மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 151 - 160. Show all posts
Showing posts with label Lessons 151 - 160. Show all posts

13.1.09

எப்போது ஞானம் வரும்?


எப்போது ஞானம் வரும்?

ஆசை இல்லாத மனிதனே கிடையாது. சிலருக்கு நியாயமான ஆசைகள்
இருக்கும். சிலருக்கு நியாமில்லாத ஆசைகள் இருக்கும்.

நியாயமான ஆசைகள் எவையென்று எழுதினால் அறுவையாக இருக்கும்.
நியாயமில்லாத ஆசைகளை எழுதினால் சுவையாக இருக்கும்.

அந்த சுவையான ஆசைகளைப் பதிவில் எழுத முடியாது. வகுப்பறைக்கு
வரும் பெண் வாசகர்களின் கண்டனத்திற்கு நான் ஆளாக நேரிடும்.
ஆகவே எழுதவில்லை. யாரும் பின்னூட்டத்தில் வேண்டுகோள்களை வைக்க
வேண்டாம் நோ சான்ஸ். எழுதப்போவதில்லை!:-))))

ஒன்று மட்டும் நிச்சயம். ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கும் காரணம்!

ஆசையால் துன்பங்கள் ஏற்படும். துன்பங்களால் அனுபவங்கள் ஏற்படும்
அனுபவங்களால் ஞானம் ஏற்படும்

உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக் கொடுப்பவன் ராகு,
ஏற்பட்ட அத்துன்பங்களில் இருந்து அனுபவத்தைக் கொடுத்து, நமக்கு
ஞானத்தைக் கொடுப்பவன் கேது.

இரண்டு கோள்களுக்கும் உள்ள வேலையை, இப்போது உங்களுக்குச்
சுருக்கமாகவும், தெளிவாகச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

சரிதானா? பின்னூட்டத்தில் தெரியப் படுத்துங்கள்!

வாருங்கள், இப்போது பாடத்திற்குப் போவோம்!
------------------------------------------------------------------------------
ராகுவைப் பற்றிய பாடத்தின் மூன்றாம் பகுதி இது!

பன்னிரெண்டு வீடுகளிலும் ராகு அமர்ந்திருப்பதற்கான பலன்கள்.
இவை எல்லாமே பொதுப் பலன்கள். அதை மனதில் கொள்க!

1
லக்கினத்தில் ராகு

ஜாதகன் சோம்பல் உடையவன். அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன்.
அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம்.
அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம். நோயின் தன்மைகளும்,
வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை
வைத்து மாறுபடும்

ஜாதகனுக்குப் (பொதுவாக) இரக்க குணமே இருக்காது. இந்தப் "பொதுவான"
என்ற சொல்லை நான் உபயோகிக்கக் காரணம், நான் தப்பித்துக்கொள்ள!
இல்லையென்றால், "சார், இந்த அமைப்பு இருந்தும் கூட நான் இரக்கமானவன்.
வருடத்திற்கு இரண்டு முறைகள் ரத்ததானம் செய்கிறேன் தெரியுமா?" என்று
யாராவது சண்டைக்கு வரக்கூடும்.

சண்டை போடவெல்லாம் எனக்கு நேரமில்லை. என் போதாத நேரம்
வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்:-))))

ஆனாலும் இங்கே எழுதுவதில் ஒரு ஆத்ம திருப்தி இருக்கிறது. அதற்கும்
மேலாக எண்ணற்ற வகுப்பறைக் கண்மணிகளின் அன்பு மழை இருக்கிறது.
அந்த அன்புமழைக் குளியல்தான் என்னைத் தொடர்ந்து உற்சாகமாக எழுத
வைக்கிறது!!!!!!!

அது மிகையல்ல! மாசற்ற உண்மை!

ஜாதகனுக்கு தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை
களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது.
சிலருக்கு நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும்
வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து ஜாதகனைப்
பரலோகத்திற்கு அனுப்பிவிடுவான். அல்லது வைகுண்டத்திற்கு அனுப்பிவிடுவான்.
சிவபக்தர்களை சிவலோகத்திற்கு அனுப்பிவிடுவான். எப்படி வேண்டுமென்றாலும்
வைத்துக்கொள்ளுங்கள்.

போட்டது போட்டபடி ஒருநாள் போய்ச் சேரவேண்டும்.

ஐடென்ட்டி கார்டு, ரேசன் கார்டு, வங்கி இருப்பு, தங்க நகைகள்,சொத்துப் பத்திரங்கள்,
பங்குப் பத்திரங்கள், இரண்டு கிரவுண்டில் கட்டிய வீடு அல்லது அண்ணாசாலையில்
வாங்கிய அடுக்குக் குடியிருப்பு, வண்டி, வாகனங்கள் என்று எதுவும் உடன் வராது!

அவைகளெல்லாம் மனைவியின் கையில் தங்கி விடும். அல்லது சிலருக்கு
விசுவாசமில்லாத பிள்ளைகள் கையில் அவைகள் தங்கி விடும்.

பிள்ளைகள் வருடம் ஒருமுறை அவன் இறந்த நாளான்று பன்னீர்ப்பூ மாலை
ஒன்றை வாங்கி, அவனுடைய படத்திற்குப் போட்டு, அன்று மட்டும் அவனை
நினைத்து மகிழ்வார்கள்.

சிலர் வீட்டில் அதுவும் நடக்காது. மேற்கொண்டு. It is total nonsense! என்று
திட்டு வேறு கிடைக்கும்.(அதாவது அப்பனுக்குத் திதி செய்வது)

அதுதான் வாழ்க்கை. அதை உயிருடன் இருக்கும்போதே உணரும்படியான
சூழ்நிலைகளை, ராகு ஏற்படுத்துவான். கேது அதை அடையாளம் காட்டுவான்.

சிலர் அதை உணர்வார்கள். பலர் அதை உணரமாட்டார்கள். மேலும் மேலும்
சம்பாதிப்பதில் மும்மரமாக இருப்பார்கள்.

அதை உணர, அவர்களுக்கு நேரம் ஏது?

ஆமாம் சிலர் தலை எழுத்து அப்படி இருக்கும். அவன் சம்பாதித்து வைத்து
விட்டுப்போவான். அவனுக்கு அனுபவ பாத்தியம் இருக்காது.

He will earn money only for others. May be his kith and kins or someone!

இந்த அமைப்பு ஜாதகன் பெண்பித்து உள்ளவனாக இருப்பான். பித்து என்றால்
அடிக்க வருவீர்கள். ஆகவே இப்படி வைத்துக் கொள்ளுங்கள. பெண் மேல்
தீராத மோகம் உடையவனாக இருப்பான். ஜாதகியாக இருந்தால் அவளுக்கும்
அந்த மோகம் இருக்கும். ஆனால் பெண்ணிற்கென்று சில விசேஷ உடல்
அமைப்பும் குணங்களும் உண்டு. அதனால் அதை அவள் அடக்கி வைத்திருப்பாள்

அது என்ன சார்? பெண்ணிற்கென்று சில விசேஷ உடல் அமைப்பும் குணங்களும்
உண்டா? ஆமாம் அது பெரிய பாடம். பின்னால் வரும்!

மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள் லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால்
மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும் ஜாதகனுக்கு இருக்காது. காரணம்
ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!
==============================================================
2.
ராகு 2ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க நேரிடும்
ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில்
சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று
கோபம் வரக்கூடியவன்.

பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது. அல்லது
சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே இருக்கும்
ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான்.

அதிலிருந்து தப்பிக்க ஒரு உபாயம் இருக்கிறது. திருமணமாகாத நிலையில் காசு
வந்தால் அம்மா கையில் கொடுத்துப்போடு செல்லக்கண்ணு! மணமாகி இருந்தால்
மனைவி கையில் கொடுத்துவிடு மாப்ளே! அதுதான் வழி!

==============================================================
3.
+++++++++ராகு 3ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும் சாய்த்து விடுவான்.
பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச் சாய்ப்பான்?
சாய்த்த பிறகு என்ன செய்வான் என்பதைப் பதிவில் எழுத முடியாது!

தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?)

தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான்
உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று பணத்தை வைத்துத் தூள் கிளப்பி
விடுவான்.

பெண்ணாக இருந்தால், நகை நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள் என்று
அவளும் தூள் கிளப்பி விடுவாள்

இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு குபேரயோகம் போல
பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!
============================================================
3ஆம் வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய
கிரகங்களுக்கு உகந்த இடங்கள் அதை மனதில் கொள்க!
============================================================
4.
ராகு 4ஆம் வீட்டில் இருந்தால்:

மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம். இங்கே ராகு
இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இருதயம்
சம்பந்தப் பட்ட நோய்கள் என்னனென்ன வென்று நமது மதிப்பிற்குரியவரும்
சக பதிவருமான டாக்டர் ப்ரூனோ அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை
இரண்டையும் இல்லாமல் செய்துவிடுவான்.

மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் நிலைக்காது. வண்டி
வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக
வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும்.

உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது. அவர்களில் பலர் விரோதிகளாகி
விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு இருக்காது!

இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப்
போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும்.

என் உறவினர்களின் ஜாதகங்களில் சிலருடைய ஜாதகம் இந்த அமைப்பில்
இருப்பதையும், அவர்கள் மீள முடியாத சுகக்கேடுகளில் இருப்பதையும் நான்
கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த பெண் திருமணமாகி, ஒரு செல்வந்தர் வீட்டிற்கு மருமகளாகப்
போனார். ராகுவும் கூடவே போனான். அவர்கள் வீட்டில் அவநம்பிக்கை
காரணமாக எந்த வேலைக்கும் ஆட்களை நியமிக்கும் வழக்கமில்லை. போன
இந்தப் பெண்மணிதான் கடைசிவரை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவர்கள்
வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்தார். இப்போது வேலை ஒப்பந்தம்
முடிந்து விட்டது. நிம்மதியாக இருக்கிறார். ஆமாம் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
================================================================
5.
ராகு 5ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு வேண்டிய
அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன்.

உறவினர்கள் அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக்
கண்டால் ஒதுங்கி விடுவார்கள்

சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும் இருக்கும்
ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக் குழந்தை
இருக்காது.
================================================================
6.
************ராகு 6ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப் படுத்தி எடுக்கும்
ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது அவனது
வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும் இருப்பார்கள்.

ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும்
நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான்
anything under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான்.
அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல
ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான்.

அவனுடைய தொழில் ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில்
பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல் நிறைந்தவனாக இருப்பான்.

பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ அரசனைப் போல வாழ்வான்.
நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.
==================================================================
7.
ராகு 7ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச்
செலவு செய்பவனாக இருப்பான்.

சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று கொண்டிருப்பான். சிலருக்கு
தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக இருக்க ஆசைப்படுவான்
அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான்,

இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சிலர்
அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் ஏச்சுக்கு ஆளாக நேரிடும்.
அதீத நோயால், உடல் சீர்கெடும்.

சிலருக்குப் அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.
==================================================================
8.
ராகு 8ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும்
வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும்.

இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!)
சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும் (அர்த்தம் புரிகிறதா?) முன் கர்ம வினை
தொடர்கிறது என்று பொருள்.

சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது. துயரங்கள் மட்டும்
அதிகமாக இருக்கும்.

பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம், விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்
சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில் முடியும்

அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச்
செல்வி விலகிப் போய்விடுவாள்.

ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும் (Piles Complaint)
பெண்களாக இருந்தால் மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------
9.
ராகு 9ஆம் வீட்டில் இருந்தால்:

ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும் ராகு
ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை!

ராஜயோகம் உள்ளவர்களுக்கு, செல்வம், உறவுகள், ஆண் குழந்தைகள் என்று
எல்லாம் அசத்தலாக இருக்கும்

ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக
ஜாதகன் இருப்பான்.

