மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

31.3.14

Astrology: Generational Gap தலைமுறை இடைவெளி

 
Astrology: Generational Gap தலைமுறை இடைவெளி

தலைமுறை இடைவெளி (Generational Gap) என்பதை வெள்ளைக்காரர்கள்தான் முதலில் சொன்னவர்கள். ஏற்றுக்கொண்டவர்கள்.

நாம் இன்னும் முறையாக, சரியாக ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்கொண்டு இளைஞர்களை திட்டிக் கொண்டிருக்கிறோம்

"காசு அருமை தெரியவில்லை!”

"கலாச்சாரம், பண்பாட்டை மதிக்கவில்லை!”

"பெரியவர்களின் பேச்சை, அனுபவத்தைக் காது கொடுத்துக் கேட்பதில்லை!”

என்றெல்லாம் அவசியமாகவோ அல்லது அவசியமில்லாமலோ திட்டிக் கொண்டிருக்கிறோம்

மற்றவர்கள் சொன்னால், நாம் முழுமையாக, அவர்களைப் பேசவிட்டுவிட்டுக் கேட்போமா? மாட்டோம்!

நம்மை நாம் ஓரளவுதான் திருத்திக் கொள்வோம். அதுபோல மற்றவர்களைத் திருத்துவதும் சாத்தியமில்லை.

யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை. அதை மனதில் கொள்ளுங்கள்!

மிளகாய்க்கு உள்ள காரமும், பாகற்காய்க்கு உள்ள கசப்பும், புளிக்கு உள்ள புளிப்பும் எப்படி இயற்கையானதோ, ஒரே மண்ணில் அவைகள் விளைந்தாலும், அந்தத் தன்மை எப்படி உண்டாகிறதோ, அப்படிதான், மனித மனங்களும், குணங்களும், எண்ணங்களும் இயற்கையானதாகும்,

லக்கினம், லக்கினநாதன், லக்கினகாரகன், மனகாரகன், லக்கினத்தின் மேல் விழுகின்ற சுபகிரகங்களின் பார்வைகள், தீய கிரகங்களின் பார்வைகள் அத்துடன் லக்கினத்தில் வந்தமரும் கிரகங்களின் ஆதிக்கம் ஆகியவற்றை வைத்துக் குணநலன்கள் எல்லாம் ஆளாளுக்கு மாறுபடும்.

மிதுன லக்கினக்காரர்கள் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள். சிம்ம லக்கினக்காரர்கள் பிடிவாதம் மிக்கவர்கள். அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள். கன்னி லக்கினக்காரர்கள் யாருடனும் ஈஸியாக கலந்து, அவர்களை நட்பாக்கிக் கொண்டுவிடுவார்கள். ரிஷப லக்கினக்காரர்களை ஈஸியாக வளைத்து விடலாம். சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள லக்கினக்காரர்கள். எதெதற்கு அவர்களை வளைக்கலாம் என்பதைப் பதிவில் எழுத முடியாது. மகர லக்கினக்காரர்கள் கடும் உழைப்பாளிகள். கும்ப லக்கினக்காரர்கள் இயற்கையிலேயே நல்லவர்கள். யாருடனும் இயைந்து போகக்கூடியவர்கள். நிறைகுடம் போன்றவர்கள். அதனால்தான் அந்த லக்கினத்திற்குப் பூரண கும்பம் அடையாளச் சின்னமாகக் கொடுக்கப் பெற்றுள்ளது. கும்ப லக்கினப் பெண்கள் கிடைத்தால் (கல்யாணமாகாதவர்கள்) கண்ணை மூடிக்கொண்டு அவர்களை மணந்துகொள்ளலாம்.

உடன் பிறந்தவர்கள் அல்லது உடன் இருப்பவர்கள் அல்லது வந்து சேரும் தேவதைகளின் அல்லது பெண்ணாக இருந்தால் கண்ணாளர்களின் குணங்களும் மாறுபடும்.

இதுபோல எழுதிக்கொண்டேபோகாலாம். குண நலன்களை இன்னொரு நாள் கேலக்சி வகுப்பில் அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன். இன்று முதல் தலைமுறை இடைவெளி என்று சொல்லிக் கொண்டிராமல், அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நீங்கள் உண்டாக்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினைதான். Tensionதான்

பெற்றோர்கள் - பிள்ளைகள், கணவன் - மனைவி என்ற எல்லா உறவுகளுக்கும் நட்புகளுக்கும் அது பொருந்தும்!

