மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

21.12.08

துருவன் அய்யரும் வெண்பொங்கலும்!

செல்வந்தர் வீட்டுத் திருமணம். அவருடைய ஒரே மகளுக்குத் திருமணம்.
அந்தக் காலத்து வழக்கப்படி அந்தப் பெண்ணிற்கு 18 வயதிலேயே திருமணம்.

செல்வந்தர் என் தந்தையாரின் பால்ய சிநேகிதர். அதோடு மிகவும் நெருங்கிய
நண்பர்.

காலம்?

நீலமலைத் திருடன் படம் வெளிவந்து தமிழ்த் திரையரங்குகள் களை கட்டிக்
கொண்டிருந்த காலம். சரியாகச் சொன்னால் 1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
என்று வைத்துக் கொள்ளுங்கள்

"சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா.."


என்று தன் இனிய ப்ளஸ் கணீர்க் குரலால், பாடகர் திரு.T.M. செளந்தரராஜன்
அவர்கள் தமிழர்களைக் கட்டிப்போட ஆரம்பித்திருந்த காலம்.

உனக்கு எப்படித் தெரியும்?

நான் அப்போது சிறுவன். எனக்கு எல்லாம் என் தந்தையார் சொல்லித் தெரியும்
அவர் கதை சொல்வதில் சூரர். சாதாரணக் கதையைக்கூட சுவாரசியமாகச் சொல்வார்.

எனக்கு நினைவாற்றல் அதிகம் (ஹி.ஹி, ஏழில் புதன்) அதனால் அவைகள்
எல்லாம் என் மண்டைக்குள் கடவுள் கொடுத்த Hard Discல் ஏறி, பலப் பல
ஃபோல்டர்களில் வைரஸ் பிரச்சினைகள் இன்றி, ஸ்பைவேர் பிரச்சினைகள் இன்றிப்
பாதுகாப்பாக இருக்கின்றன!.

விட்டால் பேசிக் கொண்டே இருப்பேன். அது தெரியாமல் சிலர் என்னிடம் தொலைபேசி எண்ணைக் கேட்கிறார்கள் பாருங்கள்........பாவம்! :-))))

சரி, வாருங்கள் கதைக்குள் போவோம்
---------------------------------------------------------------------------------------
திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே விருந்தோம்பல்.

தஞ்சாவூர் தலை வாழை இலை போட்டு, நான்கு வேளையும் (4 என்கின்ற
எண்ணிக்கையைக் கவனிக்கவும்) விதம் விதமான உணவுகள்.

தினமும் மாலை வேளைகளில் விருந்தினர்களுக்கு இன்னிசைக் கச்சேரிகள்
மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள்.

திருமணத்திற்கு முதல் நாள் மாலை. அப்போது மிகவும் பிரபலமாக இருந்த
நடன மங்கை, நடிகை ஈ.வி.சரோஜாவின் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி.
(இந்த ஈ.வி.சரோஜா அப்போது வெளிவந்த நீலமலைத் திருடனில் நடித்து
அதிகப் படியான புகழைக் கொண்டிருந்தார். அந்தப் படத்தை எதற்காக
கதைக்குள் கொண்டு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் இப்போது
தெரிந்திருக்கும்)

அதறகு முதல் நாள் திருமதி.M.L.வசந்த குமாரி ( Actress Srividhya's
mother) அவர்களின் இன்னிசைக் கச்சேரி.
----------------------------------------------------------------------------------
அதெல்லாம் முக்கியமில்லை. நண்பர் வீட்டுக் கல்யாணத்தில் விருந்தோம்பல்
பொறுப்பை என் தந்தையார் ஏற்றுக் கொண்டிருந்தார். உதவிக்கு என்னுடைய
பெரியப்பாவும் சேர்ந்திருந்தார்.

இங்கே என் பெரியப்பாவைப் பற்றி இரண்டு வரிகளாவது சொல்ல வேண்டும்.
அவர் பெரிய கலா ரசிகர். வகை வகையான உணவுகளில் ரசனை மிக்கவர்.
நன்றாகச் சமையல் செய்யவும் தெரிந்தவர். என் தந்தையாரை விடப் பத்து
வயது மூத்தவர். அவர் போல சாப்பாட்டை இரசித்துச் சாப்பிடும் மனிதரை
இதுவரை நான் கண்டதில்லை.

எங்கள் ஊர் சமையல் மேஸ்திரிகளுக்கெல்லாம், அவரைக் கண்டால் பயம்.
அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவர் பந்தியில்
அமர்ந்து சாப்பிடும்போது எதிரில் பவ்வியமாக வந்து நின்று உபசரிப்பார்கள்

அவர் பெயர். "பவுன்" மாணிக்கம் செட்டியார். தொழில் மற்றும் பொழுதுபோக்கு
இரண்டுமே சீட்டு ஆடுவது. அவர் சிவந்த நிறமாக இருப்பார். அதனால் அந்த
அடையாளப் பெயர். அதோடு சீட்டாடும் பொது பவுனை வைத்துத்தான்
சீட்டாடுவார். அதற்கான காரணப் பெயரும் அது.

அதற்குக் காசு?