இந்த இடத்து ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச்
சொத்துக்களுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்!
=============================================================
10.
++++++ராகு 10ஆம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான். இயற்கையாகவே
தொழில்நுட்ப அறிவு இருக்கும். Blessed with professional skill என்று வைத்துக்
கொள்ளுங்கள்.

சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள்.

சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள்

மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம் ஆகியவைகளைக் கொண்டவனாக
ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் (comforts) பெற்றவனாக இருப்பான்

அறிவு, அந்தஸ்து ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின்
வாழ்க்கை அமைந்து சிறக்கும்!
==================================================================
11.
++++++++++++ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்:
பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும்,
அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட ஆயுளை உடையவனாக
இருப்பான். நல்ல நண்பர்களையும், நல்ல கூட்டாளிகளையும் கொண்டவனாக
இருப்பான்.

செய்யும் தொழிலில் அல்லது வேலையில், அனைத்து நுட்பங்களையும்
தெரிந்தவனாக இருப்பான். அல்லது விரைவில் எதையும் கற்றுக்கொண்டு
செயல்படுபவனாக இருப்பான்.

வலுவானவனாக இருப்பான். வளம் உடைய வாழ்க்கை அவனுக்குக் கிடைக்கும்
அல்லது அமையும்.

அததனை சுகங்களையும், செளகரியங்களையும் அனுபவிப்பவனாக ஜாதகன்
இருப்பான்
=================================================================
12.
ராகு 12ஆம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் பாவச் செயல்களைச் செய்பவனாக இருப்பான். அதையும் பிறர் அறியாத
வண்ணம் செய்வான். உடல் உபாதைகளுக்கு ஆளாவான்.கண்களில் கோளாறுகள்
உண்டாகலாம்.

சிலருக்கு, செல்வமும் ஆண் வாரிசுகளும் இல்லாமல் இருக்கும். அதாவது மறுக்கப்
பட்டிருக்கும்.

ஆசாமி வலுவில்லாதவன். மன, மற்றும் உடல் வலிமை இல்லாதவன்.

பார்க்கும் வேலை அல்லது தொழில்களில் இருந்து வீழ்ச்சி அடைய நேரிடும்

இந்த இடத்து ராகு, மேலும் ஒரு தீய கிரககத்தின் (சனி, அல்லது செவ்வாயின்)
சேர்க்கை பெற்றால் வீழ்ச்சி சர்வ நிச்சயமாக உண்டு! அந்த பாதிப்பைத் தாக்குப்
பிடிக்க இறைவழிபாடு ஒன்று மட்டுமே உதவும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
======================================================
(தொடரும்)

வாழ்க வளமுடன்!

11.1.09

அழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன் - பகுதி 2

ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்கிறது வேதாந்தம்.

ஆசைப் படுவதை நிறுத்தாதே, நிறுத்தினால் உன் வளர்ச்சி நின்றுவிடும்.
ஆசையும் தேடலும்தான் உன்னை உயரத்திவிடும் என்கிறது இன்றைய
வாழ்வியல்.

மனிதன் குழம்பி நிற்கிறான். எதைக் கடைப்பிடிப்பது?

இரண்டாவதைக் கடைப்பிடி. அதுதான் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு
உகந்தது. அதே நேரத்தில் முதலில் சொன்னதையும் மனதில் வை! இரண்டும்
இரண்டு கண்களைப் போன்றவை. ஒப்பிட்டுப்பார்க்காதே!

செயல் உன் கையில் இருக்கிறது; விளைவு உன் கையில் இல்லை!

Actions are in your hand; Not the results! - Bhagavad Geetha

கல்லை எறி மாங்காய் விழுந்தாலும் விழுகலாம். விழுகாமல் போனாலும்
போகலாம். கல்லை எறிந்து கொண்டே இரு. பத்துக் கற்களுக்கு ஒரு
மாங்காயாவது விழுகாதா?

பலவிதமான பறவைகள் இருக்கின்றன. குருவி, கிளி, மைனா, புறா, மயில்
அன்னம், காகம், கழுகு என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

ஒவ்வொன்றும் ஒற்று விதத்திலும் அழகு. ஒவ்வொன்றிற்கும் சில உணவுப்
பழக்கங்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வலிமை. ஒவ்வொன்றிற்கும்
ஒவ்வொரு உயரத்தில் பறக்கும் தன்மை.

கழுகைப் போல, குருவியால் பறக்க முடியுமா?

காகம் தெருவில் இறந்து கிடைக்கும் நாயின் எஞ்சிய மிச்சங்களைத் தின்னும்.
கிளியும், குருவியும் அதைத் தின்னுமா? திங்காது. அல்லது என்ன பசியாக
இருந்தாலும் அதை, அந்த அசிங்கத்தைத் தொடாது.

தனக்கென உரிய தானியங்களை, மற்றும் கனிகளை மட்டுமே தேடிப்
பிடித்து அவைகள் உண்ணும்.

அதிசயம் என்ன வென்றால், எண்ணற்ற பறவைகளைப் படைத்த இறைவன்
அவற்றிற்கு உரிய உணவையும் தந்திருக்கிறான்.

எந்தப் பறவையாவது பட்டினியால் செத்து விழுந்திருக்கிறதா?

எந்தப் பறவைக்காவது மனிதனுக்கு இருப்பதைப் போல ரேசன் கார்டும், மிஞ்சிய
உணவை எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்து அடுத்த வேளையில் உண்ணும் அவலமும்
இருக்கிறதா?

இல்லை!

உலகில் மனிதனுக்கு உள்ள தேவைகளும், கவலைகளும் பறவைகளுக்கு இல்லை!

அதனால் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் இப்படி எழுதினார்.

"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்!"
--------------------------------------------------------------------------------------------------------
காலதேவன் மனிதனைப் படைக்கும்போதே நான்கு விதமாகப் படைக்கின்றான்

பல்லக்கில் போகிறவன், பல்லக்கைச் சுமக்கிறவன், பல்லக்கைச் செய்கிறவன்.
பல்லக்கையும், பல்லக்கில் செல்கிறவனையும் வேடிக்கை பார்க்கிறவன் என்று
மனிதர்கள் வகைப்படுவார்கள்.

பல்லக்கைத் தூக்கும் பணிதான் உனக்குக் கிடைத்திருக்கிறதா? கவலைப் படாதே!
சந்தோஷமாக அதைச் செய்!. பயணிக்கிறவனைவிட தூக்கிகிறவனுக்கு உடல்
வலிமை அதிகம். எங்கே போனாலும் உனக்கு வேலை கிடைக்கும்.சாப்பிட்ட
உணவு ஜீரணமாகும். படுத்தால் உடனே தூக்கம் வரும்

போகிறவன் நிலைமை அப்படியல்ல!

காலதேவன் ஒரு நாள் அவனைக் கீழே தள்ளி பொடி நடையாக நடக்கும்படி
செய்து விடுவான்.

தூக்குகிறவனுக்கும் ஒரு நாள் பல்லக்கில் செல்கின்ற பாக்கியத்தை அவன்
ஏற்படுத்திக் கொடுப்பான்.

ஆகவே காலம் கனியட்டும் என்று பொறுமையாக இரு!
.............................................................................................................................
அதிரடியான ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குபவன் ராகு!

Boys Company என்னும் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த நடிகனை
நாடே புகழும் நடிகனாக்கியவன் ராகு!

ஆமாம், விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் என்னும் இளைஞனை,
நாடே திரும்பிப் பார்க்கும் நடிகர் திலகம் சிவாஜியாக ஆக்கியவன் ராகு!

1952ஆம் ஆண்டு பராசக்தி படம், வெளிவந்தது முதல் 1970ஆம் ஆண்டு வீயட்நாம்
படம் வெளியானது வரை அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
அவருக்குப் பெரும் செல்வத்தையும், புகழையும், பெருமைகளையும் ஈட்டித்தந்தவன்
ராகு.

1.10.1927ல் சிவாஜி கணேசன் பிறந்தார். அவர் நடித்த முதல் படம் பராசக்தி
1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அப்பொது அவருடைய
வயது 25

அதற்குப் பிறகு தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் அவரைத் தூக்கிப் பிடித்துக்
கொண்டுபோய் சிகரத்தில் நிறுத்தியவன் ராகு
.............................................................................................................................
அது போல சிகரத்தில் இருப்பவர்களைத் தெருவில் கொண்டுவந்து நிறுத்துபவனும்
ராகுதான்.

சமீபத்திய உதாரணம். தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்திய அளவில் நான்காம்
இடத்தில் இருந்த பிரபல தொழில் அதிபரைச் சிக்க வைத்ததும் ராகுதான்.

அவருடைய பெயர் ராமலிங்க ராஜு! அவர் யாரென்று சொல்லத் தேவையில்லை!
இன்று நாடே அவரை அறியும்!
............................................................................................................................
ராகு நான்காம் வீட்டில் இருந்தால் என்ன நடக்கும் என்று சென்ற இதழில் பார்த்தோம்

இப்போது லக்கினத்தில் ராகு இருந்தால் என்ன ஆகும்?

ராகு ஒருவரின் ஜாதகத்தில் எங்கே இருந்தாலும், அவனுடைய திசையோ அல்லது
வேறு கிரகத்தின் திசையில் அவனுடைய புக்தியோ வரும்வரை பேசாமல் இருப்பார்
தனக்கு நேரம் வந்தவுடன் ஆட்டத்தை ஆரம்பித்து ஜாதகனின் நேரத்தைக் கெடுக்க
ஆரம்பிப்பார்.

அவர் அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபன் நன்றாக இருந்தால் அவருடைய ஆட்டம்
செல்லாது அல்லது எடுபடாது. அவன் வலிமையாக இல்லை என்றால் இவர் ஆடி
ஜாதகனை ஒரு கை பார்த்து விடுவார். அதை மனதில் கொள்க!

லக்கினத்தில் இருக்கும் ராகு, அவருடைய நேரம் வந்தவுடன், ஜாதகனுக்கு உடல்
உபாதைகளை உண்டாக்குவார்.

அது அவருடைய சுயபுக்திக் காலமாக இருந்தால், ஜாதகன் விஷக்கடிகளுக்கு
ஆளாக நேரிடும். பாம்பு, தேள், பூரான் என்று எது வேண்டுமென்றாலும் ஜாதகனைக்
கடித்து வைக்கும். குறைந்த பட்சம் தெரு நாயிடமாவது ஜாதகன் கடிபட நேரிடும்.

அல்லது நோய்கள் ஏற்பட்டு ஜாதகன் அவதியுற நேரிடும்.

ஊர்விட்டு ஊர் மாறிச் செல்ல நேரிடும். அலுவலகத்தில் உள்ளவர்கள் தண்ணியில்லாக்
காட்டுக்கு மாறிச் செல்ல நேரிடும்.

சிலருக்கு நெருங்கிய உறவினர்களுடன் விரோதம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களுடன்
கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

பிற பெண்கள் மீது மோகம் ஏற்பட்டு, நேரத்தையும், பணத்தையும், பெயரையும்
இழக்க நேரிடும்.

லக்கினாதிபதி வலிமையாக இருந்தால், இது எதுவும் ஏற்படாது. அவர் ஜாதகனைக்
காப்பாற்றிவிடுவார்.

(தொடரும்)
...................................................................................................................................
அடுத்த பகுதி நாளை இரவு! ராகுவைப் பற்றிய பாடம் மிகவும் பெரியது. அதனால்
ஒரே பதிவாக வெளியிட இயலவில்லை. யோசித்து சிறப்பாக எழுதிப் பதிவிட முடிவு
செய்துள்ளேன். ஆகவே பொறுத்திருந்து ஒவ்வொரு பகுதியையும் கவனத்துடன்
படிக்கும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்

நன்றி வணக்கத்துடன்,
வகுப்பறை
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

8.1.09

அழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்!


"இன்பம் எங்கே? இன்பம் எங்கே? என்று தேடு
எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு!"

