மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.12.08

பெயர்ச்சியா? தளர்ச்சியா?

குரு பகவான் மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு வீடு மாறுகிறார்.
அதனால் யாராருக்கு என்ன நேரும்? என்று எல்லா இதழ்களும் போட்டி
போட்டுக்கொண்டு எழுதுகின்றன.

அவருக்கு ஏது மூட்டை முடிச்சுக்கள்? மனிதனுக்குதான் மூட்டை முடிச்சுக்கள்
ஐடென்ட்டி கார்டு, வோட்டுரிமை கார்டு, பான் கார்டு, ரேசன் கார்டு என்று
பைநிறையப் பல கார்டுகள். ஒரு லாரி கொள்ளும் அளவிற்கு தேவைப்படும்
வீட்டு, மற்றும் சொந்த உபயோக சாதனங்கள். ஒவ்வொருமுறையும் வீடு
மாறும்போதும் தூக்கிக் கொண்டு அலைய வேண்டும். அத்துடன் குடும்ப உறவுகள்.

ஆகவே குரு பகவான் இடம் பெயருகிறார். உங்கள் வீட்டிற்கு அருகில்
எங்கே வருகிறார் பாருங்கள்? என்று ஒருவனைப் பயமுறுத்துவது போல
வருகின்ற செய்திகளைக் கண்டு மயங்காதீர்கள்.

தற்போது வான வட்டத்தில் 270 டிகியில் பயணித்துக் கொண்டிருக்கும்
அல்லது சுழன்று கொண்டிருக்கும் குரு பகவான், டிஸம்பர் 6ஆம் தேதியன்று
271 டிகிரிக்கு அடியெடுத்து வருகிறார். அது தனுசுராசி முடிந்து மகரராசியின்
எல்லை. அதைத்தான் பத்திரிக்கைகள் குருப் பெயர்ச்சி என்று எழுதுகின்றன
அதோடு ஒவ்வொரு ராசிக்கும் நன்மை தீமைகளையும் எழுதியிருக்கின்றன

இந்திய மக்கள், ஏன் உலக மக்கள் அனைவருக்கும் அவைகள் பொதுப்
பலன்கள் ஆகும். பலன்கள் நன்றாக இருக்கும் என்று எழுதியிருப்பதைப்
படிப்பவர்கள் மகிழ்ந்தும் அல்லாதாவர்கள் தளர்ந்தும் போய் விடுவார்கள்

அதெல்லாம் தளராதீர்கள்?

நான் முன்பே எழுதியிருக்கிறேன். ஜாதகம் என்பது வாகனம் (car). தசாபுத்தி
என்பது பயணிக்கும் பாதை (Road). கோச்சாரம் என்பது ஓட்டுனர் (Driver)

கார் நன்றாக இருந்தாலும் பயணிக்கும் பாதையும், ஓட்டுனரும் முக்கியமானவை.
பாதை நன்றாக இருந்தால் பயணம் சுகமாக இருக்கும். ஓட்டுனர் நன்றாக
இருந்தால் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.

ஆகவே வெறும் குருப்பெயர்ச்சி பலன்களை மட்டும் படிக்காமல் அதை
உங்கள் ஜாதகத்துடன் ஒத்துப் பாருங்கள்.

நல்ல தசாபுத்திகள் நடந்தால் பாதகம் ஒன்றும் வராது. பாதை நன்றாக
இல்லாவிட்டால் ஓட்டுனரும் பார்த்துத்தான் ஓட்டுவார்.