லட்சக்கணக்கான பணத்தைத் தொலைத்த பெரிய கதை அது! பல சுவாரசியங்கள்
நிறைந்த கதை. அதை இப்போது சொன்னால் கதை பாரதக்கதை மாதிரி நீண்டு
விடும். இன்னொரு நாள் அதைச் சொல்கிறேன்
------------------------------------------------------------------------------
என் பெரியப்பாவின் சொற்படி, என் தந்தையார் இரண்டு விதமான சமையலுக்கு
ஏற்பாடு செய்திருந்தார். ஒன்று வழக்கம்போல செட்டிநாட்டு சமையல்காரர்களின்
சமையல்.

இன்னொரு பக்கம் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த தஞ்சாவூர் துருவன்
அய்யர் குழுவினரின் சமையல்.

யார் வேண்டுமென்றாலும் எந்தப் பக்குவத்தில் வேண்டுமென்றாலும் ரசித்துச்
சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்னும் பெருநோக்கு!

என் தந்தையார் அந்த மூன்று நாட்களிலும் இரவு பகல் என்று தூக்கத்தை
ஒதுக்கி வைத்துவிட்டு, சமையல் நடந்த கூடங்களே கதி என்று மேற்பார்வை
செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

என் தந்தையாருக்கு காப்பியும், சிகரெட்டும் இருந்தால் போதும். எத்தனை
நாட்கள் வேண்டுமென்றாலும் விழித்துக் கொண்டிருப்பார்.

அப்போதெல்லாம் சிகரெட்டுகள் டின்களில் வரும். வட்டவடிவடின். ஒரு
டின்னிற்கு 50 சிகரெட்டுக்கள். இந்த மாதிரிக் கண் விழிக்கும் நாட்களில் ஒரு
நாளைக்கு ஒரு டின் சிகரெட் காலியாகும்

Smoking is injurious to health' என்ற எச்சரிக்கையெல்லாம் அப்போது கிடையாது.
அதுபோல அதிகமாகப் புகைத்தால் கேன்சர் வருமென்ற பயமும் அப்போது
கிடையாது.

என் தந்தையாருக்கு ஒரு புண்ணாக்கும் வந்ததில்லை.
இறுதிவரை ஆரோக்கியமாக
இருந்தார். தனது 75 வது வயதில் பத்து நிமிட
போராட்டத்துடன் ஹார்ட் அட்டாக்கில்
இறந்து போனார். அவ்வளவுதான்.
மரணம் எப்படி வர வேண்டும் என்பற்கும்
அவர் உதாரணமாக இருந்தார்.

ஆசான் என்னும் மலையாள ஜோதிட நண்பர் அவருடைய மரணத்தைத்
துல்லியமாகக் குறித்துக் கொடுத்திருந்தார். அதுபோலவேதான் நடந்தது. அதை
என்னுடைய முன் பதிவு ஒன்றில் சொல்லியிருக்கிறேன்.

கதை தடம் மாறிக் கொண்டிருக்கிறது. மெயின் கதைக்குப் போவோம்
----------------------------------------------------------------------------------
திருமண தினத்தன்று அதிகாலை 5 மணி.

காலைப் பலகாரம் 7 மணி முதல் 8 மணிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

எதிர் நோக்கியிருக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையோ சுமார் மூவாயிரம்.

மெனு: பாதம் அல்வா, கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி,
மற்றும் தக்காளிச் சட்னி். உடன் மசால் தோசை, உபரியாக செட்டி நாட்டுப் புகழ்
வெள்ளைப் பணியாரம்.

என் தந்தையார் எல்லாவற்றையும் நோட்டமிட்டார். பொங்கலைத் தவிர மற்ற
தெல்லாம் அளவில் சரியாக வரும் போலத் தோன்றியது.

வெண் பொங்கல், அதுவும் துருவன் அய்யரின் பிரபலமான வெண் பொங்கல்.
பறிமாறும் போது, பற்றாக்குறை ஏற்பட்டால் பந்தியில் அசிங்கமாகி விடாதா?

பெரிய விறகு அடுப்பில் மூன்றடி உயரம், மூன்றடி அகலம் உள்ள பாத்திரத்தில்,
பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது. முக்கால் பாத்திர அளவிற்கு மட்டுமே
அது கொதித்துக் கொண்டிருந்தது.

அருகில் சமையல் உதவியாளர் ஒருவர் நின்று, அதைக் கிண்டிக்கொண்டிருந்தார்.

சமையல் கட்டின் நடுவில் நின்று கொண்டிருந்த தலைமை சமையல்காரர் துருவன்
அய்யரிடம் என் தந்தையார் பேச்சுக் கொடுத்தார்.

"ஸ்வாமி, பொங்கல் மட்டும் குறைவாகத் தெரிகிறதே?"

"அதெல்லாம் போதும். மிஞ்சும் பாருங்கோ.அதில் சேர்க்க வேண்டிய அயிட்டம்
ஒன்று பாக்கியிருக்கிறது. சித்த நாழி வெயிட் பண்ணுங்கோ!"