என்று பாட்டு எழுதி மக்களைப் பரவசப் படுத்தினான் ஒரு கவிஞன்.

எல்லா மக்களின் விருப்பமும் அதுதான்.

இன்பம்! இன்பம்! இன்பம்!

எங்கே கிடைக்கும் அது?

முதலில், இன்பம் என்பது என்ன?

மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவது இன்பம்! மனதைத் துள்ள வைப்பது இன்பம்.
மனதைக் கிறங்க வைப்பது இன்பம். கவலைகளை மறக்க வைப்பது இன்பம்!
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஐந்து வயது சிறுவனுக்கு பத்து எக்ளேர் மிட்டாய் கிடைத்தால் இன்பம்
பத்து வயதுப் பையனுக்கு ரிமோட்டில் ஓடும் விளயாட்டுக் கார் கிடைத்தால் இன்பம்

பதினெட்டு வயதுப் பெண்ணிற்கு அனார்கலி மற்றும் பாட்டியாலா சுடிதாரில்
இருபது செட் சுடிதார் எடுத்துக்கொடுத்தால் இன்பம்.

இருபத்தோரு வயதுப் பையனுக்குத் தினமும் கடலைபோட ஜெனிலியாவைப் போல
அழகுள்ள ஒரு பெண் கிடைத்தால் இன்பம்.

இருபத்தைந்து வயது இளைஞனுக்கு பல்சர் மோட்டார் சைக்கிளும், பில்லியனில்
ஏறி அவனோடு ஒட்டியமர்ந்து ஊர்சுற்ற நயனைப்போல ஒரு பெண்ணும் கிடைத்தால்
அது இன்பம்.

முப்பது வயதுப் பெண்ணிற்கு போத்தீஸில், பத்து ரிவர்சபிள் பட்டு சேலை
எடுத்துக் கட்டிக்கச் சொல்லிக் கொடுத்தால் அது இன்பம்.

முப்பத்தைந்து வயது மனிதனுக்கு வணிகம் செய்ய கொலேட்டரல் செக்யூரிட்டி
இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வங்கிக் கடன் கிடைத்தால் இன்பம்

குடிமகனுக்கு சீவாஸ் ரீகல் விஸ்கி ஒரு ஃபுல் பாட்டில் இலவசமாகக் கிடைத்தால்
இன்பம். (கூடவே பிரியாணியும், சிகரெட் பாக்கெட்டுகளும் கிடைத்தால் டபுள் இன்பம்.)

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்

எல்லாம் கிடைக்குமா? தொடர்ந்து கிடைக்குமா?

அதெப்படிக் கிடைக்கும்?

இன்பம் என்பது ரேசன் கடைச் சரக்கைப் போன்றது.ரேசன் கடைச் சரக்குகள்
உங்களுக்கு என்று குறிப்பிடப் பட்டுள்ள பொருளில், ஒரு குறிப்பிடப்பெற்ற
அளவு, ஒரு குறிப்பிடப் பெற்ற காலத்தில் கொடுக்கப் படுகிறதல்லாவா ?
அதுபோல இன்பமும் அவ்வப்போது கிடைக்கும்.

துன்பம் அப்படிப் பட்டதல்ல! அது தபால்காரரின் கையில் இருக்கும் கடிதத்தைப்
போன்றது. உங்களுக்கு வந்த கடித்தத்தை நீங்கள் வாங்கியாக வேண்டும். வீடு
தேடி வரும்.

வாங்க மறுத்தால்?

தபால்காரர் கதவு வழியாக அல்லது ஜன்னல் வழியாகக் கடிதத்தை உள்ளே வீசி
விட்டுப் போவதைப் போல அது வீசப்படும். யாரும் தவிர்க்க முடியாது அதை!

காலதேவன் கருணை மிக்கவன்.துன்பத்தையும் இன்பத்தையும் அவன் சமமாகத்தான்
அளிப்பான்.

எப்படி இரவு பகல் சமமாக இருக்கிறதோ எப்படி உறவும், பிரிவும் சமமாக
இருக்கிறதோ அப்படி இன்பமும், துன்பமும் சம அளவில்தான் அளிக்கப்படும்

உறவும், பிரிவும் எப்படி அளவில் சமமாகும்?

பிறப்பை உறவு என்கின்றோம், இறப்பைப் பிரிவு என்கின்றோம். அவை இரண்டும்
இல்லாதவன் யார்? ஆகவே அதுவும் சமம்தான்!

இன்னொரு எளிய உதாரணம் சொல்கிறேன். உலகில் ஜனித்த, ஜனிக்கின்ற அத்தனை
பேர்களுக்கும் அஷ்டகவர்க்கப் பரல்கள் மொத்தம் 337 தானே?

அம்பானிக்கு 674, அவருடைய வாகன ஓட்டுனருக்கு 337 என்றா இருக்கிறது?

இல்லையல்லவா?

ஆகவே நம்பிக்கையோடு இருங்கள். இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும்
ஒன்றாகவே பாவியுங்கள். பிரச்சினை எதுவும் தெரியாது!

இன்பத்தைக் கொடுக்க சந்திரன், சுக்கிரன், குரு என்று மூன்று கிரகங்கள்
இருந்தால், துன்பத்தைக் கொடுக்க ராகு, கேது சனி என்று மூன்று கிரகங்கள்
உள்ளன.

ஆகவே இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் பாட்டில் இப்படிப் சொன்னார்.

"இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி"
---------------------------------------------------------------------------------------------------
ஆறு மனமே ஆறு -அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு..........!

(கட்டுரையின் நீளம் கருதி பாடல் வரிகளை இத்துடன் நிறுத்திவிட்டேன்
மன்னிக்கவும்)

கதை போதும். பாடத்தைப் பார்ப்போம் வாருங்கள்!
----------------------------------------------------------------------
அழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்!

ராகுவை அழகன் என்று யாராவது சொல்வார்களா? அவன்மேல் ஆசை
வைப்பார்களா என்று கேட்காதீர்கள்.

அழகிற்கு அளவுகோல் கிடையாது.எனக்கு கனகாவும் அழகுதான் காந்திமதியும்
அழகுதான். திரிஷவும் அழகுதான் மனோரமாவும் அழகுதான்.

அதுபோல சந்திரனும் அழகுதான்.ராகுவும் அழகுதான்

ஆனால் இருவரும் சேர்ந்தால் அழகாக இருக்காது!!!

இருவரும் சேர்ந்தால் என்ன ஆகும்?

சந்திரன் மனகாரகன். வாழ்க்கை மனப்போராட்டங்கள் மிகுந்ததாக மாறிவிடும்.
மனதிற்குப் பிடிக்காதவைகளே அதிகமாக நடக்கும். சிலருக்கு மனநோய்
ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகும்

வந்ததும் சரியில்லை, வாய்த்ததும் சரியில்லை பிறந்ததும் சரியில்லை. பிடித்ததும்
சரியில்லை என்று ஜாதகனை ஜனகராஜ் ரேஞ்சிற்குப் புலம்ப வைத்துவிடும்
சந்திரனுடன் சேரும் ராகு.

வந்தது = மனைவி
வாய்த்தது = பெற்றவள்
பிறந்தது = பிள்ளைகள்
பிடித்தது = தேடிப் பிடித்தது = வேலை அல்லது தொழில் அல்லது வியாபாரம்
--------------------------------------------------------------------------
ராகு யாருடன் சேர்ந்தாலும், சேர்த்துக் கொள்கிறவன் வலிமையாக இருந்தால்
மட்டுமே அழகு. சேர்த்துக் கொள்கிறவன் லக்கினாதிபதியாகவோ அல்லது
லக்கினத்திற்கு யோககாரகனாகவோ அல்லது லக்கினத்தில் இருந்து கேந்திரம்
அல்லது திரிகோணங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது உச்சமாக இருந்தாலோ
அல்லது சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலோ
மட்டுமே அவன் வலிமையுடையவனாகக் கருதப்படுவான். அப்போது மட்டுமே
அவன் ராகுவோடு சேர்ந்திருக்கலாம்.

இல்லை என்றால் ராகு படுத்தி எடுத்துவிடுவான். முறையில்லாத காதலில்
ஒரு பஜாரியைக் காதலித்த கதைபோல் ஆகிவிடும்.

ராகுவிற்கு சொந்த வீடு கிடையாது. ஆகவே தான் நுழையும் வீட்டில் ஜம்'மென்று
இருந்து விடுவான். அதைத் தன் சொந்த வீடாக ஆக்கிக்கொள்ள முயற்சிப்பான்.
உள்ளே அனுமதித்த அந்த வீட்டின் அதிபதி வலியவன் என்றால் வீடு தப்பிக்கும்.
இல்லை என்றால் இல்லை.

உதாரணத்திற்கு நான்காம் வீட்டை எடுத்துக் கொள்வோம்.

நான்காம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு.

1. தாய் ஸ்தானம் அது (ஜாதகனின் தாய் ஸ்தானம் சுவாமி! சொல்லிக் கொடுத்திருக்
கிறேன். மறக்கவில்லை அல்லவா?)

2. கல்வி ஸ்தானம்

3. சுக ஸ்தானம் (வீடு, வண்டி, வாகனம் போன்ற இகலோக வஸ்த்துக்களுடன்
சுகமாக இருப்பது. அதற்கான இடம்)

சரி, இந்த வீட்டில் ராகு இருந்தால் என்ன ஆகும்?

அதை இன்னும் ஃபைன் டியூனிங் செய்து பார்ப்போம்

தனுசு லக்கின ஜாதகன். 4ஆம் வீடு மீனம். இரண்டுமே குருவின் சொந்தவீடுகள்
4ல் ராகு இருக்கிறார். அதாவது மீனத்தில் ராகு இருக்கிறார்.

என்ன பலன்?

முதலில் மீனத்தை அவர் கைப்பற்றிகொண்டு விடுவார் (ஆமாம்,ஆக்கிரமிப்புதான்)
அந்த வீட்டை அவர் ராஜாங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார். சர்வ அதிகாரமும்
அவர் கையில். ஹிட்லரின் கையில் கிடைத்த ஜெர்மனி போல் ஆகிவிடும் அந்த வீடு.
தாய், கல்வி சுகம் என்று எல்லாவற்றிலும் பிரச்சினைகள் உருவாகும்.

எல்லோருக்குமா?

இல்லை! எல்லோருக்கும் இல்லை!

குருபகவான் ஜாதகனின் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அது நடக்காது.
சந்திரன் வலிமையாக இருந்தால் ஜாதகனின் தாய்க்கு ஒன்றும் நேராது.
வித்யாகாரகன் புதன் நன்றாக இருந்தால் கல்வியில் தடங்கல் ஏற்படாது
அல்லது படிப்பு பாதியில் நின்று போகாது.
சுக்கிரன் நன்றாக இருந்தால் ஜாதகனின் சுகங்களுக்குக் கேடு வராது.

அதுதான் பலன். இல்லையென்றால் சொல்லப்படுள்ள நால்வரில் யார் யார் வீக்'காக
இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தகுந்த மாதிரிப் பலன்கள் மாறும்.

நான்கு பேருமே வீக்'காக உள்ளார்களா? ஜாதகத்தை மூடி வைத்துவிடலாம்.

ஒரே வரியில் சொல்லிவிடலாம்.

ஜாதகன் கஷ்டப்படவே பிறந்தவன்.

(தொடரும்)
---------------------------------------------------------------------------------------------------
அலசல் மூன்று பகுதிகளாகத் தொடரும்.
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், நேரம் கருதியும்
இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

5.1.09

ஆயிரம் ஏக்கர்களைப் பறிகொடுத்த இளைஞன்!


அந்த இளைஞனுக்கு அப்போது இருபது வயது. துள்ளும் வயது.
மிடுக்கான வயது. ஓடுகிற பாம்பை மிதிக்கின்ற வயது. பல கனவுகளோடு
வாழ்க்கையை எதிர் நோக்குகின்ற வயது. எப்படி வேண்டுமென்றாலும்
வைத்துக் கொள்ளூங்கள்.