ஆகவே தலைமுறை இடைவெளி என்று மொக்கையாகப் பேசிக் கொண்டிருக்காமல், இடைவெளியைக் குறைப்பது நம்கையில்தான் இருக்கிறது என்று யோசித்துச் செயல்படுங்கள்.

இந்த இளைஞன் அணிந்திருப்பது கிழிந்த உடையா? அல்லது இடத்திற்கு இடம் கிழித்துவிட்டுவிட்டு அணிந்து கொண்டிருக்கும் உடையா? பார்த்து, சரியான பதிலைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்


===================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

36 comments:

கவியாழி கண்ணதாசன் said...

தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்

Govindasamy said...

"யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை. அதை மனதில் கொள்ளுங்கள்!

மிளகாய்க்கு உள்ள காரமும், பாகற்காய்க்கு உள்ள கசப்பும், புளிக்கு உள்ள புளிப்பும் எப்படி இயற்கையானதோ, ஒரே மண்ணில் அவைகள் விளைந்தாலும், அந்தத் தன்மை எப்படி உண்டாகிறதோ, அப்படிதான், மனித மனங்களும், குணங்களும், எண்ணங்களும் இயற்கையானதாகும்."

அடாடா.. போகிற போக்கில் ஒரு பெரிய உண்மையை சாதாரணமாக முன்வைத்துவிட்டீர்களய்யா!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மட்டுமல்ல இது கூட கடவுளின் படைப்பில் ஒரு அற்புதம் தான்.

துரை செல்வராஜூ said...

கிழிந்த உடையா? கிழித்த உடையா?..
தாங்கள் கூறுவது போல இவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

Selvam Velusamy said...

வணக்கம் அய்யா,

தங்களின் கருத்தை வரவேற்கிறேன். அந்த இளைஞன் அணிந்திருப்பது இடத்திற்கு இடம் கிழித்துவிட்டுவிட்டு அணிந்து கொண்டிருக்கும் உடைதான்.

நன்றி
செல்வம்

வேப்பிலை said...

முட்டாள் தினத்தை ஒட்டி
முட்டாளாகி கொண்டிருக்கும்

நிலையை இந்த பதிவு
நினைக்க வைத்தது..

இடைவெளிக்கு பின்னால் தான்
இன்பம் அதுவே

திரைப்படத்தில் க்ளைமாக்ஸ்
நிறை வாழ்க்கையின் முழுமை

இடைவேளையில் பாப்கார்ன்
இல்லை பிச்சா கிடைக்குமா :))))

ravichandran said...

Respected Sir,

Changes are always change in this permanent world. Hence, we should accept the changes.

His shirt is stitched and sunday is longer than monday (it means inner wear is coming out than outer wear.)

His pant is teared in the knee part intentionally as fashion.

With kind regards,
Ravichandran M.

Bala.N said...

யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை
இதை இனி எங்கும் எப்போதும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு கருத்து

நன்றி அய்யா

C Jeevanantham said...


இளைஞன் அணிந்திருப்பது இடத்திற்கு இடம் கிழித்துவிட்டுவிட்டு அணிந்து கொண்டிருக்கும் உடைதான்

வேப்பிலை said...

கிழியவும் இல்லை
கிழிக்கவும் இல்லை

உடையை சொல்லி வரும் பதில்
உண்மையில் இது இல்லை

(நாகரீகம் கிழியவில்லை இவர்கள்
எதையும் கிழிக்கவும் வில்லை)

இளையவர்கள் நல்லவர்கள்
இவர்களை தரம் கெடும்படி செய்வது

அன்றைய இளையவர்கள் என்னும்
இன்றைய முதியவர்களே..

நாம் வாழ்ந்த காலத்தில்
நம்மை பற்றி இப்படி

தலை இடைவேளை என
தவறியும் யாரும் சொல்லவில்லை

ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
என்பதை விட ரோஷமில்லாது

இருக்க பழக வேண்டும் என
இப்போது சொன்னால் அதற்கும்

தலையாட்டும் கூட்டம் இந்த
தரணியில் இருக்கத் தான் செய்யும்

காசுக்காக மானத்தை விற்கும்
கூட்டத்திற்கு "ஆமாம்" போடனுமா

மற்றவர்களை மாற்ற வேண்டாம்
மாறாக நாம் ஓழுக்கமாக நடக்கலாம்

நாம் யாரையும் inspire செய்யாது
நம்மை பார்த்து மற்றவர் inspire

ஆகும் படி செய்ய வேண்டும்
அப்படி செய்வீர்களா? என

கேட்டுப்பாருங்கள்..
கேட்பதற்கு யாராவது உள்ளார்களா

பார்ப்போம் பின்
பறிதவிப்போம்


raghupathi lakshman said...

மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

காலத்திற்க்கு ஏற்ற தேவையான ஒரு க‌ட்டுரை.இதில் மனவளத்திற்க்கான‌ செய்தியுடன் இயல்பாக நடந்துகொள்வதின் அவசியத்தை உணர்த்தும் தேவையான‌
விசயங்களை கொண்ட இக்கட்டுரை அற்புதம். இளைஞன் அணிந்து உள்ளது கிழிக்கப்பட்ட உடைதான்.

நன்றி ல ரகுபதி

Venkatesh A.S said...

"பலவித மனிதர்கள், பலவித கண்ணோட்டங்கள்" ஒரு பிரபல பன்னாட்டு வங்கியின் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் காட்சி இது. உடையை அணிந்திருப்பவர்க்கு அது சரியாக படும். ஆனால் பார்க்கின்ற சிலருக்கு தவறாக படும். ஆனால் உண்மை நிலை ஒன்று இருக்கிறது. அது தான் சரி.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

இன்றைய நாகரிக உலகில் பல விஷயங்கள் நம்மால் இன்றைய இளைஞர்களுடன் ஒத்து போக முடிவதில்லைதான்..இருந்தாலும் சரி சரி ..என்று அனுசரித்து .இடத்துக்கு தகுந்த மாதிரி **டவுசரை** கிழித்து விட்டு கொண்டு போக வேண்டியதுதான் .... இல்லை என்றால் மொத்தமும் கிழிந்து விடும். !!!!

Kamala said...

வணக்கம் ஐயா. அருமையான வாசகம்,'யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை.' திருத்தவும் முடியாது. உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை.

venkatesh r said...

அருமை! அருமை! கருத்துக்கள் அத்தனையும் அருமை! டேய்! எருமை! டவுசரை கிழிச்சி போட்டு கிட்டு இருக்கியே! என்று திட்டுவதை விட காலத்துக்கு தகுந்தாற் போல் நாமளும் அதைப் போலவே அணிந்து கொண்டு அல்லது கண்ணை மூடிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது! அதைத்தான் சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்தது.

Sanjai said...

அந்த இளைஞன் ஸ்டைல் ஹீரோ :) The costume is designed for him or by him, All artificial cuts :)

வேப்பிலை said...
This comment has been removed by a blog administrator.
வேப்பிலை said...
This comment has been removed by a blog administrator.
வேப்பிலை said...
This comment has been removed by a blog administrator.
kmr.krishnan said...

ஆம். காலம் மாறித்தான் போய்விட்டது. இதை மூத்தவர்கள் புரிந்து கொண்டு
அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சென்ற வாரம் லால்குடியில் இருந்து தஞ்சைக்குப் பேருந்தில் சென்றேன்.பூவாளூர், புள்ளம்பாடி, திருமழப்பாடி, திருமானூர்,திருவையாறு ஆகிய கிராம்ங்களின் வழியாகச் செல்லும் பேருந்து.பள்ளி கல்லுரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியரால் நிரம்பி வழியும் பேருந்து. கிளம்பியது முதல் இரண்டு மணி நேரமும் சினிமாப் பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகிறது.எல்லாம் குத்துப்பாடல்கள்.'தும் தும்'என்று எலக்ட்ரானிக் கிடார் டிரம் போன்ற நரம்புகளை சுண்டிப் பார்க்கும் கருவிகளின் ஆதிக்கம். எனக்கோ தலைவலி வந்துவிட்டது. ஆனால் இளைய தலைமுறையோ தாளம் போட்டு விடாமல் ஆடி வந்தது. அதிலும் மாணவியரின் ஈடுபாடு புருவங்களைத் தூக்க வைத்தது.

சரி சரி எனக்குத்தான் வயதாகி விட்டது. 'பழசாய்ப்போன பாத்திரமெல்லாம் பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்.'

Subbiah Veerappan said...

