்தில் உள்ள குரு, சுக்கிரன் ஜாதகிக்கு திருமணம்
சரியான வயதில் நடக்கவும்
, வாழ்க்கை சுகமாக நடக்கவும் உதவுவர்.
    அ.நடராஜன்
    Tuesday, February 25, 2014 10:36:00 PM/////
----------------------------------------------------------------------
20  
/////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    புதிர் 43க்கான விடை:மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்லகாலம் கிடைக்கப் பெற்ற ஜாதகம்.
    *ஜாதகம் மகர லக்னம்;மீன ராசி.லக்கினத்தில் சுபர்களான குரு (12,3க்குரியவன்,நீச்சம்)சுக்கிரன்(யோகாதிபதி)இருவரும் களத்திரஸ்தானத்தை
பார்வை செய்வது சிறப்பு.ஜாதகி அழகான தோற்றம்,நற்பண்புகள் உள்ளவர்.
    *லக்னாதிபதி சனிபகவான் கேதுவுடன் இணைந்து 6ல் மறைவு ,எனவே இளமையில் போராட்டங்களையும் கஷ்டங்களையுமசந்தித்திருப்பார்.
மேலும் விரையாதிபதி லக்கினத்தில் அமர்ந்தது பெரும் குறை.
    *கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்க்கு ஏற்ப குரு(நீச்சம்) களத்திர காரகனுடன் இணைந்து களத்திர ஸ்தானத்தையும்,பூர்வபுண்ணிய மற்றும் பாக்கியஸ்தானம் ஆகியவற்றையும் பார்வை செய்வது சிறப்பு. எனவே மண வாழ்க்கை அமைந்தது
    *7க்குரியவன்,(வளர்பிறை)சந்திரன் அந்த ஸ்தானத்திற்க்கு 9மிடத்தில் சுபர் ஸ்தானத்தில் அமர்ந்து 9மிடமான பாக்கிய ஸ்தானத்தை பார்வை
செய்வது சிறப்பு.
    *2மிடம் சுபகர்த்தாரி யோகத்தில் இருப்பதால் குடும்ப வாழ்க்கை அமைந் திடும்.பூர்வபுண்ணிய ஸ்தானம் பாபகர்தாரியோகத்தில்,இருப்பினும்
பாக்கியாதி
    பதி புதன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை பார்வை செய்வது நன்மை.
    * எனவே இளமையில் கஷ்டத்தையும் திருமணத்திற்க்கு பின் நல்ல கணவர் நல்ல வாழ்க்கையும் அமைந்திருக்கும் .
    *7மிடத்தை செவ்வாய் பார்பதும் 7மதிபதியை சனி பார்ப்பதும் குறைதான்.
    சரியான விடையினை தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா
    நன்றி ல ரகுபதி
    Tuesday, February 25, 2014 11:30:00 PM///////
--------------------------------------------------------
21  
/////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Little challenging for me. We can see it in either way. I can give both good and bad (hoping teacher will give marks for the derivations, like in Mathematics :))
    Good:
    1. 2nd house is in "Subakarthari Yokam"
    2. 7th house has Guru and sukra Parvai
    3. 7th lord is in 9th place (friendly) from 7th place
    4. 9 th lord is in 11the place
    Bad:
    1. Guru is neecham and in Laknam. In general, if 12th lord is in lagna, his/her life will not be useful for anyone
    2. Mars is looking at 7th place
    3. Sani is looking at 7th lord Moon
    4. 9th lord (he is 6th lord also) is with 8th lord.
    5. Laknathipathi is in 6th place with Kethu.
    But solely base on Subakarthari yogam, I am going to say that she got married and got good family life even though Mars and Sani gave some problems.
    Tuesday, February 25, 2014 11:46:00 PM//////
--------------------------------------------------------
22
    ////அருண் குமார்
    7th lord moon in 3rd house ,due to aspect of jupiter and venus in
    with lagna she has been married , but due to aspect of mars there be
    problem in marriage life.
    And astavarga point low in 7th house, may cause problem.
    Regards
    arunkumar
    thiruchirampalam
    Wednesday, February 26, 2014 1:36:00 AM///////
------------------------------------------------------------------
23Blogger thozhar pandian said...
இலக்கினத்தில் குரு இருப்பது ஒரு வரம். ஆனாலும் குரு இந்த ஜாதகத்திற்கு 3 மற்றும் 12க்கு உரியவர். களத்திரகாரகர் சுக்கிரன் இந்த இலக்கினத்திற்கு யோககாரகர். அவர்கள் இருவரும் சேர்ந்து இலக்கினத்தில் இருந்து 7ம் இடத்தை பார்வையிடுகின்றனர். 7க்குரிய சந்திரன் 3ல், 7ம் வீட்டிற்கு 9ல். 7ம் வீட்டிற்கு 4ல் இருக்கும் செவ்வாயின் பார்வை உண்டு. திருமணம் உண்டு. ஆனால் தாமத திருமணம்.
Wednesday, February 26, 2014 2:56:00 AM
--------------------------------------------------------------------------------------Delete
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.2.14

Astrology: மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம் வருக!

 
 Astrology: மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம் வருக! 

Quiz No.43: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்திமூன்று

25.2.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்.
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். இளமைக் காலத்தில் அவளைக் கண் கலங்க வைத்த ஜாதகம். இளமைக் காலத்தில் கண் கலங்காத நிலைதான் முக்கியம். வயதான காலத்தில் மனம் பக்குவப்பட்டுவிடும். எதற்கும் கலங்காத நிலை வந்துவிடும்.

கேள்வி இதுதான்: ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா? அல்லது திருமணம் கூடி வந்து, ஜாதகி எதிர்பார்த்த ‘மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம்’ கிடைக்கப்பெற்ற ஜாதகமா?


அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!