இன்றையக் கதையின் நாயகன் அவன்தான்.

பெயர்?

பெயரெல்லாம் முக்கியமில்லை. நாயகன் என்று வைத்துக்கொள்ளுங்கள்

செட்டிநாட்டுப் பகுதியில் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தவன் அவன்
அவன் பிறந்தபோது அவன் குடும்பத்தினருக்கு 3,000 ஏக்கர்கள் விளை
நிலங்கள் சொந்தமாக இருந்தன. அதில் அவன் பங்கு மட்டும் ஆயிரம்
ஏக்கர்

அவன் வாழ்க்கையில் கிரகங்கள் எப்படி சதிராட்டம் ஆடின என்பதுதான்
இன்றையக் கதை. சுவாரசியமாக இருக்கும். சுவாரசியத்தை மட்டும்
இப்போது பார்ப்போம்.

காலம்: 1941ஆம் ஆண்டு! ஏ.வி.எம்மின் சபாபதி திரைப்படம் வெளிவந்து
சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்த காலம். அந்த சபாபதி படத்தில்
வரும் நாயகன் T.R. ராமச்சந்திரனைப் போலவே நமது நாயகனும் எந்தக்
கவலையும் இல்லாமல் வளர்ந்தான்.

வளர்ந்தான் என்பதைவிட, வளர்க்கப்பட்டான் என்று சொல்ல வேண்டும்

சீமான் வீட்டுப்பிள்ளைகள் எல்லோரும் அந்தக் காலகட்டத்தில் எப்படி
வளர்க்கப் பட்டார்களோ அப்படி அவனும் வளர்க்கப்பட்டான்.

காலை, மாலை நேரங்களில் டென்னிஸ் கோர்ட்டில் இருப்பான். மற்ற
நேரங்களில் சீட்டாட்டம். அவனைச் சுற்றிலும் பெரிய நண்பர்கள் வட்டம்.

டென்னிஸ் ராக்கெட் எல்லாம் அப்போது லண்டனில் இருந்து வரும்.
அதற்கான பிரத்தியேகக் கடை ஒன்று சென்னை மவுண்ட் ரோட்டில்,
P.R.R & Sons அருகே இருந்தது.

அவன் வாழ்வில் ஒரு பெரிய சோகம் இருந்தது. அதை அவன் உணர்ந்து
வருந்தாமல் இருக்கும்படியாக வளர்க்கப்பட்டான்.

ஆமாம் அவனுக்குத் தந்தை இல்லை.தன் தாயின் கருவறையில் அவன்
இருக்கும்போதே அவனுடைய தந்தை காலமாகிவிட்டார். கார் விபத்தில்
இறந்து விட்டார்.

அவன் தாயாரின் பெயர் லக்ஷ்மி ஆச்சி. சிவந்த மேனி. சுருள் சுருளாகக்
கற்றை முடி. மிகவும் அழகாக இருப்பார்கள். அவன் தந்தையாரோ அதற்கு
நேர் மாறாக வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் P.S. வீரப்பா
வைப் போல கறுப்பாக இருப்பார்.

அவன் தந்தையார் கார் விபத்தில் இறந்தபோது அவருடைய வயது 25 தான்.

அவனுடைய தாயாரின் வயது 23. இளம் வயதிலேயே கணவனைப் பறி
கொடுத்த அந்த மாதரசியைக் கட்டிக்கொண்டு, அவளுடைய உறவினர்கள்
எல்லாம் ஓ'வென்று கதறி அழுதார்கள்.

அவர்கள் அழுகையின் சத்தம் கேட்டுக் காலன் பயப்படவில்லை. அதோடு
இறந்த மனிதனையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

அந்த அபலைக்கு அப்போது கையில் ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை.
அதோடு வயிற்றில் இரண்டு மாதக் கர்ப்பத்தில் ஒரு குழந்தை. கர்ப்பத்தில்
இருந்த அந்தக் குழந்தைதான் நம் நாயகன்.

அந்தக்காலத்து செட்டிநாட்டு வழக்கப்படி, கணவன் இறந்த மூன்றாம் நாள்
அவளை முழு விதைவையாக்கும் சடங்கு நடக்க இருந்தது.

அவளிடம் திருமாங்கல்யத்தைக் கழற்றி வாங்க வேண்டும். வெண்ணிற
ஆடைகளைக் கொடுத்து அவளை அணிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
அப்படிப் பட்ட சூழ்நிலைக்கு ஆளாகும் இளம்பெண்கள் தரையில் விழுந்து
புரண்டு கதறி விடுவார்கள். பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அந்த சமயத்தில்
வீட்டிற்குள் ஆடவர்களும், இளகிய மனம் படைத்த பெண்களும் இருக்க
மாட்டார்கள். வெளியேறிவிடுவார்கள். சடங்கு முடிந்து எல்லாம் சரியான
பிறகு திரும்பி வருவார்கள்.

உறவினர்களில் வயதில்மூத்த விவதைப்பெண் ஒருத்திதான் அதைச் செய்வார்

வந்தவர், லக்ஷ்மி ஆச்சியைக் கேட்டார்.

"ஏன்டி, நாள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா?"

புரிந்து கொண்ட லக்ஷ்மி ஆச்சி மெல்லிய குரலில் பதில் சொன்னார்.

"இல்லை, இரண்டுமாதமாக முழுகாமல் (முழுக்கு இல்லாமல்) இருக்கிறேன்!"

சடங்கு நிறுத்தப்பட்டது. வயிற்றில் குழந்தையோடு இருக்கும் பெண்ணிற்கு
விதவைக் கோலத்தைக் கொடுப்பதில்லை. அப்படி ஒரு தள்ளுபடி!
(concession)

அன்றிலிருந்து சுமார் எட்டு மாதகாலம் கழித்து நமது நாயகன் பிறந்தான்

14.8.1921ஆம் ஆண்டு மாலை 5:52 மணிக்கு மூல நட்சத்திரத்தில் நமது
நாயகன் ஜனனம் ஆனான். லக்கினம் மகரம். (ஜாதகம் கீழே உள்ளது)
===================================================================
முதலில் சுப நிகழ்ச்சியாக, பிறந்த குழந்தையை, அதன் ஆயா வீட்டில்
(பாட்டி வீட்டில்) இருந்து அழைத்து வரும் வைபவம் நடந்தது. பாட்டி
வீட்டில் தங்கத்தாலும் வைரத்தாலும் குழந்தைக்கு மெருகேற்றியிருந்தார்கள்.

"பாவம் லக்ஷ்மி. அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது இறைவனின்
கருணை!" என்று பலரும் மகிழும் வண்ணம் அந்த வைபவம் நடந்தது.
ஆடம்பரமில்லாமல், வந்தவர்களுக்கு விருந்து பறிமாறப்பெற்றது.

அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து, நமது நாயகனின் தாயாருக்கு விதவைச்
சடங்கு நடந்தேறியது.

பதினெட்டாயிரம் சதுர அடியில் பெரிய வீடு. கூட்டுக் குடும்ப வாழ்க்கை.
மாமனார், மாமியார், மூன்று கொழுதனார்கள், அவர்களின் மனைவி மக்கள்
ஆறு பணியாட்கள் என்று வீடு கலகலப்பாக இருந்ததால் லக்ஷ்மி ஆச்சியும்
தன் தலைவிதியை நொந்து நூலாகாமல், ஒதுக்கி வைத்துவிட்டு, சவாலை
ஏற்றுக் கொண்டு தன் குழந்தைகளுக்காக வாழ்க்கையை எதிர் கொண்டார்.

அபரிதமான செல்வம் அதற்குத் துணையாக நின்றது.

தன்பிள்ளைகள் இரண்டையும் செல்லமாக வளர்த்தார். காலைப் பலகாரமாக
இட்லி, தோசை இருக்காது. தினமும் நெய் அல்லது எண்ணெயில் செய்த
வடை, வெள்ளைப் பணியாரம், அரிசி உப்புமா, பூரிமசால் என்று விதம்
விதமான பலகாரங்களைச் செய்து கொடுப்பார்.

ஆச்சியின் மகளூக்குப் பதினான்கு வயதில் திருமணம் நடந்தது.

அதற்குப் பிறகு இரண்டு வருடத்தில் மகனின் திருமணத்தில் மகிழ்ந்தார்

31.3.1931ஆம் ஆண்டு நமது நாயகனுக்குத் திருமணம். மாப்பிள்ளைக்
கோலத்தில், ஷெர்வானி ஆடை, தலையில் டர்பன் என்று கன ஜோராகக்
காட்சியளித்தான். அப்போது அவனுக்கு வயது பத்து!

உறவுப் பெண்ணைத்தான் மணந்து கொண்டான்.

அக்காலத்தில் பத்து வயது, பன்னிரெண்டு வயதுக் குழந்தைத் திருமணம்
என்பது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள்.

ஒவ்வொரு வீட்டிலும் திருமணமான குழந்தை ஜோடிகள், மூன்று அல்லது
நான்கு ஜோடிகள் இருக்கும். வீட்டிற்குப் பின்புறம் அல்லது பக்கவசத்தில்
இருக்கின்ற தோட்டத்தில் அக்குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடுவார்கள்.

பையன்கள் எல்லாம் மரம் ஏறி அல்லது சுவற்றில் ஏறி அல்லது ஓடிபிடித்து
விளையாடுவார்கள். பெண் குழந்தைகள் எல்லாம் தரையில் கோடு கிழித்துப்
பாண்டி ஆட்டம் ஆடுவார்கள்.

அப்படி ஆடும் போது கழுத்தில் அணிந்திருக்கும் ஆறு பவுன் அல்லது
பத்துப் பவுன் அளவு திருமாங்கல்யச் சங்கிலிகள் இடைஞ்சலாக இருக்கும்
என்பதால், அவற்றைக் கழற்றி அருகில் இருக்கும் மரக் கிளைகளின்
கொம்புகளில் மாட்டி வைத்துவிட்டு, வெறும் கழுத்தோடு விளையாடுவார்கள்.

ஆட்டம் முடிந்து, வீட்டிற்குள் திரும்பும்போது, அவற்றை எடுத்து மீண்டும்
கழுத்தில் அணிந்து கொள்வார்கள். சமயத்தில் மறந்து விட்டுப்போய், உள்ளே
திட்டு வாங்கிய கதைகளும் உண்டு.

அதெல்லாம் உப கதைகள். அது போன்ற உபகதைகள் பல உள்ளன!
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றை விவரிக்கிறேன். இப்போது மெயின்
கதைக்குப் போவோம்!
------------------------------------------------------------------------------------------------
ஜாதகன் பிறந்தபோது அவனுடைய தசா இருப்பு. கேது திசையில் 29 நாட்கள்
மட்டுமே. அதற்குப் பிறகு சுக்கிர திசை.

20 வருடம் முழுமையாக சுக்கிர திசை.

குட்டிச்சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பார்கள்.அதாவது சிறுவயதில் வரும்
சுக்கிரன் ஜாதகனைக் கெடுத்துவிட்டுப் போய்விடுவான் என்பார்கள்

நமது நாயகனின் வாழ்க்கையில் முதலில் சுக்கிரன் விளையாடினான். நாயகனை
வெறும் சுகவாசியாக்கி, விளையாட்டுக்களில் ஈடுபாட்டை உண்டாக்கியவன்-
(சீட்டாடத்தையும் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்) படிப்பில்
ஆர்வமில்லாமல் செய்துவிட்டான்.

ஆனாலும் 7ல் நின்ற புதன் (சுயவர்கத்தில் ஆறு பரல்கள்) பேச்சு, செயல்,
நினைவாற்றல், வித்தைகள் முதலிவற்றில் கெட்டிக்காரனாக அவனை ஆக்கினான்.
அந்தக் காலத்து இளைஞர்களின் அதிக பட்சப் படிப்பான பத்தாம் வகுப்புவரை,
அவன் ஜாதகனைக் கொண்டுபோய் உட்காரவைத்து தன் கடமையைச் செய்து
விட்டான். நமது நாயகனும் தத்தித்தத்திப் பள்ளி இறுதியாண்டு வரை எட்டிப்
பார்த்துவிட்டு வந்தான்.