எப்படி என்று கேட்காதீர்கள். அதுதான் உங்களையும் என்னையும்
படைத்த இறைவனின் கருணை!தான் படைத்த உயிர்களுக்கு அவன்
அளிக்கும் சலுகை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குருப் பெயர்ச்சிப் பலன்களை வழவழவென்று அடுக்கிக்கொண்டு போகாமல்
ஒரு வார்த்தையில் செய்தி வெளியிட்டிருந்தார்கள் ஒரு பத்திரிக்கையில். அதை
நீங்கள் அறியத்தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராசிகளுக்கான பொதுப் பலன்கள்

1. மேஷம் - சிரமம்
2. ரிஷபம் - நன்மை
3. மிதுனம் - கஷ்டம்
4. கடகம் - லாபம்
5. சிம்மம் - பாதிப்பு
6. கன்னி - இன்பம்
7. துலாம் - சுமார்
8. விருச்சிகம் - கவனம்
9. தனுசு - மகிழ்ச்சி
10. மகரம் - பரவாயில்லை
11. கும்பம் - கவலை
12. மீனம் - மேன்மை

தகவல் - தினமலர்
தினமலருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குழப்பம் தீர்ந்ததா? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!
வாழ்க வளமுடன்!

44 comments:

  1. என் வீட்டுக்குத்தான் வர்றாரு. அதனால பரவாயில்லை ரகம்தான்னு சொல்லிக்கிறாங்க.

    என் வீட்டுக்கு வரும்போது சும்மா விடலாமா? நல்லா கவனிச்சுக்கறேன்.

    :))))))))))

    ReplyDelete
  2. புதுகைத் தென்றல் said...
    என் வீட்டுக்குத்தான் வர்றாரு. அதனால பரவாயில்லை ரகம்தான்னு சொல்லிக்கிறாங்க.
    என் வீட்டுக்கு வரும்போது சும்மா விடலாமா? நல்லா கவனிச்சுக்கறேன்.
    :))))))))))/////

    ஓகோ நீங்கள் நம்ம வீட்டு உறவா? எனக்கும் மகரராசிதான். திருவோண நட்சத்திரம்...ஹி...ஹி...!
    கவலைப்படாதீர்கள் குளிப்பாட்டிவிடுவோம் குரு பகவானை!

    ReplyDelete
  3. \\குழப்பம் தீர்ந்ததா? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!\\

    ஆமாங்க நன்றிங்க குழப்பம் தீர்ந்தது.

    டிஸ்கி:
    -----
    பழைய குழப்பங்கள் தீர்ந்தன

    ReplyDelete
  4. ////அதிரை ஜமால் said...
    \\குழப்பம் தீர்ந்ததா? ஒரு வார்த்தை சொல்லுங்கள்!\\
    ஆமாங்க நன்றிங்க குழப்பம் தீர்ந்தது.
    டிஸ்கி:
    -----
    பழைய குழப்பங்கள் தீர்ந்தன////

    குழப்பங்களும், பிரச்சினைகளும் முழுதாகத் தீராது.
    முழுவதும் தீர்ந்துவிட்டால் அவன் போர்டிங் பாஸ் வாங்கிவிட்டான் என்று அர்த்தம்!:-)))

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்

    ஒருநாளாவது முதலாவது மாணவனாக வர முடியவில்லை,
    என்னுடைய வாகனமும் பாதையும் படு மோசம், (செவ்வாய் திசை சனி புத்தி அதுவும் 6/8 தொடர்புடன்),
    ஓட்டுனர் பரவாயில்லை (தனுசு ராசி), என்றுவரை என்னுடைய பழைய 69 ஆம் ஆண்டு வாகனம் தாக்குப் பிடிக்குமோ தெரியவில்லை. எல்லாம் இந்த ஓட்டை வாகனத்தைச் செய்தவர் கையில்தான் உள்ளது.

    ReplyDelete
  6. அய்யா,
    குரு பெயர்ச்சி பற்றிய விளக்கத்திற்கு நன்றி.

    வகானமும் பாதையும் ஓட்டுனரும் வாழ்க்கை என்னும் பெரும் கடலில் எல்லோரையும் கரை சேர்க்க ஆண்டவர் படும் பாடு(?). ஆண்டவா இதுவும் உன் திருவிளையாடல் தான்!

    எல்லோரும் இன்புற்று இருக்க என் பிரார்த்தனைகள்!

    நன்றி!

