மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

27.12.08

இதுதான் சாமி உங்க ஆளு!

ஆடவர்களாக இருந்தால் - துணைவி அல்லது தோழி அல்லது காதலி.
வளைக்கரங்களாக இருந்தால் - துணைவன், நண்பன் அல்லது உள்ளம் கவர்ந்தவன்
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

அவரைப் பற்றி ஒரு சொல்லில் தெரிந்து கொள்ள வேண்டுமா?

வழியிருக்கிறது!

அவருடைய ராசி என்னவென்று தெரியுமா?

தெரியாதா?

பதிவை விட்டு விலகுங்கள்!

அதைத் தெரிந்து கொண்டு வாருங்கள்.

அதைக் கூடத் தெரிந்து வைத்துக்கொள்ளாமல், என்ன பிறவி நீங்கள்?

தெரியுமா?

நீங்கள்தான் நாட்டிற்குத் தேவையானவர்

Scroll down செய்து பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
1 மேஷம்

2 ரிஷபம்

3 மிதுனம்

4 கடகம்

5 சிம்மம்

6 கன்னி

7 துலாம்

8 விருச்சிகம்

9 தனுசு10 மகரம்

11 கும்பம்

12 மீனம்
====================================================================

"வாத்தியாரே, ஒன்னு கேட்கலாமா?"

"கேளு ராசா!"

"பதிவிற்கும், ரஜினிகாந்த் படத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?"

"பதிவுன்னா, படம் போட்டாத்தானே ராசா நல்லாயிருக்கும். நம்ம மக்களுக்குப்
பிடிச்சவாராச்சே அப்படீன்ன்னு செல்வி.நமீதா படத்தைத்தான் முதல்ல பதிவில
போடறதா இருந்தேன். படமும், தலைப்பும் சேர்ந்து பதிவை வலையேற்றிய
ஒரு மணி நேரத்துக்குள்ளயே சூடான இடுகைக்குக் கொண்டுபோற அபாயம்
இருந்ததால அதைக் கைவிட்டு விட்டேன்!"

"சரி, வேற யாருடைய படத்தையாவது போட்டிருக்கலாம்ல? எதுக்கு ரஜினியோட
படம். அதுவும் ஒவ்வொரு தடவையும்?"

"எனக்குத் தெரிந்து நடிகர்கள்ள அவர் ஒருத்தர்தான் சாமி தீவிர இறை நம்பிக்கை
உடையவாரக இருக்கிறார். அதோட அவர். சிம்ம லக்கினம். திருவோண நட்சத்திரம்.
நானும் சிம்ம லக்கினம், திருவோண நட்சத்திரம். ஒரு பாசந்தான் - ஹிஹி..ஹி..வேறென்ன?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

29 comments:

VIKNESHWARAN said...

//செல்வி.நமீதா படத்தைத்தான் முதல்ல பதிவில
போடறதா இருந்தேன்.//

அடடே... போட்டிருக்கலாமே ஐயா... :P ஆனா இந்த பதிவும் சூடாகிடும்னு உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது...

VIKNESHWARAN said...

நானே முதலாவதும் இரண்டாவதும்...

ரமணா said...

ஆசிரியர் ஐயா,
நேற்று தி.நகர் நடேசன் பூங்காவில் வெகு சிறப்பாக நடந்தேறிய ,சென்னை பிரபல பதிவர் சந்திபில் நாடி சோதிடம் பற்றிய விவாதாம் நடந்துள்ளது.

பெரியவர் டோண்டு ஐயா அவர்கள் பதிவில் :