நாயகனுக்கு, தமிழிலும், கணிதத்திலும், கணக்கு வழக்குகளிலும் நல்ல பாண்டியத்யம்
ஏற்பட்டது. அது அவனுடைய பிற்காலத்து வாழ்க்கைக்கு மிகவும் உதவியது.
அதற்குக் காரணம் புதனும், குருவும். இருவரும் சுய வர்க்கத்தில் தலா
ஆறு பரல்களுடன் ஜம்மென்று இருந்தார்கள்.
......................................................................................................................
இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும். செட்டிநாடு மிகவும்
வறண்ட பூமி. வானத்தைப் பார்த்துக் கெஞ்சும் பூமி. பாண்டிய மன்னன், நகரத்தார்
களுக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்த போது, இன்றைய திருப்பத்தூருக்கு கிழக்கே
தொண்டி கடற்கரை வரை அகலத்தில் சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தையும்,
புதுக்கோட்டைக்குத் தெற்கே சிவகங்கை வரை நீளத்தில் சுமார் 60 கிலோ மீட்டர்
தூரத்தையும் அடக்கிய மொத்த பகுதியையும் கொடுத்திருந்தான்.
(அதைத்தான் இப்போது செட்டிநாடு என்கிறார்கள்).

நெடுங்காலமாக கடல் வணிகம் செய்து பழக்கப்பட்ட அவர்கள், நாயகன் காலத்தில்
இலங்கை, பர்மா, மலேசியா, தாய்லாந்து, வீயட்நாம் வரை பல நாடுகளில் வணிகம்
செய்துகொண்டிருந்தார்கள். அந்தந்த நாட்டில் ஏராளமான சொத்துக்களையும்
வாங்கிக் குவித்திருந்தார்கள்!

அன்றைய காலகட்டத்தில் இந்தக் குறிப்பிட்ட எல்லா நாடுகளுமே பிரிட்டீஷ்
சாமராஜ்யத்தின் கீழ் இருந்தது. அன்றைய பிரிட்டீஷ் சாமராஜ்யத்தின் பிரதமர்
வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னதைப் போல சூரியன் மறையாத சாம்ராஜ்யமாக
அது திகழ்ந்தது. (Winston Churchill said: "The sun never sets in our empire!")

பாஸ்போர்ட், விசா, அந்நியச் செலவாணிக் கணக்கில் பணம், செக்யூரிட்டி செக்
குண்டு வெடிப்பு, இத்யாதிகள் போன்ற புண்ணாக்குகள் எதுவும் இல்லாத காலம்
அது. யார் வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமென்றாலும் பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்திற்குள் சென்று வரலாம். முன் அனுமதி, பின் அனுமதி என்று
எதுவும் கிடையாது.

வணிகத்திற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்தவர்களுக்கு சில கொள்கைகள்,
கட்டுப்பாடுகள் இருந்தன. யாரும் தங்கள் வீட்டுப் பெண்களையும், குழந்தை
களையும், வயது முதிர்ந்தவர்களையும் கூட்டிச் செல்வதில்லை. (அதற்காகத்தான்
பெரிய பெரிய வீடுகளை இங்கே கட்டி அதில் அனைவரையும் கூட்டாக,
ஒருவருக்கொருவர் துணையாக, சச்சரவுகள் இன்றி வாழ்வதற்குப் பழக்கியிருந்தார்கள்)

15 வயதிற்கு மேல் 50 வயது வரை உள்ளவர்களே அதிகமாகச் சென்று வந்தார்கள்
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பெரிய ஊர்களிலும், தங்கும் விடுதிகளைக் கட்டி
அல்லது வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்கள். சமையல் வேலைகளுக்கும்
தத்தம் ஊர்களில் இருந்து ஆட்களைக் கொண்டுபோய் அங்கே வேலைக்கு அமர்த்தி
யிருந்தார்கள். அதனால் இங்கே இருந்து அங்கே செல்பவர்களுக்கு எந்த வசதிக்
குறைவும் இல்லாமல் இருந்தது.

இங்கே இருந்து அங்கே செல்பவர்கள், ஆறு மாதங்கள் அல்லது வருடத்திற்கு
ஒரு முறை தாய் நாட்டிற்கு வந்து ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் இங்கே
இருந்து விட்டு மீண்டும் அங்கே செல்வார்கள். வியாபாரமும் கூட்டுக் குடும்பமாகச்
செய்ததால் அங்கே அண்ணன் தம்பிகளில் ஒருவர் மாற்றி ஒருவர் இருந்து வணிகத்
தைக் கவனித்துக் கொண்டார்கள்

எல்லாம் ஒரு அற்புதமான set upல் ஓடிக்கொண்டிருந்தது.

நமது நாயகனின் குடும்பத்திற்குப் பர்மாவில் வணிகம். நாயகனின் தந்தையாரும்,
அவருடைய மற்ற இரண்டு சகோதரர்களும் சேர்ந்து ஆரம்பித்து வளர்த்து
வைத்தது. நாயகனின் பெரியப்பா மகன், நாயகனை விட பதினெட்டு வயது மூத்தவர்.
நாயகனுக்குப் பதினேழு வயதாகும்போது, அவர்தான் பர்மாவில் நிர்வாகம் செய்து
கொண்டிருந்தார்.

படித்து முடித்தவுடன் நாயகனும் பர்மாவிற்குச் சென்று ஆறுமாத காலம் தங்கி வேலை
களைக் கற்றுக்கொண்டான்.

அந்தக் காலத்தில் சென்னையில் இருந்து பர்மா செல்லும் கப்பல் பயணமெல்லாம்
சுவாரசியமாக இருக்கும். அதே போல பர்மா மக்களின் நடைமுறை வாழ்க்கையெல்லாம்
சுவாரசியமாக இருக்கும். அவற்றை எல்லாம் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்
இங்கே எழுதினால் பதிவு அனுமார் வாலைப் போல நீண்டு விடும். அதோடு நமது
சட்டாம் பிள்ளை சண்டைக்கு வந்து விடும் அபாயமும் இருக்கிறது. 40 பக்கப்
பதிவுகள் போடும் உரிமை அவர் ஒருவருக்குதான் வழங்கப் பெற்றிருக்கிறது!

God's own land என்று இங்கே கேரளாக்காரர்கள் பீற்றிக் கொள்கிறார்களே! அதைவிட
அற்புதமாக இருக்குமாம் பர்மா! மலைகளும், அடர்ந்த காடுகளும், சமவெளிகளும்,
ஆறுகளும், வயல்வெளிகளும், தோட்டங்களும் அவற்றையெல்லாம் விட நீண்ட
தலைமுடிகளைக் கொண்ட (மைனஸ் வேல்விழிகள்) மாதர்களும் என்று அனைத்தும்
அசத்தும்படியாக இருக்குமாம்.

க்யோன்பாவ் (Kyonpyaw - பழைய பெயர் சூம்பியோ) என்கின்ற சிற்றூர்தான்
நாயகனின் குடும்பத்தினர் வணிகம் செய்து வந்த ஊர். பர்மாவின் தலைநகரமான
ரங்கூனில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் பாஸியன் மாவட்டத்தில்
அது இருக்கிறது.

சென்னையில் இருந்து கப்பலில் பயணித்து (சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரம்),
ரங்கூன் சென்று அங்கிருந்து சூம்பியோவிற்குச் செல்ல வேண்டும். பிரம்மாண்டமான
ஐராவதி நதியின் டெல்டா பகுதி அது. Rice Bowl of Burma என்பார்கள்.
வழியெங்கும் ஆறுகளும் கால்வாய்களும் தோட்டங்களும், அதில் வேலை செய்யும்
பெண்களும் என்று ரம்மியமாக இருக்குமாம். பாதி தூரத்தைப் படகில் சென்றுதான்
கடக்க வேண்டும். அப்போது நெடுஞ்சாலைகள், பாலங்கள் எல்லாம் கிடையாது.

என்ன வணிகம்? எல்லோருக்குமே Money Lending & Finance Business மற்றும்
விவசாயம், நெல் வணிகம்.

செட்டிநாட்டுக்காரர்கள் ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து நூறு பேர்கள் பர்மாவின்
பல பிரதேசங்களில் பரவி இருந்து வணிகம் செய்து கொண்டிருந்தார்கள். சுமார்
பத்து லட்சம் ஏக்கர்களுக்குமேல் அவர்களுக்குச் சொந்தமாக விளை நிலங்கள்
இருந்தன.(Fertile Lands)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிறுவனர் திரு.M.CT.M. பெத்தாச்சி செட்டியார்
அவர்களுடைய குடும்பத்திற்கும், அண்ணாமலை பல்கலைக் கழக நிறுவனர் ராஜாசர்
திரு.அண்ணாமலை செட்டியார் அவர்களுடைய குடும்பத்திற்கும் தலா ஐம்பதாயிரம்
ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருந்தனவாம்.

சென்றவர்கள் யாரும் வயல்களில் இறங்கி வேலை செய்யவில்லை. எல்லா நிலங்களுமே
அந்த நாட்டு விவசாய மக்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. வருடம் மூன்று
போகம். குத்தகைப் பணம் நெல்லாக வந்துவிடும். நெல் சந்தையில் விற்கப்பட்டுப்
பணமாகி விடும்.

1885ஆம் ஆண்டு முதல் 1945 ஆண்டு வரை சுமார் 60 ஆண்டு காலம் பறந்து
விரிந்த, செழித்துச் சிறந்த அவர்களுடைய வணிகம். 1945ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.

1942ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் உச்ச நிலையை அடைந்த போது
ஜப்பானியப் படையெடுப்பால் பர்மா கடுமையான பாதிப்பிற்குள்ளானது. அதுசமயம்
உயிரைக் காத்துக் கொள்ளும் முகமாக அங்கே இருந்த நகரத்தார்கள் அனைவரும்
போட்டது போட்டபடி தாயகம் திரும்பி விட்டார்கள்.

யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், பெரும் பொருளாதாரப் பாதிப்பிற்கு உள்ளான
ஆங்கிலேய அரசு, வரிசையாகத் தான்கைப்பற்றி வைத்திருந்த காலனி நாடுகள்
அனைத்திற்கும் அடுத்தடுத்து சுதந்தரத்தை வழங்கியதோடு தன் வல்லரசு
மகுடத்தையும் கழற்றிக் கீழே வைத்தது.

பல நாடுகளில் அதிரடியாக ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. பர்மாவிலும் ஆட்சி
மாற்றம் ஏற்பட்டது. 4.1.1948ல் பர்மா சுதந்திர நாடானது. அப்போதைய ஜனத்தொகை
சுமார் இரண்டு கோடி. திரு. யூ நூ (U Nu) என்பவர் பிரதமாரகப் பதவி ஏற்றார்.

சட்ட திட்டங்கள் மாறின. சம்பிரதாயங்கள் மாறின. இந்தியர்கள் வெளியேற்றப்
பட்டார்கள். வெளியில் இருந்து உள்ளே வரும் நபருக்கான சட்டங்கள் கடுமையாகின!
மொத்தத்தில் அடித்து விரட்டாத குறை. பலர் அகதிகளைப் போல ஓடிவந்தார்கள்.

அந்தச் சமயத்தில் அங்கே இருந்த நமது நாயகன் முன் எச்சரிக்கையாகக்
கப்பலில் பயணச் சீட்டைப் பதிவு செய்து வைத்திருந்தமையால் சொகுசாகத் திரும்பி
வந்து சேர்ந்தான். (அப்போதைய கப்பல் கட்டணம் முதல் வகுப்பிற்கு வெறும்
100 ரூபாய் மட்டுமே! மூன்றாம் வகுப்பிற்கு ஐம்பது ரூபாய் கட்டணம்)

அவன் கையில் கொண்டு வந்தது வெறும் 20 ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே! அது
இன்றைய மதிப்பில் சுமார் 10 லட்சங்களுக்குச் சமம்.

