மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.12.08

எரித்தாலும் பயன் இல்லாதது எது?

சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.


"திருப்பதி மிதியாப்பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக்கைக ளினியசொற் கேளாக்காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாதேகம்
இருப்பினும் பயனென்காட்டி லெரிப்பினு மில்லைதானே. "
- விவேக சிந்தாமணி - பாடல் எண் 28


திருப்பதி மிதியாத பாதம்,
சிவனடி வணங்காத தலை,
இரப்பவருக்குக் கொடுக்காத கை,
இனிய சொற்களைக் கேட்காத காது,
தங்களைப் பாதுகாப்பவர் கண்களில் கண்ணீர் கண்டும்
உயிர் கொடுக்காதவனின் உடல்
ஆகியவைகள்
இருந்தும் பயனில்லை;
காட்டில் எரித்தாலும் பயனில்லை.

எழுதிய ஞானி என்னவொரு அழுத்ததுடன் எழுதியுள்ளார் பாருங்கள்!

Label: நெத்தியடியான பாடல் வரிகள் - 3


வாழ்க வளமுடன்!

23 comments:

SP.VR. SUBBIAH said...

அறிவிப்பு:
அடுத்த ஜோதிடப் பாடத்திற்காக மாணவக் கண்மணிகள் பலர் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அடுத்த பாடம் சந்திரனைப் பற்றியது. எழுதிக்கொண்டிருக்கிறேன்.தட்டச்சும் வேலை பாக்கியுள்ளது.
திங்கட்கழமை 15.12.2008 அன்று அது பதிவாகும்!
அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எரித்தாலும் வேகாது எனில் அவன் செத்தும் பயனில்லையே வாத்தியாரே..

hotcat said...

Present Sir.

வேலன். said...

ஈயென இரப்பது இழிவன்று அதனினும் ஈயென் என்பது இழிவு...மற்றவர்க்கு இரக்காத(உதவாத) மனித உடல் இருந்தும் பயனில்லை மண்ணில் இறந்தும் பயனில்லை.திங்கள்(சந்திரன்) பாடத்தை திங்கள் அன்று எதிர்ப்பார்க்கின்றோம்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

RAJA said...

நல்ல பாடல் அய்யா!

அன்புடன்
இராசகோபால்

Ragu Sivanmalai said...

Good shot Sir

The people who leave their parents at old age homes have to read this...

SP.VR. SUBBIAH said...

/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
எரித்தாலும் வேகாது எனில் அவன் செத்தும் பயனில்லையே வாத்தியாரே..////

உலகில் பாதிப்பேர்கள் இந்தப் பிரிவில் உள்ளார்கள். கலியுகம்.
என்ன செய்வது உனா தானா?

SP.VR. SUBBIAH said...

//////hotcat said...
Present Sir./////

நன்றி சங்கர்!

SP.VR. SUBBIAH said...

//////வேலன். said...
ஈயென இரப்பது இழிவன்று அதனினும் ஈயென் என்பது இழிவு...மற்றவர்க்கு இரக்காத(உதவாத) மனித உடல் இருந்தும் பயனில்லை மண்ணில் இறந்தும் பயனில்லை.திங்கள்(சந்திரன்) பாடத்தை திங்கள் அன்று எதிர்ப்பார்க்கின்றோம்.
வாழ்க வளமுடன்,
வேலன்./////

தன்னைப்போல அது திங்களன்று வெளியாகும் வேலவரே!

SP.VR. SUBBIAH said...

/////RAJA said...
நல்ல பாடல் அய்யா!
அன்புடன்
இராசகோபால்/////

நன்றி கோபால்!

SP.VR. SUBBIAH said...

/////Ragu Sivanmalai said...
Good shot Sir
The people who leave their parents at old age homes have to read this.../////

படித்தாலும் திருந்த மாட்டார்கள். மேற்கொண்டு தங்கள் நிலையை நியாயப் படுத்துவார்கள்.கலியுகம். அப்படித் தான் இருக்கும்! காலதேவன் அவர்களைக் கவனித்துக் கொள்வான். ஒரு நாள் அவர்களுக்கும் வயதாகும் இல்லையா? அப்போது புரட்டி எடுத்து விடுவான்!