////Blogger கவியாழி கண்ணதாசன் said...
தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Govindasamy said...
"யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை. அதை மனதில் கொள்ளுங்கள்!
மிளகாய்க்கு உள்ள காரமும், பாகற்காய்க்கு உள்ள கசப்பும், புளிக்கு உள்ள புளிப்பும் எப்படி இயற்கையானதோ, ஒரே மண்ணில் அவைகள் விளைந்தாலும், அந்தத் தன்மை எப்படி உண்டாகிறதோ, அப்படிதான், மனித மனங்களும், குணங்களும், எண்ணங்களும் இயற்கையானதாகும்."
அடாடா.. போகிற போக்கில் ஒரு பெரிய உண்மையை சாதாரணமாக முன்வைத்துவிட்டீர்களய்யா!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மட்டுமல்ல இது கூட கடவுளின் படைப்பில் ஒரு அற்புதம் தான்.////

உங்களின் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger துரை செல்வராஜூ said...
கிழிந்த உடையா? கிழித்த உடையா?..
தாங்கள் கூறுவது போல இவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.////

உண்மைதான். நன்றி நண்பரே

Subbiah Veerappan said...

///Blogger Selvam Velusamy said...
வணக்கம் அய்யா,
தங்களின் கருத்தை வரவேற்கிறேன். அந்த இளைஞன் அணிந்திருப்பது இடத்திற்கு இடம் கிழித்துவிட்டுவிட்டு அணிந்து கொண்டிருக்கும் உடைதான்.
நன்றி
செல்வம்////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வம்!

Subbiah Veerappan said...

///Blogger வேப்பிலை said...
முட்டாள் தினத்தை ஒட்டி
முட்டாளாகி கொண்டிருக்கும்
நிலையை இந்த பதிவு
நினைக்க வைத்தது..
இடைவெளிக்கு பின்னால் தான்
இன்பம் அதுவே
திரைப்படத்தில் க்ளைமாக்ஸ்
நிறை வாழ்க்கையின் முழுமை
இடைவேளையில் பாப்கார்ன்
இல்லை பிச்சா கிடைக்குமா :))))////

இன்று உகாதி. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு (ஆந்திரர்களுக்கு) உகந்த நாள். அதை நாமும் கொண்டாடுவோம். உகாதி அன்று என்ன கிடைக்கும் தெரியுமா?

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Changes are always change in this permanent world. Hence, we should accept the changes.
His shirt is stitched and sunday is longer than monday (it means inner wear is coming out than outer wear.)
His pant is teared in the knee part intentionally as fashion.
With kind regards,
Ravichandran M./////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

Subbiah Veerappan said...

///Blogger Bala.N said...
யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை
இதை இனி எங்கும் எப்போதும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு கருத்து
நன்றி அய்யா/////

புரிந்துணர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger C Jeevanantham said...
இளைஞன் அணிந்திருப்பது இடத்திற்கு இடம் கிழித்துவிட்டுவிட்டு அணிந்து கொண்டிருக்கும் உடைதான்/////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
கிழியவும் இல்லை
கிழிக்கவும் இல்லை
உடையை சொல்லி வரும் பதில்
உண்மையில் இது இல்லை
(நாகரீகம் கிழியவில்லை இவர்கள்
எதையும் கிழிக்கவும் வில்லை)
இளையவர்கள் நல்லவர்கள்
இவர்களை தரம் கெடும்படி செய்வது
அன்றைய இளையவர்கள் என்னும்
இன்றைய முதியவர்களே..
நாம் வாழ்ந்த காலத்தில்
நம்மை பற்றி இப்படி
தலை இடைவேளை என
தவறியும் யாரும் சொல்லவில்லை
ஏற்றுக் கொள்ளும் பக்குவம்
என்பதை விட ரோஷமில்லாது
இருக்க பழக வேண்டும் என
இப்போது சொன்னால் அதற்கும்
தலையாட்டும் கூட்டம் இந்த
தரணியில் இருக்கத் தான் செய்யும்
காசுக்காக மானத்தை விற்கும்
கூட்டத்திற்கு "ஆமாம்" போடனுமா
மற்றவர்களை மாற்ற வேண்டாம்
மாறாக நாம் ஓழுக்கமாக நடக்கலாம்
நாம் யாரையும் inspire செய்யாது
நம்மை பார்த்து மற்றவர் inspire
ஆகும் படி செய்ய வேண்டும்
அப்படி செய்வீர்களா? என
கேட்டுப்பாருங்கள்..
கேட்பதற்கு யாராவது உள்ளார்களா
பார்ப்போம் பின்
பறிதவிப்போம்/////

குழப்புகிறீர்களே....வேப்பிலையாரே! எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை! என் சிற்றறிவு அவ்வளவுதான் என்று விட்டுவிடுகிறேன்!