என் தந்தையார் காத்திருந்தார். ஐந்து நிமிடங்கள் கழித்து, கொதித்துக் கொண்டிருந்த
பொங்கல் பாத்திரத்தின் அருகே சென்ற துருவன் அய்யர், "நெய் டின்னை எடுத்துக்
கொண்டு வாங்கடா" என்று குரல் கொடுக்க, ஒருவன் ஒரு முழு டின் நெய்யை
அங்கே எடுத்துக் கொண்டு வந்தான்.

முழு டின் என்பது பதினைந்து கிலோ அளவுள்ள நெய்.

"உள்ளே ஊத்துடா" என்று அவர் சொன்னவுடன். அதை அவன் ஊற்றினான்.
இன்னொரு முழு டின்னை எடுத்துக் கொண்டு வந்து ஊற்றுடா என்று அவர்
மேலும் சொல்ல அதுவும் நடந்தது.

என் தந்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இரண்டு முழு டின் நெய்யா? பெரிய சமாச்சாரமாக இருக்கிறதே.!

அதோடு விடவில்லை. மூன்று கிலோ அல்லது ஐந்து கிலோ அளவில்
வறுத்த முந்திரிப் பருப்பும் வந்து அதில் சேர்க்கப்பட்டது. அடுத்த இரண்டு
நிமிடங்களில் பொங்கல் ரெடி. நீர் ஊற்றி அடுப்பு அணைக்கப்பெற்றது.

"செட்டியார், நீங்களே பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைங்கோ" என்று
சொன்ன துருவன் அய்யர், தன் உதவியாளரிடம் சொன்னார்,"டேய் ஒரு கின்னத்தில்
செட்டியாருக்கு பொங்கல் எடுத்துக் கொடுடா. ஸ்பூனோடு கொடுடா. அவர்
சாப்பிட்டுப் பார்க்கட்டும்"

நடந்தது.

அற்புதமாக இருந்தது பொங்கல். அவ்வளவு ருசி. அதோடு தொண்டைக்குள்
வழுக்கிக் கொண்டு சென்றது. செல்லுமுன் நாக்கின் மூலமாக உடலின் ருசி
சம்பந்தப்பட்ட அத்தனை நரம்புகளையும் சுண்டி விட்டுச் சென்றது. உங்கள்
மொழியில் சொன்னால் நரம்புகளைக் கிண்டிக் கிழங்கெடுத்து விட்டுச் சென்றது
அல்லது பின்னிப் பெடல் எடுத்துவிட்டுச் சென்றது

அதன் அசாத்திய ருசியில் என் தந்தையார் அசந்து போய் விட்டார்

கின்னத்துப் பொங்கலைச் சாப்பிட்டு முடித்தவுடன், அருகில் வந்த அய்யர் கேட்டார்

"செட்டியார், இன்னும் ஒரு கின்னம் சாப்பிடரேளா?"

"வேண்டாம் சாமி, நன்றாக இருக்கிறது. ஒரு கின்னத்திற்கு மேல் சாப்பிடமுடியாது"

"ஏன்?"

"திகட்டுகிறது."

"அதுதான் சங்கதி. திகட்டும்.அதனால் தான் மிஞ்சும் என்றேன். பந்தியில் ஒரு
கரண்டிக்கு மேல் ஒருத்தரும் கேட்கமாட்டார்கள்"

அப்படியே நடந்தது.

இதை, ஒரு மனிதன் தன் தொழிலில் அதீதத் திறமை பெற்று எப்படி விளங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சொல்வார் என் தந்தை.
பிறகு என் அனுபவத்தில் பல தொழில் வல்லுனர்களைப் பார்த்தும் நான் அதைத்
தெரிந்து கொண்டேன். திறமை உள்ளவன் மட்டுமே தன் தொழிலில் சிறக்கமுடியும்

அதனால்தான் செய்யும் தொழிலே தெய்வம் என்றும் சொல்லப் படுகிறது!
-------------------------------------------------------------------------------
"வாத்தியார் இந்தக் கதை பாடத்தோடு சம்பந்தப் பட்டதா?"

"ஆமாம்"

"என்ன சம்பந்தம்?

"ஆற்றல் (Ability) மற்றும் திறமை (Talent) ஆகிய இரண்டும் ஒரு மனிதனுக்கு
நன்றாக அமையக் காரணமாக இருக்கின்ற கிரகத்தைப் பற்றிய பாடம் அடுத்த
பாடம். அதற்கான முன்னோட்டம்தான் இந்தக் கதை!"
-------------------------------------------------------------------------------
பாடம் நாளை அல்லது நாளை மறுநாள் பதிவிடப்படும்!

(தொடரும்)

நன்றி, வணக்கத்துடன்,
வகுப்பறை,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

45 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

சுப்பையா அவர்களுக்கு,

கதை சுவாரசியமாக இருந்தது..

வெண்பொங்கள் சப்பிட்டதை போன்ற உணர்வு வருமாறு எழுதி இருக்கிறீர்கள்.

வேலன். said...

அந்த காலத்து சாப்பாட்டை அதுவும் திருமண சாப்பாட்டை நினைவு படுத்திவிட்டீர்கள்.(வயதானவன் என நினைக்க வேண்டாம்.எனக்கும் எனது தகப்பனாரின் தந்தை சொன்னது தான்)
படிக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது.
வாழ்க வளமுடன்,
வேலன்.