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  7. ஐயா,

    எனக்கு(மிதுனராசி) கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்.டிரைவரிடம் சொல்லி சாலையில் பார்த்து போக சொல்லனும்.மீன இலக்கனத்தில்
    குரு தனியே இருக்கிறார்.எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்.எல்லாம் அவன் செயல்.அவனன்றி யாதும் அசையாது.பார்க்கலாம்.என்ன நடக்கிறது என்று...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. நீங்கள் நம்ம வீட்டு உறவா?

    ஆமாங்க. அவிட்ட நட்சத்திரம்.

    சரி ஐயா,

    மத்தவங்களுக்கும் உதவற மாதிரி குருவை மகிழ்விக்க ஸ்லோகம் ஏதும் இருந்தா போடுங்களேன்.

    நன்றி

    ReplyDelete
  9. /////KS said...
    ஐயா வணக்கம்
    ஒருநாளாவது முதலாவது மாணவனாக வர முடியவில்லை,
    என்னுடைய வாகனமும் பாதையும் படு மோசம், (செவ்வாய் திசை சனி புத்தி அதுவும் 6/8 தொடர்புடன்),
    ஓட்டுனர் பரவாயில்லை (தனுசு ராசி), என்றுவரை என்னுடைய பழைய 69 ஆம் ஆண்டு வாகனம் தாக்குப் பிடிக்குமோ தெரியவில்லை. எல்லாம் இந்த ஓட்டை வாகனத்தைச் செய்தவர் கையில்தான் உள்ளது.////

    படிப்பில் முதல் மாணவனாக வந்தால் போதும்!

    ReplyDelete
  10. /////Sridhar said...
    அய்யா,
    குரு பெயர்ச்சி பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
    வகானமும் பாதையும் ஓட்டுனரும் வாழ்க்கை என்னும் பெரும் கடலில் எல்லோரையும் கரை சேர்க்க ஆண்டவர் படும் பாடு(?). ஆண்டவா இதுவும் உன் திருவிளையாடல் தான்!
    எல்லோரும் இன்புற்று இருக்க என் பிரார்த்தனைகள்!
    நன்றி!
    ஸ்ரீதர் S///////

    ஆண்டவர் எதற்காக பாடுபட வேண்டும் நண்பரே? உருகி வேண்டுபவர்களுக்கு அவர் உதவி செய்வார். அவ்வளவுதான்!

    ReplyDelete
  11. /////வேலன். said...
    ஐயா,
    எனக்கு(மிதுனராசி) கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்.டிரைவரிடம் சொல்லி சாலையில் பார்த்து போக சொல்லனும்.மீன இலக்கனத்தில்
    குரு தனியே இருக்கிறார்.எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்.எல்லாம் அவன் செயல்.அவனன்றி யாதும் அசையாது.பார்க்கலாம்.என்ன நடக்கிறது என்று...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    ஆகா பாருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. புதுகைத் தென்றல் said...
    நீங்கள் நம்ம வீட்டு உறவா?
    ஆமாங்க. அவிட்ட நட்சத்திரம்.
    சரி ஐயா,
    மத்தவங்களுக்கும் உதவற மாதிரி குருவை மகிழ்விக்க ஸ்லோகம் ஏதும் இருந்தா போடுங்களேன்.
    நன்றி/////

    குரு பகவான் துதி!

    குணமிகு வியாழ குருபகவானே
    மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாயே!
    பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
    கிரக தோஷமின்றி காத்தருள்வாயே!

    ReplyDelete
  13. ஏற்க்கனவே பாதிப்பு பயங்கரம் .
    இதில் இன்னும் பாதிப்பா ? (சிம்மம் )
    ஆண்டவா காப்பாத்து !

    ReplyDelete
  14. முருகா காப்பாத்து முடிஞ்சா மலையேத்து .

    ReplyDelete
  15. சார்,

    Interesting பதிவு!
    எனக்கு ஜாதகம் நம்பிக்கைகிடையாது.

    ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு.
    நடக்க நடக்க நாராயணா!