Subbiah Veerappan said...

/////Blogger raghupathi lakshman said...
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
காலத்திற்க்கு ஏற்ற தேவையான ஒரு க‌ட்டுரை.இதில் மனவளத்திற்க்கான‌ செய்தியுடன் இயல்பாக நடந்துகொள்வதின் அவசியத்தை உணர்த்தும் தேவையான‌ விசயங்களை கொண்ட இக்கட்டுரை அற்புதம். இளைஞன் அணிந்து உள்ளது கிழிக்கப்பட்ட உடைதான்.
நன்றி ல ரகுபதி/////

நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ரகுபதி!

Subbiah Veerappan said...

//////Blogger Venkatesh A.S said...
"பலவித மனிதர்கள், பலவித கண்ணோட்டங்கள்" ஒரு பிரபல பன்னாட்டு வங்கியின் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் காட்சி இது. உடையை அணிந்திருப்பவர்க்கு அது சரியாக படும். ஆனால் பார்க்கின்ற சிலருக்கு தவறாக படும். ஆனால் உண்மை நிலை ஒன்று இருக்கிறது. அது தான் சரி./////

நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
இன்றைய நாகரிக உலகில் பல விஷயங்கள் நம்மால் இன்றைய இளைஞர்களுடன் ஒத்து போக முடிவதில்லைதான்..இருந்தாலும் சரி சரி ..என்று அனுசரித்து .இடத்துக்கு தகுந்த மாதிரி **டவுசரை** கிழித்து விட்டு கொண்டு போக வேண்டியதுதான் .... இல்லை என்றால் மொத்தமும் கிழிந்து விடும். !!!!/////

நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

Subbiah Veerappan said...

////Blogger Kamala said...
வணக்கம் ஐயா. அருமையான வாசகம்,'யாரையும் திருத்துவதற்காக நாம் பிறவி எடுக்கவில்லை.' திருத்தவும் முடியாது. உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை/////

நல்லது உங்களுடைய பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger venkatesh r said...
அருமை! அருமை! கருத்துக்கள் அத்தனையும் அருமை! டேய்! எருமை! டவுசரை கிழிச்சி போட்டு கிட்டு இருக்கியே! என்று திட்டுவதை விட காலத்துக்கு தகுந்தாற் போல் நாமளும் அதைப் போலவே அணிந்து கொண்டு அல்லது கண்ணை மூடிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது! அதைத்தான் சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்தது./////

புரிந்தவரை சரிதான். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Sanjai said...
அந்த இளைஞன் ஸ்டைல் ஹீரோ :) The costume is designed for him or by him, All artificial cuts :)////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
ஆம். காலம் மாறித்தான் போய்விட்டது. இதை மூத்தவர்கள் புரிந்து கொண்டு
அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சென்ற வாரம் லால்குடியில் இருந்து தஞ்சைக்குப் பேருந்தில் சென்றேன்.பூவாளூர், புள்ளம்பாடி, திருமழப்பாடி, திருமானூர்,திருவையாறு ஆகிய கிராம்ங்களின் வழியாகச் செல்லும் பேருந்து.பள்ளி கல்லுரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியரால் நிரம்பி வழியும் பேருந்து. கிளம்பியது முதல் இரண்டு மணி நேரமும் சினிமாப் பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகிறது.எல்லாம் குத்துப்பாடல்கள்.'தும் தும்'என்று எலக்ட்ரானிக் கிடார் டிரம் போன்ற நரம்புகளை சுண்டிப் பார்க்கும் கருவிகளின் ஆதிக்கம். எனக்கோ தலைவலி வந்துவிட்டது. ஆனால் இளைய தலைமுறையோ தாளம் போட்டு விடாமல் ஆடி வந்தது. அதிலும் மாணவியரின் ஈடுபாடு புருவங்களைத் தூக்க வைத்தது.
சரி சரி எனக்குத்தான் வயதாகி விட்டது. 'பழசாய்ப்போன பாத்திரமெல்லாம் பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்.'/////

உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Maaya kanna said...

வணக்கம் ஐயா !

என்ன கொடுமை சுப்பையா ஜி! என்ன கொடுமை.

இருப்பனுக்கு இல்லாதது மேல் ஆசை இல்லாதவனுக்கு இருப்பவது மேல் ஆசை.