திருநெல்வேலி கார்த்திக் said...

கோவை ஸ்வாமி ஓம்கார் இன்று வெண்பொங்கல் பதிவை படித்து தனது முதல் ஆசிர்வாதத்தை கொடுத்துள்ளார்கள்.

அவர்களுக்கு நன்றி.

SP.VR. SUBBIAH said...

///////Blogger ஸ்வாமி ஓம்கார் said...
சுப்பையா அவர்களுக்கு,
கதை சுவாரசியமாக இருந்தது..
வெண்பொங்கல் சப்பிட்டதை போன்ற உணர்வு வருமாறு எழுதி இருக்கிறீர்கள்.////////

உங்கள் பாராட்டிற்கு நன்றி சுவாமிஜி!
சொல்வதை அழுத்தமாகச் சொல்ல வேண்டுமில்லையா சுவாமிஜி. அதனால்தான் உணர்வைத் தொடும்படி எழுதினேன்
நானும் அந்த உணர்வைக் கையில் பிடித்துக் கொண்டுதான் எழுதினேன்:-))))))

SP.VR. SUBBIAH said...

///Blogger வேலன். said...
அந்த காலத்து சாப்பாட்டை அதுவும் திருமண சாப்பாட்டை நினைவு படுத்திவிட்டீர்கள்.
(வயதானவன் என நினைக்க வேண்டாம்.எனக்கும் எனது தகப்பனாரின் தந்தை சொன்னது தான்)
படிக்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது.
வாழ்க வளமுடன்,
வேலன்//////.

வயதானவர் என்று நினைத்தால் என்ன தவறு? ஒரு நாள் அவர்களுக்கும் (அப்படி நினைப்பவர்க்ளுக்கும்) வயதாகி விடாதா வேலவரே?:-)))))

SP.VR. SUBBIAH said...

Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
கோவை ஸ்வாமி ஓம்கார் இன்று வெண்பொங்கல் பதிவை படித்து தனது முதல் ஆசிர்வாதத்தை கொடுத்துள்ளார்கள்.
அவர்களுக்கு நன்றி.//////

வகுப்பறையின் சார்பில் நன்றி சொல்லியிருக்கிறீர்கள். சட்டாம்பிள்ளை நம்பர் 2 ஆக்கிவிடவா?:-)))))

Ragu Sivanmalai said...

தொழிலில் கில்லாடியாக அம்பானிதான் இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த தொழில் ஆக இருந்தாலும் அதை ரசித்து உணர்வு பூர்வமாக ஈடுபடுவர்கள் எப்போதுமே ஜெயிக்க முடியும் என்பதை உணர்த்துவதாக இருந்தது உங்கள் துருவன் அய்யர் கதை .

hotcat said...

Sir,

wow, this is excellent story...why cannot you write more about with deviations....Its been many years I left country...I still miss authentic pongal...

btw, I wrote you an e-mail sir.

Thanks
Shankar

மதி said...

ஐயா...

வெண்பொங்கல் மிக ருசியாக இருந்தது.

அடுத்தவர் என் லக்கினதிபதி செவ்வாய் பற்றிதானே.. மிக்க மகிழ்ச்சி(ஏன்னா இவரு மட்டும்தான் என் ஜதகத்தில் பலமாக உள்ளார் சுய பரல் 8,அஷ்தவர்கம் 39)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாத்தியாரே..

சாப்பிட வேண்டும் போல் உள்ளது.. இதுவரையில் ஒரு நாள்கூட செட்டியார்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு நான் போனதே இல்லை. காரணம் யாரும் என்னைக் கூப்பிட்டதே இல்லை..

என்ன கொடுமை பாருங்க..

ஆற்றலுக்கும், திறமைக்கும் செவ்வாய்காரன்தான் காரணமா..? வரட்டும்.. வரட்டும்..

DevikaArul said...

வணக்கம் ஐயா..
ஆர்வத்தை தூண்டிவிட்டு காக்கவைப்பதில் உமக்கு நிகர் யாரும் இல்லை..
செவ்வாய் பூமிக்கும் காரகன் அல்லவா ?

SP.VR. SUBBIAH said...

Request to my beloved classroom students and readers!
---------------------------------------------------------------------------

Many people knows my telephone number!
There is no secret in it
Some people are asking my telephone number.
There is no harm in giving my number except one small problem!.

I don't have time to attend all the calls even thoush I respect the callers

I am a business man and only in my spare time I am writing in blogs out of interest
and my intention is to share my knowledge with the next generation

I like to receive only mails from my students and readers instead of personal calls!

I have the option to answer the mails in my leisure time one by one though one or two days delay, the reader will get

my reply

My only problem is the number of hours in day. it is only 24 hours a day instead of 48 hours I require!:-)))))

Kindly understand my problem! I request everyone to write to me instead of asking my telephone number!

Best of luck!
May God bless you all!

Thanks & regards
Vaaththiyaar

SP.VR. SUBBIAH said...