//ஆனால் கடலையூர் செல்வம் அவர்கள் நாடி ஜோசியம் பற்றி தனது அனுபவத்தைக் கூறினார். மனிதர் அந்த அனுபவத்தில் ஆடிப்போயுள்ளார். தான் டெக்ஸ்டை டெக்னாலஜியில் வேலை செய்வது உட்பட பல விஷயங்கள் அவர் பெயருக்கு கிடைத்த ஓலையில் இருந்ததாகக் கூறி அதிசயித்தார். தான் பெரியார் பாசறையை சேர்ந்தவர் என்றும் நம்பிக்கையில்லாமலேயே சென்றதாகவும் இப்போது என்ன நினைப்பது எனத் தெரியவில்லை என்றும் கூறினார். அக்கினி பார்வையும் தனது அனுபவத்தை கூறினார். அவரது ஓலை திருச்சியில்தான் இருக்கும் என கூறப்பட்டதாகவும் தான் இன்னும் போய் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். சிங்கை பதிவர் ஜோசஃப் பால்ராஜ் அவர்களும் நாடி ஜோசியத்தில் தனது தாயின் முழுப்பெயரும் கூறப்பட்டது என்று அதிசயத்துடன் கூறினார்.//

நாடி ஜோதிடம் பற்றி முழுமையாய் விளக்கவும்.

வைத்தீஸ்வரன் கோவிலில் மட்டும் நாடி ஜோதிடம் பார்க்கமுடியும் என்பர்,ஆனால் இன்று பல நகரங்களில், (சென்னை,நெல்லை,திருச்சி) "அகத்தியர் நாடி ஜோதிடம் இங்கு பார்க்கப் படும்" என உள்ளது.

தமிழ்நெஞ்சம் said...

நமீதா படம் போடவில்லை எனினும் உங்கள் பதிவு சூடான இடுகையில் இடம்பெறுவது உறுது.

உங்கள் வாசகர்கள் அதைச் செய்தே தீருவோம்.

வேலன். said...

ரஜினி ரசிகர்களுக்கு மேலும் ஒரு நல்ல புகைப்பட ஸ்டில் கொடுத்துள்ளீர்கள்.நமீதாவை இளவட்டங்கள் மட்டும் விரும்பலாம் - ஆனால் ரஜினியை குழந்தை முதல் தாய்குலங்கள் வரை எல்லாம் விரும்புவர்.எனது ஓட்டு ரஜினிக்கு தான்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆசிரியர்அய்யா,

ஒரு சின்ன விண்ணப்பம்.தாங்கள் வகுப்பறையில் வருகைபதிவு(attendance)எடுத்து நீண்ட நாள்ஆகிறது என நினைக்கின்றேன்.தங்கள் வருகைப்பதிவேடில் உள்ள மாணவர்கள் நிறையபேர் வகுப்புக்கே வருவதில்லை என நினைக்கின்றேன்.அதுபோல் அஞ்சல்வழிகல்வி(பிளாக்கர் கணக்கு இல்லாமல்)ஆரம்பம் முதல் என்னைபோல் படித்து வருபவர் நிறைய பேர் உள்ளனர்.எனவே தாங்கள் புதுவருடத்தில் புதிய வருகைப்பதிவேடு எடுத்து வகுப்புக்கு வராத மாணவர்களை வருகையை நீக்கி புதிய மாணவர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஐயா,

மீண்டும் ஒரு விண்ணப்பம். நான் புதிதாக பிளாக் ஒன்று ஆரம்பித்துஉள்ளேன். தாங்கள் நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்.
முகவரி:-
http://velang.blogspot.com-
வாருங்கள். வாழ்த்துங்கள் உங்கள் மாணவனை.

வாழ்க வளமுடன்,
வேலன்.

புரட்சித் தமிழன் said...

//இன்னைக்கு தினமலர்லே கருணாநிதி மீண்டும் தி மு க தலைவர் ஆகிற செய்தி பற்றி குறிப்பிடும் போது இன்றைய இருபத்தேழாம் தேதி காலை 9மணி முதல் 9.45மணி வரை மகர லக்னம் . அதனால் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து தலைவர் ஆகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

இன்று முதல்வரின் ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதை அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறி விட்டார்களா ? அல்லது சந்திராஷ்டமத்திற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா ?

முதல்வரின் ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் நிலையில் திமுக தலைவர் பதவி ஏற்பதால் அவருக்கும் கட்சிக்கும் ஏதேனும் ஊறு ?

என பிளாக்கர் R P ராஜநாயஹம் கருத்து சொல்லியுள்ளாரே?

