மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.3.14

Astrology: இன்றைய திருமணச் சந்தையில் இளம் பெண்களின் நிலை!

 
Astrology: இன்றைய திருமணச் சந்தையில் இளம் பெண்களின் நிலை!

கவியரசர் கண்ணதாசன் 1963ஆம் ஆண்டில் வெளிவந்த புரட்சித்தலைவரின் ஆனந்த ஜோதி திரைப்படத்தில் ‘பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?’ என்ற அசத்தலான பாடலை எழுதியிருப்பார். கருத்தும் கானமும் கைகோர்த்த பாடல் அது!

அந்தப் பாடலின் சரணத்தில் வரும் வரியைக் கீழே கொடுத்துள்ளேன்:

”அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?”


பெண்களுக்கு மட்டும்தான் ஆசைகளா? ஆண்களுக்கு இல்லையா?

ஆசை பொதுவானதுதான். அதற்கு ஆண், பெண் என்ற பேதம் இல்லை!

ஆனால் ஆண்களைவிட பெண்களுக்கு ஆசை சற்று அதிகமாக இருக்கும். அதைத்தான் கவியரசர் தன் பாடலில் வலியுறுத்திச் சொல்லியுள்ளார்.

ஆசைப்படலாம். ஆனால் அதிகமான ஆசைகள் இருக்கக்கூடாது.

இன்றையத் தேதியில் உள்ள இளம் பெண்களின் ஆசை என்ன?

அதிகம் சம்பாதிக்கும் ஆண்களை விரும்புகிறார்களாம் அவர்கள்.

சரி, இன்றையத் தேதியில் உள்ள இளைஞர்கள் எதை விரும்புகிறார்களாம்?

அழகான பெண்களை விரும்புகிறார்களாம்.

இதை நான் தனித்துச் சொல்லவில்லை. பத்திரிக்கை ஒன்றின் ஆய்வு சொல்கிறது. நீங்கள் அறிந்துகொள்வதற்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்!

-------------------------------------------------------------------------
சரி, சொல்லவந்த செய்திக்கு வருகிறேன்.

அழகு மட்டும் போதுமா? குணம் முக்கியமில்லையா? நல்ல குடும்பப் பின்னணி முக்கியமில்லையா? அழகு எத்தனை நாட்களுக்கு இருக்கும்? எப்போது காலாவதியாகும்?

’கோடி ஒரு வெள்ளை, குமரி ஒரு பிள்ளை’ என்று கிராமங்களில் சொவார்கள். கோடித் துணிகள் - அதாவது புதுத் துணிகள் ஒரு வெள்ளாவி வரைக்கும்தான் - அதாவது ஒருமுறை சலவைக்குப் போய்விட்டுவரும் வரைக்கும்தான் புதிதாக இருக்கும். அதுபோல ஒரு பெண்ணின் அழகு அவள் ஒரு குழந்தைக்குத் தாயாகும்வரைதான் இருக்கும். ஆகவே குணத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அது போல ஒரு இளைஞன் அதிகம் சம்பாதிப்பவனாக இருந்தால் மட்டும் போதுமா? நல்ல குணம், பண்பு, பழக்க வழக்கக்கங்கள் உடையவனாக இருக்க வேண்டமா? மாதம் ஆறு லட்ச ரூபாய்கள் சம்பளம் பெறுவதெல்லாம் இப்போது சாதாரணமாகிவிட்டது. அந்த அளவு சம்பாதிப்பவன் ஒழுக்க முடையவனாகவும் இருக்க வேண்டாமா? தண்ணிப் பார்ட்டியாக, தொடுப்பு உடையவனாக இருந்தால் என்ன ஆகும்? ஆகவே இளம்பெண்கள் சம்பாத்தியத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் மற்றவற்ரையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

சரி, ஜாதகத்தில் அது தெரியுமா?

ஏன் தெரியாது? லக்கினாதிபதி,மனகாரகன் மற்றும் ஐந்தாம் வீட்டுக்காரன் ஆகியோரை வைத்து எல்லாம் தெரியவரும். அதை இன்னொரு நாள் கேலக்சி2007 வகுப்பறையில் அலசுவோம். கட் அண்ட் பேஸ்ட் ஆசாமிகள் சுற்றிக்கொண்டிருக்கும் இடம் இது. ஆகவே இங்கே வேண்டாம்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
====================================================

8 comments:

 1. galaxcy 2007 il join panna yenna seiya vendum...?

  ReplyDelete
 2. ayya vanakam galaxy 2007 la naan yeppadi join panna?

  ReplyDelete
 3. கேளக்சியில் 2007 சேர என்ன செய்ய் வேண்டும்

  ReplyDelete
 4. ////Blogger Laksh Mannan said...
  galaxcy 2007 il join panna yenna seiya vendum...?/////

  எனது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றி எழுதுங்கள்.
  email ID classroom2007@gmail.com

  ReplyDelete
 5. //////Blogger nirmala krishnan said...
  how 2 join galaxy2007 sir??/////

  எனது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றி எழுதுங்கள்.
  email ID classroom2007@gmail.com

  ReplyDelete
 6. ////Blogger R.D.Murali Ramaswamy said...
  கேளக்சியில் 2007 சேர என்ன செய்ய் வேண்டும்/////

  எனது மின்னஞ்சல் முகவரிக்கு உங்களைப் பற்றி எழுதுங்கள்.
  email ID classroom2007@gmail.com

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com