//////Blogger Ragu Sivanmalai said...
தொழிலில் கில்லாடியாக அம்பானிதான் இருக்க வேண்டும் என்பதில்லை. எந்த தொழில் ஆக இருந்தாலும் அதை ரசித்து உணர்வு பூர்வமாக ஈடுபடுவர்கள் எப்போதுமே ஜெயிக்க முடியும் என்பதை உணர்த்துவதாக இருந்தது உங்கள் துருவன் அய்யர் கதை .////////

உண்மைதான். ஜெயிப்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் உண்டு!

SP.VR. SUBBIAH said...

//////Blogger hotcat said...
Sir,
wow, this is excellent story...why cannot you write more about with deviations....Its been many years I left country...I still miss authentic pongal.../////

Thanks Shankar. You can have good & tasteful pongal during your visit here in this month!

SP.VR. SUBBIAH said...

//////Blogger மதி said...
ஐயா...
வெண்பொங்கல் மிக ருசியாக இருந்தது.
அடுத்தவர் என் லக்கினதிபதி செவ்வாய் பற்றிதானே.. மிக்க மகிழ்ச்சி!
(ஏன்னா இவரு மட்டும்தான் என் ஜாதகத்தில் பலமாக உள்ளார் சுய பரல் 8,அஷ்டவர்கம் 39////////

அதன் ஞாபகமாக அங்கு (அங்காரகன்) என்ற புனைப்பெயரை அல்லவா நீங்கள் சூட்டிக் கொண்டிருக்க வேண்டும்?
மதி என்று (சந்திரனின்) பெயரை வைத்திருக்கிறீர்களே?

SP.VR. SUBBIAH said...

///////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
வாத்தியாரே.
சாப்பிட வேண்டும் போல் உள்ளது.. இதுவரையில் ஒரு நாள்கூட செட்டியார்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு நான் போனதே இல்லை. காரணம் யாரும் என்னைக் கூப்பிட்டதே இல்லை..
என்ன கொடுமை பாருங்க../////

நான் வருடத்திற்கு சுமார் 25 முறைகள் சென்று வருகிறேன். ஒரு தடவை உங்களையும் அழைத்துப்போகிறேன் கவலையை விடுங்கள்!

ஆற்றலுக்கும், திறமைக்கும் செவ்வாய்காரன்தான் காரணமா..? வரட்டும்.. வரட்டும்..////////

ஆமாம் நமது நண்பரை (அதுதான் பழநியில் இருக்கிறாரே) வணங்கினால் இவரையும் வணங்கியதாக ஆகும்!

SP.VR. SUBBIAH said...

///////Blogger DevikaArul said...
வணக்கம் ஐயா..
ஆர்வத்தை தூண்டிவிட்டு காக்கவைப்பதில் உமக்கு நிகர் யாரும் இல்லை..
செவ்வாய் பூமிக்கும் காரகன் அல்ல ?//////

ஆமாம் பூமிக்கும் அவர்தான் நாயகன்.
ஆர்வத்தைத் தூண்டும் எழுத்திற்கு என் வாத்தியார்கள் காரணம் சகோதரி!
எனக்கு சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் பலர்.
அதில் ஆர்வத்தைத்தூண்டும் எழுத்தைச் சொல்லிக் கொடுத்தவர்கள் மூவர்
1. James Hadley Chase
2, Jeffery Archer
3. Writer Sujatha
தலைமை ஆசிரியர். கவியரசர் கண்ணதாசன்

Ragu Sivanmalai said...

///Many people knows my telephone number!
There is no secret in it
Some people are asking my telephone number.
There is no harm in giving my number except one small problem!.

ஆமாம் நண்பர்களே. படியுங்கள் ரசியுங்கள் பாராட்டுங்கள். ஆனால் போன் பண்ணும் எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்கள் .....

If you do that, then sir has to set up a call center to answer your queries :)

வேணாம் விட்டு விடுங்கள்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger Ragu Sivanmalai said...

///Many people knows my telephone number!
There is no secret in it
Some people are asking my telephone number.
There is no harm in giving my number except one small problem!.

ஆமாம் நண்பர்களே. படியுங்கள் ரசியுங்கள் பாராட்டுங்கள். ஆனால் போன் பண்ணும் எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்கள் .....

If you do that, then sir has to set up a call center to answer your queries :)/////

உங்கள் புரிதலுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

Sridhar said...

அய்யா,

சம்பவத்தை கோர்வையாக (with directors' touch) சொன்னது எனக்கு பிடித்தது, அதுவும் கூட துருவன் அய்யர் அவர்களின் திறமையை பற்றி - அதை விட சூப்பர்!

செய்வதை, 100% மனதோடு செய்தால், நம் திறமை வெளிப்படும், அதுவும். அதுவே நாம் செய்யும் தொழிலாக இருந்தால், வெற்றி நிச்சயம்! (காசு பார்ப்பது என்பது வேறு விஷயம்)

நன்றி!

ஸ்ரீதர் S

SP.VR. SUBBIAH said...