ஆசிரியர் ஐயா ,இதை விளக்கவும்.

மீண்டும் தினமலர் செய்தி.

SP.VR. SUBBIAH said...

/////Blogger VIKNESHWARAN said...
//செல்வி.நமீதா படத்தைத்தான் முதல்ல பதிவில
போடறதா இருந்தேன்.//
அடடே... போட்டிருக்கலாமே ஐயா:ஆனா இந்த பதிவும் சூடாகிடும்னு உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது...//////////

என்ன சாமி! ஆகவேண்டாம் சாமி!
நம்ம ஒரு ஒரமா உட்கார்ந்து பாடம் நடத்துவோம் / படிப்போம்! அதுபோது நமக்கு!

SP.VR. SUBBIAH said...

////Blogger VIKNESHWARAN said...
நானே முதலாவதும் இரண்டாவதும்...//////

பாடத்தைப் படித்தீர்களா? அதில்தான் முதலாவதாக வரவேண்டும்:-)))))

SP.VR. SUBBIAH said...

Blogger ரமணா said...
ஆசிரியர் ஐயா,
நேற்று தி.நகர் நடேசன் பூங்காவில் வெகு சிறப்பாக நடந்தேறிய ,சென்னை பிரபல பதிவர் சந்திபில் நாடி சோதிடம் பற்றிய விவாதாம் நடந்துள்ளது.
பெரியவர் டோண்டு ஐயா அவர்கள் பதிவில் :
//ஆனால் கடலையூர் செல்வம் அவர்கள் நாடி ஜோசியம் பற்றி தனது அனுபவத்தைக் கூறினார். மனிதர் அந்த அனுபவத்தில் ஆடிப்போயுள்ளார். தான் டெக்ஸ்டை டெக்னாலஜியில் வேலை செய்வது உட்பட பல விஷயங்கள் அவர் பெயருக்கு கிடைத்த ஓலையில் இருந்ததாகக் கூறி அதிசயித்தார். தான் பெரியார் பாசறையை சேர்ந்தவர் என்றும் நம்பிக்கையில்லாமலேயே சென்றதாகவும் இப்போது என்ன நினைப்பது எனத் தெரியவில்லை என்றும் கூறினார். அக்கினி பார்வையும் தனது அனுபவத்தை கூறினார். அவரது ஓலை திருச்சியில்தான் இருக்கும் என கூறப்பட்டதாகவும் தான் இன்னும் போய் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். சிங்கை பதிவர் ஜோசஃப் பால்ராஜ் அவர்களும் நாடி ஜோசியத்தில் தனது தாயின் முழுப்பெயரும் கூறப்பட்டது என்று அதிசயத்துடன் கூறினார்.//
நாடி ஜோதிடம் பற்றி முழுமையாய் விளக்கவும்.
வைத்தீஸ்வரன் கோவிலில் மட்டும் நாடி ஜோதிடம் பார்க்கமுடியும் என்பர்,ஆனால் இன்று பல நகரங்களில், (சென்னை,நெல்லை,திருச்சி) "அகத்தியர் நாடி ஜோதிடம் இங்கு பார்க்கப் படும்" என உள்ளது./////

தனியாக ஒரு பதிவில் எழுதுகிறேன் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

Blogger தமிழ்நெஞ்சம் said...
நமீதா படம் போடவில்லை எனினும் உங்கள் பதிவு சூடான இடுகையில் இடம்பெறுவது உறுது.
உங்கள் வாசகர்கள் அதைச் செய்தே தீருவோம்.///////

சூடான பதிவு, ஆறிப்போன பதிவு - அதெல்லாம் நமக்கு வேண்டாம்
ஒரு ஒரமா உட்கார்ந்து பாடம் நடத்துவோம் / படிப்போம்! அதுபோது நமக்கு!

SP.VR. SUBBIAH said...