    ReplyDelete
  16. அன்புள்ள அய்யா,

    என் ஜாதகத்தில், மிதுன லக்னம், மிதுன ராசியும், குரு 7-ல் (தனுசு), வரும் குரு பெயர்ச்சியில், குரு மகர ராசிக்கு செல்வதால், (மகர ராசி குருவிற்கு நீச்ச வீடு என்பதால்), அதன் பலமற்று இருப்பதால், இந்த குரு பெயர்ச்சி அந்த அளவுக்கு எனக்கு பாதிப்பு (மிதுன ராசிக்கு "கஷ்டம்" என்று போட்டிருக்கு) இருக்காது என்று எடுத்து கொள்ளலாமா?

    தற்போது எனக்கு சுக்ர தசை - சுக்ர புக்தி நடக்கிறது (சுக்கிரன் - கன்னியில் புதனோடு சேர்ந்து நீச்ச பங்க ராஜ யோகம் மற்றும் நிபுணத்துவ யோகம்!).

    தயவு செய்து, என் அறிவுக்கு எட்டிய கணிப்பு சரியா என்பதை விளக்கவும்.

    மிக்க நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  17. புதுகைத் தென்றல் said...நீங்கள் நம்ம வீட்டு உறவா?ஆமாங்க. அவிட்ட நட்சத்திரம்.சரி ஐயா,மத்தவங்களுக்கும் உதவற மாதிரி குருவை மகிழ்விக்க ஸ்லோகம் ஏதும் இருந்தா போடுங்களேன்.நன்றி/////
    குரு பகவான் துதி!
    குணமிகு வியாழ குருபகவானேமணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாயே!பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசாகிரக தோஷமின்றி காத்தருள்வாயே!////

    ஸ்லோகம் பார்த்த உடன் பயங்கர சந்தோசம், ஏன்னா நான் தினமும் படிக்கிற தாச்சே

    நமக்கு கடக ராசி, லாபம் மன்னு சொல்லிஇருகீங்க

    கொண்ட கடலை மாலையுடன் waiting.

    ReplyDelete
  18. /////அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    ஏற்க்கனவே பாதிப்பு பயங்கரம் .
    இதில் இன்னும் பாதிப்பா ? (சிம்மம் )
    ஆண்டவா காப்பாத்து!/////

    கைகொடுப்பார். நம்பிக்கையோடு இருங்கள்!

    ReplyDelete
  19. /////Ragu Sivanmalai said...
    முருகா காப்பாத்து முடிஞ்சா மலையேத்து/////

    இங்கே உள்ள மலைகளில் எல்லம் முதலில் ஏறி இறங்குங்கள்!
    அந்த மலை ஏற்றத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது!

    ReplyDelete
  20. /////K.Ravishankar said...
    சார்,
    Interesting பதிவு!
    எனக்கு ஜாதகம் நம்பிக்கைகிடையாது.
    ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு.
    நடக்க நடக்க நாராயணா!////

    கடவுள் நம்பிக்கை இருந்தால் போதும். வேறு எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டால் பரவாயில்லை!

    ReplyDelete
  21. ////Sridhar said...
    அன்புள்ள அய்யா,
    என் ஜாதகத்தில், மிதுன லக்னம், மிதுன ராசியும், குரு 7-ல் (தனுசு), வரும் குரு பெயர்ச்சியில், குரு மகர ராசிக்கு செல்வதால், (மகர ராசி குருவிற்கு நீச்ச வீடு என்பதால்), அதன் பலமற்று இருப்பதால், இந்த குரு பெயர்ச்சி அந்த அளவுக்கு எனக்கு பாதிப்பு (மிதுன ராசிக்கு "கஷ்டம்" என்று போட்டிருக்கு) இருக்காது என்று எடுத்து கொள்ளலாமா?
    தற்போது எனக்கு சுக்ர தசை - சுக்ர புக்தி நடக்கிறது (சுக்கிரன் - கன்னியில் புதனோடு சேர்ந்து நீச்ச பங்க ராஜ யோகம் மற்றும் நிபுணத்துவ யோகம்!).
    தயவு செய்து, என் அறிவுக்கு எட்டிய கணிப்பு சரியா என்பதை விளக்கவும்.
    மிக்க நன்றி,
    ஸ்ரீதர் S//////