/////Blogger Sridhar said...
அய்யா,
சம்பவத்தை கோர்வையாக (with directors' touch) சொன்னது எனக்கு பிடித்தது, அதுவும் கூட துருவன் அய்யர் அவர்களின் திறமையை பற்றி - அதை விட சூப்பர்!
செய்வதை, 100% மனதோடு செய்தால், நம் திறமை வெளிப்படும், அதுவும். அதுவே நாம் செய்யும் தொழிலாக இருந்தால், வெற்றி நிச்சயம்! (காசு பார்ப்பது என்பது வேறு விஷயம்)/////

உங்கள் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி நண்பரே!

நன்றி!

ஸ்ரீதர் S

T.V.Radhakrishnan said...

வெண்பொங்கல் மிக ருசி

SP.VR. SUBBIAH said...

//////Blogger T.V.Radhakrishnan said...
வெண்பொங்கல் மிக ருசி////

உங்கள் பின்னூட்டம் மனதிற்கு ருசியாக இருக்கிறது!:-))))

அமர பாரதி said...

அருமையான பதிவு வாத்தியாரையா,

படம் உண்மையிலேயே அருமை. வெண் பொங்கலை சாப்பிட்ட உணர்வையே தந்து விட்டீர்கள். ஹூம்... கல்யான சமையலின் சுவையே அண்டா குழம்புதான். முக்கியமாக ரசம். கல்யானத்தில் கலந்துகொண்டு பலப்பல வருடங்கள் ஆகி விட்டது.

அபி அப்பா said...

சார்! நான் துருஅய்யர் சமையலை சாப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லும் துருவன் அய்யர் தான் நான் சொல்லும் துருஅய்யரா என தெரியாது. ஆனால் 1976ல் என் தாய்மாமா கல்யாணம் வைத்தீஸ்வரன் கோவிலில் நடந்தது. அங்கே செட்டியார் சத்திரத்திலே நடந்தது. என் அப்பா தான் பிடிவாதமாக துருஅய்யர் தான் வேண்டும் என புக் பண்ணி கூப்பிட்டு வந்தாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. வாழ்க வெண் பொங்கல்!

SP.VR. SUBBIAH said...

////Blogger அமர பாரதி said...
அருமையான பதிவு வாத்தியாரையா,
படம் உண்மையிலேயே அருமை. வெண் பொங்கலை சாப்பிட்ட உணர்வையே தந்து விட்டீர்கள். ஹூம்... கல்யான சமையலின் சுவையே அண்டா குழம்புதான். முக்கியமாக ரசம். கல்யாணத்தில் கலந்துகொண்டு பலப்பல வருடங்கள் ஆகி விட்டது./////

உங்களைப்போன்று கடல்கடந்து வசிக்கின்ற நண்பர்களுக்காகத்தான் இந்த வெண் பொங்கல் படைப்பு!

SP.VR. SUBBIAH said...

Blogger அபி அப்பா said...
சார்! நான் துருஅய்யர் சமையலை சாப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் சொல்லும் துருவன் அய்யர் தான் நான் சொல்லும் துருஅய்யரா என தெரியாது. ஆனால் 1976ல் என் தாய்மாமா கல்யாணம் வைத்தீஸ்வரன் கோவிலில் நடந்தது. அங்கே செட்டியார் சத்திரத்திலே நடந்தது. என் அப்பா தான் பிடிவாதமாக துருஅய்யர் தான் வேண்டும் என புக் பண்ணி கூப்பிட்டு வந்தாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. வாழ்க வெண் பொங்கல்!//////

எனக்கும் சரியாகத் தெரியவில்லை! இருக்கலாம் அபி அப்பா!
தகவலுக்கு நன்றி!

ஆர்.கார்த்திகேயன் said...

வெண்பொங்கல் விருந்து அருமை அடுத்த பாடத்திற்கு மிக ஆவலாக உள்ளேன்
புத்தகம் வெளியிட போவதாக கூறி உள்ளிர்கள் மிக்க மகிழ்ச்சி மிக ஆவலுடன் நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம் .

DevikaArul said...

ஐயா , வணக்கம்.
வர்கோத்தமதின் சிறப்பு என்னவென்று கொஞ்சம் சொல்ல வேண்டும்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
வெண்பொங்கல் விருந்து அருமை அடுத்த பாடத்திற்கு மிக ஆவலாக உள்ளேன்
புத்தகம் வெளியிட போவதாக கூறி உள்ளிர்கள் மிக்க மகிழ்ச்சி மிக ஆவலுடன் நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம் ./////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Blogger DevikaArul said...
ஐயா , வணக்கம்.
வர்கோத்தமதின் சிறப்பு என்னவென்று கொஞ்சம் சொல்ல வேண்டும்.////

ஒரு கிரகம் ராசியிலும் அம்சத்திலும் ஒரே ராசியில் (இடத்தில்) இருப்பதை வர்கோத்தமம் என்பர்கள். அந்த கிரகம் வலிமை பெற்று இருக்கும். அது உச்சத்திற்கு நிகரான வலிமை!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//"சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா.."//

அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

தமிழுக்கு அமுதென்று பெயர் ...

போன்ற இன்னும் பல பாடல்கள்.
இன்றும் இலங்கை வானொலியின் தடை செய்யப்பட்ட பாடல் வரிசையில் உள்ளவை.