அங்கே இருந்த நிலங்கள், வீடு வாசல்கள் எல்லாம் போனது போனதுதான்.
கொள்ளையில் பறிபோனது போல பறிபோயிற்று

நமது நாயகனாவது சொகுசாகத் திரும்பி வந்தான். நமது நாயகனின் ஒன்றுவிட்ட
சகோதரன் (அதாவது நாயகனின் பெரியப்பா மகன்) மேலும் மூன்று மாதங்கள்
இருந்து பார்த்துவிட்டுக் கடைசியில் கப்பல் போக்குவரத்தும் நின்றுவிட்ட நிலையில்,
உயிர் தப்பி, வனாந்திரக்காடுகள் வழியாக கல்கத்தா வரை நடைப்பயணம் மேற்
கொண்ட மக்களோடு மக்களாகப் பொடி நடையாக கல்கத்தாவிற்கு வந்து, பிறகு
கல்கத்தாவிலிருந்து ரயில் மார்க்கமாக ஊருக்கு வந்து சேர்ந்தார்.

திரும்பி வந்தவர்கள் அனவரும் ஒரு குழு அமைத்து முன்னாள் பாரதப் பிரதமர்
பண்டிட் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் மூலமாக அங்கே திரும்பிச் சென்று
வணிகத்தைத் தொடர முயன்றார்கள் முடியவில்லை. நிலங்களை விற்றுவிட்டுத்
திரும்பிவிடுகிறோம் அனுமதி கொடுங்கள் என்றாரகள். அதுவும் நடக்கவில்லை.
நஷ்ட ஈடு கேட்டுப்பார்த்தார்கள். அதற்கும் நோ என்று பதில் வந்தது.
அன்றைய பர்மா அரசு அனைவருக்கும் நாமக்கட்டியை அரைத்து நன்றாக
நெற்றியில் பட்டை நாமம் போட்டு விட்டது. சல்லிக் காசுகூட பணம் கொடுக்கவில்லை.

நகரத்தார்கள் என்று இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் குஜராத்திகளும் அதிக
அளவில் இருந்தார்கள். அவர்களும் தங்களுடைய நிலங்களுக்காகத் தாவா செய்து
பார்த்தார்கள். ஒன்றும் பெயரவில்லை

இவ்வளவு பேரின் வயிற்றெரிச்சலும் சும்மா போகுமா? பர்மா இன்றளவும்
முடங்கிப்போய்க் கிடக்கிறது. ஆண்டுகள் அறுபதானாலும் பர்மாவால் எழுந்து
நிற்க முடியவில்லை! சாபம் என்பது அதுதான்!

அதே நேரத்தில் மலேசியா அரசு, யுத்தத்திற்குப் பிறகு அனைவருக்கும் வேண்டிய
உதவிகளைச் செய்தது. வந்தவர்கள் எல்லாம் ஆங்கே மீண்டும் திரும்பிச் சென்றார்
கள். அவர்களும் இன்று நன்றாக இருக்கிறார்கள். அந்த நாடும் நன்றாக இருக்கிறது!

பட்டினத்தார் பாடல்களைச் சின்ன வயதிலேயே கற்றுத் தேறியிருந்ததால்,
பர்மாவில் பறி கொடுத்துவிட்டுத் திரும்பியவர்கள் அனைவரும் தலையை
முழுகி விட்டு, வாழ்க்கையின் அடுத்த பாய்ச்சலுக்கு அல்லது அடுத்த போராட்டத்
திற்குத் தங்களைத் தயார் செய்தார்கள்
------------------------------------------------------------------------------------------------------
நமது நாயகனுக்கு, 27 வயதோடு ஆட்டம் எல்லாம் முடிந்து விட்டது. ஆனாலும்
எதற்கும் கலங்காமல் மனத் துணிவோடு இருந்தான்.

அதற்குக் காரணம் அவனுடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் 39 பரல்கள்.
திடமான மனது. அதோடு அந்த வீடு குழந்தை பாக்கியத்திற்கான இடம். அதனால்
நாயகனுக்கு வஞ்சனை இல்லாமல் குரு பகவான் பத்துக் குழந்தைகளைக் கொடுத்தார்
முதலில் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு வயதிற்குள்ளாகவே நோய்
வாய்ப்பட்டு இறந்துவிட்டன. மிச்சம் எட்டுக் குழந்தைகள்.

வரவுக் கணக்கில் 4 குழந்தைகள். செலவுக் கணக்கில் 4 குழந்தைகள். அதாவது
நான்கு ஆண் குழந்தைகள். நான்கு பெண் குழந்தைகள். எல்லாம் நாயகனின்
17 ஆவது வயது முதல் 42 ஆவது வரை பிறந்தவைகள்.

எதாவது ஒரு குழந்தையைக் காணோமே என்று நாயகனின் துணைவியார்
தேடினால், நாயகன் சொவானாம், "எதற்குக் கவலைப் படுகிறாய்? எட்டில்
ஒன்றுபோனால் ஏழு!" :-)))))))
----------------------------------------------------------------------------------------------------------
அதேபோல நாயகனின் சுக ஸ்தானத்தில் 35 பரல்கள். சின்ன வயதில் B.S.A
மோட்டார் சைக்கிள் வைத்திருந்தான். கார் வாங்க ஆசைப்பட்டபோது உலக
மகா யுத்தம் வந்து தொலைத்தது. அதோடு. கெரசின் ரேசன், பெட்ரோல்
தட்டுப்பாடு என்று படுத்தவே, கார் வாங்கும் ஆசையைத் தள்ளி வைத்தான்.
யுத்தம் முடிந்து பர்மாவும் ஊற்றிக் கொண்டு விட்டதால் கார்வாங்கும் ஆசை
நிறைவேறவில்லை. ஆனாலும் அவனுடைய நண்பர்களுடைய காரெல்லாம்
அவனுடைய கார்கள்தான்.Fiat, Willys Jeep, Pontiac, Buick, Cadillac
Ambassador, French Gimca, Race car Railey,Bug Fiat, Benz என்று அவன் ஓட்டாத
கார்களே இல்லை என்னும் அளவிற்கு கார்கள் தொடர்ந்து கிடைத்தன.
வெளியூர் செல்லும் நண்பர்கள் அவனைத்தான் துணைக்குக் கூட்டிக் கொண்டு
செல்வார்கள்.

உணவு, உடை என்று சில்லரைத் தேவைகளுக்கு அவன் என்றுமே கஷ்டப்
பட்டதில்லை. அந்த அளவிற்கு நான்காம் இடம் அவனுக்குக் கை கொடுத்தது.
--------------------------------------------------------------------------------------------------------
அவனுடைய ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மிகவும் நலிந்துபோய் இருந்தது.
அங்கே இரண்டரை வில்லன்கள் டென்ட் அடித்துத் தங்கியிருந்தார்கள்.
ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம். தந்தைக்கு உரிய ஸ்தானம், பூர்வீகச்
சொத்துக்களுக்கு உரிய ஸ்தானம். அங்கே இருக்கும் சனியும், ராகுவும்
(இரண்டரை வில்லன்கள் கணக்கில் ராகுவிற்கு ஒன்றரை மதிப்பு) கூட்டணி
போட்டு, அவனுடைய தந்தையையும் காலி செய்தார்கள். பூர்விகச் சொத்தான
ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் காலி செய்தார்கள்.

சனி அவனுடைய லக்கினநாதன். அவன் திரிகோணத்தில் இருந்ததால் சில
பாகியங்களைப் பெற்றுத்தந்தான். இருந்தாலும் தன்னுடைய சுய வர்க்கத்தில்
ஒரு பரலுடன் மட்டுமே அங்கே நின்றதால், ஜாதகனின் தந்தையையோ
அல்லது பூர்வீகச் சொத்துக்களையோ அவனால் காப்பாற்றிக் கொடுக்க
முடியவில்லை!

ராகு குண்டாந்தடியுடன் நின்று, இரக்கமில்லாமல் அவற்றைச் செய்தான்.
ஜாதகனின் தந்தை இல்லாத நிலைமைக்கும், சொத்துக்களைப் பறி கொடுத்த
நிலைமைக்கும் அவனே காரணம்
----------------------------------------------------------------------------------------------------
அதோடு சஷ்டம அதிபதி (6th lord) புதனும், அஷ்டம அதிபதி சூரியனும்
(8th lord) ஒன்று சேர்ந்து லக்கினத்திற்கு 7ல் அமர்ந்து, தங்களது பார்வையால்
சில் கஷ்டங்களையும் கொடுத்தார்கள்.

நான் ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கிய நேரம். ஜாதகனின்
ஜாதகத்தைப் பார்க்க நேர்ந்தது. அவனைப் பற்றிய முழு விவரமும் அறிந்திருந்ததால்
ஜாதகனின் இழப்புக்களுக்குக் காரணம் 9ஆம் இடத்து ராகுதான் என்ற முடிவிற்கு
வந்தேன்.
.............................................................................................................................
ஒருநாள் ஜாதகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன்:

"ஒரு நூறு ரூபாய் நோட்டு தொலைந்தால் கூட மனித மனம் பதறுமே?
ஆயிரம் ஏக்கர்களை இழந்த செய்தி கிடைத்த அன்று உன் மனநிலை எப்படி
இருந்தது?"

புன்னகைத்துவிட்டு அவன் சொன்னான்:

"ஒருநாள் கூட என் தந்தையின் கரங்களில் தவழ முடியாமல் பிறக்கும் முன்பாகவே
என் தந்தையை இழந்தேனே, அதைவிட இது ஒன்றும் பெரிய இழப்பு அல்ல!
தனது 23 வயதில் எனது தாய் தனது கணவனைப் பறிகொடுத்தாளே, அதைவிட
இது ஒன்றும் பெரிய இழப்பு அல்ல!"

நிதர்சனமான உண்மை!

அதுதான் ஞானம் என்பது! அந்த உணர்வு நிலைதான் ஞானம் என்பது!
-------------------------------------------------------------------------------------------------------
அந்த இளைஞனின் பெயரை இப்பொது சொல்கிறேன். அவன் பெயர்
SP.வீரப்பன். சர்வ நிச்சயமாக உங்களுக்கு அவனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

ஆனால் அவனுடைய இரண்டாவது மகனை உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

அவன் பெயர் SP.VR.சுப்பையா.

ஆமாம் அவன்...மன்னிக்கவும் என்னுடைய தந்தையார்தான் அந்த நாயகர்!

அவருடைய படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்!
.......................................................................................................................


நாயகரின் 36 வது வயதில் எடுக்கப்பெற்ற புகைப்படம்!

நாயகரின் 20 வயதுப் புகைப்படம்.
வலது பக்கம் கடைசில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சபாரி உடையில் இருப்பவர்தான் நாயகர்.
இடது கோடியில் இருப்பவர் நாயகரின் ஒன்று விட்ட சகோதரர். (பெரியப்பா மகன்)
மற்றவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர்கள், மற்றும் உறவினர்கள்

நாயகரின் குடும்பத்தினர் மற்றும் பங்காளிகளுக்குச் சொந்தமான கோவிலில் விழா.
கழுத்தில் மாலை, மற்றும் கையில் தட்டுடன் இருப்பவர் நாயகரின் அண்ணன்.
அவரின் இடப்பக்கம், முண்டா பனியன் மற்றும் மூக்குக் கண்ணாடியுடன் நிற்பவர்தான் நாயகர்.
உடன் இருப்பவர்கள் உறவினர்கள்.
நாயகரின் சகோதரர் முருகனுக்கு சாத்துவதற்காக வைரவேலைக் கையில்
எடுத்துச் செல்லும் நிகழ்வு. தேதி 8.9.1969
==============================================================
"வாத்தியார்?"

"என்ன ராசா?"