Sridhar said...

அய்யா,

அருமையான பாடல். கருத்து நச்.

இதை போன்ற பாடல்கள் தொகுப்பு எங்கேனும் வலையில் உள்ளதா?

(if with meaning, it would be doubly useful)

நன்றி!

ஸ்ரீதர் S

ஆர்.கார்த்திகேயன் said...

சரியாக சொன்னீர்கள் அய்யா !
தமிழ் மனம் கமழும்
படிப்பவர் மனம் மகிழும்
பாடலுடன் வகுப்பறை அமர்க்களம் !!!!!!

MarmaYogi said...

சார்
நாக்கை விட்டு விட்டாரே
மரபு கவிதையின் இலக்கணம் கருதி விட்டு விட்டாரோ என்னவோ?

SP.VR. SUBBIAH said...

Sridhar said...
அய்யா,
அருமையான பாடல். கருத்து நச்.
இதை போன்ற பாடல்கள் தொகுப்பு எங்கேனும் வலையில் உள்ளதா?
(if with meaning, it would be doubly useful)
நன்றி!
ஸ்ரீதர் S/////

இருக்கிறது. சுட்டியைக் கொடுத்துள்ளேன்:
click here for the link = http://sivayasiva.blogspot.com/2008/11/120.html

SP.VR. SUBBIAH said...

///////ஆர்.கார்த்திகேயன் said...
சரியாக சொன்னீர்கள் அய்யா !
தமிழ் மனம் கமழும்
படிப்பவர் மனம் மகிழும்
பாடலுடன் வகுப்பறை அமர்க்களம் !!!!!!/////

உங்கள் மனம் உவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////MarmaYogi said...
சார்
நாக்கை விட்டு விட்டாரே
மரபு கவிதையின் இலக்கணம் கருதி விட்டு விட்டாரோ என்னவோ?//////

சொல்லியிருப்பதே போதும் அன்பரே!

Geekay said...

அருமையான பாடல்,அய்யா!
அன்புடன்,
GK,BLR

SP.VR. SUBBIAH said...

//////Geekay said...
அருமையான பாடல்,அய்யா!
அன்புடன்,
GK,BLR///////

நன்றி ஜீக்கே!

அணுயோகி said...

அருமையான நெத்தியடிப் பாடல்..... நன்றி..

SP.VR. SUBBIAH said...

/////அணுயோகி said...
அருமையான நெத்தியடிப் பாடல்..... நன்றி../////

நன்றிகள் அப்பாடலை எழுதிய ஞானிக்கே உரித்தானது!

prabakar.l.n said...

anulla aasiriyar avarkalukku thangalin blog il thaankal vaithiruntha tamil jodthida soft were migavum payan ullathaga irunthathu athai thankal marupadiyum athe idathil vaithu irunthaal ennai pondru puthithaaga palagum maanakkarkalukku migavum periya uthaviyaaga irukum ,. athai thirumbavum vaipeerkala aasiriyar semmozhi maanatil pesiya uraiyai yaravathu enakku anupinaal migavum uthaviyaaga irukum mikka nandri
b

SP.VR. SUBBAIYA said...

/////prabakar.l.n said...
anulla aasiriyar avarkalukku thangalin blog il thaankal vaithiruntha tamil jodthida soft were migavum payan ullathaga irunthathu athai thankal marupadiyum athe idathil vaithu irunthaal ennai pondru puthithaaga palagum maanakkarkalukku migavum periya uthaviyaaga irukum ,. athai thirumbavum vaipeerkala aasiriyar semmozhi maanatil pesiya uraiyai yaravathu enakku anupinaal migavum uthaviyaaga irukum mikka nandri//////

சரி, உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்! நன்றி