நிற்க..இந்த திருமணச் சமையல் விபரங்கள் ஈழத்தில் அன்றும் இன்றும் வேறுபாடானதே!!
சாப்பாடு பற்றி தமிழக நண்பர்களின் பதிவுகள்...எனக்குச் சுவாரசியமானவை.

தொழில் நேர்த்திக்கு அத்தொழிலில் அக்கறை வேண்டும். இந்த துருவன் ஐயர் சமையலில்
அந்த அக்கறையைக் காட்டுகிறார்.
நான் 30 வருடங்களுக்கு முன் சந்தையில் முட்டைக் கோஸ் (கோவா) விற்ற பையன் மூலம் அதைக் கண்டேன். வாரவுறுதியில் சந்தையில் தந்தையாருடன் முட்டைக் கோஸ் வியாபாரத்தில் ஈடுபடும் பையன்
கேட்கும் அளவு ஒரு இறாத்தலோ; 2 இறாத்தலோ முட்டைக் கோசை ஒரு வெட்டில் அந்தத் துண்டு அளவு சற்றும் கூடாமல் குறையாமல் இருப்பதைப் பல தடவை கவனித்து; அந்தப் பையனைக் கைகுலிக்கிப் பாராட்டினேன். எனக்கு அந்த 12 வயது பையனின் துல்லியமான கண் அளவு பிரமிப்பைத் தந்தது.
இன்று இந்த போர்ச் சூழலில் தப்பி அப்பையன் இருந்து ,வாழ்க்கைக்கு வியாபாரத்துறையைத் தேர்ந்தால்; கட்டாயம் ஒரு பெரிய தேர்ந்த வியாபாரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.

அவர் நட்சத்திரம்;லக்கணம் பற்றி எதுவும் தெரியாது. தொழிலில் அவர் துல்லியம் பார்த்த போது
நான் புரிந்தது.

செய்யும் தொழிலில் அக்கறை இருந்தால் உயரலாம்.
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.
அத்துடன்
"மந்திரத்தில் மாங்காயும் பிடுங்க முடியாது" என்பதனையும் உணரவேண்டும்.

தியாகராஜன் said...

ஐயா,
வணக்கம்.
தாம் கதை சொல்லும் பாங்கினில் இலயித்துப் போகிறேன்.
சபாபதி படத்து சாரங்கபாணி அவர்களை முன்னிறுத்திய கதை உள்ளிட்ட சமீபத்திய வெண்பொங்கல் சமையல் வரையிலும் விறுவிறுப்பு குன்றாத நடை பிரவாகம் அருமையிலும் அருமை.

மீண்டும் வந்தனங்கள்.

தியாகராஜன் said...

பழைய காலத்து நிகழ்வுகளை, தாம் போன்ற அறிந்தவர்களின் வாயிலாகக் கேட்டு தான் எம் போன்றவர்கள் வியக்கிறோம்.
எங்கள் பெரிய அண்ணன் அவர்களின் திருமணத்தின் போதும் கே.பி.சுந்தராம்பாள் எதிரொலி கோவை கமலா அவர்களின் கச்சேரி வைக்கப்பட்டதாகக் கூறினார்கள்.

sumathi said...

வணக்கம் சார்,

ஆஹா, என்ன ருசி என்ன ருசி. இப்படி படிச்சுட்டு இருக்கும் போதே நாக்குல தண்ணி ஊற வச்சுட்டீங்களே, அது சரி நல்ல ருசியான பொங்கலை செய்ய இது தான் மந்திரமா? சரி சரி பாக்கலாம்.

அழகா நல்ல சுவையோடவும் ருசியோடவும் தந்துட்டீங்க. வாழ்க வாழ்க.....

SP.VR. SUBBIAH said...

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
சாப்பாடு பற்றி தமிழக நண்பர்களின் பதிவுகள்...எனக்குச் சுவாரசியமானவை.
தொழில் நேர்த்திக்கு அத்தொழிலில் அக்கறை வேண்டும். இந்த துருவன் ஐயர் சமையலில்
அந்த அக்கறையைக் காட்டுகிறார்.
நான் 30 வருடங்களுக்கு முன் சந்தையில் முட்டைக் கோஸ் (கோவா) விற்ற பையன் மூலம் அதைக் கண்டேன். வாரவுறுதியில் சந்தையில் தந்தையாருடன் முட்டைக் கோஸ் வியாபாரத்தில் ஈடுபடும் பையன்
கேட்கும் அளவு ஒரு இறாத்தலோ; 2 இறாத்தலோ முட்டைக் கோசை ஒரு வெட்டில் அந்தத் துண்டு அளவு சற்றும் கூடாமல் குறையாமல் இருப்பதைப் பல தடவை கவனித்து; அந்தப் பையனைக் கைகுலிக்கிப் பாராட்டினேன். எனக்கு அந்த 12 வயது பையனின் துல்லியமான கண் அளவு பிரமிப்பைத் தந்தது.
இன்று இந்த போர்ச் சூழலில் தப்பி அப்பையன் இருந்து ,வாழ்க்கைக்கு வியாபாரத்துறையைத் தேர்ந்தால்; கட்டாயம் ஒரு பெரிய தேர்ந்த வியாபாரியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
அவர் நட்சத்திரம்;லக்கணம் பற்றி எதுவும் தெரியாது. தொழிலில் அவர் துல்லியம் பார்த்த போது
நான் புரிந்தது.
செய்யும் தொழிலில் அக்கறை இருந்தால் உயரலாம்.
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.
அத்துடன்
"மந்திரத்தில் மாங்காயும் பிடுங்க முடியாது" என்பதனையும் உணரவேண்டும்.////////