"இந்தக் கதைக்கும் பாடத்திற்கும் உள்ள தொடர்பைச் சொல்லுங்கள்!"

"தீய கிரகங்கள் மனிதனை நிற்க வைத்து அடிக்கும். ஆனால் ராகு மனிதனைத்
தொங்கவிட்டு அடிக்கும். அடுத்த பாடம் ராகுவைப் பற்றியது. அதற்கான
முன்னோட்டம்தான் இது!

நன்றி வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்
-----------------------------------------------------------------------------

1

2

இந்த ஒன்று, மற்று் இரண்டு படங்கள் நிலங்களின் குத்தகைதாரர்களிடம் இருந்து
வரும் நெல்லை வரவு வைக்கும் ஏடாகும்.

அதில் அனத்து விவரங்களும் இருக்கும்
.
குத்தகைக்கு எடுத்த பர்மாக்காரரின் பெயர், நிலத்தின் அளவு,
அவர் கொண்டுவந்து கொடுத்த நெல்லின் அளவு
ஆகியவை போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்
இந்தப் புத்தகம் எழுதப்பெற்ற ஆண்டு 1937

முன் மாதிரிக்காக அதைக் கொடுத்துள்ளேன்!

May 1934 ஆம் ஆண்டில் - நாயகனின் 13 வது வயதில்
அவன் மைனர் என்ற காரணத்தால்

சொத்துக்களைப் பாதுகாக்க பாஸ்ஸியன் ஜில்லா
நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.


3.5.1956ஆம் ஆண்டு இறுதியாக வந்த கடிதம்.
அதில் உங்கள் நிலங்கள் யாவும் தேசியமயமாக்கப்பட்டுள்ளன
என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அதாவது சுவாஹா செய்யப்பெற்ற
விவரத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்


Bassein என்னும் ஊரைக் காட்டும் வரைபடம்


ஆங்கிலப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள்.
இந்தக் கலரில் உள்ள நாடுகள் அனைத்தும் அவர்களின் வசம் இருந்தது.
2வது உலக யுத்தம் முடிந்தவுடன் (1945ற்குப் பிறகு) ஒவ்வொரு நாடாக
அத்தனை நாடுகளையும் கழற்றி விட்டு விட்டார்கள்.
அதாவது சுதந்திரம் அளித்து மங்களம் பாடினார்கள்

தலைநகர் ரங்கூனுக்கு அருகில் உள்ள
பாஸியன் மாவட்டத்தைக் காட்டும் வரை படம்!

வளம் மிக்க பர்மாவின் எழில் மிக்க தோற்றம்
---------------------------------------------------------------------------------------------
1
உபரித் தகவல்கள்:
Colonial era (1886-1948)
Date September 1, 1939 – September 2, 1945
Location Europe, Pacific, South-East Asia, China, Middle East,
Mediterranean and Africa
Result Allied victory. Creation of the United Nations. Emergence
of the United States and the Soviet Union as superpowers.
சுட்டி இங்கே!
----------------------------------------------------------------------------
2
பர்மாவின் (இன்றைய மியான்மாரின்) மிகப் பெரிய நதியான
ஐராவதியைப் பற்றிய தகவல்

The Ayeyarwady River, Burma's longest river, nearly 2,170 kilo meters
(1,348 mi) long, flows into the Gulf of Martaban. Fertile plains
exist in the valleys between the mountain chains.
The majority of Burma's population lives in the Ayeyarwady valley,
which is situated between the Rakhine Yoma and the Shan Plateau.
.........................................................................................................
3.
பாஸ்ஸெயின் (Bassein) மாவட்டத்தைப் பற்றிய தகவல்:
(இன்றையப் பெயர் Pathein)

Capital city of the delta region and the gate way to Chaungtha and
Ngwe Saung beach. This port of call is easily reached by road or
by cruise through the complex Ayeyarwady river. As Ayeyarwady
Division is known as the rice bowl of the country the landscapes
are predominately rice fields with other colorful crops such as
sesames, groundnuts, jute, maze, pulses, tobacco, chilies etc.
Pathein is well known by it production of unique parasol locally
call "Pathein Hti". Pathein - situated in the Ayeyawadd y Delta
about 190 km west of Yangon (Rangoon) is the capital of the
Ayeyarwaddy Division and the port of Pathein is noted for the taste
of its speciality Pathein Halawar. It is well-known for its Pathein
umbrella and pottery. Chaung-tha Beach is only 40 km west of
Pathein.
.........................................................................................................
4

பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான்
சுட்டி இங்கே உள்ளது.
British History

=============================================

வாழ்க வளமுடன்!

3.1.09

அதிர்ஷ்டச் சக்கரம் (Wheel of Fortune)


என்னடா வாழ்க்கை இப்படியே உப்புச் சப்பில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது
என்று கவலைப் படுகிறீர்களா?

கவலையை விடுங்கள்.

ஒரு ஞானி சொன்னான், "If you want to come up in life - You must have
4 things - Education, Ambition, Talent and Luck: But without the 4th item
(That is luck) the other 3 things will not work properly"

அதைத்தான் நம்ம ஊர் பெரிசுகள் எதற்கும் ஒரு நேரம் வேண்டும் என்பார்கள்.
வாரியார் சுவாமிகள் சொல்வார் "உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும்
பருவத்தால் அன்றிப் பழுக்காது (அதாவது பழம் கொடுக்காது)"

சரி நேரடியாக எழுத வந்த மேட்டருக்கு வருகிறேன்

எல்லா மனிதனின் வாழ்க்கையிலுமே 'திருப்பு முனை' (Turning Point) என்று
ஒன்று உண்டு. மக்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும்
கூட அது உண்டு

சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

பிறந்த வருடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதைக் கூட்டுங்கள். அதை நீங்கள்
பிறந்த வருட எண்ணோடு கூட்டுங்கள். கூட்டி வரும் எண்ணைக் கொண்ட
வருடம்தான் திருப்பு முனையைக் கொடுக்கும் வருடமாகும். மறுபடியும் அடுத்த
திருப்பு முனை எப்போது என்று தெரிய, கிடைத்த அந்த வருட எண்ணையே
மீண்டும் கூட்டி முதல் வரியில் சொல்லிய மாதிரியே செய்தீர்களானால் மீண்டும்
ஒரு புதிய வருடத்தின் எண் கிடைக்கும் அந்த வருடம்தான் அதற்கு அடுத்த
Turning Point. இப்படி கணக்கிட்டுக்கொண்டே போகலாம்

உதாரணம் வேண்டாமா? இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.

நமது உள்ளங்களைக் கொள்ளை கொண்ட இசைஞானி இளையராஜா அவர்களின்
பிறந்த வருடத்தை எடுத்துக் கொள்வோம்

அவர் பிறந்தது 1943ம் வருடம்

1943 - கூட்டல் தொகை 17
17
----------
1960 - கூட்டல் தொகை 16
16
----------
1976 - கூட்டல் தொகை 23
23
----------
1999
---------
இளைய ராஜாவின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய
வருடங்கள்:- 1960, 1976 & 1999
----------------------------------------------

1960 - 1975

17 வயது வரை கிராமத்தில் இருந்த ராஜா அவர்கள் ஊரை விட்டுப்
புறப்பட்டு, தன் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன்அவர்களுடன் சேர்ந்து
முதலில் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும், பிறகு பல இயக்கங்களின்
மேடைகளிலும் பாட ஆரம்பித்ததும், பல இசைக் கருவிகளைக் கற்றுக்
கொண்டு வாசிக்க ஆரம்பித்ததும் இதற்குப் பிறகுதான், திரு,.தன்ராஜ்
மாஸ்டரிடம் இசையை நன்கு கற்று பாண்டித்யம் பெற்றதும் இந்தக்
காலகட்டத்தில் தான்.பல இசை அமைப்பாளர்களிடம் பணிபுரிந்து திரை
இசையின் நுட்பங்களை முழுதாகத் தன் மனதில் உள் வாங்கிக் கொண்டதும்
இந்தப் பீரியடில்தான்

1976 - 1998

1976ம் ஆண்டு திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரித்த 'அன்னக்கிளி'
படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்புக் கிடைத்ததுதான் பெரிய திருப்புமுனை.
பட்டி தொட்டிகளிலெல்லாம் ' மச்சானைப் பாத்தீங்களா, மலை வாழைத்
தோப்புக்குள்ளே' பாட்டு ஒலித்து ஒரே மாதத்தில் இவர் பிரபலமாகியதோடு,
மொத்த தமிழ்த்திரை உலகத்தையும் தன்னைத் திரும்பிப் பார்க்கவைத்தார்
என்பது நமக்குத் தெரிந்ததுதானே!

அதற்குப் பிறகு திரையுலக ராஜாவாக, ஒருவருடமல்ல இரண்டு வருடங்களல்ல
சுமார் 23 ஆண்டுகள் கோலோச்சினார் என்று சொன்னால் அது மிகையல்ல

1999 முதம் இன்று வரை

AR.ரெஹ்மான், பரத்வாஜ், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என்று இளம்
ரத்தங்களெல்லாம் திரையிசையில் நுழைய, இவரும் தன் பங்கிற்குத் தன்
மகன்கள் - கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரையும்
திரைக்கப்பலில் ஏற்றி விட்டு விட்டுத்தான் சற்று ஒதுங்கி, ஆன்மீகம்,
தியானம், Symphony என்று களம் இறங்கி விட்டார்.
----------------------------------------------------
அவர் பிரபலமானவர் - அவரை உதாரணமாக வைத்து எழுதினால்
அனைவருக்கும் எளிதில் புரியும் என்பதால் அவரை வைத்து விளக்கியுள்ளேன்
வேறு நோக்கம் எதுவுமில்லை (பின்னூட்டம் போடும் கண்மணிகள் குறித்துக்
கொள்ள வேண்டுகிறேன் இதை)

பதிவு பெரிதாகிக் கொண்டே போகிறது. இந்த Theory (Wheel of Fortune)
க்கு ஆதாரம் என்ன என்பதைக் கீழே கொடுத்துள்ளேன். அது மேதையும்
உலகப் புகழ்பெற்ற ஜோதிட வித்தகருமான திரு.சீரோ அவர்கள் எழுதியது.
Scanned பக்கங்களைக் கீழே கொடுத்துள்ளேன். உங்கள் பிறந்த எண்ணிற்கு
நீங்கள் பார்த்து ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

செப்டம்பர் 5' 2006ஆம் ஆண்டில் நான் எழுதி என்னுடைய பல்சுவைப்
பதிவில் பதிவிட்டது. பலர் வகுப்பரைக்குப் புதியவர்கள். அவர்கள் அறிய
வேண்டும் என்பதற்காக இங்கே மீண்டும் பதிவிட்டுள்ளேன்.

அதன் சுட்டி இங்கே உள்ளது!
=========================================================
படத்தின் மீது கர்சரைவைத்து அமுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
===========================================================
வகுப்பறையின் 250வது பதிவு இது!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
---------------------------------------------------------------------------------
ஜோதிடம், எண்கணிதம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவைப்
படித்துவிட்டு என்னைக் கேள்வி கேட்க வேண்டாம். உங்களுக்காகப்
பாடம் நடத்திவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
உங்களுக்காகத்தான் பலசுவை என்கின்ற இன்னொரு பதிவில் எழுதுகிறேன்
அங்கே வாருங்கள். இதெல்லாம் இருக்காது!
.............................................................................................................................................
வாழ்க வளமுடன்!

30.12.08

தொழிலில் மேன்மை எப்போது?

வேலைகளிலும், தொழில்களிலும் கிரகங்களின் ஆதிக்கமும் அவற்றிற்கான தொழில்களும்

இது ஒரு ஜோதிடப் புத்தகத்தில் குறிப்பிடப்பெற்றிருந்தது!

இது பொதுவிதி!