Blogger வேலன். said...
ரஜினி ரசிகர்களுக்கு மேலும் ஒரு நல்ல புகைப்பட ஸ்டில் கொடுத்துள்ளீர்கள்.நமீதாவை இளவட்டங்கள் மட்டும் விரும்பலாம் - ஆனால் ரஜினியை குழந்தை முதல் தாய்குலங்கள் வரை எல்லாம் விரும்புவர்.எனது ஓட்டு ரஜினிக்கு தான்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////

நீங்கள் சொன்னால சரிதான். பெயரிலேயே வேலை வைத்திருக்கிறீர்கள்!

SP.VR. SUBBIAH said...

Blogger வேலன். said...
ஆசிரியர்அய்யா,
ஒரு சின்ன விண்ணப்பம்.தாங்கள் வகுப்பறையில் வருகைபதிவு(attendance)எடுத்து நீண்ட நாள்ஆகிறது என நினைக்கின்றேன்.தங்கள் வருகைப்பதிவேடில் உள்ள மாணவர்கள் நிறையபேர் வகுப்புக்கே வருவதில்லை என நினைக்கின்றேன்.அதுபோல் அஞ்சல்வழிகல்வி(பிளாக்கர் கணக்கு இல்லாமல்)ஆரம்பம் முதல் என்னைபோல் படித்து வருபவர் நிறைய பேர் உள்ளனர்.எனவே தாங்கள் புதுவருடத்தில் புதிய வருகைப்பதிவேடு எடுத்து வகுப்புக்கு வராத மாணவர்களை வருகையை நீக்கி புதிய மாணவர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.///////

அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர்கள் வருகிறார்கள். பின்னூட்டம் போடுவதற்கு நேரமில்லை! அவ்வளவுதான்!

SP.VR. SUBBIAH said...

Blogger வேலன். said...
ஐயா,
மீண்டும் ஒரு விண்ணப்பம். நான் புதிதாக பிளாக் ஒன்று ஆரம்பித்துஉள்ளேன். தாங்கள் நேரம் இருப்பின் வந்து பார்க்கவும். முகவரி:-
http://velang.blogspot.com-
வாருங்கள். வாழ்த்துங்கள் உங்கள் மாணவனை.
வாழ்க வளமுடன்,
வேலன்.//////

ஆகா, வருகிறேன். வாழ்க உங்கள் தமிழ் ஆர்வம்! வளர்க உங்கள் எழுத்துப் பணி1

SP.VR. SUBBIAH said...

/////Blogger புரட்சித் தமிழன் said...
//இன்னைக்கு தினமலர்லே கருணாநிதி மீண்டும் தி மு க தலைவர் ஆகிற செய்தி பற்றி குறிப்பிடும் போது இன்றைய இருபத்தேழாம் தேதி காலை 9மணி முதல் 9.45மணி வரை மகர லக்னம் . அதனால் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து தலைவர் ஆகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்கள் .
இன்று முதல்வரின் ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதை அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறி விட்டார்களா ? அல்லது சந்திராஷ்டமத்திற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா ?
முதல்வரின் ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் நிலையில் திமுக தலைவர் பதவி ஏற்பதால் அவருக்கும் கட்சிக்கும் ஏதேனும் ஊறு ?
என பிளாக்கர் R P ராஜநாயஹம் கருத்து சொல்லியுள்ளாரே?
ஆசிரியர் ஐயா ,இதை விளக்கவும்.
மீண்டும் தினமலர் செய்தி.////

கலைஞரை எந்த அஷ்டமும் அல்லது சஷ்டமும் ஒன்றும் செய்யாது.
அவருடைய ஜாதகத்தில் மகா புருஷ யோகம் என்னும் அதி மேன்மையான யோகம் உள்ளது.
அது பற்றி எழுத முடியாது. எதிர்க் கழகக் கண்மணிகள் சண்டைக்கு வருவார்கள்
எனக்கு சண்டை போடவெல்லாம் நேரமில்லை!
அதனால் வாத்தியார் எஸ்கேப்!

தமிழ்நெஞ்சம் said...

இதுதான் சாமி உங்க ஆளு!
SP.VR. SUBBIAH

இந்தப் பதிவு இப்போது இந்திய நேரம் 12:40 மதியம் - தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம் பெற்றுவிட்டது.