விரிவாக விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி யோகன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger தியாகராஜன் said...
ஐயா,
வணக்கம்.
தாம் கதை சொல்லும் பாங்கினில் இலயித்துப் போகிறேன்.
சபாபதி படத்து சாரங்கபாணி அவர்களை முன்னிறுத்திய கதை உள்ளிட்ட சமீபத்திய வெண்பொங்கல் சமையல் வரையிலும் விறுவிறுப்பு குன்றாத நடை பிரவாகம் அருமையிலும் அருமை.
மீண்டும் வந்தனங்கள்.////

உங்கள் மனம் உவந்த பாராட்டுக்களுக்கு நன்றி தியாகராஜன்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger தியாகராஜன் said...
பழைய காலத்து நிகழ்வுகளை, தாம் போன்ற அறிந்தவர்களின் வாயிலாகக் கேட்டு தான் எம் போன்றவர்கள் வியக்கிறோம்.
எங்கள் பெரிய அண்ணன் அவர்களின் திருமணத்தின் போதும் கே.பி.சுந்தராம்பாள் எதிரொலி கோவை கமலா அவர்களின் கச்சேரி வைக்கப்பட்டதாகக் கூறினார்கள்./////

பழைய நினைவுகள் எப்போதுமே சுவையாக இருக்கும் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

Blogger sumathi said...
வணக்கம் சார்,
ஆஹா, என்ன ருசி என்ன ருசி. இப்படி படிச்சுட்டு இருக்கும் போதே நாக்குல தண்ணி ஊற வச்சுட்டீங்களே, அது சரி நல்ல ருசியான பொங்கலை செய்ய இது தான் மந்திரமா? சரி சரி பாக்கலாம்.
அழகா நல்ல சுவையோடவும் ருசியோடவும் தந்துட்டீங்க. வாழ்க வாழ்க.....//////

ஆகா, நீங்கள் வாழ்த்தினால் இரண்டு மடங்கு அல்லவா பலன்!
நன்றி சகோதரி!
எங்கள் ஊர் அன்னபூர்ணா ஹோட்டல் பொங்கல் அற்புதமாக இருக்கும்!

DevikaArul said...

ஐயா , ஒவ்வொரு முறையும் இந்த இணையதளத்திற்கு வரும்போதும் அடுத்த பாடம் posட் செய்திருக்கிறீர்களா என்று பலத்த ஆர்வம் தோன்றும்.. உங்கள் எழுத்திற்கு அவ்வளவு வலிமை.ஜோதிடத்தில் வல்லமை ( கணிதத்தில் வல்லமை ) , communication , presenting a subject !!

தங்கள் ஜாதகத்தில் புதன் படு strong , அல்லவா சார் !!

தங்ஸ் said...

படம், பதிவு இரண்டும் அருமையோ அருமை!

RAJA said...

உணவு பரிமாறுவதற்கு முன் வரும் appetizer போல, ஜோதிட வகுப்புகளுக்கு முன் வரும் இந்த பாடங்கள் உணவைப் போலவே சிறப்பாக உள்ளன.

அன்புடன்
இராசகோபால்

SP.VR. SUBBIAH said...

//////Blogger DevikaArul said...
ஐயா , ஒவ்வொரு முறையும் இந்த இணையதளத்திற்கு வரும்போதும் அடுத்த பாடம் posட் செய்திருக்கிறீர்களா என்று பலத்த ஆர்வம் தோன்றும்.. உங்கள் எழுத்திற்கு அவ்வளவு வலிமை.ஜோதிடத்தில் வல்லமை ( கணிதத்தில் வல்லமை ) , communication , presenting a subject !!
தங்கள் ஜாதகத்தில் புதன் படு strong , அல்லவா சார் !!/////

ஆமாம் சகோதரி. அடியேன் சிம்ம லக்கினம். புதன் ஏழில். பொதுவாக புதன் கேந்திரங்களில் நன்றாக இருந்தால் அவர்களுக்கு நல்ல நினைவாற்றலைக் கொடுப்பான். ஜோதிடமும் அவர்களுக்கு நன்றாக வரும்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger தங்ஸ் said...
படம், பதிவு இரண்டும் அருமையோ அருமை!

உங்கள் பாராட்டிற்கு நன்றி தங்க்ஸ்!

SP.VR. SUBBIAH said...

//////Blogger RAJA said...
உணவு பரிமாறுவதற்கு முன் வரும் appetizer போல, ஜோதிட வகுப்புகளுக்கு முன் வரும் இந்த பாடங்கள் உணவைப் போலவே சிறப்பாக உள்ளன.
அன்புடன்
இராசகோபால்/////

உங்கள் பாராட்டிற்கு நன்றி கோபால்!