உல்ட்டாவாகப் பார்த்தால், நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்களோ,
அதற்காக கிரகம்தான் உங்கள் தொழில் ஆதிக்கக்கிரகம்.
அதன் தசாபுத்தியில் நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையுறுவீர்கள்

அந்தந்தப் பிரிவில் ஏதாவது ஒரு வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கலாம்
பிரிவில் உள்ள எல்லா வேலைகளையும் ஒருவ்ரே செய்யமுடியும் என்பது சாத்தியம்
இல்லாதது.

SURYA:
Politicians, Physicians, Goldsmiths
........................................................
CHANDRA:
Milkman, Milkmaid, Farmer, Grass vendor, Midwife, Nurse,
Washer man, Baker, Hawker,, Boatman, cook, dry cleaner,
waiter, compounder, sailor, messenger, travel agent,
navigator, pearl maker
.........................................................
KUJA:
Engineer, Butcher, surgeon, Dentist, constable, carpenter,
mechanic, blacksmith, sculpture, barber, potter, machine
operator, fireman, soldier
........................................................
BUDHA:
News paper vendor/reporter, teacher, novelist, writer, author,
painter, landlord, compositer, postman, broker, draftsman, inspector,
examiner, publisher, printer, editor, book binder, book sellers,
merchant, journalist, clerk, accountant, mathematicians,
public speaker, ambassador, imports and exports, air and
land transports
...............................................................
GURU:
Priest, Manager, Ministers, lawyer, judges, bankers,
temple workers
................................................................
SUKRA:
Artists, treasurer, jewellers, musician, singer, performer,
dancer dramatist, prostitute, call girl, perfume seller
..................................................................
SANI:
Watchman, cleaners, peon, sweeper, cobbler, miner,
brick layers
..........................................................................
RAHU:
Shoe maker, black magician, coolie, car drivers, drummers,
porters, shoe polisher, rag pickers, cycle rickshaw pullers,
load man, stone breakers, stone quarry workers, gardeners,
building workers, vehicle cleaners, wood cutters, robbers,
pick pocketers, thieves, scientists, photographers, actors,
gas agents, buying and selling of old articles,
Radio & TV repair.
...........................................................................
KETU: Doctor, priest, fisherman, weaver, tailor, knitters,
astrologers, occultist, snake charmer, faith healers, pranic
healers, divine healer, preceptors, hunters, beggars, sages,
saints, yogis, siddhas, fakirs, wire man, dealing with
natural herbs, pottery, tiles and brick manufacturing.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

அம்மாக்களும், அய்யாக்களும் அழுகிப்போன ஜோதிடமும்!


அரசியல் ஒரு சந்தனக்காடு. அதில் வாசம் செய்பவர்களுக்கு அது ரம்மியம்
நிறைந்தது! எட்டி நின்று பார்ப்பவர்களுக்கு அது பிடிபடாது.

சிலர் அரசியலைச் சாக்கடை என்று வர்ணிப்பார்கள். அவர்கள் எல்லாம்
மனநிலை சரியில்லாதவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது அந்தக்
காட்டில் தங்களுக்கு இடம் கிடைக்காத வெறுப்பில் சொல்கிறார்கள் என்று
கொள்ளலாம். அல்லது தங்களின் அறியாமையால் அப்படிச் சொல்கின்றார்கள்
என்று எடுத்துக் கொள்ளலாம்..

அரசியலும், சினிமாவும் தமிழனின் இரண்டு கண்களாகும். மற்ற புண்ணாக்கெல்லாம்
அப்புறம்தான்.

சரி சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர்க்கு இறை நம்பிக்கை இல்லை.
ஜோதிடத்திலும் நம்பிக்கை இல்லை. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மாற்றாக அவர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகம் இருக்கிறது. அவர்கள்
அனைவரையும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்க வேண்டும்.

இந்த மனப்பாங்கு கொண்ட அவர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்

சின்ன வயதில் நானும் அப்படி இருந்தவன்தான்!

இந்த ஆன்மிகம், இறைநம்பிக்கை, ஜோதிடம் எல்லாம் வந்து என்னை எப்படி
அமுக்கிப் பிடித்தது என்று தெரியவில்லை.

சிலசமயங்களில் அவைகளில் இருந்து மீள முடியாமல் அவதிப்படுகிறேன்.

அது என் போதாத நேரம் என்று நினைக்கிறேன்!

எப்படி மீள்வது என்று வழி தெரிந்தவர்களைச் சொல்லப் பணிக்கின்றேன்.

இந்தவார ஆ.வி யில் ஒரு கட்டுரையைப் படித்தேன். நாம்தான் இப்படி
ஜோதிடத்தில் சிக்கித் தவிக்கிறோம் என்றால், அழுகிப்போன அந்த ஜோதிடத்தைக்
கட்டிக்கொண்டு பலசந்தனக் காட்டு ராஜாக்களும் ராணிகளும் தவிக்கிறார்கள்.

அதைப் பற்றிய முழு விவரங்களை ஆ.வி. வார இதழ்க்காரர்கள் (A4 சைஸில்
4 பக்க அளவில்) விவரமாக எழுதியுள்ளார்கள் ஆ.வி ஏனோ தானோ பத்திரிக்கை
அல்ல! தமிழ் மக்கள் மதிக்கும் பத்திரிக்கை.




ஆகவே அனைவரையும் ஆ.வி யை வாங்கி அதைப் படிக்க வேண்டுகிறேன்

4 பக்கங்களையும் ஸ்கேன் செய்து போடுவது பெரிய விஷயமல்ல. ஆ.வி. விற்க
வேண்டாமா? வாங்கிப் படியுங்கள். Book Standல் பிரதி கிடைக்காதவர்கள்
நண்பர்களிடம் கேட்டு வாங்கிப் படியுங்கள்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டில் வசிப்பவர்ளுக்காக அந்தப் பக்கங்களின்
சுட்டியைக் கொடுத்துள்ளேன்.

சுட்டி இங்கே!

மெனு: >>> அரசியல் >>> க்ளிக் >>> 5ஆவதாக உள்ளது > பச்சையம்மாவும்
மஞ்சளய்யாவும் > கட்டுரை!

எச்சரிக்கை: படித்துவிட்டுப் பாராட்டுவதானாலும் சரி அல்லது ஒப்புதல் இன்றித் திட்டு
வதானலும் சரி இங்கே வந்து அதைச் செய்யாதீர்கள். அதற்கும் அவர்கள்
தளத்திலேயே அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி உள்ளது.
அதைப் பயன் படுத்திக் கொள்ளூங்கள்!
எனக்கு அதெற்கெல்லாம் நேரமில்லை!

நன்றி வணக்கத்துடன்
அன்புடன்
வாத்தி (யார்)


வாழ்க வளமுடன்!

29.12.08

நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்!

நாடி ஜோதிடம்பற்றி எனக்கு படிப்பறிவு மட்டுமே. பட்டறிவு கிடையாது

அதைப் பற்றி எழுதும்படி சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.
எதற்கு சிரமம்?
வலையில் தேடியபோது ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது.
ஏனோ தானோ ஆள் எழுதியதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காரர்கள்
நடத்தும் பத்திரிக்கையில் வந்தது.

அப்படியே கட் & பேஸ்ட்டாக இங்கே அதைப் பதிவிட்டிருக்காலாம்.
விருப்பமில்லை. காப்பி ரைட் பிரச்சினை வரும்!
ஆகவே செய்யவில்லை. சுட்டி கொடுத்திருக்கிறேன்.
விருப்பமானவர்கள் சென்று பாருங்கள்

சுட்டி!

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத மகான்கள் அங்கே போகவேண்டாம்.
போய்ப் படித்துவிட்டு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.

அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடியில் ஒரு நாடி ஜோதிடர் முன்பு இருந்தார். என் சித்தப்பாவிற்குத்
தெரிந்தவர். அவர் பெயர் சாரி (Chari) காரைக்குடியில் உள்ள பெரிசுகளைக்
கேட்டால் கதைகளைச் சொல்வார்கள்.

வருகிறவனின் கட்டை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு
ஆளை அனுப்பிவிடுவாராம். அரை மணி நேரம் கழித்து வரச்சொல்வாராம்
வேறு ஒரு தகவலும் கேட்க மாட்டாராம்.

அரை மணி நேரம் கழித்துப்போனால். ஜாதகனின் பிறந்த நாள், பிறந்த நேரம்
ஆகியவற்றுடன் அச்சு அசலாக ஜாதகம் தயாராக இருக்குமாம்.

ஏட்டைப் படித்து பலன்களையும் சொல்வாராம்.

இப்போது அவர் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்.

அது அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது எனக்கு இன்றும் புதிராக இருக்கிறது.

அதுபோல என் உறவினர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம்
பார்த்தபோது, அவர்கள் அவருடைய பெயர், அவருடைய பெற்றோரின் பெயர்கள்
மற்றும் உடன் பிறந்த சகோதரிகளின் பெயர்கள் அனைத்தையும் எடுத்த ஏட்டின்
மூலம் சொல்லி அசர வைத்திருக்கிறார்கள்

இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடரான திரு.பி.வி.ராமன் அவர்கள் நாடி
ஜோதிடத்தைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர்கள்
நடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச்
சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எது எப்படியோ, எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை! கிட்டினால்
அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவேன்:-))))))))

அதாவது அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு வருவேன்!

lebel: Nadi Jothidam


வாழ்க வளமுடன்!

27.12.08

இதுதான் சாமி உங்க ஆளு!

ஆடவர்களாக இருந்தால் - துணைவி அல்லது தோழி அல்லது காதலி.
வளைக்கரங்களாக இருந்தால் - துணைவன், நண்பன் அல்லது உள்ளம் கவர்ந்தவன்
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

அவரைப் பற்றி ஒரு சொல்லில் தெரிந்து கொள்ள வேண்டுமா?

வழியிருக்கிறது!

அவருடைய ராசி என்னவென்று தெரியுமா?

தெரியாதா?

பதிவை விட்டு விலகுங்கள்!

அதைத் தெரிந்து கொண்டு வாருங்கள்.

அதைக் கூடத் தெரிந்து வைத்துக்கொள்ளாமல், என்ன பிறவி நீங்கள்?

தெரியுமா?

நீங்கள்தான் நாட்டிற்குத் தேவையானவர்

Scroll down செய்து பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V




1 மேஷம்


2 ரிஷபம்


3 மிதுனம்

4 கடகம்


5 சிம்மம்


6 கன்னி


7 துலாம்


8 விருச்சிகம்


9 தனுசு



10 மகரம்


11 கும்பம்


12 மீனம்
====================================================================

"வாத்தியாரே, ஒன்னு கேட்கலாமா?"

"கேளு ராசா!"

"பதிவிற்கும், ரஜினிகாந்த் படத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?"

"பதிவுன்னா, படம் போட்டாத்தானே ராசா நல்லாயிருக்கும். நம்ம மக்களுக்குப்
பிடிச்சவாராச்சே அப்படீன்ன்னு செல்வி.நமீதா படத்தைத்தான் முதல்ல பதிவில
போடறதா இருந்தேன். படமும், தலைப்பும் சேர்ந்து பதிவை வலையேற்றிய
ஒரு மணி நேரத்துக்குள்ளயே சூடான இடுகைக்குக் கொண்டுபோற அபாயம்
இருந்ததால அதைக் கைவிட்டு விட்டேன்!"

"சரி, வேற யாருடைய படத்தையாவது போட்டிருக்கலாம்ல? எதுக்கு ரஜினியோட
படம். அதுவும் ஒவ்வொரு தடவையும்?"

"எனக்குத் தெரிந்து நடிகர்கள்ள அவர் ஒருத்தர்தான் சாமி தீவிர இறை நம்பிக்கை
உடையவாரக இருக்கிறார். அதோட அவர். சிம்ம லக்கினம். திருவோண நட்சத்திரம்.
நானும் சிம்ம லக்கினம், திருவோண நட்சத்திரம். ஒரு பாசந்தான் - ஹிஹி..ஹி..வேறென்ன?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!