    எழுதியவரை சரிதான். நீச பங்கராஜ யோகம் பெற்றுள்ள சுக்கிரன், 5ஆம் மற்றும் 12ஆம் வீடுகளுக்கு உரியவன். அவனுடைய திசை நடக்கிறது. mixed results

    ReplyDelete
  22. /////MarmaYogi said...
    புதுகைத் தென்றல் said...நீங்கள் நம்ம வீட்டு உறவா?ஆமாங்க. அவிட்ட நட்சத்திரம்.சரி ஐயா,மத்தவங்களுக்கும் உதவற மாதிரி குருவை மகிழ்விக்க ஸ்லோகம் ஏதும் இருந்தா போடுங்களேன்.நன்றி/////
    குரு பகவான் துதி!
    குணமிகு வியாழ குருபகவானேமணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாயே!பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசாகிரக தோஷமின்றி காத்தருள்வாயே!////
    ஸ்லோகம் பார்த்த உடன் பயங்கர சந்தோசம், ஏன்னா நான் தினமும் படிக்கிறதாச்சே
    நமக்கு கடக ராசி, லாபம் மன்னு சொல்லிஇருகீங்க
    கொண்ட கடலை மாலையுடன் waiting./////

    மஞ்சள் துண்டுடன் காத்திருங்கள்!

    ReplyDelete
  23. எழுதியவரை சரிதான். நீச பங்கராஜ யோகம் பெற்றுள்ள சுக்கிரன், 5ஆம் மற்றும் 12ஆம் வீடுகளுக்கு உரியவன். அவனுடைய திசை நடக்கிறது. mixed results

    அய்யா,
    விளக்கத்திற்கு மீண்டும் நன்றி.

    என் ஜாதகத்தில் சுக்கிரனின் சுய வர்கத்தில் பரல்கள் 5-மிடத்தில் அதிகமாக (5-மிடத்தில் 5 பரல்கள், 12-மிடத்தில் 3 பரல்கள்) உள்ளது. அப்படி என்றால் effect of 5th house will subside effect of 12th house என்று எடுத்து கொள்ளலாமா?

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  24. வணக்கம் ஐயா..
    ஒரு பொது கேள்வி...
    கன்னி லக்ன ஜாதகம் அல்லது மிதுன லக்ன ஜாதகம் ஒன்றை எடுத்துக்கொண்டால் , கன்னி லக்னத்திற்கு 5ஆம் மற்றும் 6ஆம் வீட்டு அதிபதி சனி. சனி ஆகவே அந்த ஜாதகதிற்கு பாக்யாதிபதியாக கருத வேண்டுமா இல்லை ருண ஸ்தான அதிபதியாக கருதவேண்டுமா ?

    இந்த அமைப்பு : ஒரே கிரஹம் ஒரு நல்ல வீட்டிற்கும் ஒரு அஸ்தமன வீட்டிற்கும் நாதனாக வரும் போது , எந்த அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  25. தவறிற்கு மண்ணிக்கவும்..

    5ஆம் இடம் : பூர்வ புண்ணிய ஸ்தானம்

    ReplyDelete
  26. No confustion sir....Guru namma rassi-kku labam-nu vararu....Let wait and see!!!