உங்கள் வாசகர்கள் - உங்களுக்குப் பெருமை தேடித்தந்துவிட்டோம்.

vallarasu said...

//கலைஞரை எந்த அஷ்டமும் அல்லது சஷ்டமும் ஒன்றும் செய்யாது.
அவருடைய ஜாதகத்தில் மகா புருஷ யோகம் என்னும் அதி மேன்மையான யோகம் உள்ளது.
அது பற்றி எழுத முடியாது. எதிர்க் கழகக் கண்மணிகள் சண்டைக்கு வருவார்கள்
எனக்கு சண்டை போடவெல்லாம் நேரமில்லை!
அதனால் வாத்தியார் எஸ்கேப்!//

தான் கற்றுத்தேர்ந்த ஜோதிடக்கலையினை, அனைத்து தமிழ்ச் ஜாதியினரும் கற்றுத் தெளிந்திட,எந்த ஒரு பொருளாதார லாபம் கருதாமல்,தன் பொன் போன்ற நேரத்தை,சமுதாய நன்மைக்காக பயன்பெறும் வகையில் காரியமாற்றும்,ஆசான் சுப்பையா அண்ணா அவர்களுக்கு,கலைஞரின் எதிர்காலம் பற்றிய,சந்தேகத்தை கிளப்பி வேடிக்கை விநோதம் செய்திட எண்ணி பொய்ச் செய்திகளைப் பரப்பி ,குளிர் காய நினத்தோருக்கு,தலைவர் பாணியில்,தங்கள் ஆய்ந்து அறிவித்த நல்ல அறிவிப்புக்கு கழகமும்,கழக நண்பர்களும் நன்றியை காணிக்கையாக்குவதில் பெருமை கொள்கின்றனர்.

இன்று கழக வரலாற்றில் ஒர் பொன்னாள்
தந்தை தலைவராய் கொலுவீற்றிருக்க ,தனயன் தந்தை 1969 வரை வகித்துவந்த கழக பொருளாளர் பதவி ஏற்கும் மகோன்னதநாள்.

தமிழகமெங்கும் 1000 அறிவாலயங்கள் நிர்மாணிக்கப்டப் போகும் புது யுகம் தொடங்கும் நன்னாள்.

ஒன்றெ குலம் ஒருவனே தெய்வம் எனபது தான் அண்ணா கண்ட தர்மம்

Geekay said...

Present Sir!!

SP.VR. SUBBIAH said...

/////Blogger தமிழ்நெஞ்சம் said...
இதுதான் சாமி உங்க ஆளு!
SP.VR. SUBBIAH
இந்தப் பதிவு இப்போது இந்திய நேரம் 12:40 மதியம் - தமிழ்மணத்தில் சூடான இடுகையில் இடம் பெற்றுவிட்டது.
உங்கள் வாசகர்கள் - உங்களுக்குப் பெருமை தேடித்தந்துவிட்டோம்.//////

சூடான இடுகையில் வருவது முக்கியம் அல்ல!
நன்றாக உள்ளது என்று படித்தவர்கள் சொல்வதுதான் முக்கியம் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger vallarasu said...
//கலைஞரை எந்த அஷ்டமும் அல்லது சஷ்டமும் ஒன்றும் செய்யாது.
அவருடைய ஜாதகத்தில் மகா புருஷ யோகம் என்னும் அதி மேன்மையான யோகம் உள்ளது.
அது பற்றி எழுத முடியாது. எதிர்க் கழகக் கண்மணிகள் சண்டைக்கு வருவார்கள்
எனக்கு சண்டை போடவெல்லாம் நேரமில்லை!
அதனால் வாத்தியார் எஸ்கேப்!//
தான் கற்றுத்தேர்ந்த ஜோதிடக்கலையினை, அனைத்து தமிழ்ச் ஜாதியினரும் கற்றுத் தெளிந்திட,எந்த ஒரு பொருளாதார லாபம் கருதாமல்,தன் பொன் போன்ற நேரத்தை,சமுதாய நன்மைக்காக பயன்பெறும் வகையில் காரியமாற்றும்,ஆசான் சுப்பையா அண்ணா அவர்களுக்கு,கலைஞரின் எதிர்காலம் பற்றிய,சந்தேகத்தை கிளப்பி வேடிக்கை விநோதம் செய்திட எண்ணி பொய்ச் செய்திகளைப் பரப்பி ,குளிர் காய நினத்தோருக்கு,தலைவர் பாணியில்,தங்கள் ஆய்ந்து அறிவித்த நல்ல அறிவிப்புக்கு கழகமும்,கழக நண்பர்களும் நன்றியை காணிக்கையாக்குவதில் பெருமை கொள்கின்றனர்.
இன்று கழக வரலாற்றில் ஒர் பொன்னாள்
தந்தை தலைவராய் கொலுவீற்றிருக்க ,தனயன் தந்தை 1969 வரை வகித்துவந்த கழக பொருளாளர் பதவி ஏற்கும் மகோன்னதநாள்.
தமிழகமெங்கும் 1000 அறிவாலயங்கள் நிர்மாணிக்கப்டப் போகும் புது யுகம் தொடங்கும் நன்னாள்.
ஒன்றெ குலம் ஒருவனே தெய்வம் எனபது தான் அண்ணா கண்ட தர்மம்///////

உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///////Blogger Geekay said...
Present Sir!!///////

நன்றி ஜீக்கே!

ஆளவந்தான் said...

ஒரு சின்ன சந்தேகம்..

ரெண்டு ராசி எண் வச்சுக்கலாங்களா?

ஆர்.கார்த்திகேயன் said...

வணக்கம் அய்யா !
பாடம் அருமை ! எனக்கு ஒரு சந்தேகம் ராசி மேற்சொன்ன குணங்களை நிர்ணயிக்குமா அல்லது இலக்கினம் நிர்ணயிக்குமா ?
ஒருவர்க்கு ராசி சிம்மமாகவும் இலக்கினம் மகரமாகவும் இருந்தால் எதன் அடிப்படையில் குணம் இருக்கும் (எனக்கல்ல எதிர் எதிர் என்பதால் கேட்டேன் வேண்டுமானால் குரு ஆதிபத்ய ராசிக்கும் சுக்கிர ஆதிபத்ய ராசிக்கும் சொல்லுங்கள் அய்யா )

SP.VR. SUBBIAH said...

/////Blogger ஆளவந்தான் said...
ஒரு சின்ன சந்தேகம்..
ரெண்டு ராசி எண் வச்சுக்கலாங்களா?/////

வெள்ளைக்காரன் சொல்லியது. ராசியைவைத்தே பாருங்கள்.

SP.VR. SUBBIAH said...

Blogger ஆர்.கார்த்திகேயன் said...
வணக்கம் அய்யா !
பாடம் அருமை ! எனக்கு ஒரு சந்தேகம் ராசி மேற்சொன்ன குணங்களை நிர்ணயிக்குமா அல்லது இலக்கினம் நிர்ணயிக்குமா ?
ஒருவர்க்கு ராசி சிம்மமாகவும் இலக்கினம் மகரமாகவும் இருந்தால் எதன் அடிப்படையில் குணம் இருக்கும் (எனக்கல்ல எதிர் எதிர் என்பதால் கேட்டேன் வேண்டுமானால் குரு ஆதிபத்ய ராசிக்கும் சுக்கிர ஆதிபத்ய ராசிக்கும் சொல்லுங்கள் அய்யா )
வெள்ளைக்காரன் சொல்லியது. ராசியைவைத்தே பாருங்கள்.

RAJA said...

குருவே,

பலன்கள் moon sign அடிப்படையாக கொண்டதா அல்லது sun sign கொண்டதா?

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

////Blogger RAJA said...
குருவே,
பலன்கள் moon sign அடிப்படையாக கொண்டதா அல்லது sun sign கொண்டதா?
அன்புடன்
இராசகோபால்/////

வெள்ளைக்காரன் சொல்லியது. நீங்கள் நமக்கு ராசியை வைத்தே பாருங்கள்.

Cool Boy said...

அருமை அய்யா..
நானும் திருவோண நட்சத்திரம்..
ஹி ஹி..