    -Shankar

    ReplyDelete
  27. /////Sridhar said...
    எழுதியவரை சரிதான். நீச பங்கராஜ யோகம் பெற்றுள்ள சுக்கிரன், 5ஆம் மற்றும் 12ஆம் வீடுகளுக்கு உரியவன். அவனுடைய திசை நடக்கிறது. mixed results
    அய்யா,
    விளக்கத்திற்கு மீண்டும் நன்றி.
    என் ஜாதகத்தில் சுக்கிரனின் சுய வர்கத்தில் பரல்கள் 5-மிடத்தில் அதிகமாக (5-மிடத்தில் 5 பரல்கள், 12-மிடத்தில் 3 பரல்கள்) உள்ளது. அப்படி என்றால் effect of 5th house will subside effect of 12th house என்று எடுத்து கொள்ளலாமா?
    நன்றி,
    ஸ்ரீதர் S////

    அந்தந்த வீடுகளுக்குரிய பலன்களைத் தனித்தனியாக சுக்கிரன் தருவார்.

    ReplyDelete
  28. /////Sridhar said...

  29. ////Geekay said...
    Present Sir,
    GK, BLR.////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  30. /////DevikaArul said...
    வணக்கம் ஐயா..
    ஒரு பொது கேள்வி...
    கன்னி லக்ன ஜாதகம் அல்லது மிதுன லக்ன ஜாதகம் ஒன்றை எடுத்துக்கொண்டால் , கன்னி லக்னத்திற்கு 5ஆம் மற்றும் 6ஆம் வீட்டு அதிபதி சனி. சனி ஆகவே அந்த ஜாதகதிற்கு பாக்யாதிபதியாக கருத வேண்டுமா இல்லை ருண ஸ்தான அதிபதியாக கருதவேண்டுமா ?
    இந்த அமைப்பு : ஒரே கிரஹம் ஒரு நல்ல வீட்டிற்கும் ஒரு அஸ்தமன வீட்டிற்கும் நாதனாக வரும் போது , எந்த அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும்//////

    அந்தந்த வீடுகளுக்குரிய பலன்களைத் தனித்தனியாக சனி தருவார்.
    ஐந்தாம் வீடு பாக்கிய ஸ்தானம் அல்ல! அது பூர்வ புண்ணிய ஸ்தானம்.
    அவர் எங்கே உட்கார்ந்திருக்கிறாரோ அதை வைத்துப் பலன்கள்

    ReplyDelete
  31. ////DevikaArul said...
    தவறிற்கு மன்னிக்கவும்..
    5ஆம் இடம் : பூர்வ புண்ணிய ஸ்தானம்////

    முன் பின்னூட்டத்தில் எழுதிவிட்டேன்!

    ReplyDelete
  32. ////hotcat said...
    No confustion sir....Guru namma rassi-kku labam-nu vararu....Let wait and see!!!
    -Shankar////

    வருகிற லாபத்தை என்னுடன் பகிர்ந்து கொளுங்கள் சங்கர்..ஹஹ் ஹஹ் ஹா....:-))))

    ReplyDelete
  33. குருபெயர்ச்சியின் பலனை
    சுருக்கமாகவும் நச்சென்றும்
    ஒருவரியில் உரைத்திட்ட
    குருவுக்கு நம் நன்றிகள்!

    ஜாதகமும் தசாபுத்தியும்
    சாதகமாக இருந்திடவும்
    கோசாரம் கோணினாலும்
    கோளாறு பெரிதாகாதென

    ஆறுதலை சொன்ன பாடம்
    ஆறுதலையன் மறுபெயராம்
    ஆசான் உயர்திரு சுப்பையா
    ஆகாதவர் கணிப்பு,தப்பையா!

    ReplyDelete
  34. ////வருகிற லாபத்தை என்னுடன் பகிர்ந்து கொளுங்கள் சங்கர்..ஹஹ் ஹஹ் ஹா....:-))))////

    hehehe...sure!!!! Ellam avan seiyal!

    -Shankar

    ReplyDelete
  35. //////தமாம் பாலா (dammam bala) said...
    குருபெயர்ச்சியின் பலனை
    சுருக்கமாகவும் நச்சென்றும்
    ஒருவரியில் உரைத்திட்ட
    குருவுக்கு நம் நன்றிகள்!
    ஜாதகமும் தசாபுத்தியும்
    சாதகமாக இருந்திடவும்
    கோசாரம் கோணினாலும்
    கோளாறு பெரிதாகாதென
    ஆறுதலை சொன்ன பாடம்
    ஆறுதலையன் மறுபெயராம்
    ஆசான் உயர்திரு சுப்பையா
    ஆகாதவர் கணிப்பு,தப்பையா!/////

    தப்பாமல் இருந்தால் சரிதான்:-))))

    ReplyDelete
  36. ஐயா ஒரு சந்தேகம்

    முக்கியமான கடக லக்கின அரசியல் தலைவர் களுத்தில் மஞ்சள் துண்டு அணிவது குருவின் கடாட்சம் பெறத்தானா ?

    எப்படியும் இந்தப் பின்னூட்டத்தை அழித்துவிடுவீர்கள் என நினைக்கிறேன் , எனினும் பதிலையாவது தெரிவியுங்கள் ,நாங்களும் இப்படிச் செய்து நன்மை பெறலாமா ?

    ReplyDelete
  37. /////KS said...
    ஐயா ஒரு சந்தேகம்
    முக்கியமான கடக லக்கின அரசியல் தலைவர் களுத்தில் மஞ்சள் துண்டு அணிவது குருவின் கடாட்சம் பெறத்தானா ?/////

    ஜோதிடத்துடன் நிறுத்திக்கொள்வோம். நமக்கு எதற்கு அரசியல்?
    -----------------------------------
    /////எப்படியும் இந்தப் பின்னூட்டத்தை அழித்துவிடுவீர்கள் என நினைக்கிறேன் , எனினும் பதிலையாவது தெரிவியுங்கள் ,நாங்களும் இப்படிச் செய்து நன்மை பெறலாமா?////

    அப்படிச் செய்வதால் எல்லாம் நன்மைகள் வந்து குவியாது. உள்ளது உள்ளபடி வரும். அவ்வளவுதான்.
    அப்படி வரும் என்றால் அம்பாணி தங்கத்திலேயே துண்டு செய்து போட்டுக்கொண்டிருப்பார்

    ReplyDelete
  38. //அப்படிச் செய்வதால் எல்லாம் நன்மைகள் வந்து குவியாது. உள்ளது உள்ளபடி வரும். அவ்வளவுதான்.
    அப்படி வரும் என்றால் அம்பாணி தங்கத்திலேயே துண்டு செய்து போட்டுக்கொண்டிருப்பார்//

    :-))) ha , ha.. haa..

    ReplyDelete
  39. //ஒரு வார்த்தை சொல்லுங்கள்!//
    நான் ரெண்டு வார்த்தை சொல்லிக்கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

    -- நன்றி --

    -- லாபம் --

    ReplyDelete
  40. /////Geekay said...
    //அப்படிச் செய்வதால் எல்லாம் நன்மைகள் வந்து குவியாது. உள்ளது உள்ளபடி வரும். அவ்வளவுதான்.
    அப்படி வரும் என்றால் அம்பாணி தங்கத்திலேயே துண்டு செய்து போட்டுக்கொண்டிருப்பார்//
    :-))) ha , ha.. haa..//////

    அம்பானி மட்டுமில்லை. வசதியிருந்தால் குப்பனும் சுப்பனும் கூடப் போட்டுக்கொண்டு திரிவார்கள்

    ReplyDelete
  41. /////சிவமுருகன் said...
    //ஒரு வார்த்தை சொல்லுங்கள்!//
    நான் ரெண்டு வார்த்தை சொல்லிக்கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.
    -- நன்றி --
    -- லாபம் --/////
    சிவமுருகனுக்கு எதற்கு அனுமதி? நீங்கள் அங்கயற்கன்னியின் செல்லப்பிள்ளையல்லவா

    ReplyDelete
  42. ஐயனுக்கு அடியேனின் வணக்கங்கள் !

    ReplyDelete
  43. ////ரோஜா காதலன் said...
    ஐயனுக்கு அடியேனின் வணக்கங்கள்!/////

    நன்றி நண்பரே!
    உங்கள் வரவு நல்வரவாகுக!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com